ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி

ஸ்வாமிகள் ஒரு வாட்டி வால்மீகி ராமாயணம் ப்ரவசனம் பண்ணிட்டு மேடையிலிருந்து இறங்கறார். அப்ப அவருக்கு 30 வயசு. அன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல விபீஷண சரணாகதி சொல்லிட்டு பூர்த்தி பண்ணியிருக்கார். கீழே வந்த உடனே விகடம் ராமசாமி அய்யர் னு ஒருத்தர். அவர் சதாவதானி. அவர் வந்து “குழந்தை ரொம்ப ஆனந்தமா இருந்தது. விபீஷணன் ஆகாசத்துல போனான் என்று சொல்லும் போது நீயும் ஆகாசத்துல போயிடற, அப்படி பாவத்தோட (bhavam) சொல்ற. சேத்துல விழுந்துடாத, ஜாக்கிரதையாக இரு” அப்படீன்னாராம்.

ஸ்வாமிகள் சொன்னாராம்

सूक्ष्मे‌sपि दुर्गमतरे‌sपि गुरुप्रसाद-

साहाय्यकेन विचरन्नपवर्गमार्गे ।

संसारपङ्कनिचये न पतत्यमूं ते

कामाक्षि गाढमवलम्ब्य कटाक्षयष्टिम् ॥

“ஸுக்ஷ்மேபி துர்கம தரேபி குருப்ரஸாத

ஸாஹாய்யகேன விசரன் அபவர்க்க மார்க்கே |

ஸம்ஸாரபங்க நிசயே ந பதத்யமமூம் தே

காமாஷி காடமவலம்ப்ய கடாஷயஷ்டிம் ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். இதைச் சொன்னாராம் இதோட அர்த்தம் என்னன்னா, “மோஷ மார்க்கம், அபவர்க மார்க்கம் ரொம்ப ஸுக்ஷ்மமானது. எல்லோராலும் போகமுடியாது. குரு காண்பிச்சு குடுத்த தெளிவுனால அந்த பாதையிலே போயிண்டிருக்கேன். ஸம்ஸாரம்ங்கிற சேத்துல வழுக்கி விழுந்துடாம இருக்கறதுக்கு, ஹே காமாக்ஷி! உன்னுடைய கடாக்ஷம்ங்கிற ஊன்று கோல கெட்டியா பிடிச்சுண்டிருக்கேன்” அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். இதை அவ்ளோ பொருத்தமா ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். “எனக்கு 30 வயசுல 5 அடி, ஒல்லியா இருப்பேன். அவர் 6 அடிக்கு மேல நல்ல gigantic ஆக இருப்பார். ஒரு குழந்தையை தூக்கற மாதிரி என்னை தூக்கிட்டார். அவ்ளோ ஆனந்தப்பட்டார். அவரும் காமாக்ஷி பக்தர் போல இருக்கு. ஆதனால இந்த ஸ்லோகத்தை கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டார். ரொம்ப ஆசிர்வதாம் பண்ணார். “உன்னை பத்தி கவலையில்லை. உன்னை காமாக்ஷி காப்பாத்துவா” அப்படீன்னு சொல்லிட்டு போனார்.

அந்த வார்த்தை ஸ்வாமிகள் வாழ்க்கையில் உண்மை ஆனது. ஸம்ஸார பந்தத்துல விழாம அவர் 30 வயசுலேருந்து 75 வயசு வரைக்கும் வாழ்ந்தார். அவரும் கிரஹஸ்தர் தான். குழந்தைகள் எல்லாம் இருந்தா. எல்லோருக்கும் சாப்பாடு போடணும். படிக்க வைக்கணும். துணி வாங்கித் தரணும், வைத்திய செலவு. ஆனா மஹா பெரியவாளும், சிவன் சாரும், “அவருக்கு விமானம் வரும். அவர் வைகுண்டம் போவார்”. அப்படீங்கற வார்த்தை சொல்லணும்னா, ஒவ்வொரு நாளும் அவர் எப்படி அந்த மோக்ஷ மார்கத்துல போகும்போது எப்படி ஜாக்கிரதையா இருந்தார் அப்படீன்னு நான் நினைச்சுப்பேன். அதுக்காக சில கொள்கைகள் வச்சுருந்தார்.

