சூராணாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம்

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல யுத்த காண்டத்துல, அம்பதாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

प्रकृत्या राक्षसा: सर्वे सम्ग्रामे कूटयोधिनः |

शूराणाम् शुद्धभावानाम् भवताम् आर्जवम् बलम् ||

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

அப்படின்னு கருட பகவான் ராம லக்ஷ்மணா கிட்ட சொல்றார். அது என்ன கதைன்னா, யுத்தம் ஆரம்பிக்க போறது, அதுக்கு முன்னாடி, அங்கதனை போய் ராவணன் கிட்ட  ஒரு last warning என்கிற மாதிரி ஒரு தடவை போய் எச்சரிக்கை பண்ணிட்டு வா, அப்படின்னு விபீஷணன் கிட்ட அனுமதி கேட்டுண்டு, அங்கதனை ராமர் ராவணன் கிட்ட  தூது அனுப்புறார். நீ போய் ராவணன்கிட்ட “உனக்கு கடைசியா, உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு கொடுக்கறேன், சீதையை கொண்டுவந்து ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டுக்கோ, இல்லேன்னா, உனக்கு என்ன தைரியம் இருக்கோ, என்ன படை பலமோ, கோட்டை கொத்தளம, எதை நம்பி நீ இருக்கியோ அதை கொண்டு யுத்தம் பண்ணு, நீ வந்து சரணாகதி பண்ணிணேனா, உன்னை உயிரோடு விடுவேன். ஆனால், உன்னை மாதிரி ஒரு தூர்தனுக்கு இந்த ராஜ்யத்தை தரமாட்டேன், விபீஷணனை தான் நான் இலங்கைக்கு ராஜாவாக்குவேன்” அப்படின்னு போய் சொல்லிட்டு வாங்கிறார்.

இந்த வார்த்தைகளை போய் அப்படியே அங்கதன் ராவணன்கிட்ட சொல்றான், ராவணன் பொறுப்பானா! நான் வாலியோட பிள்ளை அங்கதன் வந்துருக்கேன்ன்னு ஆரம்பிக்கிறான், வாலி கிட்ட ஏற்கனவே ராவணன் அடி வாங்கியிருக்கான், வாலியோட ஒரு பிள்ளை வந்து இவ்ளோ தைரியமா பேசறதைப் பாத்த உடனே அவனுக்கு கடும்கோபம் வர்றது, “பிடிங்கோ அவனை!  கொல்லுங்கோ”ங்கறான், இந்த வாட்டி தடுக்கறதுக்கு விபீஷணர் இல்ல, ஒரு நாலு பேர் ராக்ஷஸா வாரா அவனை பிடிக்கறத்துக்கு, அந்த நாலு பேரை, ரெண்டு ரெண்டு பேரை ரெண்டு கஷ்கத்துல தூக்கிக்றான் அங்கதன், ஆகாசத்துல பறந்து, காலால  ராவணணனோட கோட்டையோட கோபுரத்தை ஒரு உதை உதைக்கறான். அந்த கோபுரமே சரிஞ்சு விழுந்துற்றது, இந்த நாலு பேர  ஆகாசத்துலேர்ந்து ககீழே போடறான், நாலு பேரும் வதம் ஆயிடறா. நேரா ராமர் கிட்ட வந்துடுறான், ராமர் கிட்ட வந்து, “இது அசத்து இவனுக்கு, பேசியெல்லாம் ஒண்ணும் புரியாது, யுத்தம் தான்” அப்படின்னு சொல்லிடறான்.

