Categories
Mukunda Mala

முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 3 and 4)

குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்தமாலை ஸ்தோத்திரத்துல ஒவ்வொரு ஸ்லோகமா அர்த்தம் பார்த்துண்டு இருக்கோம். இரண்டு ஸ்லோகம் பார்த்திருக்கோம். இன்னிக்கு மூணாவது ஸ்லோகம்

जयतु जयतु देवो देवकीनन्दनोऽयं
जयतु जयतु कृष्णो वृष्णिवंशप्रदीपः ।
जयतु जयतु मेघश्यामलः कोमलाङ्गो
जयतु जयतु पृथ्वीभारनाशो मुकुन्दः ॥ 3 ॥

ஜயது ஜயது தே³வோ தே³வகீனந்த³னோऽயம்
ஜயது ஜயது க்ருʼஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீ³ப: ।
ஜயது ஜயது மேக⁴ஶ்யாமல: கோமலாங்கோ³
ஜயது ஜயது ப்ருʼத்²வீபா⁴ரனாஶோ முகுந்த:³ ॥ 3 ॥

இதுக்கு முந்தின ஸ்லோகத்துல

ஶ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி ன்னு பகவானுடைய நாமங்களை கீர்த்தனம் பண்ணின உடனேயே, முகுந்தன், இந்த பக்தனுக்கு நாம தரிசனம் கொடுக்கணும்னு குலசேகர ஆழ்வாருடைய மனசுல சாக்ஷாத்காரம் ஆயிட்டாராம். அதனால ஆழ்வார் பல்லாண்டு பாடறார். ஜயது ஜயது ன்னு பிரதிநந்தனம் பண்றார். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்னு சொல்றார். அயம் தேவகிநந்தன: இந்த தேவகிநந்தனன்னு சொன்னதுனால அவருக்கு மனசுல பக்கத்துல ஸ்வாமியை தர்சனம் பண்ணி அப்படி ஸ்தோத்ரம் பண்றார் னு தெரியறது.

ஜயது ஜயது தேவோ தேவகி நந்தநோயம். தேவ: ன்னா படைத்தல், காத்தல், அழித்தல் அப்படீங்கிற மூன்று காரியங்களையும் விளையாட்டாக செய்யக் கூடிய தெய்வம்னு அர்த்தம். கம்ப நாட்டாழ்வார் கூட

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும், நீங்கிலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

ன்னு முதல் பாட்டிலேயே சொல்றார் இல்லையா! அந்த தெய்வம் தேவகீநந்தன: தான். தேவகியினுடைய குழந்தையா வந்த அந்த கிருஷ்ணன்தான் சாக்ஷாத் பரம்பொருள்னு இந்த முதல் வரிக்கு அர்த்தம் சொல்றார். இந்த இடத்துல ஒரு அழகான விஷயம் சொல்றார். ஸஹஸ்ரநாமத்துல தேவகீநந்தன: ஸ்ரஷ்டா: க்ஷிதீச: பாபநாசன: அப்படீங்கிற வரி எடுத்துண்டு ஸ்ரஷ்டான்னா உலகமெல்லாம் ஸ்ருஷ்டி பண்றவர்னு அர்த்தம். க்ஷிதீச:ன்னா காப்பாத்தறவர்னு அர்த்தம். பாபநாசன: னா அப்படீங்கறதுக்கு யார் பகவானை தியானம் பண்றாளோ அவாளோட பாபங்களை எல்லாம் போக்கறவர்னு ஒரு அர்த்தம் இருக்கு. பாபிகளை நாசம் பண்றவர் அப்படீன்னு ஒரு அர்த்தம் சொல்லி, இப்படி ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் பண்றது தேவகீநந்தன: தான்னு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அர்த்தம் சொல்லியிருக்கார். மஹா பெரியவா கூட தத்வம் தத்வவிதேகாத்மா, ஜன்மம்ருத்யுஜராதிக: அப்படீங்கிற வரிக்கு தத்வம் – உண்மை, ஞானம், பரம்பொருள். தத்வவித்: அந்த ஞானத்தை யார் பெறுகிறார்களோ, அடைகிறார்களோ அந்த ஞானி, இந்த ஞானமும், ஞானத்தை அடைந்தவனும் ஏகாத்மா. இந்த பரம்பொருளும், ஞானியும் ஒண்ணு தான். இப்பேற்பட்டவன் ஜன்மம்ருத்யுஜராதிக:. அப்படிபட்ட ஞானத்தை அடைந்தவன் மீண்டும் வந்து பிறக்க மாட்டான். அவன் ஜன்ம, ம்ருத்யு, ஜராவை தாண்டி மோக்ஷம் அடைவான்னு இந்த ஒரு வரிக்கு அர்த்தம் சொல்லி இப்படி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துல நிறைய வரிகளில் நாமங்கள் ஒண்ணுகொண்ணு கோத்துண்டு போறது அப்படீன்னு சொல்றா. அந்த மாதிரி இந்த தேவகீ நந்தனனா வந்த கிருஷ்ணன் தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் பண்ற பரம்பொருள் அப்படீன்னு அர்த்தம் சொல்லியிருக்கார். அயம் தேவகி நந்தன: இந்த என்னுடைய தெய்வமான கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்னு முதல் வரிக்கு அர்த்தம்.

