Categories
Mukunda Mala

முகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை

நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் (Art by Keshav)

முகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 9 and 10)

முகுந்த மாலையில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 9 ஆவது ஸ்லோகம்.

कृष्ण त्वदीयपदपङ्कजपञ्जरान्त:

अद्यैव मे विशतु मानसराजहंसः ।

प्राणप्रयाणसमये कफवातपित्तैः

कण्ठावरोधनविधौ स्मरणं कुतस्ते ॥ ९ ॥

க்ருʼஷ்ண த்வதீ³யபத³பங்கஜபஞ்ஜராந்த:

அத்³யைவ மே விஶது மானஸராஜஹம்ஸ: ।

ப்ராணப்ரயாணஸமயே கப²வாதபித்தை:

கண்டா²வரோத⁴னவிதௌ⁴ ஸ்மரணம் குதஸ்தே ॥ 9 ॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். என் மனமாகிய ராஜஹம்ஸத்தை உன்னுடைய பாதத் தாமரை என்ற கூண்டில் இப்பொழுதே ‘அத்³யைவ’ இன்னிக்கே அதைக் கொண்டு போய் அந்த கூண்டுல அடைச்சுடறேன். கிருஷ்ணா, ‘ப்ராணப்ரயாண ஸமயே’ என்னுடைய பிராணன் போகும்போது ‘கப²வாதபித்தை:’ – கப, வாத பித்தம்லாம் மாறி மாறி இருக்கும். கண்டா²வரோத⁴னவிதௌ⁴ – என்னுடைய தொண்டையை அது அடைச்சு உன் நாமத்தைக் கூட சொல்ல விடாம இருக்கிற நிலைமையில ‘ஸ்மரணம் குதஸ்தே’ – உன்னுடைய ஸ்மரணம் ஏற்படுமா என்று எனக்குத் தெரியலை. அதனால ‘அத்³யைவ மே விசது மானஸராஜஹம்ஸ:’ என்னுடைய மனம் என்ற ராஜஹம்ஸத்தை உன்னுடைய பாத பங்கஜம் என்ற கூண்டுல கொண்டு போய் அடைச்சுடறேன் அப்படீன்னு சொல்றார். மனசு பகவானுடைய பாதத்துல இருந்துதுடுத்துனா உடம்பு எங்கிருந்தா என்னன்னு நேத்திக்கு ஒரு ஸ்லோகத்துல சொன்னார்.

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।

ன்னு மத்த யோகங்கள்லாம் பண்ணோம்னா, ஞானயோகம்ன்னா உடனே காட்டுல போய் தபஸ் பண்ணனும். கர்மயோகம்னா யாகம் பண்றதுக்கு சுத்தமான இடம் வேணும். மனசை பகவான் கிட்ட வைக்கணும் ‘அவிஸ்மிருதி’ உன்னை மறவாமை வேண்டும்னு கேட்கறார். கிருஷ்ணர் உத்தவ ஸ்வாமியை கோபிகைகளை போய் பார்த்துட்டு வான்னு அனுப்பறார். கோபிகைகளைப் போய் பார்த்த போது, ‘நீங்க எப்படி கிருஷ்ணனை நினைக்கறேள்? ன்னு கேட்டாராம். கோபிகைகள் சொன்னாளாம், ‘எப்படி நினைக்கறோம்? ன்னு நீங்க கேட்கறேளே, எங்களால மறக்கவே முடியலையே கிருஷ்ணனை’ அப்படீன்ன உடனே உத்தவ ஸ்வாமி அவாளை நமஸ்காரம் பண்ணிட்டு வந்தாராம். அப்படி கோபிகளால கிருஷ்ணனை மறக்கவே முடியலை. அதுதான் பக்தி. அப்படி தைலதாரைப் போல மனசு பகவான் கிட்டயே இருக்கறதுக்கு பேருதான் பக்தி. அந்த பக்தி கிடைச்சுடுத்துன்னா உடம்பு எங்கயிருந்தா என்ன?

