Categories
Bala Kandam

அஸ்வமேத பூர்த்தி

10. தசரதர் செய்த அஸ்வமேத யாகம் ரிஷிகளின் உதவியால் முறைப்படி நடந்து முடிகிறது.

அஸ்வமேத பூர்த்தி (audio file. Transcript given below)

ரிஷ்ய ஸ்ருங்கரோட, மஹிமையை சொல்லும் போது,  ஸ்வாமிகள், சொல்றது இன்னொண்ணு ஞாபகம் வர்றது. அவர், நியமமா, அப்பா கிட்ட, வேத அத்யயனம் பண்ணிணது, பிரம்மச்சர்யம், இதெல்லாம், தவிர, பித்ரு சிஸ்ருஷை  பன்னாரே, அது தான், அவருக்கு அவ்வளவு மஹிமை, அப்படீன்னு சொல்லுவார். இப்படி ராமாயணத்துல, பித்ரு பக்தி நிறைய சொல்லியிருக்கு. அப்படீன்னு நிறைய, இடங்களை, ஸ்வாமிகள் எடுத்து காண்பிப்பார். ராமரே பித்ரு வாக்கிய பரிபாலனத்துக்காக, காட்டுக்குப் போனார். வாயு பகவானோட அனுக்ரஹத்துனால, ஹனுமார், ஆகாசத்துல, பறந்து போயி, கடல் தாண்டி, இலங்கையை சேர்ந்தார். நளன், அவா அப்பாவோட, அனுக்ரஹத்துனால, கடல் மேல, பாலமே கட்டினான். சூரிய பகவானோட பிள்ளை, சுக்ரீவன், சூரிய பகவான், சர்வ சாக்ஷி, வானத்துல போறதுனால, எல்லாமே அவருக்கு தெரியும். எல்லாத்தையும் பார்க்கிறவர். இந்த மாதிரி, சுக்ரீவன், நாலா திக்குலயும், என்னென்ன தேசங்கள் இருக்கு, என்னென்ன நதிகள் இருக்கு, என்னென்ன குகைகள் இருக்கு, எல்லாம் தெரிஞ்சு, நாலு திக்குலயும், வானராளை அனுப்பி, போகும் போது, குறிப்பா, சொல்லி அனுப்பறான். இந்த இடத்துல, இன்னன்ன நதிகள் இருக்கும், இங்கெல்லாம், தேடுங்கோ, அங்கெல்லாம் தேடுங்கோ, அப்படீன்னு, பூகோளம் முழுக்க அவனுக்குத் தெரியறது. ராமர் காட்டுக்குப் போனார்னா கூட முக்யமா, அவருக்கு சீதா தேவியை, பிரிஞ்சபோது, தொலைச்ச போது, அவர் அப்பாவோட ஸ்நேஹிதர்களான, ஜடாயு ஒரு பெரிய clue கொடுக்கறார். சம்பாதி ஒரு சகாயம் பண்றார் வானராளுக்கு. சீதா தேவி எங்க இருக்கான்னு, காண்பிச்சுக் கொடுக்கறார். இப்படி அப்பா பேச்சை கேட்டா, ஒரு குறையும் இல்லை, அப்படீங்கிறது முக்யமா ராமாயணத்துல ஒரு செய்தி அப்படீன்னு ஸ்வாமிகள்  எடுத்து, சொல்வார். அப்படி ரிஷ்ய சிருங்கர் முதலான, ரிஷிகள், வசிஷ்டர், போன்ற பிரம்மரிஷிகள், எல்லாரும்  இருந்து, முறைப்படி தசரத மகாராஜா அஸ்வமேத யாகத்தை பண்றார். அவா எல்லாரும், மந்திரங்களைச், சொல்ல, அந்ததந்த தேவர்களை, உத்தேசித்து, ஹவிர் பாகங்களை, கொடுக்கறார். பெரிய யூபங்கள் எல்லாம் பண்ணி, அதுல தங்க கவசம், எல்லாம், போட்டிருக்கு. அந்தந்த, தெய்வங்களை, உத்தேசித்து, ப்ரீதியான, பலி எல்லாம், கொடுக்கறா. வந்து இருக்கற, பிராம்மணாள்ல்லாம், எல்லாரும், ஆறு அங்கத்தோடு, நாலு வேதத்தையும், படிச்சவா. ஒவ்வோருத்தரும், நூற்றுக் கணக்கான, சிஷ்யர்களை, வெச்சிண்டு இருக்கா. ஒருத்தரும், மத்யான வேலையில, ஒரு பசியோ, தாகமோ, தூக்கமோ, ஓய்ச்சலோ, ஒண்ணும் இல்லாம, ஆனந்தமா இருக்கா. மலை, மலையா,குமிச்சு, சாப்பாடு, கொடுங்கோ, கொடுங்கோ, சாப்பாடு போடுங்கோ, இன்னும், அப்படீன்னு, சொல்றவாளும், எடுத்து, நிறைய போடறவாலும், இருந்தா. கணக்கில்லாம, வஸ்த்ர தானமும், பண்ணிண்டு, இருக்கா. எல்லாரும், “அஹோ த்ருப்தாஸ்மா பத்ரயந்தே” ரொம்ப திருப்தியா ரொம்ப அமிர்தமா இருந்தது, சாப்பாடு. அப்டீங்கிற, அந்த வார்த்தைதான், தசரதருக்கு, காதுல விழுந்துதாம்.

