Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 36 தமிழில் பொருள் (20 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 36)

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

இந்த சிவானந்தலஹரில, ஒவ்வொரு ஸ்லோகம் பார்க்கும் போதும், இது தான் 100ல ரொம்ப ரொம்ப அழகா இருக்குன்னு தோணறது. அடுத்தது படிக்கும் போது, இது அதைவிட அழகா இருக்குன்னு தோணறது!

போன ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராமி அந்வஹம்’ – இடைவிடாது என் மனசுல நீ எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமானவன், ரொம்ப நெருக்கமானவன் அப்படீன்னு நினைச்சுண்டே இருக்க முடியும். என்னால வேற என்ன பண்ண முடியும்? ஏன்னா பாக்கி எல்லாமே நீயே பார்த்து பண்ற! நீயே சர்வக்ஞனா இருக்க! நீயே குருவா வந்து எனக்கு எது நல்லதுன்னு சொல்லித்தர. அந்த வழில போறதுக்கு என்னென்ன என்கிட்ட வந்து சேரணுமோ அதெல்லாம் சேர்த்து வெக்கற. அதெல்லாம் என் கையை விட்டு போகாம பாத்துக்கற. அப்படி இவ்வளவு ஷ்ரேயஸ கொடுக்கணும், யோக க்ஷேமத்தைப் பார்த்துக்கணும்னு பண்ணும் போது, உன்கிட்ட நான் வந்து முறையிடறதுக்கு என்ன இருக்கு?

‘ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ – உனக்கு சொல்றதுக்கு என்ன இருக்கு? அதனால இப்படி ஒருத்தர் எனக்கு கிடைச்சியேன்னு சந்தோஷத்துல இருக்கேன் அப்படீன்னு சொல்றார். இந்த அநுபவம் ஒரு நல்ல ஸத்குரு கிடைச்சவாளுக்கு இருக்கும். அந்த ஸத்குரு கிட்ட தன்னை ஒப்படைச்சாலே, பாரமெல்லாம் இறங்கி, அவர் அப்படி நம்மளைப் பார்த்துக்கறார் அப்படீங்கிறது தான் பகவத் அனுக்ரஹத்தோட முதல் ருசி. பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் நம்மளைப் பார்த்துக்கறார். அவர் கிட்ட நம்மளை ஒப்படைச்சா, நம்ப இவ்ளோ பாரம் சுமக்க வேண்டாம். அவர் ஒவ்வொரு நாளும் lifeஏ வந்து எதையாவது சேர்க்கறதுக்கு, எதையாவது ஒண்ணு acquire பண்றதுக்காக, bankல பணமோ, எதோ ஒண்ணு நம்மகிட்ட சேரறதுக்காக உழைக்கறோம். அந்த சேர்ந்தது நல்லபடியா இருக்கா? அதை எங்க கொண்டுபோய் invest பண்றது அப்படீன்னு கவலைப்படறோம். இது பணத்துல. இப்படி ஒவ்வொண்ணுத்துக்கும் கவலைப்படறோம். ‘அந்த கவலை நீ படாதப்பா. நீ சந்தோஷமா enjoy பண்ணு’ அப்படீன்னு ஒருத்தர் சொன்னா எப்படி இருக்கும்? அந்த மாதிரி குருங்கிறவர் சொல்வார். சொன்னதை செய்வார். அப்போ நமக்கு, ‘ஆஹா! இவர் சொன்ன வார்த்தை நிஜம். இவர் தான் நமக்கு உலகத்துல யாரைக் காட்டிலும், bossஅ விட, அப்பா அம்மா விட, friends எல்லாம் விட ரொம்ப ஸுஹ்ருத் அப்படீங்கிற எண்ணம் வரும். அப்ப பரமாந்தரங்கம் இவர் அப்படீங்கிறது நமக்கு மனசுல படும். அப்போ அவர் கிளம்பும்போது, “நான் அந்த பரமாத்ம ஸ்வரூபத்தில் உனக்கு கிடைச்ச ஒரு சின்ன அநுபவம். இந்த ஸ்ருஷ்டியே அதே மாதிரி பகவத் ஸ்வரூபம் தான். எல்லாருமே உனக்கு பரமந்தரங்கம் தான்” அப்படீன்னு எந்த இஷ்ட தெய்வத்தை அவர் சொல்லிக் கொடுத்தாரோ அந்த இஷ்ட தெய்வம் எங்கேயோல்லாம் இல்லை. உன்கிட்ட தான் இருக்கு. நீ அதை பார்க்காம போற! “தெய்வமே பரம அந்தரங்கம்” அப்படீன்னு சொல்லிக் கொடுப்பார். “அதுக்கான முயற்சி தினமும் பண்ணு. அதையும் இதையும் சேர்க்கறதை விட்டுடு”, அப்படீன்னு சொல்வார்.

आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।
स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥60॥

ஆதி3க்ஷன்மம கு3ருராடா3தி3க்ஷாந்தாக்ஷராத்மிகாம் வித்3யாம் |
ஸ்வாதி3ஷ்ட2சாபத3ண்டாம் நேதி3ஷ்டா2மேவ காமபீட23தாம் ||60||

(மூகபஞ்ச சதீ ஆர்யா ஶதகம்)

அப்படீன்னு ‘ஸமீபம்’ங்கிறதோட superlative ‘நேதி3ஷ்டம்’- ரொம்ப ரொம்ப நெருக்கத்தில் உள்ளுக்குள்ளேயே காமாக்ஷி இருக்கான்னு காமிச்சுக் கொடுப்பார். இன்னொரு ஸ்லோகத்துல,

नन्दति मम हृदि काचन मन्दिरयन्ती निरन्तरं काञ्चीम् ।
इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥52॥

நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம் । இந்து³ரவிமண்ட³லகுசா பி³ந்து³வியன்னாத³பரிணதா தருணீ ॥ 52 ॥

(மூகபஞ்ச சதீ ஆர்யா ஶதகம்)

‘நந்த³தி மம ஹ்ருʼதி³ காசன மந்தி³ரயந்தீ நிரந்தரம் காஞ்சீம்’ – காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் நிரந்தரமாக காமாக்ஷி நித்யவாசம் பண்றாள்னு புராணங்கள்ல சொல்றது நேரப் பார்க்கறோம். ஆனா, மூககவி சொல்றார், ‘நந்த³தி மம ஹ்ருʼதி³’ – என் மனசுல அவ நிரந்தரமா சந்தோஷமா இருக்கா அப்படீங்கறார்.

‘இந்து³ரவிமண்ட³லகுசா பி³ந்து³வியன்னாத³பரிணதா தருணீ’ – நாத பிந்து தத்துவமானவள். சூரியனையும் சந்திரனையும் ஸ்தனங்களா கொண்டவள் அப்படீன்னு அவ்ளோ பெருமை மிக்க அந்த தாயார் எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமா இருக்கான்னு சொல்றார்.

அப்படி அந்த குருங்கிறவர் காமிச்சசுக் கொடுக்கறார். ‘உள்ளம் பெரும் கோயில். ஊன் உடல் ஆலயம்’ அப்படீன்னு அந்த கோயில்ல இருக்கிற ஸ்வாமியை நமக்குள்ளேயே நாம பார்த்துட்டோமானா போரும். அந்த காலத்துல வீடுகளே அப்படி தான் கட்டுவா. ஊருக்கே ஒரு பெரிய கோயில். மஹா க்ஷேத்திரங்களெல்லாம் ஊரே கோயிலா இருக்கும். ஒரு மதுரை, ஒரு காஞ்சிபுரம்னா ஊரே கோயிலா இருக்கும். சின்ன ஊர்கள்ல கூட எல்லா வீட்டைக் காட்டிலும் கோயில் ரொம்ப பெருசா இருக்கும். பகவானுக்குத் தான் முக்கியம் நம்ம மதத்துல கொடுத்திருக்கா!

ஆம்கள்லயே கூட, உள்ளுக்குள்ள வந்தா, ஸ்வாமிக்கு பெரிய hallல பெரிய இடம். ஸ்வாமியோடது தான் வீடு. அப்புறம் சின்ன சின்ன roomல அவா அவா இருந்துக்க வேண்டியது. அப்படி self effacingஆ தன்னை முன்னிலைப் படுத்திக்காம, தான் அந்த குடும்பத்துல ஒரு அங்கம். மூத்த தலைவரா இருக்கறவர் பகவானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துப்பார். மத்தவா எல்லாம் அப்பாம்மாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துப்பா. ஒரு குருவுக்கு அந்த குடும்பமே தன்னை ஒப்புக் கொடுத்துக்கும். அப்படி நம்மளுடைய மதத்துல ‘ஒரு நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கைல கர்வப்படறதுக்கே காரணமில்லை!’ன்னு சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கா நம்மளை. அந்த ஒரு பண்பாடுல நம்மல்லாம் வந்திருக்கோம். அது என்னன்னா அந்த egoவ விடறத்துக்கு easy. என்னிக்கோ ஒரு நாள் ego வை விட்டா அன்னிக்கி நிம்மதி. அத சீக்கரமே விடறதுக்கு இந்தப் பழக்கம், இந்த சம்ஸ்காரம் ரொம்ப உபயோகம்.

அப்படி அந்த கிருஹத்துல, ஒரு இடத்துல ஸ்வாமி, ஊருக்கு ஒரு கோயில், அங்க ஸ்வாமி!  கிருஹத்துல முக்கியமா ஸ்வாமிக்கு ஒரு இடம். ஒரு பரீட்சைக்கு hall ticket வந்தா அங்க வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு போறது. Mark வந்தப்புறம் அங்க வெச்சு collegeக்கு apply பண்றது. Collegeல admission வந்தவுடனே அங்க ஸ்வாமி முன்னாடி வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு போய் சேரறதுன்னு அப்படி பழக்கிக் கொடுத்திருப்பா. அதனால ஸ்வாமி தான் முக்கியம்.

