Categories
Ramayana One Slokam ERC

குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம்…

முதல் முதல்ல நான் ஸ்வாமிகள் கிட்ட போயிருந்த போது, அவர் எனக்கு மூகபஞ்ச சதி சொல்லித் தர ஆரமிச்சார். அந்த பாடம் regularஆ போயிண்டு இருந்தது. ஒரு நாள் கார்த்தால  அவர் பாராயணம் பண்ணும் போது போனேன். அப்போ அவர் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு அது தெரியல.  நான் உள்ள போன போது ஒரு ஸ்லோகம், முப்பத்தியேழாவது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம். இதை அவர் கொஞ்சம் உரக்க சொன்னார்.

स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं पतिं सयूथपं क्षिप्रमिहोपपादय।

चिराय रामं प्रति शोककर्शितां कुरुष्व मां वानरमुख्य हर्षिताम्।।5.37.66।।

எனக்கு அப்படியே காதுல தேனை கொட்டற மாதிரி இருந்துது. இது என்ன ஸ்லோகம்? அப்படினு கேட்டேன்

ஸ மே ஹரிஸ்ரேஷ்ட ஸ  லக்ஷ்மணம் பதிம்

ஸயூதபம் க்ஷிப்ரம் இஹோபபாதய |

சிராய ராமம் பிரதி சோக கர்ஷிதாம்

குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் ||

இதை அவர் சொன்ன போது எனக்கு ரொம்ப ஆனந்தமா இருந்தது. அவர் சொல்லி கேட்டு அப்படியே மனப்பாடம் ஆயிடுத்து. அப்போ “சுந்தரகாண்ட  ஸ்லோகம்” அப்படின்னார் . அப்படியா அப்போ நான் ராமாயணம் படிக்கிறேன் அப்படினு சொன்ன உடனே “படி. இந்தா படி. எழுத்து கூட்டி படி. ராமாயணமே உனக்கு சம்ஸ்க்ருதம் சொல்லி குடுத்துரும்” அப்படின்னு encourage பண்ணி, literalஆ எழுத்து கூட்டி ராமாயணம் படிச்சு, இன்னக்கி பிரவசனம் பண்ணிண்டு உட்கார்ந்துண்டு இருக்கேன். So நான் not eligible to do this. முழுக்க அவரோட graceதான்.

இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா “ஹே ஹரிஸ்ரேஷ்ட, வானர ஸ்ரேஷ்டரான ஹே ஹனுமான்!” சீதா தேவி ஹனுமனை பார்த்து சொல்றா. “ஸலக்ஷ்மணம், லக்ஷ்மணனோடு கூட, மே பதிம்,  என்னுடைய கணவரான ராமரை, ஸயூதபம், ஸுக்ரீவன்  முதலான எல்லா வானரர்ரகளோடு, க்ஷிப்ரம், மிக விரைவில், இஹ உபபாதய, இங்கே அழைத்து வா, சிராய, ரொம்ப காலமா, ராமம் ப்ரதி, ராமரைக் குறித்து, ஷோககர்ஷிதாம், வருத்தத்தினால, அவரை பிரிந்த துக்கம் என்ன பிழிஞ்சு எடுக்கறது, அவ்ளோ கஷ்டத்துல இருக்கேன், வானரமுக்ய, வானரகளில் முக்கியமானவனே குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் என்னை சந்தோஷம் அடைந்தவளாக  செய்”.

“ராமரை சீக்கிரமா அழைச்சுண்டு வந்து, என்னை இந்த கஷ்டத்துலேர்ந்து விடுவிச்சு, எனக்கு சந்தோஷத்தை கொடு” அப்படினு கேக்கறா. ஹனுமார் குரு. அந்த குரு கிட்ட  ஒரு ஜீவன் கேட்கறாப் போல. இப்போ நான் ஸ்வாமிகளை பார்த்தேன். அவர் பேரானந்தத்துல திளைச்சுயிருந்தார். ஒரு க்ஷணம் அதோட ஒரு திவிலை என் மேல் விழுந்த போது, என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது. அவர் கிட்ட அப்படி அந்த ராமாயணம்ங்கிற தேன் நிரம்பி இருந்துது. அவர்கிட்ட இருந்து ததும்பி விழும்போது, ஒரு க்ஷணம் அந்த வாக்கை கேட்டபோது அப்படிய புல்லரிச்சுது.

