Categories
Govinda Damodara Swamigal

யத் பாவம் தத் பவதி

யத் பாவம் தத் பவதி (7 min audio in Tamizh, same as the script above)

“यद्भावं तद्भवति” (யத் பாவம் தத் பவதி) அப்படின்னு, எதை நினைக்கிறோமோ அதாவே ஆகிவிடுவோம் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. ஸ்வாமிகள் 36 வயசுல மஹாபெரியவா கிட்ட உத்தரவு வாங்கிண்டு பகவத் பஜனமே பண்ணிண்டு இருந்தார். அதுலேர்ந்து ஸ்வாமிகள் மஹாபெரியவாளையே த்யானம் பண்ணிண்டு இருந்தார், அதுனால அவர் மஹாபெரியவாளாவே ஆகிவிட்டார்.

“ஸாமீப்யம்” அப்படின்னு மஹாபெரியவா கூப்பிட்டு அனுப்பிச்சு அவரை நெருங்கினார்.

“ஸாலோக்யம்” அப்படின்னு மஹாபெரியவா எந்த planeல, எந்த மனப் பரிபாகத்துல இருந்தாளோ அது மாதிரி இவரும் அந்த planeல போய்ட்டார். இவருக்கும் வைராக்கியம் ஞானம் வந்துடுத்து.

“ஸாரூப்யம்” – மஹாபெரியவாளை போலவே ஸ்வாமிகளோட ரூபமும் ஆகிவிட்டது. ஸ்வாமிகள் அந்த கம்பை வச்சுண்டு நடக்கறது, மஹாபெரியவா தண்டத்தை வச்சுண்டு நடக்கற மாதிரியே இருக்கும். ஸ்வாமிகள் பேசறதும் அதே மஹாபெரியவாளோட இனிமை. அவருடைய அந்த கடாக்ஷம், அந்த மந்தஸ்மிதம் எல்லாம் சாக்ஷாத் மஹாபெரியவாளை பாக்கற மாதிரி தான் இருக்கும். ஒரு வாட்டி இந்த வலது கை ஆள்காட்டி விரலை மூக்குக்கு கீழ வச்சுண்டு உட்கார்ந்து இருந்தார். அப்படியே எனக்கு மஹாபெரியவாளை பாக்கற மாதிரி இருந்துது. நான் கேட்டேன்; “இப்படி வெச்சுண்டு இருக்கேளே, இதுக்கு significance இருக்கா, அர்த்தம் இருக்கா?” னு கேட்டேன். மஹாபெரியவா வெச்சுப்பா அப்படின்னேன். “மஹாபெரியவா வெச்சுண்டா அதுக்கு அர்த்தம் இருக்கும். அவா வந்து ஏதாவது நாடி சுத்தி பார்ப்பாளாக இருக்கும். எனக்கு இது mannerism அவ்வளவுதான் அப்படின்னார்.” அப்படி பார்க்கறதுக்கு மஹாபெரியவாளை மாதிரியே ஆயிட்டார்.

“ஸாயுஜ்யம்” – மஹாபெரியவாளோட ஞானம் இவருக்கும் பூரணமா ஏற்பட்டு ஜீவன்முக்தராக விளங்கினார்.

அந்த மாதிரி அந்த மஹாபெரியவா த்யானம் பண்ணி மஹாபெரியவா அனுக்ரஹத்துனால கிடைச்ச ஞானத்தை தக்க வெச்சுக்க, ஸ்வாமிகள் ஒரு உபாயம் வெச்சுருந்தார். அது என்னன்னா “ஆடும் பரி வேல் அணி சேவல் எனப்பாடும் பணியே பணியாய் அருள்வாய்” அப்படின்னு பகவானை இடைவிடாது பஜனம் பண்றது அப்படிங்கறது தான் அந்த வழி.

கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்தார் னா ராத்திரி பத்து மணி வரைக்கும் எதாவது ஒரு ஸ்தோத்ர பாராயணம், எதாவது ஒரு நாம ஜபம், ராமாயண பாகவத க்ரந்த படனம், இப்படின்னு வச்சுண்டு இருந்தார். வெறும் பேச்சுக்கே இடம் குடுக்க மாட்டார். யாரவது வந்து நமஸ்காரம் பண்ணினா நாராயணீயத்துலேர்ந்து ஒரு தசகம் படிப்பார்; கல்கண்டு மடிச்சு குடுப்பார்; கிளம்ப வேண்டியது தான். அதுக்கு மேல அங்க இருக்கணும்னா அவர் படிக்கறதை கேட்கலாம். வெறும் பேச்சுக்கே இடம் கிடையாது.

அதே மாதிரி அவரை எங்கயாவது கல்யாணம் கார்த்திகைக்கெல்லாம் கூப்பிட்டா “நான் இங்க படிச்சுண்டு இருக்கேன். அது தான் உங்களுக்கு க்ஷேமம் எனக்கு உடம்பு முடியலன்” னு excuse பண்ணிகொண்டு விடுவார். இப்படி லௌகிகத்துலேர்ந்து முழுமையாக விலகிட்டார். அவர் பண்ற பஜனங்கள் எல்லாம் marathon efforts. ஒரு மண்டலம் ஏழு பாகவத சப்தாஹம் தொடர்ந்து குருவாயூர்ல படிச்சார். நாராயணீயம் ஏக தின பாராயணம் பண்ணுவார். 68 நாள்ல 68 ஆவர்த்தி சுந்தரகாண்டம் படிச்சார். அதுல நடுவுல ஒரு தீட்டு வந்துடுத்து; அதனால ஒரே நாள்ல மூணு ஆவர்த்தி படிச்சு… அப்படி அவர் கார்யங்கள் எல்லாம் न भूतो न भविष्यति. இந்த மாதிரி இன்னொருத்தர் இருக்க முடியாது. இனிமேலும் யாரும் வர முடியாது. அப்படி அந்த பாராயணம் பண்ணிண்டே இருந்தார். கார்த்தால ராமாயணம் பாராயணம் பண்ணிட்டு, ராத்திரி மூகபஞ்சசதீ படிப்பார்.

இந்த மாதிரி இந்த பாராயணம் பண்றது புஸ்தகம் படிக்கறது நாம ஜபம் பண்றது; தன்கிட்ட வரவாளுக்கும் இதைத் தான் சொல்வார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பிரார்த்தனை பண்ணுவா. வேலை கிடைக்கணும் அப்படின்னா மூணு லக்ஷம் “अपराजित पिङ्गाक्ष नमस्ते रामपूजित” அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமபூஜிதா அப்படின்னு ஜபம் பண்ண சொல்லுவார். promotion கிடைக்கணும்னா 25000 सुमुखश्च ஸுமுகஸ்ச சொல்லும்பார்.

सुमुखश्च एकदन्तश्च कपिलो गजकर्णकः ।
लम्बोदरश्च विकट: विघ्नराजो विनायक: ॥
धूम्रकेतुर्गणाध्यक्ष: फालचन्द्रो गजाननः ।
वक्रतुण्ड: शूर्पकर्ण: हेरम्ब: स्कन्दपूर्वज: ॥

ஸுமுக²ஶ்ச ஏகத³ந்தஶ்ச கபிலோ க³ஜகர்ணக꞉ ।
லம்போ³த³ரஶ்ச விகட: விக்⁴னராஜோ விநாயக: ॥
தூ⁴ம்ரகேதுர்க³ணாத்⁴யக்ஷ: பா²லசந்த்³ரோ க³ஜானன꞉ ।
வக்ரதுண்ட³: ஶூர்பகர்ண: ஹேரம்ப³: ஸ்கந்த³பூர்வஜ: ॥

ஒடம்பு சரியாகணும்னா தினமும் 21 ஆவர்த்தி 48 நாள் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணும்பார். குடுப்பதெல்லாம் பெரிய assignment தான். அவருடைய அனுக்ரஹம் இருந்தா அவாளுக்கு அது நடக்கும். பலனும் கிடைக்கும். பஜனத்துல ருசியும் வந்துவிடும்.

