Categories
Mukunda Mala

முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை

Govinda – Art by Keshav Venkataraghavan

முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 39 and 40)

இன்னிக்கு முகுந்த மாலையில 39, 40 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். இரண்டையும் சேர்த்து படிக்கலாம். அந்த இரண்டுலயும் சேர்த்து ஒரு கருத்தைத்தான் சொல்றார்.

श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे ।

श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥३९॥

अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति ।

वक्तुं समर्थोऽपि न वक्ति कश्चित् अहो जनानां व्यसनाभिमुख्यम् ॥ ४०॥

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥ 40॥

ன்னு சொல்றார். இந்த நாமங்கள் எல்லாம் சொல்லி, ஸ்ரீநாதா, நாராயண, வாசுதேவா, ஸ்ரீ கிருஷ்ணா, பக்தப்ப்ரிய, சக்ரபாணே, ஸ்ரீபத்மநாப, அச்யுத, கைடபாரே, ஸ்ரீராம, பத்மாக்ஷா, ஹரே, முராரே, அனந்த, வைகுண்ட, முகுந்த, கிருஷ்ண, கோவிந்த, தாமோதர, மாதவன்னு, சொல்ல முடியும். ‘வக்தும் ஸமர்தோ²ऽபி’ – இந்த பகவந் நாமங்கள் எல்லாம் சொல்றதுக்கு நமக்கு சக்தி இருக்கு. ஆனா ‘ந வக்தி கஸ்சித்’ யாரும் இதை சொல்ல மாட்டேங்கறாளே! ‘அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம்’ ஜனங்களுக்கு தனக்கு தீமையான விஷயங்களைப் பண்ணி, துக்கப் படறதுல ரொம்ப ஆவல் ஜாஸ்தியா இருக்கு. அதையெல்லாம் ரொம்ப விரும்பி பண்றா. இந்த பகவானோட நாமங்களை சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொல்றார். வியாசர் ஒரு ஸ்லோகத்துல சொல்றார்

நாராயண இதி நமாஸ்தி வாகஸ்தி வசவர்த்தினி |

ததாபி நரகே கோரே பதந்தீதி ததத்புதம் ||

ன்னு சொல்றார். நாராயணா என்ற நாமம் இருக்கு. வாக்கு இருக்கு. இரண்டும் ‘வசவர்த்தினி’ – இரண்டும் நம்ம கையில தான் இருக்கு. நம்ம வாக்கு, அதாவது நம்ம நாக்கு நம்ம கிட்ட தான் இருக்கு. நாராயணாங்கிற நாமம் சுலபமா சொல்லலாம். அது நம்ம கிட்ட தான் இருக்கு! என்ன ஆச்சரியம்! இது இருந்து கூட ஜனங்கள் போய் கோரமான நரகத்துல விழறாளேன்னு சொல்றார்.

இந்த வ்யஸனம்ங்கிற வார்த்தைக்கு தீமையைக் கொடுக்கக் கூடிய காரியங்கள்னு அர்த்தம். கெட்டப் பழக்கங்கள், குடி, சூதாட்டம், இந்த காலத்துல சினிமா, internet, whatsapp, facebook எல்லாம் சேர்த்துக்கலாம். இந்த modern gadgets, technology எல்லாமே மூளையை பாழ் பண்ணும் ன்னு சிவன் சார் warn பண்றார். அதுல 1% வேணா நாம நல்லதுக்கு use பண்றோம். பாக்கி நேரம் எல்லாம் அதுல வீண் பண்றோம். அந்த மாதிரி பண்ணினா உடம்பும் கெடும். stress ஜாஸ்தி ஆகி மனசும் கெடும்ங்கிறது பார்த்தாலே தெரிகிறது. இந்த கால நம்ம வாழ்க்கை முறையில சரியான சாப்பாடு இல்ல.  இல்லை.சாப்பாடு இருக்கு. அதை எப்படி சாப்பிடணுமோ, அது தெரியல. அதை நிதானமாக ருசிச்சு, சந்தோஷமா சாப்பிடறது, நல்லபடியா தூங்கறது எல்லாமே கெட்டு இருக்கு. அதுக்கு நாம ஜபம் நல்லதொரு மருந்தாக மஹான்கள் prescribe பண்றா.

நான் என்னோட அனுபவத்துலேயே பார்த்திருக்கேன். ஒரு புத்திசாலியான பையன் ஒருத்தன் இருந்தான். அவன் நல்ல mark வாங்கி நல்ல college ல படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலையில இருந்தான். ஆனா அவன் மனக்கலக்கத்தோட இருந்தான். நான் ஸ்வாமிகள் கிட்ட அழைச்சிண்டு வந்தேன். ஸ்வாமிகள் “அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித” ன்னு 336 தடவை ஜபிச்சிட்டு, ராம நாமத்தை ஒருமணிநேரம் சொல்லுன்னு சொன்னார். அவன் mental healthகாக பல மருந்துகள் சாப்டுண்டு இருந்தான்.  இந்த நாம ஜபம் பண்ணி அவனுக்கு உடம்பு, மனசு எல்லாம் ரொம்ப சரியாகி கல்யாணமாகி, குழங்தைகளோடு சௌக்யமா இருக்கான். அப்படி கண்கூடா அந்த நாமம்கிறது நன்மை செய்கிறது. மஹான்கள் எல்லாரும் அதைச் சொல்றா.

