Categories
Bala Kandam

ரிஷ்யசிருங்கர் மஹிமை

9. ரிஷ்யஸ்ருங்கரின் மஹிமையை சுமந்திரர் தசரத மன்னருக்கு எடுத்துக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் தசரதர், தன்னுடைய அஸ்வமேத யாகத்தை நடத்தி தரும் பொருட்டு ரிஷ்யஸ்ருங்கரை,  ரோமபாதரிடம்  கேட்டுக்கொண்டு, அங்க தேசத்தில்  இருந்து அயோத்திக்கு அழைத்து வருகிறார்.

ரிஷ்யஸ்ருங்கர் மஹிமை (audio file. Transcript given below)

அந்த விபண்டகர், என்ன பண்றார்., அந்த குழந்தையை, காட்டுலே, யார், கண்லேயும் படாம, அங்கேயே, வளர்த்து, பூணல் போட்டு, அந்த குழந்தைக்கு, நாலு வேதத்தையும், சொல்லி வைக்கறார். இப்படி முறையா, அப்பா கிட்ட அத்யயனம் பண்றதுங்கிறது, அபார புண்யம். அதனால, பெரிய தபஸ்வி ஆயிடறார். வேற ஒண்ணுமே, உலகத்துல, தெரியாது., அவருக்கு. காட்டுல இருந்துண்டு, அப்பாக்கிட்ட, இருந்து, வேதத்தை, கத்துண்டு, ஸமித்து, பொறுக்க வேண்டியது. ஸமித்தா தானம், சந்தியாவந்தனம் பண்ண வேண்டியது, வேதம் படிக்க வேண்டியது. இப்படி, ஒரு ஆனந்தமான, வாழ்வு. தபஸ்ல, இருந்துண்டு, இருக்கார். பக்கத்துல, அங்க தேசத்துல, இந்த ராஜாவோட, ஏதோ ஒரு பிழையினால, ஒரு பஞ்சம் வந்துடறது. அந்த மஹாராஜா, ரோமபாதர்னு, பேரு. அவர் மந்திரிகளையும், பிராமணர்களையும் , பெரியவாளையும், கூப்பிட்டு கேட்கறார். இதுக்கு,என்ன பிராயச்சித்தம், பண்றது, அப்படீன்னு,அவாள்லாம் சொல்றா, இந்த பக்கத்து, காட்டுல, ரிஷ்யஸ்ருங்கர்னு ஒரு முனிவர் இருக்கார். அவர் அபார தபஸ்வி. அவரி நீங்க இங்க அழைச்சுண்டு, வந்தேல்னா, அவர் கால் பட்ட உடனே, நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. அப்படீங்கிற மாதிரி, இந்திரன் மழையை கொட்டிடுவான்.அந்த மாதிரி அவருக்கு,  ஒரு குறை இருக்க கூடாதுங்கிறதுனால, அப்பேற்பட்ட, பெரியவா, கால் பட்டுதுன்னா, இந்த பஞ்சம் போயிடும், மழை பெய்யும். அப்படீன்னு சொல்றா.

