Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 21வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 21 தமிழில் பொருள் (23 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 21)

இன்னைக்கு சிவானந்தலஹரில 21ஆவது ஸ்லோகத்தைப் பார்ப்போம்,

धृतिस्तंभाधारां दृढगुणनिबद्धां सगमनां

विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् ।

स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां

जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥

த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம் ஸக³மநாம்

விசித்ராம் பத்³மாட்⁴யாம் ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் ।

ஸ்மராரே மச்சேத:ஸ்பு²டபடகுடீம் ப்ராப்ய விஶதா³ம்

ஜய ஸ்வாமிந் ஶக்த்யா ஸஹ ஶிவக³ணை: ஸேவித விபோ⁴ ॥

ஹே விபோ! – எங்கும் நிறைந்தவரே, ‘ஸ்வாமிந்’ – ஆண்டவரே, ‘ஸ்மராரே’ மதனனை எரித்தவரே, நீங்கள் என் ‘மச்சேத:ஸ்பு²டபடகுடீம்’ – என்னுடைய மனமாகிய அழுக்கில்லாத, படுதாவால போட்ட.. ஒரு tent.. ஒரு குடில், அதுல, ‘சக்தியா ஸஹ’ – பராசக்தியோடு, ‘ப்ராப்ய’ – வந்து.. நீங்கள் அங்கு விளங்கவேண்டும்..வெற்றியோடு விளங்கவேண்டும் அப்படீன்னு சொல்றார். இந்த tent எப்படி இருக்குன்னா, ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் ‘ – த்ருதின்னா உறுதி அல்லது தைர்யம், அதை ஸ்தம்பமா, நடுவுல ஒரு கம்பம் கொடுத்து, அது மேலதான் படுதா போட்டு கயறு வெச்சு கட்டுவா இல்லையா? அப்படி என்னுடைய சிவ பக்திங்கறது என் மனசுல உறுதியா இருக்கு, அது தான் அந்த நடுத் தூண், ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம்’ – த்ருடகுணம்அப்படீன்னா.. அந்த பக்தியிலேர்ந்து நழுவாத வைராக்கியம், அது தான் குணம்.. குணம்னா கயிறு, அந்த கயிறை கொண்டு இந்த tent- ஐ நான் கட்டியிருக்கேன், ‘ஸக³மநாம்’ – tent-னா ஒரு இடத்துலேர்ந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துண்டு போகலாம். அதை மாதிரி இதை எங்கவேணும்னா கூடஎடுத்துண்டு போகக் கூடிய tent இது.. ‘விசித்ராம்’ – ரொம்ப அழகா இருக்கும், அந்த டெண்டோட color சொல்லல, actual-ஆ இதை வந்து ‘விஷதாம்ன்னு’ சொல்லிட்டார். அதனால அழுக்கு இல்லாத வெள்ளைவெளேர்ன்னு இருக்கற tent இது. அதுல சித்ர வேலைப்பாடுகள் எல்லாம் பண்ணி இருக்குன்னு வெச்சுக்கலாம்.. ‘விசித்ராம் பத்³மாட்⁴யாம்’ – தாமரைப் பூ போன்றது, நம்ம மனசு தாமரைப் பூ போல இருக்கறதுனால, இந்த tent-ஒட shape-ம் தாமரைப் பூ போல இருக்கு. ‘ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் ‘ – தினம்தோறும் நல்ல வழியில, கொண்டு போய் இந்த tent-ஐ நான் வெச்சு இருக்கேன், அழுக்கில் எல்லாம் போட்டு நாசம் பண்ணாம, என்னுடைய மனமாகிய இந்த கூடாரத்தை ரொம்ப நல்ல, நல்ல மார்கத்துல நான் போய்.. நட்டு.. நான் நல்லபடியா காப்பாத்திண்டு இருக்கேன் இந்த மனசை. இதுல ‘ஶிவக³ணை: ஸேவித விபோ⁴’ – சிவ கணங்களால் சேவிக்க பட்டவரே, இந்த என்னுடைய மனமாகிய கூடாரத்துல வந்து நீங்க தங்கிக்கணும், அப்படீன்னு சொல்றார்.

மஹாபெரியவா, நிறைய திக்விஜயம் பண்ணியிருக்கா, பாரத தேசம் முழுக்க நூறு வருஷத்துல எத்தனையோ நடையா நடந்து இருக்கா. அங்கங்க ஒரு கோவிலோ, ஒரு சிவன் கோவில் வாசல்லேயோ, ஒரு ஆத்து திண்ணைலையோ கூட படுத்துண்டுருவா, அந்த மாதிரி சௌரியமே எதிர் பார்க்காம, எங்க வேணா படுத்துப்பா, பெரியவாளுக்கு கூட ஒரு ரெண்டு பேரோ நாலு பேரோ கூட கைங்கர்யம் பண்றவா போயிண்டு இருப்பா. அவா தான் சிவகணங்கள், மஹாபெரியவா தான் பரமேஸ்வரன், அப்போ பெரியவாளுக்கு நாம இந்த மனசுங்கற கூடாரத்தை கொடுத்து, “நீங்க அங்கங்க வெய்யில்லேயும், மழையிலேயும் தூங்காதீங்கோ பெரியவா, இந்த என் மனஸாகிய கூடாரத்தில தூங்குங்கோ, rest எடுத்துக்கோங்கோ” அப்படீன்னு சொல்லணும் போல இருக்கு. அவ்வளவு அழகான இந்த ஸ்லோகம்…