தி³வி வா பு⁴வி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம் ।
அவதீ⁴ரிதஶாரதா³ரவிந்தௌ³
சரணௌ தே மரணேऽபி சிந்தயாமி ॥ 8 ॥

ஸுவர்க்கத்துல வேணா இருக்கட்டும், நரகத்துல வேணா இருக்காட்டும். பூமியில வேணா இருக்கட்டும். எங்க வேணா இருக்கட்டும்ங்கிறார். இதே கருத்தை சிவானந்தலஹரி ல ஆச்சார்யாள் சொல்றார். சிவானந்தலஹரி 12 ஆவது ஸ்லோகத்துல

गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे

जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् ।

सदा यस्यैवान्तःकरणमपि शंभो तव पदे

स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥

கு³ஹாயாம் கே³ஹே வா ப³ஹிரபி வனே வாऽத்³ரிஶிக²ரே

ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம் ।

ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி ஶம்போ⁴ தவ பதே³

ஸ்தி²தம் சேத்³யோகோ³ऽஸௌ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ² ॥

வீட்டுக்கு உள்ளேயோ, வீட்டுக்கு வெளியிலயோ, ஒரு குஹையிலயோ இல்ல ஒரு வனத்துலயோ, இல்ல மலை சிகரத்துலயோ, ‘ஜலே வா வஹ்னௌ வா வஸது’ – ஜலத்துல வசிக்கறோமோ, அக்னிக்கு மத்தியில வசிக்கறோமோ “வசதே கிம் வத பலம்?” ஒரு யோகி இந்த மாதிரி பஞ்சாக்னி மத்தியில் உட்கார்ந்துண்டோ தண்ணியில் நின்னுண்டோ தபஸ் பண்றான். இதுல என்ன பலன்னு கேட்கறார். வீட்டுல இருந்து ஓடிப் போய் காட்டுல இருந்தாப்ல மனசு அடங்குமா. ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி ஶம்போ⁴ தவ பதே³ ஸ்தி²தம் சேத்³’ – எவனுடைய அந்தக் கரணம் எப்போதும் உன்னுடைய பாதத்தில் நிக்கறதோ ஸ்தி²தம் சேத்³யோகோ³ऽஸௌ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ² – அதுதானே பரம யோகம். அவன் தான் பரம யோகி. அவன் தான் ரொம்ப ஸுகி. அவன் தான் கொடுத்து வெச்சவன்னு சொல்றார். அந்த மாதிரி என்னுடைய உடம்பு எங்க வேணா இருந்துட்டு போகட்டும். என்னுடைய மனசு உன்னுடைய பாதத் தாமரையில இருக்கணும்.

சாஸ்த்ரங்கள்ல யாரு அந்திம காலத்துல பகவானை ஸ்மரிக்கறானோ அவன் பகவானையே அடைவான் அப்படீன்னு சொல்லியிருக்கு. குலசேகர ஆழ்வார் கடைசி காலத்துல நான் ஸ்மரிப்பேனான்னு எனக்கு எப்படி தெரியும். அதனால இப்போலேருந்தே என் மனசை உன் பாதத் தாமரையில வெச்சுடு. அப்படீன்னு கேட்கறார். அந்த பிரார்த்தனை நிறைய மஹான்கள் பண்ணியிருக்கா. மூக கவிக் கூட என் மனமாகிய கிளிக் குஞ்சு இந்த புலனின்பகள் என்ற நொய்யரிசியை தின்று களைச்சு கிடக்கு. அதனால நீ உன்னுடைய க்ருபைங்கிற வலையைப் போட்டு அந்த கிளியை பிடிச்சுண்டு வந்து உன்னுடைய பாதம்ங்கிற கூண்டுல அடைச்சு வெச்சுடுன்னு அழகான ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார். அப்படி மஹான்கள் மனசை பகவான்கிட்ட வைக்கணும்னு வேண்டிக்கறா. அப்புறமா இன்னும் கொஞ்சம் வயசான பின்ன இந்த பக்தி, ஞானம் எல்லாம் பண்ணிக்கலாம். இப்ப வேலை இருக்கு, அப்படீன்னு இல்லாம, அப்புறம் மனசு எப்படி இருக்கும்னு தெரியாது. அப்புறம் உடம்பு சொன்னா கேட்குமான்னு தெரியாது. இப்பவே உன் பாதத்துல என் மனசை கொண்டு போய் வெச்சுடு, அப்படீன்னு வேண்டிக்கறா. ஸுப்ரமண்ய புஜங்கத்துல கூட

