Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 29வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 29 தமிழில் பொருள் (8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 29)

சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் ‘த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி’ ங்கற ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

இந்த திங்கள்கிழமை கணுப் பொங்கல் அன்னிக்கு, ஸ்வாமிகளோட ஆராதனை பழுவூர்ல விசேஷமா கொண்டாடினோம். அப்ப இந்த முந்தின ஸ்லோகம் ஞாபகம் வந்தது. ‘ஸாரூப்யம் தவ பூஜநே’… ஆராதனை அன்னிக்கு ஸ்வாமிகளோட அதிஷ்டானத்துல, அவர் லிங்காகாரமா இருக்கார். அங்க விசேஷமா ருத்ர சமகம், உபநிஷத் எல்லாம் சொல்லி ஒரு அபிஷேகம் பண்ணுவா, பூஜை பண்ணுவா. அந்த பூஜை, ‘ஸாரூப்யம் தவ பூஜநே’

ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே’ – பரமேஸ்வரா, மஹாதேவா அப்படீன்னு சங்கீர்த்தனம் பண்றது ஸாமீப்யம். அங்க வந்தவா எல்லாம், அவா அவா ஸ்வாமிகள் சொல்லி கொடுத்த நாராயணீயம் முழுக்க ஒருத்தர் படிப்பார். நான் மூக பஞ்சசதி பாராயணம் பண்ணி முடிச்சேன். இராமாயணம் படிச்சேன். கமலா மாமி பஞ்சரத்ன க்ருதி முழுக்கப் பாடினா. அந்த மாதிரி பகவானுடைய சங்கீர்த்தனம், ஸ்வாமிகளுக்கு வேற அதுதான் ரொம்ப இஷ்டம். அதுனால கார்த்தால இருந்து ராத்திரி அன்னிக்கு பகவானுடைய  சங்கீர்த்தனம் நடந்துண்டே இருந்தது. அது சாமீப்யம்

‘ஶிவப⁴க்தி து⁴ர்யஜநதா ஸாங்க³த்ய ஸம்பா⁴ஷணே ஸாலோக்யம்’- வந்திருந்தவா எல்லாரும் ஸ்வாமிகளுடைய அத்யந்த பக்தர்கள். அந்த மாதிரி அவாளோட கூடி ஸ்வாமிகளைப் பத்தி பேசி, சுந்தரகுமார், அவா பெரியவா பேசும்போது, பாகவதத்துல இருந்து ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி, எப்படி ஸ்வாமிகள் இந்த ஸம்ஸார ஸாகரத்தை தாண்டினாரோ, அந்த மாதிரி நம்மையும் தாண்டுவிக்கணும், அப்படீன்னு நாம இந்த ஆராதனை தினத்துல வேண்டிக்கணும்னு சொன்னார். அந்த மாதிரி பெரியவாள எல்லாம் பாக்கறது, அங்க அந்த ஸ்வாமியை அலங்காரம் பண்ணி, மஹாபெரியவாளோட ஸ்வாமிகள் இருக்கிற மாதிரி ஒரு சித்திரத்தையும், ஸ்வாமிகளோட விக்ரஹத்தையும் அழகா அலங்காரம் பண்ணி, ஊருக்குள்ள மேள தாளத்தோட புறப்பாடு பண்ணுவா. பின்னாடி திருப்புகழ் பஜனை, வேத கோஷம், ஹரி பஜனை எல்லாம் எப்பவும்போல நன்னா நடந்தது. அதெல்லாம் பார்க்கும்போது ஸாலோக்யம்னு தோணித்து.

‘சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந் க்ருʼதார்தோ²Sஸ்ம்யஹம்’ அப்படீன்னு, ஸ்வாமிகளுடைய மஹிமையை நினைக்கும்போது ரொம்ப க்ருதார்த்தாளா ஆனோம்னு நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப் பட்டோம்.

இன்னிக்கு ஸ்லோகம்,

त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं

त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।

वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां

शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥

த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்

த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।

வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்

ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம். ஸ்வாமிகள் தன்கிட்ட வர, சிவ பக்தர்களா இருக்கக் கூடியவா, நாகராஜ மாமான்னு ஒருத்தர் இருந்தார். அவர் பழுவூர்க்காரர். அதனால தான் பழுவூர்ல அதிஷ்டானமே அமைஞ்சிருக்கு. அந்த நாகராஜா மாமா கிட்ட, பெரியவாகிட்ட இதை சொல்லி வேண்டிகோங்கோன்னு அப்படீன்னு சொல்வார். ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ – பெரியவாதான் லோக குரு. அவர் தான் பரமேஸ்வரன். அவர் கிட்ட “எனக்கு மனசுக்கு சௌக்கியமான உபதேசத்தை பண்ண வேண்டும்”, அப்படீன்னு வேண்டிக்கோங்கோன்னு சொல்வார். நாகராஜ மாமா ஒவ்வொரு வாட்டியும் ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணும் போதும் இந்த ஸ்லோகத்தை சொல்வார். அதுனால எங்களுக்கு எல்லாம்  இந்த ஸ்லோகம், ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ ங்கிறது நிறைய காதுல விழுந்திருக்கு.

