ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம்

கிஷ்கிந்தா காண்டம்

  1. ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

ராமரும் லக்ஷ்மணரும் பம்பா ஏரிக்கரையில், ருஷ்யமூக மலை அருகே வந்து சேர்ந்து, அங்கு வசந்த காலத்தின் அழகை ரஸித்து கொண்டே வருகிறார்கள். சீதையை நினைத்து புலம்பும் ராமரை லக்ஷ்மணன் சமாதானம் செய்கிறான். ஸுக்ரீவன் மலை மீதிலிருந்து இவர்களை பார்த்து, ‘வாலி அனுப்பி தன்னை கொல்ல வந்தவர்களோ’ என்று எண்ணி பயந்து, ஹனுமாரை அவர்களிடம் அனுப்புகிறான். ஹனுமார் ராமரே கொண்டாடும் அளவுக்கு மிக இனிமையாக அவர்களிடம் பேசி, அவர்களை ஸுக்ரீவனிடம் அழைத்து வந்து, ஸுக்ரீவனுக்கும் ராமருக்கும் அக்னி ஸாக்ஷியாக நட்பு செய்து வைக்கிறார்.

ஸீதை தூக்கி போட்ட நகைகளை பார்த்து, ராமர் வருந்தி அழும் போது ஸுக்ரீவன் அவரைச் சமாதானம்  பண்ணுகிறான். ஸுக்ரீவன் தானும் மனைவியை பிரிந்து வருந்துவதை சொல்லி, வாலி தனக்கு செய்த துரோகத்தைப் எடுத்துச் சொல்கிறான். ராமர் நான் வாலி வதம் செய்வேன் என்று சொன்னதும் மகிழ்ந்தாலும், ராமரின் வலிமையை சந்தேகிக்கிறான். ராமர் அவன் விரும்பியபடி துந்துபி என்ற அரக்கனின் உடலை எத்துகிறார். சுக்ரீவன் ‘வாலி கஷ்டப்பட்டு தூக்கிப் போட்டான். நீ சுலபமாக எத்தி விட்டாய். அதனால் எனக்கு இன்னும் ஸந்தேகம் போகவில்லை’ என்கிறான். அதனால் மீண்டும் அவன் விரும்பியபடி ஏழு மரங்களையும் ஒரு மலைச்சிகரத்தையும் ஒரே அம்பால் பிளந்து தன் வலிமையை அவனுக்கு நிரூபிக்கிறார்.

பின்னர் சுக்ரீவன் வாலியோடு யுத்தம் செய்கிறான். இருவருக்கும் வித்தியாசம் தெரியாததால், ராமர் வாலியை கொல்லவில்லை. கோபப்படும் சுக்ரீவனுக்கு அதை விளக்கி, ஒரு கொடியை அவனுக்கு மாலையாக போட்டு, மீண்டும் யுத்தம் செய்யச் சொல்கிறார். தன் மனைவி தாரை தடுத்தும் கேட்காமல் வாலி வந்து சுக்ரீவனோடு மோதி, ராம பாணத்தால் அடிபட்டு விழுகிறான். ராமரிடம் வாதம் செய்கிறான். பின்னர் ராமர் “உன் தம்பி மனைவியை நீ அபகரித்ததால் இந்த தண்டனை” என்று சொன்னதை ஏற்று, அவரை பார்த்தபடியே உயிரை விட்டு மேலுலகம் செல்கிறான்.

தாரை பலவாறு புலம்புகிறாள். ஸுக்ரீவனும் வருந்துகிறான். ஹனுமாரும் ராமரும் அவர்களைத் தேற்றுகிறார்கள். அங்கதனைக் கொண்டு வாலிக்கு ஸம்ஸ்காரம் செய்வித்து, பின்னர் ராமர் பிரஸ்ரவண மலையில் சென்று வசிக்கிறார். வானரப் பெரியோர்கள் ஸுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்கள். ஸுக்ரீவன், ராமர் சொல்படி, வாலி புதல்வனான அங்கதனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்விக்கிறான்.

