Categories
Ramayana One Slokam ERC

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, முதல் முதல்ல ஹனுமார் ராமரைப் பார்த்து பேசின அந்த காட்சியை சொல்றேன்னு சொல்லிருந்தேன், ரொம்ப அழகான ஒரு காட்சி. இதற்கு முந்தைய காட்சிகளில், ராமருக்கு, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வரது. சீதாதேவியை தொலைச்சு, ஜடாயுவை சம்ஸ்காரம் பண்ணிட்டு, ஒரு கபந்தத்துக்கிட்ட போய் மாட்டிக்கிறா. அது அவாளை சாப்பிட போறது. அப்பறம் எதோ ஒரு தைரியத்துல அதன் கைகள வெட்டி அப்பறம் அதன் உடம்பை எரிச்ச உடன், அந்த கபந்தத்துக்கு சாபத்திலேருந்து விமோசனம் கிடைச்சு, தனுன்னு ஒரு கந்தர்வனாகிறது. அந்த கந்தர்வன் “நீங்க போய் ரிஷ்யமூக மலைன்னு ஒரு மலை இருக்கு, பம்பாங்ர ஏரி கரையில, அந்த மலைல சுக்ரிவன்னு ஒரு வானரன் இருக்கான், அவனோட போய் ஸக்யம் பண்ணிக்கோங்கோ, அவன், சீதாதேவிய கண்டு பிடிக்கறதுக்கு உங்களுக்கு ஸஹாயம் பண்ணுவான்” னு சொல்லிட்டு, அந்த தனுங்கற கந்தர்வன் ஒரு விமானத்துல ஏறி ஆகாசத்துல போயிடறான்.

அப்பறம் இவா சுக்ரீவன் எங்கயிருக்கான், ரிஷ்யமூகமலை எங்கயிருக்கு னு தேடிண்டு வந்துண்டிருக்கா, இதுவரைக்கும் ஒரே சோகம் தான். இந்த ஹனுமார் enterஆனாவுடனே முதல் முதல்ல ஒரு relief. அதுலேர்ந்து ஏத்தம்தான், காவியத்துல. மேலும், மேலும் ராமருக்கு நன்மைகள் ஏற்படறது, சந்தோஷம் ஏற்படறது, அந்த மாதிரி ஹனுமார் வந்துட்டாலே படிக்கிறவாளுக்கு ஒரு உத்ஸாகம்,

அந்த ஹனுமார் enter பண்ற காட்சி எப்படின்னா, ராமர் சீதாதேவியை பிரிஞ்சு புலம்பிண்டே வறார். அந்த  பம்பா ஏரி கரைக்கு வந்த போது, ரொம்ப அழகாயிருக்கு அந்த இடம், பலவிதமான வண்ண மலர்களெல்லாம், பூத்து குலுங்கக்கூடிய மரங்கள் நிரம்பியிருக்கு அந்த காடு. வசந்த காலம் வந்துடுத்து, எல்லா பக்ஷிகளும், மிருகங்களும் ஜோடி ஜோடியா சந்தோஷமா இருக்கு. ராமர் இதைப் பார்த்துட்டு, “இந்த மயில்களும், மான்களும், வானரங்களும், குயில்களும் எல்லாம் ஜோடியோட இணையோட சந்தோஷமா இருக்கே, நான் மட்டும் என் சீதையை பிரிஞ்சு தவிக்கிறேனே”, அப்படினு புலம்பறார், அந்த மாதிரி சொல்லிண்டு வரும் போது, “அஹோ காமஸ்ய வாமத்வம்” இந்த காமத்தோட விசித்திர போக்கு எப்படியிருக்குன்னா, இவளை பிரிஞ்சு நாளாக நாளாக, இவளைப் பத்தின ஏக்கம் ஜாஸ்தியாய்ண்டே போறது. இது ஒரு விநோதமாக இருக்கே” அப்படின்னுலாம் பேசறார்.

அப்ப, லக்ஷ்மணன் சமாதானம் சொல்றான் “அண்ணா நீங்க இவ்வளோ Depress ஆகதேங்கோ, தளர்ந்து போயிடாதீங்கோ. எதுவானாலும் உத்ஸாகம் வேணும், அபாரமான எதிரியா இருக்கான் இந்த ராவணங்கறவ்ன், அவன் யாருன்னு தெரிஞ்சிண்டு, அவனோட யுத்தம் பண்ணி சீதாதேவியை மீட்கணும், அதனால உத்ஸாகம்  இருந்தா தான் எதுவும் பண்ணமுடியும், அதனால, நீங்க, மனத் தளர்ச்சி அடையாதேங்கோ” அப்படின்னு சொன்ன உடனே ராமர் “சரிப்பா”ன்னு, அவர் கொஞ்சம் சுதாரிக்கறார்.

