Categories
Govinda Damodara Swamigal

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயோகே – நாராயண தீர்த்தர் தரங்கம்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார்.

அதே மாதிரி ஸம்ப்ரதாய ஹரி பஜனையில அவருக்கு ரொம்ப ஆசை. ஜயதேவர் அஷ்டபதி இருபத்துநாலும் உட்கார்ந்து கேட்பார். அதே மாதிரி க்ருஷ்ணலீலா தரங்கிணின்னு ஒண்ணு இருக்கு. நாராயண தீர்த்தர்ன்னு ஒரு மஹான் பண்ண work, அழகழகான கீர்த்தனைகள் அதை ரொம்ப விரும்பி கேட்பார். அதுல ஒரு கீர்த்தனை இன்னைக்கு ஞாபகம் வந்தது, அது ஏன் ஞாபகம் வந்ததுங்கறதும் கடைசியில சொல்றேன்,

रामक्रुष्ण गोविन्देति नामसंप्रयोगे काममिह स्नातव्यं सर्वोत्तमप्रयागे – ராமகிருஷ்ண கோவிந்தேதி நாமஸம்ப்ரயாகே காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே – அலஹாபாத் பக்கத்துல ப்ரயாகை இருக்கு. திரிவேணி சங்கமம். இவர் நாராயண தீர்த்தர் சொல்றார், ராம கிருஷ்ண கோவிந்த அப்படீன்ன்னு இந்த மூணு நாமங்கள் இருக்கே இதோட சேர்க்கையே சர்வோத்தம ப்ரயாகை. இதுல ஆனந்தமா எப்ப வேணும்னாலும் ஸ்னானம் பண்ணுவோம் அப்படீங்கறார்.

दिग्देशकालानपेक्ष सिद्धसर्वसुलभे – திக்தேஷகாலானபேக்ஷ – சித்தஸர்வஸுலபே – இந்த ஸ்னானம் பண்றதுக்கு தேசமா, காலமோ, திக்கோ எதுவும் condition கிடையாது. எப்ப வேணும்னா, எங்க வேணும்னா, எப்படி வேணும்னா இந்த ராம கிருஷ்ண கோவிந்த அப்படீங்கற நாமங்களை ஜபிக்கலாம். ஸர்வ சுலபே – எல்லாருக்கும் சுலபமானது, இதுக்கு பண்டிதனான இருக்கணும், ஆணாக இருக்கணும், பெண்ணாக இருக்கணும் எந்த condition-ணும் கிடையாது. நாக்கு இருந்தா போதும் இந்த நாமங்களை ஜபிக்கலாம். ஒரு நதினா கடல்ல போய் சேருமே, அதுமாதிரி இந்த த்ரிவேணி சங்கமம் எங்க கூட்டிண்டு போகும்னா,

सद्गुरुक्रुपासमुद्र सङ्गहेतुलाभे ஸத்குருக்ருபாசமுத்திர ஸங்கஹேதுலாபே – ஸத்குருவுடைய க்ருபாஸமுத்ரம் அப்படீங்கற அந்த சங்கத்துல கொண்டு விட்டுடும் அப்படீங்கறார்.

रामनामगङ्गया मिलितक्रुष्णनाम यामुने ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே – ராம-ங்கற நாமம் தான் கங்கை, கிருஷ்ண-ங்கற நாமம்தான் யமுனை गोविन्दनाम सरस्वतिप्रथिते கோவிந்த நாம சரஸ்வதி ப்ரதீதே – கோவிந்த நாமம் தான் சரஸ்வதி, இந்த மூணும் சேர்ந்த ப்ரயாகை இது

योगिमानसपरमहंस कुलकलिते – யோகிமானஸபரமஹம்ஸ குலகலிதே – ஒரு ஜலம்ன்னா ஹம்ஸங்கள் இருக்கணும் இல்லையா, இங்க இந்த நாமத்துல பரமஹம்சர்களுடைய மனம் குதூகலிக்கறது.