அடுத்த நாள் யுத்தம். இதுக்கு நடுவுல விபீஷணன், அவனுடைய நாலு மந்த்ரிகள், பறவைகளா போய் ஆகாசத்துல நின்னுண்டு, ராவணன் என்ன வ்யூஹம் பண்ணியிருக்கான், அப்படிங்கிறத பாத்துண்டு வந்து சொல்றா. எந்தெந்த கோட்டைல யார் யாரை நிறுத்தியிருக்கான், தெற்கு கோட்டைல இந்திரஜித் படையோட நிக்கறான், வடக்கு கோட்டைல மஹோதரன் நிக்கறான் அப்படின்னு தகவல்லாம் சொல்றா, அதை சொல்லிட்டு விபீஷணன் ராமர் கிட்ட சொல்றான் “ரோஷயே தவாம் நீ பீஷயே” நான் உங்களை பயமுறுத்தறேன் நினச்சிக்காதீங்கோ, உங்களுக்கு ரோஷம் வர்றத்துக்காக சொல்றேன், இந்த ராக்ஷஸர்கள்லாம் ஒவ்வொருத்தரும் “ஆததாயின:” பெண்களையும், குழந்தைகளையும் கூட கொல்றதுக்கு தயங்காத, கொடும் மனசு படைச்சவர்களுக்கு  ” ஆததாயின:” பேரு,   அப்பேற்பட்ட கொடுமையான ராக்ஷஸர்கள், இவளோட யுத்தம் பண்றதுக்கு எப்படி, strategy பண்ணனும்னு யோசிங்கோ”, அப்படின்னு சொன்ன உடனே, ராமர் “எங்க  இந்திரஜித் வருகிறானோ அங்க ஹனுமார் படையோட போகட்டும், எங்க மஹோதரன் வருகிறானோ அங்க சுக்ரீவன் படையோடு போகட்டும் அப்படியெல்லாம் ஒரு  strategy  சொல்றார்.

முன்ன நாலா திக்குலயும் வானரர்களை அனுப்பிச்சு சீதாதேவியை தேடறதுக்கு ஆரம்பிக்கும்போது, சுக்ரீவன் சொல்றான் ராமர் கிட்ட “இது உங்க படைதான், நீங்க என்ன சொன்னாலும் கேட்பா” அப்படின்ன போது, ராமர் சொல்றார் “இல்ல நீதான் அவாளுக்கு ராஜா, உனக்கு என்னோட தேவை தெரியும், சீதாதேவி எங்கேயிருக்கான்னு கண்டுபிடிச்சு தரணும். நீயே அவாளுக்கு உத்தரவு பண்ணு. நேரம் வரும்போது நான் அவளுக்கு உத்தரவு கொடுக்றேன்னு” சொல்றார், இப்போ அந்த நேரம் வந்துருக்கு எப்படி அவா, படைய நடத்தணும். இவாளோட வ்யூஹம் என்னங்கிறதை ராமரே சொல்றார்.

அந்த மாதிரி அந்தந்த படைகள் போய் அங்கங்க நிக்கறது. “ராவணன் எந்த கோட்டை வழிய வெளியில வருகிறானோ அங்கே நானே யுத்தம் பண்றேன்” னு, ராமர் சொல்றார், “இந்த யுத்தத்தில், நான், லக்ஷ்மணன், விபீஷணன் அவனுடைய நாலு மந்த்ரிகள், இந்த ஏழுபேர்மட்டும் மனுஷாளா இருக்கோம், பாக்கி வானரா, கரடிகள் எல்லாம், அவா அவா, அவா அந்த உருவத்திலேயே யுத்தம் பண்ணட்டும்”, அவா எல்லாம் நெனச்ச உருவத்தை எடுக்கக் கூடியவர்கள். ஆனால் அந்த மாதிரி உருவத்தை மாத்த வேண்டாம், “வானரா ஏவ நஸ்ச்சின்னம்” வானரர்களா இருக்கறதே, நமக்கு அடையாளமா இருக்கட்டும், அப்படின்னு ராமர் சொல்றார்.

