Categories
Govinda Damodara Swamigal

மாயவரம் பெரியவா

மாயவரம் பெரியவா (6 min audio in tamizh, same as the script above)

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னோட பாகவத படனத்துக்கும், பாகவத ப்ரவசனத்துக்கும் மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள்னு ஒரு மஹானை ‘மானசீக குருவா’ வெச்சுண்டு இருந்தார் … மாயவரம் பெரியவான்னு சொல்லுவா “எனக்கு அவர் கிட்ட தான் ஹீரோ worship!” அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அந்த நாள்ல மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள்னு ஒருத்தர் இருந்தார். அவர் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு வேதம் சொல்லிக் கொடுத்துண்டு இருந்தார். ஆயிரக் கணக்கான வேத பண்டிதர்களை உருவாக்கி இருக்கார். அவருக்கு ‘மஹா மஹோபாத்யாயா’ன்னு இங்க்லீஷ்காரன் விருது கொடுத்த போது டெல்லிக்கு வர சொன்னானாம்.

“எனக்கு நேரமில்லை. அனுஷ்டானம் இருக்கு!” அப்படீன்னு சொன்னாராம்.

“தஞ்சாவூர் ல வந்து வாங்கிக்குங்கோ” அப்படீன்னு சொன்னப்பவும்

“இல்லையில்லை…நேரமில்லை” னு சொல்லிட்டாராம்.

அப்புறம் அவர் ஆத்துக்கே வந்து கொடுத்தாளாம்.

அப்படிப்பட்ட மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளை “மன்னார்குடி பெரியவா”ன்னு மஹா பெரியவாளே கூட பேரைச் சொல்லாம refer பண்ணி பேசியிருக்கா.

அதுமாதிரி… ஆங்கரைப் பெரியவான்னு நம்ம ஸ்வாமிகள் இருந்தார்…

மாயவரம் பெரியவான்னு இந்த சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் இருந்தார்…அவர் சின்ன வயசுல வேதாத்யயனம் முடித்தப் பின்னே சாஸ்த்ரங்களெல்லாம் வாசிச்சிருக்கார்…வியாகரணம், வேதாந்தம், மீமாம்சை, எல்லாம் வாசிச்சிருக்கார்.

ஆனா அவருக்கு வாக்கில் கொஞ்சம் திக்கல் இருந்துதாம். மஹா பெரியவாக் கிட்டப் போய் சொன்னாராம்.

“இவ்வளவு படிச்சிருக்கேன்! ஆனா என் வித்வத்தை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியலையே” ன்னு சொன்னப்போ, மஹா பெரியவா, “உன்னோடப் படிப்பெல்லாம் வச்சுண்டு ராமாயணம் பாகவதம் படி. ராமாயண பாகவதக் கதையை உன் புத்தியையும் இந்த படிப்பையும் வச்சுண்டு.. எப்படி சொல்லலாம்னு மனசுல கவனம் பண்ணிக்கோ. அதை அப்படியே ஒப்பிக்கற மாதிரி… ப்ரவசனம் பண்ணு. ஜனங்கள் சந்தோஷப்படுவா. அவாளுக்கும் புண்ணியம். உனக்கும் புண்ணியம். ராமர் காப்பாத்துவார்! க்ஷேமமாக இருப்பாய்.” மேலும் “யோசிச்சு, யோசிச்சு சொன்னாதான் திக்கல் வரும். ஒப்பிக்கற மாதிரி சொன்னா திக்காது”, அப்படீன்னு மஹாபெரியவா சொன்னாராம்.

அது மாதிரி சிவரமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் ராமாயணம் பாகவதம் சொல்லி ரொம்ப ஷ்ரேயஸோட இருந்தாராம். ஆனா ஆரம்பிச்சார்னா பாகவதம்னா அதே ஏழு நாள் அதே ஸ்லோகங்கள், ராமாயணம்னா ஒன்பது நாளும் அதே நாள்ல அதே ஸ்லோகங்கள் அதே வர்ணனைகள்… இப்படி இவர் ப்ரவசனம் பண்ணுவார். இதை நம்ம ஸ்வாமிகள் ரொம்ப விரும்பி கேட்பார்.