என்கிட்டே ஸ்வாமிகள் பெரியவாளை “குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி”ன்னு நாலு நமஸ்காரம் பண்ணு, அப்படீன்னா, நான் ஸ்வாமிகளைத் தான் நாலு நமஸ்காரம் சொல்லி பண்ணுவேன். எனக்கு குருமூர்த்தி ஸ்வாமிகள் தான். அந்த மாதிரி இங்கயே, நாங்க எல்லாம் ஸ்வாமிகள் கிட்டயே பெரியவாளைப் பார்த்தோம்.

இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் சொல்றேன். ‘த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம்’ – ரொம்ப சிறந்ததான உங்களுடைய பாதத் தாமரைகளை பூஜிக்கிறேன். ‘த்வாம் சிந்தயாமி அந்வஹம்’ – எப்பொழுதும் இடையறாது உங்களையே சிந்தனை பண்றேன். ‘த்வாம் ஈஶம் ஶரணம் வ்ரஜாமி’ – நீங்கள்தான் எங்களுக்கு ஈசன், தலைவர். உங்களை சரணடைகிறேன்.

‘வசஸா த்வாமேவ யாசே விபோ⁴’ – என்னுடைய வாக்குனால உங்க கிட்ட மட்டும் தான் நான் வேண்டிக்கப் போறேன். ‘விபோ⁴’- எங்கும் நிறைந்தவரே! ஈசா! உங்க ஒருத்தர் கிட்டதான் நான் வேண்டிக்கறேன். இது ரொம்ப முக்கியம். பகவான்கிட்ட நாம ஒரு குரு, ஒரு தெய்வம், ஒரு வழிபாடு, அந்த ‘ஏக பக்திர் விசிஷ்யதே’ அப்படீன்னு ஒரு trustஐ ஓரிடத்துல வைக்கணும். சலிக்கவே கூடாது. அந்த மாதிரி இருக்கும் போது தான்,  பின்னாடி வர்ற அந்த பிரார்த்தனை பண்றதுக்கே நமக்கு யோக்யதை வர்றது. ‘த்வாமேவ யாசே விபோ⁴’ – உன்னையே வேண்டிக்கறேன் பகவானே, அப்படீன்னு ஓரிடத்துல மனசு வெச்சா இந்த பிரார்த்தனை பண்ணலாம்.

என்னன்னா, ‘வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம்’ – உங்களுடைய கண்களிலிருந்து, ஹே ஸம்போ! உங்களுடைய கருணையோடு கூடிய கண் பார்வையை  என்மேல் போடணும். உங்களுடைய கருணையோடு கூடிய அந்த நயன தீக்ஷையை எனக்குத் தரணும் அப்படீன்னு வேண்டிக்கறார். சம்போங்கிறார். எல்லாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர். அவருடைய கடாக்ஷம் கிடைச்சுடுத்துன்னா, நமக்கு அதுக்கப்பறம் பேரானந்தம்தான்.

‘லோக கு³ரோ’ – உலகத்துக்கெல்லாம் குரு. ஜகத்குரு பரமேஸ்வரன் தான். ‘மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ – என்னோட மனசுக்கு சௌக்யமான உபதேசம் பண்ணு அப்படீன்னு சொல்றார். இப்படி பண்ணா நிச்சயமா குருவினுடைய அநுகிரஹம் கிடைக்கும். அன்னிக்கு மூக பஞ்சசதியை நான் படிச்சு முடிச்ச உடனே, அங்க ஸ்வாமிகள் அதிஷ்டானதுல பூஜை பண்ணிண்டிருக்கற பாலு மாமா, “உனக்கு ஸ்வாமிகளோட கடாக்ஷம் இருக்கு குழந்தே! நன்னா படிச்சே! அவருடைய அநுகிரஹத்துனாலதான் நீ இந்த மூக பஞ்ச சதி இராமாயணம் எல்லாம் விடாமல் படிக்கறே!”, அப்படீன்னு சொன்னார். அந்த மாதிரி (ஆசார்யாள் பிரார்த்தனை பண்ற மாதிரி) கடாக்ஷமும், நல்லவார்த்தையும் வேணும்னு வேண்டிண்டா உடனே கிடைக்கறது

