Categories
Mukunda Mala

முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை (9 minutes audio Meaning of Mukundamala slokams 35 and 36)

முகுந்த மாலையில இன்னிக்கு 35வது ஸ்லோகமும், 36வது ஸ்லோகமும் பார்ப்போம். இந்த ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை சொல்றேன். பிறகு அதனுடைய தாத்பர்யத்தை சொல்றேன்

दारा वाराकरवरसुता ते तनूजो विरिञ्चिः

स्तोता वेदस्तव सुरगणो भृत्यवर्गः प्रसादः ।

मुक्तिर्माया जगदविकलं तावकी देवकी ते

माता मित्रं बलरिपुसुतस्तवय्यतोऽन्यन्न जाने ॥ ३५ ॥

தா³ரா வாராகரவரஸுதா தே தனூஜோ விரிஞ்சி:

ஸ்தோதா வேத³ஸ்தவ ஸுரக³ணோ ப்⁴ருʼத்யவர்க:³ ப்ரஸாத:³ ।

முக்திர்மாயா ஜக³த்³ அவிகலம் தாவகீ தே³வகீ தே

மாதா மித்ரம் ப³லரிபுஸுதஸ்த்வய்யதோன்யம்ன ஜானே ॥ 32 ॥

ன்னு ஒரு ஸ்லோகம் ‘வாராகரவரஸுதா’ ன்னா பாற்கடலின் புதல்வி. லக்ஷ்மிதேவி தான் உன்னோட தாரா, உன்னுடைய மனைவி. ‘தே தனூஜோ விரிஞ்சி:’ சதுர்முகனான பிரம்மா உன்னுடைய பிள்ளை. ‘ஸ்தோதா வேத³:’ உன்னை துதிப்பதோ வேதம் ‘தவ ஸுரக³ணோ ப்⁴ருʼத்யவர்க:³’ தேவர்கள் உன்னுடைய வேலைக்காரர்கள். ‘ப்ரஸாத:³ முக்தி:’ நீ பண்ற அனுக்ரஹம் என்னனா, அது மோக்ஷம்தான். ‘மாயா ஜக³த³விகலம் தாவகீ’ இந்த மூவுலகுமே உன்னுடைய மாயா விலாசம்தான். ‘தே³வகீ தே மாதா’ தேவகி உன்னுடைய தாயார் ‘மித்ரம் ப³லரிபுஸுத’ பலனுடைய எதிரி – பலன் என்ற அஸுரனை வதைத்தவன் இந்திரன். இந்திரனுடைய பிள்ளை அர்ஜூனன். உன்னுடைய நண்பன் யாருன்னா, அர்ஜுனன் ‘த்வய்யதோன்யம்ன ஜானே’ இதைத் தவிர உன்னைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றார்.

இதுல விசேஷம் என்னன்னா, பகவத் கீதையில் கூட ‘அவ்யக்தா ஹி கதிர்துக்கம் தேஹவத்பிராவாப்யதே’ ன்னு இந்த உடம்போட இருப்பவர்களுக்கு நிர்விசேஷ குணத்தை அடைவது ரொம்ப கஷ்டம். ஏதோ கோடியில ஒருத்தர் பூர்வ ஜன்ம புண்யத்தால ஞானத்தை அடைய முடியும். நமக்கெல்லாம் இந்த பகவானோட ஸவிசேஷ ஞானம்னு சொல்ற சகுண உபாசனைதான் ரொம்ப சௌரியம். நடக்கக் கூடிய கார்யம் எங்கிறதை  புரிய வைக்கறதுக்கு இந்த ஸ்லோகத்துல ‘த்வய்யதோன்யம்ன ஜானே’ உன்னைப் பற்றி இதைவிட வேற ஒண்ணும் தெரியாது. நீ பரப்ரம்மமோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ அர்ஜுனனுக்கு சகா. அவனுக்கு தேரோட்டின. கீதோபதேசம் பண்ணின. அந்த மாதிரி, அந்த கதைகள். பாற்கடலை கடைஞ்ச போது லக்ஷ்மிதேவி வந்தா. அவ உனக்கு மாலையிட்டா. நீ அவளை மார்புல வெச்சுண்ட. உன்னுடைய தொப்புள்கொ டியிலருந்து வந்த தாமரையில பிரம்மா இருக்கார். வேதங்கள் உன்னை துதிக்கின்றனன்னு பகவானுடைய குணங்களை நினைச்சுப் பார்க்கறது தான் நாம பண்ண வேண்டிய காரியம். முன்ன ஸ்லோகங்கள்ல பக்தியோட பெருமையை சொன்னார். இந்த உலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இந்த உடம்பை ரொம்ப நம்பாதே. பக்தி பண்ணு. மனுஷாள் கிட்ட போய் வேலைக்காக நிக்காதேன்னு சொல்லிட்டு, பக்தி ஏற்படறதுக்கு நாம பகவானுடைய குணங்களை நினைச்சு நினைச்சு பார்க்கணும். அவனுடைய கதைகளைப் படிக்கணும்.