ஏழு நாள் இங்கேன்னா, இங்கே கேட்பார். அடுத்தது எங்கேன்னு கேட்டுப்பார். அங்கே போய் திரும்பவும் கேட்பார். ஆனா ஸ்வாமிகள் மாயவரம் பெரியவா கிட்ட ரொம்ப நெருங்கி எல்லாம் பழகலை. மாயவரம் பெரியவாளுக்கு அங்கே வந்து கேட்கரவாள்ல இவரும் ஒருத்தராத்தான் தெரிவார். நெருங்கவே இல்லை! நெருங்கினா அந்த அனுபவம் / சந்தோஷம் எங்க கொஞ்சம் குறைஞ்சுடப் போறதுன்னு நெருங்கவே இல்லை. மாயவரம் பெரியவாள் கிட்ட கணக்கற்ற தடவை ராமாயணம் பாகவதம் கேட்டிருக்கார்.

அந்த மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகளை, மஹா பெரியவாளே கூப்பிட்டு தன்னிடத்தில ப்ரவசனம் பண்ணச் சொல்லி கேட்டிருக்கார். அவாளுக்கு மஹா பெரியவா ‘ப்ரவசன மார்க்கதர்சி’ அப்படீன்னு title (பட்டம்) கொடுத்திருக்கார்.

ப்ரவசனம் எப்படி பண்ணனும்னு இவர்தான் வழிக் காட்டுகிறார். அல்லது ப்ரவசனம் மூலமா ஜனங்களுக்கு நல்வழி காட்டுகிறார்னு வெச்சுக்கலாம். அப்படீ அபூர்வமான பட்டம் ஒண்ணு அவருக்கு கொடுத்தார்.

நம்ம ஸ்வாமிகளை அவரோட ஸ்ரீ வித்யா குரு “நீ ப்ரவசனம் பண்ணனும்!” என்று ரொம்ப சொல்லவும் “சரி. இதுவும் பகவத் ஆக்ஞை” அப்படீன்னு ப்ரவசனம் பண்ண ஆரம்பிக்கிறார். அப்போ ப்ரவசனத்தில் ரொம்ப பாப்புலர் ஆக இருக்கிறவாளோட வழிகள் எல்லாம் ஸ்வாமிகளுக்குத் தெரியும். ஸ்வாமிகள் எளிமையா இருப்பாரே தவிர ரொம்ப shrewd (சூட்சும புத்தியுடையவர்) தான்.

“அந்த வழியிலே போனா டக்குன்னு கூட்டம் வரும்… பணம் வரும்.. எல்லாம் தெரியும்… ஆனா…மஹா பெரியவா மாயவரம் பெரியவாளைத் தான் ‘ப்ரவசன மார்க்க தர்சீ’ன்னு சொல்லியிருக்கா… அதனால ப்ரவசன மார்கத்திற்கு மாயவரம் பெரியவாதான் என் குரு” அப்படீனுட்டா.

மாயவரம் பெரியவாளை மாதிரியே தானும் ராமாயண பாகவதத்துல இருக்கிற ஸ்லோகங்களையே நிறைய quote பண்ணி அங்க உள்ள கதையையே சொல்லறதுனு வெச்சுண்டார். கதைக்கு வெளியில காளிதாசன், கம்பன் அப்படீன்னு quote பண்ணா, கொஞ்சம் colorful இருக்கும். ஆனா…அது வேண்டாம். True to the text. இந்த மூல கிரந்தத்துக்கு சத்தியமாக இருக்கணும், அந்த ரிஷிகளோட வாக்குக்கு மேலேயா? வால்மீகி ஹ்ருதயம், சுக பகவானோட வாக்-அம்ருதம்… அதை நாம அனுபவிப்போம். அதுதான் கடமைன்னு நினைச்சு sincere-ஆ அதைப் பண்ணியிருக்கார்.