இந்த நவராத்திரியின் போது, அதிகமா மூகபஞ்சசதி படிச்சிண்டு இருந்தேன், அதனால தான் இந்த சிவானந்த லஹரியுடைய விளக்கவுரைக்கு வரல, இந்த மூக பஞ்சசதியில நிறைய அழகழகான அர்த்தங்கள் எல்லாம் தோணிண்டு இருந்துது. இந்த ஸ்லோகத்துக்கு ஏத்த மாதிரியே ஒரு ஸ்லோகம் இருக்கு அங்கே.. இங்கே என் மனசை கூடாரமாக்கி பரமேஸ்வரா நீங்கள் சக்தியோட வந்து தங்கணும்னு சொல்றார். அங்க மூககவி என்ன சொல்றார்ன்னா,

नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं

कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।

उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो

मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥ (பாதாரவிந்த சதகம் 48)

நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்

க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।

உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ

மனோஜ்ஞே காமாக்ஷ்யாஶ்சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥

அப்படீன்னு.. என் மனசு- ‘மம மனோ’.. ‘மனோஜ்ஞே’ – ரொம்ப அழகான, ‘காமாக்ஷ்யா:’ – காமாக்ஷி தேவியினுடைய, ‘சரணமணிஹர்ம்யே’ – அம்பாளுடையசரணம் என்ற ரத்ன மாளிகைல, ‘விஹரதாம்’ – வசிக்கட்டும்.

அது எப்படி இருக்கு, அம்பாளுடைய சரணம் எப்படி மாளிகைன்னு கேட்டா, ‘நகா²ங்கூரஸ்மேர த்³யுதிவிமல க³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம் க்ருʼத ஸ்னானம்’ – இந்த மாளிகை கங்கை நதியுடைய கரையில கட்டப்பட்டு இருக்கிறது. அம்பாளுடைய ‘நகா²ங்கூர’ – நக நுனியிலேர்ந்து வெளிப்படும் , ‘ஸ்மேரத்³யுதி’ – வெள்ளையான அந்த ஒளி.. அது விமலமா இருக்கு, அந்த விமலமான ‘க³ங்காம்ப⁴ஸி ஸுக²ம் க்ருʼதஸ்னானம்’ – இந்த கங்கை ஜலத்துல தினம் சுகமா ஸ்னானம் பண்ணிண்டு, அம்பாளுடைய பாதத்துலேர்ந்து ஞானம் பெருகிறது, ‘ஜ்ஞாநாம்ருʼதம் அமலம் ஆஸ்வாத்³ய நியதம்’ – அமலமான அந்த ஞானம் அப்படீங்கற அந்த ஜலத்தை பருகிண்டு, ஒரு வீடுன்னா.. ஸ்தல ராமண்யகமா, ஜலராமண்யகமா இருக்கணும். நல்ல ஜலம் கிடைக்கணும், ஸ்தலம் வந்து மேடு பள்ளம் இல்லாம இருக்கணும். அந்த மாதிரி கங்கா நதிக்கரையில அம்பாளுடைய சரணம்ங்கற வீட்டுல ஞானம்ங்கற ஜலத்தை குடிச்சிண்டு, ‘உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே’ – வீடுன்னா, விளக்கு ஏத்தி வைக்கணும், அம்பாளுடைய சரணத்துல இருக்க மஞ்ஜீரம், அந்த சலங்கைல நல்ல நல்ல ஒளிவிடற கற்கள்லாம் இருக்கு. அது வந்து தீபம் போல இருக்காம்.வரிசையா தீபம் ஏத்தி வெச்சா மாதிரி இருக்கு, இப்பேற்பட்ட அம்பாளுடைய சரணமாகிய ரத்ன மாளிகையில் என் மனம் சதா வசிக்கணும், அப்படீன்னு மூக கவி கேட்கறார். ஸ்வாமிகள் சொல்வார் “நீ எங்க இருந்தாலும் உன் மனசு அம்பாளுடைய.. நீ எந்த வீட்டுல எந்த flat-ல இருந்தாலும், உன் மனசு அம்பாளுடைய சரணமாகிய ‘மணிஹர்ம்யே விஹரதாம்’ – உன் மனசு அங்கேயே இருக்கட்டும்” அப்படீன்னு சொல்வார்.

