Category: Stothra Parayanam Audio

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Audio of kandar alankaram, 41 minutes 20 MB file)

கந்தர் அலங்காரம்

காப்பு (விநாயகர்)

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

……… சொற்பிரிவு ………

Share

ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; sri rama ashtothara naamaavali audio mp3

ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Sri Rama Ashtothara shatha naamaavali)

॥ श्रीरामाष्टोत्तर शतनामावली ॥

ॐ श्रीरामाय नमः ।

ॐ रामभद्राय नमः ।

ॐ रामचन्द्राय नमः ।

ॐ शाश्वताय नमः ।

ॐ राजीवलोचनाय नमः ।

ॐ श्रीमते नमः ।

Share

அருணகிரிநாதர் அருளிய வேடிச்சி காவலன் வகுப்பு ஒலிப்பதிவு; vedichi kaavalanvaguppu audio mp3


அருணகிரிநாதர் அருளிய வேடிச்சி காவலன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of vedichi kaavalan vaguppu by Saint Arunagirinathar)

உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும்
உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் …… 1

உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய
உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் …… 2

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் …… 3

Share

அருணகிரிநாதர் அருளிய திருவேளைக்காரன் வகுப்பு ஒலிப்பதிவு; thiru velaikkaran vaguppu audio mp3


அருணகிரிநாதர் அருளிய திருவேளைக்காரன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of thiru velaikkaran vaguppu by Saint Arunagirinathar)

வேளைக்காரனே நல்ல வேளைக்காரனே
குறத்தி வேளைக்காரனே வள்ளிக்கு வேளைக்காரனே
முருகன் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசன        வாரக் காரனும்  …… 1

ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரி        தீமைக் காரனும்  …… 2

ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதி        வேகக் காரனும்  …… 3

Share

ஓஷதிபர்வதானயனம் ஸர்கம் ஒலிப்பதிவு; oshadhiparavathaanayanam sargam audio mp3


வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் வதம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பித்த அந்த ஸர்கத்தின் ஒலிப்பதிவு

ஓஷதிபர்வதானயனம் மூல ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு

யுத்த காண்டம் 74வது ஸர்கத்தின் பொருளுரை – ஹனுமார் ஓஷதி பர்வதத்தை கொண்டு வந்தார்

श्रीमद्रामायणे युद्धकाण्डे ओषधिपर्वतानायनं इति चतुस्सप्ततितमः सर्गः

Share

ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு; Shyamala Navarathnamalika audio mp3

தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை (10-2-2019) வசந்த பஞ்சமி என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு புது பாடங்கள், கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது. மகாகவி காளிதாசர்  சரஸ்வதி தேவியின் மறு வடிவமான சியாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. அதன் ஒலிப்பதிவை இந்த வசந்த பஞ்சமியில் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு

Share

காலபைரவாஷ்டகம் ஒலிப்பதிவு; kalabhairavashtakam audio mp3

உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். அவர் மீது ஆசார்யாள் அருளிய ஒரு அருமையான ஸ்துதி காலபைரவாஷ்டகம். அதை பல விதங்களில் பாடி மகிழலாம். இங்கே இரண்டு வித மெட்டில் பாடி பதிவு செய்துள்ளேன். அதன் கீழே சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஸ்லோகம் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்திற்கு ஆசார்யாள் – மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, மற்றும் பல வகைப்பட்ட புண்ணியங்களையும் அளிக்கும். மோகம், பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளை நீக்கும். இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள் – என்று ஒரு அபூர்வமான பலஸ்ருதியை  அருளி இருக்கிறார்கள்.

Share

துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு; durga chandrakala stuthi audio mp3

இந்த மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஸ்ரீ அப்பைய தீஷிதர் இயற்றிய ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி என்ற ஸ்தோத்ரத்தின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்வதில் சந்தோஷம். சந்திரனுக்கு பதினாறு கலைகள். அது போல இந்த ஸ்தோத்ரத்தில் பதினாறு ஸ்லோகங்கள். இந்த ஸ்தோத்ரத்தின் மகிமையை இந்த ஆடியோவில் சொல்லி இருக்கிறேன்.

துர்கா சந்திரகலா ஸ்துதி மகிமை

துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு

Share