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே

கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |

ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்

த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் ||

ன்னு நீ என்னுடைய உயிர் பிரியற வேளையில என்னை கை விட்டுடாதே. என்னை மயில் மேல வந்து வேலோட எனக்கு தரிசனம் கொடுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும், அப்படீன்னு பிரார்த்தனை பண்ணிக்கறார். இது 9ஆவது ஸ்லோகம். இன்னிக்கே எனக்கு அந்த பயனை கொடுத்துடு. இன்னிக்கே என்னை உன் பாதத் தாமரையில வெச்சுக்கோன்னு வேண்டிக்கறார்.

அடுத்தா 10ஆவது ஸ்லோகத்தோட மெட்டே ரொம்ப அழகா இருக்கு. அடிக்கடி சொல்லிண்டே இருக்கலாம்போல, தானே மனசுக்குள்ள ஓடிண்டே இருக்கும். அந்தமாதிரி ஒரு ஸ்லோகம்.

चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्दहसिताननाम्बुजं

नन्दगोपतनयं परात् परं नारदादिमुनिवृन्दवन्दितम् ॥ १० ॥

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥ 10 ॥

ன்னு ஒரு ஸ்லோகம். சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் –  நான் ஹரியையே எப்பவும் இடைவிடாமல் நினைக்கிறேன். அவர் எப்படி இருக்கார்னா, மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் – அவருடைய முகத் தாமரையில் மந்தஹாசம் இருக்கு. அந்த முகத்தை நான் எப்பவும் தியானம் பண்றேன். நந்த³கோ³பதனயம் பராத் பரம் – அவர் நந்தகோபனுடைய குழந்தை. எல்லாவற்றுக்கும் மேலான வஸ்து. நாரதா³தி³முனிவ்ருʼந்த³வந்தி³தம் – நாரதர் முதலிய முனிவர்களால் சேவிக்கப் படுபவர். அப்பேற்பட்ட அந்த ஹரியை நான் இடைவிடாமல் த்யானிக்கறேன் ன்னு சொல்றார். தைலதாராவத் அவிச்சின்ன ஸ்மருதிஹி சந்தான ரூபா: – அப்படீன்னு எண்ணையை மேலிருந்து விட்டா எப்படி ஒழுக்கு வந்துண்டே இருக்கறது போல நமக்கு பகவானோட தியானம் இருந்துண்டே இருக்கறதுக்கு பேரு தான் பக்தி. சிவானந்தலஹரியில கூட ஆச்சார்யாள் அப்படிதான் பக்தியை define பண்றார். (அங்கோலம் நிஜ பீஜ சந்ததி… ஸ்லோகம்) அந்த மாதிரி பாக்கியம் எனக்கு வேணும். உன்னை நினைச்சுண்டே இருக்கணும், அப்படீன்னு இங்க குலசேகர ஆழ்வார் வேண்டிக்கறார்.

தாரணா தியான மங்களம் அப்படீன்னு இதை பாகவதத்துல சொல்வாளாம். பகவான் கிட்ட மனசு எப்பவும் சாஞ்சல்யத்தை ஒழித்து எப்பவும் லயிச்சு கிடக்கறது, அது ஒரு ஸ்வபாவமா ஆயிடுத்துன்னா, அதுதான் பரம மங்களம், அப்படீன்னு சுகாச்சார்யாள் சொல்லியிருக்கார். அப்படி பகவான் தான் நம்மைக் கட்டி இழுக்கணும். அதை இழுத்து அவருடைய பாதத்துல வெச்சுக்கணும்.

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிவ்ருʼந்த³வந்தி³தம் ॥ அப்படீன்னு இந்த ஸ்லோகத்தை நாம சொல்லிண்டே இருக்கலாம். நம் நாக்கை கொண்டு சொல்லிண்டிருந்தோம்னா பகவான் நம்மை அந்த மாதிரி பிடிச்சி வெச்சிருப்பார்.

