Categories
Ramayana One Slokam ERC

சீதாதேவி ராமபிரானிடம் இப்படி பேசலாமா?

                                                   Art by Keshav Venkataraghavan

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம் அயோத்தியா காண்டத்துல முப்பதாவது சர்க்கத்துல மூணாவது ஸ்லோகம்.

किं त्वाऽमन्यत वैदेहः पिता मे मिथिलाधिपः ।

राम जामातरं प्राप्य स्त्रियं पुरुषविग्रहम् ।।

கிம் த்வாம் அன்யத வைதேஹ: பிதா மே  மிதிலாதிப: |

ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் || அப்படின்னு ஒரு ஸ்லோகம். இதுவும்  one of the misinterpreted ஸ்லோகம்ஸ். அதனால  இதை clarify பண்ணலாம் அப்படின்னு இதை எடுத்துண்டேன்.

சீதாதேவி ராமர் கிட்ட சொல்றா “எங்க அப்பா, மிதிலையின் அரசரான ஜனகர்” அப்படிங்கிறதுக்கு வைதேஹர் அப்படின்னு வறது, உங்களை மாப்பிள்ளையாக ஏத்துண்டார் ‘ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ “ஒரு ஸ்த்ரீ ஆண் வேஷம் போட்டுண்டு வந்தது தெரியாம ஏத்துண்டாரோ? அப்படின்னு சொல்றா. இந்த ஸ்லோகம், ஏன் அப்படி சொன்னா சீதை, அப்படிங்கிறதை சொல்றேன்.

அங்க கௌசல்யாதேவி அரண்மனைல அவா அம்மா , மனசால பிரிய முடியாம இருந்தாலும், தன் மகன் ராமன் தர்மத்தைத்தான் நடத்தறான், அவன் காட்டுக்கு போறேன் சொல்றான், என்ற உடனே, மனசு இல்லாம ஆனா வாயால வாழ்த்தி, ராமனை அனுப்பறா. ராமனும் லக்ஷ்மணனும் அங்க இருந்து, தன்னோட அரண்மனைக்கு வரா.

சீதாதேவியை ராமர் பார்க்கறார். சீதாதேவி கள்ளம் இல்லாத மனசு, அந்த முகத்தை பார்த்த உடனே, இவ்வளோ நேரம் ராமர் முகம் மாறலை. இப்ப சீதையை பார்த்த உடனே, முகத்துல ஒரு வாட்டம் வந்துடுத்து. இந்த பெண்ணை பிரிய போறேமே, இவள் தன்னுடைய பிரிவினால கஷ்டபட போறாளே, அப்படிங்கிறதை நெனைச்ச உடனே முகம் வாடறது. அப்போ சீதை  கேட்கறா “ஹே ராம, நீங்க பாட்டாபிஷேகம் பண்ணிண்டு, பின்னாடி குடைபிடிக்க, பரிஜனங்களோட வரப் போறேள், ஆரத்தி எடுக்கலாம்ன்னு நான் காத்துண்டு இருந்தேன். என்னாச்சு ஏன், வருத்தத்தோட வறேள்? என்றும் இல்லாத அளவிற்கு உங்க முகத்தில் வாட்டம் இருக்கிறதே ஏன்?” அப்படின்னு கேட்டாளாம். ஸ்வாமிகள் சொல்லுவார் “நம்ம ஆத்து மாமா மாதிரி, தினம் சாயங்காலம் வந்த உடனே எரிஞ்சு விழுந்தார்ன்னா, இப்படி கேட்க மாட்டா. கல்யாணமாகி இந்த பன்னிரண்டு வருஷம் ஒரு நாள்கூட  ராமரோட  முகத்துல அவ வாட்டத்தை பார்த்தது இல்லை, சிடுசிடுப்பை பார்த்தது இல்லை. அதனால,   “என்றும் இல்லாத அளவிற்கு உங்க முகத்தில் ஏன்  வாட்டம்?”ன்னு அப்படின்னு கேட்கறா அவ, அப்படின்னு வேடிக்கையா சொல்லுவார்.