———————————————-

ஸ்வாமிகள் தன்னை பிறர் குரு என்று சொல்லுவதை encourage பண்ண மாட்டார். “இப்ப குரு என்பார்கள். அப்பறம் வேர்க்குரு மாதிரி அரிக்கிறது என்று கஷ்டப்படுவார்கள்” என்று joke ஆ சொல்வார். குரு என்றால் அவரிடம் எந்த condition ஓ எந்த reservation ஓ இல்லாமல் போக வேண்டும். அவர் ஒருத்தரால் தான் மஹா பெரியவா கிட்ட அப்படி இருக்க முடிந்தது. So தன் கிட்ட வரவா எல்லாரையும், அவாளுக்கு பாவம் வராமல் இருக்க வேண்டி, friend என்று சொல்லி விடுவார். To be his friend the only criteria அங்க வந்தா ஸதா ஸர்வதா ஸ்வாமியை பத்தி தான் பேசுவார். அது பிடிச்சா தான் அங்க உட்கார முடியும். பஜனம் பண்ண encourage பண்ணுவார். மத்தபடி மனுஷாளை முகஸ்துதி பண்ண மாட்டார்.

He was fully aware that, what he had to offer was not interesting to all people at all time. So he used to say, I am the way I am. ‘वानरा एव नस्छिन्नम्’ எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி என்னால் இருக்க முடியாது. என்னை சகிச்சுக்க முடிஞ்சா என்னை ஒரு friend னு நினைச்சுக்கட்டும்’ என்பார். ஆனா அவர் கிட்ட நெருங்கி வந்து friend ஆனவா எல்லாரும் – they were friends for life. Either they died before him or he attained siddhi before them.

But the friendship was always one sided. அவா ஆறுதல் வேண்டும் போது இவர் கிட்ட வந்தா. பகவான் பேரால் இவரால் ஆறுதல் தர முடிந்தது. This consolation was something people could not buy with money or get from women. So he was always giving more than what he took in every friendship. So they stayed with him. நாள்பட அவருடைய மேன்மையை உணர்ந்து, தன் ego வை விட்டு அவரிடம் குரு என்ற பாவனையோடு வணங்கியவர்களை பாவங்களிலிருந்தும் அதன் மூலம் ஆபத்திலிருந்தும் மீட்டார்.

ஒரு தடவை இவரோட ஸ்ரீவித்யா குரு இவரை ஒரு ஆத்தில் ஸுந்தர காண்டம் படிக்கச் சொன்னாராம். இவர் போன போது அவா ‘மூணு நாளில் படிப்பேள்’ என்று குரு சொன்னார் என்ற போது ‘ஸுந்தர காண்டம் படிக்க மூணு நாள் ஆகாது. நான் வேணா மூணு நாளில் மூணு ஆவர்த்தி படிக்கிறேன்’ என்று சொல்லி அன்னிக்கு நாலரை மணி நேரத்தில் ஒரு ஆவர்த்தி படித்து விட்டு வந்தார். அவாத்து பையன் காணாமல் போய்விட்டான். திரும்ப வரவேண்டும் என்று அவா ப்ரார்த்தனை. அவா அன்னிக்கு ஸ்வாமிகள் குரு கிட்ட ‘நீங்க மூணு நாள் படிப்பார்னு சொன்னேள். அவர் ஒரே நாளில் நாலரை மணி நேரத்தில் மொத்தத்தையும் படிச்சுட்டார். என்ன படிச்சாரோ’ என்று இழுத்த போது அந்தப் பெரியவர் கடும்கோபத்தோடு ‘அவர் ஒரு ஸுந்தர காண்ட சித்தர். மஹான். அவரைப் போய் ஸந்தேகப் படுகிறாயே. உன் பிள்ளை வரவே மாட்டான்’ என்று திட்டிவிடுகிறார். இவா மன்னிப்பு கேட்கறா. ‘நீ நாளைக்கு அவர் கிட்டயே இந்த தப்பெண்ணம் வந்து விட்டதுக்கு மன்னிப்பு கேள்’ என்று சொல்லிக் குடுக்கிறார். அவாளும் அப்படியே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அப்பறம் மூணு ஆவர்த்தி படிச்சு அந்த பையன் வந்துவிடுகிறான்.

