Categories
Bala Kandam

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு

8. தசரதர் பிள்ளை வரம் வேண்டி, ஒரு அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்து, அதை தன் புரோஹிதர்களிடம் சொல்லுகிறார். அவர்களும் அதை ஆமோதித்து யாகம் நடத்த உத்தரவு அளிக்கிறார்கள்.

தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு (audio file. Transcript given below)

இப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை, தலை நகரமாகக் கொண்டு, ஆட்சி பண்ணிண்டு வரார். ஜனங்கள் எல்லாம் சந்தோஷமா இருக்கா. ஆனா ராஜாவுக்கு ஒரு குறை இருந்தது. அந்த குறை என்னன்னா, அவருக்கு, வம்சத்தை வ்ருத்தி பண்ணக் கூடிய  ஒரு குழந்தை இல்லையே., பிள்ளை வரம் வேண்டி, காத்திருந்தார்.

அவருக்கு மனசுல, ஒரு எண்ணம் தோன்றியது. நாம ஐம்பத்தாறு தேசத்துக்கும், சக்ரவர்த்தியா இருக்கோம். அஸ்வமேதயாகம் பண்றதுக்கு, நமக்கு, யோக்யதை இருக்கு. அஸ்வமேதயாகம், அபார புண்ய கார்யம்னு, வேதத்துல சொல்லியிருக்கு. அதை பண்ணினோம்னா, தெய்வங்கள் திருப்தி அடைஞ்சு, கருணையினால, நமக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்னு, அவருக்கு, தோணித்து. அஸ்வமேதயாகம்ங்கிறது, ஒரு குதிரையை, ராஜாவானவர், எல்லா தேசத்துக்கும், அனுப்புவார். அந்த குதிரையை, யாராவது, தடுத்தா, அந்த தேசத்தோட, யுத்தம் பண்ணி, அவாளை, ஜயிக்கணும். யாரும் தடுக்காம, ஐம்பத்தாறு, தேசத்துலயும் அந்த குதிரை, போயிட்டு வந்துடுத்துன்னா, அவா அந்த அஸ்வமேதயாகத்தை பண்ணலாம். “ரித்விக், அத்வர்யு, ஹோதா, பிரம்மான்னு, நாலு திக்குலயும், நாலு பிராமணாளை வெச்சுண்டு, அந்த அஸ்வமேத யாகத்தை பண்ணி, பூர்த்தி பண்ணிட்டு, இந்த ஐம்பத்தாறு, தேசங்களையும் ஜயிச்சாரோ இல்லையோ, அந்த ராஜா, அந்த நாலு,திக்குல, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, இருக்கற, எல்லா தேசங்களையும், எல்லா, பூமியையும், அந்த திக்குல இருக்கற பிராமணருக்கு, தானமா கொடுத்துடுவா. இப்படி, எல்லா, பூமி முழுக்க, அந்த பிராமணாளுக்கு தானம் பண்ணனும். இதுதான், அந்த அஸ்வமேதயாகத்தோட ,மஹிமை. பிரம்மாவே, அதை கல்பம் பண்ணி, இந்த மாதிரி, ஒரு யாகத்தை பண்றது.

இத நினைச்சு பார்த்து, தசரத, மஹா ராஜாவுக்கு, இத பண்ணுவோம்னு அவருக்குத் தோன்றது. எந்த நல்ல கார்யம், ஆனாலும், பெரியவா, ஆஸிர்வாதத்தோட, பண்ணனும். அதனால, அவர் உடனே, சுமந்திரரை அழைச்சார். சுமந்திரரை கூப்பிட்டு, “நீங்க போயி, பிராமணாளை எல்லாம், அழைச்சுண்டு, வாங்கோ”ன்னு, சொல்றார். சுமந்திரர், போயி, வசிஷ்டர் முதலான, பிராமணரை, அழைச்சுண்டு வந்தார். அவர்கிட்ட, தசரதர் சொல்றார். “மம லாலாப்யமானஸ்ய புத்ரார்த்தம் நாஸ்தி வை சுகம்” “எனக்கு, கொஞ்சி மகிழ, ஒரு குழந்தை இல்லையேங்கிற குறை இருக்கு. நான் அஸ்வமேதயாகம் பண்ணலாம்ன்னு நினைக்கிறேன், நீங்களெல்லாம், எப்படி உத்தரவு, பண்றேளோ, அதை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார். அந்த பிராமணாளும், “உங்களுக்கு, இந்த மாதிரி, தார்மீகமான புத்தி வந்துதே, அதனாலேயே, உங்களுக்கு, வந்து, நல்ல காலம், வந்துடுத்துன்னு, அர்த்தம். நீங்க நினைக்கற, மாதிரியே, அந்த யாகத்தை, பண்ணுங்கோ. குதிரையை அனுப்புங்கோ, சரயு, நதி கரையில யாக மண்டபத்தை, அமைக்கறதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணுங்கோ”, அப்படீனெல்லாம், சொல்றார். உடனே தசரத மஹா ராஜாவும், சந்தோஷப்பட்டு, “ஆஹா, என் பாக்கியம், நான் அதே மாதிரி, பண்றேன்.நீங்க எல்லாரும், இருந்து, எனக்கு, இந்த யாகத்தை, நல்லபடியா, பூர்த்தி பண்ணி, தரணும். இந்த அஸ்வமேத யாகத்தை பண்ணும்போது, ஏதாவது, தப்பு வந்துடுதுன்னா, பிரம்மராக்ஷதர்கள், எல்லாம், அந்த கர்த்தாவை வதம் பண்ணிடுவான்னு, இருக்கு. அதுனால, எந்த ஒரு குறையும் இல்லாம, நல்லபடியா நீங்கதான், எனக்கு, நடத்தி தரணும்”, அப்படீன்னு, தசரத, மஹா ராஜா பிரார்த்தனை பண்ணிக்கறார்.  வசிஷ்டாதி மஹான்கள், இருக்கும் போது என்ன குறை. நல்லபடியாக, நடக்கும். அவாளும், உன் எண்ணப்படியே, நல்லபடியா யாகம் பூர்த்தியாகும். நல்லபடியா, குழந்தைகள், பொறப்பா, அப்படீன்னு, ஆசீர்வாதம் பண்றா.