அப்போ ராமர் சொல்றார் “ஹே சீதே பெருமதிப்பிற்குரிய மஹாராஜா, என் தகப்பனார், என்னை பதினான்கு வருஷங்கள்  காட்டுக்கு போக சொல்லி இருக்கார்,  பரதனுக்கு ராஜ்யத்தை கொடுக்கறார், அதனால நான் காட்டுக்கு போக போறேன், நீ இங்க இருந்ததுண்டு அப்பா அம்மாவுக்கு சிஷ்ரூஷை பண்ணிண்டு, ஜாக்கிரதையா இருந்துக்கோ” அப்படிங்கறார். அதாவது, “பரதன் கிட்ட எந்த obligationகும் போகாதே, (பணக்காரா கிட்ட obligationகு போனா அவா ரசிக்க மாட்டா), பரதன் முன்னாடி போய் என்னை புகழ்ந்து எதுவும் பேசாதே, (ராஜாக்கள் தன்னை புகழறதைத் தான் விரும்புவா, மத்தவாளை புகழறதை விரும்பமாட்டா). பரதன் அப்படி கிடையாது, இருந்தாலும், general ruleஆக ராமர் சொல்றார். ஆனா பரதன் கிட்டயும் சத்ருகனன் கிட்டயும் ரொம்ப அன்பா இரு, உன்னுடைய தம்பி கிட்டயும், பிள்ளை கிட்டயும் எவ்வளோ அன்பா இருப்பியோ அந்த மாதிரி  அன்பாயிருன்னு  வரது. ஆனா அந்த வார்த்தைகளை கொஞ்சம் சேர்த்து பார்த்தா, பிராத்ருபுத்ர: என்றால் “தம்பியினுடைய பிள்ளை கிட்ட  அவ்வளோ அன்பா இருப்பியோ அவ்வளோ  அன்பாயிருன்னு” ஒரு அர்த்தம் சொல்லலாம். பெண்களுக்கு தன்னுடைய சஹோதர்களுடைய கொழந்தைள் மேல  ஒரு தனியான ஒரு பாசம் இருக்கும், அத்தை ஆச்சே.

அந்த மாதிரி எல்லாம் அவர் சொல்றார். சீதாதேவி எல்லாம் கேட்டுக்கறா, அஞ்சு நிமிஷம் பேசாம கேட்டுட்டு, சீதை சொல்றா  “என்ன இது, நீங்க சிரிக்கும்படியா ஏதோ சொல்றேளே, ராம நீ பதினாலு வருஷம் காட்டுக்கு போ, அப்படின்னு தசரத மஹாராஜா கூப்பிட்டு சொன்னார்ன்னா, சீதையும் கூடப் போறான்னு தானே அர்த்தம்” அப்படின்னு சீதை சொல்றா.

இதை வந்து கௌசல்யா தேவி ஏற்கனவே சொல்லிடறா, “ஹே ராம நீ காட்டுக்கு கிளம்பற, நாளைக்கு பொழுது விடிஞ்சா பதினஞ்சாவது வருஷமா இருக்க கூடாதா” அப்படின்னு சொல்றா. “எத்தனை நாள் நான் காத்துண்டு இருப்பேன்”, அப்படின்னு சொல்லும் போது, “நாளைக்கு பொழுது விடிஞ்சா பதினஞ்சாவது வருஷமா இருக்கணும்ன்னு ஆசைப்படறேன் நான். நீயும், என் வது என்னுடைய மாட்டுப்பெண்னும்,  தேர்ல திரும்பி அயோத்திக்குள்ள நுழையிற அந்த காட்சியை பார்க்கறதுக்காகத் தான் உயிரை பிடிச்சிண்டு இருப்பேன்” அப்படிங்கிறா. அப்படி கௌசலை, சீதாதேவி ராமரோட போவா, அப்படிங்கிறதை தெரிஞ்சிண்டு சொல்றா. அப்படி உத்தமான மாட்டுப்பெண், மாமியார்.

அந்த வார்த்தையை சீதை சொல்றா, “எங்கேயாவது ராமர் போகணும்ன்னா, சீதையை கூப்பிட்டு நீயும் ராமரோடு போகணும்ன்னு எனக்கு instructionஆக சொல்ல போறாளா? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணுதானே, உங்களுக்கு சொன்னா எனக்கு சொன்ன மாதிரி தானே. பர்த்தாவுடைய பாக்கியம் தானே பத்தினிக்கும். நீங்க என்னத்துக்கு என்னை வந்து “நீ இங்கயே இரு”ன்னு சொல்றேள். அப்படி நான் தனியா இருப்பேனா, எம பட்டணத்துக்கு சத்யவான் போன போது, பின்னாடி போன சாவித்ரி மாதிரி, நான் எங்கேயானாலும் உங்கள் பின்னாலயே வருவேன்” அப்படின்னு சொல்றா.

