Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை

Swamigal reading Srimad Valmiki Ramayana

Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது.

या या साधन सम्पत्ति: पुरुषार्थ चतुष्टये । तया विना तदाप्नोति नरो नारायणश्रय: ॥

புண்யம், பணம், காமம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்கள், பகவானை ஆச்ரயித்தவனுக்கு, அவற்றை அடைய என்ன ஸாதனங்கள் தேவையோ அந்த புத்தி, படிப்பு, பணம், செல்வாக்கு அதெல்லாம் இல்லாமலே கிடைக்கும்.

இப்ப காமாக்ஷி அம்பாளை தரிசிக்க வேண்டுமென்றால், காஞ்சீபுரம் போக பஸ் சார்ஜ், சாப்பாடு இப்படி யோசிக்கணம். ஆனா தெய்வானுக்ரஹம் இருந்தா, நாம் நினைக்கும் போதே யாரோ வந்து கூட்டிண்டு போயிடுவா. அதுபோல பணத்தேவை இருக்கும் போது எல்லா செல்வங்களுக்கும் அதிபதியான பகவான், நம் சிறு தேவைகளுக்கு பணத்தை நம்மிடம் சேர்த்து வைப்பார். காமம் – pain and pleasure chase and cancel each other. ஆசைகளை பூர்த்தி பண்ணிக்க அலைவது நம்முடைய அறியாமை. வேணுமோ வேண்டாமோ சுக துக்கங்கள் அந்தந்த நேரத்தில் நமக்கு வந்து சேரும். பக்தர்களின் காமங்களை பகவான் பூர்த்தி பண்ணாமலில்லை.

மோக்ஷத்துக்கு புலன்களை அடக்கி, யோகம் பயின்று, ஸந்நியாஸம் வாங்கிண்டு, தண்ட கமண்டலம் வெச்சுண்டு, கீதை படிச்சு, உலகம் பொய், பிரம்மமே சத்யம் என்ற ஞானத்தை, தெய்வானுக்ரஹம் இருந்தால் பகவானே கருணையால் அளிப்பார். மன இருளை ஞான தீபத்தால் போக்குவார். கீதையில் பகவானே அப்படி சொல்றார்.

मच्चित्ता मद्गतप्राणा: बोधयन्तः परस्परम् । कथयन्तश्च माम् नित्यम् तुष्यन्ति च रमन्ति च ॥

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् । ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥

तेषामेव अनुकम्पार्थमहमज्ञानजं तमः । नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता॥

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், இந்த 3 ஸ்லோகங்கள் தான் என் வாழ்வின் ஆதாரம் (motto) என்று சொல்வார்.

அருணகிரிநாதர் அநுக்ரஹித்த கடைக்கண்ணியல் வகுப்பு என்று ஒண்ணு இருக்கு. ‘அலைகடல் வளைந்துடுந்த’ என்று ஆரம்பிக்கும்.

அதுல message இதுதான் – மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே. வயிறு வளர்க்க நீங்கள் நம்பி இருக்கும் வித்தையை விட்டு விடுங்கள். நம் முருகனைப் பாடுங்கள். உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறேன் – இந்திரனுக்கும் குபேரனுக்கும் ராஜாவாகலாம், ஐராவதத்திலும் புஷ்பக விமானத்திலும் ஏறலாம், எதிரிகளை வெல்லலாம், தனியொரு ஞானம் பெறலாம், புகழ் பெறலாம், யமபடரைத் துரத்தலாம், முருகனோடு ஒருவன் என்று உணர்ச்சி கூடலாம், பிறவித் தளையிலிருந்து விடுபடலாம்.

நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளை பேசறதும் (ராமாயணம், திருப்புகழ் எல்லாம் எனக்கு quotation குடுக்கத் தான். என் subject எப்பவும் ஸ்வாமிகள் தான்) இதே பலன்களைக் தரும் என்ற conviction எனக்கு வந்துவிட்டால், நான் என் குருவின் குணங்களைப் பாடிக் கொண்டே இருப்பேன். அப்படி பாடிக் கொண்டே இருந்தால், அவருடைய அனுக்ரஹத்திற்கு என்றும் பாத்ரமாகி இருப்பேன்.

முன்பு அவருடைய அநுக்ரஹத்தால், 27 நாளுக்கு ஒரு முறை வால்மீகி ராமாயணம் படிக்கும் போது, அவரிடம் ராமாயணத்தில் 27 தர்மங்கள் என்று இதை சொல்லிக் காண்பித்தேன். ‘அழகாய் இருக்கிறது. ராமாயணம் தங்கக் கட்டி. இப்படி பலவிதமாய் நகை பண்ணி ராமருக்கு போடலாம் என்றார். ஆனால் மூலத்தை முழுக்க படிப்பதை விட்டுவிடாதே’ என்று சொன்னார். ராமாயண text க்கே தன் வாழ்க்கையையே அர்ப்பணம் பண்ணினவர் அவர். அதைப் படிப்பது, அப்படியே அந்த கதையை சொல்வது. அது தான் பரம க்ஷேமம் என்று உணர்ந்ததால் அப்படி சொன்னார். இந்த புத்தகம் நம் ஸத்குரு மஹிமையை மழலை மொழியால் பேசும் முயற்சி. அவர் கருணையால் இதையும் ஏற்பார் என்று என் நம்பிக்கை.

