காமாக்ஷி தேவியும் பௌர்ணமி சந்திரனும்


(ரொம்ப நாட்களுக்கு முன்னால்) இன்னிக்கு கார்த்தால ஒரு 5:30 மணிக்கு முழிப்பு கொடுத்தது. எழுந்த உடனே ரூம் ரொம்ப பளிச்சுன்னு இருக்கிற மாதிரி இருந்தது! என்னடான்னு பார்த்தா, ஜன்னல் வழியா பூரண சந்திரன் தெரிஞ்சுது. இன்னிக்கு பிரதமை சந்திரன் தான். ஆனா முழுக்க பூர்ண சந்திரன் மாதிரியே இருந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜன்னல் வழியே பார்க்கும்போது எதிர்ல நிறைய கட்டடம்லாம் தான் இருக்கும். ஒரு சின்ன gap இருக்கும். அது வழியா பூர்ண சந்திரனை, முதல்ல கண்ணை திறந்த உடனே பார்த்தோமேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

இந்த இடைவெளியில் சந்திர தரிசனம்

உடனே மூக பஞ்சசதில சந்திரன் பத்தி வர ஸ்லோகங்கள்னு யோசிச்சேன். ஒரு அஞ்சு ஸ்லோகங்கள் ஞாபகம் வந்தது. அதை உங்களோட பகிர்ந்துக்கறேன்.

जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते ।
जय जय महेशदयिते जय जय चिद्गगनकौमुदीधारे ॥ आर्या शतकम् 100॥

ஜய ஜய ஜக³த³ம்ப³ ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்³ரிஸுதே ।

ஜய ஜய மஹேஶத³யிதே ஜய ஜய சித்³க³க³ன கௌமுதீ³தா⁴ரே ॥ 100 ॥

இதுல ‘சித்³ க³க³ன கௌமுதீ³ தா⁴ரே’ – அப்படீன்னு இருக்கு. ‘கௌமுதீ³’ன்னா சந்திரன். ‘சித்³ க³க³ன’ – ஞான வானத்தில் விளங்கும்  சந்திரனுடைய ‘தா⁴ரை’யைப் போல காமாக்ஷி இருக்கான்னு சொல்றார். இந்த ஸ்லோகத்துல தான், ‘ஜக³த³ம்ப³’ – உலகத்துக்கே அம்மாவாவும், ‘அத்³ரி ஸுதா’ – மலை மகளாகவும், ‘மஹேஶ த³யிதா’ – மகேசனுடைய மனைவியாகவும் விளங்கும் காமாக்ஷி நம்முடைய எல்லா ஆசைகளையும் பூர்த்தி பண்றா, ஞானத்தையும் கொடுக்கறா. அதனால நம்மளுடைய வாழ்க்கைல அம்மாவாகவும், மனைவியாகவும், பெண்ணாகவும் எல்லா வடிவத்துலேயும் அம்பாளை வழிபடணும்னு எனக்கு தோணித்து, இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். அப்படி பண்ணா, இந்த உலகத்துலேயும் சந்தோஷமும், உயர்ந்த ஞானமும் கிடைக்கும்னு தோணித்து. இந்த ஸ்லோகத்துல சந்திரன் reference வர்றது. இது 100 வது ஸ்லோகம் – ஆர்யா சதகம்.

அடுத்தது பாதாரவிந்த சதகத்துல,

सुराणामानन्दप्रबलनतया मण्डनतया
नखेन्दुज्योत्स्नाभिर्विसृमरतमःखण्डनतया ।
पयोजश्रीद्वेषव्रतरततया त्वच्चरणयोः
विलासः कामाक्षि प्रकटयति नैशाकरदशाम् ॥ पादारविन्द  शतकम् 31 ||

ஸுராணாமானந்த³ப்ரப³லனதயா மண்ட³னதயா

நகே²ந்து³ஜ்யோத்ஸ்னாபி⁴ர்விஸ்ருʼமரதம:க²ண்ட³னதயா ।

பயோஜஸ்ரீத்³வேஷவ்ரதரததயா த்வச்சரணயோ:

விலாஸ: காமாக்ஷி ப்ரகடயதி நைஶாகரத³ஶாம் ॥ 31 ॥

ன்னு இருக்கு. ‘நைஶாகர:’ – ‘நிஶாகர:’ன்னா சந்திரன். ‘திவாகர:’ – ‘திவா’ன்னா பகல். பகலை உண்டாக்குபவன் சூரியன். ‘நிஶா’-இரவை உண்டாக்குபவன் சந்திரன். அவன் உண்டாக்கறதில்லை, அப்படீன்னு கவிகளோட வார்த்தை அது.

