Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 61-70 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 61 to 70 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 61-70 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 61 to 70 meaning

ஸங்க்ஷேப ராமாயணத்துல 60 ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கி 61-70 பாக்கலாம்.
चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् |
சகார ஸக்²யம்ʼ ராமேண ப்ரீதஶ்சைவாக்³நிஸாக்ஷிகம் |
சுக்ரீவன் ராமரோடு அக்னி சாட்சியமாக சக்யம் பண்ணி கொண்டான், அப்டினு நேத்து அது வரைக்கும் பாத்தோம்.
सीता कपीन्द्र क्षणदा चराणाम् राजीव हेम ज्वलनोपमानानि |
सुग्रीव राम प्रणय पसङ्गे वामानि नेत्राणि समम् स्फुरन्ति ||
ஸீதா கபீந்த்³ர க்ஷணதா³ சராணாம் ராஜீவ ஹேம ஜ்வலனோபமானானி |
ஸுக்³ரீவ ராம ப்ரணய பஸங்கே³ வாமானி நேத்ராணி ஸமம் ஸ்பு²ரந்தி ||
அப்டின்னு கிஷ்கிந்தா காண்டம் 5வது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம் இது.
சீதாதேவி, ” கபீந்த்³ர:” – வாலி , ” க்ஷணதா³ சராண:” – ராத்திரில சரிக்க கூடிய ராவணன். இவா மூணு பேரோட கண்ணு எப்படி இருந்ததுன்னா, ” ராஜீவ ஹேம ஜ்வலனோபமானானி” . சீதாதேவியோடைய கண்ணு – தாமரையை போல இருந்தது. வாலியோட கண்ணு தங்கம் போல இருந்தது . ராவணனோட கண்ணு நெருப்பு போல இருந்தது சிவப்பா. ராமரும் சுக்ரீவனும் ஸ்நேஹம் பண்ணிக்கொண்ட போது “ஸுக்³ரீவ ராம ப்ரணய பஸங்கே” – அந்த நேரத்தில் இவா மூணு பேரோட இடது கண்ணும் துடிச்சது அப்டின்னு வரது. பெண்களுக்கு இடது கண் துடிச்சா நல்லது, அதனால அவளுக்கு நல்ல காலம் பொறந்துடுத்து. ராவணனுக்கும் , வாலிக்கும் போறாத வேளைஆரம்பிச்சிடுத்து அப்டின்னு அர்த்தம்.
ततो वानरराजेन वैरानुकथनं प्रति ||
रामायावेदितं सर्वं प्रणयाद्दुःखितेन च |
ததோ வானரராஜேன வைரானுகத²னம்ʼ ப்ரதி ||
ராமாயாவேதி³தம்ʼ ஸர்வம்ʼ ப்ரணயாத்³து³꞉கி²தேன ச |
ராமர் சீதாதேவியோட நகைகளை பாத்து தன்னுடைய கஷ்டத்தை வெளிப்படுத்தறார், நான் நகையை பாக்கறேன் சீதையை காணுமேன்னு பொலம்பறார், சுக்ரீவன் சமாதான படுத்தறான். இது நேத்து சொன்னேன். இப்போ ராமர் சுக்ரீவனை கேக்கறார், உனக்கும் வாலிக்கும் ஏன் இவ்ளோ “வைரம்” – பகைமை, அதாவது அண்ணா தம்பிகளுக்குள்ள இவ்ளோ பகைமை பாராட்டுவாளா அப்டிங்கறதுனால இவர் புரிஞ்சுக்க விரும்பறார். அதனால என்னன்னு கேக்கறார்,
“ப்ரணயாத்³து³꞉கி²தேன ச ” – Friend ங்கறதாலயும், தனக்கு வாலியால ஏற்பட்ட கஷ்டங்களையும் “ஸர்வம்ʼ ” – எல்லாத்தையும் , “ராமாயாவேதி³தம்ʼ” – ராமர்கிட்ட சொன்னான் அப்டின்னு இங்க சங்க்ஷேப ராமாயணத்துல வரது.
தனக்கும் வாலிக்கு ஏன் இந்த வைரம் ஏற்பட்டதுனு சொன்னான். ஏன் ஏற்பட்டது, வாலி சுக்ரீவன் ரெண்டு பேருமா ராஜ்யத்தை பாத்துக்கறா. வாலி ராஜாவா இருக்கான், சுக்ரீவன் இளவரசனா இருக்கான். ஒரு நாள் மாயாவினு ஒரு அரக்கன் வாலியை யுத்தத்துக்கு கூப்படறான், ராத்திரில. வாலி யுத்தத்துக்கு போறான். கூடவே சுக்ரீவனும் போறான். ரெண்டு பேரும் வரத பாத்தவுடனே அவன் பயந்து போய் ஒரு குஹைல பூந்துக்கறான். வாலி அந்த குஹைக்குள்ள போறான். அதுக்கு முன்னாடி சுக்ரீவன்கிட்ட நீ இங்க வாசல்ல ஒக்காந்துரு. என் பாதங்கள் மேல ஆணை. நான் வர வரைக்கும் wait பண்ணுனு சொல்றான். வாலி போனவன் மாச கணக்கா வரவே இல்ல.திடீர்னு அந்த குஹைக்குள்ளேர்னந்து நெறைய ரத்தமும் நுரையுமா வரது. உடனே சுக்ரீவன் பயந்துண்டு, அவா எல்லாரும் சேந்து வாலியை வதம் பண்ணிட்டா. அவா எல்லாரும் கிஷ்கிந்தைக்குள்ள வந்தா, எல்லா வானராளுக்கும் ஹிம்சையா முடியும் அப்டின்னு ஒரு பெரிய கல்லை போட்டு அந்த குஹையை மூடிட்டு, கிஷ்கிந்தைக்கு வந்து வாலி வதம் ஆயிட்டான் அப்டின்னு சொன்னவுடனே அவா எல்லாம் சேர்ந்து நீ ராஜாவா இருக்கணும் அப்டின்னு அவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணி வெக்கறா. வாலி ஆனா வதம் ஆகலை. அவன் எவ்ளோ பலசாலி. அந்த கல்லை புரட்டி போட்டுட்டு நேரா கிஷ்கிந்தைக்கு வரான். ஸிம்ஹாசனத்துல சுக்ரீவன் ஒக்காந்துருக்கறத பாத்தவுடனே கடுங்கோபம் வரது. உடனே அவனை கட்டின துணியோட ஓடி போ.நீ துரோகி, இங்க இருந்தா உன்னை கொன்னுடுவேன், அப்டின்னு அவனை அவமான படுத்தி அனுப்ச்சிடறான். அப்படி சுக்ரீவன் வெளியேறியபோது அவனுக்கு வேண்டிய நளன், நீலன், தாரன் ஹனுமான் அவனுக்கு loyal ஆ இருக்கற நாலு மந்திரிகள் அவனோட வெளில வந்துடறா. இதெல்லாத்தையும் ராமர்கிட்ட சுக்ரீவன் சொல்றான். விரட்டினது மட்டுமில்லாம சுக்ரீவனுடைய மனைவி “ருமை”ய வாலி தன் மனைவியா வெச்சுக்கறான். அதனால ராமர் இந்த வாலியை நான் வதம் பண்ணறேன் அப்டினு சொல்றார்.