இதை ஸ்வாமிகள் வேடிக்கையா சொல்வார் ” வானரா ஏவ நஸ்ச்சின்னம் ”  நான் எனக்கு வெச்சிண்டுருக்கேன், என்னால வந்து எல்லாருக்கும், அதாவது ஸ்வாமிகளோட தேவைகளே ரொம்ப கம்மி, ஆனா மனுஷா இந்த காலத்துல ரொம்ப பந்தா விட்றதுனால, அந்தமாதிரி பந்தாவெல்லாம் என்னால விடமுடியாது, நான் வந்து உட்காந்து படிப்பேன், கதை கேட்க வரவாளுக்கு ஏத்த மாதிரியெல்லாம் என்னால என்ன மாத்திக்கமுடியாது,  இல்ல ஒரு ஆத்துல போய் படிக்கறோம், அல்லது ப்ரவசனம் பண்றோம்னா, அவளோட tasteக்கெல்லாம் என்னால என்னை மாத்திக்கமுடியாது, நான் இருக்கற மாதிரி நான் இருக்கேன், “வானரா ஏவ நஸ்ச்சின்னம் ” அவாளுக்கு பிடிச்சுதுன்னா அடுத்த வாட்டி கூப்பிடப் போறா, இல்லன்னா ஏழு நாள் ஸப்தாஹம்னா, மூணு நாள், நாலு நாள்ன்னு எண்ணிண்டு இருக்கப்போறா, அப்படிம்பார். அந்த மாதிரி நிலைமை அவருக்கு வரல, யாரு அவர் கிட்ட  கதை கேட்டாலும் திரும்ப திரும்ப அவரை கூப்டுண்டு இருந்தா, ஆனா அவர் அப்படி வேடிக்கையா சொல்லுவார். உலகத்தோட போக்குக்கெல்லாம் நம்மள மாத்திக்க வேண்டியது இல்லை, அப்ப்டிங்கிறதுக்குக்காக இதைச் சொல்லுவார்.

அந்த மாதிரி வ்யூஹமெல்லாம் அமைச்சு, யுத்தம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, இந்த ஒரு தடவை அங்கதனை தூது அனுப்பிச்சு, அதையும் தீர்மானம் பண்ணிண்டு, அப்பறம் அடுத்த நாள் காத்தால, எல்லா கோட்டைகளையும் தாக்கறா.  அப்போ ஒவ்வொரு கோட்டைகளிலிருந்தும் ராக்ஷஸர்கள் வெளில வரா, துவந்தவ யுத்தம் அப்படின்னு சொல்லி, equal powersல இருக்கறவா எல்லாம்  யுத்தம் பண்ணறா, அப்போ அங்கதன் இந்த இந்திரஜித்தை கடுமையா தாக்கி அவனை தடுமாற பண்ணிடறான், உடனே எல்லாரும் வியக்கறா. இந்திரஜித்து, இந்திரனையே, ஐராவதத்துலேர்ந்து கீழே தள்ளி, சிறை பிடிச்சிண்டு வந்தவன், அப்பேற்பட்ட இந்திரஜித்தையே நீ ஜெயிச்சிட்டயே அப்படின்னு அங்கதனை எல்லாரும் கொண்டாடறா.

அப்போ ராமர் சொல்றார் “இல்லை. இது கொண்டாட வேண்டிய நேரம் இல்லை,  ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம், அந்த இந்திரஜித்துக்கு நிறைய மாயை தெரியும்” அப்படின்னு சொல்லிண்டு இருக்கறார். அந்த இந்திரஜித்துக்கு மறைஞ்சிருந்து அடிக்க தெரியும்,  அவன் ஏதோ ஒரு யாகம் பண்ணுவான், அந்த மாதிரி மறைஞ்சியிருந்து, எல்லார் மேலயும் அம்பு போடறான். எல்லாரும் தவிக்கறா, எல்லா பக்கமும் பாக்கறா,