அந்த ஸ்வாமியை எங்கும் எப்போதும் நாம நமக்குள்ளேயே பார்க்கலாம்ங்கிறது அடுத்த ஒரு பாடம். அதுக்கு பழகணும். அதுக்கு அந்த குரு கொடுத்த மந்திரம். இப்படி தனக்குள்ளயே பகவான் அப்படீன்னு நினைக்கும்போது, ஆசார்யாளுக்கு ரொம்ப பரமாந்தரங்கமா நமக்குள்ளேயே அந்த பகவான் இருந்து இவ்ளோ க்ஷேமத்தைப் பண்றார் அப்படீன்னவொடனே, “அடடா! அப்படி அவர் இவ்ளோ நெருக்கத்துல இருந்து இவ்ளோ நன்மை பண்ணும்போது, நாம்ப இந்த உடம்ப நான்னு வெச்சுண்டு, என்னெல்லாமோ உடம்புக்கு சுகப்படணும்னு, தப்பு பண்ணிண்டு கஷ்டப்பட்டுண்டு இருக்கோமே! இனிமே படக்கூடாது” அப்படீன்னு இந்த உடம்புக்கு ஒரு புண்யாஹவாசனம் பண்ணணும். ‘புண்யாஹவாசனம்’ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சொல்றேன். ஒரு ‘ஆசௌசம்’ அப்படீம்பா. பிறப்பு இறப்பு தீட்டு ஏதாவது வந்துடுத்துன்னா, இல்லை புது கிரஹத்துக்கு போகப்போறோம்னா, ஒரு இடத்துல தூய்மைப்படுத்திட்டு அங்க இருக்கணும்னு நினைச்சு பண்ற ஒரு சடங்குக்கு ‘புண்யாஹவாசனம்’ன்னு பேரு.

‘புண்யாஹம்’  – ‘அஹம்’ன்னா இன்னி தேதி, இன்னி நாள்னு அர்த்தம். புண்யாஹம்ன்னா “இந்த நாள் புண்ய நாளாக ஆகட்டும். இதுவரைக்கும் போனதெல்லாம் போகட்டும். இனிமேல் இன்னிலேர்ந்து நாட்கள் நல்ல நாட்களாக இருக்கட்டும். மங்களங்கள் நம்மை வந்து சேரட்டும்!” அப்படீன்னு வேதம் படிச்ச பிராம்மணர்களைக் கொண்டு, சத்தியமும் கருணையும் நிரம்பி அவா ‘ஸர்வ பூத ஹிதே ரதா:’ன்னு எல்லாருடைய நன்மையையும் விரும்புவர்களாக இருக்கிறவர்களைக் கொண்டு,

பத்ரம் கர்ணே’பி: ஶ்ருணுயாம’ தேவா: |

பத்ரம் ப’ஶ்யேமாக்ஷபிர்யஜ’த்ரா: |

ஸ்திரைரங்கை”ஸ்துஷ்டுவாக்‍ம் ஸ’ஸ்தனூபி:’ (அருணம்)

அப்படீன்னு வேத மந்திரங்களெல்லாம் “மங்களமான விஷயங்களையேப் பார்க்கணும், மங்களமான விஷயங்களையே கேட்கணும். எங்க உடம்பு சொஸ்தமா இருந்து மங்களமான காரியங்களையே பண்ணிண்டிருக்கணும்” அப்படீங்கிறமான பிரார்த்தனைகளெல்லாம் வேதத்துல இருக்கு!

அந்த மாதிரி வேத சப்தங்களை ப்ராம்மணர்களைக் கொண்டு, ஜபிக்கப் பண்ணி, அது ஜபிக்கறதுக்கு முன்னாடி ஒரு வாழையிலையோ ஒரு தட்டோ போட்டு நெல்லோ அரிசியோ பரப்பி, அது மேல ஒரு கும்பத்தை வெச்சு, வெள்ளிலையோ வெண்கலத்துலயோ ஒரு பானையை வெச்சு, அந்த பானைக்கு முப்புரி நூல்களைக் கொண்டு அழகா சுத்துவா. அந்த நூலை சுத்தி, அதுக்குள்ள தூய்மையான ஜலத்தை நிரப்பி, அதுமேல மாவிலையை வெச்சு, அதுமேல தேங்காயை வெச்சு, அப்புறம் உட்கார்ந்து எல்லா ப்ராம்மணர்களும் அந்த வேத மந்திரங்களை ஜபிச்சு, அந்த தூய்மையான ஜலத்தை உத்ரணில கொடுத்து, அதைக் கைல வாங்கி குடிச்சு பிரார்த்தனை பண்றது. ஆம்ல எல்லா மூலைலயும் அந்த மாவிலையைக் கொண்டு அந்த ஜலத்தை தெளிப்பா, ப்ரோக்ஷணம் பண்றது. அப்படி ப்ரோக்ஷணம் பண்ணா, அதோட பழைய அழுக்கு, தூய்மையின்மை எல்லாம் போய் எல்லாமே தூய்மையாயிடறது. அந்த மாதிரி புண்யாஹவாசனம் பண்ணினா அதுக்கப்புறம் மங்கள கார்யங்கள் நடக்கும்.

