Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம்

அயோத்யா காண்டம்

  1. ஊழிற் பெருவலி யாவுள? That to avoid the determination of destiny is impossible even for a divinity

தசரதர் ராமருடைய கல்யாண குணங்களை நினைத்துப் பார்த்து, ஜனங்களுடைய ஒப்புதலைப் பெற்று, பரதன் மாமா ஆத்துல இருக்கும்போதே, ராமருக்கு முடி சூட்ட ஏற்பாடு பண்றார். ஜனங்கள் ரொம்ப சந்தோஷமாய் நகரத்தை அலங்கரிக்கிறார்கள்.

ராம பட்டாபிஷேகம் என்று சொன்னவுடன் மந்தரைக்கு (கூனி) கைகேயி முத்து மாலை பரிசளிக்கிறாள். கூனி ‘கௌஸல்யைக்கு வாழ்வு வந்துவிடும். நீ என்னை மாதிரி வேலைக்காரி ஆகிவிடுவாய்’ என்று கைகேயி மனஸை பொறாமையால் கலைச்சு, “பரதனுக்கு பட்டாபிஷேகம் பண்ணனும், ராமனை பதினாலு வருஷங்கள் காட்டுக்கு அனுப்பணம்” என்று இரண்டு வரங்களை கேட்கச் சொல்லி குடுக்கிறா. ‘ராமனும் பரதனும் எனக்கு ஒண்ணு தானே’என்று சொன்ன கைகேயி இந்த துர்போதனையை காது குடுத்து கேட்டதால், மனம் மாறி, தீராத அபவாதத்துக்கு ஆளாகிறாள்.

கைகேயி தான் முன்பு தசரதர் உயிரைக் காப்பாற்றிய போது கொடுத்த வாக்கை நினைவுபடுத்தி, அந்த இரண்டு வரங்களை தசரதரிடம் பிடிவாதமாய் கேட்டு வாங்கிக்கறா. தசரதர் “ஒரு தப்பு பண்ணாத ராமனை எப்படி காட்டுக்கு அனுப்புவேன், உலகம் பழிக்குமே, குணக்குன்றான ராமன் என் வார்த்தையை மறுக்கவும் மாட்டானே! அவனை பிரிந்து நான் எப்படி இருப்பேன்? இப்பவே என் உயிர் போக மாட்டேங்கறதே” னு கதறி அழுது புலம்பறார்.

உயிர் எப்படி நினைச்சா போகாதோ அது போலத் தான் rest of life.

———————————————-

In the last count, all that happened in Swamigal’s life is testimony that destiny is all powerful.

மஹாபெரியவா ஒருத்தர் கிட்ட – “நம்ம பாகவதருக்கு வந்தாப் போல ஒரே ஜீவனுக்கு இவ்வளவு கஷ்டம் வந்து நீ பாத்துருக்கியா? ஸ்ரீமத் பாகவதம் படிக்கறதுனால தாங்கறார். இவம்மா குந்தி தேவி க்ருஷ்ணன் கிட்ட கேட்ட மாதிரி ‘கஷ்டமே குடு. அப்பதான் ஒன்னை மறக்காம இருப்போம்’ னு வேண்டிண்டு இருப்பா போல இருக்கு.” என்று சொல்லி இருக்கார். How Swamigal faced it is where the difference is.. இது இப்படித் தான் என்று இருந்தார். தன் கடமையைத் தவறாமல் பண்ணினார். கடன் வாங்கி குடும்பதுக்கு சாப்பாடு போட்டார். படிக்க வெச்சார். வேதம் சொல்லிக் குடுத்தார். இவரிடம் பக்தியினால் பத்மஸ்ரீ வேல்முருகேந்த்ரன் HOD, Neuro Dept, GH வாரா வாரம் வந்து அவர் குழந்தைகளுக்கு ரொம்ப முயற்சியாய் வைத்யம் பண்ணினார்.

‘என் முதல் பையன் mentally challenged. retentive memory கிடையாது. நான் ஆயிரக் கணக்கான ஸ்லோகம் மனப்பாடமா சொல்வேன். என் பையன் இப்படி இருக்கானே’ என்று நினைத்திருந்தால் எவ்வளவு frustration வந்திருக்கும்? ஜடபரதர் சரித்ரம் படித்து, மான் மேல பாசம் வைத்ததால் மானாகப் பிறப்பு வந்தது. பிள்ளை மேல பாசம் வைத்தால் மீண்டும் பிறவி வந்துவிடும். இப்ப இருக்கற நிம்மதி போய்விடும். பகவானை பஜிக்க முடியாது’ என்று இப்படி ஒண்ணொன்னா எல்லாப் பாசங்களையும் ஜெயித்தார்.

ஆபத்துக்கள் ஊழ் வினையால் வருகின்றன. ஆனா பாபம் பண்ணக் கூடாது என்று தீர்மானமாக இருந்தார். By hook or crook, problems சரி பண்ணிக்கணம் என்று நினைக்கலை. நாம லேசா ஒரு கஷ்டம் வந்தாலே ராமாயண புஸ்தகத்தை மூடி வெச்சுட்டு hook or crook அதை சரி பண்ண கிளம்பிடறோம். அவ்வளவு ஏன், எல்லாம் நன்றாக இருக்கும் போதே, நாளைக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் இன்னும் இன்னும் பணம் சேர்க்க வேண்டி அலைஞ்சுண்டு இருக்கோம். பாபத்தை மூட்டைக் கட்டுகிறோம். நாம் விதியை மதியால் வெல்லலாம் என்று நினைக்கிறோம். ஸ்வாமிகள்

சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை, உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்

விதியே மதியாய் விடும்

என்ற ஔவைப் பாட்டி வாக்கை கடைபிடித்து விதியை நிஜமாகவே  தௌந்த மதியால் வென்றார். நாம் விதியிலிருந்து மீள ஒரே வழி, ஸ்வாமிகள் பாதங்களில் சரணடைவது தான்.

  1. பித்ரு வாக்ய பரிபாலனம்

ஸுமந்த்ரர் ராமரை கைகேயி அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார். ராமர் கைகேயி கிட்டேருந்து இரண்டு வரங்களை பற்றி கேட்டு, கொஞ்சமும் கலங்காமல் “அப்பா சொன்னா உயிரை கூட விடுவேன். என் பரதனுக்கு ராஜ்யத்தை குடுப்பது ஒரு விஷயமா, இப்பவே காட்டுக்கு போறேன்”னு கிளம்பறார்.

‘பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ணினவா யாரும் குறைவு அடைந்ததில்லை’ என்று கௌசல்யா தேவியை convince பண்ணி, சமாதானம் பண்ணி அவளுடைய ஆசிர்வாதம் வாங்கிக்கறார். லக்ஷ்மணன் கோபத்தையும் அதையே சொல்லி அடக்குகிறார்.

ஸீதை ‘உங்களோடு கூட காட்டுக்கு வருவேன். விட்டுட்டு போனா என் உயிர் போய்விடும்’ என்று வேண்ட, “சரி வா. அப்பா அம்மா குரு தான் எனக்கு கண்கண்ட தெய்வம். நான் அப்பாவை சத்யசந்தர் ஆக்கறதுக்காக என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று போகிறேன். நீயும் அப்படி தீர்மானத்தோடு வா” என்று சொல்லி அவர்களோடு தசரதர் கிட்ட உத்தரவு வாங்கிக்கப் போறார்.

தசரதர் “ராம! என்னை சிறையில் போட்டுட்டு நீ ராஜா ஆனா நான் சந்தோஷப் படுவேன்” என்கிறார். ‘உங்களை ஸத்யசந்தராக ஆக்கறதுக்காக நான் எதை வேணா த்யாகம் செய்வேன். எனக்கு அதில் கொஞ்சமும் வருத்தமே கிடையாது. அதுவும் பரதனுக்கு ராஜ்யத்தைக் குடுப்பதில் ரொம்ப சந்தோஷம் தான். நீங்கள் கலங்க வேண்டாம். சீக்கிரமே வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்” என்று சொல்லி அவரை console பண்ணி உத்தரவு வாங்கிக்கறார்.

