Categories
Ramayana One Slokam ERC

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः |

उपेत्य रामम् सहसा महर्षिभिः समभ्यषिन्चन् सुशुभै: जलैः पृथक् ||

“தத் அத்புதம்  ராகவ கர்ம துஷ்கரம் ஸமீக்ஷ்ய தேவா: ஸஹ சித்தசாரணை: |

உபேத்திய ராமம் ஸஹஸா மஹர்ஷிபிஹி ஸமப்பியஷிஞ்சன் ஸுஷுபை: ஜலை: ப்ருதக் ||

இந்த அற்புதமான, ராமருடைய காரியத்தை பார்த்து, பிறரால் செய்யமுடியாத, இந்த ஆஸ்சர்யமான, லங்கை வரைக்கும் கடல் மேல பாலமே காட்டினார்ங்கிற ராமருடைய காரியத்தை பார்த்து, சித்தசாரணைஹி ஸஹ, சித்தர்களும், சாரணர்களும், மஹரிஷிகளும், தேவர்களும் எல்லாரும் வந்து, “ராமம் உபேத்ய” ராமருக்கு அருகில் வந்து ” ஸமப்யஷிஞ்சத்” அவர் மேல ” ஸுஷுபை: ஜலை: ” திவ்யமான ஸுத்த ஜலத்தை கொண்டு, அவர் மேல ஒரு மழையாக கொட்டி, அவருக்கு ஒரு அபிஷேகம் பண்ணிணா, அப்படின்னு  ஒரு ஸ்லோகம். இது ஒரு பட்டாபிஷேகம்.

அங்க கோதாவரி நதிக்கரையில, சீதாதேவியும், ராமரும், லக்ஷ்மணருமாக போய், ஸ்நானம் பண்ணிட்டு வந்தாங்கிற போது, சிவபெருமானும், பார்வதி தேவியும், நந்திகேஷ்வரரும் ஸ்நானம் பண்ணிட்டு வருவது போல இருக்கு அப்படின்னு சொல்றார் வால்மீகி. அதை ஒரு பட்டாபிஷேகம்னு சொல்லுவா. பாதுகா பட்டாபிஷேகம் இருக்கு, சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம், அது போல இங்க தேவர்களும் சித்தர்களும் எல்லாரும் சேர்ந்து ராமருக்கு ஒரு பட்டாபிஷேகம் பண்றா. அப்பறம்  ஸ்தோத்ரமா சொல்றா,

जयस्व शत्रून् नर देव मेदिनीम् ससागराम् पालय शाश्वतीः समाः |

इतीव रामम् नर देव सत्कृतम् शुभै: वचोभि: विविधै: अपूजयन् ||

ஜய ஸ்வஷத்ரூன் நரதேவ மேதினிம் ஸஸாகராம் பாலய சாஷ்வதி ஸாமா: |

இதீவ ராமம் நாரதேவ ஸதக்ருதம் ஷுபைர் வாசோபி: விவிதை: அபூஜயன் ||

“விவிதை: அபூஜயன்” பலவிதமான ஸ்தோத்ரங்கள் சொல்றாளாம். அதுல ” ஜய ஸ்வஷத்ரூன் ” ராமா நீ உன் ஷத்ருக்களை ஜெயிச்சு, “நரதேவா” மனிதர்களுக்குள் சிறந்தவனே ” மேதினிம் ஸஸாகராம் பாலய ” நான்கு புறமும் கடல்சூழ்ந்த இந்த உலகத்தை நீ,  ” சாஷ்வதி ஸாமா:” பல்லாண்டு பல்லாண்டு காலம் ஆள்வாய் “ஜய” உனக்கு, வெற்றி ஏற்படட்டும், அப்படின்னு “இதீவ ராமம்” தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணார்கள், அப்படின்னு இந்த ரெண்டு ஸ்லோகம்.

