Categories
Stothra Parayanam Audio

குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவு – Mukundamala by Kulasekara Perumaal audio

மகாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 7௦ வருடங்களுக்கு முன் வெளியிட்ட முகுந்தமாலா புத்தகத்தில் உள்ள பாடம் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருகிறது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த ஸ்தோத்ரத்தை நித்ய பாராயணத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவு (16 minutes audio of Mukundamala)

मुकुन्दमाला

वन्दे मुकुन्दमरविन्ददलायताक्षं कुन्देन्दुशङ्खदशनं शिशुगोपवेषम् ।

इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम्   ॥                    (१)

 

श्रीवल्लभेति वरदेति दयापरेति भक्तप्रियेति भवलुण्ठनकोविदेति ।

नाथेति नागशयनेति जगन्निवासेति आलापनं प्रतिपदं कुरु मे मुकुन्द ॥               (२)

 

जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।

जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्ग: जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः॥            (३)

 

मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे भवन्तमेकान्तमियन्तमर्थम् ।

अविस्मृतिस्त्वच्चरणारविन्दे भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥                      (४)

 

श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् ।

यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥                                  (५)

 

नाहं वन्दे तव चरणयोर्द्वन्द्वमद्वन्द्वहेतोः

कुम्भीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम् ।

रम्यारामामृदुतनुलता नन्दने नापि रन्तुं

भावे भावे हृदयभवने भावयेयं भवन्तम् ॥                                    (६)

 

नास्था धर्मे न वसुनिचये नैव कामोपभोगे

यद्यत् भव्यं भवतु भगवन्पूर्वकर्मानुरूपम् ।

एतत्प्रार्थ्यं मम बहुमतं जन्मजन्मान्तरेऽपि

त्वत्पादाम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु ॥                                   (७)

 

दिवि वा भुवि वा ममास्तु वासो नरके वा नरकान्तक प्रकामम् ।

अवधीरितशारदारविन्दौ चरणौ ते मरणेऽपि चिन्तयानि ॥                          (८)

 

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त: अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥                    (९)

 

चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्दहसिताननाम्बुजम् ।

नन्दगोपतनयं परात्परं नारदादिमुनिबृन्दवन्दितम् ॥                           (१०)

 

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि॥                 (११)

 

सरसिजनयने सशङ्खचक्रे मुरभिदि मा विरम स्व चित्त रन्तुम् ।

सुखतरमपरं न जातु जाने हरिचरणस्मरणामृतेन तुल्यम् ॥                           (१२)

 

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः

नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।

आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं

लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः॥                                 (१३)

 

भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।

विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥                 (१४)

 

भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं

कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका

नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥                                        (१५)

 

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले

दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन्

पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥                                   (१६)

 

माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे

माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।

मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्

माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥                           (१७)

 

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगणितश्रेयपदप्रापणात् |

सेव्य: श्रीपतिरेक एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||                                 (१८)

 

जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं

पाणिद्वन्द्व समर्चयाच्युतकथाः श्रोत्रद्वय त्वं श्रृणु ।

कृष्णं लोकय लोचनद्वय हरेर्गच्छाङिघ्रयुग्मालयं

जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं मूर्धन् नमाधोक्षजम् ॥                                (१९)

 

हे लोकाः श्रुणुत प्रसूतिमरणव्याधेश्चिकित्सामिमां

योगज्ञा: समुदाहरन्ति मुनयो यां याज्ञवल्क्यादय: ।

अन्तर्ज्योतिरमेयमेकममृतं कृष्णाख्यमापीयतां

तत्पीतं परमौषधं वितनुते निर्वाणमात्यन्तिकम् ॥                                    (२०)

 

हे मर्त्याः परमं हितं श्रुणुत वो वक्ष्यामि सङ्क्षेपतः

संसारार्णवमापदूर्मिबहुलं सम्यक् प्रविश्य स्थिताः ।

नानाज्ञानमपास्य चेतसि नमो नारायणायेत्यमुं

मन्त्रं सप्रणवं प्रणामसहितं प्रावर्तयध्वं मुहुः ॥                                 (२१)

 

पृथ्वीरेणुरणुः पयांसि कणिकाः फल्गुस्फुलिङ्गोलघु:

तेजो निःश्वसनं मरुत् तनुतरं रन्ध्रं सुसूक्ष्मं नभः ।

भक्ता: रुद्रपितामहप्रभृतयः कीटाः समस्ताः सुरा:

दृष्टे यत्र स तावको विजयते भूमावधूतावधिः ॥                         (२२)

 

बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः

कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना ।

नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां

अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥                          (२३)

 

हे गोपालक हे कृपाजलनिधे हे सिन्धुकन्यापते

हे कंसान्तक हे गजेन्द्रकरुणापारीण हे माधव ।

हे रामानुज हे जगत्त्रयगुरो हे पुण्डरीकाक्ष मां

हे गोपीजननाथ पालय परं जानामि न त्वां विना ॥                          (२४)

 

भक्तापायभुजङ्गगारुडमणिस्त्रैलोक्यरक्षामणि:

गोपीलोचनचातकाम्बुदमणिः सौन्दर्यमुद्रामणिः

यः कान्तामणिरुक्मिणीघनकुचद्वन्द्वैकभूषामणिः

श्रेयो देवशिखामणिर्दिशतु नो गोपालचूडामणिः ॥                                  (२५)

 

शत्रुच्छेदैकमन्त्रं सकलमुपनिषद्वाक्यसम्पूज्यमन्त्रं

संसारोत्तारमन्त्रं समुपचिततमसः सङ्घनिर्याणमन्त्रम् ।

सर्वैश्वर्यैकमन्त्रं व्यसनभुजगसन्दष्टसन्त्राणमन्त्रं

जिह्वे श्रीकृष्णमन्त्रं जप जप सततं जन्मसाफल्यमन्त्रम् ॥                     (२६)

 

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥                         (२७)

 

आम्नायाभ्यसनान्यरण्यरुदितं वेदव्रतान्यन्वहं

मेदश्छेदफलानि पूर्तविधयः सर्वं हुतं भस्मनि ।

तीर्थानामवगाहनानि च गजस्नानं विना यत्पद –

द्वन्द्वाम्भोरुहसंस्मृतिर्विजयते देवः स नारायणः ॥                              (२८)

 

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥                    (२९)

 

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥   (३०)

 

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि सुरे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥                           (३१)

 

मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।

हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥                 (३२)

 

तत्त्वं ब्रुवाणानि परं परस्मात् मधु क्षरन्तीव सतां फलानि ।

प्रावर्तय प्राञ्जलिरस्मि जिह्वे नामानि नारायणगोचराणि ॥                                  (३३)

 

इदं शरीरं परिणामपेशलं पतत्यवश्यं श्लथसंधि जर्जरम् ।

किमौषधैः क्लिश्यसि मूढ दुर्मते निरामयं कृष्णरसायनं पिब ॥                           (३४)

 

दारा वाराकरवरसुता ते तनूजो विरिञ्चिः

स्तोता वेदस्तव सुरगणो भृत्यवर्गः प्रसादः ।

मुक्तिर्माया जगदविकलं तावकी देवकी ते

माता मित्रं बलरिपुसुतस्तवय्यतोऽन्यन्न जाने ॥                            (३५)

 

कृष्णो रक्षतु नो जगत्त्रयगुरुः कृष्णं नमस्याम्यहं

कृष्णेनामरशत्रवो विनिहताः कृष्णाय तस्मै नमः ।

कृष्णादेव समुत्थितं जगदिदं कृष्णस्य दासोऽस्म्यहं

कृष्णे तिष्ठति सर्वमेतदखिलं हे! कृष्ण संरक्ष माम् ॥                        (३६)

 

तत्त्वं प्रसीद भगवन् कुरु मय्यनाथे

विष्णो कृपां परमकारुणिकः खिल त्वम् ।

संसारसागरनिमग्नमनन्त दीनं

उद्धर्तुमर्हसि हरे पुरुषोत्तमोऽसि ॥                                                                (३७)

 

नमामि नारायणपादपङ्कजं करोमि नारायणपूजनं सदा ।

वदामि नारायणनाम निर्मलं स्मरामि नारायणतत्त्वमव्ययम् ॥                               (३८)

 

श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे ।

श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥                                         (३९)

