Categories
Mukunda Mala

முகுந்தமாலா 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை

 

முகுந்தமாலா 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 15 and 16)

முகுந்த மாலையில இன்னிக்கு 15வது ஸ்லோகமும், 16வது ஸ்லோகமும் பார்க்கப் போறோம். ஆழ்வார் பக்தியினுடைய பெருமையை நிறைய சொல்றார். சொல்லிட்டு,

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த³மந்த³ஹஸிதானனாம்பு³ஜம் |

நந்த³கோ³பதனயம் பராத் பரம் நாரதா³தி³முனிப்ருந்த³வந்தி³தம் ॥

ன்னு ஹரிமேவ ஸந்ததம் சிந்தயாமி – எப்போதும் அவனையே நினைச்சுண்டே இருப்பேன்னு முடிவா சொல்றார். இந்த பக்தியினால என்ன கிடைக்கும்னு கேட்டுண்டு, அவருக்குத் தெரியும். அவருக்கு பகவானே கிடைச்சுட்டார். இருந்தாலும் மனசுக்கு சொல்லும் வாயிலாக நமக்கு சொல்றார். இந்த பக்தியினால எனக்கு எந்த சுகபோகமோ, மோக்ஷமோ எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டார். பகவானிடத்தில் பக்தி பண்ணினா இந்த பவக் கடலை தாண்டலாம்னு சொன்னார். விஷ்ணுங்கிற கப்பல்ல ஏறி பவக் கடலைத் தாண்டலாம்னு சொன்னார். இன்னிக்கு இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் இந்த ஸம்ஸாரக் கடலை பக்தியினால தாண்டலாம்னு சொல்றார். நான் முதல்ல ஸ்லோகங்களோட அர்த்தம் சொல்றேன்.

भवजलधिमगाधं दुस्तरं निस्तरेयं कथमहमिति चेतो मा स्म गाः कातरत्वम् ।

सरसिजदृशि देवे तावकी भक्तिरेका नरकभिदि निषण्णा तारयिष्यत्यवश्यम् ॥ १५ ॥

ப⁴வஜலதி⁴மகா³த⁴ம் து³ஸ்தரம் நிஸ்தரேயம்

கத²மஹமிதி சேதோ மா ஸ்ம கா:³ காதரத்வம் ।

ஸரஸிஜத்³ருʼசி தே³வே தாவகீ ப⁴க்திரேகா

நரகபி⁴தி³ நிஷண்ணா தாரயிஷ்யத்யவச்யம் ॥ 15 ॥

ன்னு இந்த ஸ்லோகம். ஸம்ஸார ஸாகரம். ‘பவ ஜலதிம் அகாதம்’ – தாண்ட முடியாத ரொம்ப பெரிய கடலாட்டமா இருக்கு. ஆழமா இருக்கு. ‘துஸ்தரம்’ – இதை கடக்க முடியாதுன்னு தோணறது. ‘நிஸ்த்ரேயம்’ – இதை நான் எப்படி கடப்பேன்? ‘இதி சேதஹ’ – என்று மனமே ‘மாஸ்ம கா காதரத்வம்’ – பயப்படாதே. கோழைத்தனத்தை அடையாதே. ஏன்னா ‘ஸரஸிஜத்³ருʼசி தே³வே’ – தாமரைக் கண்ணனான ‘நரகபிதி’ – நரகனை வதைத்த கிருஷ்ணனிடத்தில் ‘தாவகீ பக்திரேகா’ – உனக்கு இருக்கிற பக்தி. அது ஒண்ணே இந்த பவக் கடலை ‘தாரயிஷ்யதி அவஷ்யம்’ – நீ உன் மனசை பகவான் கிட்ட வெச்சிருக்கியோன்னு, அந்த பக்தி ஒண்ணே உன்னை பவக்கடலை தாண்டி விட்டுடும்னு சொல்றார்.

இங்க ‘நரகபிதி’ என்கிற நாமம் நரகாசுரனை வதைத்த கிருஷ்ணன்னு அர்த்தம். அந்த மாதிரி நரகாசுரனையே வதைத்த அவருக்கு உன்னை இந்த ஸம்ஸாரத்தை தாண்ட வெக்கறது பெரிய காரியமான்னு, அவருடைய பராக்ரமத்தை, பெருமையை சொல்றார். ‘ஸரஸிஜத்³ருʼசி தே³வே’ ன்னு தாமரைக் கண்ணன்னு சொன்னதுனால நீ பக்தி பண்ணிண்டே வந்தா அந்த பகவானோட கடாக்ஷம் உனக்கு கிடைக்கும். அதுக்கு பிறகு , உனக்கு வைராக்கியம் வந்துடும், நீ ஸம்ஸாரத்தை சுலபமா தாண்டிடலாம் சொல்றார். ‘பக்திரேகா தாரயிஷ்பதி’ – பக்தி ஒண்ணே உன்னை தாண்ட விட்டுடும்னு சொல்றார்.