அந்த வார்த்தை கிடைச்சாச்சுன்னா,

आस्ते देशिक चरणं निरवधिरास्ते तदीक्षणे करुणा |

आस्ते किमपितदुक्तं किमत: परमस्ति जन्म साफल्यम् ||

ஆஸ்தே தேசிக சரணம் நிரவதிராஸ்தே ததீக்ஷணே கருணா

ஆஸ்தே கிமபிததுக்தம் கிமத: பரமஸ்தி ஜென்ம ஸாபல்யம் ||

அப்படீன்னு சொன்னார். ‘ஆஸ்தே தேசிக சரணம்’ – நமஸ்காரம் பண்றதுக்கு என்னோட தேசிகனுடைய குருவினுடைய சரணங்கள் இருக்கு. அவருடைய கடாக்ஷத்துல என்மேல கருணை இருக்கு, அவர் சொன்ன சில வார்த்தைகள் இருக்கு. ‘கிமத: பரமஸ்தி ஜென்ம ஸாபல்யம்’ – ‘இதுக்கு மேல ஜன்ம சாபல்யம் வேற ஒண்ணு இருக்கா!’ அப்படீங்கறார். அந்த மாதிரி குருகிட்ட ஏகபக்தியா இருந்து வேண்டிண்டா நிச்சயமா கடாக்ஷம் கிடைக்கும். நிச்சயமா நல்ல வார்த்தை கிடைக்கும். அதை பிடிச்சிண்டா, அதுக்குமேல ஒண்ணுமே வேண்டாம் அப்படீங்கிறது இந்த ஸ்லோகத்துடைய தாத்பர்யம்.

த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்

த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।

வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்

ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥

ஆஸ்தே தேசிக சரணம் நிரவதிராஸ்தே ததீக்ஷணே கருணா

ஆஸ்தே கிமபித துக்தம் கிமத: பரம இதி ஜென்ம ஸாபல்யம் ||

இந்த இரண்டு ஸ்லோகத்தையும் சேர்த்து சொல்லணும்னு தோன்றது.

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை >>

7 replies on “சிவானந்தலஹரி 29வது ஸ்லோகம் பொருளுரை”

I was thinking swamigal aradhanai is in maasi month.
It is not mentioned in pambu panchagam also.
It will be helpful if you can publish in you your blog before hand for interested people to attend.

Your are doing selfless service and I am seeing every day your postings and particularly sivandanda lahari tamil meaning is amazing

Request you sir to start at the earliest

I am extremely grateful for your blogs. I feel, you are speaking to me solely to me.
Please continue your service for people like us.
I add more to my meager Sanskrit knowledge from your posts

ஆனந்தமான அனுபவ உணர்ச்சி ஸ்வாமிகளின் ஆராதனை வைபவங்கள் பற்றிப் படிக்கையில். நீங்கள் எல்லாம் கொடுத்து வெச்சவா அதெல்லாம் நேரில் கண்டு அனுபவிக்க!
ஸ்லோகங்களைத் தக்கவிதமாய் எடுத்துப் பகிர்ந்தது ஆனந்தம்!
ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்ற முக்தியின் இலக்கணங்கள் ஆசார்யாள் இந்த ஸ்லோகத்தில் வர்ணித்திருப்பது எம் போன்ற சாதாரண ஜனங்களுக்கு பக்தி இன்னும் நன்றாகச் செய்யலாமோ என்ற உந்துதலை அளிக்கிறது..ஸ்வாமிகளுக்கு நடந்த ஆராதனை இவை எல்லாம் கலந்த ஓர் ஆராதனை! பரமேஸ்வர பூஜையால் ஸாரூப்ய முக்தியும், நாம ஸங்கீர்த்தனத்தால் ஸாமீப்ய முக்தியும், சிவபக்தர்கள் சகவாசத்தாலும், ஸம்பாஷணத்தாலும் ஸாலோக்ய முக்தியும், ஸ்ரீ பரமேஸ்வர த்யானத்தால் ஸாயுஜ்ய முக்தியும் அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்வாமிகள் அருள்வார் என்பதில் ஐயமில்லை!!!
ஏ பரமேஸ்வரா எங்கும் நிறைண்தவரே, தங்களையே நினைந்து, சரணாகதி அடைந்த்து ,தங்களிடமே ப்ரார்த்திக்கிறேன். சாக்ஷூஷ தீக்ஷ்யை எனக்கு அளிக்க வேண்டும் என்று ஆசார்யாள் இங்கு ப்ரார்த்திக்கிறார் அதாவது கடைக்கண் பார்த்த மஸ்த்திரத்தில் சிஷ்யர்களுக்கு அறிவும் சித்தியும் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்வது!
இது ஸ்வாமிகள் ஆராதனையில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிடைக்கும் என்பது உறுதி,!
அருமையான விளக்கம் ! எங்கள் பாக்யம் !
ஜய ஜய ஜகதம்பசிவே

Leave a Reply to VenkiteswaranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.