ஸ்வாமிகள் சொல்வார் ‘பெரிய கார்யத்தை சுலபமாக பண்ணினா, சுக்ரீவனுக்கு ராமர் கிட்ட வந்த மாதிரி ஸந்தேகம் வந்துவிடுகிறது. இந்தக் காலத்தில் பந்தா பண்ணினா தான் மதிக்கறா. அதுனால ஒழுங்கா இருக்கறவா கூட மாறிடறா. எனக்கு மனுஷா கொண்டாட வேண்டும் என்ற ஆசை இல்லாததால் நான் மாத்திக்கல.’

அவர் கொள்கைகளை புரிந்து கொள்ள முடியாமலோ, உலக விவகாரங்கள் ஜாஸ்தி ஆகும் போதோ, மனுஷா வருஷக் கணக்கா அவரை விட்டுட்டு போய் திரும்ப வருவா. ஆனா அவர் விட்ட எடத்துலேர்ந்து ஆரம்பிச்சுப்பார். ஏன் போன எங்க வந்த? என்று கேட்க மாட்டார். Because he was not attached to them. அவர் கிட்ட பக்தியோடு இருந்தால் கருணை செய்வார். இப்ப இவ்வளவு பேசறேன். நாலு வருஷம் அவரை விட்டுட்டு US போனேனே. திரும்ப வந்த போது அதே அன்போடு இருந்தார்.

ஸ்வாமிகள் தன்னை friend என்று சொல்லிக் கொண்டதிலும் ஒரு அழகு இருக்கிறது. பகவத் கீதையில் பகவான் தான் நமக்கு सुहृत् (எதுவும் எதிர்பார்க்காமல் நன்மையைச் செய்பவர்) என்று சொல்லி இருக்கிறது. வேற உறவுகளில் கடமை உரிமை எல்லாம் உண்டு. ஸ்வாமிகளிடம் மனம் விட்டு பேச ஒரு friend என்று ஆரம்பித்து, அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒரு सुहृत् என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முடிவில் உலகில் எல்லாவற்றைக் காட்டிலும் நமக்கு மேலான க்ஷேமத்தை தரும் தெய்வமே தான் இது என்பதை அநுபவித்து உணர்ந்து

त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।

त्वमेव विद्या द्रविणं त्वमॆव त्वमेव सर्वं मम दॆव दॆव ॥

என்று அவரிடமே நம்மை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. இதில் என்னுடைய ஒரு அநுபவம் என்னவென்றால், அப்படி அவர் எனக்கு सुहृत् என்பதை உணர ஆரம்பித்ததிலிருந்து, எனக்கு அம்மா, அப்பா, உறவு, நட்பு, பணம், படிப்பு எல்லாத்துலேயும் இருந்த மனக் கோணல்கள் சரியாகி, ஓரளவு ஸஹஜமாக பழகி வருகிறேன்.

ஸ்வாமிகளுடைய சின்ன வட்டதில் இருந்த நண்பர்களும் அவர்களுடைய சுற்றமும் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, தான் பட்டாம்பூச்சி போல பறந்து பகவானிடம் போய்விட்டார்.  அந்த அதிசயத்தைப் பார்த்து பரவசமடைந்து நிற்கிறோம்.

  1. நன்றி மறப்பது நன்றன்று

ராமர் மழைக்காலத்தை வர்ணித்துக் கொண்டு ப்ரஸ்ரவண மலையில் பொறுமையோடு காத்திருக்கிறார். வெகு காலத்துக்கு பின் ராஜ்யம் கிடைத்ததால் ஸுக்ரீவன் சிற்றின்பத்தில் மூழ்கிவிடுகிறான். இடையில் ஹனுமார் அவனிடம் ராம கார்யத்தை ஞாபகப்படுத்தி, அவன் உத்தரவு பெற்று, நீலனைக் கொண்டு வானரப் படை திரட்டுகிறார்.