அது மாதிரி நாம பக்தி மார்க்கத்துல இருந்துண்டு இருக்கும்போது திடீர்னு நான் குண்டலினி யோகம் கத்துக்கப் போறேன், இல்ல வேதாந்தம் படிக்கப் போறேன்னு மாத்தி மாத்தி நினைக்கப் படாது. பகவானிடத்தில் நாம பக்தி பண்ணியிருக்கோம். பகவானை நாம நம்பியிருக்கோம். பக்தி மார்க்கத்துல மஹான்கள், குரு இவா காண்பிச்ச வழியில போயிண்டிருக்கோம். ‘தாரயிஷ்யதி அவஷ்யம்’ அவசியம் நம்மளை இந்த பவக் கடல்ல இருந்து தாண்ட வைக்கும்ங்கிற ‘ரக்ஷிஸ்யதி இதி விஷ்வாஸ:’ -பகவான் நம்மளை காப்பாத்துவார்ங்கிற விஸ்வாசம் ரொம்ப முக்யம்ங்கிறது இந்த ஸ்லோகத்துல வெளிப் படுத்தறார்.

அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம். ‘த்ருஷ்ணா’ அப்படீன்னாஉலக விஷயங்களை அனுபவிக்கனும்கிற ஆசை. த்ருஷ்ணாங்கிற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு தாகம்னு அர்த்தம். அந்த மாதிரி விஷய சுகங்கள்ல இன்னும் வேணும் வேணும்னு நமக்கு இருக்கக் கூடிய தாகத்துக்கு த்ருஷ்ணா னு பேர். இந்த பவக்கடல்ல இந்த விஷயானுபவத்துல இருக்கிற அந்த இச்சை தான் ஜலமாம். பிறகு ‘மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே’ நம்முடைய காமம் என்ற காற்றினால் கிளப்பப் பட்ட மோஹ அலைகள் வீசிண்டிருக்கு இந்த பவக்கடல்ல. ‘தாரவர்த்தே’ – மனைவிங்கிற சுழல் இருக்கு இந்த பவக் கடல்ல. ‘தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச’ தனயன்னா பிள்ளை சஹஜன்னா கூட பிறந்தவா. இந்த முதலை கூட்டங்கள் இருக்கு. இப்பேற்பட்ட ஸம்ஸாரம். இது ஒரு பெருங்கடல். இதுல நான் மூழ்கிண்டிருகேன்னு சொல்றார்.  மனைவி, மக்களோ, கூட பிறந்தவாளோ ஆபத்தில்லை. அவா நல்லவாளா இருந்தாலும் சரி, கெட்டவாளா இருந்தாலும் சரி. நாம அவா மேல வைக்கற அந்த பாசம் தான் ஆபத்து. அது நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறது. பக்தி பண்ணினா நாம தெளிவா இருந்துண்டு இருக்கலாம்.

‘ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴’ சம்ஸாரம் என்றா பெயருடைய இந்த பெரிய கடலில் ‘மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்’ – மூழ்கிண்டு இருக்கக் கூடிய த்ரிதா⁴மன் எங்கிற நாமத்தை சொல்றார். மூன்று இடங்கள்ல இருப்பவர்னு அர்த்தம். திருப்பாற்கடலிலும் ஸ்ரீ வைகுண்டத்திலும் இந்த பூமியில் கோயில்களிலும் இருக்கார்னு த்ரிதா⁴மன் என்கிறதுக்கு அர்த்தம் சொல்லுவா. இங்க அதுக்கு மேல அகார, உகார, மகாரங்கள்ல இருக்கார். அதாவது பிரணவ ஸ்வரூபமா இருக்கார். அது தவிர விழிப்பு, தூக்கம், நித்திரைங்கிற மூணு ஸ்தானங்கள்ல இருக்கார். பூர் புவஸ் ஸ்வாஹங்கிற மூவுலகங்கள்ல இருக்கார் அப்படீன்னு த்ரிதா⁴மன் என்கிறதுக்கு பல அர்த்தங்கள் கொடுத்திருக்கார். அப்படி மூன்று இருப்பிடங்களைக் கொண்ட நாராயணா! பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தி நாவம் ப்ரயச்ச²  உன்னுடைய பாத தாமரைகளில் வரத! வரம் அருளுபவனே ப⁴க்திநாவம் ப்ரயச்ச² – பக்தி என்ற படகை கொடு. நீ வரம் கொடுப்பவன். அதனால் உன்கிட்ட இந்த வரம் கேட்கறேன். உன்னுடைய பாத பக்தி என்ற அந்த படகை கொடுத்தால் அந்த படகுல ஏறிண்டு இந்த ஸம்ஸாரக் கடலை நான் தாண்டிடுவேன்னு சொல்றார்.

