Categories
Ramayana One Slokam ERC

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது


இன்னைக்கு வால்மீகி ராமாயணத்துல யுத்தகாண்டத்தில் இருந்து நாற்பத்தி ஒண்ணாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்.

तव भार्यापहर्तारं दृष्ट्वा राघव रावणम् |

मर्षयामि कथम् वीर जानन्विक्रममात्मनः ||

தவ பார்யாபஹர்த்தாரம் திருஷ்ட்வா ராகவ ராவணம் |

மர்ஷயாமி கதம் வீர ஜானன் பௌருஷம் ஆத்மனஹ ||

அப்படின்னு சுக்ரீவன் ராமரை பார்த்து சொல்றான்.

இது கதை என்னென்னா, ராமர் நளனை கொண்டு பாலம் கட்டி, லங்கைக்கு வந்து சேர்ந்துடறார். பெரிய வானரப்படை. வெள்ளம் சேனை அப்படிம்பா.  அதாவது ஒண்ணு பக்கத்துல மூன்று zero போட்ட ஆயிரம், அந்த மாதிரி ஆறு zero போட்ட, ஒன்பது zero போட்ட அப்படி ஒண்ணுனுக்கும் ஒரு வார்த்தை இருக்கு, பத்மம், மஹாபத்மம், ஓகம், மஹோகம்,  அப்படின்னு அந்த வார்த்தைகள் எல்லாம் எல்லாம் சொல்றா. அந்த மாதிரி. பெரிய  வெள்ளம் சேனை அழைச்சிண்டு, வானரப் படையை அழைச்சிண்டு ராமர் வந்துடறார்.

அந்த படை வந்து சேர்ந்த உடனே, ராவணன் ஒற்றர்களை அனுப்பறான். ரெண்டு வாட்டி வானரா மாதிரி வேஷம் போட்டு ஒற்றர்கள் போறா, ரெண்டு வாட்டியும் அவாளை விபீஷணர் பிடிச்சுடறார். ராமர் கிட்ட கொண்டு நிறுத்தறார். ராமர் “வேண்டாம். ஒற்றர்களை கொல்ல வேண்டாம், விட்டுடு” அப்படிங்கறார். ஒரு வாட்டி அந்த ஒற்றர்கள் கிட்டயே ராமர் சொல்றார், “நீங்க என்ன வேணும்னாலும் பாத்துகோங்கோ, என்ன சேனை  இருக்கு, யார் யார் சேனாதிபதிகள், தலைவர்கள், வேணும்னா விபீஷ்ணன் கிட்ட கூட  கேட்டுக்கோங்கோ, போய் உங்க ராவணன் கிட்ட சொல்லுங்கோ, பேடியாட்டும் என் மனைவியை தூக்கிண்டு வந்தான், வீரனா இருந்தா யுத்தம் பண்ண சொல்லுங்கோ” அப்படின்னு சொல்றார். இதை அவா போய் அப்படியே ராவணன்கிட்ட சொல்றா, ராவணனுக்கு  கோபம் வறது.

இந்த வானர வீரர்கள் ஜாம்பவான், ஹனுமார் நளன், நீலன், அங்கதன் இவளோட பலத்தை எல்லாம் ரொம்ப புகழ்ந்து சொல்றா அவா. அப்பறம் என்ன சொல்லி முடிக்கிறான்னா, “எந்த பக்கத்தில் ராமரும், லக்ஷ்மணரும், விபீஷணனும், சுக்ரீவனனும் இருக்காளோ, அந்த சேனையை ஜெயிக்கவே முடியாது, நாலு பேர்கூட வேண்டாம், இந்த ராமர் ஒருத்தரே போதும், அவருடைய தர்மபலத்தினால அவா ஜெயிச்சிடுவா, நீ சீதையை ஒப்படைச்சு சமாதானம் பேசிக்கோ, இல்லைன்னா யுத்தம் பண்ணு”, அப்படிங்கறா அந்த ஒற்றர்கள். இவனுக்கு கோபம் வறது, “நீங்கஎல்லாம் என்ன, ராஜ்ய சாஸ்த்ரம் எல்லாம் ஒண்ணுமே படிக்கலயா, ஒரு காட்டுத் தீயில் காய்ஞ்ச மரம்கூட பிழைக்குமா இருக்கும், ராஜாவோட கோபத்துக்கு ஆளான பிழைக்க முடியாது. என் முன்னாடி வந்து எதிரியை புகழ்ந்து பேசறேளே, உங்களை கொன்று விடுவேன், எதோ பழைய  நன்றி விஸ்வாசத்துனால நான் உங்களை உயிரோடு விடறேன். எனக்கு பிடிக்காதவாள போய்ட்டேள், அதனாலயே நீங்க செத்த மாதிரிதான், அதுவே உங்களுக்கு மரண தண்டனை, ஓடிப்போங்கோ” அப்படின்னு சொல்றான். அந்த மாதிரி அவன் பேசற கர்வ பேச்சு, அது ஒரு, படிக்கறதுக்கு ஸ்வாரஸ்யமா இருக்கும்.

