Categories
Ramayana One Slokam ERC

முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ

सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।

पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।।

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் |

புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

என்று சுந்தரகாண்டம் 51 வது சர்கத்துல ஒரு ஸ்லோகம். பதினாலு உலகங்களையும், நாம் இருக்கற பூமி, மேல இருக்கக் கூடிய உலகங்கள், நக்ஷத்ரம், சந்திர, சூர்யர்கள், அப்புறம், நமக்குக் கீழே இருக்கக் கூடிய, ரசாதளம், தலாதளம், பாதாளம், அதல, பாதாளம் வரைக்கும், மேல இருக்கக் கூடிய, சுவர்லோகம், முதல், பிரம்மலோகம் பர்யந்தம்,எல்லா உலகங்களையும், இதுல இருக்கின்ற, சர, அசர, மரங்கள், மலைகள், கடல்கள், முதற்கொண்டு, எல்லா, உயிருள்ள, உயிரில்லாதது, எல்லா பொருள்களையும்

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய – எல்லாத்தையும், ஸம்ஹாரம் பண்ணி, அழித்து, புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா:  – மீண்டும் அதே மாதிரி, ஸ்ருஷ்டி பண்ணக் கூடிய சக்தி, ராமருக்கு இருக்கு அப்படீன்னு, ராமருடைய பராக்ரமத்தை ப்ரபாவத்தைப் பத்தி ஒருத்தர் சொல்றார். யாருன்னு சொல்லுங்கோ பார்க்கலாம்? ஹனுமார் தான் சொல்றார். ஹனுமார், ராவணனுடைய சபையில இதைச் சொல்றார்.

இந்திரஜித், பிரம்மாஸ்திரம் போடறான். ஹனுமார், “பிரம்மாவுக்கு,கௌரவம் கொடுப்போம், பிரம்மாஸ்த்ரத்துக்குக் கூட கட்டுப்படலை”, அப்படீன்னு, ஒரு பேச்சு இருக்க வேண்டாம், அப்படீன்னு, பிரம்மாஸ்திரம், அவரை ஒண்ணும் பண்ணாது. இருந்தாலும், பிரம்மாஸ்த்திரதுக்கு கட்டுப் பட்டு கீழே விழறார். ராவணன் சபைக்கு தான் போகணும், பகல் வந்துடுத்து. இந்த லங்கையோட, தெருக்களையும், இதோட அமைப்பையும் பாத்துக்கணும். யுத்தத்தும் போது, உபயோகமா இருக்கும். ராவணனை பாக்கணும்ங்கிற போது இவா, ராவணன் கிட்ட கூட்டிண்டு போறா அப்படின்னு போறார். போற வழியில, அவாள்லாம், ஓன்னு கத்திண்டு, ஒற்றன், திருடன்னு, அடிங்கோ இவனை,  அப்படீன்னு, எல்லாம் சொல்றா. ஹனுமார் ராமருக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கறார். ராவணன் சபைக்குப் போறார்.

ராவணன், இவரைப் பார்த்த உடனே, “ஆஹா, முன்ன நந்தி பகவான், என்னை சபிச்சாரே, அவரே தான் இந்த உருவத்துல வந்துருக்காரோ” என்று நினைக்கிறான். அதாவது, ஒரு தடவை, ராவண, திக்விஜயம் பண்ணிண்டு இருக்கும் போது, கைலாச மலைக் கிட்ட வரான். கைலாச மலைக் கிட்ட வரும்போது, நந்தி பகவான் “இது பரமேஸ்வரனுடைய இடம், நீ இங்க வம்பு பண்ணாதே, பேசாம, ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு போயிடு” அப்படீன்னு, சொல்றார். ராவணன் “அவன், போடா குரங்கு மூஞ்சி, யாரா இருந்தா எனக்கென்ன?” அப்படீன்னு சொல்லி, நந்தி பகவானை பார்த்து, அவர் காளை முகம். அப்படி கேலி பண்றான். அந்த மாதிரி சொன்ன உடனே, “உனக்கு, குரங்குகளாலயே அழிவு ஏற்படும்”, அப்படீன்னு, நந்தி பகவான், சாபம் கொடுக்கறார்.