இந்த ஒரு ஸ்லோகம்.அப்பறம், பரமேஸ்வரனுக்கு எல்லமே வெள்ளையாத்தான் பிடிக்கும், அதனாலதான் இந்த கூடாரம்கூட, ‘ஸ்புடபட குடீம்’ – அப்படீன்னு சொல்லி,வெள்ளை வேளேர்ன்னு தூய்மையா, விஷதமா இருக்கக் கூடிய tent அப்படீன்னு சொல்றார். இதை படிச்ச உடனே மூககவி இன்னொரு ஸ்லோகம் சொல்றார். அம்பாளுடைய மந்தஸ்மிதம் வெள்ளையா, ரொம்ப தூய்மையா இருக்கு, அப்படீன்னு நூறு ஸ்லோகத்துல ஒரு அம்பது ஸ்லோகத்துலயாவது மந்தஸ்மித சதகத்துல, அம்பாளுடைய மந்தஸ்மிதம், வெண்மையா இருக்கு.. வெண்மை, குளிர்ச்சி, மாதுர்யம் – இனிமை.. இந்த மூணும்தான் சொல்வார், இதுல வெண்மை கொஞ்சம் நிறையவே சொல்வார். அதுல ஒரு ஸ்லோகம்,

अश्रान्तं परतन्त्रितः पशुपतिस्त्वन्मन्दहासाङ्कुरैः

श्रीकामाक्षि तदीयवर्णसमतासङ्गेन शङ्कामहे ।

इन्दुं नाकधुनीं च शेखरयते मालां च धत्ते नवैः

वैकुण्ठैरवकुण्ठनं च कुरुते धूलीचयैर्भास्मनैः ॥ (மந்தஸ்மித சதகம் 81)

அஶ்ராந்தம் பரதந்த்ரித: பஶுபதிஸ்த்வன்மந்த³ஹாஸாங்குரை:

ஸ்ரீகாமாக்ஷி ததீ³யவர்ணஸமதாஸங்கே³ன ஶங்காமஹே ।

இந்து³ம் நாகது⁴னீம் ச ஶேக²ரயதே மாலாம் ச த⁴த்தே நவை:

வைகுண்டை²ரவகுண்ட²னம் ச குருதே தூ⁴லீசயைர்பா⁴ஸ்மனை: ॥

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘அஶ்ராந்தம் பரதந்த்ரித: பஶுபதி: த்வன்மந்த³ஹாஸாங்குரை:’ – உன்னுடைய மந்தஸ்மிதத்தை பார்த்து, ‘அஶ்ராந்தம்’ -சோம்பலே ஏற்படலையாம் பரமேஹஸ்வரனுக்கு, உன்னுடைய மந்தஸ்மிதத்தை பார்த்து பார்த்து ரசிச்சிண்டு இருக்கார். அதற்கு அடிமை ஆகி விட்டார். ‘ஸ்ரீகாமாக்ஷி ததீ³யவர்ண ஸமதா ஸங்கே³ன’ – உன்னுடைய மந்தஸ்மிதம் வெள்ளைவெளேர்ன்னு இருக்கு, அதோட வர்ணத்துக்கு அந்த வெள்ளைக்கு சமமா தானும் எப்படியாவது ஆயிடனும் அப்படீன்னு ஆசைபட்டுண்டு, ‘ஶங்காமஹே’ – ‘அப்படித்தான் நினைக்கிறோம்’ அப்படீன்ங்கறார். அதனால தான், இந்த பரமேஸ்வரன் என்ன பண்றார், ‘இந்து³ம் நாகது⁴னீம் ச ஶேக²ரயதே’ – தலைமேல சந்திரனை வெச்சிண்டு இருக்கார், அது வெள்ளையா இருக்கா?..கங்கையை வெச்சிண்டு இருக்கார், கங்கை வெள்ளைன்னு ஐதீகம், கங்கா நதி வெள்ளை, யமுனை கருப்பு, சரஸ்வதி சிவப்பு, அந்த மாதிரி கங்கைங்கற வெள்ளையான நதியை வெச்சுகிறார். ‘மாலாம் ச த⁴த்தே நவை: வைகுண்டை²:’ – ப்ரம்மனுடைய கபாலத்தை மாலையா போட்டுண்டுஇருக்கார், கபாலம்ங்கறது வெள்ளையா இருக்கும், ‘அவகுண்ட²னம் ச குருதே தூ⁴லீசயைர்பா⁴ஸ்மனை:’ – உடம்பும் உடம்பு முழுக்க வெளேர்ன்னு பஸ்மாவை எடுத்து பூசிக்கிறார். பரமேஸ்வரனுக்கு உன்னுடைய மந்தஸ்மித்தை பார்த்து அதுக்கு சமமா நம்மளும் ஏதாவது பண்ணனும்னு இப்படியெல்லாம் பண்றார் போலிருக்குன்னு அவ்வளோ அழகான ஒரு ஸ்லோகம், மூககவி அப்படி ரசிச்சு சொல்றார்.