ஷரத் ருது வந்த பின்னும் ஸுக்ரீவன் தன்னை வந்து பார்க்காத போது, ராமர் பொறுமை இழந்து லக்ஷ்மணனிடம், கிஷ்கிந்தைக்கு சென்று, ஸுக்ரீவனை warn பண்ண சொல்கிறார். லக்ஷ்மணர் ’அவனைக் கொன்றுவிடுகிறேன்’ என்று கோபப்படும் போது ’அன்று நமக்கு யாருமில்லை என்ற நிலைமையில் ’நானும் நீயும் friends. உன் கஷ்டம் என் கஷ்டம்’ என்று சுக்ரீவன் சொன்னது ஆறுதலாய் இருந்ததே. அதை நினைத்துக் கோபத்தை விடு. சொன்னா வழிக்கு வருவான், கொன்று விடாதே’ என்று சொல்லி அனுப்புகிறார்.

லக்ஷ்மணன் வில்லேந்தி வெகுண்டு வருவதைக் கண்டு வானரர்கள் நடுங்குகிறார்கள். ஹனுமார் ஸுக்ரீவன் மந்திரியாய் இருந்தாலும்,  பயமின்றி ’நீ காலம் கடந்ததை அறியாமல் இருந்த தப்பிற்கு கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கோ. அப்ப தான் உயிர் பிழைக்க முடியும்’ என்று சொல்கிறார்.

தாரை லக்ஷ்மணனிடம் பேசி, அவன் கோபத்தை குறைத்து, ஸுக்ரீவனிடம் அழைத்து வருகிறாள். லக்ஷ்மணன் ’செய்நன்றி மறந்தால் பிராயச்சித்தமே கிடையாது. வாலி போன வழிக்கதவை இன்னும் மூடவில்லை’ என்று எச்சரிக்கிறான்.

தாரை ’வானரப் படை இல்லாமல் ராவணனின் ராக்ஷஸப் படையை ஜெயிக்க முடியாது. வானரப் படை வந்து கொண்டிருக்கிறது. அது தான் delay’ என்று சொல்கிறாள்.  ஸுக்ரீவன் ’அதெல்லாம் இல்லை. மஹாவீரரான ராமருக்கு ஒரு helpம் வேண்டாம். என் படை ஒரு அலங்காரம் தான். அடிமை அறியாமல் செய்த பிழையை பொறுத்துக் கொள்’ என்று சொல்லவே லக்ஷ்மணன் கோபத்தை விட்டு ’நான் பேசினதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாதே. என் அண்ணா படும் கஷ்டத்தை பார்த்து சிலது சொல்லிவிட்டேன். வந்து அவரை ஸமாதானம் செய்.’ என்று ராமரிடம் அழைத்து செல்கிறான்.

ஸுக்ரீவன் ராமரிடம் வந்து வீழ்ந்து வணங்கி, தரையில் உட்காருகிறான். அதற்குள் வானர சேனை வந்து சேரவே, ராமர் ஸுக்ரீவனின் பிழையை மன்னித்து, மறந்து அவனை போற்றுகிறார். ஸுக்ரீவன் ’இது உன் படை. உத்தரவு குடு’ என்று சொன்னாலும் ராமர் ’என் தேவை என்ன என்று உனக்குத் தான் நன்றாகத் தெரியும். அதனால் நீயே அவர்களுக்கு உத்தரவு குடு’ என்று அவனையே தன் காரியத்திற்கு help ஆக வெச்சுக்கறார்.

———————————————-

ஸ்வாமிகள் தன்னை முழுமையாக பகவானிடம் ஒப்படைத்து விட்டதால், உலகத்தில் யாரிடமும் அடக்கத்தை காண்பிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்தார். ஆனாலும் தன் எளிய தேவைகளை பூர்த்தி செய்ய நெருங்கி வந்த நண்பர்களிடம், மிகுந்த நன்றியோடு அன்பு பாராட்டினார். அவர்களுடைய குடும்பத்தினர் களுக்கும் நண்பர்களுக்கும் கூட உடம்பு சிரமத்தைப் பார்க்காமல் சத்விஷயங்களை சொல்லிக் குடுப்பார். ஆறுதல் சொல்வார். பஜனம் செய்ய encourage பண்ணுவார். ரொம்ப hope குடுப்பார். ஸுலபமான முறையில் நாமங்களை ஜபித்து பகவானை வழிபட்டு ஆபத்துக்களிலிருந்து மீள வழி சொல்லித் தருவார்.