அப்படி மஹான்கள் பேரானந்தத்துல திளைச்சு இருக்கறதை நாம பார்க்கிறோம். நம்மால பார்க்கத்தான் முடியறது.  அடுத்த க்ஷணம் நாம் நம்ம உலகத்துக்கு வந்துடறோம். அப்போ அவா எப்படி எப்போதும் அது மாதிரி இருக்கான்னா, பாகவனோட touch அவாளுக்கு விடாம அதுலையே இருக்கறதுனால தான். இப்போ சீதாதேவி ஜீவன்.  ராமர் பகவான். ஹனுமார் குரு. இந்த குரு கிட்ட, எனக்கும் இதுமாதிரி பகவானுடைய அனுக்கிரஹம் கிடைக்கிறதுக்கு என்ன வழி சொல்லுங்கோ, அப்படின்னு நம்ம கேட்கிறோம் இல்லையா? அப்படி கேக்கற மாதிரி, எனக்கும் பகவானை காண்பிச்சு கொடுங்கோ. அவரை கூட்டிண்டு வாங்கோ. அவருடைய சம்பந்தம் எனக்கும் ஏற்படும்படி அனுக்கிரஹம் பண்ணுங்கோ என்று கேட்கறோம். இவாளா பார்த்தா தான்  நமக்கு தெரியறது. நிஜமான ஒரு மஹானை பார்த்தாலொழிய பகவான்னா நமக்கு என்ன என்கிறதே புரியாது. உலக விஷயங்கள் அவாளுக்கு புளிச்சு போய்டுத்து. தெய்வத்துல அப்படி மூழ்கியிருக்கா.

திருவண்ணாமலைல ரமண  பகவான் உட்கார்ந்து இருந்தார், அந்த மலை அவரை ஈர்த்து ஆட்கொண்டு விட்டது. ஒரு மலைமீது காதலோடு உட்கார்ந்து இருக்கார் னா அவருக்கு அதுக்குமேல என்ன வேணும்? ஒரு வேளை சாப்பாடு பிக்ஷை எடுத்து சாப்ட்டுண்டு, இந்த திருவண்ணாமலை மேல காதலோட அதை ப்ரதக்ஷிணம் பண்ணிண்டேயிருந்தார், அவர் உடம்பு முடிஞ்ச வரைக்கும். அப்பேற்பட்ட மஹான்கள் இருக்கா. அவாளுக்கு இந்த உலகத்துல எதுவுமே வேண்டான்னு இருக்கும் போது அது எவ்வளவு பெரிய விடுதலை! அந்த மாதிரி அவா இருக்கறதை பார்க்கணும்.

