விஸ்வமித்ரர் பலை அதிபலை மந்திரங்களை உபதேசித்தார்


15. விஸ்வாமித்ரர் ராம லக்ஷ்மணர்களுக்கு பலை அதிபலை என்ற மந்திரங்களை உபதேசிக்கிறார். மறுநாள் காலை ‘கௌசல்யா ஸுப்ரஜா ராம’ என்று சுப்ரபாதம் பாடி எழுப்புகிறார்.

[பலை அதிபலை மந்திரோபதேசம் (link to audio file. Transcript given below]

தசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே, கௌசல்யைட்ட சொல்றார், கௌசல்யா தேவியும் ராமருக்கு, ஸ்வஸ்தி வாக்யங்களெல்லாம் சொல்லி,  ஆரத்தி எடுத்து, ரெண்டு பேருமா குழந்தைய விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைக்கறா.

விஸ்வாமித்ரர்ட்ட ராமலக்ஷ்மணா வந்து சேர்ந்தபோது, தேவதுந்துபி முழங்கித்து, சங்க வாத்தியம் கேட்டது, வானத்திலேர்ந்து புஷ்பமாரி பொழிஞ்சது.

விஸ்வாமித்ரர் பரம சந்தோஷத்தோட, நம்ம வந்த காரியம் நடந்தது, ஏதோ கோவிச்சுகர மாதிரி அபினயம் பண்ணினோம், நம்மகிட்ட குழந்தைய குடுத்துட்டா, அப்படின்னு பகவான அழைச்சிண்டு போறார்.

சரயு நதிக்கரைல, ஒரு ஒன்றரை யோஜனை, பதினைஞ்சு மைல் போனவுடனே, சரயு நதிக்கரைல விஸ்வாமித்ரர் ராமரை கூப்பிட்டு, பலை அதிபலைன்னு மந்த்ரங்கள் உபதேசம் பண்றேன், வாங்கிகோங்கோ, அப்படின்னு சொல்றார்.

ராமேதி மதுராம் வாணீம் விஸ்வாமித்ரோப்ய பாஷத; அப்படின்னு வால்மீகி சொல்றார். ராம, இந்த மதுரமான வார்த்தைகளை சொல்லி, விஸ்வாமித்ரர் அழைச்சார், அப்படின்னு. இந்த முழு வால்மீகி ராமாயணத்துல, இருபத்திநாலாயிரம் ஸ்லோகத்தில, “ராமேதி மதுராம் வாணீம்” னு இங்க வருது, ராமா என்ற மதுரமான சொற்கள், அப்படின்னு.

சுந்தர காண்டத்துல சீதா தேவி, ஹனுமார் கிட்ட, என்னை ராமர் ஞாபகம் வெச்சுண்டிருக்காரா, மறந்தே போயிட்டாரா, பத்து மாசம் ஆயிடுத்து, அப்படின்னு, ஜீவன், பகவானுக்காக, தவிக்கறது. சொன்னவுடனே, ஹனுமார், பலவிதங்கள்ள சமாதான படுத்தறார். அப்போ சொல்றார், “சீதேதி மதுராம் வாணீம்” ராமருக்கு தூக்கமே இல்ல, உங்கள பிரிஞ்ச துக்கத்துல, எப்பவாவது ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணு அசந்தாகூட, சீதா, அப்படின்னு மதுரமான வார்த்தைகளை சொல்லிண்டு, முழிச்சிண்டுடறார்.

அப்படின்னு, இங்க ராமேதி மதுராம் வாணீம், அங்கே சீதேதி மதுராம் வாணீம். வால்மீகிக்கு, இந்த ராமா சீதா ங்கற ரெண்டு சொற்கள்தான் மதுரமா தெரியறது.