वागीशविष्णुरुद्रादि वाग्लहरीललिते – வாகீசவிஷ்ணுருத்ராதி வாக்லஹரிலலிதே – ஒரு நதியின்னா அதுல அலைகள் இருக்கும், வாகீசர்னா ப்ரம்மா, விஷ்ணு ருத்ரர் இவாள்லாம் இந்த நாமங்களை ஜபிக்கறா. அந்த அழகான அலைகள் தான் இந்த ப்ரயாகைல இருக்கு.

सर्वलोकालोककाम साङ्गफलदाने – ஸர்வலோகாலோககாம ஸாங்கபலதானே – இந்த உலகம், மேல் உலகம் இங்க இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் இந்த நாம ஜபம் பூர்த்தி பண்ணும்.

निर्विशेष नित्यानन्द लाभसुनिदाने – நிர்விசேஷ நித்யானந்த லாபஸுனிதானே – இந்த உலக ஆசைகள் மட்டும் அல்ல, நித்யானந்தமான மோக்ஷ லாபத்தையும் கொடுக்கும்.

ऋग्यजुस्सामादिवेद शाखिमूलविलसिते – ருக்யஜுஸ்ஸாமாதிவேத ஷாகிமமூலவிலஸிதே – ருக் யஜு சாமம் என்கின்ற வேதங்களின் சாகையிலும் இருக்கு, மூலத்திலும் இருக்கு. வேதங்களுக்கு மூலமே இந்த நாமங்கள் தான் என்கிறார்.

रागलोभादिसंताप शान्तिकरचरिते – ராகலோபாதிஸந்தாப சாந்திகரசரிதே – ராகம், லோபம், ஸந்தாபம் இதெல்லாம் போக்கக்கூடிய மஹாமந்த்ரம்.

स्नानसन्ध्याजपहोम तर्पणानपेक्षिते – ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே – இந்த நாமங்களை ஜபிக்கறதுக்கு ஒருத்தன் ஸ்னானம் பண்ணியிருக்கணும், சந்தியாவந்தனம் பண்ணியிருக்கணும், ஜபங்கள் பண்ணியிருக்கணும், ஹோமங்கள் பண்ணியிருக்கணும், தர்ப்பணம் பண்ணியிருக்கணும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,

हानिवृध्यादिरहिताखण्डसुखफलदे – ஹானிவ்ருத்தியாதிரஹித அகண்ட சுகபலதே – இது அகண்டமான பேரானந்தத்தை கொடுக்கும். அந்த பேரானந்தம் குறையவோ, அதிகமோ ஆகாத ஒரு சந்தோஷம். எந்த ஒரு சந்தோஷம் ஆனாலும் அது குறையும், ஜாஸ்தி ஆகும். அப்படி ஆகாத சுகம், இந்த நாம ஜபம் கொடுக்கக்கூடிய இந்த ஆனந்தம், அப்படியே இருக்கும். infinite அகண்டமான ஒரு சுகத்தை கொடுக்க கூடியது.

स्नानं मानसिकं तस्य स्मरणं ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம் – மனசுல இந்த நாமங்களை ஸ்மரணம் பண்றது தான் மானசீகமான ஸ்னானம். वाचनिकम् कीर्तनं வாசனிகம் கீர்த்தனம் – வாயால பண்ணக் கூடிய கீர்த்தனம்தான் இந்த வாய்க்கு ஸ்னானம், தபஸ். कायिकं तस्य कीर्तने सुनर्तनम् காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம் – இந்த ராம கிருஷ்ண கோவிந்த நாமங்களை பாடிண்டு அதுக்கு நர்த்தனம் ஆடறது தான் உடம்புக்கு பண்ணக்கூடிய ஒரு ஸ்னானம் அப்படீங்கறார். இப்படி உடம்பு, மனசு, வாக்கு இப்படி எல்லாத்தையும் தூய்மை படுத்தக்கூடியது.

यागयोगरागभोग त्यागसंबन्धं विना யாகயோகராகபோக த்யாகசம்பந்தம் வினா – இந்த நாம ஜபம் பண்றதுக்கு நீங்கள் யாகம், யோகம், மூச்சை அடக்கித்தான் நாம ஜபம் பண்ணணும் அப்படியெல்லாம் கிடையாது. ராகம், பகவான் கிட்ட பக்தி இருக்கணும், ராகம் இருக்கணும், போகம், த்யாகம் இல்ல நீங்க பகவானுக்காக தியாகம் பண்ணணும்,  எதுவுமே எதிர் பார்க்காமல்.

