கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 3 and 4 meaning

கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 3 and 4)

கணேச பஞ்சரத்னத்ல, ஒவ்வொரு ஸ்லோகமா எடுத்து, பதம் பதமா பிரிச்சு அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு மூணாவது  ஸ்லோகம் பார்க்கலாம்.  

समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् 
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

இந்த மூணாவது ஸ்லோகத்துடைய அர்த்தம் பார்க்கறதுக்கு முன்னாடி, நேத்தி ஒரு காமாக்ஷி ஸ்தோத்ரம் சொல்லி, வேண்டிண்டு ஆரம்பிச்சேன், அதுமாதிரி இன்னிக்கும் ஒண்ணு சொல்றேன்.

प्रणमनदिनारम्भे कम्पानदीसखि तावके
सरसकवितोन्मेषः पूषा सतां समुदञ्चितः
प्रतिभटमहाप्रौढप्रोद्यत्कवित्वकुमुद्वतीं
नयति तरसा निद्रामुद्रां नगेश्वरकन्यके 32

ப்ரணமனதி3னாரம்பே4 கம்பாநதீ3ஸகி2 தாவகே

ஸரஸகவிதோன்மேஷ: பூஷா ஸதாம் ஸமுத3ஞ்சித:  |

ப்ரதிப4டமஹாப்ரௌட4ப்ரோத்3யத்கவித்வகுமுத்3வதீம்

நயதி தரஸா நித்3ராமுத்3ராம் நகே3ஶ்வரகன்யகே  || (ஸ்துதி சதகம் 32)

 

நமஸ்காரம் பண்றவாளுக்கு நல்ல வாக்கு வரும்னு இந்த ஸ்லோகத்தோட அர்த்தம்.

‘ஸமஸ்த லோக சங்கரம்’  – அப்படின்னா, எல்லா உலகங்களுக்கும் மங்களங்களை செய்பவர்கள், உலகத்துல எல்லாருக்கும் மங்களங்களை செய்பவர், அப்படின்னு அர்த்தம்.

ஒரு ஸ்லோகம் இருக்கு,

श्रीकान्तो मातुलो यस्य
जननी सर्वमंगला।
जनकः शंकरो देवः
तम् वन्दे कुंजराननम्॥

ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய

ஜனனி சர்வமங்களா |

ஜனக: சங்கரோ தேவ:

தம் வந்தே குஞ்சராநனம் ||

 

அப்படின்னு பிள்ளையார் மேல ஒரு ஸ்லோகம். பிள்ளையாருடைய மாமா யாரு?  ‘ஸ்ரீ காந்த:’ – லக்ஷ்மிநாயகனான விஷ்ணு பகவான். அந்த பேர்லயேஸ்ரீ’ இருக்கு, அப்படி அவர் மாமா. ‘சர்வ மங்களா‘ – ‘சர்வ மங்களா’ன்னு பேர் கொண்ட காமாக்ஷி அவருக்கு அம்மா. ‘சங்கர:’, ‘சம்பு’, அப்படின்னு மங்களங்களுக்கு இருப்பிடமாக இருப்பவரும், பரமேஸ்வரன். மங்களங்களை செய்பவரும் அவர்தான். அந்த ஒரு ஸ்லோகம் கூட இருக்கு,

சம்போர் மூர்த்தி: சரதிபுவனே சங்கராச்சார்ய ரூப:

அப்படின்னு, அந்தசம்பு’ங்ற மூர்த்தி தான் உலகத்துல மங்களங்களை செய்யணும்கறதுக்காகசங்கராச்சார்ய’ ரூபம் எடுத்துண்டு வந்தார், அப்படின்னு. அந்த சங்கராச்சார்யார் பண்ண ஸ்தோத்ரம் இது.

அவர், இப்படி எல்லா விதத்திலயும் மாமா, அம்மா, அப்பாஇந்த ஸ்தோத்ரம் பண்ற ஆச்சார்யாள், எல்லாரும் சங்கரமா இருக்கும்போது, பிள்ளையார் கேக்கணுமா, ‘ஸமஸ்த லோக சங்கரம்’ – எல்லாருக்கும் மங்களங்களை செய்பவர்.