அதனால பரமேஸ்வரன் ஏன் பஸ்மாவை பூசிண்டு இருக்காருன்னா, அவர் வந்து ஸ்மாசான பஸ்மம் பூசிண்டு இருக்கார், எல்லாமே பஸ்மா போக போறது அப்படீங்கறத காண்பிக்கறதுக்கா தான் பூசிண்டு இருக்கார்ன்னு எல்லாம் இனிமே சொல்ல வேண்டாம், அம்பாளுடைய மந்தஸ்மித்துக்கு சமமாகணும் எங்கறதுக்காக பூசிண்டு இருக்கார் அப்படீன்னு சொல்லிடலாம். அப்படி வெள்ளைங்கறது ஸுத்த சத்வம் பரமேஸ்வரன், சிவப்பு அம்பாள், அந்த ஸுத்த சத்வமான பரமேஸ்வரனுக்கு ஏத்த மாதிரி ஒரு வசிக்கிற, விஹாரம் பண்றதுக்கு ஏத்த, கூடாரமாக அதுவும் ‘சக்தியாஸஹ’ அம்பாளோட வரணும் அப்படீன்னு வேண்டிக்கறார், அம்பாளோட வந்து என் மனசுல பரமேஸ்வரா.. என் மனமாகிய கூடாரத்தில் வந்து தங்க வேண்டும், அப்படீன்னு கேட்கறார். அழகான ஒரு ஸ்லோகம்.

இந்த நவராத்திரியின் போது மூகபஞ்சசதி படிச்சதுல இன்னொரு சிவானந்தலஹரி ஸ்லோகத்துக்கும் மூகபஞ்சசதிக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி தோணித்து.

‘கபீரே காஸாரே’ னு ஒரு ஸ்லோகம் பாத்தோம். அதுல நீ அங்கஇங்க காட்டுலயும் இன்னும் ஏரிக்குள்ளயும் மலை மேலயும் ஏன் அலைஞ்சி திரியற..மனமாகிய தாமரையை பரமேஸ்வரனுக்கு ஒப்படைச்சுடு, அவர் தன்னையே உனக்கு கொடுப்பார் அப்படினு ஒரு ஸ்லோகம் வரும். அந்த மாதிரி இந்தமூகபஞ்சசதில இந்த கடாக்ஷ சதகத்துல 58ஆவது ஸ்லோகம்

हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्णन्

उल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा ।

दोषानुषङ्गजडतां जगतां धुनानः

कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥ (கடாக்ஷ சதகம் 58)

ஹ்ருʼத்பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ணன்

உல்லாஸமுத்பலருசேஸ்தமஸாம் நிரோத்³தா⁴ ।

தோ³ஷானுஷங்க³ஜட³தாம் ஜக³தாம் து⁴னான:

காமாக்ஷி வீக்ஷணவிலாஸதி³னோத³யஸ்தே ॥

அப்படின்னு ஒரு ஸ்லோகம். ‘காமாக்ஷி வீக்ஷண விலாஸ தி³னோத³யஸ்தே’ – உன்னுடைய வீக்ஷணம் அழகா இருக்கு. உன்னுடைய கண்ணோக்கு.. அது ‘தி³னோத³ய:’ – பகலை உண்டாக்குபவன்.. அப்படினா சூரியன். உன்னுடைய கண்ணோக்கமாகிய சூரியன் ‘ஹ்ருʼத்பங்கஜம் மம விகாசயது’ – என் மனசாகிய தாமரையை மலரச் செய்யட்டும்னு ஒரு ஸ்லோகம். அது மாதிரி நம்முடைய மனசாகிய தாமரையை அம்பாளுடைய கடாக்ஷத்துனால மலரச் செய்து இந்த மலர்ந்த தாமரையை பரமேஸ்வரனுடைய பாதத்துல சிவானந்தலஹரியில சொல்ற மாதிரி அவருடைய பாதத்துல போட்டா பார்வதி பரமேச்வரா இரண்டு பேருமே நம்முடைய மனமாகிய கூடாரதுக்கு வந்து நமக்கு அநுக்ரஹம் பண்ணுவா அப்படின்னு இந்த ஸ்லோகத்துல தோணித்து.

மஹாபெரியவா மூக பஞ்சசதியிலிருந்து ஒரு வரியை quote பண்ணி இந்த நவராத்ரியின் போது ஸுமங்கலிகளை எல்லாம் கொண்டாடனும்.. அவாளுக்கு பூஜை பண்ணனும் அப்படின்னு சொல்லும் போது 92ஆவது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல இருந்து சொல்லியிருக்கா.

प्रसूनैः सम्पर्कादमरतरुणीकुन्तलभवैः

अभीष्टानां दानादनिशमपि कामाक्षि नमताम् ।

स्वसङ्गात्कङ्केलिप्रसवजनकत्वेन च शिवे

त्रिधा धत्ते वार्तां सुरभिरिति पादो गिरिसुते ॥ (பாதாரவிந்த சதகம் 92)

ப்ரஸூனை: ஸம்பர்காத³மரதருணீகுந்தலப⁴வை:

அபீ⁴ஷ்டாநாம் தா³னாத³நிஶமபி காமாக்ஷி நமதாம் ।

ஸ்வஸங்கா³த்கங்கேலிப்ரஸவஜனகத்வேன ச ஶிவே

த்ரிதா⁴ த⁴த்தே வார்தாம் ஸுரபி⁴ரிதி பாதோ³ கி³ரிஸுதே ॥

‘ஸுரபி’ அப்படின்னு சமஸ்க்ருத வார்த்தை. அதுக்கு பல அர்த்தங்கள். அதுல முக்கியமான மூன்று அர்த்தங்கள். ஸுரபின்னா வாசனையான பொருள்னு ஒரு அர்த்தம். ஸுரபின்னா வஸந்த ருதுன்னு ஒரு அர்த்தம். ஸுரபின்னா காமதேனுன்னு ஒரு அர்த்தம். இங்க இந்த ஸ்லோகத்துல சொல்றார். ‘ப்ரஸூனை: ஸம்பர்காத³ அமரதருணீ குந்தலப⁴வை:’ ‘அமரதருணீ’ன்னா தேவ மகளிர். அவாளுடைய ‘குந்தலப⁴வை:’- அவாளுடைய தலையில இருக்கக் கூடிய ’ப்ரஸூனை:’-மலர்களுக்கு ‘ஸம்பர்காத்³’- சம்பந்தம் ஏற்படறதுனால.. அதாவது, தேவ பெண்கள் எல்லாம் வந்து அம்பாளை நமஸ்காரம் பண்றா.. அதனாலஅவாளுடைய தலையில இருக்கிற பூவுக்கு பக்கத்துல அம்பாளுடைய பாதம் இருக்கிறதுனால அந்த பூவுல இருக்கிற வாசனை அம்பாளுடைய பாதத்துக்கு வந்துடுத்தாம். அதனால ‘ஸுரபி’ அப்படின்னா வாசனையுள்ள பொருள் அப்படிங்கிற வார்த்தையும் உன்னுடைய பாதத்துக்கு பொருந்துது. இந்த மூணு பொருளிலேயும் உன்னுடைய பாதத்தையும் சுரபின்னு சொல்லலாம் அப்படிங்கறார் கவி.. வாசனையான பொருள்னும் சொல்லலாம் .. ஏன்னா தேவப் பெண்கள் நமஸ்காரம் பண்ணி, அவா தலையில இருக்கிற பூவுல இருக்கிற வாசனை உன்னுடைய பாதத்துக்குவந்துடுத்து.

‘அபீ⁴ஷ்டாநாம் தா³னாத்³ அநிஶமபி காமாக்ஷி நமதாம்’. நமஸ்காரம் பண்றவாளுக்கு ‘அபீ⁴ஷ்டாநாம் தா³னாத்³’ – கேட்ட வரங்களை எல்லாம், ஆசைபடறதை எல்லாம் கொடுக்கிறது. அதுவும் எப்படி? ‘அநிஶம்’ – கொடுத்துண்டே இருக்கு. ஒரு வாட்டி கொடுத்து சோம்பல் படறது இல்லை. ‘அஹர்நிஶம்’ – கொடுத்துண்டே இருக்கறதுனால.. காமதேனு கேட்டதை கொடுக்கும் அப்படிங்கிற மாதிரி சுரபின்னா காமதேனுங்கிற பொருளும், உன்னுடைய பாதத்துக்கு பொருந்தும் அப்படிங்கிறார்.

மூணாவது வரியில ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ – கங்கேலி, அசோகம்,காமகேலின்னு சில மரங்கள் இருக்காம். அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிண்டிருந்தாலோ, கட்டிண்டாலோ, காலால உதைச்சாலோ நன்னா பூக்கும் அப்படினு ஒரு ஐதீகம். அந்த மாதிரி அம்பாளுடைய பாதத்தினுடைய சம்மந்தம் – ‘ஸ்வஸங்கா³த்’.. ‘கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ – கங்கேலி மரத்தை நன்னா பூக்கச் செய்வதால், அம்பாளுடைய பாதம்.. சாதாரண சுமங்கலி பெண்கள் பாதம் பட்டாலே பூக்கும்னா.. ”நாரீ குலைக சிகாமணி:”அம்பாள். அம்பாளுடைய பாதம்பட்டு அந்த மலர் எவ்வளவு சந்தோஷம் பட்டு எவ்வளவு பூக்கும். அந்த மாதிரி அம்பாளுடைய பாதம் பட்டு இந்த மரம் பூக்கறதுனால, சாதாரண வசந்தகாலம் வந்தா இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சம் பூக்கும். அம்பாளுடைய பாத சம்பந்தத்துல நன்னா பூக்கறது.அதனாலயே உன்னோட பாதத்தை வசந்தகாலம்.. அதனால சுரபின்னு சொல்லலாம் அப்படினு