அவர் விபாண்டகர், அவர் அப்பா, கோச்சுப்பாரே, அவரை எப்படி, அழைச்சுண்டு வர்றது, எல்லாரும்,நாக போகமாட்டோம், எங்களுக்கு, அவர்கிட்ட பயம், அப்படீன்னு சொல்றா. உடனே சரி, வேற வழி இல்லை. நாம ஆடல் பெண்களை, அனுப்பிச்சு, அவரை அழைச்சுண்டு வந்துடலாம், அப்படீன்னு, சொல்லி, கடைசீல, பெண்களை, அனுப்பறா. அவா போயி, அந்த விபாண்டகர் இல்லாத சமயத்துல, இவர்கிட்ட போயி பேச்சு கொடுக்கறா. இவர் அவாளை பார்த்த உடனே, ரொம்ப தேஜஸா இருக்கேளே. நீகள லாம், எங்க இருக்கேள்? உங்க கிராமம் எங்க இருக்கு. அப்படீன்னு கேட்கறார். அவள்ளாம், இவருக்கு, கொண்டு வந்த லட்டு, அதிரசம், எல்லாம், சாப்பிட கொடுக்கறா. அவர் அதை எல்லாம் சாப்டுட்டு, இதெல்லாம், ரொம்ப நன்னா இருக்கே. இந்த பழங்கள் எல்லாம் எந்த மரத்துல முளைக்கறது? ன்னு கேட்கறார். அவாளாம், எங்க ஊரில, இந்த மாதிரி, நிறைய, விசேஷமான, பண்டங்கள், லாம், இருக்கு. எங்க ஊருக்கு வந்தேள்னா, நாங்க இதெல்லாம், உங்களுக்கு தரோம், அப்படீன்னு பேச்சுக் கொடுத்து, சுவாரஸ்யமா பேசி, பாடி, ஆடி, எல்லாம், பண்ணின உடனே, இவருக்கு, அவ்வகிட்ட, மனசு லயிக்கறது. அப்புறம், அவள்ளாம், சாயங்காலம், ஆனா உடனே, சந்தியாவந்தனம், பண்ணனும், எங்களுக்கு, அனுஷ்டானம், பண்றதுக்கு, நேரம் ஆயிடுத்துன்னு, படகுலேயே, வந்த வழியிலேயே, போயிடறா. இவர், இவ்வளோ நாள். ஆனந்தமா இருந்தவர், அன்னிக்கு, ஏதோ, ஒரு குறையா உணருகிறார். அடுத்த நாள், அவா வருவாளான்னு காத்துண்டு இருக்கார். அவா அந்த நேரத்துல வந்து எங்களோட வாங்கோன்னு, அப்படீன்னு அவரை மெதுவா படகுல ஏத்தி, அழைச்சுண்டு, போயிடறா. அவர் கால் பட்ட உடனே, அங்க தேசத்துல மழை, கொட்டு  கொட்டுன்னு கொட்டிடறது. அந்த அங்க தேசத்து, மகாராஜா, இப்பேற்பட்ட, தபஸ்வி, வந்தாரேன்னு, அவரை வரவேற்று, அவரை, அரண்மனைக்கு, அழைச்சுண்டு போயி, அவருக்கு, சாந்தான்னு, ஒரு பொண்ணு இருக்கா. அவளை, இந்த ரிஷ்யஸ்ருங்கருக்கு, கல்யாணம் பண்ணி கொடுக்கறார்.

