மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning

ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம்

उद्यद्भानुसहस्रकोटिसदृशां केयूरहारोज्ज्वलां
विम्बोष्ठीं स्मितदन्तपङ्क्तिरुचिरां पीताम्बरालङ्कृताम् ।
विष्णुब्रह्मसुरेन्द्रसेवितपदां तत्त्वस्वरूपां शिवां
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥१॥

உத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்

பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம்

விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் || 1 ||

இது அந்த மீனாக்ஷி பஞ்சரத்னத்துடைய  முதல் ஸ்லோகம். மகாபெரியவாளுடைய வாக்கை, நான் முதல் முதல்ல என்னோட ஒரு இருபது இருபத்திரண்டு வயசுல ஒரு tape கேட்டேன். அப்படி ரொம்ப thrill  ஆயிட்டேன். அதுல முதல்ல பெரியவா வந்து அந்தசிவசிவ ஶ்யந்தி ஸமம்”, மூகபஞ்சசதி, ஆர்யா சதக ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றா. அது ஆரம்பிக்கும்போது, சொல்லும்போதுகூட,கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷின்னு சொல்வா!‘, அப்படின்னு ஆரம்பிச்சார்.

அந்த கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி அப்படிங்கறதே ஒரு மந்த்ரம். பெரியவாள தூக்கிண்டுபோற, பல்லக்குல தூக்கிண்டு போற போகிகள் அதைத் தான் பாடிண்டே போவாளாம். அப்படி பெரியவாளுக்கு இஷ்டமா இருந்திருக்கு அது.

மஹாபெரியவா, மீனாக்ஷி கோவில் மதுரைல, பிரம்மாண்டமா ஒரு கும்பாபிஷேகம் நடத்தி வெச்சா. அப்படி அந்த மீனாக்ஷி தேவியை ஆதிசங்கரர் எப்படி ஸ்தோத்ரம் பண்ணியிருக்கார்ன்னு பார்ப்போம்.

எடுத்தவுடனேஉத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்அப்படிங்கறார். மஹான்களெல்லாம் அந்த அம்பாளுடைய தர்சனம் கிடைச்சபோது, ‘உதிக்கின்ற செங்கதிர்’, அப்படின்னு ஆரம்பிச்சார் அபிராமிபட்டரும். எல்லாரும் அந்த ஒளி தர்சனம் கிடைச்சபோது ஆச்சாரியப்பட்டு போயிடறா!

நம்ப ஸ்வாமி கோவில்ல போய் தர்ஷனம் பண்றதுக்கும், மஹான்கள் தர்சனம் பண்றதுக்கும் அதுதான் வித்தியாசம். அவா, அந்த உள்ளொளி ஜாஸ்தியாகி, அவாளுக்கு வெளியிலேயும் அந்த ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமா தெரியறது.

உத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” – கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”! ‘அஹம்‘ –  நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன், அப்படின்னு சொல்றார்.

இந்தமீனாக்ஷி’ங்கற பேருக்கே மீன் போன்ற நீண்ட கண்கள். அந்த தமிழ்ல கூட அங்கயற்கண்ணி, ‘கயல்’னா மீன், ‘அம்’  ‘கயற்’  கண்ணி’, அழகான மீன்போன்ற கண்கள், அப்படின்னு மீனாக்ஷிக்கு தமிழ்ல பேரு!

மீனாக்ஷி தேவியுனுடைய சரித்ரம் ரொம்ப அழகா இருக்கும். மலயத்வஜ பாண்டியன்னு இருந்தான். அவன் மதுரைல பிள்ளை வரம் வேண்டி, அஸ்வமேத யாகம் பண்றான். இந்திரன் வந்து,நீ புத்திரகாமேஷ்டியும் பண்ணு!’ங்கறார். அந்த மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலைன்னு, அவ போன ஜென்மத்துலஅம்பாளே தனக்கு குழந்தையா பொறக்கணும்’னு வேண்டிண்டு வந்து மனுஷ ஜென்மம் எடுத்து வந்திருக்கா. அந்த இந்திரன் சொல்றான், ‘உனக்கு அம்பாளே குழந்தையா பொறப்பா! புத்திரகாமேஷ்டி பண்ணு!’ன்னவுடனே, புத்திரகாமேஷ்டி யாகம் பண்றார்.