இந்த ஸ்லோகத்தோட அர்த்தம், அம்பாளுடைய சரணம் சந்திரனை போல இருக்குன்னு சொல்றார். முதல்ல சந்திரனுக்கு எப்படி பொருந்தும்னு இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் சொல்றேன். அப்புறம் சரணத்துக்கு சொல்றேன். ‘ஸுராணாம் ஆனந்த³ ப்ரப³ல னதயா’ – தேவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்குவதாலும், சந்திரன் அமிர்த மயமா இருக்கறதுனால தேவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கறான். தேவர்களுக்கு அமிர்தம் பிடிக்கும். ‘மண்ட³னதயா’ – அலங்காரமா இருக்கான். தேவர்களுக்குள்ள ரொம்ப அழகானவன் சந்திரன். ‘நகே²ந்து³ ஜ்யோத்ஸ்னாபி⁴: விஸ்ருʼமர தம: க²ண்ட³ னதயா’ – சந்திரன் இருட்டைப் போக்கறான். இங்க ‘தம: க²ண்ட³ னதயா’ – இருட்டை கண்டனம் பண்றது. வெளிச்சம் கொடுக்கறது. ‘பயோஜ ஸ்ரீ த்³வேஷ வ்ரத ரத தயா’ – ‘பயோஜம்’னா தண்ணில பிறப்பது தாமரை. தாமரைகிட்ட த்வேஷம் பண்றதுன்னு ஒரு வ்ரதமா வெச்சிண்டிருக்கு. ஏன்னா சந்திரன் வந்தா தாமரை வாடிடும். சூரியன் வந்தா மலரும். அதை வெச்சிண்டு ‘பயோஜ ஸ்ரீ த்³வேஷ வ்ரத ரத தயா த்வச்சரணயோ: விலாஸ: காமாக்ஷி ப்ரகடயதி நைஶா கரத³ஶாம்’ – இப்படி சந்திரனாட்டம் இருக்குன்னு சொல்றார்.

காமாக்ஷிக்கு வரும்போது ‘ஸுராணாம் ஆனந்த³ ப்ரப³ல னதயா’ – நமஸ்காரம் பண்ற தேவர்களுக்கு எல்லாம் ஆனந்தத்தை கொடுக்கறது காமாக்ஷியினுடைய பாதம். ‘மண்ட³னதயா’ – தேவர்களுக்கு தலைமேல ஒரு அலங்காரம் போல இருக்கு. அவா நமஸ்காரம் பண்றதால ‘மண்ட³னம்’னா அலங்காரம். தலைல முடி அந்த மாதிரி ஒரு அலங்காரம், அப்படீன்னு ஒரு அர்த்தம். ‘நகே²ந்து³ ஜ்யோத்ஸ்னாபி⁴:’ – அம்பாளுடைய சரணத்துல இருக்கிற நகம் இந்து போல இருக்கு. சந்திரனைப் போல இருக்கு. அதுல இருந்து கொட்டற அந்த நிலவுக்கு ‘ஜ்யோத்ஸ்னா’ன்னு பேரு. ‘ஜ்யோத்ஸ்னாபி⁴: விஸ்ருʼமர தம: க²ண்ட³ னதயா’ – இங்க ‘தமஸ்’ங்கிறதுக்கு அஞ்ஞானம். நகத்துல இருந்து வெளி வர்ற அந்த நிலவு போன்ற ஒளியினால நமஸ்காரம் பண்றவாளுடைய அஞ்ஞானத்தை கண்டனம் பண்ணிடறா. போக்கிடறா. ‘பயோஜ ஸ்ரீ த்³வேஷ வ்ரத ரத தயா’ – அப்படீங்கிறதுக்கு, அம்பாளுடைய சரணம் அவ்ளோ அழகா இருக்கு. ‘பயோஜ ஸ்ரீ’ – தாமரையுடைய அழகை த்வேஷம் பண்றது. அதாவது, அதோட போட்டி போட்டுண்டு அம்பாளுடைய சரணம் ரொம்ப அழகா இருக்கு அப்படீன்னு அர்த்தம். இப்படி அம்பாளோட சரணமும், ‘நிஶாகர:’ –  சந்திரனும் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