அந்த புண்யாஹவாசனத்தை இங்கே ஆசார்யாள் தன்னுடைய உடம்புக்கே பண்றார்! உடம்புக்கு பண்ணப்போறோம், உள்ள இருக்கற பகவானுக்கு இந்த உடம்பை ஏத்த வாசஸ்தலமா ஆக்கணும்ங்கிறபோது, வெளியிலே கிரஹத்துக்குப் பண்ற மாதிரி பொருள்களை வெச்சு பண்ணவேண்டாம். வேறமாதிரி அதுக்கு equivalentஆ இருக்கிற குடமும் மாவிலையும் தேங்காயும் வெச்சு பண்ணலாம் அப்படீன்னு இந்த 36வது ஸ்லோகத்துல சொல்றார்.

இவர், “நான் பக்தன்” அப்படீங்கறார்.  ‘ஸாம்ப³’ – “அம்பாளுடன் கூடிய ஹே பரமேஸ்வரா!”. அம்பாளோட கூடியிருக்கும் போது அநுகிரஹம் அதிகம் பண்ணுவார். அந்த பரமேஸ்வரன்கிட்ட சொல்றார். “நான் பக்தன். அதனால இந்த வைதீகாள் வேதமார்க்கமா பண்ற புண்யாஹவாசனத்தை, நான் பக்திமார்கமா பண்றேன்”. அது என்னன்னா?

‘ப்ரஸந்நே மந: கும்பே⁴ ‘ – ப்ரஸன்னமான, ரொம்ப தெளிவான, குழப்பங்களே கிடையாது. நான் தெரிஞ்சுண்டேன். நீ என் மனசுல இருக்க. நீதான் எனக்கு பரமக்ஷேமத்தைப் பண்ணக்கூடிய ‘ஸுஹ்ருத்’ன்னு தெரிஞ்சுண்டேன். நீ என் மனசுல இருக்கங்கிறதையும் தெரிஞ்சுண்டேன். அதனால நான் குழம்ப மாட்டேன். ‘ப்ரஸந்நே மந: கும்பே⁴ ‘ – ப்ரஸன்னமான தெளிவடைந்த என்னுடைய மனமாகிய கும்பத்தில்,

அந்த பானைல, ‘ப⁴க்திகு³ணாவ்ருʼதே’ – பக்திங்கிற கயிற்றை சுற்றி,

‘முத³ம்ருʼதபூர்ணே’ – அதுல ஜலம் விடணும் ‘முத³ம்’ – சந்தோஷம் என்ற அம்ருதம் போன்ற ஜலத்தை நிரப்பி,

‘தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய’ – மாவிலைங்கிறது நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடியது. அந்த மாதிரி, ‘பல்லவம்’ன்னா தளிர். நான் இந்த குடத்துல, மாந்தளிர் மாதிரி எந்த தளிரை வெக்கப்போறேன்னா, ‘தவ அங்க்⁴ரிபல்லவயுக³ம்’ – உன்னுடைய பாதத் தாமரைகள் பாதப் பல்லவம் என்ற மாவிலையை வெக்கப்போறேன்.

‘ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம்’ – அதுமேல ‘ஸம்வித்’ங்கிற ஞானத்தை தேங்காயா வெக்கப்போறேன் அப்படீங்கறார். பக்திங்கறது காய். அது பழுத்தா ஞானம். அந்த ஞானம்தான் பழம். அந்த பழத்தை வெச்சு,

‘ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்’ – ஸத்வத்தை வளர்க்கக்கூடிய சிவநாமம் என்ற மந்திரத்தை ‘உதீ³ரயந்’ – சொல்லி, பகவானுடைய நாம ஜபத்தைப் பண்றது ஸத்வத்தை வளர்க்கும்.

மஹாபெரியவா எல்லா கோயில் ஆதீனகர்த்தாள்லாம் வெச்சுண்டு ஒரு ஸதஸ் பண்ணா. அப்போ சாயங்காலம் சந்தியாவேளை வந்தபோது, ‘சிவாய நம:’ன்னு 11 தடவை சொல்லிட்டு, இந்த sessionஅ இன்னொரு 5 minutesல முடிச்சுட்டு எல்லாரும் அவாஅவாளுடைய பகவானுடைய ஆக்ஞையான  அனுஷ்டானத்தைப் பண்றதுக்குப் போகலாம். அந்த 5 நிமிஷம் delayக்கு பெரியவா ஒரு பிராயஸ்சித்தமா,  ‘சிவாய நம:’ன்னு 11 தடவை சொல்லலாம்னு publicலயே announce பண்ணியிருக்கார். ‘சிவாய நம:’ங்கிறது எவரும் ஜபிக்கலாம். அதே ‘பஞ்சாக்ஷரம்’ங்கிறது குருமுகமா உபதேசம் வாங்கிண்டு ஜபிக்கணும்னு ஸ்வாமிகள் சொல்வார்.  ‘சிவாய நம:’ அல்லது சிவ நாமம்.

‘சிவ சிவ என்கிலார் தீவினையாளர்….. சிவ சிவ என்னச் சிவகதி தானே’

அப்படீன்னு சிவநாமத்துக்கு அவ்வளவு மஹிமை.