அந்த யாக குண்டத்லேர்ந்து மூணு வயசு குழந்தையா, அம்பாள் பச்சைபசேல்ன்னு காட்சி கொடுக்கறா! காஞ்சனமாலை எடுத்து அணைச்சு பால் கொடுக்கறா. ஒரு ஆச்சர்யமா, மூணாவது ஸ்தனம் இருக்கு அம்பாளுக்கு! அப்போ ஸ்வாமிட்ட, ‘சுந்தரேச பெருமான்’ட்ட போய், கோவில்ல வேண்டிண்டவுடனே, ‘நீ வளர்த்துண்டுவா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த  மூணாவது ஸ்தனம் மறைஞ்சிடும்!’, அப்படின்னு பகவான் சொல்றார். வளர்த்துண்டு வந்தார். மலையத்வஜ பாண்டியன் கைலாசம் போயிடறார். இந்த காஞ்சனமாலை வளர்த்து, இந்த மீனாக்ஷி, ஆண்மகன்களைக் காட்டிலும் ரொம்ப வீரத்தோட இருக்கா! அங்க மீனாக்ஷியே ராணியா ஆட்சி பண்றா!

அது கூட போறாது, ‘கல்யாணம் பண்ணிகோம்மா’ன்ன போது, ‘இல்லை நான் திக்விஜயம் பண்றேன்!’னு, உலகத்துல எல்லா தேசங்களையும் பெரும்படை எடுத்துண்டு போய் ஜெயிசிண்டே வரா.

இந்திராதி தேவர்களை கூட ஜெயிச்சாச்சு. கைலாசத்துக்கு வர்றா. கைலாசத்துக்கு வந்து, அவளுடைய வீரத்துல பூதகணங்கள், நந்தி பகவான் எல்லாம் நடுங்கறார், அப்போ ஸ்வாமி, தானே, பரமேஸ்வரன் யுத்தத்துக்கு வரார். ஸ்வாமிய பார்த்தவுடனே வீரம் வந்து காதலா மாறிடறது. அம்பாளுக்கு வெட்கம் வர்றது. குனிஞ்சுக்கறா. மூணாவது ஸ்தனம் மறைஞ்சிடறது! அப்போ, மதுரைக்கு திரும்பி வந்தவுடனே, பரமேஸ்வரன் வந்து பெண் கேட்கறார். உலகங்களெல்லாம் ஜெயிச்சு, பரமேஸ்வரனுடைய மனத்தையும் ஜெயிச்சுண்டு வந்திருக்கான்னு காஞ்சனமாலை, சுந்தரேஸ்வரருக்கும் மீனாக்ஷிக்கும் கல்யாணம் பண்ணிவைச்சு, சுந்தரேஸ்வரரை அங்கேயே இருக்க சொன்னா, அப்படின்னு ஒரு அழகான வரலாறு.

மதுரைல பிரம்மாண்டமான கோவில். உத்சவங்களெல்லாம், ‘சித்திரை உத்சவம்’, அவ்ளோ ப்ரமாதமா பண்ணுவா. அதுக்கும்மேல, மாணிக்கவாசகருக்குபிட்டுக்கு மண் சுமந்த உத்சவம்’, இப்படி பல உத்சவங்கள் பண்ணுவா. ஊரே கோவில் அங்கே! வீதிகளோட பேர் எல்லாம்கூட தமிழ்ல அழகா, ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, அப்படி எல்லாம் இருக்கும். தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட நகரம் மதுரை நகரம்! அந்த மதுரைல, மீனாக்ஷி ஆட்சி பண்ணிண்டிருக்கா.