அடுத்தது ஸ்துதி சதகத்துல,

राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता
मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् ।
श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सताम्
एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥ स्तुति शतकम् 11॥

ராகாசந்த்³ரஸமானகாந்திவத³னா நாகாதி⁴ராஜஸ்துதா

மூகாநாமபி குர்வதீஸுரது⁴னீ நீகாஶவாக்³வைப⁴வம் ।

ஸ்ரீகாஞ்சீநக³ரீவிஹாரரஸிகா ஶோகாபஹந்த்ரீ ஸதாம்

ஏகா புண்யபரம்பரா பஶுபதேராகாரிணீ ராஜதே ॥ 11 ॥

ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி

இதுக்கு நிறைய வாட்டி நான் அர்த்தம் சொல்லியிருக்கேன். இதுல ‘ராகாசந்த்³ர ஸமான காந்தி வத³னா’ – பௌர்ணமி சந்திரன் போன்ற காந்தி கொண்ட அம்பாளுடைய வதனம். இந்த ஸ்லோகம் சந்திரனுக்கு ஸ்துதி சதகத்துலேர்ந்து.

கடாக்ஷ சதகத்துல 97 வது ஸ்லோகத்துல,

यावत्कटाक्षरजनीसमयागमस्ते
कामाक्षि तावदचिरान्नमतां नराणाम् ।
आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब
संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥ कटाक्ष शतकम् 97॥

யாவத்கடாக்ஷரஜனீஸமயாக³மஸ்தே

காமாக்ஷி தாவத³சிரான்னமதாம் நராணாம் ।

ஆவிர்ப⁴வத்யம்ருʼததீ³தி⁴திபி³ம்ப³மம்ப³

ஸம்வின்மயம் ஹ்ருʼத³யபூர்வகி³ரீந்த்³ரஶ்ருʼங்கே³ ॥ 97 ॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஸ்லோகம். ஸ்வாமிகள், இதை ஸந்நியாசம் வாங்கிண்ட பின்ன, எனக்கு ஞானம் அடையறதுக்கு ஏதாவது ஒரு ஸ்லோகம் சொல்லணும்னு சொல்லி, இதை mark பண்ணிண்டு, தினம் மூணு வாட்டி இதைப் படிப்பார்.

‘யாவத்’- எதுவரையில், ‘கடாக்ஷ ரஜனீ ஸமய:’ – அம்பாளுடைய கடாக்ஷம் என்ற இரவு வேளை  ‘ஆக³மஸ்தே’ – ‘ஆக³ம:’ அது எப்ப வருமோ அதுவரைக்கும், ‘காமாக்ஷி தாவத்³’ – அதுவரையில், ‘அசிராத்’ –  இடையறாமல் ‘னமதாம் நராணாம்’ – அதுமாதிரி தெய்வத்தை வழிபடணும்ங்கிறது எப்ப வரைக்கும் பண்ணனும்னா, ஞானம் அடையற வரைக்கும் அம்பாளுடைய வழிபாடு பண்ணிண்டே இருக்கணும்! அது மாதிரி விடாம யாரு நமஸ்காரம் பண்ணிண்டே இருக்காளோ அவாளுடைய ‘ஹ்ருʼத³ய பூர்வ கி³ரீந்த்³ர ஶ்ருʼங்கே³’ – ‘ஹ்ருʼத³யம்’னா மனசு. ‘பூர்வம்’னா கிழக்கு. ‘கி³ரீந்த்³ர ஶ்ருʼங்கே³’ – கிழக்கிலே இருக்கக் கூடிய மனமாகிய சிகர முகட்டில் ‘ஸம்வின்மயம்’ – ஞானமயமான ‘அம்ருʼததீ³தி⁴தி’ – சந்திரன். ‘ஆவிர்ப⁴வதி அம்ப³’- ‘யார் உன்னை விடாம நமஸ்காரம் பண்ணிண்டிருக்காளோ அவாளுடைய மனசுல ஞானம்ங்கிற சந்திரிகை உதயமாகும்’ அப்படீன்னு ரொம்ப அழகான ஸ்லோகம்.

