Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதிமூன்றாவது ஸ்லோகம் – ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஸுப்ரமண்ய புஜங்கம் பதிமூன்றாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above)

நேற்றைக்கு சுப்ரமண்ய புஜங்கத்துல பன்னிரண்டாவது ஸ்லோகம், முருகப் பெருமானுடைய பன்னிரண்டு திருக்கரங்களை பத்தி, அந்த தோள் வலிமையை பத்தி ஒரு ஸ்லோகம் பார்த்தோம். இன்னிக்கி முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களை பத்தி அழகான, கவித்துவமான ஒரு ஸ்லோகம். இந்த ஆறுமுகங்கள் அப்படி சொன்ன உடனே அருணகிரிநாதருடைய, எல்லாருக்கும் நன்னா தெரிஞ்ச ஒரு திருப்புகழ் பாட்டு ஞாபகம் வர்றது. அதை படிக்கிறேன்

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

ன்னு ஒரு பாட்டு. இந்த பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஆறுமுகங்களைப் பார்த்த உடனே, ஆச்சார்யாளுக்கு இதற்கு உவமை ஏதாவது சொல்லணும்னு தோணறது. கவிகள் எல்லாம் பொதுவா சந்திரன் போன்ற முகம் ன்னு சொல்வா இல்லையா, அந்த மாதிரி சந்திரன் போன்ற முகம் ன்னு சொல்லலாமா ன்னு அவர் யோசிக்கிறார். ஸ்லோகத்தை படிக்கிறேன்.

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-

स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥ १३॥

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத் |

ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் ||

ன்னு சொல்றார்.

ஹே ஸ்கந்தா! நான் உன்னுடைய முகங்களுக்கு ஸாம்யமா சந்திரனை சொல்லணும்னு ஆசைப் படறேன். ஆனால் ‘ஸதா’ – எப்பொழுதும், ‘சாரதா:’ சந்திரன் சரத் காலத்துல இருக்கிற மாதிரி, சரத் காலத்துல சந்திரன் மேகங்கள்லாம் இல்லாம ரொம்ப ஸ்வச்சமாக அழகாக இருக்கும். அந்த சரத்காலத்துல இருக்கிற மாதிரி, ‘ஷண்ம்ருகாங்கா:’ ஷஷாங்கா: ம்ருகாங்கா: இதெல்லாம் சந்திரனுக்கு பெயர். ஷஷம்-ன்னா முயல். அந்த சந்திரன்ல ஒரு அடையாளம் இருக்கே, அது முயல் மாதிரி இருக்கு. ம்ருக: ன்னா மான், மான் போன்ற அடையாளம், கருப்பா ஒரு அடையாளம் இருக்கு இல்லையா சந்திரன்ல. அதனால அதுக்கு ம்ருகாங்கா: ன்னு பேரு. ‘‘ஷண்ம்ருகாங்கா:’ ஆறு சந்திரன்கள், ‘பூர்ணபிம்பா:’ பூர்ண சந்திரன்கள், பிறை சந்திரன்லாம் இல்லை. முழு நிலவாக ஆறு சந்திரன்கள், மான் மாதிரி அடையாளத்தை உடைய சந்திரன்கள், ‘ஸமந்தாத்’ – எல்லா பக்கங்களிலேயும் சேர்ந்து ‘ஸமுத்யந்த ஏவ:’ உதிச்சுதுன்னா ‘ஸ்த்திதா: சேத் யதி ஸ்யு:’ எப்பொழுதும் ஸ்திதமா அந்த ஆறு சந்திரன்களும் உதிச்சு, அது எல்லாம் முழுச் சந்திரனா இருந்து, அந்த ஆறும் எப்பவும் பிரகாசிச்சிண்டு இருந்துதுன்னா, அப்ப உன்னுடைய முகத்துக்கு உவமை சொல்லலாமான்னு நான் நினைப்பேன். அது கூட உன் முகத்துல ஒரு கஸ்தூரி திலகமோ, அது மாதிரி உன் முகத்துலேயும் ஒரு அடையாளம் இருந்து, சந்திரன்லேயும் ஒரு களங்கம் இருக்குன்னா சரி. இது ஒரு உவமைன்னு சொல்லலாம் ‘ஸாம்யம் ப்ருவே’ ஸமமாக சொல்லலாம்னு ஆரம்பிப்பேன்.

