Categories
Ramayana One Slokam ERC

ராமேதி மதுராம் வாணீம்; ஸீதேதி மதுராம் வாணீம்

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், பாலகாண்டத்துல இருபத்திரெண்டாவது ஸர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे । रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत ।।

அத்யர்த்த யோஜனம் கத்வா, ஷரைய்வா தக்ஷிணே தடே |

ராமேதி மதுராம் வாணீம் விஷ்வாமித்ரோப்யபாஷாத ||

அப்படினு சொல்லி ஒரு ஸ்லோகம், அத்யர்த் யோஜனம் அப்படின்னா, ஒன்றரை யோஜனை. ஒரு யோஜனை எட்டு மைல்ம்பா, பத்து மைல்ம்பா,பத்து மைல்னு வெச்சுக்கலாம். ஒரு பதினைந்து மைல் போன பின்னா, விஷ்வாமித்ர மஹரிஷி,  சரயு நதியின் தடத்தில், கரையில், ராமலக்ஷ்மணர்களை திரும்பி பார்த்து, “ராமேதி மதுராம் வாணீம்”, ராமா என்ற இனிமையான வார்த்தையை சொல்லி, மதுரமான வார்த்தைகளை கூறி, அவர்களை அழைத்து “உங்களுக்கு நான், பலா அதிபலா (பலை அதிபலை) அப்படின்னு ரெண்டு மந்த்ரங்கள் உபதேஸம் பண்றேன். இந்த காட்டு வழில போகும்போது, களைப்போ, பசியோ, தூக்கமோ ஏற்படாது, நீங்க தூங்கும் போது உங்களை ராக்ஷர்கள்லாம் ஹிம்சை பண்ணாம முடியாம இருக்கும், இந்த மந்த்ரம் உங்களை காப்பாத்தும்” அப்படின்னு சொல்லி அந்த மத்ரங்களை உபதேஸம் பன்றார். அவா ரெண்டு பேரும், ஸ்னானம் பன்னிட்டு, ஆசமனம் பண்ணிட்டு, இவர் மந்த்ரோஉபதேஸம் பண்ணார், அதை அவர் repeat பண்றா, அந்த மத்ரங்களை க்ரஹிச்சுக்குறா. அப்படி உபதேசம் வாங்கிண்ட பின்ன, ரொம்ப தேஜஸோட விளங்குகிறார்கள். அப்படின்னு வரும்.

இந்த இருபத்திநாலாயிரம் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்துல, இந்த இடத்துல, ராமேதி மதுராம் வாணீம் அப்படின்னு வர்றது. சுந்தர காண்டத்துல சீதாதேவி ஹநுமார்க்கிட்ட, “என் ராமர் என்னை ஞாபகம் வெச்சிண்டு இருக்காறா? ஏன் வந்து இன்னும் என்ன காப்பாத்திண்டு போல, நான் என்ன தப்பு பண்ணேனேன்?”ன்னு  ரொம்ப வருத்தமா பேசும் போது, ஹனுமார் பதில் சொல்லறார் “அம்மா உங்களை ராமர் ஒரு க்ஷணம் கூட மறக்கவில்லை. அவர் சரியா சாப்பிடறது இல்லை, சரியா தூங்கறது  இல்லை, எப்பவுமே  உங்களையே தான் நெனைச்சிண்டு இருக்கார், எப்பவாவது ஒரு அஞ்சு நிமிஷம் கண் அசந்தாகூட, “சீதா! அப்படின்னு  சொல்லி எழுந்துட்றார்”, ஹனுமார் சொல்றார் “கனவுல உங்களை பாத்து, “சீதேதி மதுராம் வாணீம்” அப்டின்னு சொல்றார் ஹனுமார்.