அப்படி அந்த குழந்தைகளை அழைச்சு, அவாளுக்கு, பலை அதிபலை அப்படின்னு ரெண்டு  மஹாமந்த்ரங்கள உபதேசம் பண்ணிவெக்கறார். இந்த பலை அதிபலை மந்த்ரங்கள தெரிஞ்சுண்டேள்னா உங்களுக்கு, ஒரு பிரயாணத்தில போறபோது, எந்த ஒரு களைப்போ, பசியோ, தாகமோ இருக்காது. ராக்ஷஷர்களெல்லாம் நீங்க தூங்கும்போது உங்கள, துன்புறுத்த முடியாது” அதனால இந்த மந்த்ரங்கள வாங்கிங்கோங்கோன்னு, அதை குழந்தைகளுக்கு சொல்லி வைக்கிறார்.

அவாளும், கை கால் அலம்பிண்டு, அவர் சொன்ன மாதிரியே, குளிச்சிட்டு வாங்கோ, ஆசமனம் பண்ணிட்டு வாங்கோன்னு சொல்றார், அப்புறம் மந்த்ரங்கள சொல்லி குடுக்கறார். அவாளும் அதை வாங்கிக்கறா. அந்த மந்த்ரங்களை க்ரஹிச்சிண்டு, தேஜஸோட விளங்கறா.

சேஷாத்ரி ஸ்வாமிகள், சிவ சிவா , ராம ராமா, இதுதான் பலை அதிபலை மந்த்ரம் அப்படின்னு ஒரு தடவை அனுக்ரஹம் பண்ணிருக்கார். அந்த மாதிரி மஹான்கள் கருணையினால் சொல்லிடறா. பலை அதிபலை மந்த்ரம் ரிஷி சந்தஸோட, தேவதையோட வேதத்துல இருக்கு, ஆனா சேஷாத்ரி ஸ்வாமிகள், இந்த கலியில, சுலபமா இதை சொல்லி குடுத்தார். அது மஹான்களோட வழக்கம்.

உபநிஷத்ல நாரதர், முருகனுடைய பன்னிரண்டு நாமங்கள், அதை ரிஷி சந்தஸ், தேவதையோட, இந்த ஒரு மந்த்ரம் ________ இந்த பன்னிரண்டு நாமத்தை ஜபிச்சா, அஞ்சு ஞாநேந்த்ரியங்களும், அஞ்சு கர்மேந்த்ரியங்களும், மனசாகிய அந்த இந்திரியமும், அந்த பதினொண்ணும் அடங்கும், அப்படின்னு சொல்லி, பதினொன்னு நாமத்தை கொண்ட மந்த்ரத்த சொல்லிருக்கார். நம்ம ஆதிசங்கர பகவத் பாதாள், சுப்ரமணிய புஜங்கத்ல, அதையே சுலபமா ஒரு ஸ்லோகமா பண்ணிகுடுத்துட்டார்.

குமரா, ஈசசூனோ, குஹா, ஸ்கந்தா  ஸேனாபதே, ஸக்திபாணே, மயூராதிரூட, புளிந்தாத்மஜாகாந்த, பக்தார்த்திஹாரின், பிரபோ தாரகாரே, அப்படின்னு ஸதா ரக்ஷமாம் த்வம் னு முடியறது,

குமாரேஸ சூனோ குஹ ஸ்கந்த ஸேனாபதே

ஸக்திபாணே மயூராதி ரூட

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்திஹாரின்

பிரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம்.

அப்படின்னு, ஸ்வாமிகள், யாருக்காவது ஜ்வரம் அப்படின்னு சொன்னா, இந்த குமாரேஸசூனோ வ ஜபிச்சு விபூதி குடுப்பார். எத்தனையோ தடவை, எனக்கு ஞாபகம் இருக்கு, நானும் பாத்திருக்கேன், என் குழந்தைக்கும் பண்ணிருக்கார். இப்படி, மஹான்கள், இந்த நாமத்துல தான் கலியில பகவான் இருக்கார், அப்படிங்கறத ரொம்ப நம்பி, அந்த நாமத்தை வந்து உபதேசம் பண்ணி குடுத்திருக்காள்

அப்படி அந்த பலை அதிபலை மந்த்ரங்கள க்ரஹிச்சுண்டு ராமலக்ஷ்மணா போறா, அன்னிக்கு ராத்திரி, ஒரு மரத்தடில படுக்கவைக்கறார்.