प्रतिज्ञातं च रामेण तदा वालिवधं प्रति ||
ப்ரதிஜ்ஞாதம்ʼ ச ராமேண ததா³ வாலிவத⁴ம்ʼ ப்ரதி ||
நான் வாலியை வதம் பண்ணி உன்னை ராஜாவா ஆக்கறேன் அப்டினு ப்ரதிஞை பண்ணி தறார். இந்த வார்த்தையை சொன்னவுடனே சுக்ரீவனுக்கு ரொம்ப த்ருப்தி.

राम शोकाभि भूतोहम् शोकार्तानाम् भवान् गतिः |
वयस्य इति कृत्वा हि त्वय्यहम् परिदेवये ||
ராம ஶோகாபி⁴ பூ⁴தோஹம் ஶோகார்தானாம் ப⁴வான் க³தி꞉ |
வயஸ்ய இதி க்ருʼத்வா ஹி த்வய்யஹம் பரிதே³வயே ||
ராமா சோகத்துல இருக்கிறவர்களுக்கு எல்லாம் நீயே கதி. நண்பன் அப்டிங்கறதால உன்கிட்ட சொல்லி அழறேன். நீ எனக்கு நண்பனா கிடைச்சதால எல்லா தெய்வங்களும் இனி அனுகூலமா இருக்கும். இந்த கிஷ்கிந்தை ராஜ்யம் என்ன தேவலோக ராஜ்யம் கூட எனக்கு கிடைக்கும். இனி எல்லாரும் என்னோடு ஸ்நேஹத்தோட இருப்பா. பந்துக்கள் திரும்ப கிடைப்பா. எனக்கு உன்னோட நட்பு கிடைச்சது பெரிய பாக்கியம் அப்டின்னு சொல்றான். ஆனாலும் வாலி கிட்ட அடி வாங்கிருக்கான், வாலியோட பலம் மனசுல வந்துண்டே இருக்கு. அந்த வாலி இவனை ஊரைவிட்டு துரத்தினது மட்டுமில்லாம கொல்றதுக்கும் பலதடவை முயற்சி பண்ணறான். சுக்ரீவன் உலகம் முழுக்க சுத்தறான், வாலியோட பலத்துக்கு பயந்து. அப்படி வாலிகிட்ட அவனுக்கு பயம். ராமர் வாலியை வதம் பண்ணறேன்னு ப்ரதிஞை பண்ணாலும், அவனுக்கு ஒரு சந்தேகம் . அதனால என்ன பன்றான்.