भक्तिविरक्ति विञान द्वारा मुक्तिफलदे பக்திவிரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே – இந்த நாம ஜபம் பண்ணிண்டே இருந்தாலே பக்தியும் வரும், விரக்தியும் வரும், ஞானமும் வரும், முக்தியையும் கொடுக்கும் அப்படீன்னு அற்புதமான இந்த வரி.

ब्रह्मविद्यालक्षण निरीक्षणविचक्षणे बाधितघोरसंसार वारण तत्कारणे – ப்ரம்மவித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதிதகோரஸம்ஸார வாரண தத்காரனே – ப்ரம்ம வித்யை கொடுக்கும், கோரமான சம்சாரத்தை தாண்ட வைக்கும்.

सर्वपापौघतिमिर चण्डसूर्यमण्डले – ஸர்வபாபௌகதிமிர சண்ட சூர்யமண்டலே – கடுமையான பாபங்கள் என்ற இருட்டிற்கு இது சூர்யமண்டலத்தை போன்ற வெளிச்சத்தை கொண்டு வந்து, பாபங்கள் எல்லாத்தையும் போக்கிடும்.

साधुनारायणतीर्थ तीर्थराजविमले சாதுநாராயணதீர்த்த தீர்தராஜவிமலே – நாராயணதீர்த்தர் சொல்றார் – தூய்மைப் படுத்தக் கூடிய எல்லா தீர்த்தங்களிலும், இந்த ராம கிருஷ்ண கோவிந்த என்ற இந்த சர்வோத்தம ப்ரயாகைதான் தீர்த்த ராஜா அப்படீன்னு சொல்றார். இப்படி நாம பக்திக்கு ஒருஅற்புதமான ஒரு கீர்த்தனை. இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச தரங்கம்.

रामक्रुष्ण गोविन्देति नामसंप्रयोगे काममिह स्नातव्यं सर्वोत्तमप्रयागे |
दिग्देशकालानपेक्ष  सिद्धसर्वसुलभे सद्गुरुक्रुपासमुद्र सङ्गहेतुलाभे |
रामनामगङ्गया मिलितक्रुष्णनाम यामुने गोविन्दनाम सरस्वतिप्रथिते ||
योगिमानसपरमहंस कुलकलिते वागीशविष्णुरुद्रादि वाग्लहरीललिते |
सर्वलोकालोककाम साङ्गफलदाने निर्विशेष नित्यानन्द लाभसुनिदाने ||
ऋग्यजुस्सामादिवेद शाखिमूलविलसिते रागलोभादिसंताप शान्तिकरचरिते |
स्नानसन्ध्याजपहोम तर्पणानपेक्षिते हानिवृध्यादिरहिताखण्डसुखफलदे ||
स्नानं मानसिकं तस्य स्मरणं वाचनिकम् कीर्तनं कायिकं तस्य कीर्तने सुनर्तनम्
यागयोगरागभोग त्यागसंबन्धं विना भक्तिविरक्ति विञान द्वारा मुक्तिफलदे ||
ब्रह्मविद्यालक्षण निरीक्षणविचक्षणे बाधितघोरसंसार वारण तत्कारणे |
सर्वपापौघतिमिर चण्डसूर्यमण्डले साधुनारायणतीर्थ तीर्थराजविमले ||

rAmakrSNa gOvindEti. rAgA: bhairavi/manji. Adi tALA.

