Categories
Stothra Parayanam Audio

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர மகிமை; adithya hrudayam audio recording mp3

வால்மீகி ராமாயணத்துல ஆதித்ய ஹ்ருதயம் அப்படின்னு  அற்புதமான ஒரு ஸ்தோத்திரம். அகஸ்த்ய பகவான், ஸ்ரீ ராமருக்கு, யுத்தகளத்துல, உபதேசம் பண்ணினது.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் |

ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் ||

ஸர்வ மங்கல-மாங்கல்யம் ஸர்வ பாப-ப்ரணாசனம் |

சிந்தா-சோக-பிரசமன-மாயுர்-வர்தன-முத்தமம் ||

என்று பலஸ்ருதியை முன்னாடியே சொல்லி ஆரம்பிக்கறார். “அப்பேற்பட்ட இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை, ஆசமநம் பண்ணிட்டு, மூணு தடவை ஜபிச்சு, சூரிய பகவானோட ஆசிர்வாதத்தை பெற்று, ராவணனோட போய் யுத்தம் பண்ணு, நீ வெற்றி பெறுவாய்”, அப்படின்னு சொல்லி, அகஸ்த்ய பகவான், உபதேசம் பண்ணிட்டுப் போறார். அதே மாதிரி, ராமர் மூணு ஆவர்த்தி ஜபிச்சு, சூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவர் பரம சந்தோஷம் அடைந்து நேராக ராமரிடம் “விரைவில் ராவண வதம் என்ற கார்யத்தை முடி” அப்படின்னு சொல்றார். அந்த ஆதித்ய ஹ்ருதயம் ஒரு முனிவர் வந்து உபதேசம் பண்ணி, அதனால ராமர்பலம் பெற்று, வெற்றி பெற்றார், அப்படிங்கிறது, அந்த whole context ஐ பாத்தா ரொம்ப அழகா இருக்கும்.

ராவணன், ரிஷிகளை ஹிம்சை பண்றவன், பெண்களை ஹிம்சை பண்றவன், பிறருடைய சொத்தை அபகரித்துக் கொள்ளுகிறவன், குபேரனுடைய புஷ்பக விமானத்தையும், லங்கை பட்டினத்தையும், அபகரிச்சுண்டுட்டான். இது அவனுடைய குணாதிசயங்கள். ராமர் குணங்களோ இதற்கு நேர்மாறு. பொறந்த நாள்ல இருந்து, அவருக்கு, ரிஷிகள் தான் எல்லாம். வசிஷ்டர் தான் ராமன்னு பேர் வெச்சார். விஸ்வாமித்ரர் கூட்டிண்டு போயி அஸ்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார். பதினாலு வருஷம் காட்டுக்கு வந்த போது பரத்வாஜர், அத்ரி, சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்த்யர்னு தேடி தேடி போய் நமஸ்காரம் பண்றார். அப்படி பார்த்தா, வால்மீகி ராமாயணம்ங்கிறது, ரிஷிகளோட மகிமையை சொல்லும் ஒரு கதைனே சொல்லலாம். அவ்வளவு ரிஷிகளோட விஷயங்கள் வாரது.