वालिनश्च बलं तत्र कथयामास वानरः |
வாலினஶ்ச ப³லம்ʼ தத்ர கத²யாமாஸ வானர꞉ |
வாலியோட பலம் எப்படிப்பட்டது அப்டின்னு ராமா உனக்கு சொல்றேன் கேட்டுக்கோ அப்டின்னு சொல்றான். வாலி தினமும் காலைல கிழக்கு சமுத்திரத்துல போய் சந்தியாவந்தனம் பண்ணுவான். அதே மாதிரி சாயங்காலம் மேற்கு சமுத்திரத்துல போய் சந்தியாவந்தனம் பண்ணுவான். இப்படி பூமியெல்லாம் ப்ரதக்ஷிணம் பண்ணற அளவுக்கு அவனுக்கு power உண்டு. துந்துபினு ஒரு அசுரன். அவன் எருமை உருவம் எடுத்துண்டு சமுத்திர ராஜாகிட்ட யுத்தத்துக்கு கூப்பிடறான். அவர் என்னால முடியாது நீ போய் ஹிமவானை கேளுன்னு அனுப்பிச்சிடறார். ஹிமவானும் என்னால முடியாது, நீ போய் வாலியை கேளுன்னு அனுப்பிச்சிடறார். அப்படி வாலியோட பலம் பிரசித்தம். வாலியோட இந்த துந்துபி யுத்தம் பண்ணறான் ரொம்ப நாளைக்கு. வாலி இந்த துந்துபியை கொன்று, அவனோட உடலை தூக்கி எறியறான். அது மதங்கர் ஆஸ்ரமம்ல போய் விழறது. அங்க இந்த அசுரனோட ரத்தம் எல்லாம் அவர் ஆசையா வளர்த்த செடிகள் மேல எல்லாம் தெறிக்கிறது. உடனே மதங்கர் கோபத்தோடு, வாலி இந்த ஆசிரமத்தோட ஒரு யோஜனை தூரத்துக்குள்ள வந்தா அவன் தலை வெடிச்சி சிதறும் அப்டின்னும், வாலியோட ஆட்கள் வந்தா அவா எல்லாம் கல்லாக போய்டுவா அப்டின்னு சாபம் கொடுக்கிறார். இது வாலிக்கு தெரியறது, அவன் வந்து மன்னிப்பு கேக்கறான். அவர் ஒண்ணும் பதில் சொல்லாம உள்ள போய்டறார். அந்த மாதிரி மஹான்கள் மன்னிக்காம இருந்தாகூட அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த வாலிக்கு சாபம் கொடுத்தது சுக்ரீவனுக்கு ஒரு வரமா போயிடுத்து ஏன்னா, வாலி அவனை துறத்தி துறத்தி அடிக்கறான். அப்போ ஹனுமார் சொல்றார் இந்த மதங்கரோட ஆஸ்ரமம் பக்கத்துல ருஷ்யமூக மலை இருக்கு நாம அங்க இருக்கலாம், வாலியால அங்க வர முடியாது அப்டின்னு. அங்க தான் அவன் ஒளிஞ்சிண்டு இருக்கான். கடைசில ராமர் வந்து சேரரார் அவனோட புண்யத்துனால. அதனால இதெல்லாம் சொல்லி உன்னுடைய ஆக்ருதியும், தேஜஸும் இதெல்லாம் பாத்தா எனக்கு நம்பிக்கை வரது. இருந்தாலும் வாலியை வதம் பண்ணற அளவுக்கு நீ பலசாலியா அப்டினு எனக்கு சந்தேகமா இருக்கு அப்டிங்கறான்
सुग्रीवः शङ्कितश्चासीन्नित्यं वीर्येण राघवे ||
ஸுக்³ரீவ꞉ ஶங்கிதஶ்சாஸீந்நித்யம்ʼ வீர்யேண ராக⁴வே ||
ராமருடைய வீர்யத்தை பத்தி சுக்ரீவன் ஸந்தேஹப்பட்டுக்கொண்டே இருந்தான். அப்போ லக்ஷ்மணன் கேக்கறான், என்ன பண்ணா ராமர் வாலியைவிட பலசாலின்னு நீ நம்புவ அப்டின்னு. அப்போ துந்துபியோட ஒடம்பு அங்க இருக்கு, மதங்கர் ஆஸ்ரமத்துக்கு பக்கத்துல தானே போட்ருக்கான், இதை ராமர் காலால் எத்தி 200 வில் தூரம் போனா நம்பறேன் அப்டிங்கறான்.
राघवप्रत्ययार्थं तु दुन्दुभेः कायमुत्तमम् |
दर्शयामास सुग्रीवो महापर्वतसन्निभम् ||
ராக⁴வப்ரத்யயார்த²ம்ʼ து து³ந்து³பே⁴꞉ காயமுத்தமம் |
த³ர்ஶயாமாஸ ஸுக்³ரீவோ மஹாபர்வதஸன்னிப⁴ம் ||

அந்த துந்துபியோட உடம்பை ராமர்கிட்ட நம்பிக்கை வரத்துக்காக காமிச்சு “த³ர்ஶயாமாஸ ஸுக்³ரீவோ மஹாபர்வதஸன்னிப⁴ம்” – மலை போல இருக்கு. அதை காமிச்சி, இதை ராமர் எத்தினார்னா நான் நம்பறேன் அப்டிங்கறான். “உத்ஸ்மயித்வா மஹாபா³ஹு꞉” – பெருந்தோள் படைத்தவரான ராமர், “உத்ஸ்மயித்வா” – சிரிச்சிட்டு, “ப்ரேக்ஷ்ய சாஸ்தி² மஹாப³ல꞉” – அந்த துந்துபியோட எலும்புகூட பாத்து “பாதா³ங்கு³ஷ்டே²ன சிக்ஷேப” – தன்னுடைய கால் கட்டைவிரலால் “ஸம்பூர்ணம்ʼ த³ஶயோஜனம்” – பத்து யோஜனை தள்ளி போகும்படியா அதை எத்தினார். என்ன ஆஸ்ச்சர்யம் அவன் 200 வில்(meter) மாதிரி தூரம் போய் விழனும் அப்டிங்கறான், இவர் 10 யோஜனை தள்ளி போகும்படியா அடிச்சிட்டார். ஆனா அவனுக்கு இன்னும்கூட நம்பிக்கை வரல .சுக்ரீவன் சொல்றான் ,ராம அன்னிக்கு வாலி இதை தூக்கி போட்டபோது அது மாம்சமும், ரத்தமும்,சதையுமா இருந்தது, இப்போ இது எலும்புக்கூடா இருக்கு அதனால தான் நீ easy ஆ இவ்ளோ தூரம் எத்தினியோனு சந்தேகமா இருக்கு அப்டிங்கறான்.