P: rAmakrSNa gOvindEti nAma sam-prayOgE kAmamiha snAtavyam sarvOttama prayAgE
C1: digdEsha kalAnapEkSa siddha sarva sulabhE sadguru krpA samudra sanga hEtulAbhE
2: rAma nAma gangayA milita krSNa nAma yAmunE gOvinda nAma sarasvatI prathitE
3: yOgi mAnasa paramahamsa kulakalitE vAgIsha viSNu rudrAdi vAg-laharI lalitE
4: sarva lOkAlOka kAma sAnga phaladAnE nirvishESa nityAnanda lAba su-nidhAnE
5: rgyajussAmAdi vEda shAkhi mUla vilasitE rAga lObhAdi santApa shAnti karacaritE
6: snAna sandhyA japa hOma tarpaNA napEkSitE hAnivrddhyAdi rahita akhaNDa sukha phaladE
7: snAnam mAnasikam tasya smaraNam vAcanikam kIrtanam kAyikam tasya kIrtanE su-nartanam
8: yAga yOga rAga bhOga tyAga sambandham vinA bhakti virakti vigjnyAna dvArA mukti phaladE
9: brahma vidyA lakSaNa nirIkSaNa vicakSaNE bAdhita ghOra samsAra vAraNa tatkAraNE
10: sarva pApaugha timira caNDa sUrya maNDalE sAdhu nArAyaNa tIrtha tIrtharAja vimalE

இந்த நாராயண தீர்த்தரோட கதை என்னன்னா, அவர் ஆந்தரத்துலேர்ந்து வந்தவர். குண்டூர் மாநிலத்துல வில்லத்தூர் அப்படீங்கற கிராமத்துல பொறந்தவர். அங்க அவர் படிச்சு முடிச்சு சாஸ்திரங்கள் வாசிச்சு கல்யாணம் ஆகி, ஒரு தடவை அவர் ஸ்னானத்துக்கு போன போது, ஆத்துல வெள்ளம் பெருகி அவரை அடிச்சுண்டு போறது. அப்போ அவர் உடனே ப்ரைஷ மந்த்ரத்தை சொல்லி ஆபத் சன்யாசம் வாங்கிக்கிறார். அவ்வளவு நம்பிக்கை அதுல, உடனே அந்த ஆறு வெள்ளம் தணிஞ்சு, இவர் உயிர் பிழைச்சு கரைக்கு வந்துடறார். அவருடைய மனைவி உத்தமி, கணவனை தெய்வமா நினைக்கிறவள். அவள் கிட்ட போய் எப்படி இதைச் சொல்றது மனசு வருத்தப்படுவாளேன்னு நினைச்சிண்டு ஆத்துக்கு வரார். அவர் வெள்ளை வேஷ்டியோட தான் வாரார், அவர் மனைவி அவரை பார்த்தவுடனே “என்னன்னா இது கோலம், ஏன் காஷாயம், தண்டம், முண்டனம்?” அப்படீன்னு கேட்கறாளாம், உடனே இவர் “அம்மா” அப்படீன்னு சொல்றார், உடனே அந்த அம்மாக்கு திரும்பியும் வெள்ளை வேஷ்டியில தெரியறார். “என்ன ஆச்சு?” ன்ன ஒடனே, “இந்த மாதிரி நான் ஆபத் சன்யாசம் வாங்கிண்டேன். பகவான் அதை உனக்கு உணர்த்தி இருக்கார். இது பகவானுடைய சங்கல்பம்.’ அப்படின்னு சொல்லி மனசை சமாதானப் படுத்திக்க சொல்றார். ‘அந்த அம்மாவும், கிருஷ்ணன் இடத்திலே தன்னோட கணவனை வெச்சு பூஜை பண்ணிண்டு இருக்கா.’ அப்படின்னு சிவன் ஸார் ஏணிப்படிகளில் மாந்தர்கள்ல நாராயண தீர்த்தரோட சரித்திரத்த ரொம்ப அழகா எழுதியிருக்கார்.

