Category: Govinda Damodara Swamigal

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயோகே – நாராயண தீர்த்தர் தரங்கம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார்.

Share

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஜயந்தி

இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம்.

Share

நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ


கடந்த சில மாதங்களில் ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ சிவன் ஸார், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி இந்த வலைதளத்தில் பகிர்ந்த கருத்துகளை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ

Share

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனைஎங்கள் சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை வைபவம் பழுவூர் கிராமத்துல, ரொம்ப ‘அமோகமா’ நடந்தது. அதுல கலந்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது. இந்த வைபவம் ‘அமோகமா’ நடந்ததுங்கிற வார்த்தையை ரொம்ப specific ஆ நான் உபயோகப்படுத்தறேன்.

Share

ஸத்கதா ச்ரவணம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017)  திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார்.  மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா.

Share

ஸ்ரீராம: சரணம் மம; மகாபெரியவா திருவடிகளே சரணம்


ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தோட ஆரம்பத்துல தியான ஸ்லோகங்கள்னு, நம்ம ஸ்மார்த்த சம்பிரதாயத்துல ஒரு இருபது ஸ்லோகங்கள் சொல்றோம். அந்த இருபதாவது ஸ்லோகம்,
नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै ।
नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை |
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய:
நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
அப்டீன்னு இந்த ஸ்லோகத்தோட முடியறது.

Share

மஹாபெரியவா ஆராதனை

நாளைக்கு மகாபெரியவாளோட ஆராதனை. உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கரதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் எல்லாமே கிடைக்கும்.

Share

ஸரஸ்வதி பெரியவா

Mahaperiyava reading a book

நான் ஸ்வாமிகளை தரிசனம் பண்ணின பதினைஞ்சு வயசுல இருந்து, மஹா பெரியவா ஸித்தி ஆகிற வரைக்கும், அந்த ஒரு எட்டு வருஷத்துல, ஸ்வாமிகள், அடிக்கடி “நீ போய் பெரியவாளை தரிசனம் பண்ணு. அவாதான் காமாக்ஷி. உனக்கு மூக பஞ்சசதி கிடைச்சிருக்கு, போயி பாத்துட்டு வா”, அப்டீன்னு சொல்லுவார். நான், காஞ்சிபுரத்துல வந்து பெரியவாளைத் தள்ளி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன்.

Share