 

अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति ।

वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चित् अहो जनानां व्यसनाभिमुख्यम् ॥                        (४०)

 

ध्यायन्ति ये विष्णुमनन्तमव्ययं हृत्पद्ममध्ये सततं व्यवस्थितम् ।

समाहितानां सतताभयप्रदं ते यान्ति सिद्धिं परमां च वैष्णवीम् ॥                             (४१)

 

क्षीरसागरतरङ्गशीकरासारतारकितचारुमूर्तये ।

भोगिभोगशयनीयशायिने माधवाय मधुविद्विषे नमः ॥                                           (४२)

 

आश्चर्यमेतद्धि मनुष्यलोके सुधां परित्यज्य विषं पिबन्ति ।

नामानि नारायणगोचराणि त्यक्त्वान्यवाचः कुहकाः पठन्ति ॥                                  (४३)

 

लाटीनेत्रपुटीपयोधरधटी रेवातटीदुष्कुटी

पाटीरद्रुमवर्णनेन कविभिर्मूढै: दिनं नीयते |

गोविन्देति जनार्दनेति जगतां नाथेतिकृष्णेति च

व्याहारै: समयस्तदेकमनसां पुम्सामतिक्रामति ॥                                                   (४४)

 

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥                                          (४५)

 

यस्य प्रियौ श्रुतधरौ कविलोकवीरौ मित्रे द्विजन्मवरपारशवावभूताम् ।

तेनाम्बुजाक्षचरणाम्बुजषट्पदेन राज्ञा कृता कृतिरियं कुलशेखरेण ॥                          (४६)

முகுந்தமாலை

வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்

குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம் ஶிஶுகோ³பவேஷம் ।

இந்த்³ராதி³தே³வக³ணவந்தி³தபாத³பீட²ம்

ப்ருʼந்தா³வனாலயமஹம் வஸுதே³வஸூனும் ॥                          (1)

 

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி

ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।

நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி

ஆலாபனம் ப்ரதிபதம் குரு மாம் முகுந்த³ ॥                               (2)

 

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்

ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।

ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³

ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥                         (3)

 

முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே

ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।

அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³

ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த்॥                        (4)

 

ஸ்ரீ முகுந்த பதாம்போஜ மதுன: பரமாத்புதம் |

யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யதபாயின: ||                 (5)

 

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹேதோ:

கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபனேதும் ।

ரம்யாராமாம்ருʼது³தனுலதா நந்த³னே நாபி ரந்தும்

பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம்॥         (6)

 

நாஸ்தா² த⁴ர்மே ந வஸுனிசயே நைவ காமோபபோ⁴கே³

யத்³யத் ப⁴வ்யம் ப⁴வது ப⁴க³வன்பூர்வகர்மானுரூபம் ।

ஏதத்ப்ரார்த்²யம் மம ப³ஹுமதம் ஜன்மஜன்மாந்தரேऽபி

த்வத்பாதா³ம்போ⁴ருஹயுக³க³தா நிஶ்சலா ப⁴க்திரஸ்து॥            (7)

 

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ

நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।

அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³

சரணௌ தே மரணேऽபி சிந்தயானி ॥                              (8)

 

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே॥                 (9)

 

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் |

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥              (10)

 

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி॥                                 (11)

 

ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரே

முரபி⁴தி³ மா விரம ஸ்வ சித்த ரந்தும் ।

ஸுக²தரமபரம் ந ஜாது ஜானே

ஹரிசரணஸ்மரணாம்ருʼதேன துல்யம்॥                                        (12)

 

மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம:॥                     (13)

 

ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வ வாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥                            (14)

 

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥                            (15)

 

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥     (16)

 

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே

மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய அன்யதா³க்²யானஜாதம் ।

மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்

மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரேऽபி ॥    (17)

 

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||    (18)

 

ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்

பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா:² ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருʼணு ।

க்ருʼஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்

ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் ॥       (19)

 