பெண்களை மதிக்கறதுலயும் ராமர் தனி. தன்னுடைய அப்பா தசரதருக்கு யாரு மனைவியாக இருந்தாலும், அவாளை எல்லாம், தன்னுடைய அம்மாவா நினைச்சு மதிப்பார். அப்பேற்பட்ட குணம். கைகேயி “நீ காட்டுக்குப் போ” ன்ன உடனே, காட்டுக்குக் கிளம்பினார். மான அவமானம் பாக்கலை.  அம்மா சொன்ன வார்த்தை. அப்பா கொடுத்த சத்யம் அப்படின்னு கிளம்பினார். சீதையை, அன்பா நடத்தினார். ராமருக்கும் சீதைக்கும் இருந்த பரஸ்பர பிரேமையை, சுந்தர காண்டத்தை படிச்சு, நாம  அதை அனுபவிக்கணும். அதை தனியா நான்  ஒரு தடவை சொல்றேன்.  சீதையை பிரிஞ்சு ராமர் அவ்வளவு  கஷ்டப் பட்டு, அப்புறம் இருக்கிற இடத்தை ஹனுமார் மூலமா கண்டுபிடிச்சு, அவளை ஆசுவாசம் பண்ணி, ராமர் கிட்ட வந்து ஹனுமார் கண்டேன் சீதையை, அப்படின்னு சொன்ன அன்னிக்கே யுத்தத்துக்கு கிளம்பிடறார். நேராக போயி பாலம் கட்டி, ராவணாதி ராக்ஷதர்களை எல்லாம் வதம் பண்ணி, சீதா தேவியை மீட்டுண்டு வரார். அப்படி பெண்கள்கிட்ட, அன்பும், பரிவும், மரியாதையும் இருக்கிறவர் ராமர்.

பரதனுக்கு, ஏதாவது கொஞ்சம் இந்த அயோத்தியை பதினாலு வருஷம், பாத்துண்டதுல, கொஞ்சம் ஆசை இருந்தா கூட, அவனே வெச்சுக்கட்டும், அப்படின்னு, நினைக்கிறார், அப்படி பிறர் சொத்துல ஆசை படாதவர். அப்பேற்பட்டவர் ராமர்.

இந்த ராமருக்கும், ராவணனுக்கும், யுத்தம். கடைசி யுத்தம். ராவணன் கடைசீயா அவன் மட்டும் தான் மிஞ்சறான். யுத்தத்துக்கு வரும்போது, அவனுடைய தம்பி, கும்பகர்ணன், பிள்ளைகள், இந்திரஜிது எல்லாரும் வதம், ஆயிட்டான்ன உடனே, அந்த கோபம் எல்லாத்தையும் வெச்சுண்டு வந்து கடுமையா யுத்தம் பண்றான். அவனும் பெரிய வீரன்தான். எல்லாரையும் யுத்தத்துல தவிக்க பண்ணிண்டு ராமர் கிட்ட வரான். அங்கே விபீஷணனை பார்த்த உடனே ராவணனுக்கு கடுங்கோபம் வர்றது, விபீஷணனை கொல்லணும், அப்டீன்னு, அவன் மேல ஒரு வேலை வீசறான். பக்கத்துல இருக்கற லக்ஷ்மண சுவாமி அதை தடுத்துடறார். இன்னொரு வாட்டி வேலை வீசறான். அதையும் லக்ஷ்மண சுவாமி தடுத்துடறார். உடனே ஒரு வேலை எடுத்து, லக்ஷ்மணன் மேல போடறான், லக்ஷ்மணர், இறந்தது போல ஆகிடறார். அப்போ, ராமர் பக்கத்துல அடிபட்டு விழுந்த லக்ஷ்மணனை பார்த்து, தவிக்கறார். ஹா, ஹா லக்ஷ்மணா அப்டீன்னு, மடில  போட்டு அழறார். இராவணன் மேல படபடன்னு அம்பு போடு அவனை விரட்டிடறார். அப்புறம், லக்ஷ்மணனை வெச்சுண்டு புலம்பறார்.  “எப்பேற்பட்ட வீரன் நீ, என் பின்னாடி காட்டுக்கு வந்தியே, ஒரு நாள் கூட என் கிட்ட கோபமா பேச மாட்டியே, ரொம்ப அன்பா இருந்தியே என்கிட்ட. உலகத்துல, சீதை மாதிரி ஒரு அன்பான மனைவி யாருக்காவது இருப்பாளா இருக்கும். ஆனா உன்னை மாதிரி, ஒரு தம்பி யாருக்கு கிடைப்பா. கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகளால ஆயிரம், அம்பை விடுவான்னு பெருமை. நீ ரெண்டு கைகளாலயே ஆயிரம் அம்பை விடுவியே. நீ என் பின்னாடி காட்டுக்கு வந்தே. எப்பேற்பட்ட வீரன் நீ. இப்ப நீ எமலோகத்துக்கு போயிட்ட. அதுனால, உன் பின்னாடியே நானும் எமலோகத்துக்கு வந்துடறேன். என்னால உன்னை பிரிஞ்சு உயிர் வாழ முடியாது. இங்க என்ன இருக்கு. ஒண்ணுமே வேண்டாம்” அப்படி எல்லாம் புலம்பறார். அப்புறம் சுஷேணர்ங்கிறவர், ஹனுமாரை பார்த்து “நீ திரும்பவும் போயி அந்த சஞ்ஜீவி மலையை கொண்டு வா”, ன்ன உடனே, ஹனுமார் திரும்பவும் அந்த சஞ்ஜீவி மலையைக் கொண்டு வரார். அதுக்கு நடுவுல ராமர், கோபத்தோடு சொல்றார். “இன்னிக்கு இந்த ராமருடைய ராமத் தன்மையை இந்த உலகம் பார்க்கப் போகிறது. இன்னிக்குப் பொழுது சாயரதுக்குள்ள, இந்த உலகத்தில் ஒண்ணு, ராமர் இருக்கணும், இல்ல இராவணன் இருக்கணும்” அப்டீன்னு, பிரதிக்ஞை பண்றார்.

