Categories
Mukunda Mala

முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை

 

முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை (8 minutes audio Meaning of Mukundamala slokams 21, 22)

முகுந்த மாலையில நேத்திக்கு

जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं

पाणिद्वन्द्व समर्चयाच्युतकथाः श्रोत्रद्वय त्वं श्रृणु ।

कृष्णं लोकय लोचनद्वय हरेगर्चछाङिघ्रयुग्मालयं

जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं मूर्धन् नमाधोक्षजम् ॥ १६॥

ன்னு நம்முடைய கண்கள், தலை, மூக்கு, காது, நாக்கு, மனசு இவைகள் எல்லாத்தையும் பகவானுடைய காரியத்துல அர்ப்பணிக்கணும்னு சொன்னார். இப்படி க்ருஷ்ணனையே த்யானம் பண்ணிண்டு இருந்தா அதுவே ஒரு மருந்தாகி இந்த ப்ரஸூதி மரண வ்யாதே: சிகிச்ஸாம் இமாம் பெரிய யோகிகள் எல்லாம் சொல்றா. இந்த ஜன்மம், மரணம் என்ற வியாதிக்கு இந்த கிருஷ்ணன் எங்கற நாமம் தான், கிருஷ்ண த்யானம்தான் ரொம்ப பரம ஓளஷதம்ன்னு சொன்னார். இன்னிக்கு திரும்பவும் ‘ஹே மர்த்யாஹா’ ன்னு கூப்பிட்டு மர்த்யாஹா ன்னா இறப்பவர்கள். மனிதர்கள்ன்னு தான் அர்த்தம், ம்ருத்யு யாருக்கு வருமோ அவா மர்த்யாஹா. அதனால இந்த ம்ருத்யுவிலிருந்து மீளரத்துக்கு, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காமல் இருக்க வேண்டுமானால் நான் உங்களுக்கு ஒரு வழி சொல்றேன்.

हे मर्त्याः परमं हितं श्रुणुत वो वक्ष्यामि सङ्क्षेपतः

संसारार्णवमापदूर्मिबहुलं सम्यक् प्रविश्य स्थिताः ।

नानाज्ञानमपास्य चेतसि नमो नारायणायेत्यमुं

मन्त्रं सप्रणवं प्रणामसहितं प्रावर्तयध्वं मुहुः ॥ २१ ॥

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஶ்ருணுத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவமாபதூ³ர்மிப³ஹுலம் ஸம்யக் ப்ரவிஶ்ய ஸ்தி²தா: ।
நானாஜ்ஞானமபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமஸஹிதம் ப்ராவர்தயத்⁴வம் முஹு: ॥ 21 ॥

ன்னு ஒரு ஸ்லோகம், மனிதர்களே இந்த ரொம்ப அபாயகரமான சம்சாராணார்வம் ஆபதூர்மி பஹுலம் ஆபத்துங்கற அலைகள் நிறைத்து இருக்கும், தீடீர்ன்னு ஒரு நாள் விடிஞ்சா flood வர்றது. தீடீர்ன்னு பலவிதமான ஆபத்துகள் வாழ்க்கையில ஒவ்வொண்ணா வந்துண்டே இருக்கு. மேலும் மேலும் அலை மாதிரி ஆபத்துக்கள் வரக் கூடிய இந்த சம்சார சாகரத்துல ரொம்ப உள்ளுக்குள்ள போய் நீங்க மாட்டிண்டு இருக்கேள். உங்களுக்கு மீள்றதுக்கு நான் ஒரு உபாயம் சொல்றேன். வக்ஷ்யாமி சம்க்ஷேபத: சுருக்கமா சொல்லிடறேன்ங்கறார். ‘நானாஞானம் அபாஸ்யா’ பலவிதமான ஞானத்தை தெரிஞ்சிண்டு பல புஸ்தகங்களைப் படிச்சு பலபேர் சொல்றதைக் கேட்டுண்டு குழப்பிக்காதீங்கோ. நான் சொல்ற இந்த ஒரே ஒரு உபாயத்தைக் கேளுங்கோ. நமோ நாராயணாங்கற இந்த மந்த்ரத்தை ப்ரணவத்தோடும் ப்ரணாமத்தோடும் மீண்டும் மீண்டும் ஜபிச்சிண்டே இருங்கோன்னு சொல்றார்.