இந்த சுரபிங்கிற வார்த்தைக்கு மூன்று வித பொருள் இருக்கு. எல்லாமே அம்பாளுடைய பாதத்துக்கு பொருந்தும் அப்படீன்னு மூக கவி சொல்றார். மஹாபெரியவா இந்த மூணாவது வரியை எடுத்துண்டு அப்படி பெண்களுடைய பாதம் பட்டாலே மரங்கள் கூட பூக்கும்னா அப்பேற்பட்ட சுமங்கலிகள் நம்மளுடைய ஆத்துக்குள்ள வந்தா எவ்வளோ க்ஷேமம் ஏற்படும்! அதனால சர்வ தாம்பூலம் அப்படினு பாகுபாடு இல்லாமல் எல்லா சுமங்கலிகளையும் கூப்பிட்டு மங்கள பொருட்களையெல்லாம் கொடுக்கணும். அதுக்காகதான் நவராத்திரி வெச்சிருக்கா. அதனால அதை கொண்டாடனும். சக்தி வழிபாடு! அப்படினு பெரியவா பேசியிருக்கா. அந்த மாதிரி ஆத்துல கொலு வெச்சு பண்ணனும். என் ஆத்துக்காரி அதுமாதிரி கூப்பிட்டு கொடுத்தா. என் திருப்திக்கு நான் மூக பஞ்சசதி படிச்சேன். சில சுமங்கலிகள் எல்லாம் கேட்டு ஆசீர்வாதம் பண்ணினா. அப்படி ஒரு விதத்துல அவாளை திருப்தி பண்ணோம்னு எனக்கு ஒரு சந்தோஷம் ஆச்சு.

இன்னொரு ஸ்லோகம் 89ஆவது ஸ்லோகம். மந்தஸ்மித சதகத்துல

पुम्भिर्निर्मलमानसैर्विदधते मैत्रीं दृढं निर्मलां

लब्ध्वा कर्मलयं च निर्मलतरां कीर्तिं लभन्तेतराम् ।

सूक्तिं पक्ष्मलयन्ति निर्मलतमां यत्तावकाः सेवकाः

तत्कामाक्षि तव स्मितस्य कलया नैर्मल्यसीमानिधेः ॥ (மந்தஸ்மித சதகம் 89)

பும்பி⁴ர்நிர்மலமானஸைர்வித³த⁴தே மைத்ரீம் த்³ருʼட⁴ம் நிர்மலாம்

லப்³த்⁴வா கர்மலயம் ச நிர்மலதராம் கீர்திம் லப⁴ந்தேதராம் ।

ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலதமாம் யத்தாவகா: ஸேவகா:

தத்காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமாநிதே:⁴ ॥

அப்படின்னு ஒரு ஸ்லோகம். ‘நைர்மல்யஸீமாநிதி:⁴’ – உன் மந்தஸ்மிதத்தினுடைய ‘நைர்மல்யம்’ – வெண்மை.. பாற்கடலைப் போல.. அப்படி ஒருவெண்மையினுடைய எல்லையா இருக்கு உன்னுடைய மந்தஸ்மிதம். இதோட அநுக்ரஹத்துனால தான் உன்னுடைய பக்தர்களுக்கு – ‘பும்பி⁴ர் நிர்மலமானஸைர் வித³த⁴தே மைத்ரீம் த்³ருʼட⁴ம்’.. உன்னுடைய பக்தர்களுக்கு ‘நிர்மலமானஸை: பும்பி⁴ர்’ – நிர்மலமான மனசை உடைய மனுஷாளோட ‘மைத்ரீம் விதததே த்ருடம்’ – நல்ல த்ருடமான மைத்ரீம், நல்ல friendshipஐ நீ கொடுக்கற… ‘நிர்மலாம்’ – அந்த friendship ரொம்ப தூய்மையா இருக்கு

‘லப்³த்⁴வா கர்மலயம் ச நிர்மலதராம்’ – அவாளுடைய ‘கர்மலயம்’ அடைஞ்சு, அவாளுக்கு ‘நிர்மலதராம் கீர்திம் லப⁴ந்தேதராம்’ – அவாளுக்கு உயர்ந்த கீர்த்தியை கொடுக்கறது உன்னுடைய மந்தஸ்மிதம். அது எப்படி இருக்குன்னா, ரொம்ப தூய்மையான கீர்த்தியா இருக்கு.. கீர்த்தி வர்றது சுலபம்.. “அவன் நல்லவன் தான் இருந்தாலும்” அப்படின்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாது.. தூய்மையான அப்பழுக்கற்ற கீர்த்திங்கிறதுதான் பெரிய பாக்கியம். அந்த மாதிரி நீ கீர்த்தியை கொடுக்கற. நிர்மலாம், நிர்மலதராம், நிர்மலதமாம் அப்படின்னு சொல்லி comparative, superlativeல சொல்றார்.