அதனால இந்த ஏழு சால மரம் இருக்கு, வாலி ஒரு மரத்தை உலுக்கினான்னா ஏழு மரத்தோட இலையும் விழும். நீ ஒரு அம்புனால இந்த ஏழு சால மரங்களையும் தொலை போட்டா நான் நம்பறேன் அப்டிங்கறான். இந்த எடத்துல ஸ்வாமிகள் சொல்வார், பெரிய காரியத்தை சுலபமா பண்ணாகூட ஜனங்களுக்கு சந்தேகம் வந்துடறது, பந்தா விடறவாளதான் இந்த காலத்துல நம்பறா. அதுக்காக நம்பள நாம மாத்திக்க வேண்டியதில்லை அப்படிம்பார். அவருடைய அனுபவத்தையும் சொல்வார். ஸ்வாமிகளுடைய ஸ்ரீவித்யா குரு, அவர்கிட்ட யாரோ வந்து குழந்தை காணாம போய்ட்டான்னு முறையிட்டுயிருக்கா. ஸ்வாமிகளை சொல்லி, நீ போய் அவரை சுந்தரகாண்டம் படிக்க சொல்லு, மூணு நாள்ல படிப்பார், உன் கொழந்தை வந்துருவான் அப்டின்னு சொல்லிருக்கார். அந்தம்மா ஸ்வாமிகள் கிட்ட போய் சொன்னவுடனே, ஸ்வாமிகள் சுந்தரகாண்டம் மூணு நாள்ல படிக்கணும்கறது இல்ல, நான் வேணா மூணு நாள்ல மூணு ஆவர்த்தி படிக்கிறேன் அப்டின்னு சொல்றார். ஏன்னா ஸ்வாமிகளுக்கு ஆவர்த்தி நெறைய பண்ணனும்னு எப்போவுமே.அந்தம்மா சரிங்கறா. அவா ஆத்துக்கு வந்து ஸ்வாமிகள் சுந்தரகாண்டம் 5 hours ல படிச்சிடுவார், அவருக்கு அவ்ளோ focus, அவரோட தபஸ் அது. 5 hours ல படிச்சுவுடனே, மூணு நாள்ல படிக்கணும்கறத இவர் 5 hours ல முடிச்சிட்டார் அப்டின்னு இந்த அம்மாக்கு இவர் மேல நம்பிக்கை வரல. அடுத்த நாள் வரும்போது அசால்ட்டா treat பண்ணறா. அந்த குருகிட்டயும் போய் சொல்றா, நீங்க யாரையோ அனுப்பிச்சேள், மூணு நாள்ல படிக்கணும்னு அவ்ளோ இருக்குனு சொல்றேள், அவர் 5 hours ல முடிச்சிட்டேன்னு சொல்றார் அப்டின்னவுடனே அந்த குரு அந்த அம்மாவை கடுமையா கோச்சிண்டு உனக்கு போய் நான் ஒரு மஹானை சொன்னேனே, நீ அவரை போய் அவமானப்படுத்தினாயே, உனக்கு இந்த எண்ணம் வந்ததுக்கு அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு இல்லன்னா உன் பிள்ளை வரவே மாட்டான் அப்டிங்கறார். அடுத்த நாள் ஸ்வாமிகள் வந்த உடனே அந்தம்மா நமஸ்காரம் பண்ணி, மன்னிச்சிருங்கோ எனக்கு தெரியல இதெல்லாம், தப்பா நடந்துட்டேன் அப்டின்னு. ஸ்வாமிகள் அதெல்லாம் ஒண்ணும் மனசுல வாங்கிக்க மாட்டார். அவர் மூணு நாள் படிச்சு அந்த பையன் திரும்ப வந்தான். இதை என்கிட்டே சொன்னார் . இந்த மாதிரி பெரிய கார்யங்களை எல்லாம் சுலபமா பண்ணா ஜனங்கள் தப்பா புரிஞ்சிக்கறா. இந்த காலத்துல பந்தா விட்டு பண்றத தான் ரசிக்கறா. நமக்கு அதெல்லாம் வராது. நான் இருக்கற மாதிரி இருந்ததுண்டு இருக்கேன். “வானராயேவ நஸ்ச்சின்னம்” அப்டின்னு யுத்தகாண்டத்துல ராமர் சொல்வார், நீங்களெல்லாம் வானராளாவே இருங்கோ. அதான் நமக்கு அடையாளம். அப்டின்னு ஸ்வாமிகள் சொல்லிப்பார்.”வானராயேவ நஸ்ச்சின்னம்” – இதான் அடையாளம். அழுக்கு வேஷ்டி எனக்கு பந்தா விட தெரியாது அப்டின்னு விளையாட்டா சொல்வார்.
बिभेद च पुनः सालान् सप्तैकेन महेषुणा |
பி³பே⁴த³ ச புன꞉ ஸாலான் ஸப்தைகேன மஹேஷுணா |
ராமர்கிட்ட ஏழு சால மரங்களை துளை போட சொல்லறபோது, அவர் ஒரு அம்பு போடறார்.அது ஏழு மரங்களை வீழ்த்திட்டு , “கி³ரிம்ʼ ரஸாதலம்ʼ சைவ” – ஒரு மலையை துளைப்போட்டு, ரஸாதலம் வரைக்கும் போயிட்டு அப்புறம் அவர் அம்புறாத்தூணிக்குள்ள வந்து ஒக்கார்ரறது அந்த அம்பு . இதை பாத்தவுடனே அவன் நமஸ்காரம் பண்ணிடறான் – “ஜநயன் ப்ரத்யயம்ʼ ததா³ “.இப்படி ராமர் சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டினார். ஏன் இவ்ளோ தூரம் இறங்கி வரணும்னா, அதான் friendship . நீயும் நானும் friends, உன் கஷ்டம் என் கஷ்டம் அப்டின்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக ராமர் அவ்ளோ தூரம் இறங்கி வரார்.