இப்பேற்பட்ட, அச்வமேதயாகத்தை, தசரத மஹா ராஜ,”மனசேவ விநிர்மிதம்” மனசுல அவர் எப்படி நினைச்சாரோ, அதே மாதிரி,எல்லாரும், பண்ணி கொடுத்தா, அவருக்கு. அந்த அச்வமேத யாகத்தொட, முடிவுல, தசரத மஹாராஜா,நாலு திக்குல இருக்கற, எல்லா தேசங்களையும், எல்லா பூமியையும், “பிராசிம் ஹோதவ்யவே ராஜா “ ஹோதாவுக்கு, பிராசிம், திக்கு கொடுத்தார். “அத்யர்வே தக்ஷிணாம்” ப்ரீத்சிம் திக்கை, பிரம்மாவுக்கு, கொடுத்தார். உதீசி திக்கை உத்காதாவுக்கு கொடுத்தார். இப்படி, இந்த தட்சிணை நியமிதிருக்கார், பிரம்மா. அதே போல அந்த தக்ஷணையை கொடுத்தார். ரிஷிகள் எல்லாம் அவர்கிட்ட சொன்னா, “நீங்க முறைப்படி, தக்ஷணையை கொடுத்தேள். ஆனா எங்களுக்கு, இந்த பூமியை, பாதுகாக்க, எங்களுக்கு நேரம் தம் ஓதறதும்,சொல்லி கொடுக்கறதும், அதுலதான், எங்களுக்குப் ப்ரியம். அதனால, பூமியை, பாதுகாகறத்தை நீயே பண்ணு, நாங்க உன்கிட்ட, திருப்பி கொடுத்துடறோம். ஏதோ ஒரு தக்ஷிணை, சமானமா ஒண்ணு கொடு, அப்படீன்னு சொல்றா. ராஜாவும் ஆஹா,ன்னு சொல்லி, அதை திரும்பி வாங்கிண்டு, அவாளுக்கு நிறைய பசுக்களையும் ரத்தினங்களையும்,தானம் கொடுக்கறார். அப்புறம் தரையில விழுந்து, நமஸ்காரம் பண்றார். அவ்ளோ தானம், கொடுத்துட்டு, அவாளை நமஸ்காரம் பண்றார். அவாளும், அவரை வாயார வாழ்த்தி, ஆசீர்வாதம் பண்றா. எப்படி, நீ பிரியப் படரயோ, “ பவிஷ்யதி” உன் குலத்தை வ்ருத்தி பண்ணக் கூடிய நாலு பிள்ளைகள், உனக்கு, ஏற்படுவா அப்படீன்னு, ஆசீர்வாதம் பண்றா.

