Categories
Govinda Damodara Swamigal

யா நிஷா சர்வபூதானாம்

யா நிஷா சர்வபூதானாம் (7 min audio in Tamizh, same as the script above)

ஸ்வாமிகள் பாகவதம் பாராயணம் பண்ணும் போது அவருக்கு மனசுல ஏற்படற கருத்துகளை, ஸ்ரீ மஹா பெரியவாகிட்ட பிரவசனம் பண்ணும்போது சொல்லுவாராம். அதை மஹா பெரியவா ஒத்துகராளா அப்படின்னு பார்க்கறதுக்காக.

ஒரு தடவை “பகவத் கீதையில் கர்ம மார்கத்துல முடிவான நிலையை அடைந்தவனுக்கு ஸ்தித பிரக்ஞன் என்று பேரு. பக்தி மார்கத்துல அடைந்தவனுக்கு உத்தம பக்தன் என்று பேரு. ஞான மார்கத்துல அடைந்தவனுக்கு ஜீவன் முக்தன், ஞானி என்று பேரு, யோக மார்கத்துல அடைந்தவனுக்கு யோகி என்று பேரு, ஆனால் இந்த நாலும் நாலு பாதைகளே தவிர அதோட முடிவும் லக்ஷ்யமும் ஒண்ணேதான். அவாளோட லக்ஷணங்களை பகவான் சொல்லி இருப்பதை பார்த்தா நாலும் ஒரே நிலைமைதான் அப்படீன்னு தோண்றது,” அப்படீன்னு சொன்னவுடனே மஹா பெரியவா “ஆஹா ” அப்படீன்னு கொண்டாடினாளாம்.

ஸ்வாமிகள் சொல்லுவார், “அவா அவா முயற்சி பண்றா. நாம எதோ இந்த பாகவதம் படிச்சுண்டு இருக்கோம். நமக்கு தெரிஞ்ச பக்தி பண்ணிண்டு இருக்கோம்” அப்படின்னு நினைப்பேன், “மஹா பெரியவா கிட்ட இதை சொல்லி அவா ஒத்துண்டதுனால இதனாலேயும் நாம் லக்ஷ்யத்தை அடையலாம் அப்படீனு எனக்கு ஒரு நம்பிக்கை. அந்த certificateமஹா பெரியவாகிட்ட வாங்கி வச்சுண்டு இருக்கேன்” அப்படீம்பார்.

அந்த ஸ்திதபிரக்ஞனுடைய லக்ஷணங்கள் என்னனு பகவான்கிட்ட அர்ஜுனன் கேட்கிறான். அதுல ஒரு ஸ்லோகம் வர்றது.

या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी ।

यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः ॥

“யானிஷா ஸர்வ பூதானாம் தஸ்யாம் ஜாகர்த்தி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸாநிஷா பஷ்யதோ முனேஹே ||”

அப்படீன்னு “எது முனிவர்களுக்கு இரவாயிருக்கோ அது மத்தவாளுக்கு பகலா இருக்கு. எது மத்தவாளுகேல்லாம் பகலா இருக்கோ, அது புலன்களை அடக்கின அந்த முனிவர்களுக்கு இரவா இருக்கு” அப்படீன்னு வறது. இதுக்கென்ன அர்த்தம்னா, ஜனங்கள் உலக விஷயங்கள்ல ரொம்ப விழிப்பா இருக்கா. அதுல ஞானி, ஸ்தித பிரக்ஞன் careless ஆ இருப்பான். அதை அவன் கவனிக்கறதில்லை. அவன் தூங்கி போயிடறான். ஆனா எந்த விஷயத்தில் ஞானி ரொம்ப விழிப்பா இருக்கானோ அதுல உலகத்தவர்கள் தூங்கிடறா, அப்படீன்னு ஒரு ஸ்லோகம் வர்றது.

நான் ஸ்வாமிகள்கிட்ட பழகும்போது time management பத்தி புஸ்தகங்கள் படிச்சுண்டிருந்தேன். பார்த்தா, ஸ்வாமிகள் வந்து அந்த Time management techniques எல்லாம் அவரும் ரொம்ப sincere ஆ follow பண்ணிண்டு இருப்பார்.

எப்பவும் ஒரு clock கையில வச்சுண்டு இருப்பார். ஒரு சின்ன clock. நான் அந்த காலத்துல அவருக்கு ஒரு 100ரூபாய்க்கு clock வாங்கிக் கொடுத்தேன். அதை அவர் 10 வருஷம் வெச்சுண்டிருந்தார். அப்புறம் அது repair ஆயிடுத்து.வேற ஒண்ணு வாங்கி கொடுத்துட்டு, அந்த 100 ரூபாய் clock ஐ அவர் ஞாபகமாக நான் இப்பக் கூட வெச்சுண்டு இருக்கேன். அந்த மாதிரி, அவர் clock இல்லாம இருக்கவே மாட்டார். அதே மாதிரி அவர் தினமும் என்னென்ன பாராயணம் பண்ணனும்னு to do list போடுவார். ஒரு வாரத்துல பாகவதம் முடிக்கணும், 9 நாள்ல ராமாயணத்தை முடிக்கணும்னு. ஒரு short term plan, weekly plan மாதிரி போடுவார். எல்லாமே target வெச்சுண்டுதான் பண்ணுவார்.ஒரு 7 நாள்ல முடிக்கணும். 9 நாள்ல முடிக்கணும். எங்களுக்குக் கூட ராமாயணத்தை 27 நாள்ல முடி, இல்லேனா,அஞ்சு அஞ்சு ஸர்கமா 108 நாள்ல முடி, அப்படீன்னு ஏதாவது Target வெச்சுண்டாதான் நாம அதை பண்ணி முடிப்போம்அப்படீன்னு சொல்லுவார். அந்த Target ங்கறது 7 நாள் தள்ளி இருந்தாலும், இன்னிக்கு காரியத்தை ஆரம்பிச்சுடணும் அப்படீங்கறதுக்கு, ஒரு நல்ல வேளை, பார்த்து, அந்த ஹோரைல காரியங்கள் ஆரம்பிப்பார்.