ஏதோ சத்தம் தான் கேட்கறது, எங்க இருக்கான்னு தெரியல, அவன் ஆகாசத்துல, மேகங்களுக்கு நடுவுல மறைஞ்சிருந்து தேர்ல அங்க இங்க போயி, அம்புகளை மழையாட்டம் கொட்டறான். ராமலக்ஷ்மணா மேல, நாக பாஸத்தை போட்டுடறான். கடுமையான, விஷம் கொண்ட நாகங்கள், ராமரையும், லக்ஷ்மணனையும் சுத்திண்டுடறது. அவா ரெண்டு பேரும் கீழ விழுந்துடறா, பின்னாடி, லக்ஷ்மணன், இந்திரஜித் கூட யுத்தம் பண்ணும்போது, அவன் நாகபாஸத்தைப் போடறான், அவா நேர நேர யுத்தம் பண்ணும்போது, லக்ஷ்மணர், கருட அஸ்த்ரத்தை விட்டு அதை முறிச்சுடறார், இங்க, அவாளுக்கு கண்ணுக்குத் தெரியலை, அதனால அந்த நாகங்கள் எல்லாம் இவாளை கட்டிடறது. அதனால அவா கீழ விழுந்துடறா, மயக்கமா விழுந்துடறா, மூச்சுக்கூட இல்ல, அதனால எல்லாரும் பயப்படறா.

அந்த நேரத்துல, இந்திரஜித் போயி சொல்றான், ராம லக்ஷ்மணா கதை எல்லாம்  முடிஞ்சிடுத்து, அப்பாவை நிம்மதியா இருக்க சொல்லுங்கோ, அப்படீன்னு, ராவணனுக்கு ஒரே குஷி. ஊரெல்லாம் பெரிய உத்சாகமா கொண்டாடறான்.

இதுக்கு நடுவுல, அவனோட குறுக்கு புத்தி, சீதா தேவியை புஷ்பக விமானத்துல அழைச்சுண்டு போயி, காண்பிங்கோ, இந்த ராமலக்ஷ்மணாளோட நிலைமையை, அதை பார்த்தாவது, புத்தி மாறி அவ என் கிட்ட வருவா அப்டீங்கறான். அந்த மாதிரி, திரிஜடை, சீதையை கூட்டிண்டு போயி காண்பிக்கும் போது, சீதை புலம்பி அழறா. பெரியவா எல்லாம் எவ்வளவு ஆஸிர்வாதம் பண்ணியிருக்காளே, நீ தீர்க்க ஸுமங்கலியா பிள்ளைகள் பெற்று, சக்ரவர்த்தினியா இருப்பேன்னு,  சொன்னாளே, இப்படி ஆயிடுத்தே,  அவா சொன்ன வார்த்தை எல்லாம் பொய்யாயிடுத்தே, அப்படீங்கறா. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார். “அந்த மாதிரி ரிஷிகள் சொன்ன வார்த்தை பொய்யாகலை. ஆகாது” அப்படீன்னு ஸ்வாமிகளுக்கு, தர்மம் தோத்துதுங்கிற பேச்சை கூட அவரால பொறுக்க முடியாது. அது மாதிரி, “ஞானின: அன்ருதவாதின:” “ஞானிகள் சொன்ன வார்த்தை பொய்யாயிடுத்துன்னு, சீதை புலம்பறா. ஆனா, நமக்குத் தெரியும், அது, பொய்யாகல”, அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார். அப்ப த்ரிஜடை சமாதனப் படுத்தறா. “இல்லை, அவா இப்ப அவா மயக்கமாதான் இருக்கா.உயிர் போகல. அவா, உயிர் போயிடுத்துன்னா,  உன்னை, இந்த புஷ்பக விமானம், ஏத்துக்காது. உனக்கு, தீட்டு, வந்துடும். அந்த மாதிரி, அர்த்ததுல  சொல்றா. அப்புறம், சீதை அழுதுண்டே போறா.