தாரை சுக்ரீவனுடைய ’வானரப் படை இருந்தால் தான் ராவணனை எதிர்க்க முடியும்’ என்று பேசினது போல, தன் நண்பர்களைச் சேர்ந்தவர்கள், தங்களால் தான் ஸ்வாமிகள் குடும்பம் நடக்கிறது என்று நினைத்தால் பொருட்படுத்த மாட்டார். தெரிஞ்சது அவ்வளவு தான் என்று விட்டுவிடுவார்.

தன்னை புரிந்து கொண்டு, அன்பினால் தனக்கு கைங்கர்யம் பண்ணுபவர்களை allow பண்ணுவார். அதற்காகவே தன்னைச் சுற்றி சில சிரமங்கள் இருப்பது போலக் காட்டிக் கொண்டார் என்று நினைக்க தோன்றுகிறது. தன்னளவில் perfectionist ஆ இருந்தாலும் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்க மாட்டார். ‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் இருந்தா போறும்’ என்பார்.

ஸுக்ரீவனைப் போலச் சிற்றின்பக் கடலில் நாம் மூழ்கி இருந்தாலும், ஹனுமாரைப் போல ஸ்வாமிகள் வந்து ஞாபகப்படுத்தி இருக்கிறார். அவர் சொல்லிக் குடுத்ததைப் படித்து, ராம கைங்கர்யம் செய்தால், அதுவே நாம் அவருக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும்

ஹனுமார் ஞாபகப் படுத்தின பின், சுக்ரீவன், ராமர் நட்புக்காக உயிரையே த்ருணமாக மதித்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ராக்ஷஸர்களோடு யுத்தம் பண்ண வந்தான். அது மாதிரி ஸ்வாமிகள், அவருக்கு அடிமையாக இருக்கக் கூட லாயக்கிலாத நம்மையும் friend என்று சொன்னாரே என்றெண்ணி, நமக்கு பண்ணின உதவியை மறக்காமல் இருந்தால், என்னிக்காவது ஒரு நாள் அவர் இடையறாது தெய்வ பக்தி பண்ணினதோட பெருமை புரியும்.

நாமும் ஸ்வாமிகள் நமக்கு சொன்னதைச் செய்யணம், பஜனமே பண்ணனும், அதுனால உயிரே போனாலும் சரி, என்று கிளம்புவோம். அப்படி கிளம்பினா, உயிர் ஒண்ணும் போயிடாது. ஸுக்ரீவன் ராம பட்டாபிஷேகத்தைப் பார்த்தாப் போல நாமும் அடிக்கடி ராமாயணம் படிச்சு, பூர்த்தி பண்ணி, பட்டாபிஷேகம் பண்ணி பார்த்து ஆனந்தப் படலாம். நம் குழந்தைகளும் ராமாயணத்தில் உள்ள தர்மங்களை தெரிங்சுப்பா. நம்ம மதத்தோட ஆணி வேர் இந்த வால்மீகி ராமாயணம் தானே. So we will be saved from all dangers.

  1. உன்னால் நிச்சயம் முடியும்; உன்னால் மட்டுமே முடியும்

ஸுக்ரீவன் சீதையை தேட நான்கு திக்குகளிலும் வானரர்களை அனுப்புகிறான். அந்தந்த திசையில் உள்ள நாடு நகரங்கள் நதிகள் ஆபத்துக்கள் எல்லாம் விவரமாக் சொல்லி ‘ஒரு மாதத்தில் திரும்பி வர வேண்டும்’ என்று கட்டளை இட்டு அனுப்புகிறான். ஹனுமாரிடம் அவன் ‘இந்த காரியத்தை முடிக்க உன்னால் நிச்சயம் முடியும்’ என்று சொல்லுவதைப் பார்த்து ராமரும் தன் பெயரிட்ட முத்திரை மோதிரத்தை ஹனுமாரிடம் அடையாளமாகத் தந்தனுப்புகிறார்.