ஜயது ஜயது கிருஷ்ணோ வ்ருʼஷ்ணிவம்ஶப்ரதீப: அந்த வ்ருஷ்ணி வம்சத்தின் குலவிளக்காக வந்து பிறந்த கிருஷ்ணன் வெற்றியோடு விளங்கட்டும்.

ஜயது ஜயது மேகச் சியாமள: கோமளாங்க: ரொம்ப அழகான அங்கங்கள். அந்த அங்கங்களையும், மேகச்சியாமள: மேகத்தைப் போன்ற கரிய நிறத்தைக் கொண்ட மிருதுவான அங்கங்களைக் கொண்ட கிருஷ்ணன் ன்னு அந்த ரூபத்தை தியானம் பண்றார். அவர் மனசுல அந்த சாக்ஷாத்காரம் அடைந்த அந்த கிருஷ்ணனுடைய ரூபத்தை நினைச்சு கொண்டாடறார்.

ஜயது ஜயது ப்ருத்விபாரநாஷோ முகுந்த: ன்னு இந்த ப்ருத்வி பாரநாஷன:, முகுந்த: அப்படீங்கிற வரிக்கு ‘எப்போ பகவான் ப்ருத்வி பாரத்தை குறைச்சார்? மஹாபாரதத்துல மஹாபாரதப் போரின் போது கிருஷ்ணர், அந்த அர்ஜுனனுக்கு ஸாரதியா இருந்து பதினெட்டு அக்ஷோணி சேனைகளையும் வதம் பண்ணி ப்ருத்வி பாரத்தைக் குறைச்சார். ஸ்ரீமத் பாகவதத்துல கிருஷ்ணனை எதிர்த்து நின்னு யுத்தம் பண்ணி உயிரை விட்டாக் கூட அவாளுக்கு முக்தின்னு வர்றது. அப்படி அந்த யுத்தத்துல அந்த பார்த்தசாரதியை தரிசனம் பண்ணிண்டு எவர்கள் உயிரை விட்டார்களோ அவா எல்லாரும் அந்த கிருஷ்ணஸாயுஜ்யம் அடைஞ்சு முக்தி அடைந்தார்கள். அந்த ‘ப்ருத்விபாரநாஷோ முகுந்த:’ முகுந்த: என்கிறதுக்கு முக்தியை தருபவன்னு பொருள். அதுனால இப்படி ஓர் அழகான அர்த்தம் சொல்லியிருக்கார்.