ततः प्रीथमनास्तेन विश्वस्तश्च महाकपिः |
தத꞉ ப்ரீத²மனாஸ்தேன விஶ்வஸ்தஶ்ச மஹாகபி꞉ |
இதை பார்த்து ப்ரீத்தி அடைஞ்சு ராமர்கிட்ட நம்பிக்கை வந்தவுடனே சுக்ரீவன் “மஹாகபி꞉”னா பெரிய well built னு அர்த்தம். அந்த “மஹாகபி꞉”- சுக்ரீவன்,
किष्किन्धां रामसहितो जगाम च गुहां तदा ||
கிஷ்கிந்தா⁴ம்ʼ ராமஸஹிதோ ஜகா³ம ச கு³ஹாம்ʼ ததா³ ||
அந்த கிஷ்கிந்தை என்ற குஹைக்கு ராமரோடு சேர்ந்து போனான்.
ततोऽगर्जद्धरिवरः सुग्रीवो हेमपिङ्गलः |
ததோ(அ)க³ர்ஜத்³த⁴ரிவர꞉ ஸுக்³ரீவோ ஹேமபிங்க³ல꞉ |
தங்க கழுத்து கொண்ட அந்த சுக்ரீவன் “ஹரிவர:” – வானரர்களுள் ஸ்ரேஷ்டமான அந்த சுக்ரீவன் “க³ர்ஜத்³” – ஹே வாலி வெளிய வா யுத்தத்துக்கு அப்டின்னு கர்ஜனை பண்ணறான். இந்த சங்க்ஷேப ராமாயணத்துல இதை சொல்லல, ஒரு வாட்டி யுத்தத்துக்கு கூப்பிடறான். வாலியும் சுக்ரீவனும் height , weight ,style எல்லாத்துலயும் ஒரே மாதிரி இருக்கறதுனால ராமர் அம்பு போடல. ஏன்னா வாலியை வதம் பண்ணறேன்னு சொல்லிட்டு சுக்ரீவனை வதம் பண்ணிட்டா என்ன பண்றதுனு. அவன் அடி பட்டுண்டு ஓடி வந்துடறான். வந்து ராமா என்ன இப்டி பண்ணையே, அப்படிங்கறத்த இல்ல எனக்கு உங்க ரெண்டு பேருக்கும் வித்யாசம் தெரில அப்டின்னு பக்கத்துல மஞ்சளா ஒரு கொடி எடுத்து மாலையா பண்ணி சுக்ரீவன் கழுத்துல லக்ஷ்மணனை போட சொல்றார். இப்போ திரும்ப போய் யுத்தத்துக்கு கூப்பிடுன்னு சொல்லும்போது சுக்ரீவன் பயப்படறான். ராமர் இதுவரைக்கும் என் ஜென்மத்துல நான் பொய்யே சொன்னது கிடையாது, தர்மத்துக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கேன், என்னை நம்பு போலாம் வா, அப்டின்னு சமாதானம் படுத்தி கூட்டிண்டு போறார். அப்டி திரும்ப யுத்தத்துக்கு போற வழில “சப்தஜனா” ஆஸ்ரமம் வரது. இது என்ன இங்க நல்ல இனிமையான சங்கீதம் போல கேக்கறதே அப்டின்னவுடனே, இல்ல இங்க ஏழு முனிவர்கள் பத்தாயிரம் வருஷம் தலைகீழா தபஸ் பண்ணா, இந்த
प्रणमन्ति हि ये तेषाम् ऋषीणाम् भावितात्मनाम |
न तेषाम् अशुभम् किंचित् शरीरे राम दृश्यते ||
ப்ரணமந்தி ஹி யே தேஷாம் ருʼஷீணாம் பா⁴விதாத்மநாம |
ந தேஷாம் அஶுப⁴ம் கிஞ்சித் ஶரீரே ராம த்³ருʼஶ்யதே ||
இந்த சப்தஜனாள மனசுல நெனைச்சிண்டு நமஸ்காரம் பண்றவாளுக்கு சரீர உபாதை எதுவும் வராது அப்டின்னு எல்லாரும் நமஸ்காரம் பண்றா. அப்புறம் சுக்ரீவன் திரும்பவும் போய் வாலியை யுத்தத்துக்கு கூப்படறான்.
तेन नादेन महता निर्जगाम हरीश्वरः ||
தேன நாதே³ன மஹதா நிர்ஜகா³ம ஹரீஶ்வர꞉ ||
இந்த வாட்டி கூப்பிடும்போது வாலி திரும்பவும் வெளில வரான்.