‘ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலதமாம்யத்தாவகா: ஸேவகா:’ – உன்னுடைய சேவகர்களுக்கு நல்ல friends கொடுக்கற, நல்ல புகழை கொடுக்கற.. ‘ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலதமாம்’ -அவாளுடைய வாக்குல ரொம்ப தூய்மையான வார்த்தைகளை வரும்படி செய்றாய்.. அப்படின்னு ஒரு ஸ்லோகம். அப்படி அநுக்ரகம் பண்றே ன்னு சொல்றார். நல்லவாளுக்கு நாலு பேர் வேணும். சுக்ரீவன் பக்கத்துலயும் நாலு பேர் இருந்தா, விபீஷணனுக்கு நாலு பேர் இருந்தா, ராமருக்கு நாலு பேர்இருந்தா கஷ்ட காலத்துல. அப்படி இந்த உலகத்துல நம்ம இருக்கும்போது நம்முடைய தேவைகளை பூர்த்தி பண்றதுக்கு பகவான் ஒரு நாலு பேரைஅனுப்பறார். அந்த மாதிரி பக்தர்களுக்கு  இந்த உலகத்துல புகழ்ங்கிறது, இந்த உலகத்துல நிறைய பேரே நமக்கு வேண்டாம்.. நம்ம interdependent ஆ கொஞ்சம் பேரோட இருந்தா போறும். அப்படி நம்ம கிட்ட வரவா, நல்லவாளா இருக்கணும். அந்த வந்தவா.. இந்த நல்லபேர், கெட்ட பேர்ங்கிறது public spaceலஇருக்கிறது பேர் புகழ் இல்லை. இந்த கூட பழகறவாளால் தான் நமக்கு கெட்ட பேர் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அந்த மாதிரி இல்லாம இவாளுக்கும் நம்ம மேல ஒரு பிரியமும், நல்ல அபிப்ராயமும் இருக்கும்படியா.. நல்ல புகழும், ஏன்னா பக்கத்துல இருக்கிறவா தான், intimateஆ தெரிஞ்சவா தான் தப்பா பேசுவா.. அவா கிட்ட கூட நல்ல பேர் இருந்தா தான் உலகத்துல நல்ல பேர் எடுக்க முடியும். அப்படிப்பட்ட புகழும், அப்படி நல்ல பேர் இருக்கணும்னா நம்ம வாயில இருந்து வர்ற வார்த்தை தப்பான வார்த்தை வரக் கூடாது. அதுலதான் எல்லா problemமும் ஆரம்பிக்கும். அதுனால நம்ம வாயில ரொம்ப தூய்மையான வார்த்தைகளும், எல்லாத்தையும் அம்பாள் கொடுப்பா அப்படினு இந்த ஒரு ஸ்லோகம். அப்பேற்பட்ட அநுக்ரஹ க்ரந்தம்இது.

இந்த மூக பஞ்சசதி படிச்சதுனால அதுல நிறைய ஸ்லோகங்கள் ரொம்ப அனுபவிச்சிண்டு இருந்ததுனால அதுல இன்னும் ஒரு ஸ்லோகம் சொல்லிட்டு முடிச்சுடறேன்.

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-

कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी ।

सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी

कृपातिशयकिङ्करी मम विभूतये शाङ्करी ॥ (ஸ்துதி சதகம் 81)

மஹாமுனிமனோனடீ மஹிதரம்யகம்பாதடீ-

குடீரகவிஹாரிணீ குடிலபோ³த⁴ஸம்ஹாரிணீ ।

ஸதா³ ப⁴வது காமினீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமினீ

க்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூ⁴தயே ஶாங்கரீ ॥ 81

அப்படினு ஒரு ஸ்லோகம். இந்த ஸ்துதி சதகத்துடைய கடைசி இருபது ஸ்லோகங்களை படிச்சா நமக்கு சங்கீதம் தெரியலையேங்கிற குறையே இருக்காது. ரொம்ப நன்னா பாட்டு பாடினா, பாட்டு கேட்டா என்ன ஆனந்தமா இருக்குமோ அந்த மாதிரி இருக்கும். அதுல ஒரு ஸ்லோகம் இது.