நம்ம தேசத்துல, ஹிமாச்சலத்துலபர்வதகுமாரி’யா, இங்கேகன்யாகுமரி’யா  இந்த தேசத்துல, ‘காமக்யா’வா, அப்படி தேசம் முழுக்க சக்தி வழிபாடு எங்கும் நடந்திருக்கு! ஆசார்யாள், அத்வைத ஆசாரியாள், ‘அம்பாளை இந்த மாதிரி ஸ்தோத்ரம் பண்ணுவாரா?’ன்னா, பண்ணத் தான் செய்வார்!

ஏன்னா,

ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |
விபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் யுவதிபிம்போஷ்டம் ||48||

அப்படின்னு,காமாக்ஷி கடாக்ஷம் கிடைத்தவர்கள், காமம், பயம், கோபம் அதெல்லாம் அற்ற பின்ன தான், அதெல்லாம் போனபின்ன, அம்பாளுடைய அந்த லீலையை இந்த உலகமா பார்க்கறா!”. அப்போ இதை ரொம்ப சந்தோஷமா இதை ஸ்தோத்ரம் பண்றா. அதுதான் அவாளுடைய காரியமே! இந்த பரமேஸ்வரன் சிவமா இருக்கார்! அந்த சக்தியுனுடைய லீலைதானே! அந்த சக்தியினுடைய லீலையைப் பார்த்து, அது எங்கே விபூதியோட இருக்கோ, இந்த மீனாக்ஷி கோவில் சந்நிதியில, அம்பாள் சந்நிதி, அதெல்லாம் பார்க்கும்போது அவாளுக்கு ரொம்ப ஆனந்தம் மேற்கரிச்சு, அழகழகான ஸ்தோத்ரங்கள் பண்ணியிருக்கா! அது நம்பளுடைய பாக்கியம். அப்படி, “உத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்அப்படிங்கறார்.

இதே மாதிரி மூககவியும்,

மநோகே³ஹே மோஹோத்³வதிமிரபூர்ணே மம முஹு:

³ரித்³ராணீகுர்வந்தி³நகரஸஹஸ்ராணி கிரணை: |

‘ஆயிரக்கணக்கான சூரியர்களையும் மழுங்கடிக்கக்கூடிய ஒளியோடு விளங்கும் காமாக்ஷியினுடைய சரண மணி தீபம், என் மனத்தில இருக்கற இருட்டை போக்கிக்கொண்டு, ஒரு க்ஷணம் சாந்நித்யம் ஆகாதா!’ அப்படின்னு ஒரு ஸ்லோகம் சொல்லிருக்கார். 26வது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல,

मनोगेहे मोहोद्भवतिमिरपूर्णे मम मुहुः
दरिद्राणीकुर्वन्दिनकरसहस्राणि किरणैः
विधत्तां कामाक्षि प्रसृमरतमोवञ्चनचणः
क्षणार्धं सान्निध्यं चरणमणिदीपो जननि ते 26

மநோகே³ஹே மோஹோத்³வதிமிரபூர்ணே மம முஹு:

³ரித்³ராணீகுர்வந்தி³நகரஸஹஸ்ராணி கிரணை: |

விதத்தாம் காமாக்ஷி ப்ரஸ்ருʼமரதமோவஞ்சநசண:

க்ஷணார்தம் ஸாந்நித்யம் சரணமணிதீ³போ ஜநநி தே || 26 ||

அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.

அந்த மாதிரி, இந்த மீனாக்ஷிதேவியை பார்த்தவுடனே,ஆயிரம் கோடி சூரியர்களுடைய பிரகாசத்தோட விளங்கும் மீனாக்ஷிதேவியை நான் நமஸ்கராம் பண்ணிண்டே இருப்பேன்”னு சொல்றார்.

அந்த மீனுடைய கண்கள் மூடவே மூடாது. அந்த மாதிரி, மீனாக்ஷிகாருண்ய வாராம் நிதிம்‘ – ‘கருணை கடல்’ங்கறார். ‘அந்த கண்ணை இமைக்காம தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துண்டே இருக்கா! காப்பாத்திண்டே இருக்கா!’, அப்படின்னு ஒண்ணு சொல்லுவா.