அப்படி அந்த பார்த்தசாரதியை தியானம் பண்ணிண்டு உயிர் பிரியணும், அப்படீன்னு சொல்லும்போது எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகளோட ஞாபகம் வர்றது. அவர் பேர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அப்படீன்னு இருந்தாகூட நிறைய பேர் இப்ப திருவல்லிக்கேணி பெரியவான்னு சொல்றா. அந்த திருவல்லிக்கேணி பெரியவான்னு அந்த பேர் அவருக்கு வரும்படியாக அவர் 1950 ல திருவல்லிக்கேணி வந்தார். 2004 ல ஸித்தி ஆகிற வரைக்கும் திருவல்லிக்கேணியிலயே இருந்தார். நடுவுல ஒரு வாட்டி மஹா பெரியவா ஒரு நிலத்தை குரோம்பேட்டையில் யாராவது ஸத்பாத்ரதுக்கு கொடுக்கணும்னு ஒரு தனிகர் கேட்டபோது, மஹா பெரியவா கிட்ட வந்து ஒருத்தர் கேட்கறார். பெரியவா திருவல்லிகேணியில கல்யாணராம பாகவதர்னு இருக்கார். அவருக்கு கொடுன்னு சொல்றா. அந்த தனிகர் ஸ்வாமிகளைத் தேடிண்டு வந்து, அப்ப ஸ்வாமிகள் வெள்ளை வேஷ்டி கட்டிண்டு க்ருஹஸ்த்தரா இருக்கார். அவர் கிட்ட வந்து, இந்த மாதிரி பெரியவா இந்த நிலத்தை உங்களுக்கு கொடுக்கச் சொன்னா அப்படீன்ன போது ஸ்வாமிகள், எனக்கு இந்த திருவல்லிகேணியில பார்த்தசாரதியினுடைய திருவடி வாரத்துலேயே இருக்கணும்னு ஆசை. அதனால இது எனக்கு வேண்டாங்கறாராம். நினைச்சு பார்க்கணும். சுவாமிகளோட பக்தி அவ்ளோ நிஸ்சலமான, உண்மையான பக்தி. அவர் தெய்வ வழிபாட்டை, கிருஷ்ணனை ரசிச்சு, ரசிச்சு அனுபவிச்சார். உலக விஷயங்கள் பணம், புகழைக் கண்டு ரொம்ப பயந்தார். நாம நேர் மாறா இருக்கோம். பொழுது விடிஞ்சு, கண்ணைத் திறந்தா இன்னிக்கு எப்படி சம்பாதிக்கப் போறோம்னு நினைக்கறோம். உலக விஷயங்கள்ல அவ்ளோ ருசி நமக்கு. ஆனா பகவானோட ருசி தெரியவே மாட்டேங்கறது. அப்படி மஹான்கள் தான் பகவானை அனுபவிச்சு, அந்த ருசியை காண்பிச்சு கொடுத்திருக்கா. இருந்தாலும் வந்தவர் insist பண்றார். அப்போ அங்க விஸ்வநாத ஐயர் னு ஸ்வாமிகள் கிட்ட ரொம்ப பக்தியோட ஒருத்தர் இருந்தார். அவர் flat promote பண்றவர். அவர் ‘நான் இந்த குரோம்பேட் நிலத்தை எடுத்துண்டு அங்க flat கட்டி வித்து அந்த பணத்துல இந்த திருவல்லிகேணியிலேயே இவருக்கு ஒரு வீடு கட்டித் தரேன். அதுல மீதி இருக்கிற பணத்தையும் இவர் பேர்ல deposit பண்றேன்’ ன்னு சொல்லி அந்த மாதிரி அவர் பண்றார். அதனால திருவல்லிகேணியில அவர் ஒரு வீடு கட்டி கொடுத்தார். பண்டால வேணுகோபால நாயக்கன் தெருல. அதுலதான் ஸ்வாமிகள் இருந்தார். அந்த வீடே ஒரு ஆஸ்ரமம் மாதிரி, ஒரு மடம் மாதிரி இருந்தது. அங்க தான் அவர் ஸந்யாஸம் வாங்கிண்டார். ஸந்யாஸம் வாங்கிண்ட பின்ன சிவன் சார் அந்த வீட்டிலேயே இருன்னு சொன்னார். அதனால அந்த வீட்டிலேயே இருந்தார். அங்க தான் ஸித்தி ஆனார்.

