Categories
Bala Kandam

உமாம் லோகநமஸ்க்ருதாம்


20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை


19. முனிவர்கள் விஸ்வமித்ரரிடம் ‘ராம லக்ஷ்மணர்களை மிதிலைக்கு அழைத்துச் செல்லுவோம்’ என்று சொல்ல விஸ்வாமித்ரரும் ஆமோதிக்கிறார். சித்தாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று கிளம்பி கிரிவ்ரஜம் என்ற இடத்தை அடைகிறார்கள். அன்றிரவு முனிவர் ராம லக்ஷ்மணர்களுக்கு தம் முன்னோர்களின் கதைகளைக் கூறுகிறார். [விஸ்வாமித்ரர் முன்னோர்கள் கதை]

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம்


18. ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அரக்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார்.

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் ராமருக்கு அஸ்த்ரங்களை உபதேசித்தார்


17. விஸ்வாமித்ரர் ராமருக்கு எல்லா அஸ்த்ரங்களையும் உபதேசிக்கிறார். பின்னர் அஸ்த்ரங்களை திரும்ப பெரும் மந்த்ரங்களையும் கற்றுத் தருகிறார். ஸித்தாஸ்ரமத்தை நெருங்கும் போது முனிவர் ராமருக்கு வாமன சரித்திரத்தை சொல்கிறார்.

[வாமன சரித்ரம் (link to audio file. Transcript given below]

Categories
Bala Kandam

தாடகா வதம்


16. விஸ்வாமித்ரர் குழந்தைகளுடன் காமாஸ்ரமத்தில் தங்குகிறார். சரயுவும் கங்கையும் சங்கமிக்கும் கூடலில் நதிகளை வணங்கிய பின் தாடகா வனத்துள் நுழைகிறார்கள். ராமர் முனிவரின் உத்தரவின் பேரில் தாடகையுடன் போரிட்டு அவளைக் கொல்கிறார்.

[தாடகா வதம் (link to audi file. Transcript given below]

Categories
Bala Kandam

விஸ்வமித்ரர் பலை அதிபலை மந்திரங்களை உபதேசித்தார்


15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார்.

[பலை அதிபலை மந்திரோபதேசம் (link to audio file. Transcript given below]

Categories
Bala Kandam

விஸ்வமித்ரர் தசரதரிடம் ராமனை தன்னோடு அனுப்ப வேண்டுதல்


14. விஸ்வாமித்ரர் தசரதரிடம் தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார். ராமனைத் தர மறுக்கிறார்.வசிஷ்டர் விஸ்வாமித்ரரின் மகிமையை எடுத்துச் சொன்ன பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்புகிறார்.

Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் வருகை


13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார்.

[விஸ்வாமித்ரர் வருகை. (audio file. Transcript given below]

Categories
Bala Kandam

ஸ்ரீ ராம ஜனனம்

12. பரம மங்களமான ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரின் ஜனன உத்சவம்

ஸ்ரீ ராம ஜனனம் (audio file. Transcript given below)

Categories
Bala Kandam

வானரோத்பத்தி


11. வாலி, சுக்ரீவன், ஹனுமார், நளன் நீலன் முதலிய வானரர்களின் பிறப்பு

வானரோத்பத்தி (audio file. Transcript given below)