அதுக்கப்புறம் ஹனுமார், சஞ்ஜீவி மலையை கொண்டு வந்து, லக்ஷ்மணனை உயிர் பிச்சுடறார். அப்போ ராமர் லக்ஷ்மணன், கிட்ட “நீ இல்லேன்னா, நான், வாழ்ந்து என்ன ப்ரயோஜனம்னு நினைச்சேன்”, அப்டீன்னு சொன்ன போது, லக்ஷ்மணன் சொல்றான். அவன் மயக்கதுலதான் இருந்திருக்கான், முழுக்க, உயிர் பிரியல. அதுனால “அண்ணா நீ பண்ண பிரதிக்ஞையை நிறைவேத்து, ராவணனை வதம் பண்ணு” அப்டீன்னு சொல்றான்.

ராமர், உடனே ராவணனோட யுத்தம் பண்றார். ராம ராவண யுத்தம். எல்லாரும் தள்ளி நின்னு, மலைகள் ல, மரங்கள் ல, இருந்து பாருங்கோ, நடுவுல வராதிங்கோ, அப்டீன்னு, warn பண்ணிட்டு, ராவணனோட யுத்தம் பண்றார். கடுமையான யுத்தம். அந்த ராம ராவண யுத்தம், யுத்த காண்டத்துல நூத்தி ஒண்ணாவது சர்கத்துல இருந்து நூத்தி பதினொண்ணாவது சர்கம் வரைக்கும், இதை வந்து  நிறுத்தாம, படிச்சுடுவா. மூடி வெச்சுட்டு அடுத்த நாள் வந்து படிக்க மாட்டா. ஏன்னா, ராமர் வந்து சத்யம் பண்ணி இருக்கார். பொழுது சாயரதுக்குள்ள ராவணனை வதம் பண்றேன்னு, ராமர் சொன்னதால, அன்னிக்கே அந்த ராவண வதம் வரைக்கும் படிச்சு முடிச்சுடுவா. அப்படி அந்த ராவண வதம் அந்த பத்து சர்கங்கள். ரொம்ப அழகா இருக்கும்.