இன்னொண்ணு, மீன் முட்டைய வந்து கண்ணால பார்த்தே பொரிச்சுடும்! ஆமை கடல்ல இருந்துண்டு, இங்க நிலத்துல வந்து முட்டை போட்டுட்டு, மனசால நினைச்சே பொரிச்சுடும். கோழி, மேல உட்கார்ந்து அடைகாத்து பொரிக்கும். அந்த மாதிரி குருவுடைய தீஷை வந்து, தலை மேல கை வெச்சு ஸ்பர்ஶ தீஷை குடுக்கலாம்! இல்லை கண்ணால பார்த்து நயன தீக்ஷை குடுக்கலாம்! இல்ல நினைச்சே, இங்க உட்கார்ந்துண்டு, ஆசார்யாள் தோடகருக்கு ஞானம் வரட்டும்னு நினைக்கலையா? அந்த மாதிரி நினைச்சாலே சிஷ்யனுக்கு ஞானம் வந்துரும்! அப்படி, மீனாக்ஷி நயன தீக்ஷைனால ஞானத்தைக் கொடுப்பவள்.

மீனாக்ஷிகிட்ட நயன தீக்ஷைனால ஞானத்தை வாங்கிண்டவாள்ல, ரொம்ப, நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்சது, ரமணபகவான். ரமணபகவான் திருச்சுழிங்கற இடத்துல பொறந்தார். மதுரைல வளர்ந்துண்டு வந்தார். நாயன்மார் சந்நிதில போய் நின்னுண்டு, உங்கள மாதிரி பக்தி எனக்கு வராதான்னு தினம் அழுவார். அப்போ, ஒரு நாளைக்கு மீனாக்ஷி சந்நிதில அவருக்கு நயனதீக்ஷை கிடைச்சது.

இந்த, மீனாக்ஷியினுடைய நயனத்துனால ஞானம் அடைந்தவர்ங்கிறதுக்கு இன்னொரு அடையாளம், ரமண பக்தர்கள் எல்லாருமே, முதல்ல அவர் முன்னாடி போய் நின்னவுடனேயே, அவருடைய அந்த பார்வையினாலேயே எங்களுக்கு பரமசாந்தியா உணர்ந்தோம், உயர்ந்த பேரானந்தத்தை அனுபவிச்சோம்ன்னு சொல்வா. அப்படி அந்த மீனக்ஷியினுடைய நயனப் ப்ரபாவம், இவருடைய நயனத்துக்கு வந்துடுத்து! அப்படி, கண்கள் அவ்வளவு ப்ரபாவம். அவ்வளவு கருணை நிரம்பின அந்த கண்கள் – “மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்”.

அப்புறம் ராணி அல்லவா, மஹாராஜ்நீ, அதனால,கேயூரஹாரோஜ்ஜ்வலாம்” – கைவளையல்கள், தோள்வளையல்கள் கழுத்துல மாலைகள், எல்லாம் ஜொலிக்கறது.

அந்த அழகு, “பி³ம்போ³ஷ்டீ²ம்” – கோவைப்பழம் போன்ற உதடு. இந்த கோவைப்பழம்ங்கறது, நம்ம பச்சையா கோவைக்காய்தான் பார்த்திருப்போம். நல்ல சிவந்தா, நல்லா பழுத்தா, செக்கச்செவேல்ன்னு ஆயிடும். அந்த மாதிரி உதடு!

கோவைப்பழம் போன்ற உதடு’ன்ன உடனே, மூககவி ஆர்யா சதகத்துல, ரொம்ப அழகா ஒரு கவிதை சொல்றார்.