அப்போ அங்க மலை மேலேர்ந்து சுக்ரீவன் இவாளை பார்க்கறான். லக்ஷ்மணர் ராமரரை  protect பண்ணி, அழைச்சிண்டு வந்துண்டுருக்கார். இவா ரெண்டு பேரையும் பாத்தாலே எட்டடிக்கு ஆஜானுபாஹுவாக கையில பெரிய வில்லும், முதுகுல அம்புறாத் தூணியில, ஸர்பங்களை போன்ற பாணங்களை வெச்சிண்டு, இவா வருவதை பார்த்தவுடன்,  சுக்ரீவன் நடுங்கி போயிடறான். மலையின் ஒரு சிகரத்துலேர்ந்து இன்னொரு சிகரத்துக்கு தாவி குதிச்சு ஓடறான். ஹனுமார் பின்னாடி ஓடறார் “என்ன?  என்ன? பயப்படரே?” என்று கேட்கிறார். சுக்ரீவன் “அவாளை பாத்தாலே உனக்கு பயமாயில்லையா?” என்கிறான். “நீ யாரைப் பார்த்தாலும் பயப்படுவியா?”ன்னு கேட்கறார் ஹனுமார். “நீ ராஜா ஆகணும்னு ஆசைப் படற! வாலி வந்தா பயப்படணும், யாரைப் பார்த்தாலும் பயப்படறியே”  அப்படின்னு கேட்கறார், அப்போ சுக்ரீவன் “இல்லை, இவா வாலி அனுப்பிச்ச ஆட்களா இருப்பாளோ, அப்படினு நெனைச்சு பயப்படறேன்” அப்படிங்கிறான். அப்பறம், சுக்ரீவன் சொல்றான், “உனக்கு அப்போ தைரியம் இருக்கு போலிருக்கு, நீ போய், இவா யாருன்னு பாத்து பேசி, நல்லவளாயிருந்தா, என்கிட்ட அழைச்சிண்டுவா” அப்படினு சொல்றான். “நீ பிக்ஷு ரூபத்துல போ” அப்படினு சொல்றான்.

ஹனுமார் சுக்ரீவனோட மந்த்ரி, சரின்னு அவன் சொன்னதை கேட்டுண்டு பிக்ஷு ரூபத்துல போய், ராம லக்ஷ்மணாள பாத்து, ரொம்ப விநயமா  நமஸ்காரம் பண்ணி, “நீங்க ரெண்டு பேரும் யாரு? உங்கள பாத்தா, ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள், ஆனா, மரவுரி, மான்தோல், ஜடாமுடி போட்டுண்டு ரிஷிகளைப் போலவும் தெரிகிறீர்கள். நீங்க எங்க இங்க இந்த காட்டுக்கு வந்தேள்? உங்க ரெண்டு பேரையும் பார்த்தா சந்தரசூர்யர்களே, பூமிக்கு இறங்கி வந்தா மாதிரி  அவ்வளவு தேஜஸா இருக்கேள், உங்களுடைய ஒளியினால் இந்த மலையே ஒளிவிடறது. உங்களுடைய அழகு இந்த பம்பா ஏரியில பிரதிபலிக்கறது”, அப்படினு ஹனுமார் ரொம்ப அழகான வார்த்தைகள் சொல்றார்.

இந்த ஹனுமார் பேசின அழகு வந்து, அவர் பேசின வார்த்தைகள்ல மட்டும் இல்லை. ராமர் அதைக் கேட்ட பின்ன அந்த பேச்சைஅப்படி கொண்டாறார். “என்னமா பேசறான்! என்ன அழகா பேசறான்”, அப்படின்னு கொண்டாடுவதை வெச்சிண்டு பார்த்தால்,  இந்த ஹனுமார் பேசின வார்த்தைகள்ல மட்டும்  அழகில்லை. அவர் பேசின விதத்துல தான் அந்த அழகேயிருக்கு, அப்படிங்கிறது தெரியறது. எனக்கு வந்து இது மஹாபெரியவா பேச்சு போலேயும், ஸ்வாமிகள் ராமாயணம் சொல்றது போலயும், ஸ்லோகங்களை படிக்கறது மாதிரி இருந்திருக்கும் னு தோணறது. அந்த மாதிரி, இனிமைனா எனக்கு அது தான் ஞாபகம் வறது.