ராமர், தரையில நின்னுண்டு இருக்கார். இராவணன் தேர்ல இருக்கான்ன உடனே, இந்திரன், மாதலி ன்னு, தன்னோட சாரதியை தேரோட அனுப்பறான். ராமர் அந்த தேர்ல ஏறி நின்னுண்டு இருக்கார். ரெண்டு பேரும், சம யுத்தமா ரெண்டு பேரும் பண்ணிண்டு இருக்கா. ஒருத்தரை ஒருத்தர், கடுமையா மோதிண்டு, உலகமே வியக்கும் படியா யுத்தம் பண்ணிண்டு இருக்கா. ககனம் ககனாகாரம், சாகரஸ் சாகரோபமா: | ராம ராவணயோர் யுத்தம் ராம ராவணயோரிவ || வானம் வானம் மாதிரிதான், ஸாகரம் ஸாகரம் மாதிரிதான். அதுக்கு ஒப்புமை சொல்ல முடியாது. அந்த மாதிரி ராம ராவண யுத்தத்துக்கு, ஒப்புமையே சொல்ல முடியாது.

அப்போ ராமர், ” எந்த தைரியத்தில் நீ சீதா தேவியை, எந்த தைரியத்துல தூக்கிண்டு போனியோ, அதை நீ காமி. எப்படி நான் காரனையும், வாலியையும், கும்பகர்ணனையும் வதம் பண்ணினேனோ, அப்படி உன்னையும் நான் இன்னிக்கு வதம் பண்றேன்”னு சொன்னவுடன், ராமருக்கே தன்னுடைய கதையை திரும்பி சொல்லும்போது, தனி ஒரு உத்சாகம் வர்றது. ராவணனை கடுமையாக் காயப் படுத்தி விடுகிறார். உடனே, அவனுடைய தேரோட்டி, அவனை தள்ளிக் கூட்டிண்டுப் போயிடறான். அப்போ, இராவணன் தன் தேரோட்டியை திட்டறான். “இவ்வளவு அழகா ராமர் யுத்தம் பண்ணிண்டு இருக்கார், என்னைத் தள்ளி கூட்டிண்டு வந்து, எனக்கு அவமானத்தை  உண்டாக்கிட்டியே, நான் ஒரு நாள் கூட யுத்தத்துல இருந்து ஓடி வந்தது கிடையாது. நீ எதிரிக் கிட்ட லஞ்சம் வாங்கினியா?”, அப்டீன்னு கேட்கறான் இராவணன். “இல்ல இல்ல. எங்களுக்குப் பரம்பரையா, இந்த தொழில்ல ஒவ்வொண்ணும் பாத்துப் பண்ணனும். குதிரைகள், தளர்ந்துடுத்தா, இல்ல யுத்தம் பண்ற வீரன் தளர்ந்துட்டானா, இல்ல குதிரை போற அந்த வழி எல்லாம், மேடு பள்ளமா இருக்கா, அதெல்லாம் பார்த்துப் பண்ணனும், அதனால, நீ தளர்ந்து உட்கார்ந்ததுனால நான் கூட்டிண்டு வந்தேன். ப்ரியமிதி அப்ரியம் கிருதம். உனக்குப் பிரியமா இருக்கும்னு நினைச்சு, நான் அப்ரியத்தைப் பண்ணிட்டேன். அப்டீன்னு உடனே, சரி சரி, இந்தா அப்டீன்னு, தன் கையில் இருக்கின்ற கங்கணத்தை கழட்டி கொடுத்துட்டு, திரும்பி யுத்தத்துக்குப் போனான்.

இராவணன், அந்த பக்கம் போயிருக்கும்போது, அகஸ்த்யர் வந்து ராமருக்கு ஆதித்ய ஹிருதயத்தை உபதேசம் பண்றார். ராமர் ஆதித்ய ஹ்ருதயம் ஜபிச்சு, யுத்தத்துக்குக் கிளம்பறார்.