कलमञ्जुलवागनुमितगलपञ्जरगतशुकग्रहौत्कण्ठ्यात्
अम्ब रदनाम्बरं ते बिम्बफलं शम्बरारिणा न्यस्तम् 99

கலமஞ்ஜுளவாக³னுமிதக³ளபஞ்ஜரக³தஶுகக்³ரஹௌத்கண்ட்²யாத்

அம்ப³ ரத³நாம்ப³ரம் தே பி³ம்ப³²லம் ஶம்ப³ராரிணா ந்யஸ்தம் || 99 ||

அப்படின்னு 99வது ஸ்லோகம் ஆர்யா சதகத்துல. “கலமஞ்ஜுள வாக்” –அம்பாளுடைய வாக்கு, ரொம்ப இனிமையான அந்த சப்தம், அதை கேட்டுட்டு,  “³ளபஞ்ஜரக³” – தொண்டைங்கறபஞ்சரம்’கூட்டுக்குள்ள ஏதோ ஒரு கிளி இருக்கு என்றுஅனுமித” – மன்மதன் நினைச்சானாம். இவ்ளோ அழகா ஒரு குரல் கேக்கறதே! அப்ப இந்த கழுத்து, தொண்டைங்கற கூட்டுக்குள்ள ஒரு கிளி இருக்கு! “கலமஞ்ஜுள வாக்³ அனுமித” – அந்த வாக்கை கொண்டு அவன் அனுமானம் பண்ணான். என்ன? ஒரு கிளி இருக்குன்னு.

³லபஞ்ஜரக³” – தொண்டைங்கற பஞ்சரம், கூண்டுக்குள்ள இருக்கிற,  “ஶுகக்³ரஹௌத்கண்ட்²யாத்” – இந்த கிளியை பிடிக்கணும் அப்படிங்கறதுக்காக என்ன பண்ணானாம், “அம்ப³ ரத³நாம்ப³ர” – ‘ரத³நா’ன்னா பற்கள்,  ‘ரத³நாம்ப³ரம்’பற்களை மூடற ஒரு திரைப் போல, துணி போல, அப்படின்னா என்ன அர்த்தம்? பற்களை எது மூடி இருக்கு? உதடு!  “ரத³நாம்ப³ரம் தே” – அந்த உள்ள இருக்கற கிளியை பிடிக்கறதுக்காக, இந்த உதடுங்கற பேர்ல,பி³ம்ப³²லம் ஶம்ப³ராரிணா ந்யஸ்தம்” – ‘ஒரு கோவைபழத்தை  மன்மதன் வெச்சிருக்கான்!’ அப்படிங்கறார். ‘கோவைபழத்துக்கு கிளி ஆசைப்பட்டு வரும் அப்போ பிடிச்சுடலாம்!’ அப்படின்னு. அவ்ளோ அழகான ஒரு கவி.

அது மாதிரி அம்பாளுடைய அதரம், “பி³ம்போ³ஷ்டீ²ம்கோவைபழம்போல இருக்கு, அப்படின்னு சொல்றார்.

ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம்”புன்னகையோடு கூடிய அழகான பல்வரிசை.

பீதாம்ப³ராலங்க்ருʼதாம்”தங்கப் பட்டாடை அணிந்து கொண்டிருக்கிறாள். மஹாராஜ்நீ! ராஜராஜேஸ்வரி! இந்த பல்வரிசை, வெள்ளைவெளேர்ன்னு சிரிப்பா அழகா இருக்குன்னவுடனே, இதுக்கும் மூககவியோட ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரது,

ताम्राम्भोजं जलदनिकटे तत्र बन्धूकपुष्पं
तस्मिन्मल्लीकुसुमसुषमां तत्र वीणानिनादम्
व्यावृन्वाना सुकृतलहरी कापि काञ्चिनगर्याम्
ऐशानी सा कलयतितरामैन्द्रजालं विलासम् 69