இந்த புஸ்தகத்தை படிக்கும் போது, எதாவது உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டால், ஸ்வாமிகள் சொன்ன படி 27 நாளில் ராமாயணம் படிக்கும் என் முயற்சி என்ற வித்திற்கு, உங்கள் த்ருப்தியாகிய உணர்ச்சி உரமாகும். குரு அனுக்ரஹமாகிய ஔயும் கிடைத்துவிடும்.

ஸ்வாமிகள் வால்மீகி ராமாயணத்தை எப்படி உபாசனை செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். ராமாயண பாகவத புஸ்தகங்களை casual ஆக தரையில் கூட வைக்க மாட்டார். ரொம்ப அன்போடு பட்டாபிஷேகத்தின் போது அந்த புஸ்தகத்திற்கு பூஜை செய்வார். அவருக்குள் ராமாயண பாகவதம் என்ற அமிர்தம் நிரம்பி இருந்தது. அவர் ஸ்லோகங்கள் சொல்லும் போதும், அந்த கதையை எடுத்து பேசும் போதும் அந்த அமிர்தம் ததும்பி வழிவது போல அவ்வளவு இனிமையாக இருக்கும். அதை பருகின பேர்களால் அதை மறக்க முடியாது. ராமாயணம் முழுக்க அவருக்கு மனதில் இருந்தது. நவாஹ ப்ரவசனத்தில் ஆயிரக்கணக்கான ச்லோகங்கள் எடுத்துச் சொல்லுவார்.

ஹனுமார் கடலைத் தாண்டும் ஸுந்தரகாண்டம் முதல் ஸர்கம் பெரிய ஸர்கம். அதை நடுவில் நிறுத்தாமல் படித்து முடிப்பார். ஹனுமாரை அந்தரத்தில் விடக்கூடாது என்பார். ஜடாயு விழுந்த பின், ராமர் வந்து மோக்ஷம் குடுக்கும் வரை, தசரதர் பரகதி அடைந்த பின் பரதன் வந்து ஸம்ஸ்காரம் பண்ணும் வரை, ராமர் ‘இன்று ராவணனை வீழ்த்துவேன்’ என்று சபதம் செய்தபின் அவனை வதம் செய்யும் வரை, இப்படி பல ஸர்கங்கள் சேர்த்தே படிப்பார். அவர் கண் முன்னால் அந்த ஜடாயு வீழ்ந்து கிடக்கும் போது, அவரால் எழுந்து போய் சாப்பிட முடியவில்லை. அப்படி அந்த பாவத்திற்குள் (bhavam) புகுந்து விடுவார். ‘எனக்காக இந்த பக்ஷி உயிரையே விட்டு விட்டதே’ என்ற இடத்தில் ராமராக இருந்து கதறுவார். ஜடாயுவாக இருந்து உயிரே போனாலும் பரவாயில்லை என்று மார்பு வலியை பொறுத்துக் கொண்டு மேலும் படிப்பார். அப்படி ஒரு sincerity and dedication.

ஒரு ஆத்தில் ‘ஸுந்தரகாண்ட முடிவில் யுத்த காண்ட முதல் ஸர்கம் (ராமர் ஹனுமாரை ஆலிங்கனம் செய்துகொண்டு நன்றியோடு அவரை பூஜிக்கும் இடம்) படிக்க முடியுமா, எங்க அப்பா அப்படி படிப்பார்’ என்று கேட்ட போது ‘ஆஹா! இது எவ்வளவு அழகு. இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே! இன்னியிலிருந்து எப்ப ஸுந்தரகாண்டம் படித்தாலும், யுத்த காண்டம் முதல் ஸர்கம் சேர்த்தே படிப்பேன்’ என்று சொல்லி அப்படியே செய்தார். இவர் ஸுந்தர காண்டம் படிச்சு முடிச்ச ஒவ்வொரு தடவையும் ஸ்ரீராமருடைய ஆலிங்கனத்தை உணர்ந்திருப்பார் என்பதில் ஸந்தேகமே இல்லை. अपराजित पिङ्गाक्ष नमस्ते रामपूजित என்ற மந்த்ரத்திற்கு பொருள் நம் ஸ்வாமிகள் தானே! (ராமபூஜித என்பதற்கு ராமரால் பூஜிக்கப் பட்டவர் என்று பொருள்.)

Series Navigationஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம் >>

3 replies on “ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை”

How truly…highly dedicated soul Swamigal was ! You are blessed to be associated with Him for 20 years!!
So simple His life was ! I feel so sorry for not having darshan of Him in His life time.
Sri Gurubhyo nama:

Leave a Reply to AnuCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.