அந்த மாதிரி ஸ்வாமிகளுக்கு வந்து இந்த புஸ்தகங்கள். இந்த புஸ்தகங்களுக்குள்ள மூழ்கியிருப்பார். ஒரு நாளைக்கு புஸ்தகத்தை இப்படி வச்சிண்டு அப்படியே கண்ண மூடிண்டு இருந்தார். கண் ஜலம் வர்ரது. நான் என்னன்னு கேட்கறேன், என்ன என்னவோ ஆயிடுத்தா னு பயந்துண்டு. அவர் ஜடாயு மோக்ஷம் படிச்சுண்டு இருக்கார். ராமரோட மடியில ஜடாயு உயிர் பிரிஞ்சிருக்கு. அப்ப ராமர் புலம்பும் போது சொல்றார் “மம ஹேதோ: அயம் ப்ரணான் முமோச பதகேஸ்வர” “இந்த கழுகரசன் எனக்காக உயிரையே கொடுத்துடனே” அப்படினு சொல்றார். ஸ்வாமிகளுக்கு அதை படிச்சபோது, ஸ்வாமிகளுக்கு நிறைய கஷ்டங்கள் இருந்துது. நமக்கு இருக்கறது எல்லாம் ஒரு கஷ்டமா, உயிரையே பகவானுக்காக கொடுத்திருக்கனே இந்த கழுகரசன்! அப்படினு சொல்லி அந்த மாதிரி பகவானுக்காக உயிரையும் கொடுக்கலாம் அப்படிங்கற எண்ணத்துனால அவர் அப்படியா சமாதியில போய்ட்டார். அந்த ஒரு lineஐ படிச்சிட்டு “மம ஹேதோ: அயம் ப்ரணான் முமோச பதகேஸ்வர” அப்படினு அப்படியே லயிச்சு இருந்தார் அவர். ஒரு பதினைந்து நிமிஷம் ஒண்ணுமே ஓடலே அவருக்கு. அப்படி அவாளுக்கு இந்த புஸ்தகமே அவ்வளவு பேரானந்தத்தை  கொடுக்க முடியும் அப்படிங்கறத பார்க்க பார்க்கத் தான் நமக்கு பக்தி வரும். திருப்பியும் எழுந்து வெளியல வந்தவுடனே ஓட்டல்ல போய் ஏதாவது சாப்பிடறோமா இருக்கும், ஆனாலும் இப்படி ஒரு நிலைமை இருக்கிறதை கண்கூடா பார்த்தவுடனே, நமக்கு அதைப் பற்றி ஒரு ஆசை வருது.

இந்த ஸ்லோகம் வந்து அந்த மாதிரி பகவானை என்கிட்ட அழைச்சிண்டுவா அப்டின்னு பிரார்த்தனை பண்ற ஸ்லோகம். “ஸ மே ஹரிஸ்ரேஷ்ட ஸ  லக்ஷ்மணம் பதிம் ஸ யூதபம் க்ஷிப்ரம் இஹோபபாதய | சிராய ராமம் பிரதி சோக கர்ஷிதாம் குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் ||” அப்படினு ரொம்ப அழகான ஸ்லோகம்.

இது எங்க வரதுன்னா, சீதை முதலில் ஹனுமாரை பார்த்த பொழுது, ராவணனோன்னு ஸந்தேஹபடறா, ஹனுமார் நமஸ்காரம் பண்ணிண்டே இருக்கார். நமஸ்காரம் பண்ணிணா ஆசிர்வாதம் பண்ணனும். அதனால சீதை “நீ ராமதூதனா இருந்தா க்ஷேமமா இரு” அப்படினு சொல்றா. ஹனுமான் “பொழச்சேன்” ன்னார். அவர்  ராமதூதன் தானே. இருபத்திநாலு காரெட் தங்கத்தை கையில வச்சிண்டு இருக்கும்போது நம்ம கவலைப்பட வேண்டாமே. அந்த மாதிரி அவர் உண்மையான ராமபக்தனா இருக்கறதுனால, அந்த ஆசீர்வாதம் கிடைச்சிடுத்து அவருக்கு. அப்பறம் “நீங்க நினைக்கிற மாதிரி இல்லம்மா. நான் ராமதூதன் தான்” அப்படின்னு சொன்னவுடனே, ராமருடைய பெருமையை சொல்லு அப்டின்னு சொல்றா. ஒரு பக்தனால் தான் பகவானோட பெருமையைச் சொல்ல முடியும். ராவணனா இருந்தா ராமரோட பெருமையை வாயால பேசுவானா? ஒரு இருபது இருவத்தஞ்சு ஸ்லோகங்கள் ராமருடைய பெருமைய ஹனுமார் சொல்றார். இதுவே ஹனுமத்க்ருத ராம ஸ்தோத்ரம்னு தனியா எடுத்து பாராயணம் பண்ணுவா, அவ்வளோ அழகா இருக்கும். உடனே சீதைக்கு நம்பிக்கை வரது.