அன்னிக்கு ஜனக மகாராஜா, சீதாதேவி கையை எடுத்து, ராமபிரான் கையில் வெச்சு ‘இயம் சீதா மம சுதா, ஸஹ தர்மசரீ தவ | ப்ரதீச்சசைநாம் பத்ரந்தே பாணீன் க்ரிண்ணீஷ்வ பாணினா | பதிவ்ரதா மஹாபாகா சாயேவா அனுகதா ஸதா || இவள் நிழலை போல எங்கும் உன்னை பின்தொடர்வாள், பதிவ்ரதைனு சொன்னாளே, அந்த வார்த்தையை இப்போ  சொல்றா சீதை. “உங்கள தனியா காட்டுக்கு போன்னு சொல்லுவாளா, சீதையோட போறதுனு தான் அர்த்தம் அது” அப்படின்னு சொல்லிடறா அவ, topicயே close பண்ணிடறா.

அப்போ ராமர் “இல்ல சீதா, நீ  என்ன காடுன்னா என்ன விளையாட்டுன்னு நெனைச்சிண்டு இருக்கியா, காட்டுக்கு போனா சிங்கம், புலி எல்லாம் இருக்கும், ராத்திரில தூங்கிண்டு இருக்கும் போது பயங்கரமான கர்ஜனை பண்ணும், நடுங்கி போயிடும் உடம்பெல்லாம், வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்காது, தீடிர் திடீர்னு பெரிய பெரிய பூச்சியெல்லாம் மேல விழும், ஒரு பாதைன்னு ஒண்ணுமே இருக்காது, நாம்ம தான் பாதை பண்ணிண்டு போகணும், ‘துக்கமேவ சதா வனம்’ வனம்ங்கறது ரொம்ப துக்கமான இடம், அது நீ நெனைக்கற மாதிரி இல்ல, ரொம்ப ரொம்ப ஆபத்து, அதனால நீ அங்க வந்து சிரமப் படாதே”ங்கறார்.

இது என்ன அழகு பாருங்கோ, ராமருக்கு மனைவி பக்கத்துல இருந்தா சௌக்யம்தான், அதுவும் இந்த மாதிரி ஒரு அன்பான மனைவி, ஒருமித்த மனசு இருக்கக்கூடிய பெண் பக்கத்துல இருக்கும் போது கஷ்டங்களே தெரியாது. அதனால, ராமருக்கு சீதைக்கூட வந்த நன்னா தான் இருக்கும். இருந்தாலும் அவ கஷ்டப்பட கூடாது, அப்படின்னு அந்த அன்புனால ” நீ வராதேம்மா, நீ இங்க இரு, அயோத்தில இரு, உனக்கு சௌகர்யமாவும் இருக்கும், ஆபத்து இல்லாமலும் இருக்கும்”ன்னு சொல்றார். சீதை வந்து “என் கணவனோடு இருக்கறதுதான் எனக்கு சொர்கம்”  அப்படிங்கறா. அது நரகமா இருந்தாலும் அது ராமர் பக்கத்துல இருந்தா அது எனக்கு சொர்கம். அது எனக்கு சொர்கமாக இருந்தாலும், ராமர் பக்கத்துல இல்லனா அது நரகம்” அப்டின்னு சொல்றா. “அதனால நான் உங்களோடதான் வருவேன்” அப்டின்னு சொல்றா.

இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார், கும்பகோணத்துல மஹாமகம் வரது அப்படின்னா, அங்க போனா coffee சரியா கிடைக்குமா, அப்படின்னு கேட்டான்னா, அவர் கிளம்பமாட்டார். அங்க போனா ஸ்னானம் கிடைக்குமான்னு கேட்டாத் தான் கிளம்புவா. “அந்த மாதிரி நான் காட்டுக்கு வறேன் சொன்ன போது, காட்டில சௌரியங்கள் எல்லாம் இருக்குமான்னா நான் கேட்டேன், ராமர் இருக்காரான்னு தானே கேட்டேன், ராமர் எங்க இருக்காரோ அங்க நான் இருப்பேன், அதனால நான் உங்களோட வரேன், என்னை விட்டு போகாதீங்கோ” அப்படின்னு சீதாதேவி  சொல்றா.