பகவானைப் பத்தி கண்ணை மூடிண்டு யோகிகள் தியானம் பண்ணி ஏதோ உணர்றா. அதை நம்மால உணர முடியுமா? உணர முடியாது. உனக்கு கிருஷ்ண பக்தியா இந்த மாதிரி கிருஷ்ணனோட குணங்களை நினைச்சு பாரு. ராம பக்தியா ராமாயணம் படி. ராமனுடைய குணங்களை நினைச்சு நினைச்சு அனுபவிக்கணும். முருக பக்தியா ஸுப்ரமண்ய புஜங்கம் படி. ஸ்கந்தபுராணம் படி. அம்பாள் கிட்ட பக்தியா அம்பாளுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் பண்ணு. அப்படி பண்ணா உனக்கு பக்தியினாலேயே பகவானோட பிரஸாதமா முக்தி கிடைச்சுடும்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

நமக்கு உலகத்துல பற்று இருக்கு ரொம்ப. உலக விஷயங்கள்ல மனைவி, குழந்தைகள், பணம், நண்பர்கள் இதிலெல்லாம் ரொம்ப பந்தபாசம் இருக்கு. அதை மாற்றி தெய்வ பாசமா உயர்த்தணும்னா அந்த தெய்வத்துக் கிட்ட மனசு இருக்கணும். நாம மனசுக்குள்ளேயே தானா சொத்து சுகத்தை பத்தியும், குழந்தைகள் இதெல்லாம் நாம ஸ்தோத்திரம் பண்ணிண்டே இருக்கோம். அதை நிறுத்திண்டு பகவானோட ஸ்தோத்திரம் பண்றதுக்கு பழக்கி கொடுக்கணும். அப்பதான் பகவானிடத்தில் நமக்கு ஆசை வரும். பாசமா மாறும். அப்ப உலக பாசம் என்ற அந்த கட்டு நம்மைக் கொஞ்சம் விடும். அதனாலதான் நாம் பூஜைகள் பண்றோம். எப்படி நமக்கு அலங்காரம் பண்ணிக்கறோமோ, நாம ஸ்நானம் பண்றோம், அலங்காரம் பண்ணிக்கறோம், சாப்பிடறோம். அதேமாதிரி பகவானுக்கும் ஸ்நானம் பண்ணி, அலங்காரம் பண்ணி, நைவேத்யம் பண்ணி அப்படி ஆரம்பம். அவரோட கதைகளைப் படிச்சு மேலும் மேலும் அவனோட குணங்களை நினைச்சா அவனிடத்தில் பக்தி வந்து, இந்த உலகபாசம் மாறி தெய்வ பாசமாகும்கிறது இந்த ஸ்லோகத்தோட தத்வம்.