———————————————-

இதே போல ஸ்வாமிகள் தன் அப்பா கிட்ட ரொம்ப பக்தியோடு இருந்தார். திண்ணையில் குளிரில் படுத்துண்டு இருக்கும் போது போர்வை சரி பண்ணி விட்டதையும், ஒரு முறை 500 பவுன் தானம் வாங்கிக்காமல் வைராக்யமாய் மறுத்ததையும், எங்களிடம் பல வாட்டி சொல்லி இருக்கார். தான் இப்படி இந்த மார்கத்தில் (பாகவத ராமாயண பாராயண ப்ரவசனத்தின் மூலம் ஜீவனம் நடத்துவதே பக்தி) இருக்க அப்பா allow பண்ணினதே, அவரோட வைரக்யத்துனால தான் என்று கொண்டாடுவார். அவரால் தனக்கு ஏற்பட்ட சிரமங்களை சொன்னதே கிடையாது.

‘5000 பேர் கதை கேக்க வரான்னு சொல்றாளே. நிறைய பணம் வந்திருக்கும். நமக்கு அனுப்ப மாட்டேங்கறான்’ என்று அவப்பா இவரைப் பத்தி தப்பா நினைச்சு கேட்ட போது ‘என் கைக்குப் பணம் எதுவும் வந்து சேரவில்லை. (middle men took it or swamigal gave it to some deserving people) ஒங்க பிள்ளை நான். எனக்கு தப்பு வழியில பணம் சம்பாதிக்கவும் சாமர்த்தியம், தைரியம் இல்லை. மன்னிச்சுக்கோங்கோ’ என்று அழுது அவரை சமாதானம் பண்ணி இருக்கார்.

“என்கிட்ட ஒரு 10000 ரூபா இருந்தா நீ மதிப்பே” என்று ஒரு தரம் அவர் சொன்ன போது “एतत्धि दुर्लभतरम् लॊकॆ जन्म् यदीदृशम्” என்ற கீதை ஸ்லோகத்தை சொல்லி “ஏழையானாலும் உங்களை மாதிரி தூய்மையான யோகிக்கு பிறந்ததே பாக்யம் என்று நான் நினைக்கிறேன்” என்று சொல்ல? அவர் மனசை குளிர்வித்திருக்கிறார்.

‘தசரதர் காமீனு கூசாம உபந்நியாஸத்தில் சொல்றா. அவர் முதலில் கைகேயி கிட்டயும், ராமர் கிட்டயும் அன்பு வெச்சிருந்தார். ஆனா கைகேயி ராமருக்கு விரோதியா போயிட்டானு தெரிஞ்சவுடன் அவளை கைவிட்டார். ஆறு நாட்களில் ராமனை நினைத்து உயிரையே விட்டார். நாம நம் சுற்றம், வேலை இதெல்லாம் பகவானை அடையத் தடையாக இருந்தால் விட்டு விடுகிறோமா? கடைசி வரையில் விடறதில்லை. அதுனால தசரதரை காமீனு சொல்ல நமக்கு யோக்யதை கிடையாது’ என்பார் ஸ்வாமிகள்.

இதையே தன் அப்பா விஷயத்திலும் வெச்சுண்டார். அவப்பா இவம்மா காலமாகி ௨வது மனைவி காலமாகி ௩வது கல்யாணம் பண்ணிண்டார். அதையல்லாம் குறையா நினைச்சதே கிடையாது. இவப்பா ராமாயண பாகவதம் உபந்நியாஸத்துக்கு மூலம் படிப்பார். ‘ராமாயணம் படிச்சு அவர் உடம்பு வளர்த்து அந்த பீஜத்திலிருந்து நான் உண்டாகி, ராம பிரசாதத்தினால் வாழ்ந்துண்டு இருக்கேன்’ என்று பெருமையாகச் சொல்வார். ‘ஏழு தலைமுறையாக ராமாயணம் படித்த குடும்பம். அதை விட்டுட்டு வேலைக்கு போனதால் தான் கஷ்டங்கள் வரதுனு நினைக்கிறேன். பெரியவா (முன்னோர்கள்) பண்ணினதையே பண்ணனும்னு ஆசைப்படறேன்’ என்று மஹாபெரியவா கிட்ட சொன்னபோது, மஹாபெரியவா ரொம்ப சந்தோஷப் பட்டு இரண்டு கைகளையும் உயர்த்தி ‘உங்க பெரியவா பண்ணினதையே பண்ணு’ என்று ஆசீர்வதித்தார் என்று சொல்வார். அந்த உத்தரவை ஏற்று, ராம ப்ரசாதத்தினாலேயே கடைசி வரையில் ஜீவித்தார்.

அதனால் தான் ‘ராம பட்டாபிஷேகம் ஆனவுடன், ஹனுமார் ஸீதாதேவி குடுத்த முத்து மாலையை உடைச்சுப் பார்த்தார். அதில் ராமர் இல்லை. தன் மார்பை பிளந்து ‘இங்க ஸீதாராமர் இருக்கார்’னு காண்பிசார்னு ஒரு கதை சொல்லுவா.’ ஸ்வாமிகள் ‘எனக்கு அதைச் சொல்ல மனஸு வராது. ஏன்னா ஸீதாதேவி குடுத்த மாலை, அந்த ராம ப்ரஸாதத்தை அவமதித்தாப் போல ஆறதே. வால்மீகி ராமாயணத்தில், ஹனுமார் அந்த முத்து மாலையைப் போட்டுண்டு மலை மேல மேகம் போல அழகாக விளங்கினார் என்று தான் வருகிறது’ என்பார். இப்படி ராமாயண பாகவதத்தை ஒரு புராணக் கதை என்று நினைக்காமல் ஸத்தியமாக நம்பினதால் தான், அதை வாழ்ந்து காண்பித்த மஹானாக அவரால் ஆகமுடிந்தது.

இவப்பா காவேரிக் கரையிலேயே இருக்கேன் என்று சொல்லி விட ‘ராமாயணம் படிச்சு என்ன? அப்பாவை கடைசி காலத்தில் வெச்சு காபாத்தலை’ என்ற பேர் வந்து விடக் கூடாது என்று त्वम् यशोभाग्भविष्यति என்று விபீஷணனிடம் ராமர் ‘நீ ராவணனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணு. உனக்கு புகழ் ஏற்படும்’ என்ற சொன்ன வரிகளையே மந்த்ரமாக நம்பி ராமரை ஸ்வாமிகள் வேண்டி இருக்கிறார். அதன் பலனாக கடைசி காலத்தில் இவப்பா இவரோடு வந்து இருந்து உயிர் விட்டார். வேதம் படிச்சவாளுக்கு எப்படி ஸம்ஸ்காரம் பண்ணனுமோ அப்படி தன் அப்பாவுக்கு ப்ரம்மவேதம் பண்ணி ஸ்வாமிகள் பித்ருகடன் அடைத்தார்.

சாஸ்த்ர ரத்னாகரம் போலகம் ராமா சாஸ்த்ரிகள் என்ற மஹான் குளிக்கும் படித்துறைக்கு சென்று ஸ்வாமிகள் குளிப்பாராம், அவர் பேச்சைக் கேக்கலாம் என்பதற்காக. அவர் ‘ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கேன் கேளு கல்யாணம்’ என்று சொல்லி -‘ஒரு நாட்டிய மங்கை நிறைய நகை போட்டுண்டு இருக்கறதைப் பார்த்து ஒரு குலமகள் குறைப் பட்டுக்க மாட்டா’என்ற அர்த்தத்தில் ஒரு ஸ்லோகம் சொன்ன போது ஸ்வாமிகள் ‘குலமகள் தன் கற்பிலேயே பெருமை அடைவது போல, உங்களை மாதிரி பெரியவா, பணத்தை மதிக்காமல் தன் படிப்பிலியே த்ருப்தி அடைகிறீர்கள்.’ என்று சொல்லி இருக்கார். ராமா சாஸ்த்ரிகள் ‘புரிஞ்சுண்டுடியே’ என்று கொண்டாடி இவரோடு ஆத்துக்கு வந்து, இவப்பாவிடம் ‘வெங்கட்ராம சாஸ்த்ரிகளே! ‘சுக தாதம் தபோநிதிம்’ என்பது போல இந்த கல்யாணராமனால் உங்கள் பெயர் நிலைத்திருக்கப் போகிறது’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றாறாம். அந்த வாழ்த்து ஸத்தியமாகி விட்டதே!