உன்னுடைய முகத்துல கஸ்தூரி திலகம் மாதிரி எதுவும் இல்லாமலே, சாதாரணாமாவே, எப்பொழுதும் உன் முகம் பிரகாசிக்கறது. எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கும் அந்த ஆறுமுகங்களுக்கு நான் ஏதாவது சொல்லணும்னா ‘கலங்கைஸ்ச ஹீனா: பூர்ணபிம்பா:’ சந்திரன் எப்பயாவது இந்த களங்கமே இல்லாம, பூர்ண சந்திரனாக, ஆறு சந்திரன்கள் உதிச்சுதுன்னா, அப்போ நான் அதை உவமையாக சொல்வேன். சந்திரனோ எப்பொழுதும் களங்கத்தோடு தான் இருக்கு, ஒரே ஒரு சந்திரன் தான் இருக்கு, அது மாசத்துக்கு ஒரு நாள் தான் பூரண சந்திரனாக இருக்கு, அதுவும் சரத்காலத்துல தான் நன்னா ப்ரகாசிக்கறது, மத்த காலங்கல்லாம் மேகத்துகுள்ள போயிடறது. இப்படி இருக்கும் போது உன்னுடைய முகத்துக்கு நான் எப்படி சந்திரனை உவமையாக சொல்ல முடியும்ன்னு வேடிக்கையா சொல்றார்.

உன்னுடைய முகம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு அழகா இருக்கு. நிருபமான முகங்களா இருக்குன்னு சொல்ல வரதை, இந்த மாதிரி ஆச்சார்யாள் வேடிக்கையா சொல்ற மாதிரியும், அவ்வளவு அழகு அந்த முகத்தினுடைய ஜோதி என்று அப்படி சொல்றார். முதல்ல இந்த ஸ்தோத்ரத்தை ஆரம்பிச்ச போதே ‘என் மனதில் உன் ஆறுமுகங்களோடு கூடிய ஒரு ஜோதி, ஒரு ஒளி பிரகாசிப்பதனால் தான், ஒண்ணுமே தெரியாத எனக்கு, எழுத்தும் தெரியாது, சொற்களும் தெரியாது, பொருளும் தெரியாது, கவிதையும் தெரியாது, உரைநடையும் தெரியாது. என் வாக்குல ஸ்லோகம் வறது, நான் இந்த ஸ்தோத்ரத்தை பண்றேன்ன்னு சொல்றார். அப்பேற்பட்ட அந்த ஆறுமுகங்களுக்கு சந்திரனையெல்லாம் உவமையா சொல்ல முடியாது ன்னு முடிச்சுடறார்.

எங்களுடைய இந்த திருமயிலாபுரிக்கு அருணகிரிநாதர் வந்திருக்கார். இங்கே சிங்காரவேலர் ஆறுமுக மூர்த்தி தான். அந்த சிங்காரவேலர் மேலே அருணகிரிநாதர் பாடின ஒரு திருப்புகழ் பாட்டு இருக்கு.

அறமி லாவதி பாதக வஞ்சத் …… தொழிலாலே

அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் …… றிளையாதே

திறல்கு லாவிய சேவடி வந்தித் …… தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் …… தருவாயே

விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் …… பொரும்வேலா

விமல மாதபி ராமித ருஞ்செய்ப் …… புதல்வோனே

மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் …… புயவீரா

மயிலை மாநகர் மேவிய கந்தப் …… பெருமாளே.

ன்னு பாட்டு.

அறமிலாத அதி பாதக வஞ்சகத் தொழில்களை நான் பண்ணிண்டே இருக்கேன். அதனால என் மனம் ரொம்ப உலர்ந்து போயிடுத்து. ரொம்ப வாடியிருக்கு. உன்னுடைய பாதங்களை நெருங்கி வந்து எப்பொழுதும், உன்னை பாடக்கூடிய அந்த இன்பத்தை எனக்கு கொடு.

திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத்தருவாயே

உன்னை தினமும் பாடினாத்தான் என் வாழ்வு இன்புறும், அந்த பாக்கியத்தை கொடுன்னு ஒரு அழகான பாட்டு.

सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-

स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥ १३॥

இதோட இன்னிக்கி பூர்த்தி பண்ணிக்கிறேன். நாளைக்கும் ஆசார்யாள் இந்த ஆறு முகங்களை பத்தியே இன்னொரு ஸ்லோகம்சொல்றார். அதை நாளைக்கு பாப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பன்னிரண்டாவது ஸ்லோகம் – வீர மாது மருவிய ஈராறு தோளும்ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – பதிமூன்றாவது ஸ்லோகம் – ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்”

அருமை ! . முருகப் பெருமானுடைய முகங்களைப் ஆறு பூரண சந்திரர்களாக போற்றும் திருப்புகழ் .


சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம …… மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம …… கதிதோயப்

பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம …… மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம …… அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி …… யிகல்சூரா

போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக …… முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக …… வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் …… பெருமாளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.