Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்

நேற்று வரையில் பதினைந்து நாட்களில் ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஸ்மரித்தோம். இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்ய காலம். ஆதி சங்கரருடைய மகிமையைப் பற்றியும் இந்த சங்கர ஜயந்தி எப்படி சர்வோத்க்ருஷ்டமான புண்ய காலம் என்பதைப் பற்றியும், மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பதை இப்போது வாசிக்கிறேன்.

ஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத தேசத்தில் இல்லாமற் போனது தான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் போன்ற சில மதங்களைப் பற்றிப் புஸ்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது! இவற்றை நடைமுறையில் பின்பற்றுகிற எவரையுமே காணோம். காபாலிகம், வாமாசார சாக்தம் போன்ற கோர மதங்களைப் பற்றி பழைய இடிபாடு (ruins) புதைப் பொருள் இவற்றிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். வேத கர்மாநுஷ்டானத்தைச் சொல்லாமல் ஆத்ம குணங்களை மட்டும் சொல்லும் புத்தமதம் முதலிய சில மதங்களை மற்ற நாடுகளுக்காக விட்டு வைத்திருக்கிறார், ஸ்ரீ சங்கர பகவத் பாதர். அவையும் நம் நாட்டில் அவர் காலத்துகுப் பின் இல்லாமற் போயின. சொற்ப காலத்துக்குள், தத்வம் ஒன்றையே அடிப்படையாக வைத்து, மற்ற மதங்களை எல்லாம் ஜயித்து, அத்வைதத்தை ஆசாரியர்கள் நிலை நாட்டியதைப் போன்ற மகத்தான காரியதைச் செய்தவர் உலகில் எவருமே இல்லை.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்குப் பிற்பாடு, நம் நாட்டில் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டாலும், ஸ்ரீ சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மதம் போய்விடவில்லை. இன்றும் அத்வைதிகள் இருக்கிறோம்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் வேதம் முழுமையையும் ஒப்புக்கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லக்ஷ்யமாக, வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான, ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றே’ என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் ‘ஜகத்குரு’ என்ற விருதைப் பெற்றார்.

வைசாக சுக்ல பக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.

ஸ்ரீ ஆதி சங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ய காலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.

அது என்ன காரணம்? ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்? வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால் தான் அந்தப் புண்ய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால் தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ய காலமாகச் சொல்கிறேன்.

தனி மனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்தது தான் ‘திக்விஜயம்’.

ஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும். ‘பஜகோவிந்த’த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். “ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்” என்று ‘பஜகோவிந்த’த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். “யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக் கொண்டால் தான் யமனால் நமக்கு பயம் இல்லை’ என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரணம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்து வரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்ககக் குறைவுக்கும் ஒரு முக்கியமன காரணம்.

ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவ ஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். “அம்மா, இன்று வரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்” என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.

இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசாரியாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.

அப்படின்னு அழகா சொல்லி இருக்கா. இந்த ஆசார்யாள் பரமா தோடகாசார்யாள் பண்ணி இருக்கற தோடகாஷ்டகம் ரொம்ப அழகான ஸ்லோகம். இதை சொல்லி நமஸ்காரம் பண்றதே ஆதி ஆசார்யாளுக்கு பண்ற பெரிய பூஜை அப்படின்னு மஹா பெரியவா சொல்லி இருக்கா. அந்த தோடகாஷ்டகத்துனுடைய அர்த்தத்தை நான் இப்போ உங்களுக்கு சொல்றேன்.

விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதா⁴ஜலதே⁴

அம்ருதமயமான எல்லா சாஸ்த்ரங்களின் கரை கண்டவரே!

மஹிதோபனிஷத் கதி²தார்த²னிதே⁴

உயர்ந்த உபநிஷத் பொருளான அத்வைதமாக விளங்குபவரே!

ஹ்ருʼத³யே கலயே விமலம் சரணம்

உங்களுடைய நிர்மலமான சரணங்களை என் மனதில் த்யானிக்கிறேன்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

கருணாவருணாலய பாலய மாம்

கருணைக்கடலே! என்னை காப்பாறுங்கள்!