ஹே லோகா: ஶ்ருணுத ப்ரஸூதிமரணவ்யாதே⁴ஶ்சிகித்ஸாமிமாம்

யோக³ஜ்ஞா: ஸமுதா³ஹரந்தி முனயோ யாம் யாஜ்ஞவல்க்யாத³ய: ।

அந்தர்ஜ்யோதிரமேயமேகமம்ருʼதம் க்ருʼஷ்ணாக்²யமாபீயதாம்

தத்பீதம் பரமௌஷத⁴ம் விதனுதே நிர்வானமத்யந்திகம் ॥          (20)

 

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:

ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।

நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்

மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥      (21)

 

ப்ருʼத்²வீரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ऽனல –

ஸ்தேஜோ நி:ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।

பக்தா: ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா

த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ⁠பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥              (22)

 

ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை:

கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா ।

நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥        (23)

 

ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ ।

ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம்

ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் ஜாநாமி ந த்வாம் வினா ॥      (24)

 

ப⁴க்தாபாயபு⁴ஜங்க³கா³ருட³மணிஸ்த்ரைலோக்யரக்ஷாமணிர்

கோ³பீலோசனசாதகாம்பு³த³மணி: ஸௌந்த³ர்யமுத்³ராமணி: |

ய: காந்தாமணிருக்மிணீக⁴னகுசத்³வந்த்³வைகபூ⁴ஷாமணி:

ச்ரேயோ தே³வசிகா²மணிர்தி³சது நோ கோ³பாலசூடா³மணி: ॥       (25)

 

சத்ருச்சே²தை³கமந்த்ரம் ஸகலமுபனிஷத்³வாக்யஸம்பூஜ்யமந்த்ரம்

ஸம்ஸாரோத்தாரமந்த்ரம் ஸமுசிததமஸ: ஸங்க⁴னிர்யாணமந்த்ரம் |

ஸர்வைச்வர்யைகமந்த்ரம் வ்யஸனபு⁴ஜக³ஸந்த³ஷ்டஸந்த்ராணமந்த்ரம்

ஜிஹ்வே ஸ்ரீக்ருʼஷ்ணமந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்மஸாப²ல்யமந்த்ரம்॥ (26)

 

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥      (27)

 

ஆம்னாயாப்⁴யஸனான்யரண்யருதி³தம் வேத³வ்ரதான்யன்வஹம்

மேத³ச்சே²த³பலானி பூர்தவித⁴ய: ஸர்வம் ஹுதம் ப⁴ஸ்மனி ।

தீர்தா²நாமவகா³ஹனானி ச க³ஜஸ்னானம் வினா யத்பத³ –

த்³வந்த்³வாம்போ⁴ருஹஸம்ஸ்ம்ருʼதிமர்விஜயதே தே³வ: ஸ நாராயண:॥ (28)

 

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥                  (29)

 

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥      (30)

 

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா

ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।

யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேஶமல்பார்த²த³ம்

ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥     (31)

 

மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே

மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।

ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி

ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥                       (32)

 

தத்த்வம் ப்³ருவாணானி பரம் பரஸ்மாத்

மது⁴ க்ஷரந்தீவ ஸதாம் பலானி |

ப்ராவர்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே

நாமானி நாராயண கோ³சராணி ॥                        (33)

 

இத³ம் ஶரீரம் பரிணாமபேசலம்

பதத்யவச்யம் ச்லத²ஸந்தி⁴ ஜர்ஜரம் ।

கிமௌஷதை:⁴ க்லிச்யஸி மூட⁴ து³ர்மதே

நிராமயம் க்ருʼஷ்ணரஸாயனம் பிப³ ॥                 (34)

 

தா³ரா வாராகரவரஸுதா தே தனூஜோ விரிஞ்சி:

ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருʼத்யவர்க:³ ப்ரஸாத:³ ।

முக்திர்மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே

மாதா மித்ரம் ப³லரிபுஸுதஸ்த்வய்யதோன்யம் ந ஜானே ॥          (35)

 

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥        (36)

 

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வன் குரு மய்யனாதே²

விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: கி²ல த்வம் ।

ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³னம்

உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோऽஸி ॥                   (37)

 

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயண நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥                   (38)

 

ஸ்ரீநாத² நாராயண வாஸுதே³வ

ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே

ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥               (39)

 

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண

கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித்

அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥        (40)

 

