Categories
Shankara Stothrani Meaning

ஹனுமத் பஞ்சரத்னம் 3 முதல் 6 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 3 to 6

ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை; hanumath pancharathnam stothram meaning slokams 3 to 6

ஹனுமத் பஞ்சரத்னத்துல இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம். இப்போ மூணாவது ஸ்லோகம்,
शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

‘ஶம்ப³ர:’ – ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன். மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார். அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான். பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா. அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார். ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார். “என்னடா இது? பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே! இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு!”. அப்புறம், “மனசுதான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு. அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை. ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன். நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்? மான் கூட்டத்துலயா தேட முடியும்? அதனால நான் இங்க வந்தேன்!”னு சொல்றார். அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.
அந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார். Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும். ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது. “ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும். அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது. நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால, உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார். இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார். அப்படி அவருடைய வைபவம்! அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால! தனக்கு எந்த சக்தியுமே இல்லை. ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார் அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்!
‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.
அது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள். ‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.
‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.
‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர். பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார். சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு! எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார். ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction!’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான். ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது. உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்!”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார். உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும், இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார். அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.
‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.
‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது. நானே குழந்தைகள்கிட்ட சொல்வேன். இந்த காலத்து புஸ்தகங்கள்ல, fantasy booksல, super power இருக்கிற charactersலாம் create பண்றா. ஹனுமார் மாதிரி வர முடியுமா? நமக்கு ஹனுமார்தான் superman! தன்னிகரில்லாத ஹனுமார்!
बुद्धिर् बलम् यशो धैर्यम् निर्भयत्वम् अरोगता |
अजाड्यम् वाक् पटुत्वम् च हनुमत् स्मरणात् भवेत्॥
புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||
அப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம், நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும். ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர், இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம். அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும். அப்படி மஹாபெரியவா இந்த ஸ்லோகத்துக்கு விஸ்தாரமா அர்த்தம் சொல்லியிருக்கா! அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை, ‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன். இது 3வது ஸ்லோகம்.
दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः ।
दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ – சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து, அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான். கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா?”
“किमर्थम् तव नेत्राभ्यां वारि स्रवति शोकजम् |”
“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”
ஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது? நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும், பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான்! தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன். நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண், ராமருடைய மனைவி சீதையா?”ன்னு கேட்கறார். அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும்போது,
“मा रुदो देवि शोकेन माभूत्ते मनसोऽप्रियम्।“
“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”
“அம்மா! இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம். உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்!”னு சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.
‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ – ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார்தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி, “என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ!”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார். “எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ, அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.
‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ – ‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார். முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா! நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே! சுகப்பட்டே! ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர்கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,

सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्।
पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।।
ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |
புனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||
“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர்! அவர்கிட்ட அபசாரம் பண்ணா, நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது!”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான். விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான். அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.
‘रुद्रेण त्रिपुरम् यथा’
‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ – எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார்! முதல்ல அசோகவனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார். அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.
जयत्यतिबलो रामो लक्ष्मणश्च महाबलः ।
राजा जयति सुग्रीवो राघवेणाभिपालितः ।।
दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः ।
हनुमाञ्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः ।।
न रावणसहस्रं मे युद्धे प्रतिबलं भवेत् ।
शिलाभिस्तु प्रहरतः पादपैश्च सहस्रशः ।।
अर्दयित्वा पुरीं लङ्कामभिवाद्य च मैथिलीम् ।
समृद्धार्थो गमिष्यामि मिषतां सर्वरक्षसाम् ।।
ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||
தா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||
என்று கர்ஜிக்கறார். “1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது! ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம். ஆனா ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன்! யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன்! சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன். என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ ! நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார். அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான். அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.
‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – “அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்!”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார். அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது. ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ, எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ, அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார். அப்பேற்பட்ட ஸ்லோகம்.
தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

