Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எழாவது ஸ்லோகம் – என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி எழாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருப்பத்தியாறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். நேத்திக்கு இருபத்தி ஆறாவது ஸ்லோகத்துல

दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति: र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।

करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥

த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:

முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |

கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்

குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: || ன்னு

என் கண்கள் உன்னுடைய மூர்த்தியையே பார்க்கட்டும். என் காதுகள் உன் கீர்த்தியைக் கேட்கட்டும். என்னுடைய வாய் உன் பெருமையையே பேசட்டும். முருகா என் கைகள் உன்னையே அர்ச்சனை பண்ணட்டும். என் உடம்பு உன் கோயிலை சுத்தம் பண்ணட்டும். என் மனசு, புலன்கள் எல்லாம் உன்னுடைய காரியத்துலேயே லயிச்சு இருக்கட்டும் ன்னு ஒரு ப்ரார்த்தனை பண்றார். உலக விஷயங்கள்ளேயிருந்து மனசை திருப்பி பாகவனோட பாதங்கள்ல வைக்கறதுக்கு, இப்படி எல்லா புலன்களையும் பகவானோட காரியத்துல ஈடுபடுத்தறது என்கிற ப்ரார்த்தனை. அது தான் ஜன்ம சாபல்யத்தை கொடுக்கும்னு, மஹான்கள் அப்படி வேண்டிக்கறதுக்கு சொல்லித் தர்றா.

இன்னைக்கு ஸ்லோகம்.

मुनीनामुताहो नृणां भक्तिभाजामभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।

नृणामन्त्यजानामपि स्वार्थदाने गुहाद्देवमन्यं न जाने न जाने ॥ २७॥

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜாம்

அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா: |

ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே

குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே ||

ன்னு சொல்றார். இது ஒரு வித்யாசமான ஸ்லோகம். ‘ஸர்வத்ர’ – எல்லா உலகங்களிலும் தேவா: – தெய்வங்கள், ‘முனீனாம், பக்தி பாஜாம் ந்ருணாம் ‘ – முனிவர்களுக்கும், தன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும் ‘அபீஷ்ட ப்ரதா: ஸந்தி’ – அவா மனோரதங்களை பூர்த்தி பண்றதுக்கு வரங்களை கொடுக்கிறார்கள். ஆனால் ‘அந்த்யஜாநாமபி” – கீழ் ஜாதியில் பிறந்தவரா இருந்தாலும் ‘ந்ருணாம்’ – மனிதர்களுக்கும், ‘ஸ்வார்த்த தானே’ – விரும்பியதை கொடுப்பதில் ‘குஹாத் அன்யம் தேவம்’ – முருகப் பெருமானைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை ‘நஜானே நஜானே’ – நான் காணவில்லை, நான் காணவில்லை அப்படீன்னு சொல்றார்.

இந்த ஸ்லோகத்தை படிச்ச போது தேதியூர் சாஸ்திரிகள் நந்தனார் சரித்திரம் மாதிரி ஒரு சரித்திரம் சொல்லியிருக்கார். சண்டளானா பிறந்த ஒருத்தன் தினமும் கார்த்தாலே எழுந்து வேலாயுதா, முருகான்னு சொல்லிண்டிருந்தான். அவன் திருச்செந்தூர்ல ஸ்வாமி சன்னிதியில வந்து பகவானோட ஐக்யம் ஆயிட்டான். அவனுடைய பெருமையை உலகத்துக்கு புரிய வச்சார் அப்படீன்னு.

எனக்கு என்ன தோண்றதுன்னா, ஒரு எழுவது, எண்பது வருஷங்களுக்கு முன்னாடி சாஸ்திரிகள் இதை எழுதியிருக்கார். இன்னிக்கு உலகம் ரொம்ப மாறிப் போய் எல்லாருடைய மனப்பான்மையும் மாறியிருக்கு. இப்போ அந்த மனு தர்ம சாஸ்திரத்துல சொல்லியிருக்கிற வர்ணாஸ்ரமத்தின்படி குலங்கள், அதோட குணங்கள் எல்லாம் இருக்கான்னு தெரியலை. சிவன் சாரோட ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்கிற ஆச்சர்யமானா புஸ்தகத்துல அவர் ஒரு படிக்கட்டு போட்டிருக்கார். தற்காலத்தில் ஜனங்கள் எப்படியிருக்கா அப்படீன்னு அதுல சொல்றார்.