‘நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்’கஜமுகாசுரனை அடக்கினவர், ‘தைத்ய குஞ்ஜரம்’. நேத்து சொல்லும்போது, இந்த  கஜமுகாசுரனை அடக்கினார். அவன் யானையா வந்தான், அடக்கி யானை வாகனமா வச்சுண்டார்ன்னு சொன்னேன். அந்த ஒரு புராண கதையும் இருக்கு. அவன் பல உருவம் எடுத்து, மூஷிகமா, மூஞ்சூரா வரான், அப்போ அவனை அடக்கி, மூஞ்சூரா வாகனமா வெச்சுண்டார், அப்படிங்கறதுதான் நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச கதை இல்லையா, அதனாலநிரஸ்த தைத்ய குஞ்ஜரம்’. இப்படி அந்த கஜமுகாசுரன் எல்லாருக்கும் மூவுலகதுக்கும் தொல்லை பண்ணும்போது, பரமேஸ்வரன், கணபதியைநீ போய் அவனை அடக்கு’ன்னு சொல்லி, அடக்கினதுனால, இப்படிஸமஸ்த லோக சங்கரம்’எல்லா உலகங்களுக்கும் அந்த ஒரு துஷ்ட சக்தியை அடக்கி, மங்களங்களை செய்தவர்.

‘தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்’ – ‘உதரம்’னா வயிறு, ‘தரம்’னா சின்னன்னு அர்த்தம். ‘தர இதர’ அப்படின்னா சின்னதல்லாத , opposite to small அப்படின்னா என்ன? Big. பெரிய தொப்பை நம்ம பிள்ளையாருக்கு. ‘தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்’யானை முகத்தவர், அக்ஷர வடிவம், அழியாத வஸ்து பிள்ளையார்.

இந்த பிள்ளையாருடைய ரூபத்திற்கு, இந்த யானை முகம் அப்படிங்கறது பெரிய முகம், சின்ன உடம்புல பெரிய முகம். அவ்ளோ ஞானமே வடிவமாக, அவ்ளோ புத்தியோட இருக்கார் அப்படின்னு அர்த்தம். பெரிய காது, பெரிய தலை அப்படின்னா, காதுகள்னால நிறைய ஸ்ரவணம் பண்ணுவார், தலைனால நிறைய மனனம் பண்ணுவார், அப்படின்னு அர்த்தம். இந்த பெரிய தொப்பைங்கறது ஆனந்தத்தையும், propserity அப்படின்னு சொல்லக்கூடிய, நிறைஞ்சு இருக்கார் அப்படிங்கறதை காமிக்கறது. எல்லாருக்கும் நிறைய நிறைய கொடுகறவர்ங்கறதை காமிக்கறது. குழந்தைகள்னா நன்னா சாப்ட்டு கொழு கொழுன்னு இருந்தாதான் அழகு, அந்த மாதிரி இருக்கார். இன்னொன்னு நிறைய எல்லாத்தையும் அவரால ஜீரணிக்கமுடியும் சுக துக்கம், லாபநஷ்டம், பவாபவம், எல்லாத்தையும் ஜீரணிப்பவர் அப்படின்னு ஒரு அர்த்தம்.

 