अनुमान्य तदा तारां सुग्रीवेण समागतः |
அனுமான்ய ததா³ தாராம்ʼ ஸுக்³ரீவேண ஸமாக³த꞉ |
தாரை அப்போ வந்து தடுக்கறா. ஹே வாலி, இப்போ தான் அடி வாங்கிண்டு போனான். திரும்ப வந்து கூப்பிடறான்னா அவனுக்கு கூட ஏதோ ஒரு support இருக்கு துணை இருக்கு. அங்கதனை கொண்டு நான் விசாரிச்சேன். சக்ரவர்த்தி திருமகனான ராமர் வந்திருக்கார். ராமர் சாதாரண இளவரசர் கிடையாது
निवास वृक्षः साधूनाम् आपन्नानाम् परा गतिः ||
आर्तानाम् संश्रयः चैव यशसः च एक भाजनम् |
நிவாஸ வ்ருʼக்ஷ꞉ ஸாதூ⁴னாம் ஆபன்னானாம் பரா க³தி꞉ ||
ஆர்தானாம் ஸம்ʼஶ்ரய꞉ சைவ யஶஸ꞉ ச ஏக பா⁴ஜனம் |
அவர் சாதுக்களுக்கு ஒரு நிவாஸ வ்ருக்ஷம் போல.கஷ்ட படரவாள காப்பாத்தறவர். சுக்ரீவன் அவரை சரணாகதி பண்ணிருக்கான். அதனால நீ யுத்தத்துக்கு போகாத. சுக்ரீவன் இங்க இருந்தா என்ன, அங்க இருந்தா என்ன. உன்னோட தம்பிதானே . அவனை உன் பக்கத்துல யுவராஜாவா அபிஷேகம் பண்ணி வெச்சுக்கோ . அவன்கிட்ட வைரம் பாராட்டி, ராமரோட மோதாத அப்டின்னு சொல்றா தாரை. அப்போ வாலி அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ உன் அன்பை வெளிப்படுத்தியாச்சு போயிட்டு வா அப்டிங்கறான். ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணிட்டு, ஆரத்தி எடுத்துட்டு அழுதுண்டே போய்டறா தாரை. ரொம்ப உத்தமியாவும், பதிவ்ரதையா இருக்கறதால அவளுக்கு தெரியறது வந்துருக்கறது ஸாஷாத் விஷ்ணு பகவான் தான் அப்டின்னு. ஆனா இவன் கேக்க மாட்டேங்கறான். அதுக்கு என்ன பண்றது அடுத்த scene ஆகணுமே. யுத்தத்துக்கு வரான். “அனுமான்ய ததா³ தாராம்ʼ” – தாரையை சமாதானப்படுத்திட்டு “ஸுக்³ரீவேண ஸமாக³த꞉ ” – சுக்ரீவனோடு யுத்தத்துக்கு வரான் வாலி. இந்த வாட்டி ராமருக்கு அடையாளம் தெரியும். அதனால,

निजघान च तत्रैनं शरेणैकेन राघवः ||
நிஜகா⁴ன ச தத்ரைனம்ʼ ஶரேணைகேன ராக⁴வ꞉ ||
ஒரே அம்பினால் ராமர் வாலியை வதம் செய்தார். ராமர் ஒரே அம்பினால் வாலியை வதம் பண்ணார்ங்கறது நெறைய எடத்துல வரும். ஹனுமார் ராவணன் கிட்ட சொல்வார். அந்த மாதிரி அவர் சீதையை பார்த்த பின்ன வ்ருத்தாந்தம் சொல்லும்போது சொல்வார். வாலி ராவணனை வால்ல கட்டி அடிச்சவன். அவன் ராவணனை காட்டிலும் பலசாலி.இந்திரனோட பிள்ளை அவன். அப்பேர்பட்ட வாலியை ஒரு அம்பினால் ராமர் அடிச்சார்னா, அப்போ ராமர் விஷ்ணு ஸ்வரூபம் அப்டிங்கறதுக்காக அடிக்கடி சொல்லுவா. ராமருடைய பராக்ரமம் மாரீசனை ஒரு அம்பால் அடிச்சார். விராதன், கபந்தன் , வாலி இவாளை எல்லாம் ராமர் வதம் பண்ண போது ராமர் ஸாக்ஷாத் விஷ்ணு ஸ்வரூபம்னு தெரியலையானு மண்டோதரிகூட பொலம்புவா. அப்பேற்பட்ட வாலி வதம் பண்ணி,
ततः सुग्रीववचनाद्धत्वा वालिनमाहवे |
தத꞉ ஸுக்³ரீவவசநாத்³த⁴த்வா வாலினமாஹவே |
இப்படி சுக்ரீவனுக்காக வாலியை அப்புறப்படுத்திவிட்டு,
सुग्रीवमेव तद्राज्ये राघवः प्रत्यपादयत् ||
ஸுக்³ரீவமேவ தத்³ராஜ்யே ராக⁴வ꞉ ப்ரத்யபாத³யத் ||
சுக்ரீவனையே கிஷ்கிந்தைக்கு ராஜாவாக வானரர்களை கொண்டு அபிஷேகம் பண்ணார். ஹனுமார் வந்து வாலி வதம் ஆச்சு, தாரை பொலம்பறா, சுக்ரீவனே பொலம்பறான் இந்த மாதிரி அண்ணாவை கொன்னுட்டேனே நான் அப்டின்னு, அப்புறம் ராமர் எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு அங்கதனை கொண்டு வாலிக்கு சம்ஸ்காரம் பண்ண சொல்லிட்டு வானராள்கிட்ட , ஹனுமார் சொல்றார் நீங்க வாங்கோ கிஷ்கிந்தைக்கு அப்டின்னு , 14 வருஷம் நான் ஒரு ராஜ்யத்துக்குள்ள, நகரத்துக்குள்ள , க்ராமத்துக்குள்ள வரமாட்டேன். நான் காட்டுல வசிக்கிறேனனு promise பண்ணிருக்கேன். நீங்கெல்லாம் இவனை அழைச்சிண்டு போய் பட்டாபிஷேகம் பண்ணி வெய்யுங்கோ. 4 மாசம் மழை காலம். காரியங்கள் எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அதனால சுக்ரீவா நீ எனக்கு 4 மாசம் கழிச்சு சீதையை எனக்கு தேடிக்குடு அப்டின்னு நம்ப ரெண்டு பேருக்குள்ள ஒப்பந்தம் அப்டின்னு சொல்றார். இந்த அங்கதன் யுவராஜாவாக ஆவதற்கு தகுதி உடையவன்.
अंगदोयम् अदीनात्मा यौवराज्यस्य भाजनम् ||
அங்க³தோ³யம் அதீ³னாத்மா யௌவராஜ்யஸ்ய பா⁴ஜனம் ||
இவனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் பண்ணி வை அப்டினு சொல்றார். அது மாதிரி நளன், நீலன், ஜாம்பவான் , எல்லாரும் சேந்து சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ணி வைக்கறா.
