Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர குணமந்திர

கோவிந்த தாமோதர குணமந்திர (5 min audio in Tamizh, same as the script above)

நான் ஸ்வாமிகளை பற்றி இதற்கு மேல் ஷேர் பண்ணினால், அதில் சொந்த கதை கொஞ்சம் இருக்கும், ஸ்வய புராணம் கொஞ்சம் வரும். ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என் மேல் ப்ரியம் ஏற்பட்டு நாம freinds ஆக இருக்கலாம் என்றால் அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஸ்வாமிகளை ரசிக்க தெரிந்தவர்கள் friends ஆ கிடைச்சா எனக்கும் சந்தோஷம்தான், ஆனால் இதையெல்லாம் கேட்டு நான் பெரியவன் என்று நீங்க நினைத்தால் பின்னால் நீங்கள் ரொம்ப dissapointment ஆக வேண்டி இருக்கும். (-:) அதை நான் இப்பொழுதே சொல்லி வைக்கிறேன்.

நான் வடிகட்டின பாமரன். மஹான்கள் அவர்களுடைய எல்லையற்ற கருணையினாலே, அவ்யாஜ கருணாமூர்த்தி என்றும், தீனதயாளு, பதித பாவனன், என்றும் சொல்கிறோம் அல்லவா, அது போல அவாளோட காரணமில்லாத எல்லை அற்ற கருணையினால் அனுக்ரஹம் செய்யறா! அவ்வளவு தானே தவிர, அதற்கு மேல் என்னிடத்தில் ஒன்றும் இல்லை.

நான் ஸ்வாமிகளை பதினைந்து வயதில் தரிசனம் செய்ததில் இருந்து, அவ்வப்போது அவரிடம் சென்று மூக பஞ்சசதி படித்து கொண்டு இருந்தேன். அந்த கால கட்டத்தில் வேலைக்கு போய் சேர்ந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை. அலைச்சலாக இருந்தது. ஒரு நாள் வேலையை விட்டுவிட்டேன். நான் ஸ்வாமிகளிடம் சென்று, எதோ உங்களுடன் சேர்ந்து பாராயணம் செய்து வருகிறேன், இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்க முடியாது என்று கூறினேன். அப்பொழுது ஸ்வாமிகள் “அப்படி எல்லாம் இல்லையப்பா, நீ படிச்சு இருக்க, உன்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சு இருக்கா, வீட்டில் எதிர்பார்ப்பு இருக்கும், புத்திமானா இருக்க, சம்பாதிக்க வேண்டாமா? இதை போன்று புரட்சி செய்ய முடியாது, காலம் மாறிப் போய்விட்டது. பக்தி மார்கத்தில் evolutionary தான் மேலே வரணும், revolutionary யா வரமுடியாது.” என்று அவர் சொன்னார். ஆனா எங்க அப்பா ஸ்வாமிகள் கிட்ட வந்து, “ஒரு ஸத்குருவோட பார்வை சிஷ்யன் மேல் விழுந்துவிட்டால் அவனைப் பத்தி கவலை படவேண்டாம். ஒரு புலி தன் இரை மேல் கண் வைத்துவிட்டால் அதை அடைந்தே தீரும் என்பதைப் போல், ஸத்குருவும் இவனை காப்பாற்றியே தீருவார்”, என்று சொன்னார்.

இத்தனைக்கும், என் தகப்பனார் அப்பொழுது retire ஆகி இருந்தார். என் தம்பி படிப்பு முடிச்சுட்டு computer course படித்து கொண்டு இருந்தான். என்னுடைய சம்பளம் தேவை. அப்போ எங்கப்பா அவ்வளவு விவேகி. “அவன் நல்ல வழியில், நல்லவர் சேர்க்கையில் இருக்கிறான். அதனால் நன்மை தான் ஏற்படும். ஆகையால், அவனை பற்றி நான் கவலைப் படவில்லை” என்று சொன்னார்.

நான் அங்கே ஸ்வாமிகளிடம் உட்கார்ந்து படித்து கொண்டு இருந்தேன். ஆனால் ஸ்வாமிகள் சொன்ன வார்த்தை உண்மைதான் “நீ சட்டை போட்டு ஒரு வேலைக்கு போனாலே ஒழிய, உன்னால் நிம்மதியா படிக்க முடியாது” என்று சொன்னார். அந்த இரண்டு வருஷத்திலே ஏதேதோ உடம்புக்கு வந்தது, ஸ்ரமங்கள் எல்லாம் இருந்தது. ஆனால் அந்த இரண்டு வருஷம் பொற்காலம். சிவன் சாரை தரிசனம் செய்து அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தேன். ஒரு வருஷத்திற்கு பிறகு ஸ்வாமிகள் சொன்னதினால், வேலைக்கு apply பண்ண ஆரம்பிச்சேன். ஒரு வேலையும் கிடைச்சுது. அந்த வேலையில் foreign போக வேண்டி வந்தது. சிவன் சார் என்னை போயிட்டு வா என்று அனுப்பிச்சார், அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