இந்த பெரிய தொப்பைன்னவுடனே ஒரு கதை ஞாபகம் வர்றது. குபேரன் வந்து கைலாசத்துல தன்னுடைய  செல்வத்தைப் பத்தி பெருமை பீத்திண்டான். உடனே பரமேஸ்வரன் வந்து, ‘கணபதிய அழைசிண்டு போயேன். இவனுக்கு கொஞ்சம் சாப்பாடு போடு’ன்னு அனுபிச்சிவிட்டார். கணபதி வந்து உட்கார்ந்தார். குபேரன் சமைச்சு சமைச்சு போட்டுண்டிருந்தான். அண்டா அண்டாவா! குண்டா குண்டாவா! கணபதி எவ்வளவு குடுத்தாலும் சாப்டுண்டே இருந்தார்! அவருக்கு, ‘ஐயோ பசியை கிளப்பி விட்டுடேளே, பசிக்கறது, கொண்டா கொண்டா’ங்கறார். அப்புறம் பாத்திரத்தையெல்லாம் சாப்பிட்டார். அப்புறம் குபேரனையும் பிடிச்சு சாப்பிடவந்தார். அவன் உடனே பயந்து ஓடிப்போய் பரமேஸ்வரன் கால்ல விழுந்தவுடனே, பரமேஸ்வரன், கணபதிய கூப்பிட்டு, அவருக்கு கொஞ்சம் பொரியை கொடுக்கறார். அவர் அந்த பொரியை சாப்பிட்டு, ‘அப்பாடி! இப்போதான் என் பசி அடங்கித்து!’ன்னு சொல்றார். அப்படி ஒரு கதை.

இந்த குபேரனுடைய செல்வம்ங்கறது material wealth. பரமேஸ்வரன் கொடுத்த பொறிங்கறது நம்முடைய வாசனைகள். அந்த வாசனைகளெல்லாம் பொரிச்சு எடுதுட்டான்னா அதுக்கப்புறம் அது பலிக்காது. அந்த மாதிரி பண்ணி, அதை ஜீரணிச்ச பின்னதான், பசி அடங்கும் அப்படின்னு ஒரு தத்துவம்.

‘இபவக்த்ரம்’ யானை முகத்தோன்,  ‘தரேத உதரம்’பெரிய தொப்பை, ‘அக்ஷரம்’அழியாத வஸ்துவான கணபதி.

 

‘ கிருபாகரம் க்ஷமாகரம்’க்ருபையே வடிவானவர். பகவான் நமக்கு அநுக்கிரஹம் பண்ணனும்னா, அவருடைய க்ருபைங்கற குணம் தான் நமக்கு ரொம்ப தேவையான ஒரு குணமா இருக்கு. தப்பு பண்ணா மன்னிக்கற குணம்தான் அவருடைய மத்த கல்யாண குணங்களை எல்லாம் காட்டிலும், அவருக்கு பராக்ரமம் இருக்கு, அதெல்லாம் காட்டிலும் இந்தக்ருபை’ங்கறது தான் நமக்கு ரொம்ப வேண்டியிருக்கு.

‘க்ஷமாகரம்’மன்னிக்கும் குணம், பொறுமை.

‘முதாகரம்’சந்தோஷமா இருப்பார், நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பவர்.

‘யசஸ்கரம்’நமக்கு நல்ல புகழை சேர்த்து வைப்பவர்.

‘மனஸ்கரம்’நல்ல மனசை கொடுக்கறவர். நல்ல மனசுங்கறது ஒரு பெரிய Asset. நமக்கு எவ்வளவு தளராத மனசு வேணும். இந்த யானை முகத்துல தும்பிக்கை இருக்கு. எல்லா தெய்வங்களுக்குமே நாலு கை உண்டு. ஆனா நம்ப பிள்ளையாருக்கு மட்டும் அஞ்சு கை! ‘ஐங்கரனை’ அப்படின்னு சொல்றோம் இல்லையா? அந்த ஐந்தாவது கரம் தும்பிக்கை. தும்பிக்கையோட விஷேசம் என்னன்னா, தும்பிக்கை, ஒரு ஊசியையும் எடுக்கமுடியும், ஒரு பெரிய மரத்தையும் பிடுங்கி எடுத்துண்டு போக முடியும். அவ்வளவு சக்தியுண்டு, அவ்வளவு நுண்மையும் உண்டு, இந்த தும்பிக்கைல. அந்த மாதிரி, நமக்கு நல்ல மனசு இருந்தா, பெரிய காரியங்களையும் அசாத்தியமான விஷயங்களையும் சாதிக்கமுடியும். ரொம்ப சின்ன காரியங்களையும் எடுத்து பண்ணமுடியும்.