தாம்ராம்போஜம் ஜலத³நிகடே தத்ர ³ந்தூகபுஷ்பம்

தஸ்மிந்மல்லீகுஸுமஸுஷமாம் தத்ர வீணாநிநாத³ம்

வ்யாவ்ருʼன்வானா ஸுக்ருʼதலஹரீ காபி காஞ்சிநக³ர்யாம்

ஐஶாநீ ஸா கலயதிதராமைந்த்³ரஜாலம் விலாஸம் || ஸ்துதி சதகம் 69 ||

“ஐஶாநீ”ஈசானனுடைய மனைவியான காமாக்ஷி காஞ்சிபுரத்துல, ஓரு இந்திர ஜாலம் பண்றாள், இந்திரஜாலம்னா Majic Show, அது என்னன்னா, அவருக்கு, மூககவி, ஸ்வாமி காமகோஷ்டத்துல போய் அம்பாள தர்சனம் பண்ணிட்டு வெளில வரார். வெளில வந்தவுடனேயே ஆகாசத்துல இந்த இந்திரஜாலத்தை பாக்கறார்! என்னன்னா, “ஜலத³நிகடே”மேகத்துக்கு பக்கத்துல,தாம்ராம்போஜம்” – ஒரு பெரிய ஆகாசத்தாமரை, “தாம்ராம்போஜம் ஜலத³நிகடே தத்ர ³ந்தூகபுஷ்பம்” – அங்கே ஒரு செம்பருத்தைப் பூவாம், “தஸ்மிந்மல்லீகுஸுமஸுஷமாம்” –அந்த செம்பருத்தைப் பூவுக்குள்ள இருந்து வரிசையா மல்லிகைப்பூ! அதுக்குள்ள இருந்து வீணாநாதம்! அப்படின்னு ஒரு ஆச்சரியத்தை பார்த்தேன்! ஒரு magic பார்த்தேன்!’ அப்படிங்கறார்.

என்ன சொல்றார்ன்னா, “அம்பாளுடைய கேசபாரம் மேகம் மாதிரி இருக்கு! முகம் தாமரை போல இருக்கு! அந்த உதடு வந்து செம்பருத்தைப் பூவை போல இருக்கு! அந்த பல்வரிசை மல்லிகைப் போல இருக்கு, வரிசையா! அதுக்குள்ள இருந்து அம்பாளுடைய குரல் வீணாநாதம் மாதிரி கேக்கறது” அப்படின்னு சொல்றார். எவ்ளோ அழகான கவிதைகள் இதெல்லாம். நமக்கு பாக்கியம், இதெல்லாம் கேட்கறதுக்கு படிக்கறதுக்கு.

அடுத்தவரி,

“விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்”

மீனாக்ஷி தேவியை விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான எல்லா தேவர்களும் வணங்குகிறார்கள். அந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல்யாண வர்ணனை, நிறைய பேர், ‘சிவலீலார்ணவம்’ன்னு, நம்ப நீலகண்டதீக்ஷிதர் ரொம்ப அனுபவிச்சிருக்கார்!  குமாரசம்பவத்துல காளிதாசன் அனுபவிச்சு பாடியிருக்கார்! அப்படி கவிகளுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது அந்த பார்வதி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம்! அதுல அந்த குண்டோதரன் கதை எல்லாம் கூட வேடிக்கையா இருக்கும்.

அதுல, “விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம்” – எல்லா தேவர்களும் வரா! விஷ்ணுபகவான் தாரை வார்த்து குடுக்கிறார், மீனாக்ஷியை சுந்தரேஸ்வரருக்கு! அருந்ததி பார்ப்பா இல்லையா, அப்போ அருந்ததியே வந்து கை கூப்பிண்டு நின்னாளாம்! அருந்ததிக்கு இவா ரெண்டுபேரும் ஆசிர்வாதம் பண்றா, இப்படி அழகா போகும் அது.

“தத்வஸ்வரூபாம்” –  மற்றதெல்லாம் சித்தாந்தங்கள், கொள்கைகள். அத்வைதம் தான் தத்வம். அந்த தத்வஸ்வருபமா விளங்கக்கூடிய பரம்பொருள் காமாக்ஷி, மீனாக்ஷி.

“ஶிவாம்”மங்கள வடிவானவள். இந்த மீனாக்ஷியை, கருணைக்கடலான இந்த மீனாக்ஷியை,  “ஸந்ததம்”இடையறாது, “அஹம் ப்ரணதோ3ஸ்மி” –  நான் வணங்குகிறேன்.

உத்³யத்³பாநு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்

பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம்

விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோঽஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் ||

பாக்கி ஸ்லோகங்களை நாளைக்கு பார்ப்போம்.

நம: பார்வதி பதயேஹர ஹர மஹாதேவ

Series Navigation<< கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaningமீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.