த்⁴யாயந்தி யே விஷ்ணுமனந்தமவ்யயம்

ஹ்ருʼத்பத்³மமத்⁴யே ஸததம் வ்யவஸ்தி²தம் ।

ஸமாஹிதாநாம் ஸததாப⁴யப்ரத³ம்

தே யாந்தி ஸித்³தி⁴ம் பரமாம் ச வைஷ்ணவீம் ॥      (41)

 

க்ஷீரஸாக³ரதரங்க³சீகரா

ஸாரதாரகிதசாருமூர்தயே ।

போ⁴கி³போ⁴க³சயனீயசாயினே

மாத⁴வாய மது⁴வித்³விஷே நம: ॥                   (42)

 

ஆஸ்ச்சர்யம் ஏதத்ஹி மனுஷ்யலோகே

ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி |

நாமானி நாராயண கோசராணி

த்யக்த்வான்ய வாச: குஹகா: படந்தி ||                   (43)

 

லாடீ நேத்ரபுடீ பயோதரதடீ ரேவாதடீ துஷ்குடீ

பாடீரத்ரும வர்ணனேன கவிபிர்மூடை: தினம் நீயதே |

கோவிந்தேதி ஜனார்தனேதி ஜகதாம் நாதேதி க்ருஷ்ணேதி ச

வ்யாஹாரை: ஸமய: ததேகமனஸாம் பும்ஸாம் அதிக்ராமதி ||       (44)

 

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம்

அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே

ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||                          (45)

 

யஸ்ய ப்ரியௌ ச்ருதித⁴ரௌ கவிலோகவீரௌ

மித்ரே த்³விஜன்மவர பாராசவாவபூ⁴தாம் ।

தேநாம்பு³ஜாக்ஷசரணாம்பு³ஜஷட்பதே³ன

ராஜ்ஞா க்ருʼதா க்ருʼதிரியம் குலசேக²ரேண ॥              (46)

குலசேகர ஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் கலி 28வதான பராபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் கருதப் படுகிறார்.

இவர் தன் வீரம் மிகுந்த நால்வகைப் படையால் எதிரிகளை வென்று புறம் கண்டு சேர நன்னாட்டில் அமைதி நிலவச் செய்து செங்கோல் ஆட்சி செய்து வந்தார். இவர் மன்னர் குலத்தில் பிறந்திருந்தும், படைபலமும் பெரும் செலவமும் பெற்றிருந்தும், மானுட வாழ்க்கையில் பற்றின்றி மாலவன் சேவையை மனம் உகந்து செய்து வந்தார். எப்பொழுதும் அவன் அடியார்களால் சூழப் பெற்றவராய் அவன் நாமம் போற்றியும், அவன் திருவிளையாடல்களை அடியார்கள் கூறக் கேட்டும் வந்தார்.

திருவரங்கனையும் திருவேங்கடவனையும் மற்றும் அவன் உறையும் மற்ற தலங்களையும் தரிசித்து அத்தலங்களிலே உள்ள அடியாரோடு இணயும் நாள் எந்நாளோ என்ற ஏக்கத்தில் இருந்தார்.புராண இதிகாசங்களின் சாரமான முகுந்த மாலையைப் பாடி அருளினார்.

ஸ்ரீ வால்மீகி பகவான் அருளிச் செய்த இராம காதையின் மீது மிகுந்த பற்றுடையவராய் அதை ஓதச் செய்து கேட்டு மகிழ்வதை பொழுது போக்காய்க் கொண்டிருந்தார். ஒரு நாள் இராமன் சீதைக்குக் காவலாய் இலக்குவனை நிறுத்தி விட்டுத் தனியொருவராய் கரன் திரிசிரன் தூஷணன் முதலான பதிநான்காயிரம் அரக்கர்களுடன் போரிடத் துணிந்த கதை கேட்க நேர்ந்தது. உடனே “என்னப்பன் இராமனுக்கு என்னாகுமோ? துணையாய்ச் செல்ல எவருமில்லையே?” என்று எண்ணினார். தன் நால்வகைப் படையையும் திரட்டி தம் தலைமையில் இராம பிரானுக்கு உதவி செய்யக் கிளம்பினார்.