அதற்கப்புறம் நாராயண தீர்த்தர் போதேந்திர ஸ்வாமிகளை தரிசனம் பண்ணணும்ன்னு வர்றார். போதேந்திரர் அதுக்குள்ள சித்தி ஆயிட்டதால அவருடைய அதிஷ்டானத்தில கொஞ்ச நாள் இருந்துட்டு திருவையாறு போறார். அங்க ஒரு கோவில் வாசல்ல ஸ்வாமி ஒரு குழந்தையாட்டம் வந்து உட்கார்ந்து பக்ஷணங்களை சாப்பிட்டுண்டு இருக்கார். அவர்ட்ட நாராயண தீர்த்தர் ‘நீ யாரு?’ ன்ன உடனே,’நான் கோபாலன். என்னைத் தெரியலயா. உன்னோட நான் வாசிச்சேனே’ ன்னு சொல்றாராம் கிருஷ்ணர். இவர், ‘எனக்குத் தெரியலயே’ ன்ன உடனே, கூட படிச்சப்போ நடந்த விவரங்களை எல்லாம் அவருக்கு சொல்றார். ‘ஆமா. இதெல்லாம் நடந்தது வாஸ்தவம்’ ன்ன சொல்லி, ‘ஆனா நீ ஏன் இன்னும் வளரல?’ ன்னு கேக்கறாராம் இவர். ‘நான் வளரல. குழந்தையாவே இருந்துட்டேன்’ அப்படின்னு சொல்லிட்டு அவர் திரும்பவும் கொஞ்சம் பக்ஷணங்கள் எடுத்துண்டு வந்து கிடுகிடுன்னு சாப்படறார். இவர் உடனே, ‘இவ்ளோ சாப்படறியே உனக்கு வயித்த வலிக்கப் போறது’ ன்னாராம். ‘உனக்கு வயித்த வலிக்கறதா’ ன்னு ஸ்வாமி கேட்டாராம். உடனே இவருக்கு வயித்து வலி வந்துடுத்தாம். ‘ஐயோ வயித்த வலிக்கறதே’ ன்ன உடனே, ‘இரு உன் வயித்த நான் தடவி விடறேன். சரியாப் போய்டும்’ ன்னாராம் ஸ்வாமி. அப்ப இவர் சொன்னாராம், ‘கிருஷ்ணா, நீ யாருன்னு புரிஞ்சுண்டேன். நீ வயத்துல கை வைக்காத. என் தலைல கை வை. அநுக்கிரகம் பண்ணு எனக்கு.’ அப்படின்னு சொல்றார். கிருஷ்ணர் அவரோட தலைல கை வைச்சி அவருக்கு ஞானத்தைக் கொடுத்துடறார். ஆனா அவருக்கு அந்த வயித்த வலி கொஞ்ச நாள் இருந்துண்டே இருக்கு.

ஒரு தடவை வலி தாங்காம ஒரு பிள்ளையார் கோவில் வாசல்ல படுத்துக்கறார். அவர் கனவுல பிள்ளையார் வந்து, ‘நாளைக்கு கார்த்தால நீ எழுந்த உடனே யாரைப் பார்க்கிறாயோ அவர் பின்னாடியே போ. உன் வயித்து வலி சரியாயிடும்’ ன்னு சொல்றார். அடுத்த நாள் இவர் எழுந்த போது ஒரு வெள்ளைப் பன்றியைப் பார்க்கறார். பன்றி பின்னாடி போறதான்னு நினைச்ச போது, பிள்ளையார் சிலை கையை நீட்டி அந்த பன்றியை காமிக்கிறது. உடனே இவர் அந்த பன்றி பின்னாடியே ஓடறார். நாலு கிலோ மீட்டர் ஓடி ஒரு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கிட்ட வந்து, (‘பூபதிராஜபுரம்’ன்னு அந்த ஊருக்குப் பேரு) ஸ்வாமி சன்னிதிக்குக் உள்ளே போய் அந்த பன்றி மறைஞ்சுடறது. அப்ப இவர், ஸ்வாமியே வந்திருக்கார்ன்னு சந்தோஷப் படறார். அதோடு அவரோட வயித்த வலியும் போயிடறது. இந்த விஷயத்தை, ஜனங்கள் எல்லாம் தெரிஞ்சிண்டு, அந்த ஊருக்கே அப்புறம் ‘வரகூர்’ன்னு பேர் வச்சிருக்கா. அவரும் உத்தம மஹானா இருந்துண்டு நிறைய ‘க்ருதிகள்’லாம் எழுதியிருக்கார். அது தான் கிருஷ்ண லீலா தரங்கிணின்னு பேரு. அங்கேயே அவர் ‘நிர்யாணம்’.