அவாளையெல்லாம் அனுப்பிட்டு, தசரதர் தனியா இருக்கும்போது, சுமந்திரர் சொல்றார். முன்னொரு தடவை, தேவலோகத்துல, சனத்குமார மஹரிஷி, சொல்லிண்டு இருந்தார். “தசரதர், அப்படீங்கிற, சூரிய வம்சத்து மஹா ராஜாவுக்கு, பிள்ளையா ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர்ங்கிற, நாலு, குழந்தைகள், அவதாரம், பண்ணப் போறா. அந்த ராஜா, ரிஷ்யஸ்ருங்கர், அப்படீங்கிற, ஒரு யோகியை வெச்சுண்டு, யாகம் பண்ணுவார்”னு, சொல்லிண்டு இருந்தார். “அந்த ரிஷ்யஸ்ருங்கர், பெரிய தபஸ்வி. அவர் அங்க தேசத்துலதான் இருக்கார். உங்க நண்பரான, அங்கதேச மஹாராஜாக்கு தான் அவர் மாப்பிள்ளை. நீங்க போயி, அவரை அழைச்சுண்டு வந்து, இந்த யாகத்தை, பண்ணேள்னா, நன்னா நடக்கும். எனக்கு அந்த பூர்வ கதை  ஞாபகம் வர்றது”, அப்படீன்னு சொல்றார்.

சுமந்திரர், இத்தனை வருஷம், அறுபதாயிரம் வருஷம், அவருக்கும் ஆயிடுத்து.  நல்ல வயசு. கூடவே இருக்கார். அவருக்கு, இப்பதான், அது ஞாபகம் வந்தது. ஏன்னா, இப்பதான் தசரதருக்கு, அந்த அஸ்வமேதயாகம், பண்ணனும்கிற புத்தி வந்தது. அந்த நல்ல புத்தி, வந்த உடனே, காலம், கூடி வர்றது. அதனால, சுமந்திரரும், ஏதோ எடுத்து சொல்றார். உடனே தசரதரும், ஆஹா, அப்படியே, பண்ணுவோமேன்னு சொல்லிட்டு, இந்த ரிஷ்யஸ்ருங்கரோட, மஹிமை என்னன்னு, சொல்லுங்கோ, அப்படீன்னு கேட்கறார்.

அந்த ரிஷ்யஸ்ருங்கரோட சரித்ரம், ரொம்ப ஸுவாரஸ்யமா இருக்கும். அதாவது, விபண்டகர்னு ஒரு முனிவர், இருக்கார். அவர் ஒரு மானை பார்க்கறார். அந்த மான் ஒரு குழந்தையை பெத்துக் கொடுத்துட்டுப் போயிடறது. குழந்தைக்கு, தலையில, கொம்பு இருக்கு. தமிழ் ல, கலைக்கோட்டு முனிவர், அப்படீம்பா. கலைன்னா, மான். கோடுன்னா, கொம்பு. கலைக்கோட்டு முனிவர், ரிஷ்யஸ்ருங்கர். ஷ்ருங்கம்னா கொம்பு. கொம்பு இருக்கற, ரிஷின்னு, பேரு.

ஜானகீ காந்த ஸ்மரணம் .. ஜய ஜய ராம ராம

Series Navigation<< அயோத்யா நகர மாந்தர்கள் பெருமைரிஷ்யசிருங்கர் மஹிமை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.