அடுத்த ஸ்லோகத்துல கிருஷ்ணனோட குணங்களைச்  சொல்றார். எட்டு விபக்திகள்ல சொல்றார்

कृष्णो रक्षतु नो जगत्त्रयगुरुः कृष्णं नमस्याम्यहं

कृष्णेनामरशत्रवो विनिहताः कृष्णाय तस्मै नमः ।

कृष्णादेव समुत्थितं जगदिदं कृष्णस्य दासोऽस्म्यहं

कृष्णे तिष्ठति सर्वमेतदखिलं हे! कृष्ण संरक्ष माम् ॥ ३६ ॥

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥

ன்னு ஒரு ஸ்லோகம். சுந்தராச்சாரியார் இந்த புஸ்தகத்துல எழுதியிருக்கார். இந்த ஸ்லோகத்தோட அமைப்பை பார்க்கும் போது இந்த கவிக்கு கிருஷ்ண பைத்தியம் பிடிச்சிருக்கு போல இருக்கு. அதனால கிருஷ்ணனை எப்படி எப்படியெல்லாமோ சொல்லி சந்தோஷப் படறார். எல்லா விபக்திகளையும் அவரையே வெச்சுப் பாடறார். சிலது எல்லாம் சொன்ன கருத்தையே திருப்பி சொல்றார். அதெல்லாம் அவரோட பக்தியினால, குணமே தவிர தோஷம் கிடையாதுங்கிறார். அவர் கிருஷ்ண பக்தியில பண்றார்ன்னு குறிப்பு கொடுங்கிறார்.

‘க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு:’ ஜகத்குருவான கிருஷ்ணன் நம்மை காப்பாற்றட்டும் ‘க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்’ நான் கிருஷ்ணனை நம்ஸ்கரிக்கிறேன் ‘க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா:’ கிருஷ்ணனால் தேவர்களின் பகைவர்கள் கொல்லப்பட்டார்கள் ‘க்ருʼஷ்ணாய தஸ்மை நம:’ அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம். ‘க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்’ ன்னு சொன்ன பின்ன கிருஷ்ணாய தஸ்மை நம: ங்கிறது அதே அர்த்தம்தான். அது புனருக்தின்னு பேரு. கவிதையில சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லக் கூடாது. ஆனா அவருக்கு கிருஷ்ண பைத்தியம் பிடிச்சிருக்கு. அதனால தான் அவர் கவிதையோட grammarஒ ruleஓ அவருக்கு தெரியலை. கிருஷ்ணா, கிருஷ்ணான்னு சொல்லணும்னு தோணறது. தெய்வபாசம் பேசினோமே, அந்த பாசம் அவருக்கு வந்துடுத்துன்னு இந்த கவிதையில அது தெரியறது ‘க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம்’ கிருஷ்ணனால் தான் இந்த உலகமே உண்டாயிற்று ‘க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்’ நான் கிருஷ்ணனோட தாசன் ‘க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம்’ கிருஷ்ணன கிட்ட இருந்து உண்டான உலகம் கிருஷ்ணன் கிட்ட நிலைபெற்று இருக்கு ‘ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம்’ கிருஷ்ணா என்னைக் காப்பாத்துன்னு ஒரு ஸ்லோகம். நமக்கும் இந்த கிருஷ்ண பைத்தியம் பிடிக்கணும்னு வேண்டிப்போம்

க்ருʼஷ்ணோ ரக்ஷது நோ ஜக³த்த்ரயகு³ரு: க்ருʼஷ்ணம் நமஸ்யாம்யஹம்

க்ருʼஷ்ணேனாமரசத்ரவோ வினிஹதா: க்ருʼஷ்ணாய தஸ்மை நம: ।

க்ருʼஷ்ணாதே³வ ஸமுத்தி²தம் ஜக³தி³த³ம் க்ருʼஷ்ணஸ்ய தா³ஸோऽஸ்ம்யஹம்

க்ருʼஷ்ணே திஷ்ட²தி ஸர்வமேதத்³ அகி²லம் ஹே! க்ருʼஷ்ண ஸம்ரக்ஷ மாம் ॥

அழகான ஸ்லோகம். அடுத்த ஸ்லோகத்துல கிருஷ்ணா! என் கிட்ட கருணை பண்ணுன்னு கெஞ்சறார். அதை நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.