राम शोकाभि भूतोहम् शोकार्तानाम् भवान् गतिः |
वयस्य इति कृत्वा हि त्वय्यहम् परिदेवये ||
ராம ஶோகாபி⁴ பூ⁴தோஹம் ஶோகார்தானாம் ப⁴வான் க³தி꞉ |
வயஸ்ய இதி க்ருʼத்வா ஹி த்வய்யஹம் பரிதே³வயே ||

அந்த மாதிரி சுக்ரீவன் ராமர்கிட்ட எனக்கு உன்ன விட்ட வேற யாரும் கிடையாது அப்டின்னு அழுதான். அவனுக்கு ராஜ்ஜியம் கிடைச்சது, அப்புறம் அவன் அழ வேண்டியதே இருக்கலை. மஹாராஜாவா ஆயிட்டான். சுக்ரீவனை மகாராஜான்னு தான் refer பண்ணுவா. ராமர் குடுத்த ராஜ்யம். அடுத்த lineல , சங்க்ஷேப ராமாயணத்துல வானரால் எல்லாரையும் கூப்பிட்டு சீதையை தேடறதுக்கு நாலா பக்கமும் அனுப்பிச்சான் அப்டின்னு சுருக்கமா கொண்டு போய்டறார். நடுல இருக்கறதெல்லாம் ரொம்ப interesting காட்சிகள் இல்லையா. அதனால நான் கொஞ்சம் சொல்றேன்.
இந்த சுக்ரீவனை ராஜாவாக்கி அவன் காட்டுலயும் மேட்டுலயும் அலைஞ்சவனுக்கு நல்ல சாப்பாடு, சுகம் எல்லாம் கிடைச்ச உடனே அவன் சிற்றின்பத்துல மூழ்கி போய்டறான். குடிச்சிண்டு பெண்கள் கூட இருக்கறது, ராஜ்யத்தை மந்திரிகள் கிட்ட ஒப்படைச்சிட்டு இருக்கான்.என்ன கூப்பிடாதீங்கோ அப்டின்னு சொல்லிடறான். ஆச்சு நாலு மாசம் மேல, சரத் ருதுவே முடியப்போறது. இங்க ராமர் காத்துண்டுஇருக்கார். லக்ஷ்மணன் சமாதானப்படுத்திண்டு இருக்கான். சுக்ரீவன் வந்துருவான் நீங்க கோபப்படாதீங்கோ அப்டின்னு. ஆனா சுக்ரீவன் வரவே இல்ல. ராமருக்கு கோபம் வந்துடுத்து. சொன்ன வார்த்தையை மீறிட்டான் அவன். சீதையை தேடி தரேன்னு சொன்னான், ஒண்ணுமே பண்ணலை அப்டின்னு. நல்ல காலம் ஏதோ சுக்ரீவன் புண்யம், ஹனுமான் ஒரு நாள் சுக்ரீவா நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் ராம கார்யத்தை மறக்காதே. நீ ஒரு order மட்டும் போடு போறும் அப்டிங்கறார். அப்டியா என்ன பண்ணனும் சொல்லு அப்டினாவுடனே, நீ இந்த நீலனை கூப்பிட்டு எல்லா வானராளையும் 15 நாள்ல கிஷ்கிந்தைக்கு வரணும், இல்லைனா மரண தண்டனை அப்டின்னு ஆணை போட சொல்றார். சுக்ரீவனும் அதே மாதிரி நீலனை கூப்பிட்டு order போடறான். அந்த மாதிரி சொன்னதாலே எல்லா வானராளும் வந்துண்டு இருக்கா.இது சுக்ரீவனோட உயிரை காப்பாத்தித்து. அது ஹனுமார் சொன்ன யோசனை. அந்த நாள் கடந்த ஒடனே ராமர் கோச்சிண்டு, லக்ஷ்மணன்கிட்ட நீ போய் சுக்ரீவன்கிட்ட warning குடு, எந்த கதவை திறந்து வாலியை நான் எமலோகம் அனுப்பிச்சேனோ அந்த கதவை இன்னும் மூடலைனு சொல்லு அப்டிங்கறார், அவனையும் வதம் பண்ணிடுவேன்னு. அப்போ லக்ஷ்மணன் சொல்றான், இவன் கூட என்ன பேச்சு. இவனை வதம் பண்ணிடலாம். ஹனுமான் அங்கதன் எல்லாம் இருக்கா அவாளை கொண்டு சீதையை தேடிக்கலாம் அப்டின்னு. அப்போ ராமர் இல்ல இல்ல, அன்னிக்கு அவன் நான் எல்லாத்தையும் இழந்து அவ்ளோ துக்கத்துல இருந்த போது, உன் கஷ்டம் என் கஷ்டம். நீயும் நானும் friends அப்டின்னு சொன்னான். அது திருப்தியா இருந்தது அன்னிக்கு எனக்கு, அதனால நான் அதை நெனைச்சு பாக்கறேன். நீ போய் சொல்லு அவன்கிட்ட, அவன் வழிக்கு வருவான் அப்டிங்கறார்.