அப்புறம் “இந்த மலையை, நான் தூக்கி போட்டுட்டுப் போயிடுவேன்”, அப்படீன்னு சொல்லி, அந்த கைலாச  மலையை தூக்கப் பாக்கறான். மேரு, மந்திர மலைகளை எல்லாம் கூட அவனால் தூக்க முடியும், அவனால. ஆனா, கைலாசம்ங்கிறது, பகவானோட இடம், பரமேஸ்வரனுடைய இடம். பகவான் தன்னோட கால் விரலை வெச்சு லேசா அழுத்தறார். ராவணன் மலைக்கடியில் நசுங்கி, ஓ ன்னு அழறான். அப்போ, நாரதர் வரார். நீ ஸாம கானம் பாடு. பரமேஸ்வரனுக்கு திருப்தி ஆகும்னு, சொல்றார். அவனும் பாடறான். சிவபெருமான் அவனை விடுவிச்சுடறார். இந்த மாதிரி, “வந்துருக்கிறது, நந்தி பகவானோ”, அப்டீங்கறான், அந்த ஹனுமாரோட தேஜஸைப் பார்த்து ராவணன் வியக்கறான்.

ஹனுமாரும் அந்த சபையை பார்த்து, “இவன் எவ்வளோ பெரிய வீரனா இருக்கான். இவ்ளோ பெரிய, சபையில அலங்காரமா உட்கார்ந்து இருக்கான்”. சுத்தி அவனுடைய, மந்திரிகள் இருக்கா. சேனாதிபதிகள் இருக்கா. எல்லாத்தையும் அவர் கவனிக்கறார். “இவன் மட்டும் நல்லவனா இருந்தா, இவனும் ஒரு நல்ல ராஜாவா இருந்துட்டுப் போலாம், எல்லாரையும் ஹிம்ஸை பண்ணிண்டு இருக்கான் இவன். அதனால இவனுக்கு முடிவு வரப் போறது.  இவன் பண்ணிண தப்புனால, இவன் குலத்துக்கே ஆபத்து வரப் போறது”, அப்படி எல்லாம் நினைச்சுண்டே வறார்.

ராவணன் seat ஆசனம் கொடுக்கல. அதனால, ஹனுமார், வந்து தன்னுடைய வாலாலேயே தனக்கு ஒரு seat பண்ணிண்டு, அது மேல ஏறி, ராவணனை விட உயரத்துல உட்கார்ந்துண்டார், அப்டீன்னு ஒண்ணு. நன்னா இருக்கு. இது, வால்மீகி ராமாயணத்துல இல்லை. கம்ப ராமாயணத்துல இருக்கு போல இருக்கு. ஹனுமாரை, நிமிர்ந்து பார்த்து பேசினான் இராவணன், அப்படீன்னு வால்மீகி ராமாயணத்துல வர்றது.  மேல பார்த்து பேசறான்னா, தன்னை விட உயரத்துல இருக்கறதா தானே அர்த்தம்.

“யாரு இவன் வந்துருக்கறது. கேளு அவனை, அவன் ஏன் இங்க வந்துருக்கான்? இவனை பார்த்தா, வெறும் வானரம் போல தெரியல”, அப்படீன்னு, இராவணன் சொல்றான். அப்ப ப்ரஹஸ்தன் கேட்கறான். “நீ யாரு? உண்மையை சொன்னா, உயிரோட விடுவோம்” அப்படீன்னு சொல்றான். ஹனுமார் சொல்றார். “நான் வானரம் தான். நான் ராம தூதன். சுக்ரீவனுடைய மந்திரி. நான் சுக்ரீவனனுடைய ஒரு செய்தியை ராவணனுக்கு சொல்ல வந்துருக்கேன். உன்  தம்பி போல, சுக்ரீவன் சொல்ற நல்ல வார்த்தையை கேட்டுண்டு உயிர் பிழைச்சுப் போ”, அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி, foreign land ல போயி, brothers and sisters of America ன்னு, ஒருத்தர் சொன்னாரே,  விவேகானந்தர், அதுக்கு முன்னாடியே, ஹனுமார் சொல்லி இருக்கார்.  “தம்பி சொன்ன செய்தியை உனக்கு சொல்றேன்”. அப்டீன்னு சொல்லி, “நீ இவ்வளவு நாள், தபஸ்  பண்ணி இருக்கலாம், அது, உன்னை காப்பாத்தித்தா இருக்கும். இப்ப நீ பெரிய தப்பு பண்ணி இருக்க. ராமருடைய பத்னியை அபகரிச்சு சிறை வெச்சு இருக்க. நான் அவளை இங்க பார்த்தேன். நான் திரும்பி போயி, ராமர் கிட்ட சொல்ற காலம்தான் நீ உயிரோடிருக்கப் போற. அதனால மரியாதையா சீதையை ஒப்படைச்சு உயிர் பிழைச்சு, போ” அப்படீன்னு சொல்லும்போது,

