Categories
Bala Kandam

வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்

6. வால்மீகி முனிவர் தாம் படைத்த ராமாயண காவியத்தை லவ குசர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அதை முதலில் காட்டில் முனிவர்களுக்கு பாடி காண்பிக்கிறார்கள். பின்னர் அவர்கள் ராமர் அழைப்பை ஏற்று, அஸ்வமேத மஹா மண்டபத்தில் ராமர் முன்னிலையிலேயே அந்த காவ்யத்தை பாடுகிறார்கள்.

தன் கதை கேட்ட ராமபிரான் (Audio file. Transcript given below)

பிரம்மதேவர் வந்து வால்மீகி முனிவருக்கு அனுக்ரஹம் செய்துவிட்டு போன பின், வால்மீகி பகவான் தர்ப்பாசனத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டு, யோக சக்தியினால் அந்த இராமாயண நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் மனக் கண்களால் பார்க்கிறார். பார்த்தபடியே அனுஷ்டுப் சந்தஸில் ஸ்லோகங்களாக அதனை அமைக்கிறார். இருபத்தினான்காயிரம் ஸ்லோகங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட சர்கங்கள், ஏழு காண்டங்கள், இப்படி, வால்மீகி இராமயணத்தினை ரசனம் செய்கிறார்.

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் இப்படியாக ஏழு காண்டங்கள்.

<ஸ்லோகம்>

இதனை, அறம் பொருள் இன்பம் வீடு என்று தமிழில் சொல்வார்கள், தர்மார்த்தகாமமோக்ஷம் அப்படின்னு. அர்த்தம் என்கிற வார்த்தைக்கு, பொருள் என்று ஒரு அர்த்தம், மோக்ஷம் என்று ஒரு அர்த்தம், அந்த காமத்தைப் பற்றியும், பொருளை பற்றியும் கொஞ்சம் இந்த காவியத்தில் இருக்கிறது, தர்மத்தை பற்றியும் மோக்ஷத்தை பற்றியும் விஸ்தாரமாக இருக்கிறது.

காமர்த்த குண சம்யுக்தம், தர்மார்த்த குண விஸ்தரம் – என்று சொல்வார்கள்.

கைகேயி, பணத்தில் பேராசை வைத்து, ராஜ்யத்திற்கு ஆசைப்பட்டதினால், வைதவ்யத்தை அடைந்து கஷ்டப்பட்டாள். இராவணன் காமத்தினால் மாண்டான். ராமர் தர்மத்தினை வாழ்ந்து காண்பித்தார். ஒவ்வொரு நேரத்திலேயும் ஒவ்வொரு கட்டத்திலேயும், அப்பாவிடம் பிள்ளை எப்படி இருக்கவேண்டும், அண்ணாவிடம் தம்பி எப்படி இருக்கவேண்டும், தம்பியிடம் அண்ணா எப்படி இருக்கவேண்டும், மனைவியிடம் கணவன் எப்படி இருக்கவேண்டும், அப்படி எல்லாவற்றிற்க்கும் ராமருடைய வாழ்கையை பார்த்துகொள்ளலாம். ஒரு மனுஷ்யனாக பூமியில் பிறந்தவன், எப்படி தர்மமாக  நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு இராமயணத்தில நிறைய இடங்கள் இருக்கு.

அப்படி, அந்த தர்மத்தினை வாழ்ந்து காண்பிப்பதற்காகவே ஒரு அவதாரம், அதனை விஸ்தாரமாக, வால்மீகி, காவியத்தில் சொல்லி இருக்கிறார்.

அந்த ராமரை நம்பியவர்கள், சரபங்கர் போன்ற முனிவர்கள், சபரி போன்ற பக்தர்கள், லக்ஷ்மணஸ்வாமி, ஜடாயு போன்ற பக்ஷிகள்,  சீதாதேவி எல்லாரும், அந்த ராமனை நம்பியவர் எல்லாரும் மோஷத்தினை அடைகிறார்கள் என்பதையும் விஸ்தாரமாக சொல்லி இருக்கிறார். பரதாழ்வார் பக்தியையும், பக்தியினால் அவர்கள் அடைந்த மேன்மையையும் பற்றி இந்த காவியத்தில் விஸ்தாரமாக இருக்கிறது.

“ஸமுத்ரமிவ ரத்னாட்யம்”, இரத்தினங்கள் நிறைந்த ஸமுத்திரம், ஸர்வ ஸ்ருதி மனோஹரம், எல்லோருக்கும், கேட்பவர் எல்லோருடைய மனத்தையும் அபகரிக்கும் விதமாஇருக்கு.

இந்த வால்மீகி இராமாயணத்தில், இந்த மூணாவது சர்க்கத்தில இன்னொரு தடவை வால்மீகி ராமாயண காட்சிகள் எல்லாம் வருகிறது. அதனை சொல்லி முடித்து, இப்பேற்பட்ட ராமாயணத்தை எழுதி முடித்தார், என்று வருகிறது.

அப்புறம் இதனை யார் மூலமாக பகவான் உலகத்திற்கு தெரிவிக்க போகிறார் என்று முனிவர் மனதில் நினைக்கிறார், அப்பொழுது இரண்டு குழந்தைகள் வந்து அவருக்கு நமஸ்காரம் பண்ணறா. அவா யாருன்னா லவ குசர்கள்; ராமருடைய குழந்தைகள்தான், வால்மீகி ஆஸ்ரமத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இரண்டு பேரும் குமாரர்களாக இருக்கிறா, வேதம் படித்தவா, நல்ல சங்கீத ஞானம் இருந்தது அவாளுக்கு, நல்ல குரல் வளம் இருந்தது. உடனே வால்மீகி முனிவர், அவர் செய்த ஸ்லோகங்களும் ரொம்ப சங்கீதத்தோடு பாடக்கூடிய வகையில அமைந்திருந்தது, வீணா கானத்தோட அந்த ராமாயண ஸ்லோகங்களை ராகத்தோட  பாடலாம், அந்த மாதிரி, அந்த குழந்தைகளுக்கு அந்த இருபத்திநான்காயிரம் ஸ்லோகத்தையும் சொல்லிவைத்தார்.