அடுத்தது மந்தஸ்மித சதகத்துல 72 வது ஸ்லோகம். இதுக்கு முன்னாடி  மந்தஸ்மிதம் 63ல ‘அம்மா! உன்னுடைய மந்தஸ்மிதத்தை சந்திரிகைன்னு சொல்றாளே! ஆனா, என் மனசுல இருக்கிற இருட்டும் போகமாட்டேங்கறது! தாபமும் போகமாட்டேங்கறதே!’ அப்படீன்னு 63ல சொன்னார். அதை counter பண்ணி அப்படி ஒரு spiritual pathல அந்த மாதிரி ஒரு கலக்கம் வரத்தான் செய்யும். எனக்கு இன்னும் ஒண்ணுமே தெரியலையேன்னு. ஆனா, உடனே அந்த ஒளி கிடைக்கும். அம்பாளுடைய தரிசனம் கிடைக்கும்ங்கிற மாதிரி பின்னாடியே இந்த 72வது ஸ்லோகம்.

ज्योत्स्ना किं तनुते फलं तनुमतामौष्ण्यप्रशान्तिं विना
त्वन्मन्दस्मितरोचिषा तनुमतां कामाक्षि रोचिष्णुना ।
सन्तापो विनिवार्यते नववयःप्राचुर्यमङ्कूर्यते
सौन्दर्यं परिपूर्यते जगति सा कीर्तिश्च सञ्चार्यते ॥ मन्दस्मित शतकम् 72॥

ஜ்யோத்ஸ்னா கிம் தனுதே ப²லம் தனுமதாமௌஷ்ண்யப்ரஶாந்திம் வினா

த்வன்மந்த³ஸ்மிதரோசிஷா தனுமதாம் காமாக்ஷி ரோசிஷ்ணுனா ।

ஸந்தாபோ விநிவார்யதே நிஜவச:ப்ராசுர்யமங்கூர்யதே

ஸௌந்த³ர்யம் பரிபூர்யதே ஜக³தி ஸா கீர்திஶ்ச ஸஞ்சார்யதே ॥ 72 ॥

ரொம்ப hope கொடுக்கிற ஒரு ஸ்லோகம். ‘ஜ்யோத்ஸ்னா கிம் தனுதே ப²லம் தனுமதாம் ஒளஷ்ண்ய ப்ரஶாந்திம் வினா’ -சந்திரிகை வந்துடுத்துன்னா உஷ்ண ப்ரசாந்தி ஏற்படத்தானே செய்யும்! சந்திரன் வந்துடுத்துன்னா வெய்யில்னால ஏற்பட்ட அந்த தாபம் போயிடுமே! அப்படீன்னு சொல்றார். ‘த்வன் மந்த³ஸ்மித ரோசிஷா தனுமதாம் காமாக்ஷி ரோசிஷ்ணுனா’ – உன்னுடைய மந்தஸ்மிதம் என்ற ஒளி ஒருத்தனுடைய  மனசுல வந்த உடனே, ‘ஸந்தாபோ விநிவார்யதே’ – எல்லா சந்தாபங்களும் போயிடும். ‘நிஜவச: ப்ராசுர்யம் அங்கூர்யதே’ – அவனுக்கு நல்ல வாக்கு வரும், ‘ஸௌந்த³ர்யம் பரிபூர்யதே’ – அழகு வரும். ‘ஜக³தி ஸா கீர்திஶ்ச ஸஞ்சார்யதே’ – அவனுக்கு நல்ல வாக்கும் நல்ல குணங்களும் இருந்து உலகத்துல நல்ல பேரும் வரும் அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம்.

இன்னிக்கு இந்த சந்திர தரிசனம் கிடைச்சதுனால, அம்பாள் மேல இந்த அஞ்சு ஸ்லோகம் ஞாபகம் வந்தது.

காமாக்ஷி தேவியும் பௌர்ணமி சந்திரனும் (5 min audio in tamizh, same as the script above)

நம:பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ

Share

Comments (1)

  • meenakshi

    it is very good. what about shivanandalahari? please write weekly once or twice one sloka so that continuity in that slokas remains

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.