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம்॥

ன்னு ஒரு ஸ்லோகம். மனஸு உன்னையே சிந்தனை பண்ணிண்டு இருக்கணும். இடைவிடாமல் அப்படீன்னு சொல்லும்போது மூகபஞ்ச சதி பாதாரவிந்த சதகத்துல 93 ஆவது ஸ்லோகத்துல

महामोहस्तेनव्यतिकरभयात्पालयति यः

विनिक्षिप्तं स्वस्मिन्निजजनमनोरत्नमनिशम् ।

स रागस्योद्रेकात्सततमपि कामाक्षि तरसा

किमेवं पादो‌sसौ किसलयरुचिं चोरयति ते ॥

மஹாமோஹஸ்தேனவ்யதிகரப⁴யாத்பாலயதி யோ

வினிக்ஷிப்தம் ஸ்வஸ்மின்னிஜஜனமனோரத்னமனிஶம் ।

ஸ ராக³ஸ்யோத்³ரேகாத்ஸததமபி காமாக்ஷி தரஸா

கிமேவம் பாதோ³ऽஸௌ கிஸலயருசிம் சோரயதி தே ॥

ன்னு ஒரு ஸ்லோகம். மஹாமோஹம் என்ற ஸ்தேனஹ ன்னா திருடன். அவன் கிட்ட இருந்து “வ்யதிகர பாத்” அவன் எடுத்துண்டு போயிடுவான்ங்கிற பயத்துனால பக்தர்கள் என்ன பண்றா. அவாளோட மனோரத்னத்தை ஹே காமாக்ஷி உன்னோட பாதம் என்கிற lockerல பெட்டியில “விநிஷிப்தம்” நன்னா ஒளிச்சு வெச்சிருக்கா. அப்படீங்கறார். 2,3 password போட்டு உள்ள வெச்சிருக்காளாம். அதை நீ வந்து ரொம்ப ஜாக்ரதையா காப்பாத்தி கொடுக்கற. ஆனா நீயே உன்னுடைய “ராகஸ்யோத்ரேகாத்” ராகம்ங்கிற வார்த்தைக்கு சிகப்புன்னு ஒரு அர்த்தம். ஆசைன்னு ஒரு அர்த்தம். உன்னுடைய பாதம் செக்கச்செவேல்னு இருக்கு. கிஸலய ருசிம் ஸோரயதி தே – கிஸலயம்ங்கிறது தளிர். தளிர் முதல்ல இளஞ் சிவப்பா இருக்கும். மாந்தளிர் எல்லாம் முதல்ல சிவப்பா தானே இருக்கும். அந்த தளிரோட சிவப்புத் தன்மையை ஆசை மிகுதியினால திருடிடறது இது. அதாவது இந்த பாதம் செக்கச்செவேல்னு தளிர் போல சிகப்பா இருக்கு, அப்படீங்கிறதை வேடிக்கையா சொல்றார். பக்தர்களுடைய மனசை கொண்டு வந்து வெச்சா காப்பாத்தறது, ஆனா இதுவே திருடறதே! அப்படீன்னு ஒரு வேடிக்கை சொல்றார்.

அது மாதிரி நம்ம மனசு இந்த ஸ்தோத்ரத்தை நாம படிக்கணும்ங்கிற எண்ணம் வந்ததுனால அது ஒரு மனோரத்னம். அந்த மனோரத்னத்தை பகவானோட பாதத்துல வெச்சா, வேற விஷயங்கள்ல போகாமா காப்பாத்தி கொடுப்பார். நரகாந்தக: என்கிற பதத்துக்கு நேத்திக்கு ‘புலனின்பங்களில் மாட்டிக்காம காப்பாத்தி கொடுப்பார்’ அப்படீன்னு ஒரு அர்த்தம் சொல்லியிருந்தார். இந்த ராகவானந்தர் வ்யாக்யானத்துல இருக்கு அப்படீன்னு எடுத்துக் கொடுத்திருந்தார். ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அது மாதிரி பகவான் தான் நம்மளை காப்பாத்த முடியும். அவர் கிட்டயே இந்த மாதிரி உன்னையே சிந்தனை பண்ணிண்டு இருக்கணும்னு வேண்டிப்போம்.

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம்

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.