பல விதமான பாபங்களை பண்ணுகிறவர்கள், பஞ்சமாபாதங்களை பண்றவர்களை ‘பாபி’ங்கரார்.

‘பாமரன்’ ன்னு ஒரு category போட்டிருக்கார் 99.99% of the population வந்துடும். சாதாரண பிழைகளையும் தவறுகளையும் இழைத்துண்டு பணம், பெண் இதுல ஆசைப்பட்டுண்டு, நான் என்னோடதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துண்டு வாழ்க்கையை நடத்திண்டு போகக் கூடிய ஜனங்கள் எல்லாரும் பாமரன் எங்கறார் அவர். அவன் படிச்சவனா இருந்தாலும் சரி, ரொம்ப புத்திமானா இருந்து, ரொம்ப சம்பாதிச்சு சாமர்த்திய சாலியா இருந்து, திறமைகள் இருந்தாலும் சரி, வைதீகாளா இருந்தாலும் சரி, சந்யாசியா இருந்தாலும் சரி, பணத்தாசை இருந்தா பாமரன் தான். சார் சொல்லி இருக்கற விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகியெல்லாம் படிச்சு பார்க்கணும். அப்பத்தான் அந்த உயர்ந்த நிலைமைகளோட பெருமை புரியும். அந்த நிலைமைகள் எல்லாம் அடையாத வரைக்கும் அவன் என்ன வேஷம் போட்டாலும் அதெல்லாம் உதர நிமித்தம் தான். அதனால அவனை நீங்க பெரியவனா நினைச்சுடாதீங்கோ. அவாளுடைய நோக்கம் என்ன என்கிறதை புரிஞ்சிக்கோங்கோ. காமினி காஞ்சனத்துல இருந்தா அவா பாமரர்கள் தான். நீங்க அவாளோட பழகினா, நம்ம level-ல இருக்கறவாளோட பழகினா நாம அந்த level-ல தான் இருப்போம். மேல போக முடியாதுன்னு ஒரு strong warning கொடுக்கறார்.

‘விவேகி’ங்கறது எது right wrong-ன்னு தெரிஞ்சு, முடிஞ்ச வரைக்கும் நாம ரைட்டா நடந்துக்கணும். ஏதோ ஒரு சந்தர்ப்ப வசத்துல எப்பவோ ஒரு தப்பு பண்ணினா பரவாயில்லை. பிராயச்சித்தம் பண்ணிக்கலாம். ஆனா எது right wrong-ன்னு தெரியாம தப்பே பண்ணிண்டு இருந்தா அவா பாமரர்கள் ன்னு சொல்றார். அந்த ஒரு right wrong-ஆவாது தெரிஞ்சு, எப்போதும் நேர்மையாக நல்லவனா இருக்கறவன் விவேகிங்கறார்.

தன்னலமில்லாதவர்களை ‘ஸாது’ங்கறார். ‘சிறந்த விவேகி’, ‘முற்றின விவேகி’ என்கிறது men of wisdom, வைராக்கியம் வந்தவாளை அப்படி சொல்றார்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் மாதிரி பகவானுக்காக எதையும் விடறதுக்கு தயாராக, அவ்வளோ தெய்வத்துக் கிட்ட பாசம் வந்தவாளை ‘தெய்வ சாது’ ன்னு சொல்றார்.

ஒரு வாட்டி ‘வருண ஜபம்’ பண்ணா மழை கொட்டும் என்கிற அளவிற்கு, தெய்வத்தோட நேரா பேசக் கூடியவாளா இருந்த அந்த காலத்து பிராமணர்கள், அவாளை ‘தெய்வ விவேகி’ன்னு சொல்றார்.

அதுக்கும் மேல பகவானோடயே எப்பவும் லயிச்சு இருக்கிறவாளை ‘மஹான்’னு சொல்றார்.

அத்வைத ஞானத்தை அடைவதற்கு ரொம்ப நெருங்கி இருக்கிறவாளை ‘துறவி’ங்கறார்.

அத்வைத ஞானத்தில உட்கார்ந்து (நிலை பெற்று) இருக்கிறவாளை ‘ஞானி’ங்கறார். இப்படி ஒரு Gradation போட்டிருக்கார்.