அதனால் தான் மஹா பெரியவா நம்ம ஸ்வாமிகளை படிக்கச் சொல்லி… உட்கார்ந்து கேட்டு…“பாகவதருக்குத் தான் சிரமம்… நமக்கெல்லாம் ஆனந்தம்…” “படனம் மதுரம்… ப்ரவசனம் மதுரதரம்….”அப்படீன்னெல்லாம் வாயார கொண்டாடியிருக்கா. அவரைப் ஆஸ்ரயச்சுண்டவா கிட்ட, ஜானகிராம மாமா மாதிரி பக்தர்கள் கிட்ட “ஸுபாஷ்ரயம். பிடிச்சது புளியங்கொம்பாப் பிடிச்சிருக்கே” ன்னு என்றெல்லாம் சொல்லி வழிக் காண்பிச்சிருக்கார்.

சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் காலத்துக்கு அப்புறம், கொஞ்சம் நாளாச்சு. மஹா பெரியவா தன் கூட இருந்த ஸ்ரீகண்டன் மாமா, பாலு மாமா எல்லார் கிட்டயும் பேசிண்டு இருந்தாராம். “பாகவதம் கேக்கணும்னு ஆசையா இருக்கு. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகளும் வைகுண்டம் போயிட்டார்” அப்படீன்னு சொல்லிண்டு இருக்கிற போது, அவா எல்லாம் ஒவ்வொருத்தர் பேரைச் சொன்னாளாம். அதுக்கு பெரியவா, “அதெல்லாம் ஒரே நரஸ்துதியான்னா இருக்கும்… அதை எப்படிக் கேட்பேன்?” என்று சொன்னாளாம்.

அப்பறம் மஹா பெரியவாளே “திருவல்லிக்கேணி கல்யாணராம பாகவதரைக் கேட்போம்”, அப்படீன்னு சொல்லியிருக்கார். அப்போ ஸ்வாமிகள், தானே கோகுலாஷ்டமில முடியற மாதிரி பாகவதம் படிச்சு பூர்த்தி பண்ணிட்டு பூஜை பண்ணிண்டு இருந்தார். அவர் சொன்னாராம், “அந்த வாரத்தில் எங்க அம்மா ஸ்ராத்தம் வரது. ஸ்ராத்தம் பண்ணிட்டு பாகவதம் படிக்கலாமா? ஸ்ராத்த சமையலுக்கு அங்கே யாராவது ஒத்தாசை பண்ணுவாளா?”னு கேட்டிருக்கார்.

அப்போ மஹா பெரியவா ஸ்ரீகண்டன் மாமா கிட்ட, “ஸ்ரீகண்டா! எனக்கு பாகவதம் கேட்கணும்னு ஆசையா இருக்கு. உன் அத்தைக்கு ஸ்ராத்தம் பண்ணறதுக்கு நீ சௌகரியம் பண்ணித் தரியா?” அப்படீன்னு கேட்டு, ஸ்ரீகண்டன் மாமாவும் ஸ்வாமிகளும் அத்தான் அம்மாஞ்சி…உறவு, அவர் சமையல் பண்ணிக் கொடுத்து, அப்படி மஹா பெரியவா ஆசைப்பட்டு நம்ம ஸ்வாமிகள் கிட்ட பத்தொன்பது வருஷம், ஒவ்வொரு கோகுலாஷ்டமி போதும் பாகவதம் கேட்டிருக்கார்.

மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< பெண்களிடம் கருணைவிசித்ர ரூப:கலு தவ அனுக்ரஹ: – அனுக்ரஹம் பலவிதம் >>

2 replies on “மாயவரம் பெரியவா”

Saakshaath Mahangal. There are many routes to reach God. But from all the maarga there is a special place for true bakthi. Is there any recordings of swaigal sapthaham or paarayanam? Again this Bhava of bakthi rasam through your writing deliverry to us. Namaskaram anna.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.