ஆனா, இந்த வழி – ஓயாத புஸ்தகத்தை வெச்சுண்டு உக்காந்துண்டு இருக்கறது ஒரு வழியா? அப்படின்னு எனக்கு தோணும். அப்புறம் பாத்தா தான் எல்லா மஹான்களும் அதை ரொம்ப சொல்லி இருக்கா. “சாந்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே”, “அநவரதமும் அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி” அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார்.

रणद्धंसके मन्जुलेsत्यन्त शोणे मनोहारि लावण्य पीयुषपूर्णे |

मनष्षट्पदो मे भवक्लेशतप्तः सदा मोदतां स्कन्द ते पादपद्मे ||

என் மனமாகிய வண்டு உன்னுடைய பாத தாமரையில் “சதா மோததாம்” – எப்பவும் ரமிக்கட்டும். எப்பவும் சந்தோஷப்படட்டும் அப்படின்னு மஹான்கள்-எல்லாரும்

कमलांबां भजरे कल्पित माया कार्यं तयजरे – “அம்மா! மத்த காரியத்தை எல்லாம் விட்டுட்டு உன்னுடைய பஜனத்தை பண்ணனும்”, அப்படின்னு மனசை வேண்டிக்கறார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். நம்ம சிவன் சார் “பகவானை வழிபடுவது தவிர மற்ற காரியம் அனைத்தும் பயனற்றவை என்பதை உணர்ந்தார் தெய்வசாது” அப்படின்னு பட்டினத்தார் எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பிட்டார்ங்கறத பத்தி சொல்றார். அதே மாதிரி மஹாபெரியவாளும் “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” அப்படின்னு “நாக்கு நாமத்தை சொல்லிண்டு இருந்தா போறும் அப்படின்னு மஹான்கள் எல்லாம் கோடி காமிச்சு இருக்கா. போதேந்த்ராள் நாம சித்தாந்தமே பண்ணி இருக்கார். நாக்கு இருக்கு நாமம் இருக்கு. அப்புறம் பயம் ஏது?” அப்படின்னு இந்த ரெண்டு எழுத்து சிவ நாமமோ ராம நாமமோ அதா கெட்டியா குரங்கு பிடியா பிடிச்சுக்கணும்; மத்தவா யோகமோ யாகமோ பிராணாயாமமோ பண்றவா பண்ணட்டும் அவ எல்லாரும் குடுத்து வெச்சவா; நம்ப இத பண்றோம்னு humble-ஆ பண்ணு” அப்படின்னு மஹாபெரியவா பேசி இருக்கா.

அந்த மாதிரி பாராயணம் பண்ணிண்டே இருக்கறது, பகவன் நாமத்தை சொல்லிண்டே இருக்கறதுங்கறது – ஸ்வாமிகளை நான் என்னுடைய பதினைந்து வயசுல 1986-ல பார்த்ததுலேர்ந்து 2004 வரைக்கும், தினமும் கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்தார் னா ராத்திரி பத்து மணி வரைக்கும் பண்ணிண்டே இருந்தார். நமக்கும் இந்த பஜன மார்க்கத்தில் ஒரு நம்பிக்கை வரும்படியா பண்ணினார். நானெல்லாம் இன்னிக்கும் ஏதோ தினமும் ஒரு அரை மணி ஸ்தோத்ரங்கள் படிக்கிறேன் னா அது அவருடைய அனுக்ரஹம். அதை விடாம படிக்கறதுக்கு, அதுல எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படறதுக்கு ஸ்வாமிகளும் சிவன் சாரும் ஒரு நாடகம் நடத்தினா. அதை அடுத்தது சொல்றேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< ஶம தன ஜனாஹா:சிவன் சார் அபய வாக்கு >>

2 replies on “யத் பாவம் தத் பவதி”

saravanabava sivarama govinda damodara mahadeva. vendathakkathu nee arivaai. venduthal vendaamai vendum Namaskarams to you anna for your excellent audios and writeups.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.