‘நமஸ்க்ருதாம்’நமஸ்காரம் பண்றவாளுக்கு இந்த மாதிரி சந்தோஷத்தையும், நல்ல புகழையும், நல்ல மனசையும் கொடுக்கறவர். அதனால மனசு சம்பந்தமான கஷ்டங்கள் இருக்கறவா பிள்ளையாரோட காலை பிடிசுண்டானா மீண்டு வந்துடலாம்.

‘நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்‘ – அந்த ஒளி வடிவமான கணபதியை நான் நமஸ்கரிக்கிறேன். இது மூணாவது ஸ்லோகம்.

கணேச பஞ்சரத்னத்ல அடுத்த ஸ்லோகம்,

अकिंचनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् 
प्रपञ्चनाशभीषणं धनंजयादिभूषणम्
कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥४॥

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ  நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

‘அகிஞ்சன:’ அப்படின்னா ஏழைகள், ஒரு பைசா இல்லாதவா. அந்த ஏழ்மையின் கொடுமையை, ‘அகிஞ்சன ஆர்த்தி மார்ஜனம்‘ – போக்குபவர்.

வறியவர்களின் துன்பத்தை துடைப்பவர், அப்படி பிள்ளையாரை வேண்டிண்டா ஏழ்மை போகும். இங்கே திருவல்லிக்கேணில பெரியதெருல ஒரு அரசடி கற்பகவிநாயகர் இருக்கார். ஸ்வாமிகளுக்கு ரொம்ப இஷ்டமான பிள்ளையார். ரொம்ப வரங்களைத் தருபவர். முதல்ல, Triplicane தான் நிறைய வந்து பிராமணா Settle ஆனா. அதுக்கப்புறம், இப்போ சென்னை முழுக்க இருக்கா, உலகம் முழுக்க இருக்கா. எல்லாருக்கும் அந்த, திருவல்லிக்கேணிகாறாளுக்கு எல்லாம் அந்த பிள்ளையார்ட்ட ஒரு பக்தியும், ப்ரியமும் இருக்கும். எங்களை வாழ வெச்சார். குடும்பத்தை வாழ வெச்சார். தலைதூக்கினோம். அதே மாதிரி ஒவ்வொரு ஊர்லயும் இருக்கும். மைலாபூர்ல போனா, கபாலீஸ்வரர் கோவில்ல இருக்குற பிள்ளையாராகட்டும், Luz வரசித்தி விநாயகராகட்டும், ஒவ்வொரு பேட்டையும், திருச்சில மலைக்கோட்டை பிள்ளையார், மாணிக்க விநாயகர் அப்படின்னு, அந்த பிள்ளையார்ட்ட வேண்டிண்டு நன்னா இருக்கோம்ன்னு நிறையபேர் சொல்வா.

‘சிரந்தனோக்தி பாஜனம்’அப்படின்னா, ‘சிரம்’ எப்போதும் இருந்துகொண்டிருக்கும்உக்தி’வசனங்கள். அதாவது, வேத வசனங்களால் துதிக்கப்படுபவர் அப்படின்னு ஒரு அர்த்தம். இன்னொண்ணு, என்னைக்கும் இருக்கக்கூடிய ஒரு வார்த்தை அப்படின்னா அது பிரணவம். அந்த நிர்குணபிரம்மம், ஸகுனமா மாற்றதுக்கு, நாதஸ்வரூபாமா வந்தது அந்த பிரணவம். அந்த பிரணவப் பொருளே பிள்ளையார் தான்.

‘புராரி பூர்வ நந்தனம்’ – ‘புராரி’ன்னா முப்புரங்களை எரித்த பரமேஸ்வரன். அவருடையபூர்வ நந்தனம்’ அப்படின்னா மூத்த பிள்ளைன்னு அர்த்தம். இந்த கணேச பஞ்சரத்னத்ல முருகப்பெருமானை பத்தி Direct reference இல்லை. ஆனா பரமேஸ்வரனுடைய மூத்த பிள்ளை சொன்னதுனால, அவருக்கு ஒரு இளையப் பிள்ளை இருக்கார் அப்படின்னு ஆறதில்லையா! ‘ஸ்கந்த பூர்வஜ:’ அப்படின்னு நம்ம பிள்ளையாருக்கு அர்ச்சனை பண்றோம். முருகனுக்கு அண்ணா. முருகனுக்கு வள்ளியை கல்யாணம் பண்ணி வைச்சவரே பிள்ளையார்தானே. அப்படி, பரமேஸ்வரனுடைய மூத்த பிள்ளை.