ப⁴வஸாக³ரது:³க²விதூ³னஹ்ருʼத³ம்

பவக்கடலில் தத்தளித்து என் மனம் தளர்ந்து விட்டது!

ரசயாகி²லத³ர்ஶனதத்த்வவித³ம்

எல்லா தர்சனங்களின் தத்துவமும் எனக்கு புரியும்படி அருளவேண்டும்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

ப⁴வதா ஜனதா ஸுஹிதா ப⁴விதா

உங்களால் இந்த ஜனசமூகம் மகிழ்ச்சி அடைந்தது!

நிஜபோ³த⁴விசாரண சாருமதே

ஆத்ம விசாரத்தின் சரியான வழியை அறிந்த கூர்மதியாளர் தாங்களே!

கலயேஶ்வரஜீவவிவேகவித³ம்

ஜீவன் ஈஸ்வரன் பற்றிய விவேகத்தை எனக்கு அருளுங்கள்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

ப⁴வ ஏவ ப⁴வானிதி மே நிதராம்

கயிலை நாதனான பரமேஸ்வரன் தாங்களே!

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

என்று இதை இன்று உணர்ந்து என் மனம் குதூகலம் அடைந்திருக்கிறது!

மம வாரய மோஹமஹாஜலதி⁴ம்

மோகக்கடலில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

ஸுக்ருʼதேऽதி⁴க்ருʼதே ப³ஹுதா⁴ ப⁴வதோ

பலவிதங்களில் மிகுந்த புண்ணியம் செய்த பாக்யசாலிகளுக்கு உங்கள் அருளால்

ப⁴விதா ஸமத³ர்ஶனலாலஸதா

சமதரிசனம் என்கிற ஞானம் அடைய விருப்பம் ஏற்படுகிறது.

அதிதீ³னமிமம் பரிபாலய மாம்

மிகவும் தீனனான (அத்தைகைய புண்யங்கள் எதுவும் செய்திராத, ஞான நாட்டமும் இல்லாத) என்னையும் காப்பாறுங்கள்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

ஜக³தீமவிதும் கலிதாக்ருʼதயோ

உலகை காக்க வேண்டி ஒளி பெற்ற மஹான்கள்

விசரந்தி மஹாமஹஸஶ்ச²லத:

தங்களை மறைத்துக் கொண்டு உலவுகிறார்கள்!

அஹிமாம்ஶுரிவாத்ர விபா⁴ஸி கு³ரோ

அவர்களுக்கு மத்தியில் ஹே குரோ! நீங்கள் ஒரு சூரியனைப் போல விளங்குகிறீர்கள்

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

கு³ருபுங்க³வ

குரவர்களில் சிறந்த குருவே!

புங்க³வகேதன

ரிஷபக்கொடி உடைய சிவபெருமான் தாங்களே!

தே ஸமதாமயதாம் நஹி கோऽபி ஸுதீ:⁴

உங்களுக்கு சமமான ஞானி வேறு ஒருவரும் இல்லை.

ஶரணாக³தவத்ஸல தத்வனிதே⁴

அடைக்கலம் புகுந்தவர்களிடம் அன்பைப் பொழிபவரே! ஞானச்செல்வமே!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

 

விதி³தா ந மயா விஶதை³ககலா

நான் கசடற எந்தக் கல்வியும் கற்கவில்லை!

ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி கு³ரோ

என்னிடம் சிறிதளவேனும் பணமும் இல்லை!

த்³ருதமேவ விதே⁴ஹி க்ருʼபாம் ஸஹஜாம்

உங்களுடைய இயல்பான கருணையை என் மேல் காட்டுங்கள்!

ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்

ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்!

நான் எனக்கு தெரிஞ்ச சமஸ்க்ருதத்தை கொண்டு தமிழ்ல அர்த்தம் சொல்லி இருக்கேன். படிச்சவா, பெரியவா எல்லாம் இன்னும் நன்னா சொல்லுவா. ஒரு வாட்டி எட்டு ஸ்லோகத்தை சொல்லிடறேன்.

विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत् कथितार्थनिधे ।

हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् ॥ १॥

करुणावरुणालय पालय मां भवसागरदुःखविदूनहृदम् ।

रचयाखिलदर्शनतत्त्वविदं भव शंकर देशिक मे शरणम् ॥ २॥

भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते ।

कलयेश्वरजीवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ॥ ३॥

भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता ।

मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ॥ ४॥

सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता ।

अतिदीनमिमं परिपालय मां भव शंकर देशिक मे शरणम् ॥ ५॥

जगतीमवितुं कलिताकृतयो विचरन्ति महामहसश्छलतः ।

अहिमांशुरिवात्र विभासि गुरो भव शंकर देशिक मे शरणम् ॥ ६॥

गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधीः ।

शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥ ७॥

विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो ।

द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ॥ ८॥

श्रुति स्मृति पुराणानां आलयं करुणालयाम् | नमामि भगवत्पादं शंकरं लॊक शंकरम् ||

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ||

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் (10 min audio file. Same as the script above)

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மகாதேவா…

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்திஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book) >>

8 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்”

சங்கர சரிதம் படிக்க படிக்க நன்றாக உள்ளது

Thank you for educating and explaining us about Adhi Shankara Bhagavath Paadhaal life for nearly a fortnight. Every day you enlightened us with your knowledge sharing and excellent rendition.

Namaskaram.

எல்லோரும் சுலபமாக புரிந்து கொண்டு பாகவத் பாதர் வழியில் நடந்து மன சாந்தியுடன் ஒற்றுமையுடன் இருந்து வந்தால் சிறப்பாக இருக்கலாம். அழகாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி இருந்தீர்கள் நமஸ்காரம் அண்ணா

ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர
இன்று ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி. இந்த ஷங்கர சரிதம் பூர்த்தி.
ஸ்ரீ மஹா பெரியவாளின் உரையுடன் பட்டு வஸ்திரத்துடன் அலங்காரமாக ஸ்ரீ ஷங்கரர் பல்லக்கு ஊர்வலம் வந்தது போல் இருக்கு.
சென்ற 6 வருடங்களாக நாங்கள் இங்கு
பெங்களூரில் ஸ்ரீ ஷங்கரரின் ஜயந்தி உத்ஸவத்தில் கலந்து கொண்டிருந்தோம்
இந்த முறை ஊரடங்கு காரணமாக இவைகள் எல்லாம் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை தங்கள் ஷங்கர சரிதம் கிடைத்தது. இவை எல்லாம் ஒரு அர்ப்பணிப்புடன் தாங்கள் எங்களப்போன்றவர்க்கு மிகப்பெரிய வணக்கத்திற்குரிய கைங்கர்யம் செய்துள்ளீர்கள். இவை எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்க அருளிய
ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும்,
ஸ்ரீ ஆதி ஷங்கரர்க்கும் கோடி கோடி நமஸ்காரங்கள்.

மனதுக்கும், சேவிக்கும் இனிய விருந்து !
ஶ்ரீ சங்கரர் உடன் கை கோர்த்து ஊர்வலம் வந்த மாதிரி பர் நிறைவு !!
அது போல்தோடகாஷ்டகம் பொருள் விளக்கம் அருமை ! தனக்கு சம்ஸ்க்ருத knowledge போதாது என்ற குறிப்பு, இடைச்செருகல் வேறு !
தெளிவாக, எளிமையான பொருள் விளக்கம் ! மனதில் நிறைந்த பதிவு !!
இந்தப் புண்ய காலத்தில் சங்கரா கோஷம் ஒன்றே நம்மை உய்விக்கும் எளிய சாதனம் !
ஜய ஜய சங்கரா…

Useful details for all. We have to know the meaning of Adi Sankarar ஸ்தோத்திரங்கள். I am searching for a long time. Thanks.
Namaskarams. KVT Sundari.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.