அந்த கிருஷ்ணலீலா தரங்கிணியிலிருந்து தான் நான் இப்ப இந்த “ராம கிருஷ்ண கோவிந்தேதி” அப்டீங்கிற பாடல் நான் உங்களுக்கு சொல்லி காண்பிச்சேன். அவ்ளோ அழகா இருக்கு. இது ஏன் இன்னிக்கு ஞாபகம் வந்ததுன்னா, ஸ்வாமிகளுடய பூர்வாஸ்ரம மூத்த பிள்ளை, முதல் பிள்ளை ராமண்ணா. ராமநாதன்னு பேரு. ராமண்ணான்னு சொல்லுவா. அவர் ரெண்டு வாரம் முன்னாடி ஸித்தி அடைஞ்சார். அவருக்கு அவருடைய தம்பி ராகவன், முறைப்படி எல்லா அந்திம கார்யங்களும் பண்ணி, நிஜமாவே கோதானம் பண்ணி, அப்படி அவரை கரை ஏத்தினார். இந்த காலத்துல பிள்ளைகள் இருக்கறவா கூட அவ்வளவு பண்றதில்லை. ராகவன் அண்ணா ஸ்வாமிகள் கிட்டயே வேதம் படிச்சவர். வைதீகம் பண்றார். அப்படி வைதீகம் பண்ற ஒருத்தர், ராமண்ணாவுக்கு நல்லபடியா கார்யங்கள் பண்ணினார். ராமண்ணா பிரம்மச்சாரி. முன்னாடியே சொல்லியிருக்கேன். அவருக்கு அஞ்சு வயசு குழந்தை மாதிரி தான் மூளை வளர்ச்சி. retentive memory கிடையாது. எனக்கு ஒரு பாக்கியம். நான் ஸ்வாமிகள் ஆத்துல பழகும்போது, ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பெரிய எழுத்துல 1, 2, 3, 4 போட்டு தமிழ்ல இவருக்கு எழுதி கொடு’ அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்லி, அந்த புஸ்தகத்தை வெச்சுண்டு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை இவர் பாராயணம் பண்ணுவார். அதை கூட முழுக்க உட்கார்ந்து பண்றதுக்குள்ள ஏதாவது ஒரு வேலை கொடுப்பா. அப்படி வேலை பண்ணிண்டே இருப்பார் அவாத்துல. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடம் ஆகலை. ஆனா புஸ்தகத்தை வெச்சுண்டு படிப்பார். நாம ஜபங்கள் பண்ணிண்டே இருப்பார். ‘அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித’, நிறைய சொல்லுவார். ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ன்னு நிறைய ஜபிப்பார். ஸ்வாமிகள் ஒரு நோட்புக்ல ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ன்னு எழுதிக் குடுத்து மஹா பெரியவா கிட்டேயே இவர் அந்த நோட்புக்கை காண்பிச்சு பெரியவா அதை இரண்டு தடவை படிச்சாளாம். ஸ்வாமிகள் ராமண்ணா கிட்ட ‘உனக்காக ஒரு தடவை. எனக்காக ஒரு தடவை’ அப்படின்னு சொல்லி சந்தோஷப் படுவார்.

அந்த ராமண்ணா நாம பக்தி பண்ணிண்டு இருந்தார். ஸ்வாமிகள் சொல்வார் “இப்ப இவருக்கு ஞாபக சக்தி கம்மியாக இருக்கு. சந்த்யா வந்தனம் கூட பண்ண முடியாது. இந்த கீர்த்தனையில ‘ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே’ என்று இதையெல்லாம் எதிர்பார்க்காமல் நாமம் அனுக்ரஹம் பண்ணும் அப்படின்னு நாராயண தீர்த்தர் சொல்லி இருக்கார் இல்லியா? சிவன் ஸாருடைய நாராயண தீர்த்தர் சரித்திரத்தை படிச்சு பார்த்தாலும் பக்தி மார்கத்தின் பெருமையை அவ்வளவு அழகாக சொல்றார். அப்படி மகான்கள் இதை ஒத்துண்டு இருக்கா. ஒருத்தர் இதெல்லாம் பண்ண அசக்தராக இருந்தா என்ன பண்ண முடியும்? உடம்புல சக்தி இருந்தா தான் யோகம் பண்ண முடியும். புத்தி தீக்ஷணம் இருந்தா தான் சந்த்யாவந்தனம் முதலிய அனுஷ்டானங்கள் பண்ண முடியும். ராமண்ணா மாதிரி ஒருத்தர் இருந்தா, அவாளும் நாமத்துனால கரை ஏறலாம் ன்னு மகான்கள் ஆறுதலாக சொல்லி இருக்கா” அப்படின்னு சொல்வார்.