‘மஹாமுனிமனோனடீ’ – மஹாமுனிவர்கள்.. மஹாபெரியவானு வெச்சுண்டுற வேண்டியதுதான்.. மஹாபெரியவா போன்ற ரிஷிகளுடைய ‘மனோனடீ’ -மனசுல அம்பாள் வந்து நர்த்தனம் பண்றா ன்னு அர்த்தம். ‘மஹித ரம்ய கம்பாதடீ குடீரக விஹாரிணீ’ – மஹிமை பொருந்தியதும், ரம்யமானதுமான கம்பாநதி தடத்தில்.. கரையில் உள்ள ‘குடீரகம்’ – ஒரு கிருஹம்.. ஒரு கோவில்.. அதுல விஹாரிணீ – வசிப்பவள். ‘குடில போ³த⁴ ஸம்ஹாரிணீ’ – நம்முடையகெட்ட புத்தியை சம்ஹாரம் பண்ணிடுவா. புத்திங்கறது ஒரு அநுக்கிரஹம், ஆனா perversion கெட்ட புத்திங்கறது ஒரு curse.. அந்த ஒரு சாபம் இல்லாதபடிக்கு நமக்கு நல்ல புத்தி கொடுப்பா – ‘குடிலபோ³த⁴ஸம்ஹாரிணீ’ ‘ஸதா³ ப⁴வது காமினீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமினீ’ – உடம்பு படைத்த எல்லாருக்கும் ஸ்வாமி யாருன்னா, எல்லா ஜீவராசிகளுடைய உடம்புக்கும் யாரு தலைவி? யாரு உடையவர்? அப்படின்னா அம்பாள் தான். ‘காமினி’ -அப்படிங்கிறது ஒரு நாமா, ‘மம சாங்கரீ’ – சங்கரனுடைய மனைவின்னு ஒரு நாமாவளி. ஸதா³ மம விபூ⁴தயே ப⁴வது – எங்களுக்கு எல்லா விதமான செல்வங்களையும் அளிப்பவளாக அம்பாள் ஆகட்டும். ‘க்ருபாதிசய கிங்கரீ’ – இந்த க்ருபை எல்லை மீறி போகும் இல்லையா, அந்த க்ருபா அதிசயம், அதற்கு அம்பாள் அடிமை – ‘க்ருபாதிசய கிங்கரீ’. அம்பாள் எப்போ எங்கே அநுக்கிரஹம் பண்ணுவான்னா, க்ருபை ஜாஸ்தியானா அந்த இடத்துலஅநுக்கிரஹம் பண்ணிடுவா, ஒரு இடத்துல க்ருபை ஏற்பட்டா அங்க அம்பாள் அநுக்கிரஹம் பண்ணிடுவா. அப்படி – ‘க்ருபாதிசய கிங்கரீ மம விபூ⁴தயே சாங்கரீ’. இது ஸம்ஸ்க்ருதத்துல இருந்தாலும் எவ்வளவு எளிமையா பொருள் கொள்ள முடியறது, படிக்கும் போதே புரியற மாதிரி இருக்கு, காமாக்ஷி அநுக்கிரஹத்துனால, அப்டிங்கிறதுக்காக இந்த ஸ்லோகத்தை சொன்னேன்.

நமக்கும் காமாக்ஷி எல்லா வித அநுக்கிரஹமும் பண்ணட்டும்.

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी-

कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी ।

सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी

कृपातिशयकिङ्करी मम विभूतये शाङ्करी ॥

நம: பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 21வது ஸ்லோகம் பொருளுரை”

நமஸ்காரங்கள் அண்ணா 🙏
ஆஹா! என்ன ஒரு அருமையான ஒப்பீடு.
சிவானந்தலஹரியுடன் மூக பஞ்சதி.
நமக்கு கடவுள் வழங்கிய மனம் என்ற மாயப் பொருளை எந்த விதத்திலும் வளைத்து எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம்.
அந்த மனம் என்ற பொருளில் (ஸ்படிக நிறமாகிய) கூடாரம் அமைத்து, பரமேஸ்வரா! வந்து அமர்ந்து அருள வேண்டும்.
மூக பஞ்சஷதி, மூன்று ஸ்லோகங்களில் வரும் ஒற்றுமை. மனதில் அம்பாளையும்,பரமேஸ்வரனையும் அமர்ந்து அருள வேண்டும்.
அம்பாளின் மந்தஹாஸம், பரமேஸ்வரனின் வெண்மையான கங்காதாரி, வெண்மையான கபாலதாரி,வெண்மையான பஸ்மதாரி இவற்றுடன் ஒப்புமை அழகு, மற்றும்
நவராத்திரி மஹிமை.
காமாக்ஷியின் பாதத்தில் நமஸ்கரிக்கும் தேவ பெண்கள் தலை மலரினல் உண்டாகும் ஸுகந்தம், பக்தர்கள் வேண்டுவன வழங்கும் காமதேனு, மலர்கள் மலராத மரங்கள் அம்பாளின் பாதம் பட்டு வசந்த காலமாக பூத்துக் குலுங்கும் அழகிய ஒலி படம்.

அம்பாளின் மந்தஸ்மிதம் நமக்கு நல்ல சுற்றமும், நண்பர்களையும் அளிக்கும்.
இது ” தனத்தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வரியா மனந்தரும்,தெய்வ வடிவம் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் ” அபிராமி அந்தாதியை நினைவு கூறுகிறது. அம்பாளை வணங்கினால் நல்ல சுற்றம் கண்டிப்பாக அமையும்.
ஸ்துதி ஷதகம் ஸ்லோகம் மிக அருமையானது , இதை படிக்கும் போது தனி உற்சாகம் பிறக்கும்.
இறுதியில் நம் மனமெனும் தாமரையை காமாக்ஷியின் மந்தஹாஸம் மலர செய்து அதை அந்த சிவசக்திக்கு சமர்ப்பணம் செய்வோம். நன்றி 🙏.
🌺🌺

மஹா பெரியவளை, நம் மனமெனும் கூடாரத்தில் இளைப்பாற சொல்லிய இடம் மிகவும் மனதை இளகி ஓடுமபடி செய்கிறது. அம்பாளின் மஞ்ஜீரத்தில் உள்ள மணிகள் ஒளி தீபமாக விளங்குகிறது.
எத்தனை விஷயங்கள் மிக மிக அழகு.
ஒவ்வொன்றும் ஒரு குட்டி (episode).
மேலும் பல அரிய விஷயங்கள் அறிய காத்திருப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.