அந்த சிவநாமத்தை ‘ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்’ அப்படி ஒரு மந்த்ரத்தை ஜபிச்சு,

‘நிஜஶரீர ஆகா³ரஶுத்³தி⁴ம் வஹந்’ – இப்படியெல்லாம் பண்ணதுனால அந்த ‘புண்யாஹவாசனம்’, இந்த என்னுடைய உடம்புல அந்த ஜலத்தை, சந்தோஷம்ங்கிற ஜலத்தை கொண்டு, உடம்பெல்லாம் சுத்தி பண்ணிண்டு,

‘புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம்’ – இந்த புண்யாஹவாசனத்தை நான் ‘ப்ரகடீகரோமி’.

இது ‘கல்யாணம் ஆபாத³யந்’ – உயர்ந்த ‘ருசிரம் கல்யாணம் ஆபாத³யந்’ – இதைக்கொண்டு பெரிய மங்களங்களை நான் அடையப்போகிறேன்னு சொல்றார்.

இந்த வாரத்துல இதே மாதிரி உடம்போட சுத்தி, மனசோட சுத்தி, அதைக் குறிச்சு மஹாபெரியவாளோட சம்ஸ்க்ருத பாஷணம் ஒண்ணு கேட்டேன். அதுல அவ்ளோ அழகா இதே கருத்தை பெரியவா சொல்லியிருக்கா! அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்களுக்கு அதோட gistஅ சொல்றேன்.