அந்த சொன்ன விஷயங்கள்ல ரொம்ப அழகா இருக்கறது ஒண்ணு வந்து, “நீங்க ரெண்டுபேரும் சிம்மத்தைபோல தேஜஸோட இருக்கிறீர்கள், நீங்க ரிஷபத்தைப் போல நடந்து வருகிறீர்கள்”, அப்படின்னுல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணிட்டு, அப்பறம், ஹனுமார், “ஏதோ தேடிண்டே வரேளே,  ஏதாவது தொலைச்சிட்டு தேடரேளா?” அப்படின்னு கேக்கறார். அப்படி keen observation. இதுக்கு நடுவுல ஒண்ணு சொல்றார்,

आयताश्च सुवृत्ताश्च बाहवः परिघोपमाः ।

सर्वभूषणभूषार्हाः किमर्थं न विभूषिताः ।।

“ஆயாதாஸ்ச ஸுவ்ருத்தாஸ்ச பாஹவஹ பரிகோபமாஹா” உங்களுடைய கைகள், நீளமா இருக்கு, ரொம்ப பருமனாக இருக்கு, ரொம்ப weightஆ இருக்கு , நல்ல பலசாலிகளோட, மல்லர்களோட கைகள் மாதிரி  இருக்கு, இரும்பு போல இருக்கு உங்களுடைய கைகள், உங்களுடைய தோள்கள் “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் ந விபூஷிதஹா” உங்களுடைய தோள்கள் தங்க ஆபரணங்களும்  மாலைகளும் போட்டும் அலங்காரம் பண்ணணும், அவ்வளோ அழகாயிருக்கு உங்க தோள்கள், “உபௌ யோக்யவ் அஹம் மன்யே, ரக்ஷிதும் ப்ரித்திவீம் இமாம்” இந்த பூமியையே உங்களோட கைகளும், தோள்களும், காப்பாத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த தோள்கள் ஏன் அலங்காரம் இல்லாம இருக்கு? ஏன் நீங்க, ரிஷிகள போல, யோகிகளைப் போல வந்துண்டுஇருக்கேள்? அப்படினு கேட்கறார், அப்பறம்,  அவர் வேஷம் போட்டுண்டு வந்தாலும், ராமனை பார்த்த உடனே, ராமனுக்கு பக்தன் ஆயிடறார், ராமதாஸன் ஆயிடறார். அதே மாதிரி, இலங்கையில் சீதாதேவியை பார்த்த உடனெ அவளை பணிஞ்சு அவளுக்கு பக்தன் ஆயிடறார், அந்த மாதிரி இங்க ராமர் கிட்டே, “சுக்ரீவன் எங்கிற வானர ராஜா, இந்த ரிஷ்யமூக மலைல இருக்கான், நான் அவனுடைய மந்த்ரி, அவன் என்னை வேஷம் போட்டுண்டு போன்னு சொன்னதுனால, நான் இப்படி ஒரு வேஷத்துல வந்துருக்கேன், நான் ஒரு வானரம்” அப்படினு சொல்லிட்றார்

இந்த “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா கிமர்த்தம் நீ விபூஷிதஹா”

இந்த உலகத்தையே கட்டி ஆளக் கூடிய அளவுக்கு, பலம் பொருந்திய உங்களுடைய, கைகளும், தோள்களும், ஏன் எந்த ராஜ அலங்காரங்களும் இல்லாமல், ஒரு மாலைகளோ, தங்க ஆபரணங்களோ, இல்லாமல் இருக்கு? ஏன் நீங்க ரிஷிகளைப் போல, இருக்கேள்? அப்படீன்னு ஹனுமார் கேட்கறார். இதை, அந்த காலத்துல ரொம்ப ரசிப்பாளாம். இந்த உபன்யாசம் பண்றவாளுக்கு, ஒரு மாலை போடுவா. ஸ்வாமிக்கு ராமர் படத்துக்கு ஒரு மாலை போடுவா. அப்புறம் கொண்டு வந்த மாலை எல்லாம் உபன்யாசகருக்குப் போடப் பார்த்தா, அவர் சொல்வாராம். அங்க ராமர், இருக்கார், அவருக்கு தான், “ஸர்வ பூஷண பூஷார்ஹாஹா” எல்லா, பூஷணங்களையும், ராமருக்குதான், நாம போட்டுப் பார்க்கணும், அவர்தான், அதுக்கு தகுதியானவர், அதனால், சுவாமிக்குப் போடுங்கோ, அப்படீன்னு, சொல்லி, எல்லா மாலைகளையும், சுவாமிக்கு, போடச் சொல்வாளாம், ஸ்வாமிகள், இதை ரொம்ப ரசிச்சிருக்கார். இதை என்கிட்ட சொல்வார்.