அடுத்தது, 5 ஆவது ஸ்லோகம்…
वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृक्षम् ।
दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ – வானர கூட்டத்தில் சிறந்த தலைவர்! ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும்போது, “ஹே ஹனுமான்! நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்!”னு சொல்றார். ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோகவனத்தை அழித்தபோது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான். 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை. சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன், ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே!”ன்னு ராவணனே சொல்றான். அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார். இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம். இப்ப இவாளே கூட்டிண்டு போறா!”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர். இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்
“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.
वज्री महेन्द्रस्त्रिदशेश्वरो वा साक्षाद्यमो वा वरुणोऽनिलो वा ।
रुद्रोऽग्निरर्को धनदश्च सोमो न वानरोऽयं स्वयमेव कालः।।
வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரித3ஶேஶ்வரோ வா
ஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஶ்ச ஸோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||
இது சாதாரண வானரமா தெரியலை! ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா. சாக்ஷாத் எமனா? வருணனா? வாயுவா? ருத்ர பகவானா? அக்னியா? குபேரனா? சாதாரண சோமனா? அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.
किं ब्रह्मणः सर्वपितामहस्य सर्वस्य धातुश्चतुराननस्य।
इहागतो वानररूपधारी रक्षोपसंहारकरः प्रकोपः।।
கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||
“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா?”
किं वैष्णवं वा कपिरूपमेत्य रक्षोविनाशाय परं सुतेजः।
अनन्तमव्यक्तमचिन्त्यमेकं स्वमायया सांप्रतमागतं वा।।
கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||
விஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா? “மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்!”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது, இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார். அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்!
‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.
वलक्षश्रीर्ऋक्षाधिपशिशुसदृक्षैस्तव नखैः
जिघृक्षुर्दक्षत्वं सरसिरुहभिक्षुत्वकरणे ।
क्षणान्मे कामाक्षि क्षपितभवसङ्क्षोभगरिमा
वचोवैचक्षन्यं चरणयुगली पक्ष्मलयतात् ॥57॥
வலக்ஷஶ்ரீர்ருʼக்ஷாதி3பஶிஶு ஸத்3ரு’க்ஷைஸ்தவ நகை2:
ஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |
க்ஷணான்மே காமாக்ஷி க்ஷபிதப4வஸங்க்ஷோப4க3ரிமா
வசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||
என்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு!
‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார். இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.
‘தா³நவகுல’ – ராக்ஷஸகுலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர். அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார். ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான், நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார். ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும்! நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு. உன்பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன். ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா!”ங்கறார். உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான். ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்
“இந்தா!”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார். அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான். இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான்! நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான். அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து பலசாலின்னு சொல்றதாவது! எனக்கு அவமானம்”ங்கிறார். உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான். இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.
அப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான். அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான். லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால, லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம். லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து, “ஒரு குத்து பாக்கியிருக்கு! இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான். ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது! லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர்கிட்ட சேர்த்துடறார். ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்!”னு ராவணனோட யுத்தம் பண்றார்.
ராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம். அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது! இவ்ளோ அம்பு வர்றது, நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது! ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே, ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும், ‘கர’ வதம் போது! இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு! பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார். குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து. தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார். முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது! ஆனா ராமர், “நீ பிழைச்சு போ! நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க. ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன். நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா!”ங்கறார் ராமர். இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது!
அப்பேற்பட்ட வீரம்! ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.
‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ – இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார். ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்!”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ, அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்!” அதுதான் நமக்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்!
‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ – ‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது. அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்!’னு சொல்றார். போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – “என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்!”னு சொன்னார். “இங்க ஹனுமாரை கண்டேன்!”ங்கிறார். அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்!
एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् ।
चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥

ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ – இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,
‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ – ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,
‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ – வெகுகாலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,
‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ – ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான்! ஹனுமாரை தியானம் பண்ணா, ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராமபக்தி வராதா? அப்பேற்பட்ட ராமபக்தர் அவர்!
அவரை பார்க்கும்போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா! பரத்வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத்வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு. பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார். “உனக்கென்ன வரம் வேணும்?”ங்கிறார். ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும் தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்!”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக! பரத்வாஜரும், “ஆஹா!”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு. என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார். நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார். ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராமகாரியம் தான் அவருக்கு விருந்து! ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.
சுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான். நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து, ‘த்ருஷ்டா சீதா!’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன். எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்!”னு சொல்றார். ஆனா யார் பார்த்துட்டு வந்தா? ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர். அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.
ஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும். தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு! ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல், எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ, அந்தமாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும்! அப்படி இந்த ஸ்லோகத்தை நாம அடிக்கடி படிப்போம்.
5 ஸ்லோகத்தையும் படிச்சு பூர்த்தி பண்ணிகறேன்.
वीताखिल-विषयेच्छं जातानन्दाश्र पुलकमत्यच्छम् ।
सीतापति दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥

तरुणारुण मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् ।
सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥

शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥

दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः ।
दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥

वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृक्षम् ।
दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥

एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् ।
चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।
ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।
ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் ।
கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥

தூ³ரீக்ருʼத-ஸீதார்தி: ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி: ।
தா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥

வாநர-நிகராத்⁴யக்ஷம் தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம் ।
தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥

ஏதத்-பவன-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய꞉ பட²தி பஞ்சரத்னாக்²யம் ।
சிரமிஹ-நிகி²லான் போ⁴கா³ன் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

Series Navigation<< ஹனுமத் பஞ்சரத்னம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 1 and 2

2 replies on “ஹனுமத் பஞ்சரத்னம் 3 முதல் 6 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 3 to 6”

Sri Rama Jaya Rama Jaya Jaya Rama!! 🙏
Namaskarams Anna 🙏
A day to fully revel in Hanuman smaranai.
The essence of
Superman, spiderman fictional characters can never match Lord Hanuman. The highlight of Ramayanam is Hanuman.
Hanuman’s form as painted in your words brings lots of courage. No wonder he’s our real “HERO” GOD.

Assured by our Acharyal for Hanumath darshanam, to recite Hanumath Pancha rathnam, get his darshanam and unswerving faith in Lord Rama. 🙏 🙏
Jai Hanuman ! Jai Sriram !! 🌺🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.