திருவல்லிகேணியிலயே வசித்தார். ஏழைகளுக்கு எளியவரா இருந்தார். அதனால அவருக்கு திருவல்லிக்கேணி பெரியவான்னே ஒரு பேரு வந்துடுத்து. அது ஏன் இருந்தார்னா, அந்த பார்த்தசாரதியோட த்யானத்துலேயே இருக்கணும். பார்த்தசாரதியை தரிசனம் பண்ணனும். இந்த ப்ருத்விபாரநாஷோ முகுந்த: – அப்படீங்கிறதுக்கு அந்த பார்த்தசாரதியை பார்த்துண்டு உயிரை விட்ட எல்லாரும் கிருஷ்ணா சாயுஜ்யம் அடைஞ்சு முக்தி அடைஞ்சான்னு அர்த்தம் சொல்லியிருக்கார். அதை படிச்ச உடனே எனக்கு ஸ்வாமிகள் ஞாபகம் வந்தது. அவர் ஆசைப்பட்ட அதே மாதிரி அவருக்கு முக்தி கிடைச்சுது.

அடுத்த ஸ்லோகம்

मुकुन्द मूर्ध्ना प्रणिपत्य याचे
भवन्तमेकान्तमियन्तमर्थम् ।
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे मेऽस्तु भवत्प्रसादात् ॥ ४ ॥

முகுந்த³ மூர்த்⁴னா ப்ரணிபத்ய யாசே
ப⁴வந்தமேகாந்தமியந்தமர்த²ம் ।
அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥ 4 ॥

ஹே முகுந்தா ‘மூர்த்நா ப்ரணிபத்ய’ உன்னுடைய பாதங்கள்-ல என்னுடைய தலையை வெச்சு வணங்கி நமஸ்காரம் பண்ணி நான் ஒண்ணு வேண்டிக்கறேன். ‘பவந்தம் யாசே’ – உன்கிட்ட ஒண்ணு வேண்டிக்கறேன். ஒரே வேண்டுதல். ஏகாந்தம் – இதோட பலன், முடிவு எல்லாமே ஒண்ணுதான். ஒரே ஒரு பிரார்த்தனை தான்

அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே³
ப⁴வே ப⁴வே மேऽஸ்து ப⁴வத்ப்ரஸாதா³த் ॥

உன்னுடைய தயவுனால எனக்கு வேண்டிய வரம் ஒண்ணு தான். உன்னுடைய ப்ரஸாதத்துனால எனக்கு ஒரே ஒரு வரத்தைக் கொடு. போன ஸ்லோகத்துல அந்த கிருஷ்ணனை தர்சனம் பண்ணதுனால இப்ப அந்த கிருஷ்ணன் கிட்ட ஒரு வரம் கேட்கறார்.

அவிஸ்ம்ருʼதிஸ்த்வச்சரணாரவிந்தே – உன்னுடைய பாதத் தாமரைகளை என்னிக்கும் மறக்காம இருக்கணும். இந்த ஒரு வரம் கொடு ன்னு கேட்கறார். முகுந்தன் ன்னா முக்தியை கொடுப்பவன். ‘நீ முக்தியை கொடுப்பியா இருக்கும். ஆனா எனக்கு வேண்டியது எத்தனை ஜன்மம் எடுத்தாலும் உன்னை மறக்காம இருக்கணும்’ அப்படீன்னு த்வனிக்கற மாதிரி கேட்கறார். இந்த அவிஸ்ம்ருʼதி என்கிற வார்த்தைக்கு ‘இந்த உடம்புங்கிறது, வந்துண்டு போயிண்டே இருக்கு. எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கறோம். ஆனா பகவான் கிட்ட பக்தி பண்றது அப்படீங்கிற அந்த ஞானம் எல்லா ஜன்மத்துலயும் இருக்கணும் அப்படீன்னு, இதை ‘த்ருவாஸ்ம்ருதி:’ ன்னு உபநிஷத்லயே சொல்லியிருக்காம். அந்த மாதிரி பகவானோட பாதங்களை மறக்காம இருக்கணும். ‘புழுவாய் பிறக்கிகினும் புண்ணியா நின் பொன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்’ அப்படீன்னு அப்பர் ஸ்வாமிகள் வேண்டின மாதிரி மஹான்கள் ‘எனக்கு இது கடைசி ஜன்மம்’ னு நினைச்சுக்கறது இல்ல. அது பகவானோட இஷ்டம். எத்தனை ஜன்மா வேணா கொடுக்கட்டும். அவரோட சரணாரவிந்தத்துல பக்தியை மட்டும் எனக்கு கொடுக்கட்டும் அப்படீன்னு வேண்டிக்கறா.

