Category: Aranya Kandam

கரன் யுத்தத்திற்கு புறப்பட்டான்


129. சூர்பனகை கரனிடம் முறையிட அவன் பதினான்கு ராக்ஷசர்களை ராமரோடு யுத்தம் செய்ய அனுப்புகிறான். ராமர் ஒரு நிமிடத்தில் அவர்களை வதம் செய்து விடுகிறார்.

Share

சூர்பனகை வந்தாள்


128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.

Share

ஹேமந்த ருது வர்ணனை


127. லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார்.

Share

ஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம்

jatayu_with_ram_sita_at_panchevati
126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.

Share

அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்

agasthya-rama-ramayan-desibantu125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக்  கொள். ” என்று வாழ்த்துகிறார்.

Share

அகஸ்தியர் மஹிமை

1-ockzdeure51oa3b6odlbjw124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.

Share

ரிஷிகளோடு பத்து வருடங்கள்

rama sita lakshmana
123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார்.

Share

ஸீதா ராம ஸம்பாஷணை

sita rama

122. சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும்? காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வாக்களித்தேன். எனவே உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்கை காப்பேன்.” என்று பதில் கூறுகிறார்.
[ஸீதா ராம ஸம்பாஷணை]

Share

சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்

Yagnavalkya

121. ஸ்ரீராமர், சீதாதேவியோடும் லக்ஷ்மணரோடும் சுதீக்ஷ்ணரின் ஆஸ்ரமத்தில் அன்றிரவுப் பொழுதை இனிமையாக கழிக்கிறார். மறுநாள் வைகறைப் பொழுதில் துயில் விழித்து, அருகில் உள்ள குளத்தில், மலர்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்கிறார்கள். அனுஷ்டனங்களை முடித்துவிட்டு முனிவரிடம் விடை பெறுகிறார்கள். வணங்கிய ராமரை முனிவர் எழுப்பிக் கட்டி அணைத்து அன்பு பாராட்டி பிற முனிவர்களின் ஆஸ்ரமங்களையும் அவற்றை சூழ்ந்திருக்கும் இயற்கை அழகையும் விரிவாக புகழ்ந்து, ‘நலமாக சென்று வா. மீண்டும் ஒருமுறை இங்கு திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறார்.
[சுதீக்ஷ்ணரின் அனுக்ரஹம்]

Share

முனிவர்களுக்கு அபயம்

sage-sutikshana-rama-ramayan-desibantu

120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள்.  ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.
[தண்டகவனத்து முனிவர்களுக்கு அபயம்]

Share