சில பேர் வேதாந்த class போறேன்னு போயிடறா. வேதாந்தம் படிக்கறதுக்கே யோக்யதை வேணும். ப்ரம்ம ஸுத்ர பாஷ்யத்தோட ஆரம்பத்துல ஆதிசங்கரர் விவேகம், வைராக்யம், ஷமதமாதி ஷட்குணங்கள், முமுஷூத்வம் இந்த நாலும் இருக்கிறவா, இந்த பிரம்மா சூத்ரத்தை படிக்கறதுக்கு லாயக்குன்னு சொல்றார். ஒரு கிருஹஸ்தர் ஸ்ருங்கேரி ஆச்சார்யாள் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் கிட்ட, ‘ஆதிசங்கரர் இப்படி சொல்றாரே, வாஸ்தவமா?’ ன்னு கேட்ட போது, ‘ஆதிசங்கரர் சொல்றார், இது வாஸ்தவமா என் கிட்ட கேட்கறயே? அவர் சொன்னதை அப்படி கேட்கலாமா? அவர் சொன்னா சத்யம் தான்’ ன்னு சொல்றார். ‘அவரே அப்படி சொல்றார்னா நாங்களெல்லாம் ப்ரம்மசூத்ரம் படிக்கறதுக்கு லாயக்கு இல்லையா?’ ன்னு க்ரஹஸ்தர் கேட்கறார். ‘லாயகில்லைதான். ஸந்யாசிகளுக்குள் இந்த மாதிரி எல்லா குணங்களும் இருக்கிறவா படிக்கறதுக்காக ப்ரம்ம சூத்ரம், ப்ரம்ம சூத்ர பாஷ்யம் அவாளுக்குதான்’ ன்னு ஆசார்யாள் சொல்றார். ‘அப்ப நான் இவ்ளோ நாள் படிச்சேனே! அதெல்லாம் ஒண்ணும் ப்ரயோஜனம் இல்லையா?’ங்கிறார் வந்தவர். ‘பிரயோஜனம் இல்லைன்னு இல்ல. ஆத்மா, மாயைன்னு ஒருசில விஷயங்களை நீ theoriticalஆ தெரிஞ்சிண்டு இருப்ப. என்னிக்காவது ஒருநாள் எந்த ஒரு ஜன்மத்துலயாவது அவர் சொல்ற குணங்கள்லாம் வந்து இதைப் படிக்கும்போது அந்த familiarity உனக்கு help பண்ணும். ஆனா அவர் சொல்றது ரொம்ப வாஸ்தவமான விஷயம். ப்ரம்ம சூத்ர பாஷ்யங்கள் ஸந்யாசிகள் படிக்கறதுக்காக தான்’ ன்னு சொல்றார் ஸ்ருங்கேரி சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். ஆத்ம விசாரம்ங்கிறது ரொம்ப உயர்ந்த ஸ்திதியில இருக்கிறவாளுக்கு.

நாம காரியங்கள் பண்ணிண்டு காரிய உலகத்துல இருக்கோம். ஆசாபாசங்களை பூர்த்தி பண்ணிக்கறோம். atleast இந்த வ்யஸனங்கள்ல, இந்த கெட்டப் பழக்கங்கள்ல  போகாம, குடும்பத்துக்காக வேலை செய்யறது, அதுல கொடுத்த காசுக்கு நேர்மையா உழைச்சு அந்த பணத்தைக் கொண்டு குடும்பத்தை பரணம் பண்ணி, சந்தோஷமா இருக்கிறது அதெல்லாம் அவசியம் பண்ண வேண்டியதுதான். ஆனா இதுக்கு மேலான இன்பங்கள் இருக்கு. பகவானை அடையணும். ஏன்னா,ரொம்ப பாக்யவசத்துனால இந்த பாரத பூமியில வந்து இருக்கோம். “புவனியில் போய் பிறவாமையில் நாம் நாள் போக்குகின்றோம் அவமே இந்த பூமி” ன்னு திருப்பள்ளி எழுச்சியில இந்த புவனியில வந்து நாம பிறக்கலையேன்னு தேவர்கள்லாம் ரொம்ப வருத்தப் படறாளாம். இந்த பூமியில வந்த பிறந்தா நமக்கு சிவபெருமானோட அருள் கிடைக்கும். இந்த மேலுலகங்கள் எல்லாம் தேவலோகம், பிரம்மலோக பர்யந்தம், ஸ்வர்காதி லோகங்கள்ல சந்தோஷம் அனுபவிப்பாளே தவிர முக்தி கிடையாது.

இப்ப foreign லேயே நாம பார்க்கறோம். வாழக்கை நன்னாயிருக்கு. ரொம்ப சௌக்யமா இருக்கேன்னு சொல்லுவாளே தவிர, ஞானத்தோட தன்னலமில்லாத உயர்ந்த மஹான்களோட சங்கம் கிடைக்குமா? அந்த மாதிரி ஸாதுக்களோட தர்சனம் பாக்யமும் அவா கிட்டயிருந்த நல்லது கேட்டுக்கற இந்த பாக்யங்கள் எல்லாம் இந்தியாவுல இருந்தா தான் கிடைக்கும்.