“இந்த கர்மால நாம ஏன் ஈடுபடறோம். कर्मणः किं मूलम् ? रागः |  ‘கர்மண கிம் மூலம்? ராக:’ – ஆசை அப்படீன்னு ஆரம்பிக்கறா. அதாவது ஆசையின்மை, தத்வ ஞானம் வந்தாதான் நாம இந்த கர்மாலயிருந்து விடுபட்டு, இந்த ஜன்மா இல்லாம பண்ணிக்க முடியும். அப்படி பண்ணிக்கறதுதான் மனுஷ ஜன்மாவுக்கே பலன். அதைப் பண்ணலேன்னா பிறவியே வீணாப் போய்டுறது. அப்படியெல்லாம் சொல்லிட்டு, तादृश इच्छाज्ञाननिवृत्तिः वस्तुयाथात्म्य-साक्षात्कारश्च भगवदनुग्रहमूलकम् |  ‘தாத்ருஷ இச்சா ஞான நிவ்ருத்தி: வஸ்து யாதாத்ம்ய சாக்ஷாத்காரஷ் ச பகவத் அநுகிரஹ மூலகம்’ – அப்படி ஆசையின்மையும் வஸ்துக்களின் தத்வக்ஞானத்தை அறிதலும் பகவத் அநுகிரஹத்தால் தான் முடியும். तस्मात् भगवदनुग्रहाय भगवदुपासनं  यत् परमं ज्ञानसाधनम् l ‘தஸ்மாத் பகவதநுகிரஹாய பகவாதுபாசனம் யத் பரமம் ஞானசாதனம்’ – அது நம்மளால நாம சாதிச்சுக்க முடியாது. அதுக்கு பகவானுடைய அநுகிரஹம் கிடைக்கறதுக்கு, நாம பகவானுடைய உபாஸனையை பண்ணணும். இந்த மனசு, சித்தம் அழுக்கா இருக்கறவரைக்கும் அந்த தத்வக்ஞனாம் பிரகாசிக்காது. அந்த மனசை நாம தூய்மைப்படுத்திக்கணும். அந்த மனசுல இருக்கற அழுக்கு போகறதுக்கான கார்யம் தான் தினமும் பண்ணணும். शारीरमलनिवृत्तेः साधनं बाह्यं सलिलं भवति | ‘ஷாரீரமல நிவ்ருத்தே: சாதனம் பாஹ்யம் சலிலம் பவதி’ –  உடல் அழுக்கைப் போக்கறதுக்கு தினோம் குளிக்கறோம். तथा वासोमलनिवृत्तयेऽपि सलिलम् उपयुज्यते | ‘ததா வாஸோமல நிவ்ருத்தயேபி சலிலம் உபயுஜ்யதே’ – அதே மாதிரி, துணிகள்ல இருக்கற அழுக்கைப் போக்கறதுக்கும் துவைக்கறோம். தண்ணி ஜலத்தைக் கொண்டு துவைக்கறோம். आन्तरस्य चित्तमलस्य निवर्तनाय किं साधनम् ? ‘ஆந்தரஸ்ய சித்தமலஸ்ய நிவர்த்தனாய கிம் ஸாதனம்?’ – இப்படி உள்ள இருக்கற சித்த மலத்தைப் போக்கிகறதுக்கு எது சாதனம்? भगवच्छरणारविन्द-ध्यानतीर्थरूपमेव सलिलम् आन्तरमल-निवर्त्तकम्|  ‘பகவச்சரணாரவிந்த த்யானதீர்த்த ரூபம் ஏவ சலிலம். ஆந்தரமல நிவர்த்திகம்’ – பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானம் செய்வது தான் உள் அழுக்கை, சித்தமலத்தைப் போக்கிக்கறதுக்கான ஜலம். यथा प्रतिदिनं वासश्शोधनाय शारीरमलशोधनाय च यत्नं नियमेन कुर्मः ततोऽपि नियमेन आन्तरचित्तमलशोधनाय यत्नः कार्यः|  ‘யதா ப்ரதிதினம் வாஸஷ்ஷோதனாய ஷரீர மலஷோதனாய  ச யத்னம் நியமேன குர்மஹ ததோபி நியமேன ஆந்தர சித்தமல ஷோதனாய யத்னஹ கார்யஹ’ – எப்படி தினோம் உடம்பை அழுக்குப் போகறதுக்கு குளிக்கறோமோ, துணிகளை துவைச்சுப் போட்டுக்கறோமோ, அந்த மாதிரி உள்ளயிருக்கிற அழுக்கையும் நீக்கறதுக்கான முயற்சியை தினோம்  பண்ணணும். எப்படி உடம்புல அழுக்கு சேரவிட்டாலோ, துணிகள்ல அழுக்கு சேரவிட்டாலோ வ்யாதிகள் வருமோ அப்படி உள்ள அழுக்கு சேர்ந்தாலும் சம்சார வ்யாதின்னு ஒண்ணு வந்துடும். அது ஜன்ம ஜன்மாவா நம்மளைப் பிடிச்சுக்கும். அதனால அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஒருநாள் கூட பகவானுடைய சரண த்யானம் பண்ணாமல் போகக்கூடாது. இந்த இடத்துல பகவான் அவாஅவாளுக்கு ஏத்தமாதிரி வந்து, அவாஅவாளுக்கு பிடிச்ச மாதிரி காட்சி கொடுக்கறார்.  அம்மையும் அப்பனுமா குருவா வர்றார். அதுல, அம்பாளுடைய சரணத்துல நம்ப மனசை நிறுத்துறது ரொம்ப சுலபம்.  मातुश्चरणारविन्दे यदि ध्यायेते तर्हि चित्तस्य शान्तिः धृततरा भवति | ‘மாதுஷ்சரணாரவிந்தே யதி த்யாயேதே தர்ஹி சித்தஸ்ய சாந்தி: த்ருததரா பவதி’ – இந்த பெரியவாளுடைய அம்பாள் பக்தி அங்கங்க வெளிப்படறது. அம்பாளுடைய சரண கமலத்தை த்யானித்தால் மனத்துல அதிகமான சாந்தி ஏற்படுகிறது. அதனால अतः भगवान् जगज्जननीरूपं यद् गृह्णाति तादृशरूपं हृदीकृत्वा तच्छरणारविन्दयोः दृढां भक्तिम् आबध्य चित्तस्य प्रथमं शोधनं कार्यम् | ‘அத: பகவான் ஜகஜ்ஜனனி ரூபம் யத் க்ருஹனாதி தாத்ருஷ்ரூபம் ஹ்ருதீக்ருத்வா தச்சரணாரவிந்தையோ: த்ருடாம் பக்திம் ஆபத்ய சித்தஸ்ய பிரதமம் ஷோதனம் கார்யம்’ – அதனால அம்பாளா லோகமாதாவாக, காமாக்ஷியாக, பகவான் வரும்போது அந்த ரூபத்தை மனசுல நிறுத்தி, அவருடைய சரணாரவிந்தங்களில் பக்தி பண்ணுவதுதான் மனசை சுத்தப்படுத்திக்கறதுக்கு முக்கியமான வழி. शुद्धे चित्ते आत्मस्वरूपं प्रकाशते सम्यक्, वस्तुयाथात्म्यं प्रकाशते ‘ஷுத்தே சித்தே ஆத்மஸ்வரூபம் ப்ரகாஷதே ஸம்யக், வஸ்துயாதாத்ம்யம் ப்ரகாஷதே’ – அப்படி சித்த சுத்தி ஏற்பட்டா, நம்மளுடைய மனசுல ஆத்ம ஸ்வரூபம், ஆத்ம ஞானம் வரும். கர்ம நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி ஏற்படும். அதனால, நாம மனுஷாளா பொறந்திருக்கோம். அதிக இந்திரிய சக்தியும், புத்தி சக்தியும் கொடுத்திருக்கு. அதைக்கொண்டு, விலங்களுக்கு மேலான அதிக சுகத்தை அடையணும்னு முயற்சி பண்றோம். ஆனா இப்போ நாம நினைக்கிற மாதிரி, அந்த இந்திரிய சுகங்கள் அதிகமா, மிருகங்களைவிட ஜாஸ்தியா, விசேஷமா சமைச்சு சாப்படறது மட்டும் கிடையாது. எதுக்கு மேலான சுகமில்லையோ, அந்த சுகத்தை நாம ஆசைப்படணும். அந்த சந்துஷ்டிங்கிறது சாந்தத்துலதான் கிடைக்கும். அந்த சாந்தி நமக்கு, शान्तिरेव परमं न: सुखम् | तादृश शान्तिः मातुः परमाणुग्रहेण एव भवति | ‘சாந்திரேவ பரமம் ந சுகம். தாத்ருஷ சாந்தி: மாது: பரமாணு க்ரஹேண ஏவ பவதி’ – அந்த மாதிரி சாந்தி, அம்பாளுடைய பரமாணுகிரஹத்தினால மட்டுமே கிடைக்கும். शिशवोऽपि आकुलहृदयाः शान्तिः मात्रनुग्रहेण एव भवति | ‘ஷிஷவோபி ஆகுலஹ்ருதயா: சாந்தி: மாத்ரநுக்ரஹேண ஏவ பவதி.’ – குழந்தை அழுத்ததுன்னா, விளையாடறதுக்கு பொம்மை கொடுக்கலாம். ஆனா, அம்மா வேணும்னு அழுதா, அம்மா வந்தாதான் அந்த சாந்தி ஏற்படும். அந்த மாதிரி நாமளும் அறியாமையில் குழந்தைகள்தான். நம்ம எல்லாருக்கும் ஒரே அம்மா காமாக்ஷிதான். அதனால, इत्यतः तादृश मातुः अनुग्रहेण परमशान्तिरूपामृतं नियतम् अस्माकं लप्स्यते | ‘இத்யத: தாத்ருஷ மாது: அநுகிரஹேண பராமசாந்திரூபாம்ருதம்  நியதம் அஸ்மாகம் லப்ஸ்யதே’ – அந்த காமாக்ஷியினுடைய அநுக்கிரத்தால அந்த பரமசாந்தி  என்கிற அம்ருதம் யாருக்கும் கிடைக்கும். तादृश शान्तिरेव सर्व राग, रोग, जन्म सकलदुरितनिवृत्तिः तेनैव भवति | ‘தாத்ருஷ சாந்திரேவ சர்வ ராக, ரோக, ஜன்ம சகல துரித நிவ்ருத்தி: தேனைவ பவதி.’  அது கிடைச்சுடுத்துன்னா எல்லாவிதமான ஆசை, ரோகம், ஜன்மம், பாவம் எல்லா துன்பங்களும் போய்விடும். तदर्थं प्रतिदिनं देव्याः चरणद्वन्द्व-ध्यानतीर्थेन अस्माकम् आन्तरशुद्धिः सम्पादनीया |  ‘ததர்த்தம் ப்ரதிதினம் தேவ்யா: சரணத்வந்த்வ த்யானதீர்தேன அஸ்மாகம் ஆந்தரஷுத்தி: ஸம்பாதனீயா ‘ –  நாம் ஒவ்வொரு நாளும் தேவியின் சரணாரவிந்தத்தை த்யானம் பண்ணி, உள்ளத்தூய்மையை அடையறதுக்கான கார்யத்தை தான் பண்ணணும். எதைப் பண்ணா இந்தமாதிரி அம்பாளிடத்துல மனசு போகுமோ,  அதைத்தான் பண்ணணும். அதைப் பண்றதுக்கான புத்தியைக் காமாக்ஷி கொடுக்கணும்னு காமாக்ஷிகிட்டையே வேண்டிக்கணும் அப்படீன்னு சொல்லி முடிக்கறா.