கார்யங்கள் எப்படி miss ஆகும்னா, Target ஏ இல்லேனா போயிண்டே இருக்கும். Target இருந்தா கூட காரியத்தை ஆரம்பிக்கறதுக்கு delay பண்ணினோம்னா அதனால miss ஆகும். அப்படி miss ஆகாத மாதிரி ஒரு நேரம் பார்த்து அதை ஆரம்பிச்சுட சொல்வார். அப்படீ Time window ங்கிற Technique. So, அந்த முஹூர்த்த வேளையை set பண்ணி அதுக்குள்ள அந்த காரியங்களை ஆரம்பிக்கறது. அதே மாதிரி long term goals. ஞானத்தை அடையறதுக்காக, ஏழு ஏழு ஆவர்த்தியாக சுந்தரகாண்டம், அப்படி எல்லாம் அந்த Time management புஸ்தகம் சொன்னதெல்லாம் அவர் பண்ணிண்டு இருந்தார்.

ஆனால் நாம உலக விஷயங்கள்ல ஏதோ ஒரு பரீக்ஷை பாஸ் பண்ணணும், ஏதோ ஒண்ணு சம்பாதிக்கணம் அந்த மாதிரி உலக விஷயங்கள்ல பணம், பெருமை, பதவி இதுக்காக அந்த மாதிரி Target வெச்சு நாம முயற்சி செய்யறோம்.அவர் முழுக்க முழுக்க பகவத் பஜனம், அதன் மூலமா பகவானை அடையணும்ங்கிற Target ஐ வெச்சுண்டு, ஆனால் அதே sincerity யோட பண்ணினார். Only answerable to குருவாயூரப்பன். அப்படீனு இருந்தாலும் நாம காசு கொடுக்கறவனுக்கு பண்ணறதை விட அவர் வந்து ரொம்ப நேர்மையா, ரொம்ப அக்ஷர சுத்தமா அந்த பாராயணங்களும்,ப்ரவசனங்களும் பண்ணினார். யாரு கேக்கறாளோ, இல்லையோ, ஜனங்களை நினைக்காம, அவர் பகவானுக்காக சமர்ப்பணம் பண்ணிடுவார். நாம் பாராயணத்தை உட்கார்ந்து தனியா பகவான்கிட்ட படிக்கிறதாவது எப்பவாவது உண்டு.ஸ்வாமிகள் ப்ரவசனமே வெறுமனே படத்தை வெச்சுண்டு பண்ணி முடிச்சுடுவார். அந்த மாதிரி அவருக்கு sincerity.அந்தந்த ஆசார அனுஷ்டானங்கள் அதெல்லாம் அந்தந்த வேளையில அது அதை பண்ணுவார். யாருக்காகவும் இல்லை. ரிஷி வாக்கியம், அந்த சத்யத்துக்கு பகவானுக்கு கட்டுப்பட்டு அதை பண்ணுவார்.

மஹா பெரியவா அதை recognize பண்ணி இருக்கார். ஸ்ரீ கண்டன் கிட்ட மஹா பெரியவா “பார்த்தியா, உங்களவர் என்ன, ஆசார, அனுஷ்டானங்களோட இருந்து என்ன sincere ஆக படிக்கிறார். இந்த காலத்துல மேடைல ப்ரவசனம் பண்றதுன்னா, சாயங்காலம் shave பண்ணிண்டு, powder எல்லாம் போடுண்டு எதை எதையோ சாப்பிட்டுட்டு போய் உட்கர்ந்து பிரவசனம் பண்றா. இந்த மாதிரி பார்க்க முடியுமா?” அப்படீன்னு மஹா பெரியவா கொண்டாடி இருக்கா.

அப்படி ஸ்வாமிகள் time management techniques எல்லாம் follow பண்ணுவார். ஆனா நாம எதெல்லாம் வந்து உலக விஷயங்கள்ல முயற்சியாய் இருந்து, அடுத்தது நாம என்ன enjoy பண்ணலாம், அடுத்து என்ன சம்பாதிக்கலாம் அப்படீங்கற நோக்கத்துல அந்த மாதிரி இருப்போம். அவர் வந்து, அடுத்து என்ன பஜனம் பண்ணலாம் அப்படீன்னு அந்த நோக்கத்துக்காக, அவர் time management பண்ணிண்டு இருந்தார்.

உலக விஷயங்கள்ல எதுவுமே சங்கல்பம் பண்றது கிடையாது. பகவான் விட்ட வழி. தெய்வ வழிபாட்டுல தான் ரொம்ப முயற்சி எடுத்து, அந்த பகவானை அடையறதுக்காக விரத நியமத்தோடு பாராயணங்கள், அது மஹான்கள் ஒப்புதுண்ட வழி அப்படீன்னு அதை அப்படியே பண்ணிண்டே வந்தார். அதோட பலனையும் அவர் கண்டார். அதை நம்மளும் பார்த்தோம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ!த்வம் யஷோபாக் பவிஷ்யதி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.