அதுக்கப்புறம் “ராம லக்ஷ்மணாளோட அங்க அடையாளங்களை சொல்லு” அப்படினு கேட்ட உடனே “ராம: கமல பத்ராக்ஷக:, சர்வ சத்வ மனோஹர: ரூபதாக்ஷிண்ய சம்பன்ன: ப்ரஸூதோ ஜனகாத்மஜே” என்று ஆரம்பிச்சு, ராம லக்ஷ்மாணாளோட அங்க அடையாளங்களை சொல்லி, அப்பறம் அவாளை  எப்படி தான் சுக்ரீவனுக்காக போய் பார்த்து அவளை அழைச்சுண்டு வந்து சுக்ரீவனோட ஸக்யம் பண்ணி வெச்சு, இப்படி விஸ்தாரமா நடந்ததை எல்லாம் சொல்லி இன்னைக்கு வரைக்கும், இப்போ நான் கடல் தாண்டி வந்தேன். உங்களை பார்த்தேன்ங்கிறது  வரைக்கும் சொல்லி முடிக்கறார். சீதைக்கு இந்த ஹனுமாரோட இனிமையான வாக்கை கேட்க கேட்க அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்றது. அதுக்கப்பறம் அந்த ராமருடைய மோதிரத்தை “ராம நாமாங்கிதம் சேதம் பஷ்ய தேவி அங்குலீயகம்” அப்டினு குடுத்தவுடனே, “ஆஹா! ஹே ஹனுமான்! விக்ராந்தஸ்த்வம், சமர்த்தஸ்த்வம், பிராஞஸ்த்வம்  வானரோத்தமா! எவ்வளவு பெரிய காரியம் நீ பண்ணியிருக்கே, இந்த ராக்ஷர்களின் கோட்டை காவலை மீறி வந்து என்ன பார்த்து, என்னுயிரை காப்பாத்தி, ராமருடைய  மோதிரத்தை காண்பிச்சியே! ராமரையே பார்க்கற மாதிரி எனக்கு சந்தோஷமா இருக்குனு” சொல்றா.

அப்புறம் “ஏன் இன்னும் ராமர் வரலை? ஏன் என்னை இப்படி கைவிட்டுட்டார்?” அப்படினு கஷ்டப்பட்டு கேட்கும் போது “இல்லை அம்மா. நீங்க எங்கேயிருக்கேள் னு தெரியல. அதனால் தான் வரலை, நான் திரும்பிப் போய் சொல்றது தான் delay. ராமர் வானரப் படையை இழுத்துண்டு வந்து இந்த லங்கையை முற்றுகை இட்டு ராக்ஷசர்களை எல்லாம் வதம் பண்ணி ஒங்களை மீட்டுண்டு போயிடுவார். கஜேந்த்ரன் “ஆதிமூலமே” னு கதறின போது, கருடனை இழுத்துண்டு விஷ்ணு பகவான் வந்தார். அப்படி பக்தனை காப்பாற்றுவதில் அத்தனை அவசரம். அப்படி வானரப் படையை இழுத்துண்டு வந்துடுவார் ராமர். நீங்கள் கவலைப் பட வேண்டாம். நீங்கள் அழும் வேளை முடிஞ்சு போயிடுத்து. நீங்கள் இனி அழ வேண்டாம்” அப்படின்னு சமாதானப் படுத்துகிறார்.