பண விஷயத்துல நப்பாசை வராம இருக்கறதுக்கு, அவர் யார் எந்த பணம் கொடுத்தாலும், கிரஹஸ்தர்-ங்கறதால பணம் வாங்கிப்பார். ஆனா இன்ன கொடுன்னு என்று demand பண்ண மாட்டார். தான் செய்யற ப்ரவசனத்துக்கோ, பண்ணுகிற பாராயணத்துக்கோ ஒரு rate fix பண்ணலை. ஆதனால அவர் எல்லோரையும் ஒரே மாதிரி treat பண்ணுவார் பணக்காராளும் சரி, ஏழைகளும் சரி ஒரே மாதிரி treat பண்ணுவார். அந்த குணம் இருந்ததால் ஏழைகளுக்கு எளியவரா இருந்தார். திருவல்லிக்கேணியில் ஒண்டு குடுத்தினத்துல இருந்தார். அது சாதுக்களுக்கு எல்லாம் ரொம்ப லாபமா இருந்தது.

அவர் ஒரு தடைவ ஒரு professor ஆத்துக்கு ஒரு வருஷம் தினமும் போய் வால்மீகி ராமாயணத்தை ஸ்லோகம் by ஸ்லோகம் படிச்சு, அர்த்தம் சொல்லியிருக்கார். அதோட முடிவுல அவர் வந்து 200 ரூபா கவர்ல வச்சு குடுத்தாராம். ஸ்வாமிகள் சொல்வார். “அவர் கிட்ட பணம் இருந்தது. கொடுக்கக் கூடிய மனசும் இருந்தது. ஆனா எனக்கு பணத்தேவை இருக்குங்கறது அவருக்கு தெரியலை”. அதாவது ஒரு வருஷம் ஒரு ஆத்துக்கு போகும்போது ஒரு நாள் கூட தன்னுடைய பணத்தேவை இருக்குங்கற அந்த குறையோ அந்த கஷ்டமோ அவர் முகத்திலேயும் தெரியல. அவர் வார்த்தைகள்ளேயும் வரலைன்னு அர்த்தம். அப்படி அந்த பணத்துல பற்று இல்லாம இருந்தார். இது நமக்கு இன்னிக்கு கிடைக்கணும்னு இருக்குன்னு அந்த பணத்தை வாங்கிண்டு வருவார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம, கொஞ்சம் கூட அதைப் பத்தி கவலையும் படாம இருந்தார். அப்படி பணத்துல ஒரு பற்றின்மை.