“நாத யோனி ஸஹஸ்ரேஷு யேஷு யேஷு பவாம்யஹம் |

தேஷு தேஷு அச்யுதா பக்திரச்யுதாஸ்து சதாத்வயி ||

அச்யுத: ங்கிற வார்த்தைக்கு ‘பகவான் அவருடைய உயர்ந்த நிலையிலிருந்து நழுவாமலிருப்பவர்’ன்னு ஒரு அர்த்தம். அந்த நழுவாமலிருத்தல் என்கிற வார்த்தையை வெச்சுண்டு உன்னுடைய பாத பக்தியிலிருந்து, அச்சுதனிடத்தில் பக்தியிலிருந்து. நான் எத்தனை ஜன்மம் எடுத்தாலும், எப்படி பிறந்தாலும், பக்தியிலிருந்து நழுவாமலிருக்கணும், ன்னு இந்த பிரஹ்லாதன் பண்ணின பிரார்த்தனை பாகவதத்துல இருக்கு.

இந்த இடத்துல சுந்தராச்சார் இன்னொரு விஷயம் சேர்த்திருக்கார். ராகவானாந்தர்ங்கிறவர் இந்த முகுந்தமாலைக்கு வ்யாக்யானம் எழுதியிருக்காராம். அந்த வ்யாக்யானத்துல முகுந்த அஷ்டாதசாக்ஷர மஹாமந்த்ரம் னு ஒண்ணு இங்க கொடுத்திருக்கார். “ஸ்ரீமந் முகுந்த சரணௌ ஸதா சரணமஹம் ப்ரபத்யே’ அப்படீங்கிற அந்த மஹாமந்திரத்தை வெச்சுசுண்டுதான் இந்த முகுந்த மாலாங்கிற ஸ்தோத்திரத்தை பண்ணியிருக்கார், அப்படீன்னு ஒண்ணு எழுதியிருக்கார்.

அடுத்த ஸ்லோகம் ‘ஸ்ரீமுகுந்த பதாம்போஜ மதுன:’ நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை >>

2 replies on “முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை”

Namaste Rama Rama,

So intelligently Sakshathkaram to Kulasekhara Perumal pointed out through “ayam”. Next is normally “vara pradhanam” by Mukundan (goes without saying), sure Devaki Nandan would have asked Kulasekhara Perumal what you want.

This reminded me of the same Sri Hari’ vara pradhanam to his three Bhakthas Bali, Dhruva and Prahlaada.

Bali was given protection in the nether world and a chance to visit his people every year (Onam). Bali continues this to date is the belief.

Lord granted Dhruva 26000 years of glorious rule and permanent place as a pole star after that. Soon Dhruva realised that Lord granted his ulterior wishes only repented he was behind worldly pleasures. Bhagavatham says later he got from Kubera the boon of unshaken devotion to Lord.

Prahlaada youngest of all when Lord lovingly asked simply said “I have taken up devotion to you lord with the object of Moksha, if you were to give me a boon please grace me that my heart does not desire object pleasure.”

Kulasekara Perumal though we learnt is a student of Ramayana seem to have had his lessons and understanding from Bhagavtham . he too like Prahlaada asks the Lord unflinching devotion to his feet. Quoting Swamigal’ episode clearly shows he already has gotten the boon Prahlaada had asked from the Lord of not being distracted by object pleasures (saying no no to piece of land since it can take him away from Parthasarathi Perumal) .

When I heard of Uttama Bhakthi and went to check on these parallels I am truly amazed ..

Beautiful and very meaningful.

Thank you

Regards
Sujatha..R

Leave a Reply to Ganapathy SubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.