Categories
Ramayana One Slokam ERC

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, அயோத்யா காண்டத்துல, இரண்டாவது, சர்க்கதுல இருந்து, ஒரு ஸ்லோகம் பாப்போம். அயோத்தியா காண்டம், முதல் சர்க்கத்தில், ராமரோட குணங்களை எல்லாம், தசரதர், நினைச்சு பார்த்து, “இந்த ராமனுக்கு, நான் என் கையால், பட்டாபிஷேகம், பண்ணி பார்க்கணும்”, அப்படீன்னு, நினைக்கறார். இரண்டாவது, சர்க்கதுல, ஜனங்களை, எல்லாம் கூப்பிட்டு, நாலு வர்ணத்தவர்களையும், மற்ற சிற்றரசர்களையும் சபைக்கு கூப்பிட்டு, “இந்த மாதிரி ராமனுக்கு, பட்டாபிஷேகம் பண்ணலாம்னு, முடிவு பண்ணியிருக்கேன்”, அப்டீன்ன உடனே, எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படறா. அவா, அந்த ராமனை, புகழ்ந்து, நிறைய சொல்றா. அதுல  இந்த  ஒரு ஸ்லோகம்

व्यसनेषु मनुष्याणां भृशं भवति दुःखितः । उत्सवेषु च सर्वेषु पितेव परितुष्यति ।।
வ்யஸனேஷு மனுஷ்யானாம் ப்ருஷம் பவதி துக்கித: |
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி ||
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். வியஸனம், னா, கஷ்டம். “மனுஷ்யானாம் வ்யஸனேஷு” அதாவது, மனிதர்களுக்கு கஷ்டம், வரும்போது, அதாவது, எங்களுக்கெல்லாம், ஒரு கஷ்டம் வந்ததுனா, “ப்ருஷம், பவதி, துக்கித:” எங்களுக்கு எவ்வளவு கஷ்டமோ, அதைவிட அதிகமா, அவன் கஷ்டப்பட்டு, அதாவது கஷ்டத்தை உணர்ந்து, அதை எப்படியாவது சரி பண்ணனும், அந்த கஷ்டத்தை, போக்கணும், அப்படீன்னு பாக்கறான். “உத்ஸவேஷு ச ஸர்வேஷு”, எங்காத்துல, ஏதாவது, உத்ஸவம், குழந்தை பொறந்துருக்கு, புத்ரோத்சவம், , இல்ல கல்யாணம், இப்படி உத்ஸவங்கள், வந்தா, “உத்ஸவேஷு ச ஸர்வேஷு” எல்லா உத்ஸவங்களிலும் “பிதேவ பரிதுஷ்யதி” எங்கப்பா, எவ்வளவு, சந்தோஷப்படுவாரோ, அந்த அளவுக்கு, ராமன் சந்தோஷப் படறான், அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இந்த மத்தவா கஷ்டத்துல, நாம பங்கெடுத்துக்கறது, அப்படீங்கிறது, கஷ்ட, நஷ்டங்கள்ல, சுக துக்கங்கள்ல பங்கெடுத்துகறதுங்கறது, நம்ம, கலாச்சாரத்துல, இருக்கு. ஸ்வாமிகள், ஸந்யாஸம்  வாங்கிக்கறதுக்கு முன்னாடி வரைக்கும், அந்த மாதிரி, யாருக்காவது ஏதாவது, ஒரு துக்கம்னா, துக்கம் கேட்க போவார். ஆறுதல் சொல்வார். நீங்க இவ்வளோ பெரியவர், குரு ஸ்தானத்துல இருக்கேள், நீங்க எதுக்கு, அவாளோட சேர்ந்து, இப்படி, நீங்களும் கண்ணீர் விடணும்?, ஏன் இவ்வளோ வருத்தப் படணும்? அப்படீன்னு, யாராவது கேட்டா, “இது நான் ஒண்ணும், வரவழைச்சுண்டு பண்ணலை. என் ஸ்வாபாவமே, அப்படியிருக்கு. அவா கஷ்டத்தை, பார்க்கும் போது, எனக்கும் கஷ்டமாயிருக்கு”, அப்படீன்னு சொல்வார். அப்படி ஒரு இயல்பா இருந்தார். அவருக்கு, அவ்வளோ ஒரு, வைராக்ய ஞானம், இருந்தாலும், அவர் மத்தவா, கஷ்டத்துல பங்கெடுத்துண்டார்.