‘ஸுராரி கர்வ சர்வணம்’ – ‘ஸுரர்’கள்ன்னா தேவர்கள். தேவர்களுடைய எதிரிகளான அசுரர்களுடைய கர்வத்தை பொடிப்பொடியாக்கினவரும்.

‘ப்ரபஞ்ச நாஶ பீஷணம்’ப்ரபஞ்சத்தையே அழிக்கக்கூடிய ஊழி காலத்துப் ப்ரளயத்தை போல உக்ராமானவரும் அப்படின்னு அர்த்தம். அந்த உக்ரமான ருத்ர ஸ்வரூபமும் பிள்ளையார்தான். குழந்தை ஸ்வரூபமும் பிள்ளையார்தான்.

‘தனஞ்ஜயாதி பூஷணம்’தனஞ்ஜயன் முதலான பாம்புகளை அணிந்து கொண்டிருப்பவர். இடுப்புல இவரை சுத்தி, ஒரு பாம்பை ஆபரணமா அணிஞ்சிண்டு இருக்கார் இல்லையா. அந்த மாதிரி ஒரு அர்த்தம். ‘தனஞ்ஜயன்’னா குடை. இந்த குடையை வெச்சுண்டு அலங்காரம் பண்ணி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடறது சென்னைல ரொம்ப விசேஷமா பண்றா. ஸ்வாமிகள், ‘நான் திருச்சிலகூட பார்க்கலை! சென்னைலதான் பார்த்தேன்!’ அப்படின்னு சொல்வார்.

கபோல தானவாரணம்’ – ‘கபோலம்’னா கன்னம், கன்னத்துலேர்ந்து அந்த மதஜலம் ஒழுகறது. அந்த யானைகளுடைய வீர்யத்தை காமிக்கற அடையாளம் அது. அப்படிப்பட்டபஜே புராண வாரணம்’ஆதி யானை வடிவமாக விளங்கும் அந்த பரம்பொருளை பஜிக்கிறேன் அப்படின்னு அர்த்தம்.

இதுல இந்தப்ரபஞ்ச நாஶ பீஷணம்அப்படிங்கறதுக்கு இந்த ஐம்பூதங்களினாலான ப்ரபஞ்சத்தை நாசனம் பண்றது அப்படின்னா, மனோநாசனம் பண்ணி ஞானத்தை அநுக்கிரஹம் பண்றார். அதுக்கு, அந்த  ‘கபோல தானவாரணம்னா கன்னத்துலேர்ந்து மதஜலம் கொட்டறமாதிரி அவருடையை கருணை கொட்டறது. அதுமூலமா, பக்தர்களுடைய அஞ்ஞானத்தைப் போக்கி, கருணையினால ஞானத்தை கொடுக்கிறார்.

இந்ததனஞ்ஜயாதி பூஷணம்ங்கறதுக்கும் குண்டலினி சர்ப்பம், மூலாதாரம், அப்படி எல்லாம் யோகமான அர்த்தங்களெல்லாம் போட்டுருக்கா. இந்த இடத்துல எனக்கு மஹாபெரியவா சொன்னது ஞாபகம் வர்றது. ‘அந்த ஔவைப் பாட்டி விநாயகர் அகவல் பண்ணியிருக்கா. அந்த விநாயகர் அகவல் யோகா சூத்திரமா இருக்கு. நமக்கு புரியலைன்னாலும், நாம படிச்சுண்டே வந்தா பிள்ளையார் ஞானத்தை கொடுத்துடுவார்!’ அப்படின்னு பெரியவா சொல்றா. அதை நாம follow பண்ணுவோம். இது நாலாவது ஸ்லோகம்.

சித்தி விநாயக மூர்த்திக்கி… ஜெய்

Series Navigation<< கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 1 and 2 meaningகணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaning >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.