மற்ற மூன்று திசைகளிலும் சென்றவர்கள் ஒரு மாதத்தில் திரும்ப வந்து ‘தெற்கு திக்கில் சென்றவர்கள் நல்ல செய்தியோடு வருவார்கள்’ என்று positive ஆக சொல்கிறார்கள். அங்கதன் தலைமையில் தெற்கு திக்கில் சென்றவர்கள் முயற்சியோடு தேடியும் கிடைக்காமல், பசி தாகத்தால் வாடி, ஒரு குகையில் நுழைந்து ஸ்வயம்ப்ரபா என்ற ஒரு தபஸ்வியை பார்க்கிறார்கள். ஹனுமார் அவளிடம் ராம கதையைக் கூற, அவள் மகிழ்ந்து, அவர்களுக்கு உணவளித்து, தன் தபோ மஹிமையால் அவர்களை வௌயில் கொண்டு விடுகிறாள்.

ஒரு மாதக் கெடு முடிந்து விட்டதால் திரும்பி போக பயந்து, சுக்ரீவனைத் திட்டும் அங்கதனுக்கு, ஹனுமார் புத்தி சொல்கிறார். அவன் ‘நான் வடக்கிருந்து உயிரை விடப்போறேன். ஜடாயு ராமருக்காக உயிரைக் குடுத்தது. நாம் சுக்ரீவனுக்கு பயந்து உயிரை விடவேண்டி இருக்கிறது’ என்று பேசும் போது ஸம்பாதி என்ற ஜடாயுவின் அண்ணா கழுகு ‘ஹா! என் தம்பி ஜடாயுயை பற்றி விவரமாய் சொல்’ என்று கேட்கிறது. அங்கதன் விவரம் சொன்ன பின், கடல் ஜலத்தால் தம்பிக்கு தர்ப்பணம் செய்துவிட்டு, ‘ஸீதை லங்கையில் ராவணனால் சிறை வைக்கப் பட்டு இருக்கிறாள்’ என்று பார்த்து சொன்னவுடன், முன்பு நிஷாகர மஹரிஷி அநுக்ரஹித்தபடி அதற்கு இறக்கைகள் மீண்டும் முளைக்கின்றன. அதைப் பார்த்த வானரர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிறது.

ஆனாலும் ‘யார் கடலைக் கடந்து சீதையை பார்த்து வரமுடியும்’ என்ற கேள்விவர ஜாம்பவான் ஹனுமாரிடம் ‘வாயுபுத்ரனான உன்னால் தான் இந்த காரியத்தை செய்ய முடியும். நாங்களும் ஒற்றைக்காலில் நின்று உனக்காக பகவானை வேண்டுகிறோம். எங்கள் எல்லாருடைய உயிரும் இப்போது உன் கையில் இருக்கிறது. சென்று வா’ என்று உற்சாகப் படுத்துகிறார். ஹனுமாரும் தன் பலத்தை உணர்ந்து, உலகளந்த பெருமாளைப் போல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு மஹேந்திர மலையில் ஏறுகிறார்.

ராமர் encourage பண்ணினதுனால் சுக்ரீவன் திறமை (topography of the world) வௌப்படுகிறது. அங்கதனுக்கும் ஒரு leader post குடுத்து, ஒரு பொறுப்பு வரும் போது எப்படி behave பண்ணனும் என்பதை ஹனுமார், ஜாம்பவான் எல்லாரும் mentor பண்ணறா. எல்லாம் இழந்த ஸம்பாதிக்கு நிஷாகர மஹரிஷி hope குடுக்கறார். ஹனுமான் பெரிய காரியம் செய்வதற்கு ‘உன்னால் தான் முடியும்’ என்று எல்லோரும் உற்சாகப் படுத்துகிறார்கள்.

———————————————-

மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொன்ன வேத தர்ம சாஸ்த்ரங்களை follow பண்ண முடியலையே, சிவன் ஸார் எழுதின ஏணிப்படிகளில் மாந்தர்களில் ரொம்ப கீழ்ப் படியில இருக்கோமே என்று வருத்தம் ஏற்படும் போது ‘என் வார்த்தையை நம்பி இந்த ஸ்தோத்ரங்களை அநுதினம் படி. எல்லாக் கோணங்களிலும் பகவான் உன்னைக் காப்பாற்றுவார். material as well as spiritual. இந்த குறைகளெல்லாம் போய்விடும். கவலைப் படாதே’ என்று ஸ்வாமிகள் சொல்லி ரொம்ப hope குடுப்பார்.