“இல்லைன்னா ஒண்ணு பண்ணுவோம். இப்பவே உங்களுடைய இந்த கஷ்டத்தை நாம் போக்கி விடுகிறேன். எப்படி அக்னியானது ஹவிஸ்ஸை இந்திரன் கிட்ட சேர்க்குமோ, அப்படி உங்களைக் கொண்டு போய் ராமர் கிட்ட சேர்த்துடறேன்” அப்படின்னு சொல்றார். இது எவ்வளவு அழகாக இருக்கு இந்த உவமை. அக்னி ரொம்ப தூய்மையானது. ஹவிஸ் பண்ணும்போது, ஆத்துல ஒரு ஹோமத்துக்கு பண்ணும் போது கூட ரொம்ப மடியாக பண்ணுவா. யாகத்தில் ஹவிஸ்ங்கறது தான் ரொம்ப தூய்மையான பொருள். அப்படி சீதை ரொம்ப தூய்மையானவள். ஹனுமாரும் நெருப்பு போல ரொம்ப தூய்மையானவர். ராமர் இந்திரன் மாதிரி பராக்கிரமம் படைத்தவர். ராமர் கிட்ட கொண்டு போய் உங்களை சேர்த்து விடுகிறேன் னு சொல்றார். சொல்லும் போதே intention ரொம்ப clear ஆக புரியற மாதிரி அழகாகச் சொல்றார்.

ஹனுமார் சின்னதா ஒரு மூணு அடி வானரமாக இருக்கார். அவர் “உங்களை தூக்கிண்டு போய் கடல் கடந்து ராமர்கிட்ட சேர்த்துடறேன்” என்றவுடன் சீதை “ஒரு குழந்தை ஆர்வத்தில் சொல்ற மாதிரி இவர் சொல்றார் போல இருக்கு” னு நினைச்சு கேட்கறா “என்னப்பா, நீ எப்படி என்னைத் தூக்கிண்டு போய் ராமர் கிட்ட சேர்ப்பாய்?” னு சொன்ன போது ஹனுமார் “ஆஹா! உங்களுக்கு என்னுடைய பலம் தெரியவில்லை” னு சொல்லி விஸ்வரூபத்தை காண்பிக்கிறார். சீதை உடனே “ஆமாம். நீ இவ்வளவு பெரிய கடலைத் தாண்டி வந்து இருக்கியே! புரியாம பேசிட்டேன். உன்னால் முடியும். ஆனால் நான் ஒரு பெண்ணாக இருப்பதால் உன் முதுகில் ஏறி போகும் போது எங்கேயாவது கடலில் விழுந்து விடுவேன். இல்லை ராக்ஷஸா துரத்திண்டு வருவா” அப்படியெல்லாம் சொல்லிட்டு கடைசியில் அவ மனசுல இருக்கற உண்மையான எண்ணத்தை சொல்றா. “நான் ராமரைத் தவிர இன்னொரு ஆண்மகனை வலிய போய் எப்படி தொட முடியும்? ராவணன் என்னை பலவந்தமாக தூக்கிண்டு வந்துட்டான். அப்போ எனக்கு வேற வழி இல்லை. இன்னிக்கு என்னால உன் முதுகில் ஏறமுடியாமல் இருக்கிறேன்” என்று சொன்னவுடன் ஹனுமார் “ஆஹா! உங்களுக்கு பொருத்தமான வார்த்தைகளை நீங்கள் சொன்னேள். எனக்கு நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கறதை பார்க்க முடியலை. அங்கே அவர் படற கஷ்டத்தையும் பார்த்தேன். இங்கே நீங்க படற கஷ்டத்தையும் பார்த்தேன். உங்களை உடனே சேர்த்து வைக்கற எண்ணதுனால ஒரு வார்த்தை சொல்லிட்டேன்” என்கிறார். நான் போய் ராமரை அழைச்சுண்டு வரேன்னு சொன்னபோது இந்த ஸ்லோகத்தை சீதை சொல்றா. “ஸ மே ஹரிஸ்ரேஷ்ட ஸ  லக்ஷ்மணம் பதிம் ஸ யூதபம் க்ஷிப்ரம் இஹோபபாதய | சிராய ராமம் பிரதி சோக கர்ஷிதாம் குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் ||”