  1. பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து

ஸுமந்த்ரர், வசிஷ்டர் எல்லாரும் கைகேயி கிட்ட “பரதனே இதை ஒத்துக்க மாட்டான். ஒனக்கு அபவாதம் தான் மிஞ்சும், வேண்டாம்” என்று சொல்லி பார்க்கறா. அவ காதுல வாங்கல. தசரதர் தன் சொந்த தன தான்ய கோஷத்தை ராமரோடு அனுப்பச் சொல்கிறார். கைகேயி அதை எதிர்க்கிறாள். ராமர் “யானையை குடுத்துட்டு, அதைக் கட்டும் சங்கிலி மேல ஆசைப் படுவேனா? எனக்கு இப்ப மரவுரி தான் வேணும்.” என்று சொல்கிறார். கைகேயி அதை கொண்டு வந்து குடுக்கிறாள். ஸீதாதேவி அதை கட்டிக்கத் தெரியாமல் திணரும்போது ராமர் அதை தானே அவளுடைய பட்டு புடவை மேல சுத்தி விடறார். பெண்கள் எல்லாரும் கண் கலங்குகிறார்கள்.

ராமர் தசரதருடைய மத்த மனைவிகளிடம் “பழக்க தோஷத்தில் நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிசுடுங்கோ” னு சொல்லிண்டு கிளம்பறார். ஜனங்கள் கூடவே வருகிறார்கள். “என் மேல் இருக்கும் அன்பினால் பரதனை ராஜாவாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிட்டு போறார். ஆனாலும் அவா கூடவே காட்டுக்கு வரா.

ஸரயு நதிக் கரையில் “இவாளுக்கு கஷ்டம் வந்தா நான் சரி பண்ணனும். என்னால இவாளுக்கு கஷ்டம் வரக்கூடாது” என்று லக்ஷ்மணனிடம் சொல்லி எல்லாரும் தூங்கும் போது நடுராத்திரியில்  சரயு நதியை தாண்டிப் போய்விடுகிறார். எழுந்து பார்த்த ஜனங்கள் தூக்கத்தை நொந்து கொள்கிறார்கள். திரும்ப வந்தவர்களிடம் வீட்டுப் பெண்கள் ‘இங்க என்ன இருக்குனு வந்தேள்? ராமரோடு இருந்தால் பயம் கிடையாது. அவமானம் கிடையாது. இனி என்ன ஆகுமோ. காட்டுக்கு அவாகிட்டயே போய்விடுவோம்’ என்று சொல்கிறார்கள்.

தசரதர் ‘தர்மத்தை கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன்’ என்று கைகேயியை விலக்கி, கௌசல்யை அரண்மணைக்கு வருகிறார். வருந்தி அழும் கௌசல்யா தேவியை ஸுமித்ரை ‘தர்மத்தையும் ஸத்யத்தையும் விரதமாகவும் செல்வமாகவும் கொண்ட ராமருக்கு ஒரு குறையும் வராது’ என்று சொல்லி சமாதானம் பண்றா.

ராமர் குஹனைப் பார்த்து அன்பு பறிமாறி, ஸுமந்த்ரரை சாமாதானம் செய்து திருப்பி அனுப்பி, கங்கையை கடந்து செல்கிறார். பரத்வாஜ முனிவரை ப்ரயாகையில் தர்சனம் பண்றார். கங்கையை வேண்டிண்டு, யமுனையை வேண்டிண்டு, பரத்வாஜர் சொன்னபடி ஒரு ஆலமரத்தை ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்காரம் பண்ணி, சித்ரகூடம் சென்று, பர்ணசாலை அமைத்து, வாஸ்து சாந்தி செய்து, இந்த்ரனைப் போல ஆனந்தமாய் வசிக்கிறார்.

போற வழியில் லக்ஷ்மணன் கிட்ட சொல்றார் – “இத்தனை கஷ்டத்துக்கு நடுவில், இந்த முனிவரின் அன்பு கிடைத்ததே, அது பாக்யம்” which means “எதோ பாபத்தால் ராஜ்யத்தை இழந்து, அம்மா அப்பாவை பிரிஞ்சு வனவாசம் வந்தாலும், இந்த முனிவர் அன்பு பாராட்ட ஒரு புண்யம் பண்ணி இருக்கோமே”. He is so humble throughout. Through all these scenes ராமருக்கு ஒரு second கூட “I am such and such, எனக்குஏன் இந்த unfair treatment?” ” என்ற எண்ணமே வரலை.

———————————————-

ஸ்வாமிகள் ஒரு நாள் கூட “எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் வறது” னு சொல்லி நான் கேட்டதில்லை. மனைவிக்கு hysteria வந்த போது “ருத்ர ஏகாதசி பண்ணுங்கோ” என்று சொன்னால் கடன் வாங்கி பண்ணி இருக்கார். “நான் ராமாயணம் படிக்கறேன், போறாதா?” என்று கேட்க மாட்டார். ஒரு அன்பினால் ஒருத்தர் சொல்றாரே என்று செய்வார். அங்க வந்து ஒரு குழந்தை சொன்னா கூட சாஸ்த்ர சம்மதமாய் இருந்தால் தெய்வக் கட்டளையாய் நினைப்பார்.

“நான் யாருக்கும் குரு கிடையாது. friend தான்.” என்று சொல்வார். அதை literal ஆ எடுத்துண்டு “நீங்க ஒரு மணிக்குள்ள சாப்பிட வேண்டும். உடம்ப வருத்திக்கக் கூடாது” னு சொன்னா கேட்டுப்பார்.

பெரியவா ஸ்வாமிகளைப் பற்றி “அவர் பாகவத சாஸ்த்ரத்தில் மூழ்கி இருக்கார். அவருக்கு ஞானம் வந்துடும்” என்று சொன்ன போது “என்னை பாகவத சாஸ்த்ரத்தில் மூழ்கி இருக்குமாறு உத்தரவு பண்ணி இருக்கா” என்று இன்னும் அதிகமாக சப்தாஹம் பண்ணினார். ஸ்வாமிகள் சொல்வார் – “மஹாபெரியவா கிட்ட பாகவதம் சொல்ல ஒக்காரும் போது ‘विदिता न मया’ சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டு உக்காருவேன். அதனால் க்ருபை கொண்டு, மத்த பண்டிதர்களிடம் கேட்பது போல பெரியவா என்னை கேள்வி எல்லாம் எதுவும் கேட்டதே கிடையாது” என்பார்.

மஹாபெரியவா கிட்ட ஸ்வாமிகள் பாகவத ஸப்தாஹம் செய்யும் போது, பெரியவா ஒருத்தரை பரீக்ஷித்து என்று நியமிப்பார். அவர் முழுக்கக் மூலபாராயணம் ப்ரவசனம் கேட்பார். மெத்த படித்தவரான கும்பகோணம் ராமமூர்த்தி சாஸ்த்ரிகள் என்ற மஹாபெரியவாளுடைய பூர்வாச்ரம அம்மாஞ்சி பலமுறை அந்த பாக்கியம் பெற்றவர். ஸ்வாமிகளிடம் பாகவதம் கேட்டுவிட்டு அந்தப் பெரியவர்  மஹாபெரியவா கிட்ட வியப்போடு ‘பாகவதர் எத்தனை விஷயங்கள் எடுத்து சொல்றார். நீங்க என்னன்ன சாஸ்த்ரம் படிச்சிருக்கேள்னு கேட்டா எந்த சாஸ்த்ரமும் படிச்சதில்லைனு சொல்றாரே? என்னால் நம்பவே முடியலையே. அவர் யார்கிட்ட வாசிச்சார்னு பெரியவா தான் சொல்லணம்’என்று கேட்கிறார்.

மஹாபெரியவா பதில் சொல்றா ‘அவர் சொல்றதும் correct. நீ சொல்றதும் correct. நீ சொல்ற மாதிரி படிக்காம இதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவர் யார்கிட்டயும் படிக்கலை. பின்ன எப்படி தெரியறது? குரு கீதை ல ஒரு ஸ்லோகம் இருக்கு கேட்டுருக்கியா

यस्य देवे परा भक्तिः यथा देवे तथा गुरौ । तस्यैतेऽकथिता ह्यर्थाः प्रकाशन्ते महात्मनः ॥

யாருக்கு தெய்வ பக்தியும் இருந்து, குரு பக்தியும் இருந்து, குருவையும் தெய்வத்தையும் ஒண்ணா நினைக்கிறாளோ அவாளுக்கு சொல்லித் தராமலே எல்லா சாஸ்த்ரங்களும் தெரியும் னு அர்த்தம். ‘நம்ம பாகவதருக்கு பல ச்ரமங்கள். படிக்க வசதி கூட கிடையாது. ஆனா அவர் என்னையும் குருவாயூரப்பனையும் ஒண்ணா நினைக்கிறார். அதுனால அவருக்கு படிக்காமலே இவ்வளவும் தெரியறது.’