அந்த மாதிரி கடுங்கோபத்தோட, ஆதிசேஷனோட அம்சமாச்சே லக்ஷ்மணன் , சீறிண்டு போறார். அங்க எல்லாரும் பயந்து போய்டறா. அங்கதன் போய் சுக்ரீவன், தாரை , ருமை கால பிடிச்சு கெஞ்சறான். சுக்ரீவன் கொஞ்சம் தெளிவடையறான். மந்த்ரிகள் எல்லாம் கூப்பிட்டு நான் என்ன தப்பு பண்ணேன் இப்போ. லக்ஷ்மணன் ஏன் இவ்ளோ கோபமா இருக்கான் அப்டிங்கறான். அப்போ ஹனுமார் சொல்றார், நீ ராஜா நான் மந்திரி தான். பயத்தை விட்டு சொல்றேன், நீ என்னை கொல்றதுக்கு கூட order போடலாம், “ப⁴யம் த்யக்த்வா ப்³ரவீமிஹம்” நீ ராம கார்யத்தை மறந்துட்ட . ஆனாலும் ராமருக்கு உன்கிட்ட ப்ரியம் இருக்கறதால அவரே வராம லக்ஷ்மணனை அனுப்பிச்சிருக்கார். நீ லஷ்மணன் கிட்ட மனைவி குழந்தைகள் கூட போய் , கை கூப்பி கால்ல விழுந்து மன்னிப்பு கேளு. அது ஒண்ணு தான் உனக்கு பொழைக்கறதுக்கு வழி அப்டின்னு அவ்ளோ தைர்யமா சொல்றார். சுக்ரீவன் சரின்னு சொல்லிட்டு தாரையை அனுப்பறான், பெண்களை பாத்தா மஹான்கள் கோச்சுக்க மாட்டா, நீ போய் லக்ஷ்மணனை சமாதான படுத்தி கூட்டிண்டு வா அப்படின்னு. அதே மாதிரி தாரை அழகா பேசறா. என்ன பண்றது, தேஹ தர்மம் , பெரிய பெரிய ரிஷிகள் எல்லாம் இதுல விழுந்துடறா. இவன் குரங்கு ஏதோ காணாததை கண்டது மாதிரி நடந்துண்டுட்டான், நீ கோச்சுக்காத வா அப்டின்னு சமாதான படுத்தி உள்ள கூட்டிண்டு போறா. அந்த பெண்க ளுக்கு மத்தியில சுக்ரீவன் இருக்கறத பாத்து லட்சுமணனுக்கு கோபம் வரது. ராமர் சொன்ன வார்த்தையை சொல்றான். இன்னும் வாலியை எமலோகம் அனுப்பிச்ச வழியை மூடலைனு சொன்னார். “என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”. அப்டி நீ செய்நன்றி மறந்துட்டா உனக்கு பிராயஸ்ச்சித்தமே கிடையாது அப்டிங்கறார். சுக்ரீவன் நடுங்கறான். அப்போ தாரை திரும்பவும் சொல்றா , ராவணன் கிட்ட கோடிகணக்கா ராக்ஷஸர்கள் இருக்கா, அதனால இவன் எல்லா வானராளையும் வர சொல்லிருக்கான். அவா வந்ததுண்டு இருக்கா. ஒண்ணுமே பண்ணாம ஒண்ணும் இல்லை, கோச்சுக்காதே இவ்ளோ அப்டின்னு சொன்னவுடனே சரி அப்டிங்கறான் லக்ஷ்மணன். அப்போதான் சுக்ரீவனுக்கு உயிர் வரது. சுக்ரீவன் எழுந்து சொல்றான், இந்த அடிமை பண்ண பிழையை பொறுத்துக்கோ. தப்பே பண்ணாதவானு யாருமே இல்ல .நான் ராம காரியத்தை மறந்தது பிழை தான் என்ன மன்னிச்சுடு. ராமருக்கு ஒண்ணும் படை எல்லாம் வேண்டாம். ஒரு ராஜா போனா பின்னாடி அலங்காரத்துக்கு சில பேர் போவா, அந்த மாதிரி நாங்கள் அலங்காரமா அவர் பின்னாடி வரோம். நீ மன்னிச்சுடு அப்டினு சொன்னவுடனே லக்ஷ்மணனும் ஆஹா இந்த மாதிரி கஷ்டகாலத்துலயும் எங்களுக்கு இப்படி ஒரு நண்பன் கிடைக்கறது தெய்வாதீனம் அப்டிங்கறான். நான் ஏதோ சொன்னதை மனசுல வெச்சுக்காத, நீ வந்து உன் நண்பன் படற கஷ்டத்தை பாத்து அவருக்கு ஆறுதல் சொல்லு , வா போலாம் அப்டின்னவுடனே ரெண்டு பேருமா ராமர்கிட்ட வரா. சுக்ரீவன் ராமர்கிட்ட சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணறான். ராமர் அவனுக்கு உபதேசம் பன்றார். தர்மார்த்த காமம், மோக்ஷம்னு இருக்கு. அந்தந்த காலத்துல அததை பண்ணனும் அப்டின்னு. புண்ய காரியம் பண்ணும்போது புண்யம் பண்ணனும். அனுபவிக்கும் போது அனுபவிக்கனும், சம்பாதிக்கும் போது சம்பாதிக்கணும். ஒண்ணுக்கொண்ணு மாத்தி பண்ணக்கூடாது அப்டின்னவுடனே அவன் கேட்டுக்கறான். அதுக்குள்ள ஹனுமான் சொல்லி , நீலன் சொல்லி நாலா திக்குலேந்தும் எல்லா வானர படையும் வந்து சேந்துடறது. அதை பாத்தவுடனே ராமருக்கு கோவமெல்லாம் போய்டறது. எப்படி சூரியன் வெளிச்சத்தை குடுக்கறானோ, இந்திரன் மழையை கொடுக்கறானோ அந்த மாதிரி நீ சொன்ன வார்த்தையை காப்பாத்துவனு எனக்கு தெரியுமே அப்டின்னு ராமர் சொல்றார். அதுக்கப்புறம் சுக்ரீவன் இது உன் படை தான், நீ சொன்ன படி கேப்பா அப்டின்னவுடனே இல்ல இல்ல நீ தான் இவாளுக்கு ராஜா நீ இவாளுக்கு உத்தரவு குடு அப்டின்னு சொல்றார் ராமர். அப்போ அவன் நாலா திக்குலயும் வானரர்களை சீதாதேவியை தேடுவதற்கு உத்தரவு குடுத்து அனுப்பறான். அதெல்லாம் நாளை பாக்கலாம் .

ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!

Series Navigation<< ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 51-60 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 51 to 60 meaningஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 71-78 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 71 to 78 meaning >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.