ப்ரணாமத்தோடு பண்ணணும்னு அவர் சொன்னதுனால, இந்த குலசேகர ஆழ்வாரையே ஒரு குருவா நினைச்சு, அவர் கிட்ட ப்ரீத்தி, விச்வாசம் வச்சு, அவரையே நமஸ்காரம் பண்ணி, இந்த நாராயண நாமத்தை ஜபம் பண்ணணும்னு நாம எடுத்துக்கலாம். அவர் ஒரு உயர்ந்த நிலையில இருந்துண்டு அந்த மந்திரத்தை உபதேசம் பண்றார். இந்த ப்ரணவத்தை ஜபிக்கறதுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் இருக்கு. நாராயண நாமத்தை யாரும் ஜபிக்கலாம். நமோ நாராயணா-ங்கறதை ஜபிங்கோ-ன்னு சொல்றார். நாராயண நாமத்துக்கு எவ்ளோ பெருமை இருக்கு. நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துல நிறைய சொல்லியிருக்கார். உங்களுக்கு கண்ணன் வேணுமா? நாராயண நாமத்தை ஜபம் பண்ணுங்கோங்கறார் நம்மாழ்வார்.

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

அப்படி இந்த நாராயண நாமத்துக்கு அவளோ பெரிய பலன் இருக்கு.

ஆர்த்தா விஷன்னா சிதிலாச்ச பீதா ஹா

கோரேஷு வ்யாதிஷு வர்த்தமான:

சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம்

விமுக்த துக்கா: சுகினோ பவந்து

ன்னு விஷ்ணு சஹஸ்ரநாமத்துல கடைசியில இந்த ஸ்லோகம் சொல்வோம்.

ஆர்த்தா: விஷன்னா: நீங்க தளர்ச்சியுற்று இருந்தாலும் சரி, கோரமான வியாதியா இருந்தாலும் சரி, அதுக்கெல்லாம் இந்த நாராயண நாம ஜபம் பண்ணி, அதிலிருந்து நீங்க மீண்டு விடலாம்னு சொல்றார். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை ஒரு தடவை சொல்லிட்டு, நாராயண நாமத்தை ஒரு மணி நேரம் ஜபம் பண்ணுங்கோ அப்படீன்னு எழுதி கொடுப்பார். குருவாயூர்ல இந்த நாராயண நாம ஜபம் அவ்ளோ ஒரு ப்ரியமா அவா பண்ணுவா. தினமும் ஒரு இடத்துல வந்து உட்காந்துண்டு ஒருத்தர் பத்து நிமிஷமாவது நாராயண நாம ஜபம் அந்த கோயில்ல பண்ணிட்டு போறதுன்னு ஒரு நியமம் வச்சிண்டு இருக்கா. அவா நாராயண நாம ஜபத்தை தான் அதுதான் பகவானுக்கு ரொம்ப ப்ரீதின்னு அவா வச்சிண்டுஇருக்கா. மலையாளக்காரா நிறையபேர் நாராயண நாம ஜபம் பண்றதை நாம பார்த்து இருக்கோம். அந்த நாராயண நாம் ஜபத்தை இந்த ஸ்லோகத்துல சொல்றார். நீங்கள் இந்த சம்சார சாகரத்துல ரொம்ப உள்ள மாட்டிண்டு இருக்கேள். உங்களுக்கு மீள்றதுக்கு ஒரு உபாயம் சொல்றேன். வேற எந்த யோஜனையும் பண்ணாதீங்கோ. எந்த புஸ்தகமும் படிக்காதீங்கோ. எந்த ஞானமும் உங்களுக்கு வேண்டாம். நாராயண நாமத்தை சொல்லி நீங்க கரையேறலாம். அப்படீன்னு இந்த ஸ்லோகத்தை சொல்றார்.

அடுத்த ஸ்லோகத்துல விஷ்ணு பகவானுடைய மஹிமையை சொல்றார்.