ஹனுமார் பேசி முடிச்ச உடனே, ராமர், லக்ஷ்மணன் கிட்ட சொல்றார், “ஹே, லக்ஷ்மணா, நாம எந்த சுக்ரீவனை, தேடி வந்தோமோ, அந்த சுக்ரீவன் கிட்ட இருந்து, இந்த ஹனுமார் வந்திருக்கார். நீ இவர் பேசினதை, கவனிச்சியா,

नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः | नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम् ||

ரிக்வேதம், யஜூர்வேதம், சாம வேதம், எல்லாத்தையும், அத்யயனம், பண்ணி இருந்தாலொழிய, இந்த மாதிரி, ஒருத்தரால, பேச முடியாது. அப்படீன்னு, ராமர் சொல்றார். அது என்ன வேதத்துக்கும், பேச்சுக்கும், என்ன சம்பந்தம்னா, இவர் பேசின வார்த்தைகள், அந்த அவருடைய, vocabulary யை, பார்த்த உடனே, ராமர், வந்து, இவர், வேதம் படிச்சவன்னு, சொல்றார்.

नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्। बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्।।

நூனம் வியாகரணம் க்ருத்ஸ்நம் அனேன பஹுதா ஸ்ருதம் |

பஹு வ்யாஹரதா அனேன ந கிஞ்சித் அபசப்திதம் ||

இவன், பல தடவை, வ்யாகரணத்தை கேட்டு இருக்கான், அப்படீங்கறார். அந்த காலத்துல, படிப்புன்னாலே, கேள்வி தானே, நிறைய தடவை, வியாகரணம்  கேட்டிருக்கான். அதனாலதான், இவ்வளவு, நேரம், பேசினால் கூட, ஒரு, அபசப்தம், கூட இல்ல, ஒரு, gramatical mistake, கூட இவர் பண்ணல, அப்படீன்னு,சொல்றார், ராமர். அது, ரொம்ப முக்கியம். கற்க கசடற அப்படீன்னு சொல்லி இருக்கே. ஹனுமார் பத்தி கேட்கணுமா. ஹனுமார், சாக்ஷாத், சூரிய பகவான் கிட்டே, சதுர்தச வேத வித்யைகளையும், படிச்சவர். அதனால், அவர், பேசும் போது, தப்பு வருமா? அவர், அவ்வளோ அழகா பேசறார்

न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा । अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्।।

ந முகே நேத்ரயோர்வாபி லலாடே ச ப்ருவோஸ்ததா |

அன்யேஷ்வபி ச காத்ரேஷு தோஷ: சம்விதித க்வசித் ||

இவனுடைய, முகத்துலேயோ, புருவங்கள்லேயோ, கண்கள்லையோ வேற எந்த அவயங்கள்லேயோ வேற எந்த விதமான கொனஷ்டையும், பண்ணாம, சேஷ்டையும் பண்ணாம, அவ்ளோ, இவன் முகத்தை பேசும் போது பார்த்துண்டே இருக்கலாம், அவ்வளோ அழகா பேசறான். அப்படீன்னு சொல்றார்.

अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम् । उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे ।।

அவிஸ்தரம் அசம்திக்தம் அவிலம்பிதம் அத்ருதம் |

உரஸ்தம் கண்டகம் வாக்யம் வர்த்ததே மத்யமே ஸ்வரே ||

ரொம்ப உரக்க கத்தி பேசல, ரொம்ப யாருக்குமே, கேட்காத, மாதிரி மெதுவா முணுமுணுத்துண்டு பேசல, விறுவிறுன்னு பேசல, நாபியில இருந்து, வார்த்தைகள் வர்றது, தொண்டையில பேசறான். மத்திம ஸ்வரத்துல பேசறான். இவன் வந்து, கல்யாணீம், வாசம், மங்களகரமான, வார்த்தைகளை, பேசுகிறார். இந்த ஹனுமார். “ஹிருதய ஹாரணீம்,”மனதை கொள்ளை கொள்ளும், வார்த்தைகளை, பேசறார்., இந்த ஹனுமார், அப்படீன்னு சொல்றார்.