ராமருக்கு, ஒரு நிமிஷம் தெளிவு ஏற்பட்டு கண்ணைத் திறந்து பார்க்கறார். இந்த லக்ஷ்மணன், இறந்து கிடக்கறான்னு, நினைச்சு, ரொம்ப புலம்பறார். “ஹே, லக்ஷ்மணா, நீ இல்லாம, எனக்கு என்ன இருக்கு? நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேசமாட்டியே”, அப்படீன்னு, சொல்றார். எல்லாரும், லக்ஷ்மனதான், கோபக்காரன். அப்படீன்னு, கதை சொல்றவா சொல்லுவா. ராமர், சொல்றார். “நீ ஒரு வார்த்தை கூட கடுமையான வார்த்தை பேச மாட்டியே”, அப்பட்டீன்னு, லக்ஷ்மணனுக்கு ராமர் கிட்ட யாராவது தப்பா நடந்துண்டா அவன் கோச்சுப்பான், மத்தபடி அவன் ரொம்பவே friendly. “ஸௌமித்ரி: மித்ர நந்தன” அப்படீன்னு அடிக்கடி வரும். அவனுடைய, friendsக்கெல்லாம் ரொம்ப பிடிச்சவன். அப்படி இனிமையா பேசினா தானே பிடிச்சவனா இருக்க முடியும். எப்பவுமே லக்ஷ்மணன் இனிமையா பேசுவான்னு தெரியறது. இப்படி அந்த லக்ஷ்மணன் இறந்து கிடப்பதை பார்த்து, ராமர், புலம்பி, சுக்ரீவன்கிட்ட, விபீஷ்ணன்கிட்ட எல்லாம், “யுத்தம் எல்லாம் முடிஞ்சு போயிடுத்தப்பா, நான் என்ன பண்றது, சுக்ரீவா நீ திரும்பி போய்க்கோ”, என்கிறார். ஹனுமாருடைய, பிரபாவத்தையும், ஜாம்பவானுடைய வீரத்தையும், எல்லாம் புகழ்ந்து, அவாளுக்கெல்லாம் நன்றி சொல்லி, விபீஷணன் கிட்ட “நான் உனக்கு promise பண்ணிணேன், என்னால, உன்னை இலங்கைக்கு, ராஜாவா ஆக்க முடியல”,  அப்படீனெல்லாம் சொல்றார். அந்த மாதிரி நிலைமைகள் வரும்னு அப்டீங்கிறது, தெரியறது.

ஸ்வாமிகளே, அவருடைய, 1950க்கு சென்னை வந்தார். வந்ததுல இருந்து அவருக்கு கடன்தான். வட்டி, வட்டிக்கு வட்டி, 1986 வரைக்கும் பணத்துக்கு கஷ்டப் பட்டுருக்கார். அப்போ ரொம்ப தாங்க முடியாத கஷ்டம் இருந்த போது, அவரை சுத்தி இருந்த நாலு பேர்கிட்ட, “நீங்க எல்லாம் என்னோட சேர்ந்து கஷ்டப் படாதிங்கோ, நான் சொல்லி கொடுத்த பஜனத்தை அவாவா பண்ணிண்டு இருங்கோ. இங்கவரணும் என்கிறதில்லை”, அப்படீன்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு, பகவான் அவரை சோதனை பண்ணி இருக்கார். அந்த மாதிரி இங்க ராமருக்கு கடுமையான சோதனை.