இந்த Gradation தான் இந்த காலத்துல வசதி நமக்கு. ஏன்னா ‘எல்லா குலங்களிலும், எல்லா விதமான ஜனங்களும் பிறக்கறதுக்கு பகவான் வழி வகுத்து விட்டார். இந்த காலத்துல 99% of the people பாமரன், அல்லது பாபியாகத் தான் இருக்கா. அதனால நமக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது, மழை பெய்யறதே பகவானுடைய கருணைன்னு நீங்க புரிஞ்சிக்கணும்ன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா ஆ சொல்றார். ஆனா அவர் சொல்றது உண்மையான வார்த்தை.

அதனால, நான் என்ன நினைக்கிறேன்னா ‘ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே’ கீழான மனிதர்களுக்கும் ஆசைப் பட்டதைக் கொடுக்கிறவர். அவாளுக்கு ஷேமத்தைக் கொடுக்கறவர் அப்படிங்கற போது நான் என்னையே அப்படி நினைச்சுக்கிறேன்.

தேதியூர் சாஸ்திரிகள் பெரிய வித்வானாகவும், அனுஷ்டாதாவாகவும், தெய்வ விவேகி நிலைமையில இருந்ததுனால அவர் கீழ் ஜாதியில பொறந்தவாளுக்கும் முருகப் பெருமான் அருள் பண்றார்ன்னு சொல்றார். எனக்கு வந்து ‘எனக்கும் முருகன் அருள் பண்றார்’ன்னு இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் எடுத்துக்கலாம்ன்னு தோண்றது.

நாம மஹான்களுடைய ஸங்கத்துனால உலக விஷயங்கள்ல இருந்து மனசு திரும்பறதுக்கு பிரார்த்தனை பண்ணனும். ‘நான்…..என்னுது … எனக்கு வேண்டியத சேர்த்து வைக்கிறது..’ இப்படியே ஓயாம திரும்பத் திரும்ப ஜன்மம் எடுத்து, திரும்பத் திரும்ப இதே காரியங்களைப் பண்ணி, வெட்கமே இல்லாம நான் திரிஞ்சிண்டு இருக்கேனே. மஹான்களோட ஸங்கத்துல சேர்ந்து, அவா ‘திருப்புகழை’ ‘பகவானோட பெருமை’யைப் பேசறத காதுல வாங்கிண்டு, அதை அங்க அவாளோட ஸங்கத்துல இருக்கும் போது மட்டும் காதுல வாங்காம, அங்கேயிருந்து வந்த பிறகும், அதைத் தன்னோடு எடுத்துண்டு வந்து அந்த போதத்தைக் (ஞானத்தை) பிரியாமல், அந்த பகவானோட குளிர்ச்சியும், அழகும், நிறைந்த அந்தப் பாதங்களை எப்பவும் தொழுது, நான் நல்ல வழியில, சார் சொல்கிற ஏணிப் படிகளில் உயர்ந்த நிலைமையை அடைவேனா’ அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஏங்கணும்’ அப்படின்னு இந்த ஸ்லோகத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியறது.

இதே மாதிரி திருப்புகழ் பாடல் ஒண்ணு இருக்கு. அதை நான் பாடறேன்.

எனக்கென யாவும் படைத்திட நாளும்

இளைப்பொடு காலந் தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்

இலச்சையிலாதென் பவமாற

உனைப் பலநாளுந் திருப்புகழாலும்

உரைத்திடுவார் தங்குளி மேவி

உணர்த்திய போதந்தனைப் பிரியாதொண்

பொலச்சரணானுந் தொழுவேனோ

‘உனைப் பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்’ முருகா! எப்பொழுதும் உன்னுடைய பெருமையைப் பேசக்கூடிய, உன்னுடைய புகழைப் பாடக் கூடிய மஹான்களுடைய

‘தங்குளி மேவி’ அவா இருக்கிற இடத்தைத் தேடித் தேடிப் போய், தர்சனம் பண்ணி, ‘உணர்த்திய போதம்’ அவா ‘இதுதான் ஜன்மத்தோட பலன் .இதுக்கு நீ பண்ண வேண்டிய காரியம் இது’ன்னு அவா சொல்லிக் கொடுத்த அந்த ஞானத்தை, அந்த போதத்தை, ‘தனைப் பிரியாது’ அதை அங்கேயிருந்து இறங்கின உடனே மறந்து போயிடக் கூடாது. அதைப் பிரியாமல் ‘ஒண் பொலச்சரண் நானும் தொழுவேனோ’ உன்னுடைய ஒளி பொருந்திய பாதங்களை நானும் தொழுவேனோ அப்படின்னு வேண்டிக்கறார்.