ராம ராவண யுத்தம் நடக்கறது. ராமர், அம்புகளை போட்டு, ராவணனோட தலை விழறது, ஆனா, திரும்ப அவனுக்குத் தலை முளைச்சுடறது. இப்படி நூறு தடவை அவனுடையத் தலையை வீழ்த்தறார். ஆனா திரும்பத் திரும்ப முளைக்கறது. அப்போ மாதலி சொல்றார், நீங்க, இவன் மேல பிரம்மாஸ்த்திரத்தைப் போடுங்கோ, அப்டீன்னு சொல்றார். உடனே ராமர், பிரம்மாஸ்த்திரத்தைப் போடறார். இராவணன் வீழ்ந்துடறான். இப்படி, உலகத்துக்கே, ஒரு கொடுங்கோலனா, லோக கண்டகனா இருந்த இராவணனை ராமர் வதம் பண்றார். தேவர்களும், ரிஷிகளும், பூமியில இருக்கிற எல்லா பிரஜைகளும், எல்லா ஜீவராசிகளும் ரொம்ப சந்தோஷப் படறது. எல்லா வானராலும் ஓடி வந்து ராமரை சூழ்ந்துண்டு, இராமச்சந்திர மஹராஜ் கி ஜய், அப்டீன்னு கோஷம் பண்றா. அப்பேற்பட்ட, ராமருக்கு, உத்சாகத்தை கொடுத்து, தைரியத்தை கொடுத்து, அவருடையப் பிரதிக்ஞை நிறைவேறதுக்குக் காரணமா இருந்தது, இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம். அவசியம் எல்லாரும் கேட்க வேண்டியது.

இந்த ராம ராவண யுத்தம்ங்கிறது, எல்லார் life லயும் நடந்துண்டே இருக்கு. அதுல ராமரை நாம ஜெயிக்க வைக்கணும். அதுக்கு, ரிஷிகளை, ஆஸ்ரயிச்சு, ராமரை போல, தர்மத்தோட பக்கத்துல, சத்தியத்தோட பக்கத்துல இருந்தோம்னா, மனம் தளரும் போது, ஆதித்ய ஹ்ருதயம் மாதிரி, அவா சொன்ன வாக்கு, வந்து நிற்கும், காப்பாத்தும், அப்படிங்கிறதுக்கு, இந்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் அழகான ஒரு அத்தாட்சியா இருக்கு.

இப்படி ஆதித்ய ஹ்ருதயம், எல்லா கவலைகளையும், எல்லா வருத்தங்களையும் போக்கும், வெற்றியை கொடுக்கும், மங்களங்களைக் கொடுக்கும், இதை எல்லாரும் கேட்போம்.

https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/02-aadithya-hrudhayam

ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम् । रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम् ॥ १॥

दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम् । उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवानृषिः ॥ २॥

राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् । येन सर्वानरीन्वत्स समरे विजयिष्यसि ॥ ३॥

आदित्यहृदयं पुण्यं सर्वशत्रुविनाशनम् । जयावहं जपेन्नित्यमक्षयं परमं शिवम् ॥ ४॥

सर्वमङ्गलमाङ्गल्यं सर्वपापप्रणाशनम् । चिन्ताशोकप्रशमनं आयुर्वर्धनमुत्तमम् ॥ ५॥

रश्मिमन्तं समुद्यन्तं देवासुरनमस्कृतम् । पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ ६॥

सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः । एष देवासुरगणाँल्लोकान् पाति गभस्तिभिः ॥ ७॥

एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः । महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ ८॥

पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः । वायुर्वह्निः प्रजाप्राण ऋतुकर्ता प्रभाकरः ॥ ९॥

आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् । सुवर्णसदृशो भानुर्हिरण्यरेता दिवाकरः ॥ १०॥

हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्तिर्मरीचिमान् । तिमिरोन्मथनः शम्भुस्त्वष्टा मार्ताण्ड अंशुमान् ॥ ११॥

हिरण्यगर्भः शिशिरस्तपनो भास्करो रविः । अग्निगर्भोऽदितेः पुत्रः शङ्खः शिशिरनाशनः ॥ १२॥