அந்த காட்சி என்னன்னா, விபீஷணன் வந்து சரணாகதி பன்றான். சுக்ரீவன் முதலான வானரர்கள் “வேண்டாம் இவன் எதிரி பக்ஷத்துலேர்ந்து வந்துருக்கான்”ன்னு சொல்றா, ஹனுமார் “இவன் தர்மாத்மா. இவனை சேர்த்துக்கலாம்” அப்படின்னு சொல்றாறர். இது தனியா விபீஷண ஷரணாகதி விஸ்தாரமா பாக்கணும், அந்த விபீஷணனுக்கு ராமர் “என்னை வந்து நமஸ்காரம் பண்ணி, அபயம்னு கேட்டா நான் அவனுக்கு சரணாகதி கொடுப்பேன், இது என்னுடைய தர்மம்” அப்படின்னு விபீஷணனுக்கு சரணாகதி கொடுக்கறார், “அவனை வரச் சொல்லு”ங்கறார். அவன் வந்து நமஸ்காரம் பண்ணுகிறான், “இப்பவே  சமுத்ர ஜலத்தை கொண்டு, லக்ஷ்மணா, இந்த விபீஷணனுக்கு இங்கயே லங்கைக்கு ராஜாவா, பட்டாபிஷேகம் பண்ணி வை”ங்கிறார். அந்த மாதிரி இங்கேயே, இக்கரையிலேயே  அக்கறையோடு விபீஷணனை ராஜாவாக்கிட்டார் ராமர்.

அப்பறம், ராமர் விபீஷணன் கிட்ட  கேக்கறார் “இந்த கடலைக் கடந்து வானரப்படையோடு எப்படி லங்கைக்கு  போறது? அதுக்கு ஏதாவது ஒரு யோஜனை சொல்லு” அப்படீன்னு கேட்டவுடனே, விபீஷணன் சொல்றான் “உங்களுடைய முன்னோர்கள், ஸகர மஹாராஜா, அவருடைய புத்ரர்கள், இந்த கடலை விரிவு படுத்தினா. அதனால, இந்த சமுத்ரராஜா உங்களுக்கு உதவி பண்ணுவார், அவர் கிட்ட வேண்டிக்கோங்கோ'”ன்னு சொல்றான். ராமர் திரும்பி  பாத்து சுக்ரீவன் லக்ஷ்மணன் கிட்டயெல்லாம் “இந்த எண்ணம் நன்னாயிருக்கா?” அப்படினு கேட்கறார், அவாளும் “ஆஹா, ரொம்ப நல்ல யோசனை தான் இது”, அப்படீன்னு சொல்றா,  “நல்ல உபாயமா தெரியறது” அப்படீன்னு சொல்றா. இது என்னன்னா விபீஷணன் வந்து சரணாகதி பண்ணிணான், அபயம் கேட்டான், ராமர் அபயம் கொடுத்தார். அதனால அவன் வந்து அதே உபாயத்தை ராமருக்கு சொல்றான், ராமர் இன்னொருத்தர் கிட்ட போய் அபயம்னு கேட்கவேண்டிய தேவையே இல்லை. அனாலும் அவன் சொன்னவுடனே அதை எடுத்துண்டு, ராமர் தர்ப்பை புல்லைப் ஒரு பாயாட்டம் போட்டு, அதுல படுத்துண்டு, கைகள்மேல தலைய வெச்சிண்டு, மூணு நாள், உபவாசம் இருந்து, ஸமுத்ர ராஜா கிட்ட வேண்டிக்கறார்.