அப்படி எல்லாரும், தவிக்கும் போது கருட பகவான் வரார். கருட பகவான், வந்த உடனே, அந்த பாம்புகள் எல்லாம் ஓடிப் போயிடறது. கருட பகவான், இவா ரெண்டு பேரையும் தடவி கொடுத்த உடனே, இவா ரெண்டு பேரும் முன்ன விட, ரெண்டு மடங்கு வீரியமும், பலமும், தேஜஸும் இவாளுக்கு வந்துடறது, “நீங்க யாரு”ன்னு, ராமர் கேட்கறார். “நான் யாருங்கிறதை பத்தி நீங்க ஆவல் படவேண்டாம், நான் யாருங்கிறது, பின்னாடி தெரியும்”, அதாவது, இராவணன் வதம் ஆன பின்ன தெரியும், அதாவது தேவர்கள் எல்லாம், வந்த போது ராமர், “ஆத்மானாம் மானுஷம் மன்யே” அப்படீன்னு, ராமர் சொல்றார். “நான் மனுஷன், தசரத குமாரன், என்றுதான் நான் என்னை அறிந்து கொண்டிருக்கிறேன்” அப்படீன்னு ராமர் சொன்ன போது பிரம்மா, “நீங்க சாக்ஷாத் விஷ்ணு பகவான்” அப்படீன்னு சொல்றா, அப்போ கருடன் யாருன்னு தெரியும். அப்படீங்கிகிற meaning ல, “நான் யாருன்னு உங்களுக்குப் பின்னாடி தெரியும், நீங்க இந்த யுத்தத்தை பண்ணுங்கோ. நீங்கள், வெற்றி பெறுவீர்கள், அப்படீன்னு அந்த கருட பகவான் சொல்லிட்டு, அந்த இடத்துல இந்த ஒரு ஸ்லோகம் வர்றது.

ப்ரக்ருத்யா ராக்ஷஸா சர்வே ஸங்க்ராமே கூடயோதின: |

சூரானாம் சுத்த பாவானாம் பவதாம் ஆர்ஜவம் பலம் ||

இயல்பிலேயே, ராக்ஷதர்கள், சூழ்ச்சி எல்லாம் பண்ணுவா. நீங்கள், சுத்த மனசும், ஆர்ஜவம், அப்படீங்கிற வார்த்தைக்கு, ருஜூத் தன்மை, அதாவது, மனோ, வாக், காயத்துனால, நேர்மையா இருக்கறதுக்கு, ஆர்ஜவம்னு, பேரு. அந்த ஆர்ஜவம்தான் உங்க பலம், அப்படீன்னு சொல்றார்.

அந்த மாதிரி இந்த நேர்மையா இருக்கறதுக்கு, ஒரு power இருக்கு. மஹா பெரியவா, சொன்ன வார்த்தை எல்லாம் பலிச்சுதுன்னா, எப்பவும் ஸத்யமா இருக்கறது, அப்படீன்னு வெச்சுண்டா, அவா பேசறது எல்லாம் ஸத்யமாயிடறது. மஹான்களுக்கு, அவா சொல்ற வார்த்தைகள் பின்னாடி, ஸத்யம் வந்து ஒட்டிக்கறது. அவா சொல்றது ஸத்யமாயிடறது. அது எப்படீன்னா, அவா எப்பவுமே, ஸத்யம்தான் பேசணும், மனோ, வாக், காயத்துனால, ஆர்ஜவமா இருக்கணும், அப்படீன்னு, ரொம்ப ரொம்ப careful ஆ இருக்கா.

சிவன் சார், கூட நேர்மைதான் தெய்வீகம், அப்படீன்னு, அதை ரொம்ப முக்யமா சொல்றார். ஆசார அனுஷ்டானங்களோ, பிரம்மசர்யமோ, அதெல்லாம், தெய்வீகம் கிடையாது. நேர்மை,அடக்கமா, ஒரு தெய்வத்து கிட்ட பக்தி, இது போறும், அப்டீங்கிறதை அவர் வாழ்ந்தும் காண்பிச்சார், அவருடைய புஸ்தகத்துலயும் ரொம்ப அறுதியிட்டு எழுதியும் இருக்கார்.