‘ப⁴க்திநாவம் ப்ரயச்ச²’ ன்னு கேட்டதுனால பக்திங்கிறது பகவான் தான் கொடுக்கணும். அவனருளாலே அவன் தாள் வணங்கி ன்னு அவன் யாரப் பார்க்கறானோ ஜாயமான கடாக்ஷம்னு பொறந்தபோதே எவனை பகவான் கடாக்ஷிக்கறானோ அவனுக்குத் தான் இந்த ஜன்மத்தை முடிச்சுக்கணும். பகவானோட பாதங்கள்ல போய் சேரணும்ங்கிற ஆசை வர்றது. அவனுக்கு நல்ல குரு கிடைக்கறா. அவன் விடாமல் இந்த வழியில போய் நடுவில் எந்த சலனமும் இல்லாமல் பகவானை அடையறான். இதுக்கு ஒரு உதாரணம் சபரி. அவள் வேடுவ குலத்தில் பிறந்திருந்தாக் கூட அவளுக்கு அந்த ஜாயமான கடாக்ஷம் இருந்ததுனால இந்த ஜன்மால நாம மத்த வேடர்களைப் போல இருக்கக் கூடாதுன்னு தெரிஞ்சுண்டு அங்கிருந்து கிளம்பி வந்து மதங்க முனிவரை ஆஸ்ரயிச்சு, அவருக்கு கைங்கர்யம் பண்ணி, அவரோட அனுக்ரஹத்தால அவளுக்கு ராம தரிசனம் கிடைச்சு முக்தி அடைந்தாள்.

அந்த மாதிரி பக்திங்கிற ஒரு படகு கிடைச்சுதுன்னா நாம் இந்த ஸம்ஸாரக் கடலை தாண்ட முடியும். இந்த மஹான்கள் காண்பிக்கிற பக்திங்கிறது கிட்டத்தட்ட ஞான மார்க்கம் மாதிரிதான் இருக்கு. நாம சுலபமா ஏதோ ஒரு பத்து நிமிஷம் பாராயணம் பண்றது பக்தின்னு நினைக்கறோம். அவா அங்க ஆரம்பிச்சு குழந்தைக்கு அம்மா நிலாவை காட்டி நன்னா பிசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமா ஊட்டறா. ஆனா வளர்ந்த பின்னே அவனே எல்லா வ்யஞ்சனங்களோட இன்னும் கொஞ்சம் கூட்டு கொண்டுவா, கறி கொண்டு வான்னு கேட்டு சாப்பிடறான். அந்த மாதிரி ஆரம்பத்துல மஹான்கள் பக்தியோட ருசியை காண்பிக்கறா. ரொம்ப பாக்யசாலிகள் அந்த பக்தியை அனுபவிச்சு அந்த ருசி வளர்ந்து, அதை நன்னா கெட்டியா பிடிச்சிண்டு அந்த பாதையில விடாம போறா. மகான்கள் ‘தைலதாரை மாதிரி ஒரு க்ஷணம் கூட பகவானை மறக்காத நிலைமை தான் பக்தி’ ன்னு define பண்றா. சிவானந்த லஹரியில

अङ्कोलं निजबीजसन्ततिरयस्कान्तोपलं सूचिका
साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुः सरिद्वल्लभम् |
प्राप्नोतीह यथा तथा पशुपतेः पादारविन्दद्वयं
चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा सा भक्तिरित्युच्यते ||

அங்கோலம் நிஜ பீ3ஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்4வீ நைஜ விபு4ம் லதா க்ஷிதி-ருஹம் ஸிந்து4ஸ்ஸரித்3 வல்லப4ம் |
ப்ராப்னோதீஹ யதா2 ததா2 பஸு1-பதே: பாதா3ரவிந்த3-த்3வயம்
சேதோ-வ்ரு2த்திருபேத்ய திஷ்ட2தி ப3லாத் ஸா ப4க்திரித்யுச்யதே ||