சமுத்ர ராஜா வரலை. ராமர் கடுங்கோபத்தோடு “ஹே லக்ஷ்மணா! சிலர் பேர்கிட்ட , பொறுமைங்ரது, நல்ல குணமில்ல, அது பலிக்கமாட்டேங்கிறது, என்னுடைய வில்லையும் அம்பையும் எடு, என்ன பண்றேன் பார்”னு ஒரு சில அஸ்த்ரங்களை கடல்ல விடறார். கடலில் இருக்கற, நாகங்களும், மகரங்களும், திமிங்கங்களும், எல்லாம் நடுங்கறது, ஹா ஊன்னு, கூச்சல் போடறது, அப்போ ராமர் “ப்ரஹ்மாஸ்திரத்தை எடு”ங்கிறார். “நான் கடல வத்தடிச்சுடரேன், நம்ம நடேந்தே போலாம் லங்கைக்கு” அப்படிங்கிறார், அப்போ ஸமுத்ரராஜன் வர்றான், அந்த ஸமுத்ர ராஜன் ஆகாசத்துல அலைகளை ஆடையாக உடுத்திக்கொண்டு, மணிகளையும், ரத்னங்களையும், (ரத்னங்களெல்லாம் கடலிலேர்ந்து தானே கிடைக்கும்), ரத்னங்கல்லாம் மாலையை போட்டுண்டு, அந்த ஸமுத்ரராஜன் மனுஷ்யரூபம் எடுத்துண்டு, வந்து ராமர்கிட்ட வந்து கைக் கூப்பறான், “இல்ல நீ என்ன வத்தடிச்சுடாதே”ன்னு வேண்டிக்கறான். அப்போ ராமர் , “எனக்கு லங்கைக்கு போறதுக்கு வழி சொல்லு” அப்டின்ன உடனே, “ஒரு கடல்னு இருந்த அது கடக்க முடியாததாக தான் இருக்கணும், அந்த மாதிரி இந்த பஞ்ச பூதங்களுக்கு பகவானோட ஆணை இருக்கறதுனால, பதில் சொல்லாம இருந்தேன். ஆனா, நீங்க பிரார்த்தனை பண்ணதுக்கு நான் தர்ஸனம் கொடுத்திருக்கணும், மன்னிச்சுக்கோங்கோ” ன்னு சொல்லிட்டு, “இங்க உங்களுடைய சேனைல, நளன் னு விஸ்வகர்மாவோட பிள்ளை இருக்கான், அவனை கொண்டு நீங்க பாலம் காட்டுங்கோ, அவனுக்கு அவன் அப்பாவோட அனுக்ரஹம் இருக்கு, நான் அந்த பாலத்தை முழுகாம பாத்துக்கிறேன்”, அப்படின்னு  ஸமுத்ரராஜன் சொல்றான். உடனே ராமர் “சரி, இப்போ கையில எடுத்த அம்புக்கு பதில் சொல்” என்றவுடன், “த்ருமகூல்யம்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு, அங்க கடல் கொள்ளைக்காரர்கள்  இருக்கா, நீங்க அங்க விட்டுடுங்கோ” ன்ன உடனே, ராமர் அங்க விடறார், அந்த க்ஷேத்திரத்தில இருந்த துஷ்ட ஜனகளெல்லாம் மாண்டு போயிடுறா. அப்பறம் ராமர் அந்த க்ஷேத்திரத்தில நல்லபடியா பசுக்களும், பயிர்களும், எப்போதும் பழங்களை கொடுக்கக் கூடிய மரங்களும் அந்த க்ஷேத்திரத்துல வளரட்டும் அப்படின்னு ஆசிர்வாதம் பண்றார்.

அதுக்கப்பறம் நளன் சொல்றான், “ஆமா, என்னால இந்த கார்யத்தை பண்ணமுடியும், இப்ப ஸமுத்ரராஜன் சொன்ன உடனே ஞாபகம் வந்துடுத்து, எங்க அப்போவோட அனுக்ராஹம் இருக்கு நான் அந்த பாலத்தை கட்டறேன்” அப்படின்னு சொல்லி எல்லா வானரர்களையும் “வாங்கோ பெரிய பெரிய கற்களையும், மலைகளையும், மரங்களையும் கடல்ல கொண்டு வந்து போடுங்கோ” , அப்படின்னு அவன் direct பண்றான். பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளத்துக்கு ஒரு பாலம் கட்டறா, அவன் சரிப்படுத்திண்டே வரான் நளன். அந்த பெரிய பெரிய மலைகளளெல்லாம் முயற்சி பண்ணி கொண்டு வந்து கடலில் போட்டார்கள், ஆகாஸம் வரைக்கும் அலைகள் எழும்பித்து, அப்படின்னு அந்த வர்ணனைகளெல்லாம் ரொம்ப அழகாயிருக்கும். தேவர்கள் எல்லாம் என்ன ஆச்சர்யம் என்று பாக்கறா.