அப்படி, மகான்கள் நம்ம துக்கத்தை, பகிர்ந்துக்கும் போது, கேட்கறவாளுக்கு, ரொம்ப ஆறுதலா இருக்கும். அவாளுக்கு, அந்த மனசுல இருக்கற பாரம் குறையும், அதை நான், பார்த்திருக்கேன். மஹாபெரியவா கிட்டயே ஒருத்தர், புத்ர சோகத்தோட வந்து, ரொம்ப கதறி அழுதபோது, மஹாபெரியவாளே, “எனக்கே, ஒரு பிள்ளை போயிட்டான், தெரியுமா உனக்கு?” அப்படீன்னு, சொல்லியிருக்கா. அதாவது, பெரியவாளோட சொந்த தம்பி, சாம்பமூர்த்தி சாஸ்த்ரிகள்னு. அவரோட பிள்ளை, மணி சாஸ்த்ரிகள்னு, அவர், பெரியவாளுக்கு, service பண்ணிண்டு இருந்தார். அவர், ஒரு, accident ல போயிட்டார். அதை, குறிப்பிட்டு, “எனக்கே கூட, ஒரு பிள்ளை, போயிட்டான், பகவானோட பேரை சொல்லிண்டு, சமாதானம் பண்ணிக்கோ”, அப்படீன்னு சொல்லியிருக்கா.

ஸ்வாமிகளும், அந்த மாதிரி, நான் பார்த்து ஒருத்தருக்கு, புத்திரசோகம், ஏற்பட்டபோது, இந்த

“கோவிந்த கோவிந்த ஹரே முராரே,

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா

கோவிந்த கோவிந்த ரதாங்க பானே

கோவிந்த தாமோதர மாதவேதி”.

அப்படீன்னு அந்த ஸ்லோகத்தை, வந்து, எத்தனை ஆவர்த்தி, சொன்னார்னு, சொல்ல முடியாது. ரொம்ப நேரம், அதை ஜபிச்சுண்டே இருந்தார். வந்து கேட்டவா அப்படி கண் ஜலம் விட்டா. அதுக்கப்புறம், சமாதானம் ஆகி போனா. அந்த மாதிரி, ஆறுதல் சொல்றது, நான் ஸ்வாமிகள்கிட்ட பார்த்திருக்கேன். அந்த மாதிரி, ராமனுடைய, குணம்.

அடுத்தது, “உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி” மத்தவாளுக்கு ஒரு சௌக்கியம், ஒரு சந்தோஷ விஷயம்னா, சொந்த அப்பாவைப் போல அவரும், அந்த சந்தோஷத்தை பகிர்ந்துப்பார், அப்படீங்கறது இன்னும் மேலே. ஸ்வாமிகள், சொல்வார். “யாராவது, கஷ்டம்னு சொல்றதை, கேட்டாலாவது, “ஐய்யய்யோ, த்சு, த்சு”னு சொல்றதுக்கு, சில பேருக்கு, மனசு, வரும். மத்தவாளுக்கு, சௌக்கியம், வந்துடுத்து, நன்னா வந்துட்டான், அவன் அப்டீங்கிறபோது, அவாத்துல உத்ஸவம்  அப்படீங்கிற போது, கொஞ்சம்கூட, மனசுல கல்மிஷம் இல்லாமல், சொந்த தகப்பனார், எப்படி, சந்தோஷப் படுவாரோ, அந்த மாதிரி, சந்தோஷப் படறதுங்கிறது, ரொம்ப உயர்ந்த குணம், அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார். அது நினைச்சு பார்த்து, அவர் சொல்வார். அதே மாதிரி, அவரும், ஸ்வாமிகளும் மத்தவாளுடைய, சந்தோஷங்களை பகிர்ந்துக்கறதையும் நான் பார்த்துருக்கேன். எல்லாரும், அவர்கிட்ட, போயி, சந்தோஷங்களை எல்லாம், சொல்லாம நம்ம ஆத்துல, ஒரு கல்யாணம், கிடையாது, ஒரு, விசேஷம் கிடையாது,

