Category: Subramanya Bhujangam

ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Sri Subrahmanya Bhujangam with Tamizh meaning as a PDF book)


இந்த வலைதளத்தில் முப்பத்து மூன்று பகுதிகளாக நிகழ்த்திய ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன்.
இணைப்பு இங்கே ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்

Have created a Tamizh book from the recent lectures on Sri Subrahmanya Bhujangam, so that readers can download, print and read comfortably. Link here Subrahmanya Bhujangam meaning in tamizh

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்

எங்கள் அப்பா 50 வருடங்கள் பூஜித்த முருகப் பெருமான்

ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file)

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் – வெற்றி வேல் முருகனுக்கு, ஹர ஹரோ ஹர

ஸுப் ர மண்ய புஜங்கம் முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் (5 min audio file)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல முப்பத்திரெண்டாவது ஸ்லோகம்,

जयानन्दभूमञ्जयापारधाम-

ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।

जयानन्दसिन्धो जयाशेषबन्धो

जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२॥

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்

ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே |

ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ

ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ ||

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து ஒன்றாவது ஸ்லோகம் – குஹ! ஸ்கந்த! நமஸ்தே நமோஸ்து

ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து ஒன்றாவது ஸ்லோகம் (1௦ min audio file)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்தி முப்பதாவது ஸ்லோகத்துல

जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ॥ ३०॥

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்

ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பதாவது ஸ்லோகம் (12 min audio file)

நேத்திக்கு ஸூப்ரமண்ய புஜங்கத்துல வேலுடைய மஹிமையைப் பார்த்தோம்.

ம்ருகா பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் – அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு, ‘முருகா! என்னைச் சேர்ந்த எல்லாரும் உன் கிட்ட பக்தியோட இருந்து, உன்னுடைய ஸ்தோத்திரத்தைப் பண்ணணும், உன்னுடைய பூஜையைப் பண்ணணும், உன் கிட்ட ஸ்நேஹத்தோட இருக்கணும், உன்னை நமஸ்காரம் பண்ணணும்ன்னு ஒரு ஸ்லோகத்துல வேண்டிண்டார்.

कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எட்டாவது ஸ்லோகம் – சகல செல்வ யோக மிகக் பெருவாழ்வும் சிவஞான முக்தியும் நீ குடுத்து உதவ வேண்டும் முருகா

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எட்டாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபத்தியேழு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தியேழாவது ஸ்லோகத்துல, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற மாதிரி, முருகப் பெருமான் எந்த பேதமும் இல்லாம, எல்லாருக்கும் அனுக்ரஹம் பண்ணக் கூடிய தெய்வம் அப்படிங்றதை பார்தோம். அதனால நமக்கு யோக்யதை இல்லேன்னா கூட முருகன் கிட்ட நாம நெருங்காலம்ங்கற சௌலப்யத்தை புரிஞ்சுண்டோம்.

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எழாவது ஸ்லோகம் – என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எழாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருப்பத்தியாறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தி ஆறாவது ஸ்லோகத்துல

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति: र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।

करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஆறாவது ஸ்லோகம் – தலையே நீ வணங்காய்

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஆறாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு திருச்செந்தூர்ல பன்னீர் இலையில வெச்சு கொடுக்கற விபூதியோட மஹிமையைப் பத்தி பார்த்தோம். ஆச்சார்யாள் விபூதி இட்டுக்கறதை விசேஷமா சொல்றார் என்கிறதே மனசுல வாங்கிக்க வேண்டிய விஷயம். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ அப்படீன்னு தேவாரத்துலேயும் இருக்கு. மாணிக்க வாசகர் ஒரு பாட்டு பாடறார்.

Share

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம்.

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।

पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

Share