புகழ் வந்தது. ஆயிரக்கணக்கான பேர் அவர் பிரவசனத்தை கேட்கறது, அப்படீன்னு வந்த போது அவர் அதுல சில கொள்கைகள் வச்சுருந்தார். பொதுவா இந்த சபா செகரட்டரி, அந்த மாதிரி இந்த மிடில்மேன்-தான் அவாளுக்கு கொஞ்சம் பணம் சேர்ப்பிக்கறத்துக்கு தான் ஒடுவுல கொஞ்சம் எடுத்துண்டு, இப்படி கொஞ்சம் சிரமம் படுத்துவா. ஸ்வாமிகள் சில கொள்கைகள் வச்சுருந்தார். நான் மேடையில் உட்கார்ந்துண்டு பேசும் போது, “இது வியாசபீடம். நான் பிரவசனம் பண்ணனும்ணா என் முன்னாடி. சேர்ல கால் மேல கால் போட்டுண்டு உட்காரகூடாது. கேட்கறவா என் முன்னாடி தரையிலதான் உட்காரணும். வயசானவா பின்னாடி சேர் வேணா போட்டு உட்கார்ந்துகலாம். நான் பிரவசனம் பண்ணும்போது ஆஞ்சநேயர் தான் president வேற யாரும் preside பண்ணகூடாது.” அது என்னன்னா, ப்ரவசனத்துக்கு முன்னாடி பின்னாடி நரஸ்துதியா இருக்கும். ஸ்வாமிகள் அதை ரசிக்கவே மாட்டார். ஸ்வாமிகளோட பிரவசனத்துல ஒரு நரஸ்துதி வராது. பகவானுடைய கதையை சொல்றதுங்கறது ஆத்ம லாபத்துக்காக அப்படீன்னு வச்சுருந்தார். “யாரும் நடுவுல பேசக் கூடாது. donation கேட்க கூடாது” இப்படியெல்லாம் அவர் சட்டம் வச்சுருந்ததால, அந்த சபா செகரட்டரி எல்லாம் அவரை விட்டுட்டா. அப்புறம் காலம் மாறி போச்சு TV-எல்லாம் வந்துடுத்து. அவர்கிட்ட பக்தியா இருக்கறவா சில குடும்பங்கள் கூப்பிட்டு அங்க மட்டும் போயி பிரவசனம் பண்றது, பாராயணம் பண்றதுனு வெச்சுண்டிருந்தார். பணத்திலேயும், புகழிலேயும் பற்றில்லை, விலகிட்டார்.

ஆனா ஒரு நிகழ்வின் போது நம்மளை கௌரவமா நடத்தணும் அப்படீங்கற அதையும் அவர் எதிர்பார்க்கலை. அங்க உட்கார்ந்திருக்கும் போது, நான் பார்த்திருக்குகேன். டாக்டர் மணி அடிச்சா patients வர மாதிரி யாராவது வருவா, அவா கஷ்டத்தை சொல்லுவா. ஸ்வாமிகள் அவாளுக்கு ஆறுதல் சொல்வார். ஒரு ஸ்லோகம் எழுதி கொடுப்பார். அவா போன பிறகு வேற யாராவது வருவா. அங்க கூட்டமே சேராது.

யாரோ பாக்கியவான்கள் வருவா. அவா க்ஷேமம் அடைவா. அவா கஷ்டம் நிவர்த்தி ஆனதும், கோரின வரங்களை அடைஞ்சதும் நான் கண் கூடா பார்த்திருக்கேன். அப்படி ஸ்வாமிகளுக்கு அனுக்ரஹ சக்தி இருந்தது. ஆனா அதை அவர் ஒத்துக்க மாட்டார். “பகவான் கருணா மூர்த்தி. அவா புண்ணியம் இருக்கு. புண்ணியம் இருந்தா நான் சொன்னதை பண்ணுவா. அதை பண்ணா அவாளுக்கு நான் சொன்ன பலன் கிடைக்கும்.” அதை தவிர தன்னால் அந்த நன்மை விளைந்தது-ன்னு நினைக்கவே மாட்டார். சொல்லவே மாட்டார். வரவா மத்த சாமியார் பத்தியெல்லாம் சொல்லுவா. “அப்படி கோவில் கட்டினார். இப்படி ஹோமம் பண்ணார், இன்ன யாகம் பண்ணார்”. அதெல்லாம் சொல்வா. ஸ்வாமிகள் அதுக்கு ஒண்ணும் பதில் பேச மாட்டார்.

அதெல்லாம் காட்டிலும் நாம பாராயணம் உயர்ந்த விஷயம், “ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்ம: அதிக தமோ மதஹ” அப்படீங்கறது எல்லாம் கொஞ்சம் பேருக்கு சொல்வாரே தவிர மற்ற சாமியாரை புகழ்பவர்களிடம் பதில் சொல்ல மாட்டார். “ஆஹா நல்ல காரியம்”-னு சொல்லி அனுப்பிடுவார். ஆனா ஒரு கஷ்டம்னா, அந்த சாமியார் கிட்ட போக முடியாது. ஏன்னா அவா. க்யாதி லாப பூஜைல இருக்கா. கஷ்ட நிவர்த்தி தர சக்தியும் கிடையாது.