அந்த மாதிரி ராமாயணம் முழுக்க, இந்த இடத்துல ஒரு வாட்டி “ராமேதி மதுராம் வாணீம்” வறது, அந்த எடத்துல ஒரு வாட்டி ” சீதேதி மதுராம் வாணீம்” வறது,  அந்த மாதிரி வால்மீகி முனிவருக்கு “ராமா சீதா” அப்படிங்கிற  இந்த ரெண்டு பதங்கள் தான் மதுரமாக படறது, வேற எதுவுமே அவ்வளவு  மதுரமாக இல்லை. அப்படி எல்லாத்துக்கும் மேல ஒரு மதுரமான ஒரு வார்த்தைகள் இந்த “ராமா, சீதாங்கறது” இந்த ராம நாமத்தை நாமும் ஜபம் பண்ணுவோம், சீதா ராமரை த்யானம் பண்ணுவோம்.

இந்த எடத்துல வேடிக்கையா ஒண்ணு சொல்லுவா, விஷ்வாமித்ரர், வசிஷ்டரைப் போல தானும் ப்ரஹ்மரிஷி ஆகணும்னு தானும் ஆசைப்பட்டார், அவர் தபஸ் பண்ணி “நீங்க ப்ரஹ்மரிஷி தான்”னு, ப்ரஹ்மாவே சொன்னாலும், “வசிஷ்டரரே வந்து சொன்னா, நான் திருப்தி ஆவேன்” அப்படின்ன உடனே, வசிஷ்டரரே வந்து “அப்படியே ஆகட்டும்”ன்னு சொல்றார், அப்படி அவர் ப்ராஹ்மரிஷி ஆனார்.

அப்பறம் வசிஷ்டர், இக்ஷ்வாஹு காலத்தில் இருந்தே இவளோட குடும்பத்துக்கு, குலகுருவா இருந்து எல்லாருக்கும், ஆயுஷ்ய ஹோமம், கல்யாணம் பண்ணி வெச்சு, எல்லா கார்யங்களையும் பண்ணிண்டு இருக்கார், வஷிஷ்டர் எதுக்காக அப்படி பண்ணார்னா, இந்த குலத்தில ராமர் வந்து பிறக்கப்போறார்,  அவனுக்கு ராமன் பேர் நான் வைக்கணும், அப்படின்னு, இவ்வளோ உழைச்சிருக்காராம். விஷ்வாமித்ரர்க்கு உடனே தானும், “ராமரோட இருக்கணும். எனக்கும் ராமரோட ஸங்கம் வேணும்” அப்படின்னு ஆசை. அவர் தசரதர் சபைக்கு வரார். தசரதர் கிட்ட  “ராமனை என்னோட அனுப்பு”ங்கிறார், தசரதர் கலங்கறார், அப்பறம் இவர் கோச்சுக்கிற மாதிரி நடிக்கிறார், “என்ன கொடுத்த வாக்கை காப்பத்த மாட்டேங்கிற” அப்படின்னு கோச்சுக்குறார், அப்பறம், வசிஷ்டர் சமாதான படுத்தி, “நீ ராமனை அவரோட அனுப்பு, அவர் மிகுந்த நன்மைகளை செய்வார், உன் குழந்தைகளுக்கு” அப்படின்னு சொல்றார், அந்த மிகுந்த நன்மைகள் என்னன்னா, “அஸ்திர வித்தைகளை உபதேஸம் பண்ணப் போறார்,  மிதிலைக்கு கூட்டினு போய் சீதாதேவியை  கல்யாணம் பண்ணி வைக்க போறார், அதனால உன் ராமனை விஷ்வாமித்ரரோட அனுப்பு”ன்னு வசிஷ்டர் சொன்ன உடனே, தசரதர் சமாதானம் அடைஞ்சு ராமரை அனுப்புறார். அப்படி, வசிஷ்டர் மாதிரி தனக்கும் அந்த  ராமரோட ஸங்கம் கிடைக்கணும் கிடைக்கணும்  அப்படிங்கிறது நடந்துடுத்துது.