அப்புறம் யுத்தத்துக்கு ஏற்பாடு பண்றான், இந்த ஒரு சுவேல மலைன்னு ஒரு மலைல, அன்னைக்கு ராத்திரி ராமரும் எல்லா வானராலும் rest எடுத்துக்குறா. இந்த மலை மேலிருந்து கார்த்தால விடிஞ்ச உடனே, ராமர் நின்னுண்டு லங்கையை பார்க்கறார். லங்கையும் அதோட கோட்டையையும்  காடுகளையும் அதெல்லாம் பார்க்கறார், சுக்ரீவன் கூட இருக்கான். அங்கே கோட்டையில் இருந்து, ஒரு பெரிய உப்பரிகைல ஏறிண்டு  ராவணன் பார்க்கறான். அந்த ராவணன் என்னமா இருக்கான்னா ஒரு பெரிய சந்திரனை போல பெரிய குடை, நல்ல ரத்தன ஹாரங்கள் எல்லாம் போட்டுண்டு இருக்கான், மேகம் போல ஜொலிக்கறான், அப்படி அந்த ராவணனுடைய அழகையும், அவனோட தேஜசையும் வர்ணிக்கிறார். அப்பேற்பட்ட ராவணன்.

அவன் கர்வமா பார்வையிடறது எல்லாம் பார்த்த உடனே, இங்க சுக்ரீவனனுக்கு கடும் கோபம் வர்றது. அவன் ஒரே தாவா போய் ராவணன் முன்னாடி போய் குதிக்கிறான், குதிச்சிட்டு “ஹே ராவணா, நான் யார் தெரியுமா?

लोकनाथस्य रामस्य सखा दासोऽस्मि राक्षस |

न मया मोक्ष्यसेद्य त्वं पार्थिवेन्द्रस्य तेजसा ||

‘லோக நாதஸ்ய ராமஸ்ய ஸகா தாஸோஸ்மி ராக்ஷச’, நான் லோகநாதரான ராமருடைய, ஸகா, அவர் ஸகான்னு சொல்றார், நான் தாஸன்னு நினைக்கிறேன் என்னை, ‘ந மயா மோக்ஷசேத்யத்வம் பார்த்திவேந்திரஸ்ய தேஜஸா’, ராமரோட தேஜஸினால, நான் இன்னைக்கு உன்ன கொல்ல போறேன், என் கிட்ட இருந்து நீ தப்ப முடியாது” அப்படின்னு சொல்லி பாயறான், ராவணனுடைய மகுடத்தை கிழே தள்ளறான்.

சுக்ரீவனனுக்கும் ராவணனுக்கும் மல்யுத்தம் நடக்கறது, ரெண்டு பெரும் சிங்கங்கள் போலவும், புலிகள் போலவும், வானரத்தை போலவும், கரடியை போலவும், வாரணத்தை போலவும், யானைகளை போலவும் மோதிண்டு, ஒருத்தரை கிழிச்சிக்கிறா. ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கறா. பலவிதமான யுத்த techniques எல்லாம் வர்றது அந்த ஸர்கத்துல, நமக்கு இப்போ KungFu, karate இதான் தெரியறது, அந்த மாதிரி இந்திய மரபான யுத்தங்கள் எல்லாம் இந்த ஸர்க்கத்துல வர்ணிச்சு இருக்கார். அப்படி ரெண்டு பேரும் கடுமையா யுத்தம் பண்ணிக்கிறா, ரெண்டு பேரும் equal strength, ஒருத்தரை ஒருத்தர் ஜெயிக்க முடியல, ரெண்டு பேரும் யுத்தம் பண்ணிண்டே இருக்கா. அப்போ ராவணன் என்ன பன்றான், மாயைனால மறைஞ்சு இருந்து சுக்ரீவனை அடிக்கிறான். உடனே சுக்ரீவன் அங்கு இருந்து, நேரா குதிச்சு ராமர் கிட்ட வந்துடறான்.