அந்த குழந்தைகள், ஒரு வாட்டி கேட்டவுடனே, அதை அப்படியே மனுசுல, “ஏக சந்த க்ராஹி” ன்னு  மனசுல வாங்கிகொள்வார்கள். அப்படியே அவர்களும் அதை தெரிந்துகொண்டார்கள்.

உடன், ரிஷிகளை எல்லாம் கூப்பிட்டு வால்மீகி முனிவர், இவா ஒரு காவியத்தினை பாடுகிறார்கள் கேளுங்கள் என்று சொல்கிறார். ரிஷிகள் எல்லாம் கேட்டு பரமானந்தம் அடைகிறார்கள். ஆஹா “அஹோ கீதஸ்ய மாதுர்யம்” , என்ன மதுரமாக இருக்கு இந்த கீதம், என்னவொரு அர்த்தபுஷ்டியோடு இருக்கிறது இந்த ஸ்லோகங்கள், ஒவ்வொன்றும் அமைந்திருக்கிற விதமும், காவியத்தினுடைய எல்லா லக்ஷணங்களும் இருக்கு. எல்லா ருதுக்களுடைய வர்ணனை, எல்லா பாத்திரங்களுடைய (characters ) பாத்திர அமைப்பு (characterisation) , நவரச பரிதமாக இருக்கு, எல்லா ரசங்களும் இருக்கு, காருண்யம், ஸ்ரிங்காரம், பீபத்சம், பயம், வீரம், ஹாஸ்யம், எல்லாமே இருக்கு. இந்த மாதிரி ஒரு காவியத்தை இதற்கு முன்னாடி யாரும் பண்ணதில்லை. நீங்க தான் இனிமே ஆதிகவி, இனி வரபோகிற கவிகள் எல்லாருக்கும், இந்த ராமாயணம் தான் ஆதாரமாக இருக்க போகிறது, அப்படின்னு, வால்மீகி முனிவரை கொண்டாடுகிறார்கள்.

அந்த குழந்தைகளை, வாயார வாழ்த்துகிறார்கள், ரொம்ப க்ஷேமமாக இருங்கள், ரொம்ப ஆயுஷ்மானாக இருங்கள் அப்படி என்று, அவர்களை ஆசிர்வாதம் செய்கிறார்கள்.

இந்த ரிஷிகள் கொண்டாடறதுனால, கிராமத்திலேர்ந்து, நகரத்திலேர்ந்து ஜனங்கள் வரும்போது, அவாள்ட்ட ரிஷிகள் நல்ல விஷயத்தினை சொல்வார்கள். இந்த வால்மீகி ராமயணத்தை பற்றி சொன்னவுடனே, எல்லாரும் அதனையே பேசுகிறார்கள், அது ராமர் காதிலேயும் விழறது. ராமர் அப்பொழது அஸ்வமேதயாகம் செய்து கொண்டிருக்கிறார், அந்த அச்வமேத யாகத்தில, “அந்த குழந்தைகளை கூப்பிடுங்கள், நாமும் கேட்போம்” என்று, அவர்களை கூப்பிட்டு, கௌரவித்து, தங்க பலகையில உட்கார வைத்து, அந்த குழந்தைகளை வால்மீகி ராமயணத்தை பாடச் சொல்லி, ராமரே சபையில் கூட இருந்து, எல்லோரோடும் ஒருத்தராக தானே தன் கதையை கேட்கிறார். இப்படி வால்மீகி ராமாயணம், ராமரே கேட்ட கதை.

நம்முடய ஸ்வாமிகளிடம் மஹா பெரியவா உட்கார்ந்து, பாகவதம் கேட்டாரென்றால், க்ருஷ்ண கதையை கிருஷ்ணரே கேட்ட மாதிரி தானே, அதுபோல, இராமயணத்தையும் ராமரே கேட்டார்.

அந்த குழந்தைகள் சொல்ல ஆரம்பித்தார்கள் – ஆதி காலத்தில் இஷ்வாகு வம்சத்தில், இன்னின்ன ராஜாக்கள் இருந்தார்கள், அவர்களெல்லாம் சரயு நதிக்கரையில், அயோத்திய தலைநகரமாக கொண்டு, கோசல தேசத்தை ஆண்டு வந்தார்கள், அவர்கள் பூமிக்கு சக்ரவர்த்திகளாக இருந்தார்கள், அப்படின்னு அந்த ராஜாக்கள் மற்றும் ஊரோட வர்ணனை, அப்படின்னு ஆரம்பிகிறார்கள். இந்த வால்மீகி ராமயணத்தை flashback மாதிரி குழந்தைகள் சொல்றா, நடந்ததை. அதை நாளைக்கு கேட்போம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

 

 

Series Navigation<< வால்மீகி ராமாயணம் பிறந்த கதைஅயோத்யா நகர மாந்தர்கள் பெருமை >>

4 replies on “வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்”

குச லவர்கள் இந்த கதையை முழுவதும் சொல்லி முடிப்பது போல இந்த ராமாயண கதை செல்கிறதா. தசரதர் புத்ர சோகம் , ராம ஜனனம் இப்படி எல்லாம் இந்த குழந்தைகள் சொல்ராளா. தெளிவு படுத்த வேண்டுகிறேன். இப்போது வரும் கதை flashback?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.