வினைத் திறமோடன்றெதிர்த்திடும் வீரன்

விழக்கொடு வேள் கொன்றவனீயே

விளப்பென மேலென்றிடக் கயனாரும்

விருப்புற வேதம் …… புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்

சிரத்தினை மாறும் …… முருகோனே

தினைப் புன மேவுங் குறக்கொடி யோடுந்

திருத்தணி மேவும் …… பெருமாளே.

அந்த மாதிரி சாதுக்கள் யாரையாவது நாம பார்த்தோம்னா அவாள்ட்டப் போய் service பண்ணனும். ஸார் வேடிக்கையா சொல்றார் ‘அவாளப் பாத்து சல்யூட் அடிச்சிட்டு வந்தாப் போறாது. அவாளோட எளிய தேவைகளை நாம பூர்த்தி பண்ணனும்.’ என்கிறார்.

நம்ம மதத்துலதான் அந்த உண்மையைத் தேடறவாளை ஆதரிக்கறதுங்கற ஒரு குணம் இருக்கு. அதை நாம கைவிடாமல் அவாள்ட்ட தோஷத்தைப் பாக்காம, உலக விஷயங்கள்ல இருந்து மனசைத் திருப்பி பகவான்கிட்ட வச்சிருக்கான்னு, அந்த குணத்தைப் பார்த்து அவாளுக்கு வேணுங்கறதைப் பண்ணி, அவா கிட்டே இருந்து இந்த ஞானத்தை நாம தெரிஞ்சிக்கணும். ஸார் சொல்றார்,’ இந்த காலத்தில் விவேகிகளே விரல் விட்டு எண்ணுகிற அளவுலதான் இருக்கா ‘ அப்படிங்கறார். அதுனால உண்மையான சாதுக்களை பார்த்தால், அவாளைப் போய் நமஸ்காரம் பண்ணி, சாதுக்களையோ அதுக்கு மேல உயர்ந்த விவேகிகள் யாராவது கோடியில ஒருத்தர் இருப்பா. அப்படி இருக்கிறவாளை நமஸ்காரம் பண்ணி அவாளுடைய தேவைகளை நாம பூர்த்தி பண்ணினா தான் நம்முடைய வினைகள் அகலும். வேற இந்த காலத்துல வினை போறதுக்கு பல விதமான உபாயங்கள் விக்கறா. அதெல்லாம் ஒண்ணும் பலிக்காதுன்னு ஸார் சொல்றார்.

அது மாதிரி ஸாதுக்களை நாம நினைப்போம். ஒரு நாளைக்கு முருகன் நமக்கும் அந்த மாதிரி விவேகத்தையும், தன்னலம் இல்லாத உயர்ந்த பக்தியையும் அருள வேண்டும்ன்னு பிரார்த்திப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஆறாவது ஸ்லோகம் – தலையே நீ வணங்காய்ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எட்டாவது ஸ்லோகம் – சகல செல்வ யோக மிகக் பெருவாழ்வும் சிவஞான முக்தியும் நீ குடுத்து உதவ வேண்டும் முருகா >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி எழாவது ஸ்லோகம் – என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி ஆண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்”

நான் என்னோடதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துண்டு வாழ்க்கையை நடத்திண்டு போகக் கூடிய ஜனங்கள் எல்லாரும் பாமரன் எங்கறார் அவர். அவன் படிச்சவனா இருந்தாலும் சரி, ரொம்ப புத்திமானா இருந்து, ரொம்ப சம்பாதிச்சு சாமர்த்திய சாலியா இருந்து, திறமைகள் இருந்தாலும் சரி, வைதீகாளா இருந்தாலும் சரி, சந்யாசியா இருந்தாலும் சரி, பணத்தாசை இருந்தா பாமரன் தான். ==AKSHARAM LAKSHAM PERUM. NAMASKARAM.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.