पृथ्वीरेणुरणुः पयांसि कणिकाः फल्गुस्फुलिङ्गोऽनल –

स्तेजो निःश्वसनं मरुत् तनुतरं रन्ध्रं सुसूक्ष्मं नभः ।

भक्ता: रुद्रपितामहप्रभृतयः कीटाः समस्ताः सुरा

दृष्टे यत्र स तावको विजयते भूमावधूतावधिः ॥ २२ ॥

ப்ருʼத்²வீரேணுரணு: பயாம்ஸி கணிகா: ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ऽனல –
ஸ்தேஜோ நி:ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப:⁴ ।
பக்தா: ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருʼதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா
த்³ருʼஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே ⁠பூ⁴மாவதூ⁴தாவதி:⁴ ॥ 19॥

ன்னு ஒரு ஸ்லோகம், பகவானுடைய மஹிமை எல்லை கடந்து இருக்கு. அந்த விஷ்ணு பகவானுடைய மஹிமையை நினைக்கும்போது, சர்வம் விஷ்ணுமயம் ஜகத்ன்னு, உலகமே விஷ்ணுமயமாக அவரை தர்சனம் பண்ணி, அதுக்கு முன்னாடி எல்லாமே ரொம்ப சாதாரணமா அவருக்கு தெரியறது, இந்த ஸ்லோகத்துல சொல்றார். அளவற்ற மஹிமையை, அந்த ரூபத்தை த்யானம் பண்ணும்போது, பூமி வந்து ஒரு துகளைப் போல ஆயிடறது, ஜலம்-ங்கறது ஒரு திவலை போல ஆயிடறது, நெருப்புங்கறது ஒரு பொறியைப்போல ஆயிடறது. வாயுங்கறது ஒரு மூச்சுக்காத்து போல ஆயிடறது, பகவானுடைய மூச்சுக்காத்துங்கறார் வாயுவை, ஆகாசம் சின்ன துவாரம் போல ஆயிடறது. மத்த பரமேஸ்வரன், ப்ரம்மா முதலிய தேவர்கள் எல்லாரும் இந்த இடத்துல க்ஷுத்ரா: ன்னு ஒரு வார்த்தை இருக்கு, எனக்கு பரமேஸ்வரனுக்கு முன்னடி அதை சொல்ல மனசு வர மாட்டேங்கறது, நான் பக்தா: ருத்ர பிதமஹ ப்ரப்ருதைய: ன்னு நான் சொல்லிக்கிறேன். மத்த தேவர்கள் எல்லாம் சாதாரண புழுக்களை போல ஆயிடுறா. அப்படி எல்லைஅற்று இருக்கும் உன்னுடைய மஹிமை மிகச்சிறந்து விளங்குகிறதுன்னு சொல்றார்.

அந்த மாதிரி தன்னோட இஷ்ட தெய்வத்துக்கிட்ட எல்லாத்தையும் பார்க்கணும். ஒரு இடத்துல பக்தி பண்ணணும்-ங்கற தாத்பர்யம் இந்த ஸ்லோகத்துல விளங்கறது. இன்னிக்கி இந்த ரெண்டு ஸ்லோகத்தையும் பார்த்தோம். நாளைக்கு ‘பத்தேனா அஞ்சலினா’ன்னு பக்தி பண்ணும்போது உடம்புல ஏற்படக்கூடிய மாற்றங்கள், அஞ்சலி பத்தமா நாராயணான்னு சொல்லும்போது தொண்டை கத்கதமாகி, மெய்சிலிர்த்து, கண் ஜலம் அருவி போல பெருகி, அப்படிதான் பக்தி பண்ணணும்னு சொல்லி கொடுக்கறார். அவருடைய அனுபவத்தை சொல்றார். அது நமக்கு ஒரு பாடமா இருக்கு, அந்த ஸ்லோகத்தை நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா…

Series Navigation<< முகுந்தமாலா 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை”

க்ஷுத்ர: ன்னு ஒரு வார்த்தை இருக்கு, எனக்கு பரமேஸ்வரனுக்கு முன்னடி அதை சொல்ல மனசு வர மாட்டேங்கறது, நான் பக்தா: ருத்ர பிதமஹ ப்ரப்ருதைய: ன்னு நான் சொல்லிக்கிறேன் –
வாஸ்தவம். சொன்னது அழகா இருக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.