அந்தமாதிரி இந்த ஸாம்ப பரமேஸ்வரன் கிட்ட ஆசார்யாள் வேண்டிக்கற மாதிரியே இருக்கு அது. ஒருவாட்டி இந்த 36வது ஸ்லோகத்தை சொல்லி பூர்த்தி பண்ணிக்கறேன்.

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை >>

10 replies on “சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை”

thanks for the continuity. waiting for this.

Looking forward for further more till the end

மிக அருமையாக உள்ளது. இந்த வலை தளம் பக்தி மார்கத்தில் விருப்பம் உள்ளவர்க்கு ஓர் அரிய பொக்கிஷம்.

சிவாந்நதலஹரியின் பாக்கி ஸ்லோகங்களுக்கு சீக்கிரம் பொருள் உரை அருள்வீர்கள் என்று எதிர்பார்கிரேன்.

Namaskaram Sir.
I have been searching for Sivananda Lahari slokams. Today only I came across your website. Excellent explanation. Have you completed all hundered slokas? I could see only upto 36 slokams.
You are doing a great job.
Thanks and regards.

Hello Sir – I think others are way ahead of me and probably blessed in understanding your posts.

I find it very confusing And difficult to follow and relate the body of the post with top of the post as you co-Mingle various different stotras which are all dense in their own way in your commentary combined with what sounds like very brahminical Tamil which is not prevalent accent among Tamil reading population

If you your other audience doesn’t mind may I suggest simpler language. I would understand if you prefer to continue with your style

Jaya Jaya Hanuman
Jaya Jaya Shankara
Jaya Jaya Kamakshi

Thank you for your feedback. I can express myself fully only in this style and language. So I will continue that way. I do this more like my own meditation and prayer. Those who have the background understand become my friends.