व्योमनाथस्तमोभेदी ऋग्यजुःसामपारगः । घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ १३॥

आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः । कविर्विश्वो महातेजाः रक्तः सर्वभवोद्भवः ॥ १४॥

नक्षत्रग्रहताराणामधिपो विश्वभावनः । तेजसामपि तेजस्वी द्वादशात्मन्नमोऽस्तु ते ॥ १५॥

नमः पूर्वाय गिरये पश्चिमे गिरये नमः । ज्योतिर्गणानां पतये दिनाधिपतये नमः ॥ १६॥

जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः । नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः ॥ १७॥

नम उग्राय वीराय सारङ्गाय नमो नमः । नमः पद्मप्रबोधाय मार्ताण्डाय नमो नमः ॥ १८॥

ब्रह्मेशानाच्युतेशाय सूर्यायादित्यवर्चसे । भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नमः ॥ १९॥

तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने । कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः ॥ २०॥

तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे । नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे ॥ २१॥

नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः । पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः ॥ २२॥

एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः । एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम् ॥ २३॥

वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च । यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः ॥ २४॥

एनमापत्सु कृच्छ्रेषु कान्तारेषु भयेषु च । कीर्तयन् पुरुषः कश्चिन्नावसीदति राघव ॥ २५॥

पूजयस्वैनमेकाग्रो देवदेवं जगत्पतिम् । एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि ॥ २६॥

अस्मिन्क्षणे महाबाहो रावणं त्वं वधिष्यसि । एवमुक्त्वा तदाऽगस्त्यो जगाम च यथागतम् ॥ २७॥

एतच्छ्रुत्वा महातेजा नष्टशोकोऽभवत्तदा । धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान् ॥ २८॥

आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान् । त्रिराचम्य शुचिर्भूत्वा धनुरादाय वीर्यवान् ॥ २९॥

रावणं प्रेक्ष्य हृष्टात्मा युद्धाय समुपागमत् । सर्व यत्नेन महता वधे तस्य धृतोऽभवत् ॥ ३०॥

अथ रविरवदन्निरीक्ष्य रामं मुदितमनाः परमं प्रहृष्यमाणः ।

निशिचरपतिसङ्क्षयं विदित्वा सुरगणमध्यगतो वचस्त्वरेति ॥ ३१॥

கீழ்கண்ட இணைப்பில் வால்மீகி ராமாயண பாராயணத்தின் ஆரம்பத்தில் ஜபிக்கும் த்யான ஸ்லோகங்களும், அதன் பின் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரமும், பின்னர் வால்மீகி ராமாயணத்தின் முடிவில் சொல்லப்படும் மங்கள ஸ்லோகங்களும் இருக்கிறது. ஆதித்ய ஹ்ருதயம் ராமாயணத்தின் ஒரு சர்கம். ஆக இந்த மூன்றையும் நித்யம் கேட்பதால் ராமாயண பாராயண புண்யமும் கிடைக்கும்.

https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/sets/adithya-hrudayam

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

6 replies on “ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ர மகிமை; adithya hrudayam audio recording mp3”

Namaskaram Anna! Aho Bhaagyam for all of us to get the puNyam of reciting entire Ramayanam by chanting the Dhyaana Slokams, Adithya Hrudhayam and MangaLa Slokams on a daily basis.

Rama Jaya Rama Jaya Rama Jaya Rama!
Sri MahaperiyavA Saranam.
Sri Swamigal Saranam.

Namaskarams Anna.Blessed to read this today, on Bhanu Sapthami.How much deep knowledge to take away from Ramar’s life.Would like to hear from you some other day more on this “அப்படி பார்த்தா, வால்மீகி ராமாயணம்ங்கிறது, ரிஷிகளோட மகிமையை சொல்லும் ஒரு கதைனே சொல்லலாம்”

Feeling blessed to read your post and listen to your divine recitation of Adithya hrudhayam . Thank you

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.