ஆனா ராமர் “இல்லை, நீ வந்து வனவாசத்தோட கஷ்டத்தை புரியாம பேசற” ஆனா சில சமயம் ராமர் அந்த வனவாசத்தை வர்ணிக்கும் போது, “அங்க மூணு வேளை குளிக்கணும், ரிஷிகள்லாம் இருப்பா, அவாள்லாம் வந்தா, அவாளுக்கு உபசாரம் பண்ணனும், அதிதிகள்லாம் வந்தா, சாப்பாடு போடணும்” அப்படின்னு சொல்றது எல்லாம் பார்த்தா, ரொம்ப ஆசையா இருக்கு, நாமே போகலாம்னு தோண்றது. அந்த மாதிரி அவர் பயங்கரமா இருக்கும்ன்னு சொல்லும்போது, கூடவே இதை சொல்றார், ரொம்ப ரம்யமாவும் இருக்கும்ங்கிறதை சொல்லாம சொல்றார். “அதனால நான் உங்களோடு இருக்கும் போது, இந்திரன் வந்தா கூட என்னை ஒண்ணும் பண்ண முடியாது, உங்களுடைய ரக்ஷணைல இருக்கும் போது எனக்கு பயமே கிடையாது. ஒரு குறவன் பெண்டாட்டிய இங்க விட்டுட்டு அங்க  போறா மாதிரியெல்லாம் பண்ணாதீங்கோ, க்ஷத்ரிய வீரர் நீங்கள், என்னை அழைச்சிண்டு போங்கோ” அப்படின்னு சொல்றா.

அப்ப ராமர் இன்னும் hesitate பண்ணும் போது இந்த வார்த்தைகளைச் சொல்றா. “உங்களை ஒரு பெண், ஆண் வேஷம் போட்டுண்டு வந்திருக்கானு தெரியாம எங்கப்பா பெண்ணைக் குடுத்து மாப்பிள்ளை ஆக்கிண்டுட்டாறா?” அப்படின்னு கேட்கறா. இது ஊடலில் சொல்ற வார்த்தை. அவ “என்னை shopping கூண்டிண்டு போங்கோ, cinemaக்கு கூட்டிண்டு போங்கோன்னு பிடிவாதம் பிடிக்கலை. காட்டுக்கு கூட்டிண்டு போங்கோன்னு பிடிவாதம் பிடிக்கறா. அவா இந்த மாதிரி செல்லமா சொல்றா. அவ்வளவு அன்பு, உரிமை இருக்கு, அவ்வளவு intimacy ரெண்டு பேருக்குள்ள. அப்படி ஒரு வார்த்தை சொல்றா. இதை என்ன பண்ணுவா, “ராமரை நீ பெண்ணா னு சீதை கேட்டுட்டா. அதுனால தான் ராமரை பிரிஞ்சு கஷ்டப்பட்டா” அப்படின்னு கஷ்டப்பட்டு கருத்து சொல்லிண்டு இருப்பா. அது தேவையே இல்லை. ஒரு அன்பினால் சொன்ன வார்த்தை அது.

அவ்வளவு தூரம் அவ சொன்னதுனால

यस्त्वया सह स स्वर्गो निरयो यस्त्वया विना ।

इति जानन्परां प्रीतिं गच्छ राम मया सह ।।

யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க: நிரயோ யஸ்த்வயா விநா |

இதி ஜானன் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ ||

“யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க: நிரயோ யஸ்த்வயா விநா”  – உன்னோடு இருப்பது, எங்கேயானாலும் எனக்கு அது ஸ்வர்கம். உன்னை பிரிந்து இருந்தால் அது எனக்கு நரகம். “இதி ஜானன் பராம் ப்ரீதிம்” – இந்த என்னுடைய உயர்ந்த அன்பை புரிஞ்சுண்டு “கச்ச ராம மயா ஸஹ” – என்னைக் கூட்டிக் கொண்டு காட்டுக்கு போ” என்று சொல்கிறாள்.

त्युमत्सेनसुतं वीरं सत्यवन्तम्नुब्रताम् |

सावित्रीमिव मां विद्धि त्वमात्मवशवर्तिनी ||

த்யுமத்சேனசஸுதம் வீரம் சந்த்யவந்தம்  அனுவ்ரதாம் |

சாவித்ரீமிவ மாம் வித்தி த்வம் ஆத்மவஷவர்த்தினி ||

“நான் உனக்கு வசப்பட்டவள். உன் அடிமை. சத்யவான் பின்னாடி போன சாவித்ரி மாதிரி நான். இவ்வளவு சொன்ன பின்னும் என்னை விட்டுட்டு போனால் நான் நெருப்பில் விழுந்து விடுவேன்” அப்படின்னு சொல்றா. சாவித்திரி மாதிரி, கணவனைப் பிரிந்தால் நெருப்பில் விழறது, என்பதை சொல்லும் போது சதின்னு ஒண்ணு இருந்தது. உடன்கட்டை ஏறுவதுன்னு. யாரும் force பண்ணலை. குந்தி தேவியோ கௌசல்யா தேவியோ உடன்கட்டை ஏரினதாக புராணங்களில் சொல்லவில்லை. யாரோ கோடியில ஒருத்தர் ஞானி என்பது போல பெண்களில் கணவனை பிரிஞ்சு இருக்க முடியாமல் அப்படி பண்றா. அப்படி ஏறும் போது அவாளுக்கு கணவனோடு கூடி இருக்கும் போது ஏற்படும் அளவுக்கு சுகம் ஏற்படும். நெருப்பில அவா துணி எரியாது. அதை வெச்சு பூஜை பண்ணுவா னு அப்படி எல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்கு. ஒரு high ideal.