இந்த “பிதேவ பரிதுஷ்யதி,” ங்கிறது, அப்பாவை போல சந்தோஷப் படறார்ங்கிறது, எனக்கு personal ஆ என் life ல வந்து, எங்கப்பா அப்படி, அமைஞ்சது, பெரிய பாக்கியம். அவர் ஒரு மகான் னே ஸ்வாமிகள் சொல்வார். கொஞ்சம் கூட யார்கிட்டயும் பொறாமை கிடையாது. ரொம்ப நிதானமா, இருப்பார். கார்த்தால, எழுந்தா ரெண்டு மணி நேரம், ருத்ரம், சமகம், சொல்லி, சிவ பூஜை பண்ணுவார். சாயங்காலம், திருப்புகழ் பஜனை attend பண்ணுவார். ஒவ்வொரு ஏகாதசிக்கும் பவமானம் படிப்பார் துவாதசி அன்னிக்கு, உபநிஷத் பாராயணம் பண்ணுவார். ஒவ்வொரு ஞாயித்துகிழமையும் அருணம் அப்படீன்னு, சூரிய நமஸ்காரம், உடம்பு முடிஞ்ச வரைக்கும், நமஸ்காரம், பண்ணியே பண்ணுவார். இந்த காலத்துல, நமக்கு, படிப்புன்னா, என்னன்னு, தெரியல. எங்கப்பா தன் அண்ணா தம்பிகளுக்குள்ள கொஞ்சமா படிச்சவர்னு பேரு. அதனால, அவர், clerk போயிட்டார். ஆனா அது, பெரிய அனுக்ரஹம், அவர் சத்ஸங்கத்துல  ஈடுபட்டு, வேதத்தை, நாலு, காண்டம் அவர் அத்யயனம் பண்ணிணார். அதுமாதிரி, இது படிப்பா, அதெலாம், படிப்பா, இவருக்கு கிடைச்ச பாக்யமே, பாக்கியம். அப்படி, நல்ல புத்திமான். 73 வயசுல, அவர் “எனக்கு, கந்தர் அலங்காரம் மனப்பாடம் பண்ணனும்னு, ஆசையா இருக்குன்னு”, நூறு பாட்டையும் மனப்பாடம் பண்ணிணார். அந்த மாதிரி, அவருக்கு, புத்தி, தீட்ஷண்யம் இருந்தது. மெதுவா கிரஹிச்சுண்டு, மெதுவா படிச்சு ரசிச்சு enjoy பண்ணுவார்.

அவர், அந்த மாதிரி, அவர் அந்த உத்ஸவங்கள் ல, சந்தோஷப்படறதுங்கிறது, எங்காத்துல நாங்க நாலு பேர். ரெண்டு பிள்ளைகள், ரெண்டு பெண்கள். எங்களுக்குள்ள, நான்கு பிள்ளைகள், நான்கு பெண்கள். இந்த எல்லா குழந்தைகள் கல்யாணத்துலயும், எல்லா பேரன், பேத்திகளோட, ஆயுஷ்ய ஹோமத்துலயிருந்து, பூணல் ல இருந்து, சீமந்தம், க்ருஹபிரவேசம் எல்லாத்தையும், எங்கப்பா ரொம்ப அழகா நிர்வாகம் பண்ணுவார். யார் யாரை எல்லாம், கூப்பிடணும், னு list போடுவார். என்னன்ன சாமான், வாங்கணும் list போடுவார். ஒரு contract கிடையாது, ஒண்ணும் கிடையாது. எல்லாம், அவர் தான், பார்த்து பார்த்து பண்ணார். அவருடைய அறுவது வயசுல இருந்து, எண்பது வயசு வரைக்கும்,அவருடைய நக்ஷத்ரம், பங்குனி, புனர்வஸு நக்ஷத்ரத்து அன்னிக்கு, ருத்ர ஏகாதசி, பண்ணுவார். எத்தனையோ, பேர் வருவா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மனப்பான்மையா இருக்கும். எல்லா பெண்டுகளை எல்லாம் சமாளிச்சுண்டு, வர்ற விருந்தினர்களை எல்லாம் சமாளிச்சுண்டு, உத்ஸவம்னா, அவர் கூட இருந்து, உத்ஸவம் நடத்தணும். அவ்வளோ அழகா பண்ணுவார். அந்த பிதாங்கிறவர், தன் குழந்தைக்குகளுக்ககாக, சந்தோஷப் படறதுன்னா அவர்கிட்டே பார்த்தேன்.

