முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை

Deepavali – Art by Keshav Venkataraghavan

முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை (5 minutes audio Meaning of Mukundamala slokams 37 and 38)

இன்னிக்கு 37 வது ஸ்லோகம் பார்க்கறோம்

तत्त्वं प्रसीद भगवन् कुरु मय्यनाथे विष्णो कृपां परमकारुणिकः खिल त्वम् ।

संसारसागरनिमग्नमनन्त दीनं उद्धर्तुमर्हसि हरे पुरुषोत्तमोऽसि ॥ ३७ ॥

தத் த்வம் ப்ரஸீத முகுந்தமாலையில ³ ப⁴க³வன் குரு மய்யனாதே²

விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: கி²ல த்வம் ।

ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³னம்

உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோऽஸி ॥ 34॥

ன்னு பகவான் கிட்ட எனக்கு கருணை பண்ணுன்னு ரொம்ப கெஞ்சற ஒரு ஸ்லோகம். இப்படி பிரார்த்தனை பண்ணினா, பகவான் இரங்காமல் இருக்க மாட்டான். இதுல நாலு, ஐந்து அடைமொழிகளால பகவானை கூப்பிடறார். பகவன் னு சொல்றார். ஷட்குண பரிபூர்ணனான பகவான். விஷ்ணுன்னு சொல்றார். எங்கும் நிறைந்திருப்பவன் ன்னு அர்த்தம். அனந்தன் ன்னு சொல்றார். முடிவில்லாதவன்னு அர்த்தம். ஹரின்னா பாபங்களை போக்குபவன்னு அர்த்தம். ‘ப்ரஸீத’ என் கிட்ட தயவு பண்ணு. என் கிட்ட கருணை காட்டு. ‘மயி அநாதே க்ருபாம் குரு’ -அனாதையான என்னிடத்தில் கிருபை பண்ணு ‘பரமகாருணிக: கி²ல த்வம்’ நீ பரம கருணை கொண்டவன் அல்லவா? தயாநிதி அல்லவா? ‘ஸம்ஸார ஸாகர நிமக்னம்:’ ஸம்ஸார ஸாகரத்துல நான் மூழ்கியிருக்கேனே, ‘தீ³னம் உத்³த⁴ர்துமர்ஹஸி ‘ – இந்த அற்பனை நீ கரையேற்ற வேண்டாமா? என்னைக் கரையேத்தணும். ‘புருஷோத்தமஸி:’ – நீ புருஷர்களுக்குள்ள உத்தமன். அப்பேற்பட்ட நீ தான் என்னைக் காப்பாத்த முடியும். தயவு பண்ணு ன்னு கேட்கறார்

தத் த்வம் ப்ரஸீத³ ப⁴க³வன் குரு மய்யனாதே²

விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: கி²ல த்வம் ।

ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³னம்

உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோऽஸி ॥

ன்னு வேண்டிக்கறார்.

அந்த மாதிரி பிறவிக் கடலை நீந்துவதற்கு பகவானுடைய கிருபையைத் தவிர வேற ஒரு உபாயம் இல்லை. அதனால பகவானை பல நாமங்கள்ல கூப்பிட்டு அவனுடைய தயவு ஏற்படறதுக்காக வேண்டுதலை முன் வைக்கறார். இவ்ளோ நேரம் இந்த பக்தியோட பெருமையை சொல்லிண்டிருந்தார். இங்க அப்படி பக்தி பண்ணினாலும் தன்னுடைய முழு இயலாமையையும் வெளிப்படுத்தி, நீ தான் தயவு பண்ணுன்னு கெஞ்சறார்.

அடுத்த ஸ்லோகத்துல, இந்த மாதிரி ஸ்லோகங்களை திரும்பத் திரும்ப ஆவர்த்திதான் பண்ண முடியுமே தவிர, இதுல அர்த்தம் கொஞ்சம் தான் சொல்லலாம். ஆனா அந்த அழகு அவ்ளோ அழகா இருக்கு

नमामि नारायणपादपङ्कजं करोमि नारायणपूजनं सदा ।

वदामि नारायणनाम निर्मलं स्मरामि नारायणतत्त्वमव्ययम् ॥ ३८॥

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயண நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

ன்னு சொல்றார். நாராயணனுடைய சரண கமலங்களை நமஸ்கரிக்கறேன். நாராயணனுடைய பூஜையை எப்பொழுதும் செய்கிறேன். ‘ஸதா நாராயண பூஜனம் கரோமி’ நாராயணா என்ற தூய்மையான அந்த பகவானோட நாமத்தை எப்பொழுதும் ஜபிக்கிறேன் ‘வதா³மி நாராயண நாம நிர்மலம்’

‘ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்’ அந்த நாராயண தத்வத்தை எப்போதுமே தியானம் பண்றேன். அதாவது மனோ, வாக்கு, காயம் ன்னு சொல்வா. மனசால நாராயணனுடைய தத்வத்தை தியானம் பண்றேன். வாக்கால் நாராயண நாமத்தை சொல்கிறேன். காயத்தினால், உடம்பினால் நாராயணனுடைய பூஜையை பண்றேன். முதல்ல ‘நமாமி நாராயண பாத பங்கஜம்’ னு இந்த மனோ,வாக்கு, காயங்களால உன்னோட காரியத்தைப் பண்ணி, அதுக்கெல்லாம் மேல உன்னை நமஸ்காரம் பண்ணி, முழுக்க என்னை உன்னிடத்தில் சமர்ப்பிக்கிறேன் ன்னு சொல்றார்.

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயணநாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயணநாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

 

Series Navigation<< முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை >>
Share

Comments (1)

  • Latha srinivasan

    இதுவரை மேல் எழுந்தவாரியாக பொ௫ள் தெரிந்து பாராயணம் செய்த எனக்கு , உங்கள் பக்தி தழும்பும் விளக்கம் மேலும் மேலும் க்௫ஷ்ண ஸ்மரணையில் இ௫க்கும்படி செய்துவிட்டீர்கள். நன்றிகள் பல🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.