நமக்கெல்லாம் ராமர் மஹாபெரியவா. எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் குருநாதர். அவர் கிட்ட எனக்கும் மஹாபெரியவா அனுக்ரகம் கிடைக்கும்படி தயவு பண்ணுங்கோ அப்படின்னு வேண்டிக்கறதுக்கு இந்த ஸ்லோகம் அழகா அமைஞ்சு இருக்கு. ஸ்வாமிகளுக்கு பாக்கியம். பெரியவா பக்கத்துலேயே இருந்தார். அந்த மாதிரி ஞானிகளுடைய சந்நிதியில் mental ஆக நாமும் பெரியவா சந்நிதியில் எப்பவும் இருக்க, பெரியவா நம்ம கூட இருக்க, இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிப்போம்.

இப்படி ஸீதா தேவி ஹனுமார் கிட்ட “ஹனுமான், என் ராமரை சீக்கிரமாக அழைச்சுண்டு வந்து என் கஷ்டத்தை போக்கு” னு வேண்டிக்கறா. அந்த சீதையோட பக்தி எப்படிப் பட்டதுன்னு ஹனுமார் சீதையை பார்த்த உடனே புரிஞ்சுண்டுடறார். அவர் சொல்றார் “நைஷா பஷ்யதி ராக்ஷஸ்ய: நேமான் புஷ்ப பல த்ருமான் | எக்ஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவ அனுபஷ்யதி || ந ஏஷா பஷ்யதி ராக்ஷஸ்ய: – இந்த ராக்ஷசிகள் கோரமாக இருக்கா, பயமுறுத்தறா அப்படிங்கறதயும் அவ கவனிக்கவில்லை. ந இமான் புஷ்ப பல த்ருமான் – இந்த அசோக வனத்துல ரொம்ப அழகான, வாசனையோட உள்ள புஷ்பங்கள், பழங்கள் இருக்கு. அருவிகள், ஓடைகள் இருக்கு, ரொம்ப ரம்யமாக இருக்கு என்பதையும் அவள் மனசுல வாங்கி கொள்ளவில்லை. எக்ஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவ அனுபஷ்யதி – ஒரே மனசோட அவ ராமரையே நினைச்சுண்டு இருக்கா அப்படின்னு சொல்றார். ஹனுமார் சீதாதேவியை தர்சனம் பண்ணின உடனே இதைச் சொல்றார்.

அப்பறம் ராவணன் வந்து பயமுறுத்தி விட்டு போகிறான். ராக்ஷசிகள் பயமுறுத்தறா. அவா மேலும் மேலும் “இனிமே எங்க ராமன் வரப்போறான்? அவன் எங்கேயோ இருக்கான். பத்து மாசம் ஆச்சு. கடலைத் தாண்டி வர முடியுமா? அப்படி சொல்ல சொல்ல சீதாதேவிக்கு துக்கம் ஜாஸ்தி ஆகி ஒரு நிமிஷம் அவளோட நம்பிக்கை போயிடறது. அதுனால, “இனிமே என்ன இருக்கு? நான் உயிரை விடப்போறேன்” அபப்டின்னு முடிவு பண்ணி தன்னுடைய பின்னலிலேயே தூக்கு போட்டுக்க போறா. அப்போ ஒரு ஸ்லோகம் வரது. துக்கத்தோட எல்லையில் இருக்கும் போது “தஸ்யாஸ்து ராமம் பிரவிசிந்தயன்த்யா:” அப்படின்னு ராமரை மீண்டும்மீண்டும் நினைக்கறா. “இதீவ தேவி பஹுதா விலப்ய சர்வாத்மனா ராமம் அனுஸ்மரந்தி” – இப்படி சீதாதேவி அழும்போதும் முழு மனதோடு ராமனை நினைத்தாள் அப்படின்னு வரது.