“கஸ்மைசித் யாசமானாய” யாரோ ஒருத்தர் வந்து யாசகம் கேட்கறாராம், தசரதர் எல்லாத்தையும் கொடுத்துடறார். அவர் கையில, இருந்த ஒரு காப்பு மட்டும், மிஞ்சியிருக்கு. அந்த காப்பையும், எடுத்து யாருக்கோ கொடுதுடறார். அதை வந்து, யாசிக்கரவாளுக்கு, அப்படி அந்த மாதிரி, ஒரு புண்ய கார்யம், பண்ணும்போது, “கஸ்மைசித்” யாரோ ஒருத்தர்னு வந்தா அது பகவான்தான், அப்படி வந்திருக்கா. அது மாதிரி, லக்ஷம் பிராமண போஜனம், பண்ணா யாராவது, ஒரு ஞாநி இருப்பா அதுல. அவா குக்ஷீல நம்ம அன்னம் போச்சுன்னா, தலைமுறையை, காப்பாத்தும். அப்படீங்கிற, நம்பிக்கையைதான், புண்யகார்யங்கள் பண்றா.

இப்படி தசரதர், அந்த வபையை, ஹோமத்துல, கொடுத்து, புகையை முகர்ந்து, அதுல இருந்து, எல்லா பாபங்கள்ல இருந்தும்  விடுபட்டவரா ஆனார். அப்படீன்னு அவர் பூர்த்தி பண்றார். பூர்த்தி பண்ண பின்ன, தசரத மகாராஜா, ரிஷ்யஸ்ருங்கர்கிட்ட, வேண்டிகாறார். எனக்கு குலத்தை, வளர்க்க, பிள்ளை செல்வங்கள், வேண்டும், உங்களை, பிரார்த்திக்கறேன், அப்படீன்னு, அந்த ரிஷ்யஸ்ருங்க முனிவர், மேதாவி. மேதாவினா, உயர்ந்த ஞாபக சக்திக்கு மேதான்னு பேரு. பதிமூணு வருஷம், ஒருத்தர், பிரம்மச்சரியத்தோட இருந்தா அவாளுக்கு, மேதா நாடின்னு ஒண்ணு, வந்துடும், அவாளுக்கு, அப்புறம் கண்ணால, காதால பாக்கற விஷயங்கள், எல்லாமே, மனசுக்குள்ளா, போயி, பதிஞ்சிடும். நம்ம மஹா பெரியவா, இருந்தா. ஐம்பது வருஷம், முன்னாடி பார்த்தவாளைக்  கூட, நீ இந்த ஊர்தானே, இன்ன கோத்திரம், தானே, நீ இன்னாரோட பிள்ளைதானே, இன்னாரோட பேரன்தானே, ன்னு கேட்பா. அது எப்படீன்னா, அந்த பிரம்மச்சரியத்தோட மஹிமை. அப்படி, இந்த ரிஷ்யஸ்ருங்க, முனிவர், பிரம்மச்சரியத்தோட நாலு வேதத்தையும் படிச்சவரா இருந்ததுனால, இந்த தசரதர் கேட்ட உடனே, அவர் சொல்றார். “அதர்வ ஷிரஸி ப்ரோக்தம்” அதர்வ வேதத்தோட உபநிஷத்ல, புத்திர காமேஷ்டி னு ஒண்ணு இருக்கு. நான் அந்த இஷ்டி உங்களுக்கு பண்ணி கொடுக்கறேன், அது மூலமா உங்களுக்கு, பிள்ளைகள் உண்டாவார்கள், அப்படீன்னு சொல்லி அந்த புத்திர காமேஷ்டியை பண்ணி வைக்கறார்.

Series Navigation<< ரிஷ்யசிருங்கர் மஹிமைவானரோத்பத்தி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.