அவர் போயிண்டே இருக்காராம், திடீர்ன்னு அவர்க்கு வந்து, என்ன இருந்தாலும் வசிஷ்டர் குரு, அவர்வந்து உபதேஸங்கள்லாம்  பண்ணி இருக்கார், வேதமெல்லாம் சொல்லித் தரார், நம்மளும், ஏதாவது ஒண்ணு உபதேஸம் பண்ணி, அதுலயும், வஷிஷ்டருக்கு ஸமானமா ஆயிடனும் அப்படின்னு சொல்லி, விஷ்வாமித்ரர் “வாங்கோ, நான் உங்களுக்கு, பலை அதிபலை என்ற ரெண்டு மந்த்ரங்களை உபதேஸம் பண்றேன்”, அப்படின்னு இந்த ரெண்டு உபதேஸம் பண்ணாராம், அப்படி வேடிக்கையா சொல்லுவா.

அப்படி இந்த ராமேதி மதுராம் வாணீம் எங்கிறத நினைச்சிண்டு, ராம நாமத்தை ருசிப்போம். தியாகராஜ ஸ்வாமிகள் 96 கோடி ஜெபிச்சு, ராம தர்ஷனம் பண்ணார். ஸ்மர்த்த ராமதாஸர்  13 கோடி ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா னு ஜபம் பண்ணி, ஹனுமாரோட தர்ஷனம் பண்ணிணார். அவரை ஹனுமாரோட அவதாரமாவே சொல்லுவா, அப்படி எல்லா மஹான்களும் நாம மஹிமையை சொல்றா. நம்ம தேசத்துல, சன்யாசிகளா போதேந்திராள் அவதாரம் பண்ணி, அவர் ராமநாமத்தின் மஹிமையை பத்தி ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் எழுதியிருக்கார், இந்த ராம நாமத்துல ருசி வர்றது தான் எல்லாத்துக்கும் மேல. சமாதில நிஷ்டையா இருக்கறதை விட, ராம நாமத்துல ருசி வந்து அதை ஜபிச்சிண்டு இருக்கறது தான் பெருசு, அவ்ளோ தூரம் அவர், ராம நாமத்தின் மஹிமையை போதேந்திராள்  சொல்லிருக்கார், அப்பேர்ப்பட்ட “ராமேதி மதுராம் வாணீம் விஷ்வாமித்ரோப்யபாஷாத” விஷ்வாமித்ரர் அந்த மதுரமான வார்த்தையை சொன்னார், ராமான்னு  சொன்னார், அப்பறம் மந்த்ரோபதேஸம் பண்ணார்ன்னு, இந்த கட்டத்துல, இந்த ராமேதி மதுராம் வாணீம்ங்கிறத நெனச்சு, நாமும் நெறய ராம நாம ஜபம் பண்ணி, பேரின்பத்தை அடைவோம்.

ராமேதி மதுராம் வாணீம் (6 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

One reply on “ராமேதி மதுராம் வாணீம்; ஸீதேதி மதுராம் வாணீம்”

ராம நாமாவுக்கு மிஞ்சின மந்திரம் இல்லைன்னு எல்லாரும் சொல்வா ! எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், மடி ஆசாரம் பார்க்காமல் ஜெபிக்க முடியற ஒரே மந்திரம் இதுதான் !
நேரம் காலம் அற்ற மந்திரம் இது !
பக்த ராமதாசர் சிறையில்.இருந்த 12 ஆண்டுகள் உணவு உறக்கம் இன்றி, ஜல பானம்.இல்லாமல் ராம ஜெபம்.செய்தார். தான் சுல்தானுக்கு ராமர் கோவில்.கட்ட கஜானா பணம்.முழுவதையும் காலி.பண்ண, அந்தக் கடனுக்காக சிறையில்.இருந்த 12 ஆண்டுகளும் ராம ஜெபத்தில் கழித்தார்!
ராம லட்சுமணர் சுல்தான் அந்தப்புரத்தில் நேராகத் தோன்றி அத்தனை கடனையும் பொன்னாகத் திருப்பியது மெய் சிலிர்க்கும் சம்பவம் !
பக்தனுக்காக , நாம ஜெபத்துக்காக பகவான் எதையும் செய்வார் என்பதற்கு ஒர் அத்தாக்ஷி இந்த சம்பவம் !
ஜெய் ஜெய் ராம ராம் !
BaguLa பஞ்சமிக்கி ஏற்ற போஸ்ட் இது, வழக்கம் போல் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.