இந்த பாலத்த கட்டும் போது, முதல் நாளில் பதினாலு யோஜனை கட்டினாளாம், அடுத்த நாளில்  இருபது, அதுக்கு அடுத்த நாளில்  இருபத்தொண்ணு யோஜனை, அதுக்கு அடுத்த நாளில் இருபத்திரெண்டு, அதுக்கு அடுத்த நாளில் இருபத்தி மூணு யோஜனை, இப்படி அஞ்சு நாள்ல நூறு யோஜனை கட்டி லங்கை வரைக்கும் இந்த பாலத்த காட்டிடறா. இந்த 14, 20, 21, 22, 23 அப்படிங்கிற numbers ஐ கூட்டினா 100 வர்றது, அதுலேயே, பொதுவாக project எப்படி proceed ஆகும் அப்படிங்கிறது தெரியறது, எடுத்த உடனே கொஞ்சம் மெதுவாதான் நடக்கும், அவாளுக்கு என்னண்னு புரிஞ்சிக்கறதுக்கு நேரமாகும் இல்லையா, அப்படிங்கிற மாதிரி, முதல் நாள் பதினாலு, புரிஞ்ச உடனே productivity ஜாஸ்தியாரது. முடிக்க முடிக்க உத்சாகம் அதிகம் ஆகி 20, 21, 22, 23 என்று கட்டி, அஞ்சு நாள்ல அந்த பாலத்தை கட்டி முடிக்கறா, அப்படிங்கிற இந்தமாதிரி எல்லா detailsஉம் இருக்கு புஸ்தகத்தில. கயிறுகளையும், கற்களையும், பெரிய மலைகளையும், அப்டி  என்னென்ன மலைகளை கொண்டுவந்தா , என்னென்ன மரங்களை கொண்டுவந்தா அப்படின்னு வர்ணனை, அப்படி ஆஸ்ச்சர்யமா நூறு யோஜனைக்கு ஒரு பாலம் லங்கை வரைக்கும்  ராமர் உத்தரவின் பேரில், நளன் மேற்பார்வையில் கட்டிமுடிக்கிறா.

அப்போ உடனே ஹனுமார் “என் மேல ஏறிக் கொள்ளுங்கள்” ன்னு ராமர் கிட்ட சொல்றார், அங்கதன் வந்து லக்ஷ்மணன்கிட்ட  “என் மேல ஏறிக் கொள்ளுங்கள்” ன்னு சொல்றான், அப்படி அந்த வானரப் படை கடல் மேல கட்டின பாலத்து மேல ஏறி, லங்கைக்கு போய் சேருகிறது. போற வழில இந்த வானரர்கள் வீர விளையாட்டுயெல்லாம் பண்ணிக் காட்டறா. ரொம்ப சந்தோஷம் அவாளுக்கு, பெரிய காரியத்த முடிச்சிட்டோம்னு,

राघवस्य प्रियार्थम् तु धृतानां वीर्यशालिनाम् |

हरीणाम् कर्मचेष्टाभिस्तुतोष रघुनन्दनः ||

“ராகவஸ்ய பிரியார்தம் து த்ருதானாம் வீர்யஷாலினாம் |

ஹரிணாம் கர்மசேஷ்டாபி: துதோஷ ரகுநந்தன: ||

அப்படினு இந்த வீர விளையாட்டெல்லாம் பண்ணிண்டே போறா, அதெல்லாம் பாத்து, “துதோஷ ரகுநந்தன:” ராமர் மிகவும் சந்தோஷம் அடைந்தார், அப்படினு முடியறது.

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம் (9 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

One reply on “ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்”

அற்புதமான வர்ணனையுடன் கூடிய சேது பந்தனம் !! என்ன அழகா விஸ்தாரமாக பட்டாபிஷேகம் ஒவ்வொரு முறையும் யாருக்கு எந்த சந்தப்பத்தில் நடந்தது என்ற விளக்கம் மேலும் படிக்க, கேட்க ஆவலைத் தூண்டுவதாக இருந்தது! வந்தனம், ரகு நந்தனா சேது பந்தனா என்ற கிருதி ஞாபகம் வந்தது ! மேலும்.பணி தொடர அம்பாள், பெரியவாளை பிரார்த்திக்.கிறேன்!
ஸ்ரீராம் ஜய் ராம் ஜெய் ஜெய் ராம் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.