சிவன் ஸார் கிட்ட ஸ்வாமிகள் குழந்தை மாதிரி இருப்பார். அவரை தரிசிக்க போகும் போது ஒரு நாள் பாகவதத்தில் இருந்து ஒரு ச்லோகம் எழுதிக்க சொன்னார். அவர் சன்னிதியில் படிக்க சொன்னார் – ‘नह्यम् मयानि तीर्थानि न दॆवा: मृत्शिलाधय:। तॆ पुनन्ति उरु कालॆन यूयं दर्शन मात्रत:॥’ புண்ய தீர்த்தங்களும், கோவிலில் உள்ள சிலா தெய்வங்களும் அடிக்கடி நிறைய சேவிப்பதால் நம்மை தூய்மை படுத்துகின்றன. உங்களைப் போன்ற மஹான்கள் ஒரு தடவை தர்சனம் பண்ணினாலே தூய்மைப் படுத்துகிறீர்கள்.” ஆசார சீலரான ஸ்வாமிகள், சிவன் ஸார் கையால் குடுத்தா, கடையில் வாங்கின பக்ஷணமானா கூட, ஒரு second கூட யோசிக்காம சாப்பிடுவார்.

சிவன் சார் ஒரு முறை என்னிடம் ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தை வெச்சு ஒரு புஷ்பம் போட்டுண்டு வந்தாலே மேன்மை அடையலாம்’ என்று சொன்னதை ஸ்வாமிகளிடம் சொன்னேன். அன்றிலிருந்து கடைசி நாள் வரை, ஸ்வாமிகள் அந்த புஸ்தகத்திற்குப் பூஜை செய்து வந்தார்.

அதே நேரத்தில் தன்னுடைய படிப்போ, intelligence ஒ, presence of mind  ஓ, குரல் இனிமையோ, வாக்படுத்வமோ, ஸித்திகளோ, மஹாபெரியவா பண்ணின அனுக்ரஹமோ, தெய்வ தரிசனமோ, ஞான வைராக்யமோ எதைப் பத்தியும் வியந்து பேசவே மாட்டார். நாமாக உணர்ந்து கொண்டாடும் போது சில செய்திகள் matter of fact மாதிரி சொல்லி இருக்கார். அதுவும் இன்னிக்கு இந்த மாதிரி நான் பேசி சந்தோஷப் படுவதற்காகத் தான் என்று தோன்றுகிறது.

அவர் பண்ணின கருணையில் இது தான் (தான் எப்படி புராணங்களின் உள்ளர்த்தங்களை புரிந்து கொண்டு அதைத் தன் வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்து வெற்றியடந்தார் என்பதை புரியும்படி விளக்கி சொன்னது) எல்லாத்துக்கும் மேலாக நமக்கும், நமது ஸந்ததியினருக்கும் உறுதுணையாய் இருக்க போகிறது. அந்த நம்பிக்கையில் தான் இதை record செய்து வைக்கப் பார்க்கிறேன்.

இரண்டு புஸ்தகம் படிக்கறதுக்குள்ள ‘நான் யார்?’ ‘அன்பே சிவம்’ என்று பேசும் இந்தக் காலத்தில், ஸ்வாமிகள் அவ்வளவு படிப்பு, விவேகம், வைராக்யம் இருந்தும், ப்ரவசனம் பண்ணக்கூட அவராக கிளம்பவில்லை. அவரோட குரு, அம்பாள் ஆக்ஞை என்று சொல்லி கட்டாயப் படுத்தின பின் தான் உபந்யாஸம் பண்ண ஆரம்பித்தார்.

மஹாபெரியவா தன்னிடம் கஷ்டத்திற்கு விதாயம் கேட்டு வந்தவாளை ‘அங்கே பாகவத ஸப்தாஹம் நடக்கிறது. போய் அந்த பாகவதரிடம் கல்கண்டு ப்ரஸாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாம் சரியாகிவிடும்’ என்று பல பேரை சொல்லி அனுப்ப, அதிலிருந்து தான் ஸ்வாமிகள் வந்தவாளுக்கு கல்கண்டு ப்ரஸாதம் குடுப்பது என்று வைத்துக் கொண்டார். ரிஷிகள், மஹான்கள் சொன்னது, அல்லது செய்து காட்டினது என்ற ஒரு basis இல்லாமல், ஸ்வாமிகள் ஒண்ணும் பேசவோ, செய்யவோ மாட்டார். ஸ்ரீராமரைப் போல, தர்மத்திலிருந்து ஒரு இம்மியளவு கூட தள்ளிப் போய்விடக் கூடாது என்பதில் வெகு ஜாக்ரதையாக இருந்தார்.

  1. காமினீ காஞ்சனத்தில் பற்று வைத்தால் முடிவில் துன்பமே. மனதை உலக விஷயங்களிலிருந்து எடுத்து பகவானிடத்தில் வைத்தால் தான் நிம்மதி கிடைக்கும்

ஸுமந்திரர் திரும்பி வந்து தசரதரைப் பார்த்து, ராமரை கங்கைக் கரையில் விட்டுவிட்டு வந்ததையும், அவர் பரதனுக்கும் கௌசல்யைக்கும், தசரதருக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று சொன்ன செய்திகளையும் சொல்கிறார். தசரதர் “கைகேயி பேராசையால் இந்த கஷ்டம் வந்ததே, பரதன் இதை ஒத்துக் கொண்டால் அவன் எனக்கு அந்திம கார்யம் பண்ணக் கூடாது, என்னால் ராமன் காட்டுக்கு போய்விட்டானே” என்று வருந்தி அழுகிறார். ஸீதை படும் கஷடத்தை நினைத்து கௌசல்யை அழுகிறாள். ஸுமந்திரர் “அவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். இப்படி ஒரு அப்பா, அம்மா, பிள்ளை, அவன் தம்பி, மனைவி எல்லாம் இருந்தா என்பதை உலகம் உள்ள வரைக்கும் பேசுவார்கள். வருந்த வேண்டாம்” என்று சமாதானப் படுத்துகிறார்.

அவர் சென்ற பின் கௌசல்யை தசரதரிடம், “இப்ப எனக்கு நீங்களும் இல்லை. என் பிள்ளையும் இல்லாமல் செய்து விட்டீர்கள்.” என்று சொல்கிறாள். தசரதர், “நீ எதிரிக்கும் கருணை செய்வியே. என்னால் எவ்வளவு பேருக்கு கஷ்டம் என்று ரொம்ப வருத்தத்தில் இருக்கும் என்னை மேலும் புண்படுத்தாதே.” என்று வேண்டுகிறார். கௌசல்யை “சோகத்தால் தகாத வார்த்தை பேசி விட்டேன்” என்று கைகூப்பி மன்னிப்புக் கேட்கிறாள்.

தசரதர் தான் ஒரு முனிகுமாரனை சப்தவேதியால் அறியாமல் கொன்றதின் வினைப்பயனாக இந்த நிலைமை வந்தது என்பதை எண்ணி, ராமரையே நினைத்தபடி உயிர் விடுகிறார்.

வசிஷ்டர் பரதனை அழைத்து வரச்செய்து, அவனை முடிசூட்டிக் கொள்ளும் படி எல்லோரும் சொல்கிறார்கள். பரதன் கைகேயியை கடுமையாக திட்டி விட்டு, “ஒரு நாளும் நான் ராமனுடைய ராஜ்யத்தை அபகரிக்க மாட்டேன். என் புத்தி மாறாமல் இருக்க, இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்மத்தின் வடிவமான ராமரை நமஸ்கரிக்கிறேன். அவரையே திரும்ப கூட்டிண்டு வந்து ராஜா ஆக்குவேன்” என்று சபதம் செய்கிறான். தன் அப்பாவுக்கு அந்திம கார்யங்களை செய்து முடிக்கிறான்.

தசரதருக்கு பணத்தாசையால் கைகேயியும், பிள்ளைப் பாசத்தால் கௌசல்யையும் கூட துன்பம் தருகிறார்கள். அதனால் அவர் எல்லாப்  பற்றையும் விட்டு, ராமரிடம் முழு மனதையும் வைத்து பரகதி அடைகிறார். பரதன், ராஜ்யம் என்ற பொருள் மீது பற்று வைத்திருந்தால், அவனுக்கு அப்பாவுக்கு கடைசி கார்யம் பண்ணும் பாக்யமும், ராமரும் (ராம பாதுகையும் ராமரும் ஒன்றே) கிடைத்திருக்காதே.