ஸ்வாமிகள் கிட்ட இருந்து சிவன் சாரை சென்று நமஸ்காரம் செய்ததும், “அவர் சௌக்கியமா இருக்காரா” என்று கேட்பார். “என் நமஸ்காரத்தை சொல்லு” என்பார். ஒரு தடவை ஸ்வாமிகளுக்கு இன்னிக்கு 63 வயசு ஆறது, இன்னிக்கு ஜன்ம நக்ஷத்ரம், அவா 100 வருஷம் இருக்கணும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேன். “நானும் பிரார்த்தனை பண்ணிக்கறேன், இருப்பா” என்று சொன்னார். அன்னிக்கு, சிவன் சார், “நான் அவரை பெரியவா என்று சொல்லுவேன், ஆனா, ரொம்ப ஜாஸ்தி என்று நினைச்சுப்பா, ஆகையால், அவரை ஸ்வாமிகள் என்று கூப்பிடலாம்” என்று சொன்னார். இதை நான் ஸ்வாமிகளிடம் சென்று சொன்னேன். அப்பொழுது அங்கே ஒருத்தர் மிக அழகாக கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் பாடிக் கொண்டு இருந்தார்.

அப்பறம் நான் தெய்வத்தின் குரல் நான்காவது பகுதியில், மஹாபெரியவா ஷட்பதீ ஸ்தோத்ரம் பற்றி உபன்யாசம் செய்து இருக்கா. அதை படித்துக் கொண்டு இருந்தேன். அந்த ஷட்பதி ஸ்தோரத்தில்

दामोदर गुणमन्दिर सुन्दरवदानारविन्द गोविन्द |

भव जलधि मथन मदर परमम् दरमपनयत्वं मे ||

“தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த கோவிந்தா” என்ற வரி வந்தது. அதில் கோவிந்த நாமத்தை மஹாபெரியவா விஸ்தாரமா ஒரு முப்பது பக்கத்துக்கு வியாக்யானம் பண்ணி அனுபவிச்சு இருக்கா.

ஆதி சங்கரரின் குரு கோவிந்தா பகவத்பாதர், அதனால் அவருக்கு, கோவிந்த நாமம் பிடிக்கும், ஆகையால் அவர் பஜ கோவிந்தம் எழுதினார், “பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ” என்று மூன்று முறை பாடி இருக்கிறார். நாம் ஆசமனம் செய்யும் போது, அச்யுத, அனந்தா, கோவிந்த என்று வருகிறது. திரும்பவும் கேஷவ, நாராயணா, மாதவ, கோவிந்தா என்று வருகிறது. அப்படி ஆசமனத்திலேயே இரண்டு தடவை வருகிறது. ஆண்டாள் “வங்கக்கடல் கடைந்த” என்று, பலஸ்ருதி பாசுரத்திற்கு முந்தைய மூன்று பாசுரங்களிலும் கோவிந்த நாமத்தைச் சொல்லி நாராயணனை சரணாகதி செய்கிறாள், இப்படி இந்த கோவிந்த நாமத்தை ரசிக்கறா மஹா பெரியவா.

“दामोदर गुणमन्दिर सुन्दरवदानारविन्द गोविन्द”, தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த கோவிந்தா அப்படிங்கறத गोविन्द दामोदर गुणमन्दिर सुन्दरवदानारविन्द गोविन्द दामोदर गुणमन्दिर सुन्दरवदानारविन्द गोविन्द [கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த, கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த கோவிந்தா] என்று rotate பண்ணி அமுதூற சொல்லிண்டே இருக்கலாம் என்று அருளி இருக்கிறார். இப்படி பேசிக் கொண்டு இருக்கையில், “சிவன் சார் உங்களை ஸ்வாமிகள் என்று குறிப்பிட வேண்டும்” என்று சொன்னார், என்று கூறியதும், “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்” என்று கூப்பிடுங்கோ, சொல்றவாளுக்கும், கோவிந்த நாமத்தை சொன்ன புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார்.

गोविन्द गोविन्द हरे मुरारे

गोविन्द गोविन्द मुकुन्द कृष्ण।

गोविन्द गोविन्द रथांड़्गपाणे

गोविन्द दामोदर माधवेति ।।

கோவிந்த கோவிந்த ஹரே முராரே

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா

கோவிந்த கோவிந்த ரதாங்கபானே

கோவிந்த தாமோதர மாதவேதி|

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< சிவன் சார் அபய வாக்குவேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி >>

3 replies on “கோவிந்த தாமோதர குணமந்திர”

I’m seeing Goddess Kamatchi through `you’ Shri Ganapathy Subramanian. It’s not an exaggeration. You are such an divine soul. I am fortunate and very very rare to come across such a GEM. Just I love your recitation of Mooka Pancha Shathi. May I sincerely pray to the almighty to give you good health, peace and prosperity.

கணபதி அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, பலருக்கு ஸ்லோகங்கள் கற்றுக் கொடுத்து, நிறைய பாராயணம் செய்ய குரு கடாக்ஷம் நிறைய இருக்கு ! குருவின் நேர்ப் பார்வையில் இருந்தவருக்கு, இருப்பவருக்கு அருள் கடாக்ஷம் நிரம்பி வழியும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை !
I bow to his profound knowledge !!

Namaskaram Anna 🙏
Your memories with Sri. Swamigal gives a very clear picture of his piety and simplicity.
Your series of posts on Sri.Swamigal is an opportunity to revel up on Bhagwan, the way in which Sri.Swamigal meditated, Also his guidance to his followers through the posts. Fortunate you are to have served Mahans like Sri.Sivan Sar and
Sri. Swamigal. Fortunate we are to be associated with you. 🌻🌻

Leave a Reply to R VenkatesanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.