இப்படி, இந்த ராம லக்ஷ்மணா, அந்த ஆர்ஜவத்தோட இருந்ததுனால, கருட பகவான் வந்து, அவாளை விடுவிக்கறார். கருட பகவான் சொல்றார், “இந்த நாக பாஸத்துல இருந்து, தேவர்களோ, ரிஷிகளோ கூட உங்களை விடுவிக்க முடியாது, நான் இதை கேள்வி பட்ட உடனே ஓடோடி வந்தேன்”, அப்படீங்கறார். ஆனா அதுக்குள்ளே இங்கே எல்லாரும் அழுதாச்சு. கஷ்ட காலத்துல இருக்கும் போது, நாம கடவுளுக்கு கண் இல்லயான்னு, நினைக்கறோம், அழுது புலம்பிடறோம், ஆனா பகவானோட அனுக்ரஹம் வெகு விரைவில் வரப்போறது. ஆனா நம்மால, அதுவரை, தாங்க முடியலை, ரொம்ப வருத்தப்படறோம், மஹான்கள் பொறுமையா இருக்கா. திதீக்ஷா அப்படீன்னு சொல்லி, இது ஏதோ ஒரு வினையினால வந்தது, சரியா போயிடும், அப்படீன்னு, அதை பத்தி, நினைக்காம அவா “நாம பண்ண வேண்டிய கடமை என்ன, அதுல நேர்மையா இருக்கோமா, அது பாபம் கலக்காமல், தர்மமா இருக்கா?”, அப்படீங்கிறதை மட்டும் அவா பாத்துண்டு போறா. அந்த மாதிரி இன்னிக்கு, அந்த நாகபாஸத்துல இருந்து, ராமலக்ஷ்மணா கருடனோட உதவியால விடுபட்டதை பார்த்தோம். ஆர்ஜவம்தான்,

याथार्त्यात् न हि भुवने किमपि असाध्यम् “யதார்த்தமா இருந்தா,  மூவுலகத்துலயும், எதுவுமே அஸாத்யம் கிடையாது. எது வேணாலும் நடக்கும்” அப்படீன்னு ஸ்ரீமத் பாகவதத்துல ஒரு வரி, பாகவதம் எனக்கு தெரியாது, இந்த ஒரு வரி, ஸ்வாமிகள் எனக்கு எழுதிக் கொடுத்தார். அப்படி அந்த யதார்த்தமா இருக்கறதுங்கிறது ரொம்ப முக்யமான குணம் என்று இது இந்த காட்சியில இருந்து தெரியறது.

பவதாம் ஆர்ஜவம் பலம் (15 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Comments (1)

  • venugopal K

    ஸ்வாமிகளே, அவருடைய, 1950க்கு சென்னை வந்தார். வந்ததுல இருந்து அவருக்கு கடன்தான். வட்டி, வட்டிக்கு வட்டி, 1986 வரைக்கும் பணத்துக்கு கஷ்டப் பட்டுருக்கார். அப்போ ரொம்ப தாங்க முடியாத கஷ்டம் இருந்த போது, அவரை சுத்தி இருந்த நாலு பேர்கிட்ட, “நீங்க எல்லாம் என்னோட சேர்ந்து கஷ்டப் படாதிங்கோ, நான் சொல்லி கொடுத்த பஜனத்தை அவாவா பண்ணிண்டு இருங்கோ. இங்கவரணும் என்கிறதில்லை”, அப்படீன்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு, பகவான் அவரை சோதனை பண்ணி இருக்கார். அந்த மாதிரி இங்க ராமருக்கு கடுமையான சோதனை.

    “ஸ்வாமிகளுக்கே இப்படின்னா நானெல்லாம் எம்மாத்திரம். ஆனா அவளோட “அவ்யாஜ”கருணையால் நன்னா இருக்கேன்..இருக்கோம்..சில பதிவுகளுக்கு முன் ஸ்வாமிகள் ப்ரவசன ஒலி நாடா இருக்கு என சொல்லி இருந்தீர்கள். அது எனக்கு கிடைக்குமா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.