அடுத்தநாள் காத்தால, “கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே. உத்திஷ்ட்ட நரஷார்தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம்” அப்படின்னு சொல்லி, விஸ்வமித்ரர், இந்த மங்களாஸாஸனம் குழந்தைய எழுப்பறார். இந்த ஸ்லோகம் எல்லாரும் கேட்டிருக்கோம், இந்த ஸ்லோகத்தை முன்னிட்டுண்டு, இந்த  வால்மீகி வாக்குல, விஸ்வாமித்ரர் பண்ண இந்த சுப்ரபாதத்தை முன்னிட்டுண்டு, அப்புறம் சுப்ரபாதம் மஹான்கள் பண்ணினதுனாலே தான், அது உலகம் ,முழுக்க பிரசித்தியாயிருக்கு. இந்த வரிக்கு அவவளவு மகிமை, ராமரை வந்து எழுப்பறார், கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு எழுப்பறார். கௌசல்யையுடைய குழந்தையே அப்படின்னு. அதாவது இந்த ராமன் தூங்கற அழகை பார்த்து, தினம் இந்த மாதிரி தூங்கற அழகை பார்த்து, குழந்தைய எழுப்பற பாக்கியம் அந்த கௌசல்யைக்குதானே கிடைச்சதுன்னு, கௌசல்யா சுப்ரஜா ராமா ன்னு சொல்றார். பூர்வா கிழக்கு திக்குல, சந்த்யா ப்ரவர்த்ததே சந்த்யா காலம் வருது அப்படின்னு.

சிஷ்யங்க்றவன் முன்னாடியே, குருவுக்கு முன்னாடியே எழுந்து தயாரா இருக்கவேண்டாமா, எழுப்பும்படி வெச்சுக்கலாமான்னு ஒரு கேள்வி இருக்கு. ஆனா ராமர் வந்து, அந்த தப்பு, அது ஒரு சின்ன பிழை இருந்தாலும் பரவால்ல. இந்த விஸ்வமித்ரர், குழந்தைய மரத்தடில தூங்க பண்ணிட்டோமேன்னு தாபப்படுவார், இன்னிக்கு தான் நன்னா தூங்கினோம்னு காமிக்கறதுக்காக, அவர் எழுப்பற வரைக்கும் தூங்கிண்டு இருக்கலாம்னு தூங்கறாராம்.

உத்திஷ்ட்ட நரஷார் தூலா, கர்த்தவ்யம் தெய்வமான்னிகம், காரியங்களெல்லாம் பண்ணனும், சந்த்யவந்தனங்கள் பண்ணனும்ன்னு எழுப்பறார். அதாவது, நீ கௌசல்யைக்கு பிள்ளையா, பூமில அவதாரம் பண்ணியிருக்க இல்லையா, அதனால நீ என்ன பண்ணறயோ, அதை பாத்துண்டு தான்  எல்லாரும் பண்ணுவா, அதனால, நல்ல வழிய எல்லாருக்கும் காமின்னு சொல்லி எழுப்பறார். அப்புறம் எழுந்து சந்த்யவந்தனம் பண்றார்.

ஜேபது: பரமம் ஜபம் எல்லாத்திலேர்ந்து ஸ்ரேஷ்டமான ஜபத்தை ஜபித்தார் அப்படின்னு, அது என்ன. “காயத்ரி” மந்த்ரம்தான். இந்த வால்மீகி ராமாயணத்துல நாப்பத்தியெட்டு இடங்கள்ள ராமர் சந்த்யாவந்தனம் பண்ணார், ராமர் சாய சந்த்யாவந்தனம் பண்ணார், பகல்ல சந்த்யாவந்தனம் பண்ணார், காத்தால சந்த்யாவந்தனம் பண்ணார்ந்னு, அப்படி வருது, இது சந்த்யவந்தனத்தோட மகிமை.

அடுத்தது, காமஸ்ரமத்துக்கு போனது, தாடகா வதம் பண்ணதெல்லாம் நாளைக்கு பார்ப்போம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

 

Series Navigation<< விஸ்வமித்ரர் தசரதரிடம் ராமனை தன்னோடு அனுப்ப வேண்டுதல்தாடகா வதம் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.