ன்னு மனசு ஒரு magnet இரும்பை இழுக்கற மாதிரி பகவான் நம்மை இழுக்கும்போது அந்த மனசு forceஆ போயி ஒட்டிண்டு அங்கிருந்து வராம இருக்கறதுக்கு பேருதான் பக்தி, அப்படீன்னு மஹான்கள் define பண்றா. அந்த பக்தி நாம பார்த்திருக்கோம். ஞானிகள் சமாதியிலேயே பகவான் கிட்ட கூடியிருக்கா. அது பூர்வ புண்யத்துனால பண்றா. நாம ஏதாவது பகவானை அடையறதுக்கு பண்ண முடியுமான்னு நமக்கு உலக விஷயங்கள்ல ஆசையும் இருக்கு. ரொம்ப உலக விஷயத்துலயும் ஆசை இருந்தா நீ கர்மா பண்ணு. புண்ணியம் வரும். அந்த புண்ணியத்துக்கு பலன் அனுபவிச்சிண்டு இருன்னு சொல்லிடலாம். ஆனா அதுலயும் அப்பப்போ எனக்கு கொஞ்சம் distaste வர்றது. புண்யம் பண்றோம். அனுபவிக்கறோம். ஆனா அதுக்கு மேல ஏதோ இருக்குன்னு தோணறதேன்னா, அப்படீன்னா நீ பக்தி பண்ணுன்னு மஹான்கள் ஆரம்பிச்சு கொடுக்கறா. அந்த குருங்கிற மாலுமி கப்பலை ஒட்டினாலும் பகவானுடைய அனுக்ருஹம்ங்கிற காற்றும் வீசினாதான் நாம் கரை சேர முடியும். அந்த பக்தி என்னங்கிறதை புரிஞ்சுக்கறதுக்கு இந்த மாதிரி கிரந்தங்களை படிச்சா இவா பக்தியை கிட்டத்தட்ட ஞானம் மாதிரியே define பண்ணியிருக்கா. எனக்கு “நாஸ்தா தர்மே ந வசு நிசயே நைவ காமோபபோகே” – எனக்கு புண்யமோ, பணமோ, காமமோ, சுகபோகங்களோ வேண்டாம். எனக்கு உன் பாதத்தை ஸ்மரணம் பண்ற அந்த ‘அவிஸ்ம்ருதி’, விடாத உன்னை த்யானம் பண்ற அந்த ஒரு வரம் கொடுங்கறார்.

அந்த மாதிரி மஹான்கள் சொல்ற பக்தி almost ஞானம். அதுல இந்த உலக விஷயங்கள், மனைவி, மக்கள்,சொத்து, சுகம் எல்லாம் அவாளுக்கு ஒரு பெரிய ஆபத்தாட்டம் தெரியறது. முதலைக் கூட்டம்ங்கிறார். அந்த மாதிரி அதுல ஜாக்ரதையா இருந்துண்டு இந்த ஜன்மத்துலேயாவது பகவானை அடையணும்னு நினைச்சு பக்தி சாஸ்திரங்கள்ல சொன்ன வழியில பண்ணிண்டே போற மஹான்களை நாம பார்த்திருக்கோம். அவா அடைஞ்ச பேரானந்தத்தையும் நாம பார்த்திருக்கோம். மஹா பெரியவா, சிவன் சார், ஸ்வாமிகள்லாம் இருந்த நிலைமை பார்த்திருக்கோம். அந்த பக்தியை நமக்கும் கொடுன்னு ப்ரார்த்திப்போம். குலசேகராழ்வார் நமக்காக வேண்டியிருக்கார். அந்த ஸ்லோகத்தை சொல்லி நாமும் வேண்டிப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.

Series Navigation<< முகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 15, 16 ஸ்லோகங்கள் பொருளுரை”

சிவகாம சுந்தரின்னு ஒரு கிருதி அதுலே பவசாகரம் கரைக் காணாத பாவியென்னைஈடேற்றி விடுவதுன் பாரம் அம்மா மேதினியில் உனக்கு ஈடு யாரும் உண்டோ எனமனமுருகும் பாடல்!
அதை நினைவுறுத்தும் விதமான சொற்கட்டு !
பகவான் இணையடி நீழல் நல்லனஎல்லாம் தரும், பிறவிப் பிணி அறுக்கும்!
இதுவே அனைத்து மேல் ஜனங்களும் நமக்குக் காட்டிய வழி !
அருமையான பொருளுரை!
கை கிருஷ்ணா!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.