———————————————-

காமினீ காஞ்சனத்தை வெறுக்க வேண்டியதில்லை. கர்ம வசமாக வருவதை தர்மத்தின் பொருட்டு சேர்த்துக்கலாம். அதில் பற்று வைத்தால் துன்பம் வரும். சிங்கார மடந்தையர் தீநெறி பெரும் வேதனை தரும். அன்பு மனைவி, நியாயமாக சம்பாதித்த செல்வமும் கூட, அதில் பற்று வைத்தால் முடிவில் துன்பம் தரும். படகு தண்ணியில் இருக்கலாம். படகுக்குள் தண்ணி வந்தால் ஆபத்து. இதை ஸ்வாமிகள் எவ்வளவு அழகாய் வாழ்ந்து காமிச்சார்!

அவருடைய புத்திக்கும் மேதா விலாசத்துக்கும் இந்தியாவையே விலைக்கு வாங்கி இருக்கலாம். பாகவத ராமாயணத்துக்கு விலை பேசாததால் 1951 லிருந்து 1986 வரைக்கும் கடனில் இருந்தார். அப்படி மிகுந்த கடனில் இருந்த போது, ச்ருங்கேரி மட பக்தர் ஒருத்தர், “நான் ஒங்களுக்கு வீடு கட்டித் தரேன், வரும்படிக்கு எற்பாடு பண்ணறேன். உபந்நியாஸத்தில் காஞ்சி பெரியவாளை போற்றி சொல்றதை விட்டுட்டா போதும்” என்று சொன்ன போது ஸ்வாமிகள், “கோடி ரூபா குடுத்தாலும் மஹாபெரியவாள் பாதத்தை விடமாட்டேன்” என்று சொல்லி இருக்கார். அதனால் தானே மஹாபெரியவா கிட்ட 19 வருஷம் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் கோகுலாஷ்டமி போது பாகவத சப்தாஹம் பண்ணும் பாக்யம் கிடைச்சுது. ராமர் தன் கதை கேட்டது போல, மஹாபெரியவா மணிக்கணக்கா உட்கார்ந்துண்டு கேட்டாளே!

திருச்சியில் ஒரு பணக்காரர், ஸ்வாமிகள் ப்ரம்மசாரியாய் இருந்த போது, அவருடைய குணத்தைப் பார்த்து  தன் பெண்ணை குடுக்க விரும்பி இருக்கார். பொறாமையால் யாரோ ஸ்வாமிகள் அப்பா கிட்ட ‘அந்த பெண்ணிற்கு எதோ வ்யாதி’ என்று சொல்ல, இவப்பா ‘நான் மெதுவா கேட்டு தெரிஞ்சுண்டு வரேன்’ன்னு கிளம்பறார். ஸ்வாமிகள் வேண்டாம் என்று தடுக்கிறார். இவப்பா ‘கல்யாணத்துக்கு பின் அவளால் உன்னை திருப்தி படுத்த முடியலைன்னா என்ன பண்ணுவ? என்று கேட்கும் போது ‘எனக்கு கல்யாணம் ஆகி ஒரு மாஸத்துல எதாவது உடம்புக்கு வந்து, அவளைத் திருப்தி படுத்த முடியலைன்னா, அவ என்ன பண்ணனும்னு நீங்க எதிர்பார்ப்பேளோ, அதையே நான் பண்ணுவேன். தாடி வளர்த்துண்டு பாகவதம் படிச்சுண்டு இருந்துடுவேன்’ என்று சொல்லி இருக்கார். ‘இதெல்லாம் நடக்காத பேச்சு’ என்று சொல்லி அவப்பா போய் கேட்க, பெண்ணின் அப்பா கோச்சுண்டு ‘உம்ம பிள்ளைக்கு என் பெண்ணை தரமாட்டேன்’ என்று சொல்லி விடுகிறார்.

அந்த பெண்ணுக்கு ஒரு கோவிலில் வேறு மாப்பிளையோடு கல்யாணம் நடக்கிறது. ஸ்வாமிகள் தினமும் அந்த கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு போய் காவேரில குளிச்சுட்டு வருவாராம். “அன்னிக்கும் அதே மாதிரி ப்ரதக்ஷிணமாத் தான் போனேன். ஒண்ணும் ஏக்கம் எற்படவில்லை” என்று சொல்வார். “ராமர் கைகேயி அரண்மனையில் போய் தசரதரை பார்த்து இரண்டு வரங்களை பற்றி கேட்ட பின், வௌயில் வந்து, பட்டாபிஷேக த்ரவ்யங்களை, ஒண்ணும் மனதில் கலக்கம் எற்படாமல் ப்ரதக்ஷிணம் பண்ணிண்டு போனார்” என்ற இடத்தில் இந்த incident சொல்வார்.

எல்லாப் பெண்களையும் ஸ்வாமிகள் அம்பாளாகவே பார்த்ததால், எல்லாப் பெண்களும் இவரை தங்கள் குழந்தை போல் treat பண்ணினார்கள். இருந்தாலும் since he was a role model, யாராவது ராமாயண நவாஹத்துக்கு கூப்பிடுவதாய் இருந்தால், ஆத்து மாமா வந்து கூப்பிட வேண்டும். ஒன்பது நாளும் லீவ் போட்டுட்டு கூட இருக்க வேண்டும். போற இடத்தில் ராத்திரி பால் சாப்பிட மாட்டார். பெண்களை தனியாக சந்திப்பதோ உபதேசங்கள் செய்வதோ கிடையாது. So many rules to show people the right path.

’ராமசந்த்ராஸ்ரய’ என்று குலதெய்வமான ஸ்ரீராமரையும், தன்னை ஆட்கொண்ட சந்த்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகளயும் அடைக்கலம் புகுந்து, மூவாசைகளையும் கடந்து சிவன் ஸார் “யதீந்த்ரர்” என்று கொண்டாடும் நிலையை அடைந்தாரே! அந்த சாந்தமும், கருணையும், ஞானமும் நாம் நேரில் பார்த்ததால் அல்லவா மனிதனுக்கு இப்படி ஒரு நிலை உண்டு என்று அறிந்தோம். பகவத் பக்தி என்ற ஒரு எண்ணைப் பசையை மனத்தின் மேல் பூசிக்கொண்டு இருந்ததால், தாமரை இலையின் மேல் தண்ணிர் ஒட்டாதது போல, அவர் மனத்தில் உலகப் பற்றுக்கள் ஒட்டவில்லை.

  1. சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகின் செல்வம் தான் பெற்றத்தாற் பெற்ற பயன் (செல்வதை பகிர்ந்து உண்பதே அதன் பயன்)

வசிஷ்டர் ராஜ சபையைக் கூட்டி, பரதனை அங்கு வரவழைத்து “ராஜ்யத்தை எற்றுக்கொள்” என்று சொல்கிறார். பரதன் அவரைக் கண்டித்து, “தசரதர் பிள்ளையாக பிறந்து விட்டு ராமருடைய ராஜ்யத்தை நான் எப்படி எடுத்துக்கொள்ள முடியும். நானும் இந்த ராஜ்யமும் ராமருடைய சொத்து. சுமந்த்ரரே! படை கிளம்பட்டும். போய் ராமரை அங்கயே பட்டாபிஷேகம் பண்ணி அழைத்து வருவோம்” என்று சொல்லி எல்லாரோடும் காட்டுக்குக் கிளம்புகிறான்.

கங்கை கரையில் குஹனை பார்க்கிறான். குஹன் சந்தேஹப் படும் போது, “ஒரு நண்பன் நீயே ராமனுக்காக உயிரை குடுக்க தயாரா இருக்க. நான் அவன் தம்பியல்லவா. என்னை சந்தேஹப் படாதே” என்று சொன்னபின் குஹன் அவனை வாழ்த்துகிறான். லக்ஷ்மணன் ராமரிடம் காட்டிய அன்பையும், ராமரும் சீதையும் கங்கை ஜலத்தை மட்டும் குடித்து விட்டு, புல் தரையில் தூங்கினதையும் கேட்டு பரதன், தன்னால் ராமருக்கு இந்த கஷ்டம் வந்ததே என்றெண்ணி “ராமரை ராஜாவாக்கிட்டு நான் காட்டில் ராமர் வாழ்வதைப் போல் தவ வாழ்க்கை மேற்கொள்வேன்” என்று சத்யம் செய்கிறான்.