அப்போ ராமர் “சரி உன் மனசை புரிஞ்சுக்கத் தான் கேட்டேன். நீ இவ்வளவு தீர்மானமாக இருப்பதால் சர், என்னோடு கிளம்பு” என்கிறார். அப்பா ராமர் சொல்றார் “அம்மா, அப்பா, குரு, இவா மூணு பேரும் கண்கண்ட தெய்வம். கண் முன்னாடி இருக்கும் தெய்வம். இவாளை திருப்தி பண்ணினா எல்லாமே கிடைக்கும். செல்வங்களோ, பசுக்களோ, பிள்ளைகளோ, படிப்போ எல்லாமே கிடைக்கும். அவாளை judge ஏ பண்ணக் கூடாது. அவா பேச்சை கேட்கணும். அவாளை திருப்தி படுத்தணும். இது என் கொள்கை. அந்த எண்ணத்தோட நான் கிளம்பறேன். நீயும் கிளம்பு” என்கிறார்.

இது என்னத்துக்கு சொல்றார் னா “நான் அப்பா பேச்சைக் கேட்டு காட்டுக்கு கிளம்பறேன். இதில் கஷ்டங்கள் இருக்கும் னு தெரிஞ்சு தான் கிளம்பறேன். அதே மாதிரி புரிஞ்சுண்டு நீயும் கிளம்பு. அங்க வந்துட்டு என்ன இவ்வளவு கஷ்டமாக இருக்கே னு சொல்ல கூடாது. என்ன தசரதர் இப்படி பண்ணிட்டரே னு சொல்லக் கூடாது” என்று ஒரு  warning. ஆசையாக தர்மத்தை நடத்தினா தான் பூர்ண பலன் கிடைக்கும்.

அப்பறம் ராமர் சொல்றார், “உன்னுடைய நகைகளையும், உன்னுடைய பொம்மைகளையும், இன்னும் மத்த செல்வங்களை எல்லாம் தானம் பண்ணிட்டு கிளம்பு” அப்படிங்கறார். அந்த மாதிரி, சீதை குழந்தை தானே! ஆறு வயசுல கல்யாணம் ஆகி வந்து இப்போ பதினெட்டு வயசு ஆகிறது. குழந்தையாக வந்தவ. உன்னுடைய தோழிகளை எல்லாம் விட்டு பிரியணும். எல்லார் கிட்டேயும் சொல்லிண்டு கிளம்பு” னு சொன்ன உடனே சீதை ரொம்ப சந்தோஷம் ஆகி விடுகிறாள். சந்தோஷமாக ராமரோடு கிளம்புகிறாள்.

தினமும் ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம னு சொல்றோமே அது மாதிரி, சீதாபதி ராமச்சந்த்ர கீ ஜய் னு பஜனைகளில் சொல்லுவா. அப்போ இந்த சீதாதேவியோட பத்தி பக்தியையும் நினைக்கணும்.

ஸீதாபதி ராமச்சந்திர கீ ஜய்
(13 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

2 replies on “சீதாதேவி ராமபிரானிடம் இப்படி பேசலாமா?”

எப்படிப்பட்ட பொருள் பொதிந்த ஸ்லோகம்! அழகான விளக்கம்! பாரத தேசம் புண்ய பூமி! தர்மம்தான் நம் தேசத்தின் தனி சிறப்பு !
Though there may be interpretations on this sloka your explanation is very nice & apt !

கணவன் மனைவிக்கிடை ஊ மற்றும்டல் என்ற
இரண்டுமே சகஜம்! தன்னை விட்டு விட்டுச் சென்று விடுவாரோ என்ற பயத்தில் சொன்ன வார்த்தைகள் ஆனால் உண்மையில் மனதிலிருந்து வந்தவை அல்ல! பீதி, பயம் , இராமனைப் பிரிந்து வாழ வேண்டி வந்துவிடுமோ என்ற கவலை அவளை அவ்வாறு சொல்ல வைத்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.