அப்போ அவளுக்கு சுப சகுனங்கள் ஏற்படறது. என்னடா இதுன்னு வியக்கறா. அப்போ மரத்து மேலே இருந்து ஹனுமாரும் இவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசிச்சு. அவர் புத்திமதாம் வரிஷ்டம் – புத்திமான்களுக்குள் சிறந்தவர். அதுனால ராம கதையைச் சொன்னால் இவளுடைய மனம் சமாதானம் ஆகும் என்று தீர்மானம் செய்து, மெதுவாக அவள் காதுக்கு கேட்கும்படியாக, ராஜரிஷிகளும் போற்றும் இனிமையான ராம கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அப்படி ராம கதையை அவர் சொல்லச் சொல்லச் சொல்ல சீதைக்கு மனசுல துக்கம் எல்லாம் போய் சந்தோஷம் ஏற்படறது. அப்போ அவர் நிமிர்ந்து பார்த்து மரத்து மேல் ஹனுமாரை தர்சனம் பண்றா. மஞ்சள் பட்டாடை உடுத்திக் கொண்டு ஹனுமார் மரத்துமேல் சூர்யனைப் போல ஒளி விடுகிறார். சீதைக்கு விடிந்தது, என்பார் ஸ்வாமிகள். அவளுக்கு கஷ்டம் எல்லாம் விடிந்தது. அங்கே ஒரு ஸ்லோகம் வருகிறது. “ஸ்வயம் ப்ரஹர்ஷம் பரமம் ஜகாம சர்வாத்மனா ராமம் அனுஸ்மரந்தி” துக்கத்தின் எல்லையிலும் ராமனையே நினைத்தாள். இப்போ சுகத்தின் எல்லையிலும் ராமனையே முழு மனதாக நினைத்தாள். இது தான் பக்தி. இப்பேற்பட்ட பக்தி இருந்தால் குரு வருவார். குரு கிட்ட நாம பணிவோடு, உருக்கத்தோடு வேண்டிண்டா பகவானை அழைச்சுண்டு வருவார்.

அந்த மாதிரி பக்தி ஏற்படறதுக்கு என்ன பண்ணனும்னு கேட்டா, அதுக்கும் மஹான்கள் வழி காண்பிச்சு இருக்கா. ஒழுக்கம் என்ற வேலி போட்டு, மனமாகிய வயலில், விவேகம் என்ற கலப்பையால் உழுது, காம க்ரோதாதி களைகளை பிடுங்கி எறிந்து, குருவுடைய அனுக்ரகம் என்ற வாய்க்கால் கட்டி, இடையறாத பஜனம், பகவானுடைய நாம ஸ்மரணம் என்ற விதையை விதைச்சுண்டே இருந்தா, பகவானுடைய அனுக்ரகம்  என்ற மழை பொழிஞ்சு, ஞானப் பயிர் விளையும் என்று ஒரு மஹான் சொல்லி இருக்கார். இதுல, அவர் கூடவே சொல்றார். என்னிக்காவது மழை பொய்க்கறது உண்டே, அது மாதிரி அனுக்ரஹ மழை பெய்யாமல் இருந்துடுமோ? அப்படின்னு கேள்வி கேட்டுண்டு அவரே சொல்றார். பகவானுடைய நாமம். பஜனம் என்ற விதை பகவானுடைய அனுக்ரகம் என்ற மழையை ஆகர்ஷணம் பண்ணக் கூடிய காந்தம் போன்ற ஒரு விசேஷ விதை. அதுனால மழை தவறாமல் பெய்யும். பகவதனுக்ரகம் கட்டாயம் கிடைக்கும் என்று சொல்கிறார். நாமும் ராம நாமத்தை சொல்லி பக்தி வளர்ந்து குரு அனுக்ரஹத்தால் பகவானை அடையவோம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம் (16 min audio in tamizh. same as the script above)

2 replies on “குருஷ்வ மாம் வானர முக்ய ஹர்ஷிதாம்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.