உடனே ராமர் சொல்றார் “ஹே ஸுக்ரீவா! நீ என்ன இப்படி ஸாஹச கார்யம் பண்ற, நீ இந்த சேனைக்கு ராஜா, நீ இந்த மாதிரி என்னோட கலந்து ஆலோசிக்காம, யுத்தம் பண்ண போலாமா, உனக்கு ஒண்ணு ஆச்சுன்னா அப்பறம் எனக்கு என்ன இருக்கு? எவ்ளோ தூரம் சொல்றார்னா “த்வயி கிஞ்சித் ஸமாபன்னே” உனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, ‘கிம் கார்யம் சீதையா மம”, சீதைனால என்ன ஆகவேண்டி இருக்கு, “பரதேனே  மஹாபாஹோ, லக்ஷ்மனேன யவியஸா, ஷத்ருக்னேன ச ஷத்ருக்னேன ஸ்வசரீரே ந வா புனஹ’ லக்ஷ்மனனோ, ஷத்ருக்னனோ, பாரதனோ  என் உடம்பே வெச்சிண்டே எனக்கு என்ன இருக்கு? நான் என்ன தீர்மானம் பண்ணி இருந்தேன்னா, நீ திரும்பி வராம போய்ட்டேனா, நான் ராவணனை வதம் பண்ணி விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக்கிட்டு, நெருப்புல விழலாம்னு இருந்தேன்” அப்படின்னு அவ்வளோதுரம், தன்னுடைய friendshipபோட strengthஅ காண்பிக்கிறா மாதிரி, ராமர் பேசறார். “அந்த மாதிரி ஸாஹஸ கார்யங்கள்  இனிமே பண்ணாதபா. நீ ராஜா, நீ என்னோட உயிர்” அப்படின்னு சொல்றார்.

तव भार्यापहर्तारं दृष्ट्वा राघव रावणम् |

मर्षयामि कथम् वीर जानन्विक्रममात्मनः ||

அப்போ இந்த ஸ்லோகத்தை சுக்ரீவன் சொல்றான் “தவ பார்யாபஹர்த்தாரம் திருஷ்ட்வா ராவணம் – உன்னுடைய மனைவியை திருடின இந்த ராவணன் என்று, அவனை பார்த்த உடனே எனக்கு கோபம் தாங்கலை, மர்ஷயாமி கதம் வீர – நான் எப்படி அதை பொறுத்துப்பேன் ஜானன் பௌருஷம் ஆத்மனஹ – என்னுடைய பலமும் எனக்கு தெரியும்மில்லையா. அதனால போய் ரெண்டு அடி போட்டு வருவோம், ரெண்டு தட்டு தட்டுவோம்னுதான் போனேன், நானும் வாலி தம்பி தானே” அப்டிங்கறான். வாலி ராவணனை வால்ல கட்டி உலகமெல்லாம் உருட்டிண்டு போனான், “அதனால என் வீரமும் எனக்கு தெரியும், ரெண்டு அடி அடிக்கலாம்ன்னுதான் போனேன் அப்படின்னு சொல்றான். इत्येवंवादिनं वीरमभिनन्द्य च राघवः ‘இத்யேவம் வாதினம் வீரம் அபிநந்த்ய ஸ ராகவஹ’ ராமர் “very good very good, சபாஷ் சபாஷ் அப்படின்னு சுக்ரீவனை பாராட்டறார், முதலில் “ஏன்பா இப்படி பண்ணிண?”ன்னு கேட்கறார், கண்டிக்கிற மாதிரி. இவன் அந்த மாதிரி வீர வசனம் பேசின உடனே, “ரொம்ப நல்லது. சரி, அடுத்த யுத்த காரியத்தை பாக்கலாம்”னு, அப்பறம் அங்கதனை தூது அனுப்புறார்.