ஸ்வாமிகள் ஸுக்ஷ்மமா ஒண்ணு சொல்வார். ஸீதாதேவி ஹனுமாரை பார்த்த உடனே சொல்றா “அன்னிக்கு இராவணன் சன்னியாசியாட்டம் வந்தான். ஆனா என் மனசு நடுங்கித்து. இன்னிக்கு நீ குரங்கு ரூபத்துல வந்திருக்க. வானரத்தை தரிசனம் பண்ணிணா அது துஸ்சகுனம் அப்படீன்னு நா கவலைபடறேன். ஆனா உன்னை பார்த்த உடனே என் மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியும் உல்லாசமும் ஏற்படறது. ஆதனால நான் உன்னை நம்பறேன்” என்று சொல்கிறாள். அது மாதிரி ஸ்வாமிகள் “அவாளுக்கு இங்க வந்தா ஸத்சங்கம், இதனால மனசு அடங்கறது, இதனால சாந்தி கிடைக்கறதுன்னு அவா இங்க வரட்டும்” அப்படீன்னு விட்டு விடுவார். தான் clarify பண்ண மாட்டார்.

அது மாதிரி தன்னுடைய பழக்க வழக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் மாத்திக்க மாட்டார். பெண்கள் வேதம் படிக்கறது அப்படி எல்லாம் சொன்னான்னா அவர் அதையெல்லாம் ஒத்துக்க மாட்டார். அவா திருப்திக்காக தன்னுடைய கொள்கையெல்லாம் மாத்திக்க மாட்டார் அவர் கிட்ட “எனக்கு மந்த்ர உபதேசம் பண்ணுங்கோ, எனக்கு ஜப மாலை குடுங்கோ”ன்னு கேட்டிருக்கேன். அவர் “அதெல்லாம் ஒண்ணும் நீ லாயக்கில்லை. இந்த ஸ்தோத்திர பாராயணம் பண்ணு” என்று சொல்லி விட்டார். ஏதாவது impress பண்ணி இவனை பக்கத்துல வச்சுக்கணும். நான் குரு-ன்னு அப்படீன்னு எல்லாம் நினைக்கவே மாட்டார்.

ஜோக்கா ஒண்ணு சொல்வார். விபீஷணன், அவனுடைய 4 மந்திரிகள், ராமர், இலட்சுமணர், இவா 7 பேர், ராமருடைய படையில் மனுஷா. மத்தவா எல்லோரும் வானரர்கள். யுத்தத்துக்கு முன்னாடி ராமர் சொல்வார். “வானரா ஏவ நச்சின்னம்” நீங்கள் எல்லாரும் வானராளாவே இருங்கோ. நீங்க உருவம் எல்லாம் மாத்திக்க வேண்டாம் இதுவே நமக்கு அடையாளமா இருக்கட்டும் அப்படீன்னு சொல்வார். அந்த மாதிரி ஸ்வாமிகள், “இதுதான் என்னோட அடையாளம். நான் இருக்கற மாதிரி நான் இருப்பேன். என்னால பந்தால்லாம் பண்ண முடியாது. வரவா திருப்திக்கு பேச முடியாது அவாளுக்கு பிடிச்சா கூப்பிடட்டும். ரசிக்கலேன்னா 7 நாள் என்னிக்குடா முடியும்னு பார்த்துண்டு இருக்கப்போறா. அடுத்த தடைவ கூப்பிட மாட்டா” அப்படீன்னு சொல்வார் இப்பேர்பட்ட ஒரு புத்தி அந்த பகவானுடைய பாதத்தை அடையணும் அப்டிங்கறத்துக்கு இந்த புத்தியை அவருக்கு பகவான்தான் கொடுத்தார். அது எப்படிங்கறது அடுத்தது பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி (10 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.