सत्यं राक्षसराजेन्द्र शृणुष्व वचनं मम।

रामदासस्य दूतस्य वानरस्य विशेषतः।।

சத்யம் ராக்ஷஸ ராஜேந்தர ஷ்ருணுஷ்வ வசனம் மம |

ராமதாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய விசேஷத: ||

ராமதாசனான நான் இப்ப ஒண்ணு சொல்றேன், அப்டீன்னு ஒரு பீடிகை போட்டு சொல்றார். நான் சொல்ற வார்த்தை ரொம்ப சத்யமானது, நான் ராம தூதன். சொல்றேன் கேட்டுக்கோ

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசாரசரான் |

புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

அப்பேற்பட்ட ராமர், பதினாலு லோகங்களையும் ஸம்ஹாரம்  பண்ணக் கூடியவர், அவர் பதினாலு லோகங்களையும் சிருஷ்டியும் பண்ணக் கூடியவர்.  பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு எல்லாம் மேலான தெய்வம். அவர்கிட்ட நீ தப்பு பண்ணி இருக்க. இனிமே நீ யார் கால்ல விழுந்தாலும், யாரும் உன்னை காப்பாத்த முடியாது, அதுனால நீ போயி ராமர் காலில் விழு, அப்டீன்னு சொல்றார். இந்த

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசாரசரான் |

புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

அப்டீங்கிற ஸ்லோகம், சுந்தர காண்டத்துல ஒவ்வொரு ஸ்லோகமுமே மந்திரம்னு சொல்லுவா. ஸ்வாமிகள் இதை ஒரு மஹா மந்திரமா நினைப்பார். நடக்க முடியாத காரியமும் நடக்கும்.

அஸாத்ய ஸாதக ஸ்வாமின்னு அஸாத்ய தவ கிம் வத |

ராம தூத கிருபா ஸிந்தோ மத் கார்யம் ஸாதய பிரபோ ||

அந்த மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ஹனுமார்கிட்ட, நீ, அசாத்யமான கார்யங்களை பண்ணக் கூடியவன். நீ என் கார்யத்தை நடத்திக் கொடுன்னு பிரார்த்தனை. இங்க அந்த ஹனுமார் ராமரோட பெருமையை சொல்றார். அதனால, யாருமே நடக்காதுன்னு, நினைக்கிற கார்யம் ராமரோட தயவு இருந்தா நடக்கும்.

ஒரு வாட்டி ஸ்வாமிகள் கிட்ட, சிதம்பரம் ஐயர்னு ஒருத்தர் வருவார். அவரோட பையன் ரோடுல அடிபட்டு, மண்டை உடைஞ்சு, மூளையே வெளியில வந்துடுத்து. பையன் hospital ல இருக்கான்னு போன் பண்றா. சிதம்பரம் ஐயர் hospital போகலை. அவர் நேரா ஸ்வாமிகள் கிட்ட வந்தார். ஸ்வாமிகள் கவலைப் படாதேங்கோனு, உடனே இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு, hospital போயி ஆசுவாசப் படுத்திட்டு, ஸ்வாமிகளும், குழந்தையை பார்த்துட்டு வந்தார். அந்த குழந்தைக்கு இன்னிக்கு அறுவது வயசு ஆறது. அவருக்கு அப்புறம் operation பண்ணி அது சரியாகி, அவர் உயிர் பிழைச்சு வந்து, ரெண்டு மாசம் கோமாவுல இருந்தார். ஆறு மாசம் hospital ல இருந்தார். இன்னிக்கு அவரோட பையன் IITல professor ஆ இருக்கார். அப்படி  இந்த

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசாரசரான் |

புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: ||

ஒரு மஹா மந்திரம். ராமருடைய கிருபை இருந்தால் எதுவும் நடக்கும்.

ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய (16 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.