பரத்வாஜரைப் பார்த்து வணங்குகிறான். அவர் பரதனுக்கும் சேனைக்கும் தன் மந்த்ர சக்தியால் விருந்து, ஆடல், பாடல் எல்லாம் காட்டி tempt பண்றார். மற்ற ஜனங்கள் அதில் மயங்குகிறார்கள். பரதன் ராமரையே நினைத்து உருகுகிறான். அவன் உறுதியைக் கண்டு முனிவர் ராமர் இருக்கும் இடத்தை சொல்கிறார். பரதன் சித்ர கூட மலையையும் மந்தாகினி நதியையும் பார்த்து ராமருக்கு பக்கத்தில் வந்து விட்டோம் என்று சந்தோஷப் படுகிறான்.

ராமர் சீதையோடு இயற்கையை ரசித்துக் கொண்டு “உன்னோடும் லக்ஷ்மணனோடும் இந்த இடத்தில் 1000 வருஷம் கூட ஆனந்தமாய் இருப்பேன். அப்பா வாக்குப் படி காட்டுக்கு வந்ததில் என் பரதனுக்கு ப்ரியமாக முடிந்தது” என்று பேசி விட்டு, மந்தாகினி நதியில் ஸ்னானம் செய்து விட்டு ஆஸ்ரமத்திற்கு வருகிறார்கள்.

சலசலப்பை கேட்டு என்ன என்று லக்ஷ்மணனை பார்க்க சொல்கிறார். லக்ஷ்மணர் மரத்தின் மேல் ஏறிப் பார்த்து, “பரதன் படையோடு வருகிறான். இன்று பழி தீர்ப்பேன்” என்று சொல்கிறான். ராமர் அவனிடம், “பரதனை கொன்று விட்டு ராஜ்யத்தை என்ன செய்வாய்? நாம் எல்லோரும் சேர்ந்து அனுபவிக்கத் தான் எந்த செல்வமும். இல்லை என்றால் அதை நெருப்பு பொசுக்கட்டும். ஒன்னை மாதிரி தான் அவனும். என் மேல் பக்தியால் வந்திருக்கான். அவனை திட்டினா என்னை திட்டற மாதிரி.” என்று சொல்கிறர். லக்ஷ்மணன் வெட்கப்பட்டு கீழே இறங்கி ராமர் அருகில் கைக்கூப்பி நிற்கிறான். பரதன் வந்து “அண்ணா” என்று ராமர் பாதங்களில் விழுகிறான்.

———————————————-

ஸ்வாமிகளைப் பற்றிய இந்த செய்தி நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்காது – அவர் life முழுக்க கடனில் இருந்தாலும் ஒரு கொடை வள்ளல். சத்தம் போடாம தானம் பண்ணினதால் வௌயே தெரியாது. 1951 சென்னைக்கு வந்தவுடன் அவருடைய அக்கா அத்திம்பேர் கூட வந்து அண்டி இருந்தா. All the time he helped his poor relatives அண்ட் friends. கஷ்டப் படுபவர்களைப் பார்த்தால் கடன் வாங்கினப் பணத்தைக் கூட எடுத்துக் குடுப்பார்.

அவப்பா வைதீகம். ஆதனால் வைதிகர்கள் ச்ரமப் படுவது அவருக்கு தெரியும். நிறைய வைதீக fraternity க்கு குடுத்து இருக்கார். தன்கிட்ட வரவா எதாவது தானம் பண்ண ஆசை பட்டா கஷ்டப் படற வைதிகாளை கைக் காமிப்பார். வேதம் படித்தவர்களை பூஜிப்பார்.

ஒரு தடவை அப்படி விஸ்வநாத ஐயர் ஒரு வைதிகருக்கு கோ தானம் பண்ணினார். ஸ்வாமிகள் பக்கத்துல இருந்த ஒருத்தர் “நம்மால ஒரு கோ தானம்” என்றார். ஸ்வாமிகள் சொன்னார் – “நாம்ப ஒரு மாட்டை வாலை உருவிக் குடுத்தாலே “ந மம” என்று சொல்லி “எல்லாதுலேயுமே என்னுடையது” என்ற அக்ஞானமான எண்ணம் போக வேண்டி தானம் பண்றோம். யாரோ யாருக்கோ தானம் பண்ணினதுக்கு நீ “நம்மால” என்று மமகாரத்தை பிடிச்சு வெச்சுக்கறியே” என்று விளையாட்டாக சொல்வது போல வலிக்காமல் பெரிய உண்மையை சொன்னார்.

அவாத்துல எல்லாருமே kind ஆ இருப்பா. அவா கஷ்டத்துக்கு நடுவில அன்பான ஆறுதலான வார்தைகள் சொல்லத் தவறவே மாட்டா. அவா ஆம் ஒரு மடம் மாதிரி இருந்தது. எல்லாரும் வந்து சாப்டுட்டு போவா. நான் வருஷக் கணக்கா அவாத்துல ராத்திரி சாப்பிட்டுருக்கேன். அவர் சாப்பிட்ட பின் ப்ரசாதமாக சாப்பிடணம் என்று ஆரம்பித்தது எங்களுக்கு 25 தோசை கூட பண்ணி மாடிக்கு குடுத்தனுப்புவா. என் கல்யாணத்துக்கு அப்பறம் அருமையான விருந்து சாப்பாடு, புடவை வேஷ்டி எல்லாம் வெச்சுக் குடுத்தா. வெங்கடேச சமாராதனை, வ்யாஸ பூஜை, குருவாயூரில் உதயாஸ்தமன பூஜை,  இப்படி எத்தனையோ.

ஒரு நாள் சிவன் ஸார் ஐ தரிசிக்க கிளம்பின போது ஸ்வாமிகள் ’ஜானகிராமா பணம் எடுத்துண்டியா?’ னு கேட்டார், சிவன் ஸார்க்கு குடுக்க. I was surprised. ’ஒங்க நிலைமை என்ன! அவர் நிலைமை என்ன! இதெதுக்கு?’ னு கேட்டேன். ‘विदिता न मया विशदैककला न च किन्चन कांचनम् अस्ति गुरॊ’ என்ற ஸ்லோகத்தில் ’ஒங்களுக்கு அர்பணிக்க எனக்கு படிப்பும் இல்லை, பணமும் இல்லை, உங்கள் க்ருபையால் என்னை ஆட்கொள்ள வேண்டும்’ என்று வருகிறதே. அப்ப பணம் இருந்தால் அதை குருவுக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பது தெரிகிறதல்லவா? அதுக்காகத் தான்’ என்றார்.

ஸூர்யன் மழையை வாங்கிண்டு வேற இடத்தில் விடுவது போல யாரோ பணம் கொண்டு வந்து வைப்பா. யாரோ எடுத்து செலவு பண்ணுவா. கடுமையான பாபம் செய்துகொண்டு அதை justify பண்ணுபவர்கள், சில பேர் குடுக்கும் பணத்தை cover பிரிச்சு எண்ணிக் கூட பார்க்காமல் கோவில் உண்டியலில் போடச் சொல்லி விடுவார். அந்த கணக்கு பார்த்தா அவர் பண்ணின தானத்துக்கு எல்லையே இல்லை. அவரோட possesions சில புத்தகங்கள், ஸ்வாமி படங்கள், குருவாயூரப்பன் விக்ரஹம், பெரியவா பாதுகை, சில காவித் துணிகள். He was not possesive about that also.

ஒரு மஹாபெரியவா படம் 20-30 வருஷம் அவர் கிட்ட ராமாயண பாகவதம் கேட்ட பெரியவா – நான் ‘அப்படியே நேர்ல பாக்கற மாதிரி இருக்கார்’ னு சொல்லுவேன். ஒரு நாள் ‘நாளைக்கு கார்த்தால ஆறு மணிக்கு வா’ னு சொன்னார். ‘இந்த பெரியவா எப்பவும் எங்க போனாலும் உன்னோட வெச்சுக்கோ’என்று சொல்லி குடுத்துட்டார்.