இந்த இடத்துல, முக்கால்வாசி பேர், சுக்ரீவனோட இந்த பௌருஷத்தையும், பராக்ரமத்தையும், இந்த ப்ரபாவத்தையும் புரிஞ்சிக்கமாட்டா. “ஏன் நீ கேட்காம ராவணனோட போய் யுத்தத்துக்கு போன?”, அப்படின்னு ராமர் கண்டிச்சார் எங்கிறதோட விட்டுடுவா. அப்பறம் இவன் சொன்ன இந்த ஸ்லோகம், ரொம்ப முக்கியம் ஏன்னா, ஒருத்தர் வீரத்தோடு ஒரு முயற்சி பண்றானா, அதை வந்து encourage பண்ணனும், எப்படி ராமர் அதை பாராட்டினரோ அது மாதிரி. எல்லாராலயும் stretch பண்ணி extraordinary things பண்ண முடியாது, சில பேர் தான் அவாளுக்கு அந்த natural talentம் இருந்து, நல்ல ஒரு குரு கிடைச்சு, அந்த சுத்தி இருக்குற inspiration எல்லாம் சேர்ந்து, ஒரு timeல stretch பண்ணி அவா அந்த பெரிய கார்யங்களை achieve பண்றா. அப்படி பண்ணும்போது நம்ம அவாள  பயமுறுத்தாம, அவாள பாராட்டணும். எப்படி ராமர் பாராட்டறாரோ து மாதிரி. அவனுக்கு சுக்ரீவனுக்கு தெரியறது, “என்னால ராவணனோட ஓரளவு யுத்தம் பண்ண முடியும், அங்க போனா உயிரோட திரும்ப வருவேன்னு தெரியும், அதனாலதான் போனேன்” அப்படிங்கறான் அவன்.  இப்படி இவன்  பண்ணதுனால,  சுக்ரீவன் வீரத்தை காண்பிச்சதுனால, அவனுடைய படைக்கே உத்சாகம். “ராஜாவே உயிரை மதிக்காம ராவணனை போய் ஒரு தட்டு தட்டிட்டு வந்தாரப்பா” அப்படின்னு பேச மாட்டார்களா  படைவீரர்கள்! அந்த உத்சாகத்தையும் கொடுத்தான். அந்த மாதிரி, ஆனா நான் சொல்றது இந்த காலத்துல, ரொம்ப குழந்தைலளை ஸ்ரமப்படுத்துறா, அஞ்சு வயசு குழந்தைய கால்ல அடிச்சு, skatingல first வரணும், அப்படின்னு கொடுமைப்படுத்தறா, தன்னுடைய ஆசைகளை எல்லாம் திணிச்சு ஸ்ரமப்படுத்துறா, நான் அப்படி பண்ணனும் சொல்லலை. ஒருத்தருக்கு natural talentம் இருந்து,  அவளே self  motivatedஅ extraordinaryஅ ஒண்ணு பண்ணனும்னா, அப்போ “இல்ல இல்ல ஆத்துலேருந்த வெளியில போகக்கூடாது, நீ வந்து correct ஆக வேளைக்கு தூங்கணும், சாப்படணும் அவ்வளவு தான், அப்படின்னு பண்ணாம, அவா அவளுடைய talentல கொஞ்சம் stretch பண்ணி ஒரு achieve பண்ணுவான்னா, அதை encourage பண்ணனும் அப்படின்னு நான் இதுல இருந்து புரிஞ்சிண்டேன் இந்த காட்சில் இருந்து.

ஸ்வாமிகளும் அவருக்கு உடம்புல ச்ரமங்கள் இருந்தாலும், அவர் ராமாயணம் படிப்பார். “நீங்க எதுக்கு இவளோ ச்ரமபடுத்திக்கிறேள், இத்தனை வருஷம் படிச்சாச்சு, ராமாயணம் படிக்காததா நீங்க, பாகவதம் படிக்காததா போறும்” பா, “இல்லை என்னால முடிஞ்ச வரைக்கும் பண்றேன்”, அப்படின்னு அவர் பண்ணி,ரொம்ப அதிஆச்சர்யமா ஒரு நாளைக்கு மூணு சுந்தரகாண்ட ஆவர்த்தியெல்லாம் பண்ணிடுவார் சில சமயம். சில பேர் அதை encourage பண்ணுவா, ஆஹா ரொம்ப மஹான், நீங்க தான் பண்ண முடியும், அப்படின்னு சொல்ல தெரிஞ்சவா கொஞ்ச பேர். பாக்கி பேர் எல்லாம் “என்னமோ  ரொம்ப உடம்பை வருத்திக்கிறார்”, அப்படின்னு சொல்லுவாளே தவிர, இந்த ராமன் சுக்ரீவனை புகழ்ந்த மாதிரி, “ரொம்ப சபாஷ் நீ உன் வீரத்தை நிரூபிச்ச” என்று சொல்ற மாதிரி சொல்ல மாட்டா. அந்த மாதிரி ஸ்வாமிகள் மஹாபெரியவாளால inspireஆகி கிருஹஸ்தரா இருந்தாலும் அபார கார்யங்கள் பண்ணிணதால் தான் அவர் மஹான் ஆனார்.

அந்த மாதிரி  நமக்கு constraints இருக்கத் தான் செய்யும், இருந்தாலும் உலக விஷயங்கள்ல வீரமா ஒண்ணு பண்றத்துக்காகவோ, பகவானுக்காக ஒரு தியாகம் பண்றதுக்காகவோ முடிஞ்ச முயற்சி பண்ணிட்டே இருக்கணும், அப்படின்னு இந்த காட்சில் இருந்து தெரிஞ்சிண்டேன்.

சுக்ரீவனுடைய வீர பராக்ரமம் (11 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

2 replies on “கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது”

ரொம்ப அழகான விரிவான தக்க வார்த்தை ப்ரயோகங்களுடன் கூடிய ப்ரவசனம் ! ஜெய் ஸ்ரீராம்

எந்த விதமான தடை கல்லையும் தயக்கம் இன்றி தகர்த்து, தொடர்ந்து ஓர் குறிப்பிட்ட இலக்குடன் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது.
இராமர் சுக்ரீவன் நட்பின் ஆழம் விளங்குகிறது. அற்புதமான விரிவுரை.
ஜெய் ஸ்ரீ ராம் 🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.