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम् । उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम् ।।

சம்ஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்ருதாம் அவிலம்பிதாம் |

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம் ||

எனக்கு, இவன் பேசறதை கேட்டுண்டே இருக்கணும்போல இருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், பேசினா கொல்ல வந்த எதிரி கூட, கத்தியை கீழ போட்டுட்டு, நமஸ்காரம் பண்ணிடுவான். அப்பேற்பட்ட, இனிமையான, வாக்கு இவருக்கு. இந்த மாதிரி, ஒருத்தர், தூதனா, கிடைச்சா, அந்த ராஜாவுக்கு, எல்லா காரயங்களும் சித்தியாகும். இந்த மாதிரி, ஒரு தூதன் இல்லேன்னா, எப்படித்தான், கார்யங்களை, நடத்திக்க முடியும், அப்படீன்னு, ராமர் வந்து பார்த்த உடனே, appraisal பண்ணி வேலையும் கொடுத்துடறார். ராமா தூதன் அப்டீங்கிற job ஐயும், assign பண்ணிடறார்., அவருக்கு. அப்பேற்பட்ட, ஹனுமாருடைய வாக்கு. அதைக் கேட்ட உடனே, ராமர், “சொல்லின் செல்வன்” அப்படீன்னு, கம்ப ராமாயணத்துல, சொல்வா. அப்படி title கொடுக்கறார்.

“புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயக்த்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்” அப்படீன்னு, ஹனுமாரை, நினைச்சா, நமக்கும், நல்ல வாக்கை கொடுப்பார். அவர்கிட்டே, நமக்கும் இனிமையான, வாக்கு வரட்டும் னு, வேண்டிப்போம்.

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம் (13 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

3 replies on “உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்”

ராம ராம !!
சொல்லின் செல்வனான, ஸ்ரீ ராம‌ தூதனான
அனுமனின் பிரபாவத்தை கேட்கும்போது உடலிலும், மனதிலும் ஒரு புத்துணர்வு, புது தெம்பு ஏற்படுகிறது.
ஸ்ரீ ராம பக்தியும்,விநயமும் ஒரு சேர இருக்கும் ஸ்ரீ மாருதியை தியானித்து அவரின் அனுக்ருஹத்தை வேண்டி பெறுவோம்.🌻🌻

இதை விடத் தெளிவா, அழகா ஹனுமாரைப் பத்தி வான்மீகி ரிஷி சொன்னதற்கு மேல் பாமர என்னைப் போன்ற ஜனங்கள் புரிந்து கொள்ளும் வகையில் கதை சொல்ல முடியுமா ? No way is my answer !
ஒவ்வொரு குணாதிசயத்தையும் படிப் படியாக அலசுகிறார் வான்மீகி ரிஷி ராமன் வாயிலாக !
ராமனிடம் ஹனுமான் சொல்றது மனக் கண்லே விரியறது காட்சியா !
அவர் சொல்றார் ” உங்க கைகள் மிக நீண்டும், பருமனாவும் இருக்கின்றன! இந்த பூமியையே காப்பாத்தற அளவுக்குப் பலம்ம் பொருந்தி இருக்கு ! இந்த உலகத்தைக் கட்டி ஆளத் தகுந்ததோள்களும், கைகளும் உடைய நீங்கள் ஏன் ஒர் அலங்காரமும் இன்றி இருக்கு ன்னு ஆஞ்சநேய ஸ்வாமி கேட்கறது ரொம்ப இயல்பா இருக்கு !
அதுக்கு மேலே ராமர் அனுமான் பேசினது கேட்டு கணபதியின் கருத்து ரொம்ப அழகு !
அனுமன் பேசின விதம் மஹா பெரியவா பேசினா போலேயும், ஸ்வாமிகள் ராமாயணம் சொல்ற மாதிரியும், ஸ்லோகங்கள் படிக்கிற மாதிரியும் இருக்கு என்பது ஒரு பஞ்ச் !
ஒரு நல்ல உபன்யாசம் கேட்ட திருப்தி !ஜெய ஶ்ரீ ராம் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.