29. விஸ்வாமித்ரர் காமதேனுவை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயன்றபோது, அப்பசு வசிஷ்டரின் அனுமதியோடு ஒரு படையை ஸ்ருஷ்டி செய்து விஸ்வமித்ரரின் பெரும் படையை அழித்து விடுகிறது. விஸ்வாமித்ரர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து அஸ்திர வித்தைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு மீண்டும் வந்து வசிஷ்டரை எதிர்க்கிறார். வசிஷ்டர் தன் பிரம்ம தண்டத்தால் எல்லா அஸ்திரங்களையும் அடக்கி விட, விஸ்வாமித்ரர் கர்வம் ஒழிந்து, ‘க்ஷத்ரியனின் அஸ்திர பலம் கீழானது. முனிவரின் தபோ பலமே உயர்ந்தது. நானும் தவம் செய்து பிரம்மரிஷி ஆவேன்’ என்று தீர்மானிக்கிறார். [பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது]
Category: Bala Kandam
விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்
28. விஸ்வாமித்ரர் அரசராக இருந்தபோது, தன் பெரிய படையுடன் உலகைச் சுற்றி வருகிறார். அப்போது அவர் வசிஷ்ட முனிவரின் ஆச்ரமத்தைப் பார்க்கிறார். முனிவரை தரிசித்து வணங்குகிறார். வசிஷ்டர், அரசரை வரவேற்று தன்னிடமிருந்த சபலா என்ற காமதேனு பசுவின் உதவியினால், அரசருக்கும் அவர் படையில் இருந்த அனைவருக்கும் ஒரு அற்புதமான விருந்தளிக்கிறார். விருந்து உண்ட பின் விஸ்வாமித்ரர் வசிஷ்டரிடம் அந்த பசுவை தனக்கு தந்து விடுமாறு கூற வசிஷ்டர் தரமுடியாது என்று மறுக்கிறார். [விஸ்வாமித்ரர் வசிஷ்டரை தரிசித்தார்]]
ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்
27. ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்ரர் மிதிலையை அடைகிறார். ஜனக மகாராஜா தன் குலகுருவான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்கிறார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின், சதாநந்தர் ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர் கடும் தவம்செய்து பிரம்மரிஷி ஆன கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
[ஜனகர் விச்வாமித்ரரை தரிசித்தல்]
அஹல்யா சாப விமோசனம்
26.விஷால தேசத்தில் சுமதி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்ற பின், மிதிலைக்கு செல்லும் வழியில் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்தை பார்க்கிறார்கள். விஸ்வாமித்ரர் ராமரிடம், லோப மோஹத்தால் இந்த்ரனும் அகலிகையும் தவறிழைத்து, கௌதமரின் சாபத்துக்கு ஆளானதைக் கூறி, ராமரை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்துக் செல்கிறார். ராம த்யானத்தால் தூய்மை அடைந்த அகலிகை, ராம தர்சனத்தால் சுயரூபம் பெற்று தன் கணவரான கௌதமரை அடைகிறாள்.
[அஹல்யா சாப விமோசனம்]
மருத்துகள் பிறப்பு
25. ராம லக்ஷ்மணர்களுக்கு விஸ்வாமித்ரர், பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமிர்தம் பெற்ற கதையையும், மருத்துகள் பிறந்த கதையையும் கூறுகிறார்.
[மருத்துகள் பிறப்பு]
கங்காவதரணம்
24. சகர மன்னரும், அம்சுமானும், திலீபனும் முயற்சி செய்த பின் பகீரதன் நாட்டைத் துறந்து காடு சென்று கடும் தவம் செய்து பிரம்ம தேவரை வேண்ட அவரும் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைகிறார். ஆனால் கங்கை விழும் வேகத்தை தாங்க பரமேஸ்வரன் ஒருவரால் தான் முடியும் என்று பிரம்மா சொல்ல பகீரதன் சிவபெருமானை வேண்டுகிறான். சிவபெருமான் கங்கையை தன் ஜடாபாரத்தில் தாங்கி பூமியில் விட, புண்ய கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஓடி சகர புத்ரர்களை கரை சேர்க்கிறாள். [கங்காவதரணம்]
ஸகர புத்ரர்கள்
23. சகர மன்னருக்கு ப்ருகு முனிவர் பிள்ளை வரம் அளிக்கிறார். சகர மன்னர் செய்த அஸ்வமேத யாகத்தில் யாகக் குதிரையை இந்திரன் திருடிச் சென்று பாதாளத்தில் கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டி விட, சகர புத்ரர்கள் அந்த குதிரையை தேடிச் செல்லும் போது கபில முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாம்பலாகி விடுகிறார்கள். அம்சுமான் அக்குதிரையை மீட்டு வந்த பின் சகர மன்னர் யாகத்தை பூர்த்தி செய்கிறார். [சகர புத்ரர்கள்]
திருமுருகாற்றுப்படை
22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
குமார சம்பவம்
21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
உமாம் லோகநமஸ்க்ருதாம்
20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]