‘புன: புனஸ்ச உத்தம ஸாந்த்வ வாதி’என்ற ஸுந்தர காண்ட ஸ்லோகத்திற்கு ‘பகவானின் மஹிமையையும் கருணையையும் மீண்டும் மீண்டும் சொல்லி, என்னை ஏற்றுக் கொண்டது போல உன்னையும் ஆட்கொள்வார் என்று hope குடுப்பது குருவின் கார்யம். பகவத் பஜனம் போல அதுவும் பகவானுக்கு இஷ்டமான காரியம். அதைச் செய்தால் அவன் அருள் கிடைக்கும். அதனால் தான் என் பாராயணத்துக்கு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று வரவா கிட்ட பேசிண்டு இருக்கேன்’ என்று  சொல்வார். திருமூலர் திருமந்திரத்தில்

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

இதில் கடைசி வரியின் அர்த்தமாய் ஸ்வாமிகள் விளங்கினார்.

அவரவர்களுடைய ஜாதகம், குடும்ப சூழ்நிலை, பிடித்தம், திறமை அதைக் கொண்டு பக்தி பண்ணச் சொல்லிக் கொடுத்து உற்சாகப் படுத்துவார். விஸ்வநாதய்யரிடம் நாராயணீயத்தில் grammatical peculiarities எடுத்து சொல்வார். ஜானகிராமையர் நாகராஜய்யர் போன்று எத்தனையோ பேரை ராமாயண பாகவதம் படிக்க வைத்தார். சமையல் செய்ய பிடித்தம் இருந்தால், கேது நாடியில் தினம் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் பண்ண சொல்வார். Dr.திருமால்வளவன் 50 நமஸ்காரம் பண்ணினால் கூட தானும் ஸ்லோகங்கள் சொல்வார். வைராக்யமாய் இருக்கும் ஸுரேஷை ‘மனுஷா கிட்ட போய் வேலை பார்க்க வேண்டாம். பகவந் நாமத்தை நம்பு. அதுவே காப்பாற்றும்’ என்று சொல்லி இருக்கார்.

நாமும் மனத்தளர்ச்சி ஏற்படும் போது, ஒருத்தருக்கு ஒருத்தர், முடிஞ்ச வரைக்கும், அவர் பேரால hope குடுத்துக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. எனக்கு உள்ளே எவ்வளவோ அழுக்கு இருந்தாலும், அந்த தூய்மையான பெரியவர் என்னையும் பக்கத்தில் உக்காத்தி வெச்சுண்டார். அவ்வளவு பெரிய வஸ்துவை எல்லாத்துலயும் சின்னவனான நான், ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி பேசறேன். நீங்களும் ‘குழந்தை தானே’ என்று encourage பண்றேள். எதாவது தப்பு இருந்தா, எடுத்துச் சொல்லுங்கள். திருத்திக் கொள்ள முயற்சி செய்வேன்.

एकमक्षरं हृदि निरन्तरं भासते स्वयं लिख्यते कथम्

ஆனா ஸ்வாமிகள் ஒரு incident சொல்லுவார். மஹாபெரியவா கிட்ட பாகவத பாரயணம் பண்ணும் போது, பெரியவா ‘பாகவத ஸப்தாஹத்துக்கு 5 பேர் பக்கத்தில் இருக்க வேண்டும்’ என்று சொன்னாராம். ‘எதுக்கு 5 பேர் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, ‘நாலு பேர் பாகவதம் கேட்கறத்துக்கு. ஒருத்தர், யாராவது நாஸ்திகன் வந்தா கழுத்தப் பிடிச்சு வௌயில தள்ளறத்துக்கு’ என்று சொன்னாளாம். ‘நான் அதை நடைமுறைப் படுத்தாததுனால எனக்கு பல ச்ரமங்கள் வந்தது’ என்பார் ஸ்வாமிகள். அது போல நாமும் ஸ்வாமிகளை தெய்வமாய் நம்பாதவர்களிடம் அவர் மஹிமையை சொல்லக்கூடாது. சொன்னால் ஏதாவது பேச்சு வந்து நம் பக்தியே ஆட்டம் கண்டுவிடும். அது எவ்வளவு பெரிய ஆபத்து!

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.