எனக்கு, இந்த ராமாயணத்தை பிரவசனம்  பண்றதுல, முன்னமே ஒரு ஆசை இருந்து. நான், ஆத்துல , friends எல்லாம் கூப்பிட்டு வெச்சுண்டு, இந்த மாதிரி பேசிண்டு இருப்பேன். இதை வந்து, அவர் ரொம்ப encourage பண்ணுவார். ராம பட்டாபிஷேகத்து அன்னிக்கு, ஒரு பத்து பேர் வருவா, நான் ஒரு மணி நேரம், பேசுவேன், எங்கப்பா, stool ஐ போட்டு, அதன் மேல ஒரு துணியை போட்டு, நான் உட்கார்ந்து பிரவசனம் பண்றதுக்கு, ஏற்பாடு பண்ணி, கொடுப்பார். அப்படி, encouragement ஆ அவர், மாதிரி பண்ண முடியாது. அப்படி அந்த உத்ஸவங்களை எல்லாம் நடத்தி, ரொம்ப சந்தோஷப் படுவார். அந்த மாதிரி, “பிதேவ பரிதுஷ்யதி,” ங்கிறது, ஒரு அனுபவம், எனக்கு இருக்கறதுனால, ராமன், மாற்றவர்களுடைய உத்ஸவங்கள்ல, தானும் பங்கெடுத்து, சந்தோஷப் படுவான், அப்படீங்கிறதை, என்னால ரசிக்க முடியறது.

ஸ்வாமிகள் , எனக்கு, “நீ உங்கப்பாவை, பார்த்துக்கோ, அவர் மாதிரி, நீ இருந்தாலே போரும்”, அப்படீன்னு சொல்வார். அதுதான் என்னோட highest goal in life ஸ்வாமிகள், கிட்ட, நான், என்ன பார்த்தேன்னா, எங்கப்பாக்கு, ஓரளவு, ஒரு smooth sailing life , நல்ல மனைவி, ஓரளவு, தேவலாமான குழந்தைகள். நான், exception! ஆனா, ஸ்வாமிகளுக்கு, பல கஷ்டங்கள், இருந்தது. எங்கப்பா, “ஆன பயபக்தி வழிபாடு பெறுமுக்தி” அப்படீன்னு, பகவான்கிட்ட, பயபக்தியோடு  இருந்து, நல்ல வரங்கள், பெற்று, பக்தி மார்க்கத்துலயே இருந்து, முக்தி அடைஞ்சுட்டார்.

ஸ்வாமிகள் வந்து கஷ்டம் வந்தாலும், அதை தாங்கிண்டு, பகவானோட, பக்தியினால கரை ஏறினார். “வைதரணி” போல அதாவது, நரகத்துல, ஒரு ஆறு அது. அந்த மாதிரி, ஒரு ஆற்றை, கடக்க வேண்டியிருதா கூட, பகவானோட பக்தியினால, ஒரு கவலையும் இல்லாம, கடக்கலாம்னு, பாகவதத்துல வரும். அப்படி அவர் வாழ்க்கை. அவர், ஒரு குரு ஸ்தானத்துல இருந்ததுனால, பகவத் பஜனம் சுகம், துக்கம், எல்லாத்துக்கும் மேல, கொண்டு போய் விடும், அப்படீங்கிறதை, அவர் வாழ்ந்து காண்பிச்சார். அந்த மாதிரி, ரெண்டு மஹா புருஷர்களிடம் நான் என் life ல நெருங்கி பழகியிருக்கேன். இதோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிக்கறேன்.

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி (9 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.