இதைக்கண்ட அமைச்சர்கள் அரசர் தம் சொல்லை கோட்கும் மனநிலையில் இல்லை என்பதனை உணர்ந்தனர். தூதுவர் போல் சிலரை அனுப்பி “மன்னா! இராம பிரான் தனியொருவராகவே அந்தப் பதிநான்காயிரம் அரக்கர்களை அழித்து வெற்றியுடன் திரும்பினார்” என்று சொல்லச் செய்தனர். மகிழ்ந்த மன்னரும் படையோடு நாடு திரும்பினார்.

கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். இதற்கெல்லாம் வைணவ அடியாரோடு வேந்தன் கொண்டிருக்கும் தொடர்பே காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும் தீட்டினர். அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப் பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து வைத்தனர். அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது அடியவரே என்று பழி சுமத்தினர். ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.

அடியாரை மதிக்காத, பொறுக்காத மக்களிடையே வாழ விருப்பற்ரவராய் சேரலர்கோன் தன் மகனுக்கு முடி சூட்டி வைத்து “ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்தார். அடியவர் குழாத்தொடு கூடியருந்து, அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து,  ஆழ்வார் பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தன் வாழியே

அணியரங்கர் மணத்தூணை யமர்ந்த செல்வன் வாழியே

வஞ்சிநக ரந்தன்னை வாழ்வித்தான் வாழியே

மாசிதனிபற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே

அஞ்சலெனக் குடப்பாம்பில் கையிட்டான் வாழியே

அநவாத மிராமகதை யகமகிழ்வான் வாழியே

செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே

சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

Article Source – <a href=”https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81″ target=”_blank” rel=”noopener noreferrer”>குலசேகர_ஆழ்வார்_வரலாறு</a>

2 replies on “குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவு – Mukundamala by Kulasekara Perumaal audio”

நமஸ்காரம்…கடந்த இரண்டு நாட்கள் ஆனந்தமாக கழிந்தது.வெகு நாட்களாகவே வரகூர் செல்ல ஆசை..முந்தாநாள் நிறைவேறியது.அதற்க்கு முந்தையநாள் ஸ்ரீ நாராயண தீர்த்தர் பற்றிய பதிவு. நானும் என் மனைவியும் வரகூர் சென்றோம்.ஸ்ரீ லக்ஷ்மிநாராயணனை கண்குளிர சேவித்தோம்.நாங்கள் மட்டுமே..பின் தஞ்சை சென்று இரவு தங்கி..காலை புறப்பட்டு மன்னார்குடி முத்துப்பேட்டை அருகே உள்ள “தில்லைவிளாகம்”..ஸ்ரீ வீர கோதண்ட ராமர்”,லக்ஷ்மணன்,சீதாதேவி , “தாஸ்ய பாவத்தில் சிறிய திருவடி” மூலவர்கள் ஐம்பொன் சிலை.வலதுகரத்தில் ராம சரம்…சிதம்பரம்போல் கோவிலின் வலதுபுறத்தில் …பெரிய சிவாலயம்…மஹாபெரியவா இந்த ஸ்தலம் சிதம்பரத்திற்கு முந்தையதாக இருக்கலாம் என சொல்லி இருக்கார்..குளம் வெட்டும்போது கிடைத்த சிலைகள்…அற்புத தரிசனம்…எல்லாம் மஹாபெரியவா அனுக்கிரஹம்..

Namaste Rama Rama,

Heard this 3 times coming right out of a day full of data crunching at work and no-sense Whatsapps, the simple effect was pacifying the disturbed senses.

आश्चर्यमेतद्धि मनुष्यलोके सुधां परित्यज्य विषं पिबन्ति ।

नामानि नारायणगोचराणि त्यक्त्वान्यवाचः कुहकाः पठन्ति ॥ ४३ ॥

Kulasekara Perumal with all his Bhakti wonders as above is certainly very understandable.Since comparing the respite I got hearing this just 3 times,wonder why it did not occur once to go back to hear this once when I am stressed .

Hard to get answers to such personal phenomenons when it cannot be even be solved by Kulasekara Perumal.:)Many thanks to the effort to bring this is in a sweet format where we can hear the audio and follow the verses in the site.

How to thank the special directive which brought me to hear this on this long day full of stress and listlessness (working over the weekend ..)

Regards
Sujatha.R

Leave a Reply to venugopal KCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.