ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் – வெற்றி வேல் முருகனுக்கு, ஹர ஹரோ ஹர

ஸுப் ர மண்ய புஜங்கம் முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் (5 min audio file)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல முப்பத்திரெண்டாவது ஸ்லோகம்,

जयानन्दभूमञ्जयापारधाम-

ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।

जयानन्दसिन्धो जयाशेषबन्धो

जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२॥

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்

ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே |

ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ

ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ ||

அப்படி முருகப்பெருமானுடைய திருச்செந்தூர் க்ஷேத்ரத்தை தெரிஞ்சுண்டு, அங்க வந்து, ஒவ்வொரு சன்னதிலேயும் போய் நமஸ்காரம் பண்ணி, அந்த ஸ்வாமியோட சன்னிதியில் வந்து, பாதாதிகேசம் வர்ணனை பண்ணி, ஸ்வாமியை நம்ம கண் முன்னாடி கொண்டு வந்து, அவருடைய லீலா விநோதங்கள் எல்லாம் சொல்லிட்டு, நாமங்களை சொல்லி அவரை ஸ்தோத்ரம் பண்ணி, அப்பறம் சில பிரார்த்தனைகளை எல்லாம் வைச்சார். அதுக்கப்பறம் நீ தான் எனக்கு தந்தை தாய், நான் உன் குழந்தை. நான் உன்னை நமஸ்காரம் பண்றேன், என்னோட அபராதங்கள் எல்லாம் மன்னிச்சு என்னை ஏத்துக்கோ அப்படீன்னு சொன்னார். அப்பறம் நமஸ்காரம், நமஸ்காரம் அப்படீன்னு பலமுறை வணங்கி தன்னுடைய சரணாகதியை தெரிவிச்சிண்டார்.

அந்த சரணாகதி பகவான் ஏத்துண்டார் அப்படீங்கறது உத்தம பக்தர்களுக்கு புரியறது, ‘ந மே பக்த ப்ரணஷ்யதி’ – என்னுடைய பக்தன் ஒரு நாளும் குறைவு பட மாட்டான். அவனுடைய எல்லா யோக க்ஷேமத்தையும் நான் பார்த்துகிறேன் அப்படீன்னு பகவான் சொன்ன வார்த்தை, நமக்கெல்லாம் புஸ்தகத்துல இருக்கு. அவாளுக்கு அனுபவமா இருக்கு. அதனால அவாளோட சந்தோஷத்தை தெரிவிக்கறா. அதுக்கு அப்புறம் என்ன காரியம்னா, பண்றதுக்கு ஒரே காரியம் தான். அந்த பகவானோட குணங்களை பேசறது. பீஷ்மாச்சார்யாள் கடைசியா கிருஷ்ண பகவானை பார்த்துண்டே முக்தி அடையறத்துக்கு முன்னாடி என்ன பண்ணினார்ன்னா, அவ்வளவு நீண்ட ஆச்சர்யமான வாழ்க்கையோட முடிவுல, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னார்.

அந்த மாதிரி இந்த ஸ்தோத்திரத்தோட முடிவுல, ‘ஜயாநந்த பூமன்’ ஸ்லோகம். சந்தோஷத்தை வெளிப்படுத்துற மாதிரி இந்த ஸ்லோகம் இருக்குன்னு நான் ஏன் சொல்றேன்னா, ஆனந்தம்ங்கற வார்த்தையையே பல தடவை உபயோகப் படுத்தறார், ஆனந்தத்தின் வடிவமாக விளங்கவும் முருகப்பெருமானே. உனக்கு வெற்றி, உனக்கு மங்களம். ஜயாபார தாமன் – தாமம்னா ஒளின்னு அர்த்தம், அபாரமான ஒளியே பரஞ்சோதியே, நீ வெற்றியோடு விளங்கட்டும். உலகத்துல அமோகமான கீர்த்தி படைத்தவனே, உனக்கு வெற்றி, ஆனந்த மூர்த்தியே உனக்கு வெற்றி, ஆனந்தக் கடலே, ‘ஆனந்தஸிந்தோ’ உனக்கு வெற்றி, ‘அசேஷபந்தோ’ – உலகத்துல எல்லாருக்கும் நீ தான் பந்து, நான் புரிஞ்சிண்டு இருக்கேன், இன்னும் எல்லாரும் புரிஞ்சிக்கல. ஆனால் எல்லாருக்கும் நீ தான் பந்து, உனக்கு வெற்றி. ஈசஸூனோ – அந்த பரமேஷ்வரனுடைய குழந்தையே உனக்கு மங்களம். முக்திதான – முக்தியை அளிப்பவனே உனக்கு மங்களம் அப்படீன்னு சொல்றார்.

இந்த ஸ்லோகத்தை சொன்னா நமக்கும் உலகத்துல எல்லா கார்யங்களையும் மங்களங்களும் வெற்றியும் ஏற்படும். இதே மாதிரி மூகபஞ்சசதியில,

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே |

ஜய ஜய மஹேசதயிதே ஜய ஜய சித்ககனகௌமுதீதாரே ||

ன்னு ஒரு ஸ்லோகம் வரும். ஸ்வாமிகள் ஒரு முக்கியமான கார்யம் ஆத்துல கல்யாணம், அந்த மாதிரி இருந்தா ‘ஜயதி கிருஷ்ண:’ அப்படீன்னு சொல்லிண்டே எல்லா ஏற்பாடும் செய்யுங்கோ, நல்லபடியா முடியும் அப்படீன்னு சொல்லுவார். அந்த மாதிரி அந்த ஜய சப்தத்துக்கு அவ்ளோ power, அந்த பகவானோட வெற்றியை நாம பாடினா, நமக்கு வெற்றி கிடைக்கும். இந்த ஸ்லோகம் இதோட இந்த ஸ்தோத்ர பூர்த்தி, நாளைக்கு இதோட பலஸ்ருதி சொல்றார். அதை நாளைக்கு பாப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு ஹர ஹரோ ஹரா.

மஹாபெரியவா ஒரு தடவை, வெற்றி வேல் முருகனுக்கு! ஹரோ ஹரா! என்று சொன்னதை, ஸ்வாமிகள் பார்த்துட்டு சொன்னார் “நான் அந்த மாதிரி பெரியவா excited-அ emotional-அ சொன்னதை பார்த்ததே கிடையாது. வெற்றி வேல் முருகனுக்கு! ஹரோ ஹரா! அப்படீன்னு ஒரு நாள்  ரொம்ப வாட்டி பெரியவா சொல்லிண்டே இருந்தா. ரொம்ப ஆச்சர்யமா சந்தோஷமா இருந்தது” ன்னு சொன்னார், அந்த மாதிரி நாமளும் வெற்றி வேல் முருகனுக்கு! ஹரோ ஹரா! அப்படீன்னு பாடுவோம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து ஒன்றாவது ஸ்லோகம் – குஹ! ஸ்கந்த! நமஸ்தே நமோஸ்துஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.