சுமந்திரர், சொல்றார், தசரதர்கிட்ட, இப்பேற்பட்ட, மகரிஷியை, நீங்க அழைச்சுண்டு வாங்கோ. அவரைக் கொண்டு, நீங்க, இந்த அஸ்வமேதயாகத்தை, பண்ணுங்கோ, அப்படீன்னு, சொன்ன உடனே, தசரத மகாராஜாவும், பிராமணாள் கிட்ட உத்தரவு வாங்கிண்டு, தன்னோட, நண்பரான, அங்கதேச மஹாராஜா ரோமபாதரை, போயி பார்த்து, அவரோட கொஞ்ச நாள், தங்கியிருந்துட்டு, அப்புறம், ரோமபாதரும், ரிஷியஸ்ருங்கர், சாந்தாவெல்லாம், அவாளுக்கு அறிமுகப் படுத்தறார். அவா குசலம் விசாரிசுக்கரா. பின்னால, உங்க மாப்பிள்ளையை என்னோட அனுப்பி வைக்கணும். நான் ஒரு அஸ்வமேதயாகம் பண்ணப் போறேன். புத்ரோத்பத்தியை, முன்னிட்டு, அப்படீன்னு வேண்டிண்ட உடனே, ஆஹா, அப்படியே, பண்ணுங்கோளேன்னு, சொல்லி, மாப்பிள்ளையை அனுப்பிச்சு வைக்கறார். பொண்ணையும், மாப்பிள்ளையையும், அனுப்பிச்சு வைக்கிறார். அவாளை, தசரதர், தன்னோடே, அழைச்சுண்டு, வரார். தான் ஊருக்கு, வரதுக்கு, முன்னாடி, தூதர்களை எல்லாம், அனுப்பிச்சு, நகரத்தை எல்லாம், அலங்காரம், பண்ண சொல்லி, அழகழகான, பந்தல்கள் லாம், கட்டி, மேளதாளத்தோட, நாதஸ்வரத்தோட, இந்த ரிஷ்யஸ்ருங்கரை, ஊருக்குள்ள அழச்சுண்டு, போயி, தன்னோட, அரண்மனைக்கு கூட்டிண்டு போயி, அவாளை சௌகர்யமா ஒரு வருஷம் அவா தங்கறா. அதற்குள்ள, இந்த சரயு நதிக்கரையில  ஏற்பாடுகள், எல்லாம் பண்ணி முடிக்கறார். இந்த அஸ்வமேதயாகத்துக்கு அந்த குதிரையும், உலகம் முழுக்க, சுத்திண்டு,  வர்றது.  அப்புறம், திரும்ப, ஒரு தடவை, எல்லா பிராமணர்களையும், கூப்பிட்டு, ரிஷ்யஸ்ருங்கரையும், முன்னிட்டு, தசரதர், வேண்டிகறார். என்னுடைய இந்த அச்வமேதயாகத்தை, நான், பண்ணனும்னு, ஆசைப் படறேன். இந்த யாகத்தைப் பெரியவா எல்லாம், இருந்து, நல்லபடியா நடத்தி தரனும், அப்படீன்னு, வேண்டிக்கறார். நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணுங்கோ, நாங்க உங்களுக்கு, இந்த யாகத்தை, பூர்த்தியா நடத்தி தரோம், நீங்க, கவலை படவேண்டாம், அப்படீன்னு, அந்த ரிஷிகள்லாம் தசரதருக்கு, ஒரு மனசா வாக்கு கொடுக்கறா. தசரதரும், பரம சந்தோஷத்தோட, எல்லா, ஏற்பாடும், பண்றார். இந்த அஸ்வமேதயாகத்துக்கு, வேண்டிய, எல்லா தேசத்துலேருந்து, எல்லா ராஜாக்களையும், எல்லா வர்ணத்தவர்களையும், வரவேற்கறார். எல்லாரும், தங்கறதுக்கு, எல்லாம், எல்லா ஏற்பாடும் பண்றார். எல்லாருக்கும், அந்த ஒரு மாசத்துக்கு, நல்ல சாப்பாடு. அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம், பண்றார். பெரிய பெரிய, தங்கறதுக்கு, விடுதி எல்லாம், கட்டறார். இப்படி, சுமந்திரரை, கொண்டு, விமரிசையாக, அந்த அஸ்வமேதயாகத்தை, முறைப்படி, சாஸ்த்ரோத்தமா பண்றதுக்கு, என்னன்ன, உபாயம், உண்டோ அத்தனையும் பண்ணுகிறார்.

ஒவ்வொரு, பிராமணாளும், நூற்றுக்கணக்கான, சிஷ்யர்களை, அழைச்சுண்டு, வரா. எல்லா தேசத்துல இருந்தும், எல்லா பிராம்மணர்களும், ரிஷிகளும், ராஜாக்களும், எல்லாரும் வந்து, சேர்ந்துடறா. தசரத மஹாராஜா , ரிஷ்யசிருங்கர், வசிஷ்டர் முதலான, முனிவர்களைக், கொண்டு, அஸ்வமேத யாகம் பண்ணதும், அவருக்கு, அதுக்கு கைமேல பலன், கிடைச்சதும், அதெல்லாம், நாளைக் கதை.

Series Navigation<< தசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவுஅஸ்வமேத பூர்த்தி >>

One reply on “ரிஷ்யசிருங்கர் மஹிமை”

அருமை. தங்களுடைய அனைத்து பகுதிகளையும் பாராயணம் செய்து வருகிறேன். ஆங்கரை பெரியவா திருவடிகளே சரணம் சரணம். தங்கள் பணி தொடரட்டும். 👌👌👌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.