Thank you. I understand. You are truly blessed with Kamakshi kadaksham that I can tell by what I just experienced.

நமசிவாய நமசிவாய
ஸ்ரீ காமாக்ஷி பாதம் சரணம்
புண்யாஹம். இன்று.

புண்யாஹவாசனம் மந்த்ரப்ரயோக தீர்த்தத்தின் மூலம் ஏற்படும் கிரஹ சுத்தி.
எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக விஷயங்களை அறிய முயற்சி செய்தாலும் எல்லாம் ஒரே ஸாரமாக கிடைப்பது சித்த சுத்தி ஆகி அந்தர்யாமியாக உள்ள ப்ரஹம்ம வஸ்துவை உணர முடியும். இதற்கு முதல் படி நல்ல ஸத்குரு அமைவது அவர் சுட்டிக் காட்டிய பிறகு ஒவ்வொரு திரையும் விலகும் சித்த சுத்தி ஏற்படும்.
மிக அழகான ஸ்லோகங்கள் சிவானந்த லஹரி. இதை விளக்கம் கூறியிருப்பது மிக தெளிவாக இருக்கிறது. சிவானந்த லஹரி படிக்க மனம் ஆர்வம் பூண்டுள்ளது.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியான பரமேஸ்வரன் மற்றும் காமாக்ஷியின் அருளால் இந்த உயர்ந்த நிலையை அடைய ப்ரார்த்தனை செய்கிறேன்.அவர்களேஅந்த குருவாக ஸ்ரீ மஹா பெரியவாளாகவும், ஸ்ரீ சிவன் சாராகவும், ஸ்ரீ ஸ்வாமிகளாகவும் இருந்து வழி நடத்திச் செல்லட்டும்.

ஸ்ரீ காமாக்ஷி அருளால் ஸம்ஸ்க்ருதம் படிக்க நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, மற்றவை எல்லாமும் அந்த காமாக்ஷியே பார்த்துக்கொள்ளுவாள் என்ற நம்பிக்கை.
ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர. 🌹🌹🙏🙏

என்னை அந்தக்காலத்துக்கே கொண்டு போய்விட்டது ப்ரசங்கம்!
அந்தக் கால வீடுகளில் ஸ்வாமியின் வாசஸ்தலம் நடு ஹாலில்
தான் இருக்கும் ! நடு நாயகமாக வீற்றிருப்பார்! காலையில்
எழுந்து, நமஸ்காரம் பண்ணித் தொடங்குவோம் நாளை!
வெளியில் எங்கு போனாலும்ஸ்வாமியிடம் அனுமதி
கேட்கிறாற்போல் நமஸ்காரம் ,ப்ரார்த்தனை!
இப்போ இருக்கறது போல் தனி ரூம்ல் இருக்க மாட்டார் ஸ்வாமி!
நம்முடன் கூடவே இருப்பாது போலோர் அனுபவம்!!

இந்த ஸ்தோத்ரத்தில் நம் சரீரமே வீடாகச் சொல்லி, மனம்
கலசம், ஈஸ்வர பக்தி கலசத்தில்சுற்றப்படும் நூல், சந்தோஷம் அதில்
நிரப்பபடும் ஜலம் என்பதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது இந்த ச்லோகத்தின் சிறப்பு1
நம் ஹ்ருதயத்திலேயே ஈஸ்வரன் வீற்றிருக்கிறார் என்பதும் சொல்லப்படுகிறது !!

மேலும் மூக பஞ்ச சதியின் ஸ்லொகம் அம்பாளைஅகாரம் முதல் க்ஷகாரம்
முடிய 51 அக்ஷர ரூபமாயும் வர்ணிக்கப்பட்டிருக்கிறதுடன், ஸ்ரீ வித்யையில்
குரு ப்ரதான வித்யை! நகுரோரதிகம் என விசேஷமாகக் கூறப்படுகிறது!
கரும்பு வில்லுடன் அம்பாள் காமகோடி பீடத்திலாக்ஷி செய்வதுபற்றிய
விளக்கமும் அருமை! !
அம்பாள் நம்மனதிலே நித்ய வாசம்செய்கிறாள்! எப்போது?
ஸதா அவள் த்யானத்தில் இருந்தால்!

உள்ளம் என்பது கோவில்! வேறு எங்கும் தேடி செல்ல வேன்டாம்!
ஆனால் நம் மன த்ருப்திக்காக கோவில் சென்று வழிபடுகிறோம்!
நிறைய ஞானம் வந்தால்தான் ஆத்ம பூஜை செய்ய இயலும்
நமக்கு குரு அருளிருந்தால்தான் பகவான் அனுக்ரஹம்கிட்டும்
என்பதில் ஐயமேதுமில்லை! கணபதியே ஓர் எடுத்துக் காட்டு!

மேலும்மேலும் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தாலும்,,
பஜ கோவிந்தத்தில் சொல்கிறாற்போல் நல்ல வழியில செலவழிக்க
நல்ல மனம்வேண்டும், இவற்றை அழகாக எலிய முறையில்
விளக்கப்பட்டிருக்கிறது!

ஜய ஜய சங்கரா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.