இந்தியாவுல இருந்தா வாழ்க்கை கஷ்டமாதான் இருக்கு. அதுதான் அனுக்ரஹம். நமக்கு frustrations இருக்கும் போது தான் ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வியாதி துக்க தோஷானுதர்சனம் ன்னு இதெல்லாம் வந்துண்டே இருந்தாதான் நமக்கு வாழ்க்கை நிலையற்றது. இதுக்கு மேலான சந்தோஷம் இருக்குன்னு ஞாபகம் வரும். அமெரிக்காவுல ஒரு car வாங்கி ஓட்டினா ரொம்ப சந்தோஷமா இருக்கும். இங்க ஒரு car வாங்கி ஓட்டறதுகுள்ள ரொம்ப frustration ஜாஸ்தியா இருக்கும். அதுனால காரை வாங்கி வெச்சுட்டு திரும்ப நாம ஸ்கூட்டர் எடுத்துண்டு போயிடுவோம். இல்ல பஸ்ல போயிடுவோம். அந்த மாதிரி frustrations நமக்கு ஒரு பாடம் கற்பிக்கறது. இந்த சுகங்கள் எல்லாம் நிலையற்றது. துக்கம்கிறது வந்துண்டே இருக்கப் போறது. இந்த வாழ்க்கைங்கறது முடியப் போறது. உண்மையை உணரனும்னு தோணும் போது தான் இதுக்கு என்ன answer?இதுக்கு வேற மாற்றே இல்லையான்னு நினைக்கும் போது நாம பகவானுடைய பக்கம் திரும்புவோம். மஹான்கள் அவ்ளோ தூரம் நாமத்தோட மஹிமையை சொல்லி நீ நாம ஜபம் பண்ணு. அதுனால உனக்கு பக்தி ஏற்படும், இதை பண்ண மாட்டேங்கறாளேன்னு எல்லா மஹான்களும் ஏக்கத்துல சொல்றா. இவரும் சொல்றார். இதை நாம மனசுல வாங்கிண்டு அதிகமா நாம ஜபம் பண்ணுவோம். இந்த ஸ்லோகத்தை இரண்டு தடவை படிக்கறேன்

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥

இந்த கோவிந்த தாமோதர மாதவேதின்னு சொல்லும்போது கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்ரம்னு ஒண்ணு இருக்கு. 72 ஸ்லோகங்கள். ஒண்ணுஒண்ணும் முடியும்போது கோவிந்த தாமோதர மாதவேதின்னு முடியும். வில்வமங்களாச்சாரியார் ன்னு ஒருத்தர் பண்ணது. ஸ்வாமிகளுக்கு ரொம்ப இஷ்டமான ஸ்தோத்ரம். அது பிடிச்சதுனால தான் அவரை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்னே எல்லாரும் கூப்பிட்டோம். அதுல இந்த ஸ்லோகத்தை அவர் இனிமையா சொல்வார்.

கோவிந்த கோவிந்த ஹரே முராரே கோவிந்த கோவிந்த முகுந்தகிருஷ்ணா

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே கோவிந்த தாமோதர மாதவேதி

கோவிந்த கோவிந்த ஹரே முராரே கோவிந்த கோவிந்த முகுந்தகிருஷ்ணா

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே கோவிந்த தாமோதர மாதவேதி

ன்னு  சொல்லிண்டே இருப்பார். அதைக் கேட்டா நமக்கு உலகமே மறந்து போயிடும். உடம்பே மறந்து போயிடும். மனசுல கவலைகள் போயி recharge ஆயிடுவோம் நாம. ஸ்வாமிகள் ரொம்ப இனிமையா சொல்வார். அந்த மாதிரி நாமங்களுக்கு அந்த மஹிமை இருக்கு. இந்த ஸ்லோகத்தை இன்னொரு தடவை படிக்கறேன்.

ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே ।

ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥

அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ।

வக்தும் ஸமர்தோ²ऽபி ந வக்தி கஸ்சித் அஹோ ஜனாநாம் வ்யஸனாபி⁴முக்²யம் ॥

இந்த மாதிரி நாம வ்யஸனத்துல போய் விழாம, பகவானோட நாமங்களைச் சொல்லி பழகுவோம். எங்கும் எப்பவும் சொல்லலாம். நாக்கு இருந்தா போறும். வேற ஒரு கண்டிஷனும் கிடையாது. யாரும் சொல்லலாம். எங்கும் சொல்லலாம். எப்பவும் சொல்லலாம். நாமும் சொல்லி அந்த ஆனந்தத்தை அனுபவிப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

 

Series Navigation<< முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை”

Aparajitha pingaaksha namaste ramapoojitha japam has changed my life to see the positive side of my life. It helped me overcome worries and to live a good life.
Govinda damadora madavethi song I listen 3 times when I am in trouble it calms my mind

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.