ஸ்வாமிகள் பூஜை செய்த குருவாயூரப்பன் விக்ரஹம் தனி ஒரு அழகு. அவர் அந்த க்ருஷணனை ஆசையாக பூஜை பண்ணுவது கண்கொள்ளா காட்சி. எளிமையான பூஜை தான். ஆனால் அவர் செய்யும் ஷோடசோபசர பூஜையே, பாசத்தோடு அந்த குழந்தையை கொஞ்சுவது போல இருக்கும். பூஜை முடிச்சு, அலங்காரம் பண்ணி வெச்சு, மாலை போட்டு அழகு பார்த்து, த்ருஷ்டி கழிப்பார்.

यत् त्रैलोक्यमहीयतॊऽपि महितं सम्मॊहनं मोहनात्

कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि ।

सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपं आश्चर्यतोऽपि

आश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णॊ विभॊ ॥

என்ற நாராயணீய ஸ்லோகத்தை கேட்டு கேட்டு அந்த ஸ்வாமி அவ்வளவு அழகாக ஆகிவிட்டாரா, அல்லது அவருடைய மாதுர்யம்  ஸ்வாமிகள் வாக்கில் வந்துவிட்டதால், ஸ்வாமிகள் சொல்லும் போது அந்த ச்லோகம் அப்படி தித்தித்ததா என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படி அவரோடு பேசின அந்த விக்ரஹத்தைக் கூட ‘என் காலத்திற்கு பிறகு யார் பூஜை பண்ணுவாளோ?’ என்று ஒரு நாள் கூட பேசினதில்லையே! ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்பது இது தானோ!! ஆனா அவர் தபோ மஹிமையால் இன்னிக்கும் அதிஷ்டானத்தில் அந்த குருவாயூரப்பனுக்கு நித்ய பூஜை நடக்கிறதே!

நாமும் யாராவது நம்மிடம் தற்கால கவர்ச்சி ஸாமியார்களைப் பற்றி, என்ன மஹிமை, என்ன அழகு என்று பேசினால் உஷாராகி, கருணையோடு கல்கண்டு கட்டிக் கொடுக்கும் நம் ஸ்வாமிகள் அழகையும், நம்மையும் அடியவர்க் கூட்டத்தில் சேர்த்த அந்த ஆச்சர்யத்தையும், காமாக்ஷியின் அநுக்ரஹத்தால் தேனையும் பழிக்கும் அவர் குரல் இனிமையையும் நினைத்து, இதைக்காட்டிலும் மேலான மஹிமையான வஸ்து வேறு இருக்க முடியுமா? முடியவே முடியாது என்று இந்த ச்லோகத்தைச் சொல்லி ஞாபகப் படுத்திக் கொண்டு, ஏக பக்தியாய் இருக்க வேண்டும்.

குருவாயூரப்பனும் மஹாபெரியவாளும் (மஹாபெரியவா பாதுகையும்) இருக்கும் இடத்தில் லக்ஷ்மீதேவி நித்ய வாஸம் பண்ணினதும், அதை அவர் பகிர்ந்து அளித்ததும் ஆச்சர்யமே இல்லையே! ஆராதனை போது அந்த வைபவத்தைக் கண்கூடா பார்கிறோமே. அவரை நம்பினவா எல்லாரும் ஸுபிக்ஷமாக ஒரு குறையும் இல்லாமல் இருப்பதும் அவர் ஆசிர்வாத்தால் தானே!

  1. அறத்தான் வருவதே இன்பம். Always do the right thing and not what is convenient.

பரதன் ராமரிடம் தசரதர் வியோகத்தை தெரிவிக்கிறான். ராமர் மயங்கி விழுகிறார். பின்னர் தௌந்து அப்பாவுக்கு தர்ப்பணம், பிண்ட தானம்  செய்கிறர். வசிஷ்டரும் அம்மாக்கள் எல்லாரும் வந்து ராமர், சீதை லக்ஷ்மணரைக் கட்டிண்டு, முதுகைத் தடவி அன்பை காட்டுகிறார்கள். மறு நாள் காலை பரதன் எல்லோரும் முன்னிலையில் ராமரை வணங்கி கைகேயியும் தசரதரும் செய்த ஏற்பாட்டை வெறுத்து பேசி, “நாங்கள் தம்பிகளும்,  மந்த்ரிகளும், ரிஷிகளும், சேனைத் தலைவர்களும், கைகேயி உள்பட எல்லோரும் உன்னையே ராஜாவாக விரும்புகிறோம். தயவு செய்து அயோத்திக்கு திரும்ப வா” என்று காலில் விழுந்து கெஞ்சுகிறான்.

ராமர் “உன் அம்மா வரம் கேட்டதும் தப்பில்லை. அப்பா உயிரைக் காப்பாத்தினதால் அவளுக்கு கேட்க உரிமை இருந்தது. அப்பாவுக்கு தன் மனைவி மக்களை இஷ்டப்படி வைக்க உரிமை உண்டு. அதனால் அவர் வரம் குடுத்ததும் தப்பில்லை. இப்ப நாம் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடக்க வேண்டும். அப்போ தான் அவர் குடுத்த சத்யம் நிற்கும். நான் காட்டுக்கு ராஜா நீ நாட்டுக்கு ராஜா, அவ்வளவு தான். வருந்தாதே” என்று சமாதானம் செய்கிறார்.

பரதன் “உனக்கு பதிலாக நான் காட்டில் இருக்கேன்” என்கிறான். “தசரதர் சொர்கம் போய் விட்டார். இனிமே அப்படி மாத்த முடியாது.” என்கிறார் ராமர். ஜாபாலினு ஒரு ரிஷி “கையில் கிடைத்ததை அனுபவி. சத்யம், அம்மா, அப்பா என்று பலதை போட்டு குழப்பிக்காதே” என்று சொன்னவுடன் கடும் கோபத்தோடு அந்த நாஸ்திகப் பேச்சை ராமர் கண்டித்து “சத்யத்தில் அல்லவா உலகமே நிற்கிறது. உம்மை எப்படி எங்கப்பா பக்கத்தில் வெச்சுண்டு இருந்தார்” என்று கோபிக்கிறார். ஜாபாலி மன்னிப்பு கேட்கிறார்.

வசிஷ்டர் “நான் குலகுரு, நான் சொல்லிக் கேட்டால் பரவாயில்லை” என்று சொல்லும் போது “அப்பா வார்தையை மீறி நீங்கள் சொல்வதை செய்ய முடியாது” என்று கூறி விடுகிறார். மற்ற ரிஷிகள் ராமர் சொல்வதையே ஆமோதிக்கிறார்கள். பிறகு ராமர், வசிஷ்டர் சொன்னபடி இரு பாதுகைகளில் ஏறி நின்று, இறங்கி, அவற்றை பரதனுக்கு அளிக்கிறார். பரதன் அதை ஏற்றுக் கொள்கிறான்.

ராமர் தான் தர்மத்தில் இருந்து மாறாமல் ஹிமவானைப் போல் உறுதியாய் இருந்து, வந்த எல்லோரையும் திரும்பி போகச் செய்கிறார்.

பரதன் ராம பாதுகைகளை தலையில் வைத்துகொண்டு, பரத்வாஜரை தரிசித்து விட்டு, அயோத்திக்கு திரும்புகிறான். ராமர் இல்லாத அயோத்தியில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்தில் நந்திக்ராமம் என்ற இடத்தில் ராம பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து, அவற்றை முன்னிட்டு ராஜ்ய கார்யங்களை நடத்துகிறான். ஆனால் எந்த ராஜ போகங்களையும் அனுபவிக்காமல் ராமர் காட்டில் வசிப்பதை போல், நாட்டில் இருந்தும், ஜடை போட்டுண்டு மரவுரி தரித்து, தபஸ்வியாக ராமர் வரும் நாளை எண்ணி கழிக்கிறான்.

ராமர், அத்ரி முனிவர் அனஸூயா தேவியை தரிசித்து விட்டு தண்டக வனத்துக்கு உள்ளே செல்கிறார்கள். அனஸூயை, அன்போடு தன் தபஸால் வாடாத மாலை, காயாத சந்தனம், கறுக்காத நகைகள் முதலியவற்றைத் வரவழைத்து ஸீதைக்கு போட்டு அழகு பார்க்கிறா. “உன் ஸ்வயம்வரம் நடந்த கதையை சொல்லு” என்று கேக்கறா. ஸீதையும் அதை ருசியாக சொல்கிறாள். அதில் “ராமர் வில்லை முறித்தார். ஜனகர் என்னை அவருக்கு கைப்பிடித்து குடுக்க முன்வந்தார். ஆனால் ராமர், தன் அப்பா ஒத்துண்டா தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொன்னார். அதன்படி தசரதர் வந்து permission வாங்கிண்டு என்னை கல்யாணம் பண்ணிண்டார்.” என்று பாலகாண்டத்தில் இல்லாத ஒரு செய்தியை சொல்கிறாள். மறுநாள் அவர்களிடம் உத்தரவு பெற்று காட்டிற்குள் செல்கிறார்கள்.