அப்படி ராமண்ணா நல்ல கதி அடைந்ததை கண்ணால பார்த்தேன். அவர் ஒரு ஆறு மாசம் உடம்பு ஸ்ரமப் பட்டார். 59 வயசு ஆகப்போறது. அது வரைக்கும் healthy ஆக இருந்து, எல்லாருக்கும் திருப்தியாக, எப்போதும் சிரிச்சுண்டு, நாம ஜபம் பண்ணிண்டு ஆனந்தமாக இருப்பார். ஒரு ஆறு மாசம் உடம்பு வந்து ஸ்ரமப் பட்டார். இன்னிக்கு சுபம். இன்னிக்கு தான் கேள்விப் பட்டேன். அவாத்துல சொன்னா ‘இந்த ஆறு மாசமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிண்டு இருந்தாராம். ரொம்ப வலி ஜாஸ்தியாக இருந்தா ‘சரவணபவ சிவ ராம கோவிந்த நாராயண மஹாதேவ’ ன்னு சொல்லிண்டு இருந்தார். நாம ஜபம் பண்ணிண்டு கஷ்டத்தை பொறுத்துண்டு, ஒரு யோகியாட்டம் சித்தி ஆனார்’ னு சொன்னா. ஸ்வாமிகள் சொன்னபடி ஸ்நானம், சந்த்யாவந்தனம், ஜபம் ஒண்ணும் பண்ண முடியலைன்னாலும் நாமம் காப்பாத்தும் அப்படின்னு வாழ்ந்து காண்பித்தார். ஒவ்வொருத்தரை பகவான் ஒவ்வொரு காரணமாக உலகத்தில் படைத்து இருக்கார். ராமண்ணாவை இதுக்காகவே படைச்சு இருந்தார் போல இருக்கு. நல்லபடியாக அந்திம கார்யங்களும் நடந்து அவர் நல்ல கதி அடைஞ்சார்ன்னு அதை பார்த்து எனக்கு ஒரு சந்தோஷம். அப்ப எனக்கு இந்த கிருஷ்ண லீலா தரங்கம் ஞாபகம் வந்தது.

அந்த ராமண்ணா போல நமக்கும் நாம பக்தி வரணும்னு வேண்டிக்கணும்.

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்பிரயோகே (15 min audio. Same as transcript above)

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

6 replies on “ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயோகே – நாராயண தீர்த்தர் தரங்கம்”

Don’t know what to say Sir. My Son is also ராமண்ணா but he can not chant any nama. Now I understand Why you have asked me to Chant “அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித” and ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’. I am chanting for him. Let Periyava take care of him.

Anna, this prvachanam brought in tears to me. What a power of Nama Paraayanam! You are absolutely spot on the fact that even for a person with proper family, Apara Kaariyangal aren’t done properly. Ramanna is truly a blessed soul for everything to have done as per Shaastra and that’s undoubtedly because of the Nama Paraayanam done for years.

It is a total treat for us to know new things through you every now and then. This time it’s Krishna Leela TharangiNi. All because of Swamigal’s anugraham Anna.

Sri MahaperiyavA Saranam
Sri SAR Saranam
Sri Swamigal Saranam

SWAMY,

PLS WRITE REGULARLY ON THIRUPPUGAZ,DO NT KNOW HOW TO COMMENT ON YOUR WORK,DOING SHASTANGA NAMASKARAM TOWARDS YOU.

HARA HARA SANKARA
JAYA JAYA SANKARA

Yes, I agree with Sri.Vadivelu I have no words to express the pleasure we are enjoying with Subramaniya bujangam,Narayana Theerthar tharangani,Kulasekara Alwar Mukuntha Mala,Valmeeki Ramyanam etc.Anna beautifully narates and explains to our hearts.Getting
tears in the eyes of joy that we also born in this noble country.Waiting for tomorrow Swamigalprasadham

Leave a Reply to V S VADIVELUCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.