ராமரோ பரதனோ convenient ஆ ராஜ்யத்தை எடுத்துண்டு இருக்கலாம். அனா அவா இங்க கிடைக்கிற இன்பத்தைக் காட்டிலும் தர்மத்தால் கிடைக்கும் மோக்ஷத்தையே நம்பினார்கள். So they did the right thing. ஜனகர் குடுத்த போது சீதையை ராமர் ஏற்றுக் கொண்டு இருக்கலாம். But he did the right thing by waiting for his dad’s permission.

———————————————-

ஸ்வாமிகள் ??? was always like that, He always did the right thing – ஒரு “ராமாயண பாகவத டிரஸ்ட்” என்று ஆரம்பித்து கடனை சரிக்கட்டி இருக்க முடியாதா? தன் ப்ரவசனத்தில் சபா செக்ரடரிகள் சொன்னாப் போல அட்ஜஸ்ட் பண்ணின்டு (அட்ஜஸ்ட் பண்றது னா வேற என்ன, நரஸ்துதி பண்றது தான்) போயிருக்க முடியாதா? தன் சிஷ்யர்கள் செய்யும் பாபங்களை கண்டுக்காமல் இருக்க முடியாதா? மஹாபெரியவா பேரைச் சொல்லி so called பெரிய மனுஷாளை ஸ்னேஹம் பண்ணிக்க முடியாதா?

He was never even tempted to do any of that.. ‘धनॆन न रमामहॆ खल जनान् न सॆवामहॆ न चापलं अयामहॆ भवभयान्न दूयामहॆ । स्थिरां तनुमहॆतरां मनसि किंच काञ्चीरत स्मरान्त्क कुटुम्बिनी चरण पल्लवॊपासनाम् ॥ என்று 28 வயதில் சொன்னதை 75 வயதில் ஸித்தி அடையும் வரை கடைபிடித்தார்.

க்யாதி லாப பூஜை வராமல் இருக்க தினம் பகவானை வேண்டிண்டார். தர்மத்தையே உறுதியாகப் பற்றி ஜீவன் முக்தி அடைந்தார். பணத்தில் பாராபக்ஷம் பார்க்காமல் எல்லாருக்கும் பகவான் பேரால ஆறுதல் சொன்னார்.

ஒரு தடவை முட்டுகாடு என்ற இடத்தில் தன் பால் பண்ணையில் விஸ்வநாத ஐயர் இவரை அழைத்து கொண்டு போய் ஒரு வாரம் இருக்க சொன்னார். தன் பக்தர்கள் அவ்வளவு தூரம் வரக் கஷ்டப் படறான்னு தெரிஞ்சவுடன் அடுத்த வாரமே திருவல்லிக்கேணி வந்துட்டார். வௌளைப் பண்டம் விற்பது சாஸ்த்ர சம்மதம் இல்லை என்று சொல்லி அவரை அந்த பால் பண்ணையை விற்கச் செய்தார்.

கடனை இன்ன தேதியில் திருப்பி தரேன் என்று சொன்னால் உயிரைப் பணயம் வைத்தாவது அதைத் திருப்பி குடுப்பார். எங்காத்து வாத்யார் நாரயண சாஸ்த்ரிகளிடம் வாங்கின கடனை ஒரு நா ராத்திரி 11 மணிக்கு கதவை தட்டி திருப்பி குடுத்திருக்கார்.

என்னை போல ஒரு பைசா குடுக்க முடியாத நிலையில் இருந்தாலும், வந்து நமஸ்காரம் பண்ணின பசங்களுக்கு ஞான ஸர்வஸ்வத்தையும் கொட்டி ராமாயண பாகவதத்தை சொல்லி குடுத்தார். நாங்க என்ன கைம்மாறு பண்ண முடியும்? நான் பணம் ஸம்பாதிக்க ஆரம்பிச்ச பின் அவருக்கு குடுக்க try பண்ணி இருக்கேன். ‘கணபதி ஸுப்ரமணியன், அப்பா பிரியப்பட்டது குடுக்கட்டும். நீ எனக்கு என்னிக்கும் பணமே தர வேண்டாம். நீ ராமாயணம் படி. அது தான் எனக்கு திருப்தி’ என்று பலமுறை சொல்லி இருக்கிறார். என்னை எப்பவும் அன்போடு முழுப் பேர் சொல்லி தான் கூப்பிடுவார்.

ஸ்வாமிகள், ஆதிசங்கரர் காண்பித்த வழியில், ஷண்மத தெய்வங்களையும் பாகுபாடு இல்லாமல் வழிபடுவதையே ஒத்துப்பார். ராமாயண பாகவதத்திலேயே சிவ பக்தி இருப்பதையும், சிவபுராணங்களில் விஷ்ணு பக்தி இருப்பதையும் எடுத்துக் காட்டுவார். அந்தந்த தெய்வத்தை வழிபடும் போது அந்த உண்மைப் பொருளில் அவரைப் போல லயித்து விட அவரால் தான் முடியும். வைஷ்ணவர்களிடம் ‘ராமரும், க்ருஷ்ணரும், வெங்கடேசப் பெருமாளும், ரங்கநாதரும் ஒண்ணு னு நீங்க நினைப்பது போல அதோடு சேர்த்து பரமேச்வரனும் அம்பாளும் அதே வஸ்து தான் என்று நாங்கள் நினைக்கிறோம்’ என்பார்.

அதே போல நாமத்தில் அவருக்கு இருந்த பக்தி. ஏழு கோடி மஹாமந்த்ரங்களும் ராம நாமத்தில் அடக்கம் என்று முழு நம்பிக்கையோடு இருந்தார். ‘மஹாபெரியவா ஒரு மணி ஜபம் பண்றது ராம நாமம் தான். அதனால் தான் அவருக்கு அத்தனை மஹிமை’ என்று சொல்வார். சிவன் ஸார், மஹாபெரியவா ஒத்துண்ட பாகவத சாஸ்த்ரத்தில் சொன்ன பக்தி மார்கத்தின் மஹிமையை தன் அநுபவத்தாலும் அறிந்து அது தான் right என்று இருந்தார்.

சில பேர் ‘இவர் பிடிவாதத்தால் இப்படி கஷ்டப்படறார்.  நான் இந்த உபாஸனை (அவாவா பண்ற மந்த்ரஜபம், மண்டகப்படி, ஹோமம்) பண்றதால பகவான் என்னை நன்னா வெச்சிருக்கான்.’ என்று இவர் காதுபடச் சொல்வார்கள். இவர் ‘சரி. அதைப் பண்ணிப் பார்ப்போமே’ என்று கிளம்ப மாட்டார். அடுத்த ஒரு ஆபத்து வரும்போது, அவா தான் இவர் கிட்ட பயந்து அடிச்சுண்டு வருவா. இவர் பகவந் நாமங்களால் ஆன ஒரு ஸ்தோத்ரத்தை சொல்லிக் குடுப்பார்.

போதேந்திராளைப் போல தெய்வீக யோக்யதை இவருக்கு இருந்ததால், அந்த நாம மந்திரத்தாலேயே சூரியனைக் கண்ட பனி போல வந்த ஆபத்து விலகிவிடும். அப்பறம் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். அவா அடுத்த ஸாமியார் கிட்ட பணத்தைக் கொட்டி நல்ல பேர் வாங்க போயிடுவா. இவர் பாகவத புஸ்தகத்தை பிரிச்சு படிக்க ஆரம்பிப்பார். அப்ப அதெல்லாம் நல்ல கார்யம் இல்லையா என்ற கேள்வி வரும். பக்தியோடு பகவானை நாமங்களால் அர்ச்சிப்பதே எல்லாவற்றிற்கும் மேலான தர்மம், என்று பீஷ்மர் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஆரம்பத்தில் சொல்லியிருப்பது தான் பதில். அதற்காக சாஸ்த்ரங்களை ஸ்வாமிகள் விட்டுவில்லை. அதை அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்.

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.